ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143398 topics in this forum
-
அடையாளம் காட்ட முடியாத கொடும்பாவி ஒன்றை யாழ் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் யாழ் பல்கலைக்கழக நுழைவாயிலில் எரியூட்டியுள்ளனர். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றது. சம்பள உயர்வு கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும்படி நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் யாழ் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களும் பங்கெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமது சம்பள உயர்வு கோரிக்கைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத ஒருவரையே தமது கொடும்பாவி குறிப்பதாகத் தெரிவித்தனர். சம்பள உடன்பாட்டுச் சுற்றரிக்கையையே தமது கொடும்பாவி உருவகப்படத்துவதமாக ஊழியர் சங்கத் தரப்பு க…
-
- 0 replies
- 867 views
-
-
திருகோணமலை - மூதூர் பகுதியில் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் பச்சநூர் மலையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் பௌத்த நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. சேருவெல சரணகித்தி நாயக்க தேரரின் வேண்டுகோளின் பேரிலேயே இந்த பௌத்த நிலையத்தை அமைப்பதற்கு சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நடவடிக்கை எடுத்துள்ளார். இந்தத் தகவலை மாத்தறையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் சிறிலங்க பாதுகாப்புச்செயலரே வெளியிட்டுள்ளார். தமிழ்மக்களின் பாரம்பரிய வாழ்விடமான பச்சநூர் பிரதேசத்தில் உள்ள மூன்றாம்கட்டை மலையிலேயே இந்த பௌத்த நிலையம் அமைக்கப்படவுள்ளது. அத்துடன் வடக்கு, கிழக்கில் அழிக்கப்பட்ட பௌத்த விகாரைகள் மற்றும் வழிபாட்டு இட…
-
- 0 replies
- 378 views
-
-
சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்த பொதுமக்களுடன் கலந்துரையாடுவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி சிறிலங்கா அரசிற்கு மேலும் கிலியைக் கிழப்பியுள்ளது. அதற்காக பயண அனுமதி வேண்டுகோளையும் விடுத்துள்ளது மனித உரிமைகள் குழு. முறைப்படியான இந்த வேண்டுகோளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்தால், மூன்றாவது தரப்பின் ஊடாக இந்தக் கலந்துரையாடல்கள் நடத்தப்படக் கூடும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் உயர் வட்டாரங்கள் கருதியள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சிறிலங்காவிற்கான பயணத்திற்கு முன்னர் உண்மையைக் கண்டறியும் குழுவொன்றை அனுப்புவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணி…
-
- 0 replies
- 798 views
-
-
விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையிலான இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய விசாரனைகளை முன்னெடுக்குமாறு பிரத்தானிய பிரதமர் டேவிட் கமரூன் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளார். பிரித்தானிய பிரதமருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியதாக பிரிதானியப் பிரதமரின் பேச்சாளர் கிராக் ஒலிவர் தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பானது மகிழ்ச்சியான சூழலில் இடம்பெற்றதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட…
-
- 0 replies
- 758 views
-
-
யாழ். குடாநாட்டில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத இடங்கள் தவிர்ந்து, ஏனைய இடங்களில் உள்ள ஆயிரத்து 33 காணிகள் மற்றும் வீடுகளை முப்படையினரும் சுவீகரிக்கவுள்ளனர். இதில் 29 காணிகளே அரச நிலங்கள். ஏனையவை தனியார் பொதுமக்களின் காணிகள் என்று தெரிவிக்கப்படுகிறது. யாழ். மாவட்டத்தில் 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் 1996 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர் தனியார் மற்றும் அரச காணிகளில் நிலைகொண்டுள்ளனர். தற்போது தாம் நிலை கொண்டுள்ள நிலங்களைத் தமக்கே வழங்க வேண்டும் என்று கோரி சகல பிரதேச செயலர்களுக்கும் கடிதங்கள் அனுப்பியுள்ளனர். கடந்த டிசெம்பர் மாதம் அனுப்பப்பட்ட இந்தக் கடிதங்களுக்கு பிரதேச செயலர்கள் உரிய பதில் வழங்காததைத் தொடர்ந்து, வடமாகாண ஆளுநரினால் பிரதேச செயலர்களுக்கு அழுத்தம் கொ…
-
- 0 replies
- 622 views
-
-
பாவிகள் செல்லும் இடமெலாம் கல்லும், முள்ளும், படுகுழியும் என்று சொல்வார்கள். இது ஈழத் தமிழ் அகதிகளுக்கு மிகவும் பொருத்தம். ஈழத் தமிழர்களின் வேதனைகளையும் வலிகளையும் சர்வதேச சமூகம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இவர்கள் ஏன் நாடு விட்டு நாடு தாவி ஓடுகிறார்கள் என்ற கேள்விக்கு என்ன பதில். சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் ஜரிக்கன் தமிழீழ மக்கள் பாதுகாப்பான சூழல் ஒன்றைத் தேடி இலங்கையில் இருந்து தொடர்ந்து வெளியேறுகிறார்கள் என்று 2010ம் ஆண்டு தெரிவித்தார். மேலும் அவர்களுடைய பாதுகாப்பான வெளியேற்றத்திற்கும் புகலிடக் கோரிக்கைக்கும் சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் அவர் சொன்னார். இது வரை இந்த நிலவரத்தில் மாற்றம் ஏற்படவில்லை. வடகிழக்கில் தமிழ் மக்கள் இர…
-
- 0 replies
- 560 views
-
-
தமிழீழ இன அழிப்பின் ஒரு அங்கமாய், எமது விடுதலைக்காகப் போராடிய போராளிகளை, சிங்கள இராணுவத்தினர் கைகளைக்கட்டி வைத்துச் சுட்டுக்கொலைசெய்யும்காட்சிப்பதிவுகள் இன்னமும் வெளியாகியபடியே உள்ளன. எமது இனத்தின் மீது சிங்களம் ஏவிவிட்ட கோரத்தின் பதிவுகளாக எம்மனதில் இக்காட்சிகள் நிழலாடுகின்றன . இவை நிச்சயமாக எமது மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டியவைதான். ஆனாலும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள்.விட்டு விட்டு, மீண்டும் மீண்டும் இவ்வாறான காட்சிகள், பகுதி பகுதிகளாக வெளியிடப்படுவது இன்னுமொரு சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் பின்னரும்கூட, வலிகளோடு வாழ்ந்துவரும் எமதினம், இன்னமும் போராடி விடுதலை பெறவேண்டும் என்ற வேட்கையோடு உலகமெங்கும் குரல் எழுப்புகிறது. இதற்குச் …
-
- 0 replies
- 820 views
-
-
யேர்மனியில் Berlin மற்றும் Hagen நகரங்களில் தியாகி பொன் சிவகுமாரனின்நினைவு நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. நினைவு நிகழ்வில் கலந்துகொண்ட இளையோர்கள், பொதுமக்கள், தியாகி பொன் சிவகுமாரனின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். அத்தோடு Hagen நகரில் ஈழத்தமிழர்களின் சிறுவர்கள் அவல நிலை குறித்து யேர்மனிய மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் “அவர்களுக்கும் ஆசைகள் உண்டு” எனும் நிகழ்வும் நடைபெற்றது. அங்கே இவ் விடையம் சார்ந்த துண்டுப்பிரசுரம் மக்களுக்கு வழங்கப்பட்டு இளையோர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது. புரட்சியும் எழுச்சியும் இளைஞர் சமூகத்திடமிருந்து தான் தோற்றம் பெறுகின்றது. எனவே, தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீரழிப்பதன் மூலம் மக்களை எளிதாக அடிமைப்படு…
-
- 0 replies
- 534 views
-
-
கிளிநொச்சி நகரத்தில் சிறீலங்காப்படையினரால் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் பௌத்த விகாரைகளையும் புத்தர்சிலைகளையும் அரசாங்கமும் படையினரும் அமைத்து வருவதாக குற்றம் சுமத்தப்படும் நிலையில் கிளிநொச்சியிலும் பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது. கிளிநொச்சியில் வெண்புறா செயற்கைக் கால் அமைக்கும் வெண்புறா நிறுவனம் இயங்கிய இடத்தில் ஏற்கனவே ஒரு பிரமாண்ட புத்தர்சிலை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்பொழுது அவ்விடத்தில் பௌத்த விகாரை ஒன்றை அமைக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. கிளிநொச்சி நகரத்தில் 50ற்கு மேற்பட்ட இடங்களில் முதன்மையாக நிலைகொண்டுள்ள படையினர் தங்கள் முகாம்களில் பாரிய பௌத்த விகாரைகளை அமைத்துள்ளார்கள் இன்னிலையில் மேலும் மேல…
-
- 0 replies
- 685 views
-
-
தமிழீழமே தனது ஒரே நோக்கம் எனவும் புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழகத்தின் ஆதரவுடன் ஈழ நாடு உருவாக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இந்தியாவில் தெரிவித்துள்ளதாக அரசசார்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுக் கூற அரசாங்கம் இடமளிக்கவில்லை. நாங்கள் ஈழ நாட்டை ஆரம்பிப்போம். அது வெற்றியளிக்கும். எமது தனி ஈழ நோக்கத்தை கைவிட மாட்டோம் என அவர் கூறியுள்ளார். பிரபாகரன் கியூபாவை மதித்தார். எனினும் கியூபா இலங்கைக்கு உதவியது. ஈழத்தை உருவாக்க முடியாது என நினைக்க வேண்டாம் என தெரிவித்துள்ள சிறிதரன் வடக்கில், இராணுவத்தினர் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளதாக அரசசார்பு இணையத்தளம் மேல…
-
- 5 replies
- 1.5k views
-
-
யுத்தத்தின் போது காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து தருமாறும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறும் கோரி காணாமல் போனவர்களின் உறவினர்கள் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவிடம் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் கலந்துகொண்டார். இந்தநிகழ்வில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் புகைப்படங்கள் சகிதம் அமைச்சரை சுற்றிவளைத்து காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து தருமாறு கோரி கண்ணீருடன்க தறியழுதனர். யுத்தத்தின் …
-
- 0 replies
- 596 views
-
-
படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்களான டி.சிவராம் மற்றும் ஐ.நடேசன் ஆகியோரின் நினைவாக இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நினைவு தினக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் பா.அரியநேத்தின் உட்பட 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் இடைநடுவில் கூட்டத்திலிருந்து திடீர் வெளிநடப்புச் செய்தார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை வலியுறுத்தி நிகழ்த்தப்பட்ட உரைக்கு அதிருப்தியைத் தெரிவிக்கும் வகையிலேயே இவர்கள் வெளிநடப்புச் செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பில் தெரியவந்திருப்பதாவது: கொழும்பு, தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் …
-
- 0 replies
- 629 views
-
-
திருகோணமலையில் லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள 99 எண்ணெய்க் குதங்களையும் சிறிலங்கா அரசாங்கம் மீளப்பெறவுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. திருகோணமலையில் அமைந்துள்ள இந்த எண்ணெய்க் குதங்களை கடந்த 2002ம் ஆண்டு சிறிலங்கா பெற்றோலிய அமைச்சு, 33 ஆண்டு குத்தகைக்கு லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனத்துக்கு வழங்கியிருந்தது. ஐதேக ஆட்சிக்காலத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்பாட்டை நிறுத்தி விட்டு, எண்ணெய்க் குதங்களை மீளப்பெறுவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே சட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளது. “இந்த எண்ணெய்க் குதங்கள் அமைந்துள்ள காணி திருகோணமலை அரசஅதிபர் செயலகத்துடன் இணைந்தது. தமக்குச் சொந்தமாக இல்ல…
-
- 12 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் சிலரை சிறீலங்கா புலனாய்வு பிரிவினர் வடமராட்சிக்கிழக்கில் தேடி அலைவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்டதாக சிறீலங்கா அரசு சர்வதேச நாடுகளுக்கு பரப்புரை செய்துவரும் நிலையில் இவ்வாறு புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வடமராட்சிக் கிழக்கில் உள்ள ஒரு கிராமத்தில்(பாதுகாப்பு கருதி கிராமத்தின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது) தனது குடும்பத்துடன் வாழ்ந்து வரும் முன்னாள் போராளி ஒருவரை சிறீலங்கா புலனாய்வுப்பிரிவினர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியிருந்ததாகவும் தற்போது புலிகளின் நடவடிக்கைகள் …
-
- 0 replies
- 934 views
-
-
அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளுக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.கண்டி – அம்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் அண்டைய நாடான இந்தியாவுக்கு கூட இலங்கை அமைச்சர்களால் செல்ல முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அரசாங்கத்தின் செயற்பாடுகளே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், அரசாங்க நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நன்மை அடைந்து வருவதாக ஜே. வி .பி தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 658 views
-
-
இலங்கையில் கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்வனவு செய்துவரும் இராணுவத்தினர் தமது பிரதேசத்திலும் நெல் கொள்வனவு செய்ய வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கூறுகின்றனர். இந்த மாகாணங்களில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரின் நாளாந்த அரிசி தேவையை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டே இந்த நெல் கொள்வனவு நடவடிக்கை என இராணுவம் கூறுகின்றது. இந்த திட்டத்தின் படி விவசாயிகளுக்கு உச்ச நன்மை கிடைக்கச் செய்வதே தமது நோக்கம் என்று கூறும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, விவசாயிகளின் போக்குவரத்து விநியோக சிரமங்களை குறைக்கும் வகையில் நேரடியாக அந்தந்த இடங்களுக்கு இராணுவம் சென்று நெல் கொள்வனவு செய்வதாகவும் தெரிவிக்கின்றார். …
-
- 0 replies
- 493 views
-
-
புலம்பெயர் நாடுகளிலிருந்து ஈழம் செல்லும் பலரிடம் ஒட்டுக்குழுவான ஈ.பி.டி.பி ஆயுத குழுவினர் பணம் பறிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து யாழ் செல்லும் பலரது வீடுகளுக்கு நேரடியாக இரவு வேளைகளில் வானில் வந்திறங்கும் ஈ.பி.டி.பி ஆயுத குழுவினர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களின் பெயர்களை கூறி விசாரிப்பதாகவும் அதன் பின் தமது கட்சியின் வளர்ச்சிக்காக பணம் தருமாறும் கேட்டுவருவதாகவும் மறுத்தால் அச்சுறுத்தும் விதமாக மிரட்டுவதாவும் பின் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு பல ஆச்சுறுத்தல்களைவிடுத்து பணத்தை கறப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இவ்வாறான சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன் யாழில் நடந்துள்ளது. ஜரோப்பிய நாடு ஒன்றிலிருந்து யாழ் சென்ற ஒருவரி…
-
- 0 replies
- 862 views
-
-
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீது இந்தியாவிற்கு எதுவிதமான அக்கறையும் இல்லை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடாத்தி வருகின்ற போராட்டங்கள் எதுவும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக நடைபெற்றதல்ல. இருப்பினும் இந்நாட்டு தமிழ் மக்களுக்கு உருப்படியான தீர்வுகள் எதுவும் கிடைக்குமானால் ஜே.வி.பி. இரு கைகளையும் உயர்த்தி ஆதரவு வழங்கும். இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீது இந்தியாவுக்கு எதுவித கரிசனையும் இல்லை. ஏனெனில் இந்தியாவினால் சம்பூர் அமைக்கவுள்ள அனல் மின் நிலையத்திற்…
-
- 2 replies
- 673 views
-
-
பட்டதாரிப் பயிலுநர் நியமனத்தில் அரசியல் முறைகேடு, ஊழல் இடம்பெற்று வருவது அம்பலத்துக்கு வந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் நிர்ப்பந்தம் காரணமாக நேற்றைய தினம் 50 பட்டதாரிகளுக்குத் தனியான நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டப் பட்டதாரிகளுக்கு நாளை திங்கட் கிழமையும் நாளை மறுதினம் செவ்வாய்க் கிழமையும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட இருந்த நிலையில் நேற்றைய தினம் 50 பட்டதாரிகளுக்கு இந்த ரகசிய நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முல்லைத்தீவு அரச அதிபருக்கு வழங்கிய அழுத்தத்தின் பேரிலேயே இந்த நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது என்று உதயனுக்குத் தெரியவந்தது. தான் அனுப்பும் பட்டியலில் உள்ளவர்களுக்கு…
-
- 2 replies
- 695 views
-
-
'கெரகம்' சரியில்லாததால் நாடு நாடாக அலையும் ராஜபக்சே! கொழும்பு: ராஜபக்சேவுக்கு கிரகம் சரியில்லையாம். இதனால்தான் அவர் கொழும்பில் தங்கியிருக்காமல் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளாராம். கொழும்பு ஜோசியக்காரர்கள்தான் இப்படிக் கூறியுள்ளனர். இந்த ஜோசியக்காரர்கள் கூற்றுப்படி, மே 16-ம் தேதி காலை 6.47 மணி முதல் சனி கன்னி ராசிக்குள் பிரவேசிக்கிறது. அதன்பின்னர் 17-ம் தேதி 9.45-க்கு குரு ரிஷப ராசிக்கு செல்கிறது. இந்த மாற்றம் இலங்கைக்கு சரிவராதாம். இதனால் இலங்கை தலைவர்களுக்கும் கிரகப்பலன் சரியாக இல்லையாம். எனவேதான் இந்த காலகட்டத்தில் ஊரில் இருக்காமல் வெளிநாடுகளுக்குப் போகுமாறு ராஜபக்சேவுக்கு அவரது ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனராம். இதனால்தான் ராஜபக்சே நாடு நாடாக அ…
-
- 2 replies
- 1.1k views
-
-
பிரித்தானிய சட்டத்திட்டங்களை மீறி, லண்டனில் விடுதலைப்புலிகளின் கொடியை பகிரங்கமாக காட்சிப்படுத்தியமை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க பிரித்தானியாவில் உள்ள சிங்கள அமைப்பான இலங்கையர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. பிரித்தானியா, விடுதலைப்புலிகளை தடைசெய்துள்ள நிலையில், புலிகளின் கொடியை காட்சிப்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. உலக தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழ் பேரவை ஆகிய இந்த சட்டத்தை மீறி புலிகளின் கொடியை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் புலிகக் கொடியை ஏந்தியிருந்தவர்கள் தமது முகங்களை மூடிக் கொண்டிருந்தனர் எனவும் திவயின தெரிவித்துள்ளது. அத்துடன் ஹித்ரோ விமான நிலையத்தின் 4 இலக்க கட்டடத்தில், 100க்கும் மேற்பட்ட புலிக்கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. …
-
- 14 replies
- 1.5k views
-
-
மாதகல் மேற்குக் கடல் பகுதியில் கடற்றொழில் செய்வதற்குத் தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் விசனம் தெரிவிக்கின்றனர். கடற்படையினரே இதற்கான அனுமதியை மறுத்துள்ளதாகவும் மாதகல் மேற்கு சாம்பல் துறையில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரையை அண்டிய கடற் பகுதியிலேயே தொழில் செய்யத் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.பௌத்த விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியைப் புனிதப் பிரதேசமாக மாற்றும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே கடற்றொழில் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். பௌத்த விகாரையில் நின்று கடலைப் பார்க்கும் போது கடல் தெரியும் தூரம் வரை கட…
-
- 0 replies
- 533 views
-
-
திடீர் ஜனாதிபதித் தேர்தலை நடாத்த அரசு நடவடிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர் அடுத்த ஆண்டில் திடீர் ஜனாதிபதித் தேர்தலொன்றை நடத்துவது குறித்து அரசின் கவனம் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய ஓகஸ்ட் மாதத்தில் கலைக்கப்படவுள்ள வடமத்திய மற்றும் சப்பிரகமுவ மாகாண சபைகளின் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டதும் 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமளவில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை நடத்தி விட்டுப் பின்னர் திடீர் ஜனாதிபதித் தேர்தலொன்றை அறிவிப்பது தொடர்பில் அரசின் கவனம் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த தினங்களில் இது தொடர்பான சட்ட ஆலோசனைகளை ஜனாதிபதி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 0 replies
- 734 views
-
-
லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனைச் சந்திதிருந்தார் எனவும் இச் சந்திப்பு மகிழ்ச்சியான சூழலில் நடைபெற்றதாகவும் சிறிலங்கா ஊடகங்களில் வெளியான தகவல்களை பிரித்தானிய பிரதமரின் பேச்சாளர் ஒருவர் நிராகரித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது, போர்க்குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறப்பட வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், மஹிந்தவிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளதாக சனல்4 ஊடகம் தெரிவித்துள்ளது. கமரூனும், மஹிந்த ராஜபக்சவும் மகிழ்ச்சியாக உரையாடியதாகவும், இதன்போது மஹிந்த, பிரித்தானியப் பிரதமருக்கு தமது நாட்டின் நிலைமைகள் குறித்து விளக்கமளித்தாகவும் 'டெய்லி மிரர்' நாளேட்டில், மஹிந்தவின் சர்வதேச ஊடக …
-
- 1 reply
- 725 views
-
-
பிரித்தானிய மகாராணியின் வைரவிழா நிகழ்வுகளில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்திருக்கக் கூடாது என்று றோயல் கொமன்வெல்த் சமூகத்தின் தலைவர் பீற்றர் கெல்னர் தெரிவித்துள்ளார். சனல் 4 தொலைக்காட்சியில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர்,“ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்த இந்தத் தவறை மகாராணியோ பக்கிங்ஹாம் அரண்மனையோ செய்யவில்லை. கொமன்வெல்த் தான் அதைச் செய்தது. சிறிலங்காவுக்கு எதிராக கடைசியாக பேர்த்தில் நடந்த கொமன்வெல்த் மாநாட்டிலேயே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாது போனால், கொழும்பில் நடைபெறவுள்ள அடுத்த கொமன்வெல்த் மாநாடு ஒரு பேரிடராகவே அமையும். சிறிலங்கா மீது அமைப்பு ரீதியாக…
-
- 1 reply
- 852 views
-