Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கெஹெலிய ரம்புக்வெல்ல பயங்கரவாத்தை தோற்கடிக்கும் வேலைத்திட்டத்தில், பாரிய இராணுவ வெற்றியை இராணுவத்தினர் தாய் நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த சந்தர்ப்பத்தில், எவருக்கும் யுத்தம் செய்ய முடியும் எனக் கூறி, தாய் நாட்டுக்கு துரோகம் செய்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற தலைமை ஆசனத்திற்குக் கூட மதிப்பளிக்காது, தற்போது, புலிகளின் நிழல்களின் சாப்பாத்துக்களை நக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பிரித்தானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், அந்த நாட்டுக்கு சென்ற ஜனாதிபதியும் ஏனைய நாடுகளின் அரச தலைவர்கள் சிலர் மற்றும் பொதுநலவாயத்தின் தலைவர் ஒரு…

  2. பிரித்தானியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஹரி என்கின்ற இத்தமிழ் இளைஞன் 17 நாட்கள் வரை சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு தப்பிப்பிழைத்த பின் மன அழுத்தத்துக்கு உள்ளாகியமைக்கு பிரித்தானிய அரசாங்கமே காரணமாகும். இவ்வாறு பிரித்தானியாவை தளமாகக் கொண்ட guardian.co.uk இணையத் தளத்தில் Donna Covey எழுதி யுள்ள செய்திக்கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. பிரித்தானியாவிலிருந்து சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழரான ஹரி என்பவர் சிறிலங்கா அதிகாரிகளால் சித்திரவதைப்படுத்தப்பட்டதானது மிகப் பயங்கரமான சாட்சியமாக இருப்பதுடன், புகலிடம் கோரி வரும் மக்கள் இந்நாட்டில் எவ்வாறு நடாத்தப்படுகின்றார்கள் என்பதைக் காண்பிக…

  3. இலங்கையில் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு ஒன்றை எட்டி சகல இன மத மக்களும் சரிசமமாக வாழக்கூடிய சூழல் ஒன்றை விரைவாக ஏற்படுத்துமாறு பரிசுத்த பாப்பரசர் 16ஆம் பெனடிக்ற் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று நேரில் வலியுறுத்தினார்.இலங்கையில் விரைவில் நிலையான அமைதியும் சமாதானமும் ஏற்படும் என்று தான் நம்புவதாகவும் பாப்பரசர் ஜனாதிபதியிடம் கூறினார். லண்டனுக்கு பயணமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரிசுத்த பாப்பரசரைச் சந்திப்பதற்காக அங்கியிருந்து நேற்று முன்தினம் ரோமுக்குப் புறப்பட்டுச் சென்றார். பாப்பரசருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் பாப்பரசரின் வத்திக்கான் வாசஸ்தலத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் பாப்பரசருட…

  4. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம் பிள்ளைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அதிகாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட தொடர்பாடல்களை மையமாகக் கொண்டு முறைப்பாடு எதனையும் செய்யத் திட்டமிடவில்லை என வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நாடுகள் இலங்கைக்கு எதிராக அண்மையில் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு, மனித உரிமைப் பேரவை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மனித உரிமைப் பேரவையின் ஆசிய பசுபிக் பிராந்திய பொறுப்பாளர் ரொரி முன்கூவானின் மின்னஞ்சல் தொடர்பாடல்களின் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, அந்த அமைப்பிற்க…

  5. இலங்கைத்தீவில், கத்தோலிக்க குருமார்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும், மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்துப் தொடர்பிலும், சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்விடம் வினவுங்கள் என, புனித பாப்பரசர் 16ஆம் பெனடிக்ட் அவர்களிடம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானியாவுக்கான பயணத்தினைத் தொடர்ந்து, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச, வத்திக்கானுக்கு சென்று புனித பார்பரசரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கோரிக்கையினை விடுத்துள்ளார். சிறிலங்காவின் ஆயுதப்படை…

  6. மருத்துவப்பீடத்திற்கு வடக்கில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் தெரிவு - என்கிறார் டக்ளஸ்:- கடந்த வருடம் மருத்துவப்பீடத்திற்கு வடக்கில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் தெரிவுசெய்யப்பட்டதாகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக்கத்திற்கான விவசாயப்பீடம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் முடிவடைந்துள்ளதுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு பொறியியல் பீடத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அண்மையில் தேசியக் கொடியை ஏந்தி, மேதினக் கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றிய ஆர்.சம்பந்தன், அதற்கு முன்னர், தேசியக் கொடிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டவர் எனவும் அவ்வாறு கருத்துக்களை …

  7. இலண்டன் போல் மால் மாளிகையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகிழூர்தி ஈழத்தமிழர்களின் கூழ்முட்டை வீச்சுக்கு இலக்காகியுள்ளது. விருந்துண்ணும் நிமித்தம் இன்று மதியம் 12:00 மணியளவில் போல் மால் மாளிகையை நோக்கி விரைந்து கொண்டிருந்த மகிந்தரின் மகிழூர்தியை இலக்கு வைத்து ஈழத்தமிழ் போராட்டவாதிகளால் சரமாரியாக கூழ்முட்டைகள் வீசப்பட்டன. இதில் சில கூழ்முட்டைகள் மகிந்தர் பயணித்த மகிழூர்தி மீது வீழ்ந்து சிதறியுள்ளன.இதனையடுத்து பலத்த பாதுகாப்புடன் மாளிகைக்குள் மகிந்தர் அழைத்துச் செல்லப்பட்டதாக செய்தியாளர் அறியத் தந்துள்ளார். எதிரிகளின் பொய் பரப்புரையை முறியடித்து. தேசியத் தலைவர் அவர்களால் கட்டமைக்கப்பட்ட அனைதுலக தமிழர் ஒரிங்கினைப்புக்குழு பெரும் திரளான …

    • 41 replies
    • 5.8k views
  8. இலங்கையில் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஆதரவு தெரிவிக்கும்படி ஐக்கிய அமெரிக்காவில் இயங்கும் தமிழ் குழுவான, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர் பிரிட்டன் பிரதமர் கேமரூனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர், பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூனுக்கு எழுதிய கடிதத்தில், சூடான் வாக்கெடுப்பு மூலம் ஒரு நீண்டகால இரத்தக் களரியுடனான உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்ததுடன், தென் சூடான் என்ற புதிய நாட்டை உருவாக்கும் ஒரு நல்ல முடிவாக அமைந்தது. இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிந்து விட்டது. ஆனால் இந்தத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பும் அமைதியும் கிடைக்காது தொடர்ந்து துன்புறுகின்றனர். கொழும்பு ஆட்சியினால் வடகிழக்கில் தமிழர்கள் அமைதிய…

    • 1 reply
    • 589 views
  9. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை அமுல்படுத்துவது தொடர்பிலான உத்தேச அமுலாக்க யோசனைகளை இலங்கை அரசு நேரடியாக அமெரிக்காவிடம் கையளித்திருப்பது தொடர்பில் புதுடெல்லி இராஜதந்திர ரீதியிலான எதிர்ப்பைக் கொழும்புக்குத் தெரியப்படுத்தியுள்ளதாக உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை ஜெனிவா மாநாட்டின் தீர்மானங்களுக்கேற்ப அமுல்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பிலான திட்டவரைபை அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சமர்ப்பித்திருந்தார். ஐந்து அம்சங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த அமுலாக்க யோசனைகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இலங்கை அரசு அமெரிக்காவிடம் உறுதியளித்திருந்…

    • 2 replies
    • 1k views
  10. http://naathamnews.com/?p=6484 தமிழினத்தின் மீதான சிறிலங்காவின் போர் குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பிலான புதிய ஆதாரங்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் தகவற்றுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் ‘த இன்டிபென்டன்ட்’ ஊடகத்திடம் குறித்த ஆதாரங்களை கையளித்திருந்த வழக்கறிஞர் வாசுகி முருகதாஸ் அவர்கள், குறித்த ஆதாரங்களை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திடமும் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதொலைபேசியின் வழியே பதிவு செய்யப்பட்ட, 25க்கும் மேற்பட்ட ஒளிப்படங்களுடன், 3நிமிட அளவிலான காணொளிப்பதிவும் அவ் ஆதாரங்களாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  11. மகிந்தர் லண்டன் வந்த சமயம், பாக் லேனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் சுமார் 35 அறைகள் பதிவுசெய்யப்பட்டு அவை அனைத்தும் பாவிக்கப்பட்டுள்ளது எனச் சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் வசிக்கும் மகிந்தரின் தீவிர ஆதரவாளர்களும்,மற்றும் சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்குமாக சுமார் 35 அறைகள் பதியப்பட்டுள்ளது. வழமையாக ஒரு நாட்டு அரசாங்கத்தால் வரவேற்க்கப்படும் பிற நாட்டு அரசுத் தலைவர்கள் அந் நாட்டில் தங்க, அழைப்புவிடுத்த நாடே வசதிகளைச் செய்து கொடுப்பது வழக்கம். இதனைப் பயன்படுத்தி பிரித்தானிய அரசின் தலையில் முழகாய் அரைத்துள்ளனர் மகிந்தரின் காவலாளிகள். 35 அறைகளில் தங்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிங்களவர்களே அதிகாலையில் எழுந்து கொடிகளுடன் வெளியே வந்…

  12. சீமான் பொய் கூறுகிறார்: ஆதாரத்துடன் தமிழக அரசியல் (09.06.2012) Published By பெரியார்தளம் On Thursday, June 7th 2012. Under thamizhaga arasiyal, முதன்மைச்செய்திகள் கடந்த கிழமை வெளிவந்த தமிழக அரசியல் கட்டுரைக்கு தான் பேட்டி கொடுக்கவில்லை என்று அறிக்கை வெளியிட்ட சீமானுக்கு தமிழக அரசியல் இதழ் ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளது. சீமானுடன் நமது நிருபர் அலைபேசியில் பேசியதற்கான ஆதாரம் நம்மிடம் இருக்கிறது. அவர் சொன்ன கருத்துக்களை சீமான் மறுத்தால் தனது கட்சியின் கொள்கைப் பிரகடனத்தையே அவர் மறுக்கிறார் என்பதாகவே பொருள்படுகிறது. – தமிழக அரசியல் 09.06.2012 ஏடு நன்றி: தமிழக அரசியல் http://www.periyarthalam.com/2012/06/07/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9…

  13. இலங்கையின் நல்லிணக்கத்துக்காக உதவ தயார் என்று பொதுநலவாய நாடுகள் அமைப்பு தெரிவிததுள்ளது. பொதுநலவாய நாடுகளின் வர்த்தக சபை கூட்டம் அண்மையில் லண்டனில் நடைபெற்றது.எனினும் இதன்போது இடம்பெறவிருந்த இலங்கை ஜனாதிபதியின் உரை ரத்துச்செய்யப்பட்டது. எனினும் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் செயலாளர் கமலேஸ் சர்மா ஏற்பாடு செய்திருந்த பிரித்தானிய மகாராணிக்கான விருந்துபசாரத்தில் ஜனாதிபதி பங்கேற்றார். இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க நடைமுறைகளுக்கு தாம் உதவ தயார் என்று பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் ரிச்சட் உகு, இன்று தெரிவித்துள்ளார் பொதுநலவாய நாடுகள் அமைப்பு, மனித உரிமைகளின் அடிப்படை அம்சங்களுக்கு மதிப்பளிக்கிறது இந்தநிலையில், இலங்கை அரசாங்கத்தின் கற்றுக்கொண்ட …

  14. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது தேசிய கொடியை ஏற்றி வைக்குமாறு சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா மூன்று தடவைக்கு மேல் பணித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி ‘நான் ஏற்றமாட்டேன்’ என கூறி மறுத்துள்ளார். அத்துடன் “ஏற்றுவதற்குரிய காலம் வரட்டும் அப்போது பார்ப்போம்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார். சமூக சேவைகள் அமைச்சினால் விசேட தேவையுடையோருக்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது இதன்போது, தேசியக் கொடியேற்றும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியை தேசிய கொடி ஏற்றுமாறு சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா கோர…

  15. இலங்கை ஜனாதிபதி மகிந்தாவிற்கு எதிராக பிரித்தானியாவில் புலம் பெயர்ந்த தமிழ் மக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் குறித்து இலங்கை அரசு கவலையடைந்துள்ளதாக இலங்கையின் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்துக்கள் மேற்படி ஆர்ப்பாட்ங்கள் தொடர்பாக அரசாங்கம் பதட்டத்தில் மூழ்கியுள்ளதை நன்கு எடுத்துக் காட்டுவதாக கொழும்புப் பத்திரிகையாளர் ஒருவர் கனடா உதயன் ஆசிரிய பீடத்திற்கு கருத்து தெரிவித்ததாக உதயன் பத்திரிக்கை தனது பதிப்பில் தெரிவித்துள்ளது. மேற்படி ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துக்களை வெளியிட்ட மேற்படி அமைச்சர் ஹெகலிய கூட மிகுந்த பதட்டத்துடனேயே காணப்பட்டதாகவும் மேற்படி பத்திரிகையாளர் தெர…

  16. கிளிநொச்சி கண்டாவளைப்பகுதியில் மண் ஏற்றச்சென்றவர்கள் மீது படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதலில் காயம் அடைந்த 9பேர் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளார்கள். கடந்த செவ்வாய் கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கண்டாவளைப்பகுதியில் ஆற்று மண் ஏற்ற சென்றவர்களை மறித்த படையினர் மணல் ஏற்றுவதாக இருந்தால் பணம் கொடுத்து விட்டு செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார்கள் இதனை மறுத்தவர்கள் மீது படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளார்கள். இதனால் காயம் அடைந்த 9பேர் கிளிநொச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளார்கள் நாள்தோறும் கண்டாவளைப்பகுதியில் சிறீலங்காப்படையினர் ஏதோஒருவகையில் மக்களுக்கு தொல்லைகொடுத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட…

    • 0 replies
    • 885 views
  17. கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் மீது சிரேஷ்ட மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பில் உயர் கல்வி அமைச்சரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நாம் வினவிய போது பதிலளித்த பல்கலைக்கழக மாணவர் சங்க சிரேஷ்ட உறுப்பினர் பிரேமகுமார டி சில்வா, இந்த விடயம் தொடர்பில் எழுத்து மூலம் முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களிடமும் விசாரணைகளை நடத்தியுள்ளோம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்க வேண்டி வரும் எனவும் அவர் கூறினார் இதேவேளை, இது குறித்து நாம் ஆராய்ந்த போது மேலும் சில மாணவிகளும் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால், அ…

    • 0 replies
    • 975 views
  18. பிரிட்டிஷ் அரசியாரின் வைர விழா கொண்டாட்டத்தில் இலங்கை அதிபர் கலந்துகொண்டதனைத் தொடர்ந்து கனடிய மக்கள் பெரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம், தொரொண்டோ பிரிட்டிஷ் பொது தூதரகத்தின் முன் நடந்துள்ளது. இங்கிலாந்து அரசியான அவர், நாட்டின் தலைவர் மட்டுமல்லாது கனடாவின் அரசியாரும் ஆவார். ராஜபக்சே போர் குற்றவாளி என எழுதப்பட்ட எதிர்ப்பு பலகைகளை ஏந்திய தமிழ்மக்கள், தமிழர்களுக்கு எதிராக நடந்துவரும் இனப்படுகொலையை எதிர்த்தும் போராட்டத்தின்போது முழங்கியுள்ளனர். மேலும், பொதுநலவாய நாடுகளில் இலங்கையின் அங்கத்துவத்தை எதிர்த்தும் கண்டனம் தெரிவித்துள்ளனர் கனடிய தமிழ்மக்கள். வரலாற்று சிறப்புவாய்ந்த அத்தகைய கொண்டாட்டத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவை அழைத்திருப்பது போர்குற்றங்கள்;…

    • 0 replies
    • 766 views
  19. தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கதயார் என சீன பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சீனாவிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய அங்குள்ள பாதுகாப்பு பிரிவினரை சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர - சீன பாதுகாப்பு பிரிவின் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்த இராணுவ தளபதி இரு தரப்பு உறவுகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார். இதனிடையே, இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் காணப்படும் விஷேட திறமைகள் சீனாவுடன் பரிமாறிக் கொள்ளப்படும் எனவும் ஜகத் ஜயசூரிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார். http://www.seithy.co...&language=tamil

  20. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிராக யோசனையின் பின்னணியில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மற்றும் அவரின் அலுவலக பணியாளர்கள் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி இலங்கைக்கு எதிராக பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்காவின் யோசனைக்கு இவர்கள் உதவியுள்ளதாக ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தமரா குணநாயகம் குற்றம் சுமத்தியுள்ளார். பேரவையில் யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னர் அவர், இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்துடன், நவநீதம்பிள்ளையின் ஆசிய பிராந்திய அலுவலகப் பணிப்பாளர் ரோரி மன்கோவன், பலருக்கு அனுப்…

  21. பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் நட்பு ரீதியான பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என பிரித்தானிய பிரதமரின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி செனல்4 ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரதமர் கமரூன் கோரியிருந்ததாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது என செனல்4 ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுககள் தொடர்பில் கிரமமான விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரதமர் வலியுறுத்தினார் என பிரதமரின் பேச்சாளர் க்ரேய்க் ஒலிவர் தெரிவித்துள்ளதாக செனல்4 ஊடகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கொழும்பு ஊடகங்களில் ஜனாதிபதி மஹிந்தவிற்கும், பிரதமர் கம…

  22. Rajapaksa’s action replay in UK by Col R Hariharan President Mahinda Rajapaksa’s key note speech at the Commonwealth Economic Forum organised by the Commonwealth Business Council (CBC) and the City of London today was called off by the organisers “due to pressure of pro-LTTE elements in London” as the Sri Lanka High Commission claimed. Though the Scotland Yard was ready to provide assured security, the CBC “decided it was not in their interest to stage the event” according to media reports. However, CBC website merely said: “After careful consideration, the morning sessions of the Forum… will not take place.” The President is visiting UK to atten…

    • 0 replies
    • 443 views
  23. ஒரு ஊடகத்தால் ஒரு இனத்தினை ஒருங்கிணைக்கவும் முடியும் மாறாக திசைதிருப்பவும் முடியும் அதில் இருந்து வெற்றிகொள்ளப்பட்டதுதான் பிரித்தானியாவில் தமிழர்களின் அணிதிரழ்வு! முள்ளிவாய்க்கால் போரின் முடிவில் அதாவது மே-18-2009ற்கு பின்னர் தமிழர்களின உத்தியோகபூர்வமான வானொலி தனது செயற்பாடுகளை இடைநிறுத்தப்பட்ட வேளையிலும் ஈழத்தில் ஆயுதப்போராட்டம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்மக்களின் விடுதலைப்போராட்டம் புலம்பெயர் தமிழர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டது. தலைவர் அவர்களின் வளிகாட்டலில் விடுதலைப்போராட்டம் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படுகின்றது என்பதை மீண்டும் பிரித்தானியாவில் நிரூபித்துக்காட்டி இருக்கின்றார்கள் என்றால் அது மிகையல்ல. தலைவர் அவர்களின் தலைமையின…

    • 13 replies
    • 5.3k views
  24. லண்டன் மாநகரின் பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் அலையென திரண்டு சிறி லங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விரட்டி விரட்டி இன்று புதன் கிழமை மேற்கொண்ட தொடர் ஆர்ப்பாட்டம் பாரிய அவமானத்தையும் பெரும் தலைக் குனிவையும் ஏற்படுத்திய நிலையில் பிரித்தானியாவை விட்டு அவர் வெளியேறி இருக்கிறார். மஹிந்த ராஜபக்ஷ லண்டன் ஹோட்டலில் இருந்து விமான நிலையத்தை நோக்கி மாலை 5.30 மணியளவில் புறப்பட்ட போது அங்கு பெரும் ஜனத் திரளாக திரண்டிருந்த தமிழ் மக்கள் முட்டைகளையும் பாதணிகளையும் அவரது வாகனத்தின் மீது வீசியும் கோசங்களை எழுப்பியும் தமது ஆத்திர உணர்வை வெளிப்படுத்தினர். முன்னதாக காலை 9 மணியளவில் மல்போரோ ஹவுஸ் முன்பாகவும் மாலை 4 மணியளவில் ஹில்டன் ஹோட்டல் முன்பாகவும் மஹிந்த ராஜபக்சவின் கொடும்பாவி தூக்கில் இட…

  25. [media=] நன்றி! நிலாமதி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.