Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நீயா? நானா? போட்டி: கூட்டமைப்புக்குள்ளும் ஏழரை! சுரேஸ் - சம்பந்தன் மோதல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கு தலைமை வகிக்கும் கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்தும் போக்கை பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விமர்சித்துள்ளார். அண்மையில் நடந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில், அதன் தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்ட சில கருத்துக்கள் தொடர்பில் தாம் முரண்படுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை (ஈபிஆர்எல்எஃப்) சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் பீபீசி தமிழோசையிடம் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் சம-பங்க…

    • 0 replies
    • 832 views
  2. யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா காவல்துறையினரின் மறைமுகமான வழிநடத்தல்களின் கீழ் செயற்பட்டு வரும் விடுதிகளில் அதிகமான சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. குறிபாக விபச்சாரம், போதைப்பொருள் பாவனை போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் குழுவினர்களை உள்ளடக்கி இயங்கிருவரும் இவ்வாறான விடுதிகள் தொடர்பாக யாரும் எந்தவிதமான கருத்துக்களையும் கூறுவது இல்லை. காரணம் இவ்வாறான விடுதிகளை நடத்துபவர்கள் பெரும்பாலும் காவல்துறையினருடன் நெருங்கிய நேரடித் தொடர்பில் இருந்து வருகின்றார்கள். இவர்கள் விடுதியில் உள்ள விபச்சாரிகளிடம் செல்ல வேண்டும் என்றால் அவ் விடுதிகளுக்கு அருகில் உள்ள வியாபார நிலையங்களினை மையப்படுதி ஒரு தரகர் செயற்பட்டு வருவார் அவருடைய தொடர்பினால் மட்டுமே அவ் விடுதிகளில் விபச்சார…

    • 0 replies
    • 712 views
  3. எமது தேசிய விடுதலைப் போராட்டம் வெறுமனே சிங்களபேரினவாதபடைகளுக்கு எதிரான எதிர்ப்பு என்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் தமிழீழமக்களுக்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் அதனுடான செற்பாடுகளையும் மிக அற்புதமாகவும் ஆழமானசிந்தனையுடனும் வடிவமைத்திருந்தது அனைவரும் அறிந்ததே. அந்தவகையலேயே புலம்பெயர் தேசங்களிலும் விளையாட்டு நிகழ்வுகளையும் தனித்து விளையாட்டின் ,வெற்றி என்ற விடயங்களுக்கு அப்பால் விளையாட்டினூடாக தமிழ்தேசிய ஒருமைப்பாட்டையும், புரிந்துணர்வையும் வளர்த்தெடுப்பதற்காகவே உருவாக்கி காலகாலமாக நடாத்தி வந்ததும் அனைவரும் அறிந்ததே.இனஅழிப்புக்கான இறுதிக்கட்டபோரை சிங்களஇனவெறி அரசு மாவிலாற்றிலிருந்து ஆரம்பித்த பின்னர்கூட தமிழீழத்தில் இருந்து வலைப்பந்தாட்டஅணியையும் வேறு விளையாட்டுகளின் அண…

  4. VOTE FOR "Sri Lanka's Killing Fields" For Bafta TV Awards 2012/ Takes One Second to vote & forward to others http://www.radiotime...in#pd_a_6166811 http://www.radiotime...in#pd_a_6166811 http://www.radiotime...in#pd_a_6166811

  5. பெரும்பான்யைமான மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இந்த அதிருப்தியாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இன்னமும் பூரணமான ஆதரவினை வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியுடன் காணப்படுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் உரிய முறையில் நிறைவேற்றத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பெரும் எண்ணிக்கையிலான மக்கள் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அதிகளவான மக்கள் ஐக்கிய…

  6. இராணுவமுகாம்களை நாம் வேறுநாடுகளில் அமைக்கவில்லை:- வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுப்பது அங்கு வசிக்கும் மக்கள் அல்ல எனவும் வடபகுதி மக்களின் அரசியல் அதிகாரத்தை விழுங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அவ்வாறான கோரிக்கை விடுப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களை விட அனுராதபுரம் - பொலன்நறுவை மாவட்டங்களில் அதிகளவான இராணுவ முகாம்கள் உள்ளன. எனினும் அங்குள்ள முகாம்களை அகற்றுமாறு மக்கள் கூச்சல் போடுவதில்லை என்பதை சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு தான் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் கோத்தபாய கூறியுள்ளார். தியத்தலாவ போன்ற பிரதேசங்களில் இராணுவ முகாம் மற்றும் இராணுவத்தினர் …

  7. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை உருவான பிறகே அதிகாரப்பகிர்வு அளிக்கப்படவேண்டும் என்று அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னால் தலைமைத் தளபதி சரத் பொன்சேகா கூறினார். கடந்த பல ஆண்டுகளில் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே இரு தரப்பு அரசியல்வாதிகளால் அவநம்பிக்கையும் சந்தேக உணர்வும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதனால் தான் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதை சிங்களவர் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள் என்றும் அவர் கூறினார். கொழும்பு புறநகரப் பகுதியான தலவத்துகொடவில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை அவர் பேட்டியளித்தார்: தமிழர்களுக்கு எதைக் கொடுத்தாலும் அதற்கு சிங்களர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள்…

  8. நுவரெலியா நல்லாயன் மகளீர் கல்லூரியில் அண்மைக் காலமாக தமிழ் மாணவிகள் கிறித்தவ மதத்தைச் ஆசிரியை ஒருவரால் அச்சுறுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கபடுகிறது.. இவர் குறித்த தமிழ் மாணவிகளை நெற்றிப் பொட்டு வைக்கவேண்டாம் என அறிவுறுத்தி வருகிறார் உனத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். அந்த பாடசாலையின் அதிபரும் ஒரு சிங்களராவார். அங்கு தமிழ், சிங்கள, மொழிகள் இரண்டிலுமே பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, இந்து இஸ்லாம், கிறிஸ்தவ, கத்தோலிக்க, பௌத்த மதங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் இங்கு கல்விபயின்று வருகின்றனர். எனினும் இந்து மத மற்றும் நெற்றிப் பொட்டு வைக்கும் மாணவிகள் அவற்றை வைக்கக் கூடாது என அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அப்படியும் அவர்கள் வைத்துக் கொண்டு வந்தால் பலவந்தமா…

    • 0 replies
    • 1.2k views
  9. லியாம் பொக்ஸ் உள்ளிட்ட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்ற விரைவில் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமை குறிப்பாக, வடக்கில் இராணுவ பிரசன்னம் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக கண்காணிக்க உள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதியின் ஆலோசகர் அருண் தம்பிமுத்து ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு விஜயம் செய்யுமாறு தம்மால் விடுக்கப்பட்ட அழைப்பாணையயை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பிரித்தானியாவிற்…

  10. இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் சிலரைக் கொண்ட மற்றுமொரு அகதிகள் படகொன்று ஆட்கடத்தல்காரர்கள் பிடியில் சிக்காது அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இதில் 88 இலங்கைத் தமிழ் அகதிகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதென அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த படகு விரைவில் அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவை வந்தடையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலியா, அதிகளவான இளைஞர்கள் படகில் இருப்பதாகக் கூறியுள்ளது. இவர்கள் மீன்பிடி படகில் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்வதாக தெரியவந்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மொத்தமாக 211 புகலிடக் கோ…

  11. விசாரணைகளின்றித் தடுப்பக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் பிரச்சினை இப்போது சர்வதேச விவகாரமாகியிருக்கின்றது. சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் உண்ணாவிரதப் போரரட்டத்தையடுத்து வவுனியாவிலும், கொழும்பிலும் மக்கள் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனைவிட ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் கைதிகள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. இதன்மூலம் தடுப்புக்காவலில் உள்ளவர்கள் தொடர்பில் சர்வதேசத்துக்கும் பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மகிந்த ராஜபக்‌ஷ அரசுக்கு ஏற்பட்டுள்ளது. போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் சென்றுள்ள போதிலும் காணாமல்போனவர்கள் மற்றும் தடுப்புக்காவலில் உள்ளவர்களின் பிரச்சினை தீர்க்கப்படாத ஒன்றாகவே உள்ளது. …

  12. தங்கச் சங்கிலி ஒன்றைத் திருடியதாக குற்றஞ்சுமத்தி தம்புத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் தம்புத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். ”தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் தமது கைகள், கால், கண்களைக் கட்டி உயரத்தில் தொங்கவிட்டு இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் கடுமையாக தாக்கினர்” பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பொலிஸ் பேச்சாளரிடம் கேட்டபோது, குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். எனினும், குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுதலை செய்ததாக தம்புத்தேகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்…

    • 0 replies
    • 1k views
  13. யாழ்ப்பாணம் மாதகல் கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்ல பாஸ் அனுமதியைப் பெற வேண்டும் என கடற்படையினர் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் தொழிலுக்குச் செல்வதில் பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக மாதகல் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பாஸ் அனுமதியைப் பெறுவதற்கு மீனவரின் புகைப்படங்கள், அவர்களின் விவரங்கள், கடற்றொழில் உபகரணங்களின் விவரங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டுமென கடற்படையினர் கட்டளையிட்டுள்ளனர். இதனால் கடலுக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபட முடியாத நிலையிலுள்ளதாக மாதகல் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.http://thaaitamil.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%…

    • 0 replies
    • 461 views
  14. யாழ்.பல்கலைக்கழகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப் படவுள்ளதாக ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிக சூரிய தெரிவித்துள்ளார்.யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் மாணவர் ஒன்றியத்தினர் யாழ். கட்டளைத் தளபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடன் தொடர்புகொண்டு கேட்டபோது: “பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து எம்முடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படியும், கற்றலுக்கான அச்சமற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தோம். ஆனால் ஒரு போதும் ராணுவத்தினரைப் பாதுகாப்புக் கடமையில் …

    • 0 replies
    • 1.2k views
  15. கதித் தஞ்சம் கோரியுள்ள தமிழ் மக்களை மீண்டும் அவர்களது சொந்த நாடான சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்புவதை பிரித்தானிய அரசாங்கம் உடனடியாக நிறுத்தி, அது தொடர்பான தனது கொள்கைகளை மீளவும் ஆராய்ந்து மாற்றுத் தீர்வொன்றை எட்டவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அடுத்த கட்டமாக மே31, 2012 அன்று தனது நாட்டில் தஞ்சம் கோரியுள்ள சிறிலங்கர்களின் ஒரு தொகுதியினரை மீண்டும் அவர்களது நாட்டுக்கு திருப்பு அனுப்புவதென பிரித்தானியா தீர்மானித்துள்ள நிலையிலேயே மனித உரிமைகள் கண்காணிப்பகம் இவ்வேண்டுகோளை முன்வைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா மற்றும் ஏனைய சில நாடுகளில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மீண்டும் சிறிலங்காவுக்கு அனுப்பு வைக்கப்பட்ட தமிழர்களில் பலர், அங…

    • 0 replies
    • 373 views
  16. இலங்கைப் பிரச்னையில் தமிழர்களுக்கு ஆதரவாக சர்வதேசச் சூழல் மாறி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. இலங்கைக்குள்ளாகவே பரந்துபட்ட சுயாட்சி அதிகாரம் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கும் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், "எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தாய்மண்ணை ஆட்சி செய்யவும், சொந்த மக்களைப் பாதுகாக்கவும், தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தமிழர்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும்'' என்றார். மட்டக்களப்பு நகரில் நடந்த கூட்டமைப்பின் 14-வது ஆண்டு மாநாட்டில் பேசியபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். கடந்த 30 ஆண்டு காலப் போராட்டம் ரத்தம், கண்ணீர், வீரம், ஏக்கம், பேரழிவு ஆகியவற்றால் எழுதப்பட்ட அத்தியாயம் எனக் குறிப்பிட்ட அவர், இந்தக் காலகட்…

    • 0 replies
    • 666 views
  17. தமிழ் வர்த்தகர் ஒருவரின் மூக்கைக் கடித்த சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். காலிமுகத்திடல் விடுதியில் கடந்த சனிக்கிழமை இரவு தமிழ் வர்த்தகர் ஒருவருக்கும் ஐதேகவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துனேஸ் கங்கந்தவுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழ் வர்த்தகரைத் தாக்கிய சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் துனேஸ் கங்கந்த, அவரது மூக்கையும் கடித்தார். மூக்கு கடிபட்ட நிலையில் 41 வயதான திவாகரன் என்ற அந்த வர்த்தகர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடாளுமன்ற உ…

    • 9 replies
    • 974 views
  18. தனி ஈழம் ஒன்றை நிறுவுவது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டில் எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டின் போது 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. இதன் போது இலங்கையில் தமிழர்களுக்கான தனி ராஜயம் ஒன்றை அமைப்பது தொடர்பிலும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாக, சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதுகுறித்து வானொலியொன்று கருத்து கேட்டபோதே, நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். ஒரே இலங்கையில் சமஉரிமையுடன் தமிழர்களும், சிங்களவர்களும் வாழக்கூடிய தீர்வு ஒன்று முன்வைக்கப்…

    • 1 reply
    • 771 views
  19. இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் யமுனா ராஜேந்திரன் இங்கிலாந்தின் சேனல் நான்கு தொலைக்காட்சி, 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையின் கொலைக்களங்கள், ஆவணப்படத்தினை வெளியிட்டது. இரண்டு ஆண்டுகளின்பின் 2012 மார்ச் மாதம் இலங்கையின் கொலைக்களங்கள் : தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் எனும் இரண்டாவது ஆவணப்படத்தை வெளியிட்டிருக்கிறது. 2012 மார்ச் 14 ஆம் திகதி இரவு 10.55 மணிக்கு சேனல் நான்கிலும், சேனல் நான்கு வரிசையில் படம் முடிந்து ஐந்து நிமிடம் பின்னதாக, நள்ளிரவு 11.55க்கு சேனல் ப்ளஸ் ஒன்றிலும் ஆவணப்படம் இரு முறை திரையிடப்பட்டது. துல்லியமான புரிதலுக்காக இருமுறையும் படத்தினைப் பார்த்தபின் இந்தப் பதிவினை எழுதத் துவங்குகிறேன். இலங்கையின…

    • 2 replies
    • 1.1k views
  20. உலகில் போர் இடம்பெறும் பிராந்தியங்களில் வல்லுறவை யுத்தத்துக்கான கருவியாக பயன்படுத்துவது தொடர்பான ஆதாரத்தை திரட்டுவதற்கு துரிதமாக அந்தப் பகுதிகளுக்கு ஆட்களை அனுப்பிவைப்பதற்கு தேவையான விசேட செயலணிப் பிரிவை பிரிட்டன் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பிரித்தானிய அரசின் இந்தச் செயற்பாடு இலங்கை அரசுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. முன்னாள் யூகோஸ்லாவியா, ருவாண்டா, மத்திய ஆபிரிக்கா, இப்போது சிரியா வென இத்தகைய போர்க்குற்றங்களை பார்க்க முடிகிறது. இந்நிலையில் இதற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கும் ஓரங்கமாக விரிவான முன்முயற்சியை பிரிட்டன் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்தது. இந்தவிசேட செயலணிக் குழுவானது நிபுணர்களைக் கொண்டிருக்கும், வெளிவிவகார அமைச்சே இக்குழுவை …

    • 1 reply
    • 1.2k views
  21. பிரித்தானியாவில் உள்ள மான்சன் கவுஸில் (Mansion House) எதிர்வரும் யூன் மாதம் 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் (நேரம்: 09:00 தொடக்கம் 17:00) பொருளாதார மன்றம் நடைபெறவுள்ளது. அந்த மன்றத்தில் உரையாற்றவிருக்கும் கொலைகாரன் மகிந்த ராஜபக்சவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுநலவாய வர்த்தக மன்றத்திற்கு கோரிக்கை விடுக்குமுகமாக புகார்செய்ய ஆங்கிலம் பேசத்தெரிந்த அனைவரும் உடனடியாக பின்வரும் தொலைபேசி இலக்கங்களினூடாகத் தொடர்புகொள்ளவும்: (44)2070248200 – (44)2070248239 – (44)2070248271 அதேவேளை, அன்றைய நாட்களில் எமது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நாடாத்துவதற்கு பிரித்தானிய வாழ் தமிழ்மக்கள் ஒழுங்குகளை மேற்கொண்டுவருகின்றனர். அவர்க…

    • 0 replies
    • 1k views
  22. சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் பிரித்தானிய பயணம் சிறிலங்காவுக்கு கடும் சவாலாக மாறியுள்ளது. பயணத்திற்கான தேதியை சிறிலங்கா அரச தரப்பு வெளிப்படையாக தெரிவிக்காக போதும், கடந்தமுறைப் பயணம் போல் இம்முறைப் பயணம் கேள்விக்குறியாகவிடக்கூடாது என்பதில் வலுதீவிரமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சிலும், லண்டனிலும் மக்கள் போராட்டங்கள் நடந்துள்ள நிலையில் , எதிர்பினைத் தொடர்ந்தும் வெளிப்படுத்துமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் அறைகூவல் விடுத்துள்ளது. சனநாயகத்தில் அபார நம்பிக்கை வைத்திருக்கும் பிரித்தானியா மண்ணில் , இரத்தம் தோய்ந்த கரங்களுடன் , பிரித்தானிய மாகாராணியை…

  23. அரசுக்கு விசுவாசமாக அதிகாரிகள் பலரும் வடக்கில் செயற்பட்டு வருகின்ற போதும் சந்தர்ப்பம் கிடைக்கும் வேளைகளில் எல்லாம் அவர்களை தூக்கியடிக்க ஆட்சியாளர்கள் தயங்குவதேயில்லை. அவ்வகையில் யாழ் அரச அதிபரை தொடர்ந்து இன்னுமொருவர் இடமாற்றத்திற்கு உட்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் சிங்கள மக்களுக்கு தமிழர்களின் நிலங்களை வழங்க மேற்கொள்ளப்பட்ட இரகசிய ஏற்பாடு தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிட்ட காரணத்திற்காக கரைதுறைப்பற்று பிரதேச செயலர் எஸ்.தயானந்தாவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளருக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த அறிவிப்பு இன்று காலை வழங்கப்பட்டிருக்கின்றது. இதேவேளை முல…

  24. தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் மஹிந்த அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமிலதேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதன் காரணமாக அந்நிய நாடுகளின் தலையீடுகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து மஹிந்தவின் ஆட்சி நாட்டிற்கு பெரும் சாபத்தையே பெற்றுக் கொடுத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் இருந்த காலகட்டத்தை விட தமிழ் மக்கள் மீதான உரிமை மீறல்கள் தற்போது பன்மடங்கில் அதிகரித்துள்ளன. சர்வதேச தலையீடுகள் மேலோங்க அரசின் பொறுப்பற்ற தன்மையே காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். ஐ.நா.வையும் அமெரிக்காவையும் குறை கூறுவதை விடுத்து மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்புடைமையை அரசு பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ள…

  25. அணிசேரா நாடுகளின் அமர்வில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு, ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. ஈரானின் பிரதி வெளிவிவகார அமைச்சர் டொக்டர் அப்பாஸ் அக்ராச்சி இந்த அழைப்பை விடுத்துள்ளார். தற்போது இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஈரானின் பிரதி வெளிவிவகார அமைச்சர், இலங்கை பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேராவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு, ஈரானிய ஜனாதிபதி முஹமட் அஹமட்நிஜாடீன் விடுத்த அழைப்பு தொடர்பான தகவல்களை, பிரதி அமைச்சர் நியோமல் பெரேராவிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அணிசேரா நாடுகள் அமைப்பின் 16ம் அமர்வுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30,31ம் திகதிகளில் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெறவுள்ளது…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.