ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
முன்னாள் போராளிகளை ஒரு குடையின் கீழ் அணிதிரட்ட திட்டமிடும் - கருணா அம்மான் Vhg மார்ச் 25, 2024 மண்ணிற்காக உழைத்த போராளிகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அணிதிரட்ட கருணா அம்மான் கட்டளை ஒன்றினை வழங்கியுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் ஜெயா சரவணா தெரிவித்துள்ளார். பிரத்தியேகமாக வெளியிட்டிருந்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்திற்கான பொறுப்பாளராக என்னை கருணா அம்மான் தற்போது நியமித்துள்ளார். ஆகையால் கட்சியினால் பாரிய நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம். மண்ணிற்காக உழைத்த அனைத்து முன்னாள் போராளிகளையும் ஒரு குடையின் கீழ் திரட்ட அவர் எனக்கொரு கட்டளையி…
-
-
- 1 reply
- 608 views
-
-
சந்திரகாந்தனின்(பிள்ளையான்) ஈஸ்டர் படுகொலை நூல் வெளியிட்டு விழா! Vhg மார்ச் 25, 2024 கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கினைப்புக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலை இன - மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் நூல் வெளியிட்டு விழா (23-03-2024) ஆம் திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது. மங்கல விளக்கேற்றப்பட்டு சர்வமத தலைவர்களின் ஆசியுரை, அழகிய வரவேற்பு நடனம் என்பவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து, நூலாசிரியரினால் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலின் முதல் பிரதிகள் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளிற்கு வழங்கி வைத்ததைத் தொடர்ந்து, சர்வமத தலைவர்களுக்கும் நூலின் பிரத…
-
- 2 replies
- 1.4k views
-
-
பாறுக் ஷிஹான் கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனைத்து சிவில் சமூகம் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று மீண்டும் கல்முனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதானது மீண்டும் தேர்தலை மையப்படுத்தி தமிழ் மக்களை ஏமாற்றும் செயலாகும் என "புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்" தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சியின் தேசிய தலைவர் முஸம்மில் அபூசாலி தெரிவித்ததாவது கல்முனையில் வடக்கு பிரதேச செயலகம் ஒன்றை அரசு உருவாக்கவில்லை. மாறாக கல்முனை பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் உப செயலகம் ஒன்றே உருவாக்கப்பட்டது. இந்த உப செயலகத்தை தமிழ் செயலகம் என தமிழ் இனவாத அரசியல்வாதிகள் …
-
- 0 replies
- 183 views
-
-
யாழில் இருந்து கொழும்பு வந்தவரை ஆட்டோவில் ஏற்றி பணம், நகைகள் கொள்ளை! யாழ்ப்பாணத்திலிருந்து தனது மனைவியுடன் கொழும்புக்கு வருகைதந்த இளம் வர்த்தகர் ஒருவர் புறக்கோட்டையில் வைத்து ஆட்டோ சாரதியினால் கடத்தப்பட்டு நகைகள், பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவர் தனது மனைவியுடன் கொழும்பு பம்பலப்பிட்டிக்கு வந்திருந்த நிலையில் வர்த்தக நடவடிக்கைக்காக புறக்கோட்டைப் பகுதிக்கு தனியாக சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த வியாழக்கிழமை இரவு மனைவியுடன் புறப்பட்டு வெ…
-
- 0 replies
- 597 views
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையில் யார் மேற்கொண்டது என்பது தனக்குத் தெரியும் எனவும் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தால், அதனை வௌிப்படுத்துவதற்கு தான் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டியில் இன்று அது தொடர்பில் தௌிவுபடுத்தினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது என்பது தனக்குத் தெரியும் எனவும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் பயங்கரவாதிகள் தொடர்பிலான விடயம் சரியானது எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். தன்னால் கைது செய்யப்பட்டவர்களே நீதிபதிகள் குழாத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையாகவே யார் செய்தார் என்பதனை எவரும் …
-
-
- 20 replies
- 2k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 26 MAR, 2024 | 11:03 AM கென்யாவிற்கு நேற்று திங்கட்கிழமை (25) விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் பாதுகாப்புப் படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நைரோபியிலுள்ள அந்நாட்டு பாதுகாப்புத் தலைமையகத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஜெனரல் சவேந்திர சில்வாவை கென்யாவின் பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஜெனரல் பிரான்சிஸ் ஒகோல்லா வரவேற்றார். சவேந்திர சில்வா கென்ய பாதுகாப்பு படையின் தலைவர், பாதுகாப்புப் படையின் துணைத் தலைவர், சேவைத் தளபதிகள் மற்றும் கென்யா பாதுகாப்புப் படைகளின் ஜெனரல் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். கென்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு இராணுவ உறவுகளை வ…
-
- 0 replies
- 422 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் 14 மணி நேரம் முன் சாவ. கடலேரி வற்றியதால் தொழில் இழந்த மீனவர்கள் (ஆதவன்) சாவகச்சேரி கடலேரி வற்றியுள்ளதால் அந்தப் பகுதில் கடற்றொழிலில் ஈடுபடும் நூற்றுக்கணக்கானோர் தொழில்களை இழந்துள்ளனர். கடலேரி வற்றி பல இடங்களில் மணல் திட்டுக்கள் காணப்படுகின்றமையால் படகுகள் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று கடற்றொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். (ஏ) சாவ. கடலேரி வற்றியதால் தொழில் இழந்த மீனவர்கள் (newuthayan.com)
-
- 0 replies
- 498 views
-
-
Published By: DIGITAL DESK 3 25 MAR, 2024 | 03:54 PM நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அவர்களுக்கு பாடம் தொடர்பான அறிவை வழங்கி பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். அத்துடன் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழிநுட்ப அறிவை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்கமைவாக பாடசாலை கல்வி மற்றும் பரீட்சை முறைகளில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். நாரஹேன்பிட்டி சுஜாதா மகளிர் கல்லூரியில் இன்று (25) முற்பகல் இடம்பெற்ற “2024 பாடசாலை உணவுத் திட்டம்” ஆரம…
-
- 0 replies
- 319 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 25 MAR, 2024 | 04:08 PM அநுராதபுர வரலாற்று சிறப்பு மிக்க ஜயஸ்ரீ மஹாபோதி விகாரையில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாருக்கு புதிய சீருடை இன்று திங்கட்கிழமை (25) அறிமுகப்படுத்தப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) காலை புதிய சீருடையில் கடமைகளை பொறுப்பேற்ற அதிகாரிகள் மகாசங்கத்தினரின் ஆசிகளை பெற்றுக்கொண்டனர். அடமஸ்தானதிபதி கலாநிதி அதி வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரரினால் தர்மோபதேச பிரித் ஓதப்பட்டது. பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோரிடம் அடமஸ்தானதிபதி கலாநிதி அதி வணக்கத்துக்குரிய பல்லேகம ஹேமரத்தன தேரர் விடுத்த வேண்டு கோளுக்கு இணங்க புதிய சீருடை…
-
- 0 replies
- 276 views
- 1 follower
-
-
இலங்கையில் ஏழுமலையான் கோவில் ! இலங்கையில் ஏழுமலையான் கோவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் ஆந்திர மாநிலத்திலுள்ள திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பல்வேறு இடங்களில் ஏழுமலையான் கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகிறன. இதற்கமைய இலங்கையில் ஏழுமலையான் கோவில் கட்ட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இலங்கையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அறக்கட்டளை ஒன்று கொழும்பில் பிரமாண்டமான ஏழுமலையான் கோவில் கட்ட உதவி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தின் ஊடாக இந்திய அரசை அனுகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இது குறித்து இந்திய அரசு சார்பில் திருப்பதி தேவஸ்தான…
-
-
- 5 replies
- 1.1k views
-
-
23 MAR, 2024 | 10:45 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கப்படும்போது அவருடைய நோக்கம் உட்பட தென்னிலங்கை தலைமைகளுடன் பேரம்பேசுவதற்கான நிபந்தனை வரைவொன்று தயாரிக்கப்படவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவதானது வெற்றி பெறுவதற்கு அல்லவெனவும், தேசிய இனப்பிரச்சினையை தென்னிலங்கைத் தலைமைகள் புறக்கணித்தமையாலேயே என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளதோடு தென்னிலங்கைத் தலைவர்களுடன் பேசுவதற்கு தயாராகவுள்ளதாகவும் கூறினார். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான முயற…
-
- 2 replies
- 492 views
- 1 follower
-
-
இந்தக் காணொளி பல நாட்களாக உலா வந்தாலும் யாழில் யாரும் இணைத்த மாதிரி தெரியவில்லை. யாராவது முதலே இணைத்திருந்தால் நிர்வாகம் இதை நீக்கிவிடவும். எனக்கு இப்போ தான் பார்க்கக் கிடைத்தது. இந்த மாணவர்களின் துணிவைப் பாராட்ட வேண்டும். இங்க என்ன பேச வேண்டும் என்ன பேசக் கூடாது என்று சொல்லி அனுப்பியே இப்படி பேசுகிறார்கள் என்றால் முழு சுதந்திரமும் கொடுத்திருந்தால் எப்படி முழங்கியிருப்பார்கள்.
-
-
- 27 replies
- 2.8k views
- 1 follower
-
-
24 MAR, 2024 | 03:55 PM கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க பெண்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் பற்றாக்குறையாக இருப்பதாக தெரிவிக்கப்ட்டுள்ளது . சுமார் 8 மாதங்களாக அந்த தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கடந்த வருடம் முதல் தடுப்பூசிப் பணிகள் முடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல மாதங்களாக இந்த நோய் தொடர்பான தடுப்பூசிகளுக்கு உலகளாவிய தட்டுப்பாடு நிலவுவதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் இந்த தடுப்பூசிகளை எதிர்வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கையில் பெற்றுக் கொள்ள முடியுமென அவர் மேலும் தெரிவித்தார் . ஒன்றரை…
-
- 0 replies
- 913 views
- 1 follower
-
-
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்தார். நாட்டில் உள்ள 1,700,000 பாடசாலை மாணவர்களுக்காக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அத்துடன், இந்த வேலைத்திட்டத்திற்காக 26 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/296893
-
- 1 reply
- 475 views
- 1 follower
-
-
23 MAR, 2024 | 10:25 PM நாட்டில் வேகமாக காசநோய் கரவிவருவதாகவும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மத்திய மார்புநோய்களுக்கான சிகிச்சை பிரிவின் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி வைத்தியர் ஆர்.எம்.எம்.சரத் பண்டார தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், காச நோய் என்பது ஒரு வகை பாக்டீரியா நோய்க்கிருமிகளால் ஏற்படும் ஒரு நோயாகும். இந்நோய் வேகமாக பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும். உமிழ்நீர், சளி மூலமாக பரவக்கூடிய இந்நோய் தற்போது இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் மேல் மாகாணத்தில் கொழும்பு , கம்பஹா மற்றும் கள…
-
- 0 replies
- 250 views
- 1 follower
-
-
இந்திய தேர்தல் அறிவிப்பால் தமிழக முதல்வருடனான சந்திப்பில் தாமதம் - வடக்கு கடற்றொழிலாளர்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை 23 MAR, 2024 | 10:44 PM (ஆர்.ராம்) இலங்கை, இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான முறுகல் நிலைமைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டானுக்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடத்தப்படுவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்தியப் பொதுத்தேர்தல் அறிவிப்பால் தாமதமடைந்துள்ளது. இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் இழுவைமடிப் படகுகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதால் கைது செய்யப்படுவதோடு, அவர்களது உபகரணங்களும…
-
- 0 replies
- 439 views
- 1 follower
-
-
ரூ. 470 மில்லியன் பெறுமதியான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கான(ICU) 157 படுக்கைகள் இந்த வாரம் (மார்ச் 21) சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் கையளிக்கப்பட்டது. இந்த படுக்கைகள் கனடாவில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்றினால் சீதுவையில் உள்ள சுபுவத் அரணாவின் இயக்குநரும் நிறுவனருமான அருட்தந்தை டாரல் கூங்கேவிடம் ஒப்படைக்கப்பட்டது. 34 அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, ICU படுக்கைகள் ஒவ்வொன்றும் ரூ. 3 மில்லியன் பெறுமதி வாய்ந்தவை என்பதுடன், 34 அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு, ராகம போதனா வைத்தியசாலை, சிலாபம், புத்தளம், சீதுவ, கம்பஹா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, தி…
-
- 5 replies
- 507 views
- 1 follower
-
-
23 MAR, 2024 | 02:04 PM பாகிஸ்தான் தேசிய தின நிகழ்வு இன்று (23) கொழும்பில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கையைச் சார்ந்த பாகிஸ்தான் சமூகத்தினர் கணிசமானோர் கலந்துகொண்டனர். ஆகஸ்ட் 14, 1947 அன்று பாகிஸ்தான் உருவாக்கத்தின் அடிப்படையாக அமைந்த வரலாற்று சிறப்புமிக்க 1940 லாகூர் தீர்மானத்தின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 23ஆம் திகதி பாகிஸ்தானின் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இம்முறை தேசிய தின நிகழ்வில் பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம்-உல் அஸீஸ் பாகிஸ்தானின் தேசிய கீதம் இசைக்கப்படும்போது பாகிஸ்தான் தேசியக்கொடியை உயர்த்தி விழாவை ஆரம்பி…
-
- 1 reply
- 905 views
- 1 follower
-
-
23 MAR, 2024 | 10:42 AM பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (23) திறந்துவைக்கப்பட்டது. நெதர்லாந்து அரசின் மென்கடன் திட்டத்தின் கீழ் இந்த புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் 4000 மில்லியன் ரூபாய் செலவில் இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. புதிய கட்டடத் தொகுதியில் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு, சத்திர சிகிச்சை கூடங்கள், குருதி சுத்திகரிப்பு பிரிவு, கதிரியக்கப் பிரிவு, சிறுவர்களுக்கான விசேட சிகிச்சைப் பிரிவு, குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு மற்றும் நோயாளர் விடுதி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. …
-
- 3 replies
- 514 views
- 1 follower
-
-
20 MAR, 2024 | 04:40 PM அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டது. இலங்கையில் அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள கடல்சார் வள மற்றும் கடலோர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வுத் திறன் மேம்பாட்டுச் செயற்றிட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கும், அவுஸ்திரேலிய அரசின் உதவிகள் வழங்கப்படக்கூடிய இடங்களை அடையாளம் காணும் வகையிலும், கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரால…
-
-
- 31 replies
- 3.1k views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 06 MAR, 2024 | 02:46 PM முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சதி குறித்து நூல் ஒன்றை வெளியிடவுள்ளார். அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர் 2019 நவம்பரில் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டது முதல் சில உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் தன்னை பதவியிலிருந்து அகற்றுவதில் தீவிரமாகயிருந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி முயற்சிகள் என்ற நூலை வெளியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடு என்பது இலங்கை அரசியலின் ஒரு பகுதியாகிவிட்டது என தெரிவித்துள்ள அவர் இலங்கை …
-
-
- 26 replies
- 4.4k views
- 1 follower
-
-
மரதன் ஓடிய மாணவர் திடீரென உயிரிழப்பு; திருக்கோவில் வைத்தியசாலையின் முன் பதற்றம் Published By: DIGITAL DESK 3 11 MAR, 2024 | 03:51 PM திருக்கோவில் பகுதியில் மரதன் ஓடிய மாணவர் ஒருவர் மரணித்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (11) இடம்பெற்றுள்ளது. திருக்கோவில் மெதடித்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விதுர்ஷன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. இன்றைய தினம் காலை மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட குறித்த மாணவன் போட்டி நிறைவுற்றதும் வகுப்பறைக்கு சென்றுள்ளார். இதன்போது வயிற்றுக்குள் கொழுவி பிடிப்பதாகக் கூறி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றதாகவும் பின்னர் அவசர சி…
-
-
- 23 replies
- 2.3k views
- 1 follower
-
-
23 MAR, 2024 | 02:17 PM (எம்.நியூட்டன்) பிள்ளைகளை ஞானத்துடன் வளர்க்க வேண்டும். அதை விடுத்து அவர்களை அடித்து துன்புறுத்தி வளர்க்கின்றபோதுதான் அவர்கள் குடும்பத்தை விட்டுப் பிரிகின்ற நிலை ஏற்படுகிறது என வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் சமூக மருத்துவ ஆலோசகரான மருத்துவர் திருமகள் தெரிவித்தார். தேவை நாடும் மகளிர் அமைப்பின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்று வியாழக்கிழமை (21) மல்லாகத்திலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைய சூழலில் பிள்ளைகளை அன்புடனும் அக்கறையுடனும் வளர்க்க வேண…
-
- 0 replies
- 366 views
- 1 follower
-
-
23 MAR, 2024 | 10:44 AM சீனாவின் முன்னணி பல்கலைக்கழகமான யுனான் பல்கலைக்கழக பிரதிநிதிகள் (22) இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்து கலாசார மற்றும் மொழி ரீதியான பரிமாற்றங்களை செய்வதற்கான நிலையம் (Confucius Unit) ஸ்தாபிக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வு கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வந்தாறுமூலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக மூதவை கட்டட தொகுதியில் இடம்பெற்றது. யுனான் பல்கலைக்கழக உப பீடாதிபதி ஹூ ஜின்மிங்க் தலைமையிலான குழுவினர் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம், பிரதி உபவேந்தர், பதிவாளர் உட்பட சர்வதேச விவகாரங்கள் திணைக்கள இணைப்பாளர் ஆகியோர…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 23 MAR, 2024 | 08:58 AM நாட்டிலுள்ள 12 சதவீதமான முதியவர்கள் அனைத்தை பற்களையும் இழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இதனை உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தெரிவித்துள்ளார். பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பாடசாலை மட்டத்தில் கற்பிக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் வாய் பல் ஆரோக்கியத்தை சரியாக பேணுவது முக்கியம். நாட்டில் இன்று ஏராளமானோர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற நோய்களைத் தடுக்க சரியான சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுவதன் அவசியம் என வலியுறுத்தியுள்ளார். https:…
-
- 0 replies
- 514 views
- 1 follower
-