Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எமது இனத்தின் விடிவுக்காக எமக்கிடையிலான பிணக்குகளை மறந்து ஒன்றாகச் செயற்பட வேண்டிய தருணமிது. எமது பிரச்சனைகளையும் அரசியல் வேட்கையையும் செவிமடுத்துக் கேட்கும் பன்னாட்டுச் சமூகத்துக்கு நாமே பல்வேறு செய்திகளையும் முரண்பட்ட தீர்வுகளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நிலை எமக்குப் பாதகமாகவே அமையும். உலகத்தின் கவனம் இன்று எமது மக்கள் மீது திரும்பியிருக்கும் நிலையில் எமக்கான தீர்வாக நாமனைவரும் ஒரேவிடயத்தை அனைத்துலகச் சமூகத்துக்குச் சொல்ல வேண்டும். இதுவே ஆரோக்கியமான வழிமுறையாக அமையும் என தமிழர் இனவழிப்பு நினைவுநாளை முன்னி்ட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். அறிக்கையின் முழுவடிவம் வருமாறு: அன்ப…

  2. யாழ் பல்கலைக்கழக மாணவர் தர்சானந்த் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர்கள் காலவரையாற்ற வகுப்புப் புறக்கணிப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளை ஹத்துருசிங்கவுடன் சந்திக்க வைக்க நிர்வாகம் எடுத்த முடிவு தோல்வியடைந்துள்ளது. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு பல்கலைக்கழக நிர்வாகத்தால் உறுதிசெய்யப்பட வேண்டும் என்று கோரி மாணவர்கள் தமது வகுப்புக்களை புறக்கணித்து வருகின்றனர். இதனால் யாழ் பல்கலைக்கழகம் வெறிச்சோடியுள்ளது. மாணவர்கள் தாக்கப்படும் சம்பவங்களுக்கு துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம் பதில் அளிப்பதோ நட…

  3. தனது ஒரே இலக்கு அரசாங்கத்தை கவிழ்ப்பதாகும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். பொன்சேக்கா விடுதலை செய்யப்படுவதை முன்னிட்டு, மகிழ்ச்சி தெரிவிக்கும் நோக்கில், புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு சென்றிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் தான் இணைய போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னை சிறையில் அடைத்து, அரசாங்கம் அடிப்பணிய வைக்க முயற்சித்ததாகவும் அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதால், அரசாங்கம் தன்னை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.eeladhesa...chten&Itemid=50

  4. போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான எந்தவொரு அனைத்துலக விசாரணைக்கும் சிறிலங்கா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, சிறையில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். பிபிசி செய்தியாளருக்கு இன்று வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2009இல் விடுதலைப் புலிகளை வெற்றி கொண்ட போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார். சிறிலங்காவின் சில தலைவர்களின் அணுகுமுறையே அவர்கள் ஏதாவது குற்றம் செய்தனரா என்ற எண்ணத்தை உலகத்துக்கு ஏற்படுத்தியது என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். http://www.puthinappalakai.com/view.php?20120522106247

  5. சிறிலங்காவில் தமிழர்களின் திட்டமிட்ட இனப்படுகொலைகளைத் தடுக்க இந்திய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.ராஜா. இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது, சிறிலங்காவில் உள்ள தமிழர்களின் பரிதாப நிலையை விபரித்து அவர் உரையாற்றினார். "சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர் முடிவடைந்து மே 18ம் நாளுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஆனாலும், அங்கு இனப்படுகொலைகளும், படுகொலைகளும் மூன்றாண்டுகளாகத் தொடர்கின்றன. திட்டமிட்ட இனப்படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்து ஆலயங்கள் இலக்கு வைக்கப்படுகின்றன. வடக்கு, கிழக்கு பகுதிகளில…

  6. இலங்கையில் உரிய நியாயம் கிடைக்காவிட்டால் சர்வதேச ரீதியில் முறைப்பாடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படக் கூடுமென அமரர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரன் புதல்வி ஹிரூனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். முல்லேரியாவில் கடந்த ஒக்ரோபர் மாதம் அமரர் பாரத உள்ளிட்ட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான துமிந்த சில்வாவை கைது செய்யும் நடவடிக்கைகளை குற்ற விசாரணைப் பிரிவினர் தொடர்ந்தும் காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். துமிந்த சில்வாவின் சட்டத்தரணிகள் தமக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தால் சர்வதேச ரீதியில் வழக்குத் n;தாடர நேரிடும் என அவர் சுட்டிக்காட…

  7. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையத்தின் ஏற்பாட்டில் 'முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப்பின்...' என்ற தலைப்பில் அரசியல் கருத்தரங்கொன்று சென்னையில் இடம்பெற்றுள்ளது. மே18ம் நாள் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இக்கருத்தரங்கில் பேராசிரியர் தோழர் சரஸ்வதி தலைமை தாங்கினார். நா.த.அரசாங்கத்தின் அரசவைப் பிரதிநிதி செல்வராஜ் முருகையன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். நா.த.அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களான இந்தியப் பிரதிநிதிகளை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் அறிமுகப்படுத்தி உரையாற்றினார். இக்கருத்தரங்கில் 'தமிழீழம் இந்திய அரசின் நிலைப்பாடும்' என்ற தலைப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் உரையாற்றினார். சிங்கள பௌத்த…

  8. உலகத் தமிழ் அமைப்பு மற்றும் தமிழர் பண்பாட்டு நடுவம் ஒருங்கிணைத்த மே - 18 இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வில் ஆடிய பெண் நிதி சர்மா. இவரது தாய் மொழி இந்தி. இவரது தந்தை சீனிவாஸ் திவாரி ஈழப் படுகொலையை பற்றி அறிந்த நாள் முதல் ஈழத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து அவரது பெண்ணை இந்த நிகழ்வில் ஒரு எழுச்சி பாடலுக்கு நடனம் ஆட அனுமதி தர வேண்டும் என நம்மிடம் கேட்டுக் கொண்டார். இவரது நல்ல எண்ணத்தை கருத்தில் கொண்டு நாம் இவரது பெண்ணை இந்த நிகழ்வின் முதல் பாடலான முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம் என்ற பாடலுக்கு ஆடும் படி கேட்டுக் கொண்டோம். நாங்கள் நினைத்ததை விட செல்வி நிதி மிகச் சிறப்பாக பல் வேறு முக பாவனைகளுடன், கண்களில் வீரத்துடன், சோகத்துடன் தாய் மண்ணுக்கா…

    • 1 reply
    • 1k views
  9. பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்! வேலூ்: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைபட்டுள்ள பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியோர் பிளஸ்டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். ராஜீவ் காந்தி கொலையாளிகளான பேரறிவாளன், முருகன் ஆகியோர் பிளஸ்டூ தேர்வு எழுதியிருந்தனர். சிறையிலேயே இவர்கள் மற்ற கைதிகளுடன் சேர்ந்து தேர்வு எழுதியிருந்தனர். இந்த நிலையில் பேரறிவாளன் சிறப்பான முறையில் மதிப்பெண்கள் வாங்கி அனைவரையும் வியக்க வைத்துள்ளார். அவர் மொத்தம் 1096 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல முருகன் 983 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் வணிகவியலில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் …

    • 3 replies
    • 2.1k views
  10. ஈழத் தமிழ்க் குடும்பத்துக்கு அவுஸ்திரேலியாவில் நடந்த கதி! கடந்த ஏப்ரல் மாதம் திருமணமாகியிருந்த கணேஷ் ரஞ்சினி தம்பதியர் அவுஸ்திரேயாவின் மெல்பேர்ண் குடிவரவுத் திணைக்கள அலுவலகத்திற்கு கடந்த 10-05-2012 வியாழக்கிழமை மாதாந்த நேர்காணலுக்கென அழைக்கப்பட்டு சென்றபோது இடிபோல அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று அங்கு தமக்காகக் காத்திருக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவுஸ்திரேலியாவின் புலனாய்வுப் பிரிவு எந்தவித ஈவு இரக்கமும் இல்லாமல் ரஞ்சினையும் அவரது இரு குழந்தைகளையும் 'தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்" என அறிக்கை அனுப்பியுள்ளதால், கணவரிடமிருந்து அவர்களைப் பிரித்து சிட்னியிலுள்ள விலாவூட் தடுப்பு முகாமுக்குஅனுப்புவதற்கு குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் தீர்மானித்…

    • 2 replies
    • 1.8k views
  11. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் செயலாளரான பரமலிங்கம் தர்சனாத் வெள்ளி, மே 18 அன்று இரும்புக்கம்பிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். இச்சம்பவம் யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் இலங்கை இராணுவ முகாம் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்றது. மே 2009 இல் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழரை நினைவு கொள்ளும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்விற்கு செல்லும் வழியிலே தர்சனாத் தாக்கப்பட்டார். மே 2009 இல் இலங்கை அரசாங்கம் தமிழினத்தையும் தமிழ் அடையாளத்தையும் அழிக்கும் நோக்கோடு ஒருதிட்டமிட்ட இனவழிப்பினை மேற்கொண்டது. ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள், சிறுவர் முதல் முதியோர்வரை, மனிதாபிமானம் இன்றி, கொடூரமாக கொடுமைப்படுத்தப்…

    • 2 replies
    • 752 views
  12. இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு அரசாங்கம் அறிவித்திருக்கும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஞயிற்றுக்கிழமை காலை எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்புக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கருத்துத் தெரிவித்தார். அரசாங்கம் தெரிவுக்குழு நிகழ்ச்சி நிரல் தொடர்பாக அளித்திருக்கும் விளக்கம் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.அவை ஓரளவு நம்பிக்கையூட்டக்கூடியதாக அமைந்திருப்பதை காணமுடிந்தது.எனினும் மேலும் சில விடயங்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழ்த் தேசியக…

    • 5 replies
    • 802 views
  13. யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியிலுள்ள பற்றை ஒன்றுக்குள் வைத்து வலுவிழந்த இளம் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தென்பகுதியைச் சேந்த இருவர் (இரண்டு முஸ்லிம்கள்) இன்று சனிக்கிழமை நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர் மேற்படி இருவரும் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு பனை மரத்தில் கட்டப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் இவ்விருவரும் தற்போது ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக வருகிறார் இச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். htt…

    • 1 reply
    • 1k views
  14. அரசியல் பழிவாங்கள் நிமித்தம் சிறை சென்ற என்னை, இன்னும் 10 வருடங்கள் தடுத்து வைத்திருந்தாலும் என்னுடைய தைரியம் ஒருபோதும் சிதறியிருக்க மாட்டாது' என்று முன்னாள் சிறிலங்காவின் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்ற அவர் சிறைச்சாலை முன்றவில் கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சரத் பொன்சேகா, "எனக்காக மக்கள் சிந்திய கண்ணீரை நான் ஒருபோதும் மறந்துவிட மாட்டேன். எனக்கு நேர்ந்த அசாதாரணத்துக்காக மக்கள் பட்ட வேதனையையும் மறந்துவிட மாட்டேன். இன்று முதல் மக்களுக்கான எனது பணி மீண்டும் தொடரப்போகிறது. எமது மக்களுக்காக என்னை நான் தியாகம் செய்வேன். மக்கள் எனக்கு பாரியதொரு சக…

    • 7 replies
    • 1.4k views
  15. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினால் இவ்வாண்டு பிரித்தானியாவில் நடாத்தப்படவுள்ள 22 ஆவது தமிழர் உதைபந்தாட்டப் போட்டிக்கான முக்கிய கலந்துரையாடல் லண்டனில் 20.05.2012 நேற்று இடம்பெற்றது. எதிர் வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் 22 ஆவது உதைபந்தாட்டப் போட்டியில் பங்குகொள்ளும் கழகங்களுக்கான இக் கலந்துரையாடலை இவ் ஆண்டுக்கான விளையாட்டுக் குழுத் தலைவர் திரு.றஞ்சன் அவர்கள் தலைமைதாங்கி நடாத்தினார். இக் கலந்துரையாடலில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் (TRO) பிரித்தானியக் கிழை சார்பில் அதன் பிரதிநிதி திரு. கேதீஸ் அவர்களும், பல விளையாட்டுக் கழக பிரதிநிதிகளும் சமூகமளித்திருந்தனர். வருடா வருடம் வங்கிவிடுமுறையில் நடைபெறும் தமிழர் தமிழர் புனர…

  16. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நினைவுகொள்ளும் இவ் வேளையில் ஒரு மிருகத்தனமான தாக்குதலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தமிழ் மாணவன் மீது நடத்தப்பட்டுள்ளது. பரமலிங்கம் தர்சானந் கலை பிரிவில் மூன்றாம் ஆண்டு கல்வியையும் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார், இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினால் இயக்கப்படும் ஒரு கும்பல் மூலம் இரும்பு கம்பிகள் கொண்டு தாக்கப்பட்டு தலையில் காயங்களுடன் தீவிர மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தனது சக மாணவர்களுடன் இணைந்து இலங்கை இராணுவத்தின் தடைகளை மீறி 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவு நிகழ்வுகளை நிவர்த்தி செய்ய காரணமாக இருந்த காரணத்தால் அவர் ப…

  17. "மஹிந்த ராஜபக்ஷவின் தலையை சர்வதேசம் எனும் மாபெரும் கத்தி பதம் பார்த்துவிடுமோ என்ற அச்சத்தாலேயே முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலைசெய்ய அரசு முன்வந்துள்ளது." என புதிய சிஹல உறுமய கட்சியின் செயலாளர் சரத் மனமேந்திர தெரிவித்துள்ளார். "சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டால் அந்தப் பெருமை பொது எதிர்க்கட்சிகளையே சாரும் எனவும் அவர் தெரிவித்தார். சரத் பொன்சேகாவை என்ன நிபந்தனை அடிப்படையில் அரசு விடுதலை செய்கின்றதெனத் தெரியவில்லை. அவர் மறுபடியும் அரசியல் களத்தில் குதிக்க முடியாத அளவிலே அவர் அரசால் விடுதலை செய்யப்படுவார் எனத் தெரியவருகின்றது" எனப் புதிய சிஹல உறுமய கட்சியின் செயலாளர் சரத் மனமேந்திர தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்…

    • 11 replies
    • 1.7k views
  18. யாழ். பலாலி கூட்டுப்படைத் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற, வன்னிப் போரில் உயிரிழந்த முப்படையினருக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வின் போது யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரி சென்றிருந்த போதிலும் அவரை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் என்னை ஏன் மதிக்கவில்லை என்று அவர் நேரடியாகவே இராணுவத் தளபதியிடம் கேள்வி எழுப்பிக் கவலைப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. இன்று பகல், பலாலி கூட்டுப்படைத் தலைமையக மண்டபத்தில் இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது. நிகழ்விற்கென யாழ்ப்பாணத்தின் பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். தென்னிலங்கையில் இருந்தும் மக்கள் அழைத்துவரப்பட்டிருக்கின்றனர். அவ்வாறு அழைக்கப்பட்டவர்களில் பெண்களுக்கு உ…

  19. யுத்தத்தின் இறுதிக்கட்டம் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்காவின் வடக்கில் உள்ள தமிழ் மக்களின் மனங்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடுவதை அடியோடு வெறுத்தனர். இதற்குப் பதிலாக அவர்கள் அஞ்சலி செலுத்துவதிலும், துக்கம் கடைப்பிடிப்பதிலும் ஈடுபட்டனர். இவ்வாறு Groundviews இணையத்தளத்தில் Ruki எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அக்கட்டுரையின் முழுவிபரமாவது, சிறிலங்கா அரசாங்கமானது தான் பெற்றுக் கொண்ட யுத்த வெற்றியின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவை கொழும்பில் கொண்டாடியுள்ளது. இவ்வாண்டின் மே மாதமானது 'யுத்த கதாநாயகர்களை மதிப்பளிக்கும் மாதம்' என சிறிலங்கா அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. யுத்த வெற்றியைக் கொண்டாட…

  20. விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையில் சாமர்த்தியமாக இந்திய அரசைச் சேர்த்தது எப்படி என்பதையும் இந்திய அரசியல் தலைவர்களுக்கு அதில் முக்கியப் பங்கு இல்லாமல் தவிர்த்தது எப்படி என்பதையும் புதிய புத்தகம் ஒன்று விவரிக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு போர் நடத்தி அதில் வெற்றியும் பெற்ற 3-வது ஆண்டு தினத்தையொட்டி இந்தப் புத்தகம் வெளியிடப்படுகிறது. சி.ஏ. சந்திரபிரேம என்ற பத்திரிகையாளர் எழுதிய இந் நூலுக்கு "கோதா'வின் யுத்தம்'' என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. இலங்கை ராணுவத்துறை செயலராக இருந்த கோத்தாபய ராஜபக்சதான் "கோதா' என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறார். இவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர். இரு நாடுகளின் அரசியல் தலைவர்களைச் சேர்க்காமல் அரசு அதிகாரிகள் நில…

  21. இலங்கைத்தீவில் தனிநாடு அமைவதற்கு அனைத்துலக சமூகம் ஆதரவு அளிக்கப்போவதில்லை. தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடங்களான வடக்குக் கிழக்கிற்கு சுயாட்சித் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதில் அனைத்துலக மட்டத்தில் பெரும் ஆதரவு நிலவுகின்றது. அதே கருத்தினையே நானும் கொண்டிருக்கின்றேன் என்று நோர்வேயின் முன்னாள் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல் ஹெய்ம் தெரிவித்துள்ளார். போர் முடிவுற்ற மூன்று ஆண்டுகளின் பின்னரான இலங்கைத்தீவு’ எனும் தலைப்பில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நேற்று முன்னாள் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கருத்தரங்கிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவின் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரங்களை ஒத்ததான அரசியல்த் தீர்வுக்கு அனைத்துலக ம…

  22. இலங்கையில் தனித் தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான ராம் விலாஸ் பாஸ்வான் கூறினார். முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுத் தினத்தையொட்டி மே 17 இயக்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகில் நடைபெற்றது. ராம் விலாஸ் பாஸ்வான் நினைவு தீபத்தை ஏற்றி வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். பின்னர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறுகையில், இலங்கையில் தனித் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இனப் படுகொலை புரிந்த ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்…

  23. 18 .05 .2012 அன்று காலை 9.30 மணியளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த் இனம்தெரியாதோரால் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கண்டன அறிக்கையின் தகவலின் படி இச்சம்பவம் "யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் கலட்டிச் சந்தியில் இருக்கும் இராணுவ காவலரனிலிருந்து 20 மீற்றர் தூரத்திலேயே இடம்பெற்றுள்ளது. தலைக்கவசம் அணிந்தபடி உந்துருளியில் வந்த 4 ஆயுததாரிகளே தர்சானந்த் அவர்களை சுற்றிவளைத்து இரும்புக் கம்பிகளால் தாக்கி படுகாயம் ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். தர்சானந்த் தலையிலும், கைகளிலும், உடலிலும், கால்களிலும் பலத்த காயமடைந்துள்ளார்." என புலம்பெயர் யேர்மன் தமிழ் இளையோர்களாகிய நாம் மிகுந்த கவ…

  24. சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 23 ஆம் திகதி ரஷ்யாவிற்கு பயணம் செய்யவுள்ளார். இவர் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் Sergey Lavrov வின் அழைப்பை ஏற்று அங்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இதேவேளை வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 24 ஆம் திகதி கஜகஸ்தானிற்கு விஜயம் மேற்கொள்ளார். இதன் போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் குறித்து கல…

  25. இராஜதந்திர செயல் முறையே அடுத்த பயணம். ஈழப்போராட்டம் அனைத்துலக அந்தஸ்த்து மற்றும் தலையீடு ஆகியவற்றை இப்போது பெற்றுவிட்டது. தம் நலுனுக்காக தலையீடு செய்யும் அனைத்துலகத்தை தமிழர் நோக்கு நிலையில் கையாள்வதிலேயே இறுதிப் பயணத்தின் வெற்றி தங்கி இருக்கின்றது என்கிறார் துரை சண்முகம். [விடுதலைப் புலிகளின் அதிகார மட்டத்துடன் தொடர்பாடலை கொண்டிருந்த துரை சண்முகம் எழுதிய கட்டுரையை புதினப்பலகை வெளியிடுகின்றது.] "மனித நாகரிகத்தின் மனச்சாட்சியிடம் போய்ச் சொல்லுங்கள் நாங்கள் எங்கள் இனத்தின் விடுதலைக்காக எம்மக்களுடன் இங்கே மரணித்து கிடக்கிறோம் என்று.." இதுதான் முள்ளிவாய்காலில் சிங்கள தேசம் கண்டெடுத்த பெருமை கொண்ட பிணங்களின் பேசாமொழி. முள்ளிவாய்க்கால் ஒரு முடிவல்ல. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.