Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தென்னாபிரிக்காவுடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்குக் கிடைத்த மற்றுமொரு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் தவறிவிட்டதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தென்னாபிரிக்காவின் தமிழ் அமைச்சர் இராதாகிருஸ்ண படையாச்சியின் இறுதிச்சடங்கு கடந்தவாரம் அந்த நாட்டின் அரச நிகழ்வாக நடத்தப்பட்டது. இதில் சிறிலங்காவின் சார்பில் எவரும் கலந்து கொள்ளவில்லை. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால், இரு அனுதாபச் செய்திகள் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த இறுதிச்சடங்கில், உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரா கலந்து கொண்டு இரங்கலுரை நிகழ்த்தினார். டர்பன் மைதானத்தில் நடந்த இறுதிச்சடங்கில் இரங்கலுரை நிகழ்த்திய எட்டுப் பே…

    • 6 replies
    • 1.4k views
  2. தமிழ் இன அழிப்பின் உச்சக் கட்டமாகிய முள்ளிவாய்க்கால் அவலத்தின் மூன்றாம் ஆண்டு நினைவினை முன்னிட்டு கனடிய மாணவர் சமூகம் இணைந்து முன்னெடுக்கும் ‘மீள் எழுச்சி நாள்’ நினைவு நிகழ்வு எதிர்வரும் மே 19ஆம் திகதி ஒன்ராறியோ நாடாளுமன்ற முன்றலில் குயின்ஸ் பார்க்கில் நடைபெறும். எதிர்வரும் மே 18ஆம் திகதியன்று ஸ்காபுரோ சிவிக் சென்டரின் முன்னால் அமைந்துள்ள அல்பேர்ட் காம்பெல் சதுக்கத்தில் போர்க்குற்றநாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அதன் தொடர்ச்சியாக, கனடிய மாணவர் சமூகத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள இந்நிகழ்வு எதிர்வரும் மே 19ஆம் திகதி, சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நினைவு நிகழ்வினை அனைந்து பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் முன்னின்று நடத்தவுள்ளனர். …

    • 1 reply
    • 534 views
  3. பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் அரியாசனத்தில் அமர்ந்து 60 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெறும் வைரவிழா நிகழ்வுகளில் பங்கேற்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச லண்டன் செல்லவுள்ளார். இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்து அவர் அடுத்த மாதம் 3ம் நாள் தொடக்கம் 4 நாட்கள் பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா அதிபரின் இந்தப் பயணத்தை கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் இந்தப் பயணத்தின் போது சிறிலங்கா அதிபர், பிரித்தானிய அரச அதிகாரிகள் எவரையாவது சந்திப்பாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும் இது ஒரு அரசு முறைப்பயணம் அல்ல என்று பிரித்தானிய தூதரக அதிகாரி தெரிவித்தார். சிறிலங்…

  4. இலங்கையில் போர் முடிவுற்று 3 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், தாம் தடுத்துவைத்துள்ள போர் கைதிகள் குறித்த விபரங்களை வெளியிட தயார் என இலங்கை பாதுகாப்புச் செயலகம் முதல் தடவையாக தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில், சரணடைந்த புலிகளின் உறுப்பினர்கள் பலரையும் மற்றும் மூத்த உறுப்பினர்கள் பலரையும் இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது யாவரும் அறிந்ததே. இதில் பலர் காயங்களுடன் இலங்கை இராணுவத்தினரிடம் அகப்பட்டனர். அவர்களின் நிலை என்ன ஆயிற்று என்று இதுவரை இலங்கை அரசு தெரிவித்தது இல்லை. குறிப்பான புலிகளின் மூத்த உறுப்பினர்களான பேபி சுப்பிரமணியம், யோகி, பாலகுமார் மற்றும் இராணுவப் பிரிவைச் சேர்ந்த கடாபி போன்றவர்களை இலங்கை அரசு என்ன செய்தது என்பது இதுவரை அறியப்படவில்லை. …

  5. தனமல்வில ஐந்தாம் கட்டைப் பகுதியில் படையினரின் ஊர்தியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 17 படைச் சிப்பாய்கள் காயமடைந்து எம்பிலிபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக படைதுறை ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். (13-05-2012) இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த சிப்பாய்கள் எம்பிலிபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக படைதுறை ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை படையினர் மேற்கொண்டுவருவதாக பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தர் http://thaaitamil.com/?p=18849

    • 0 replies
    • 587 views
  6. வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட சில தொழில்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள பிரதேச மீனவர்கள், இதற்கு கடற்படையினர் உடந்தையாக இருந்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தக் கடற்பகுதியில் சுண்டிக்குளத்திற்கு அப்பால் கேவில் பகுதி கடற்பரப்பிற்குள் நுழையும் சிங்கள மீனவர்கள், பெருமளவில் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுகின்றனர். எனினும் இது குறித்துக் கடற்படை எந்த விதமான நடவடிக்கையினையும் எடுத்திருக்க வில்லை. இந்த நிலையில் தமிழ் பிரதேச மீனவர்களின் தொழில் வெகுவாகப் பாதிக்கப்படுவதாக தொடர்ந்தும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இது குறித்து மாவட்ட கடற்றொழில் நீரியல்…

    • 0 replies
    • 544 views
  7. அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டியதாக குற்றஞ் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதேசிய செயட்பட்டளர் கருணாகரன் கந்தசாமி என்பவருக்கு கடூழிய சிறைத் தண்டணை வழங்கப்படும் என அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட தேசிய செயட்பட்டளர் கருணாகரன் கந்தசாமி என்பருக்கு 20 அண்டுகள் சிறைத்தண்டணை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. 55 வயதான இந்நபர் ஆறு வருடங்களிற்கு முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அதிக பட்ச தண்டனை வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. இவர் 2000ஆம் ஆண்டு நடுப் பகுதியில் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்ததாக குற்றஞ் சாட்டப்பட்ட…

  8. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக அதிகாரப் பகிர்வை வலியுறுத்தும் வகையில் இலங்கை- இந்திய ஒப்பந்தத்தினை அடுத்து கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்தினை இலங்கை அரசாங்கம் ரத்துச் செய்ய வேண்டும் என்று இலங்கையின் தொழில்சார் நிபுணர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு இலங்கை ஜனாதிபதியைக் கேட்டிருக்கிறது. 13 வது திருத்தச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்திற்கோ அல்லது இலங்கை மக்களுக்கோ தெரியாமல் இந்தியாவினால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறி அதனை நீக்க வேண்டும் என்று இலங்கையின் தொழில்சார் நிபுணர்களின் அமைப்புக்களின் கூட்டமைப்பின் தலைவர் திலின கிரிங்கொட கூறியுள்ளார். 13 வது திருத்தச் சட்டம் இலங்கை மீது திணிக்கப்பட்ட ஒன்று என்றும் அது இலங்கையில் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது என்…

  9. இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பில் பொது இணக்கப்பாடு ஒன்றைக் கடைப்பிடிக்க அமெரிக்காவும் இந்தியாவும் தீர்மானித்துள்ளமை கொழும்பு அரசியலில் பெரும் நெருக்கடியையும் சினத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழர்களின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் இந்த இலங்கை விரோதப் போக்கு அரசின் செயற்பாடுகளுக்கு தடங் கலை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ இதுகுறித்து இந்திய வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு பேசுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குப் பணித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தரப்புகளில் இருந்து அறியமுடிகிறது. அத்துடன் இந்தப் பொது இணக்கப்பாட்டு விடயம் குறித்து அம…

  10. ஐ.நா பொது வாக்கெடுப்பு நடத்தப்படுமானால் ஈழத் தமிழர்களின் உண்மையான விருப்பம் வெளிவரும் ஈழம் குறித்து கருத்து தெரிவித்த சுஷ்மா சுவராஜுக்கு பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபட்ட இலங்கையை விரும்பும்போது, தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் அங்கு பிரிவினையை ஏற்படுத்த முயற்சி செய்வதாக பா.ஜ.க. நாடாளுமன்ற எதிர்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ் குற்றம்சாட்டியிருக்கிறார். இலங்கை அரசியலின் கடந்த கால வரலாறு என்ன என்பது தெரியாமலும் எதனால் அங்கு பிரிவினைப் போராட்டம் வெடித்தது என்பதை அறியாமலும் அவர் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக…

  11. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி வெலிக்கடைச் சிறையில் கடந்த நான்கு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண் ஒருவர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், அவரைப் பொறுப்பேற்க யாரும் இல்லாமையால் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பிவைக்கப்பட்ட பரிதாப நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றிருக்கின்றது. மட்டக்களப்பு, செங்கலடி உமா மில் ரோட்டைச் சேர்ந்த சிவராணி சந்திரகுமார் என்ற 30 வயதான பெண்ணுக்கே இந்த பரிதாபம் நிகழ்ந்திருக்கின்றது. 2008 ஆகஸ்ட் 29ம் திகதி, குடும்ப கஷ்ட நிலை காரணமாக கொழும்பில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டக்களப்பிலிருந்து பஸ்ஸில் வந்துகொண்டிருந்த போதே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர், பாதுகாப்புப் படையினருடைய கடுமையா…

  12. சிறிலங்காப் படையினரின் தடுப்புமுகாம்களில் உள்ளவர்கள் பற்றிய விபரங்களை நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் வெளியிட சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. போரின் இறுதிக்கட்டத்தில் கைது செய்யப்பட்ட - சரணடைந்த விடுதலைப் புலிகள் பற்றிய விபரங்களை வெளியிடுமாறு சிறிலங்கா அரசுக்கு தொடர்ச்சியான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்தன. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் தடுப்புக்காவலில் உள்ளவர்களின் விபரங்களை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தடுப்புக்காவலில் உள்ளவர்களின் விபரங்களை நெருங்கிய உறவினர்கள் மட்டும் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென சிறிலங்காவின் தீவி…

  13. புலிகளால் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்ட போது எதிராக குரல் எழுப்பியவன் நான்!- மன்னார் ஆயர்! மன்னார் மாவட்டத்தில் அடாவடித்தனமாக அரச காணிகளை ஆக்கிரமிப்பதையே நான் எதிர்க்கின்றேன். முஸ்லிம்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவதை நான் எதிர்க்கவில்லை. முஸ்லிம்கள் வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட போது அதற்கு எதிராக குரல் கொடுத்தவனும் நானே என்று மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் தெரிவித்தார். தேசிய சமாதானப் பேரவை நேற்று மன்னாரில் கூட்டமொன்றை நடத்தியபோதும் இதை நான் தெரிவித்தேன். மன்னாரில் இடம்பெறும் அடாவடித்தன சக்திகள் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுத எனக்கு பூரண உரிமை உண்டு. மன்னார் மாந்தை மேற்கு பிரிவைச் சேர்ந்த விடத்தல்தீவு முஸ்லிம்கள்…

  14. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மீண்டும் உயிரூட்ட முயற்சித்து வரும் தரப்பினர் சம்பந்தமாக பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு சிங்கள் ஊடகமான திவயின தனது பதிப்பில் தெரிவித்துள்ளது. குறிப்பாக வன்னியை சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரபாகரன் கொல்லப்படவில்லை அவர் உயிருடன் இருக்கின்றார் என தெரிவித்துள்ளதை அடுத்து எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் வடக்கில் விடுதலைப்புலிகளை நினைவுகூறும் நிகழ்வுகளை நடத்த முயற்சிகளை நடப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்துள்ள புலிகளின் தரப்பு, உயிரிழந்த புலிகளை நினைவு கூறுவதற்காக மாணவர்களை தூண்டி வருவதாகவும் மேலும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் மீண…

    • 1 reply
    • 790 views
  15. ஜனாதிபதியின் ஆலோசனையுடன் தயாரிக்கப்பட்ட திட்டவரைபடத்துடன் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்றைய தினம் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களது இந்த பயணமானது ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு பொறுப்புக் கூறக்கூடிய வகையில், அமெரிக்காவினால் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் முழுமையான செயற்திட்ட வரைபினை ஈடுசெய்யும் நோக்கில் அமையும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனடிப்படையில் எதிர்வரும் 18ம் திகதி நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்ட வரைபை அவரிடம் கையளித்து அந்நாட்டின் இராஜாங்க …

  16. தமிழரசுக்கட்சியின் தற்போதைய தலைவர் இரா.சம்பந்தனை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு மட்டக்களப்பில் நீண்டகாலமாக தமிழரசுக்கட்சியில் இருக்கும் சட்டத்தரணி ஒருவரை தலைவராக தெரிவு செய்வதற்கு முயற்சிகள் நடைபெறுவதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கை தமிழரசுக் கட்சியின் 14ஆவது தேசிய மகாநாடு எதிர்வரும் 25, 26, 27ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெற உள்ளது. 25ஆம் திகதி மாலை மத்திய செயற்குழுவின் கூட்டம் நடைபெறும். 26ஆம் திகதி காலை மகாநாடு ஆரம்பமாக முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில் தலைவர், பொதுச்செயலாளர், மூத்ததுணைத்தலைவர், இணைச்செயலாளர்கள், இணைப்பொருளாளர்கள், மற்றும் மத்தியகுழுவும் தெரிவு செய்யப்படும். தலைவர், பொதுச்செயலாளர், இணைச் செயலாளர்கள், மூத்ததுணைத்தலைவர்கள், …

    • 2 replies
    • 1.7k views
  17. தனிமனித தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்படுவதை தவிர்த்து மக்களின் நலன் சார்ந்து கூட்டு முடிவெடுக்கும் அதியுயர்சபை உருவாக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனை இன்று கொழும்பில் நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் ஆலொசனை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளுமான ஆர்.சம்பந்தன், ஆனந்தசங்கரி, சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன், வினோநோகராதலிங்கம், ஹென்றி மகேந்திரன் ஆகியோர் இன்று பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காரியாலயத்தில் சந்தித்து உரையாடினர். இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஸ்தாபனமயப்படுத்தல், அதற்கான ஒருபொறிமுறையை உருவாக்குதல், அதனைத் தேர்தல்…

    • 3 replies
    • 1.9k views
  18. தி.தவபாலன்- இன்னொரு முறையும் கொல்லப்பட்டவர் யோ.கர்ணன் 5சுவிற்சர்லாந்திலுள்ள நண்பரொருவர் அண்மையில் தொலைபேசியில் கதைத்திருந்தார். இருவரும் பேசிக் கொண்ட முதல்ச் சந்தர்ப்பம் அதுதான். அதற்கு முன்னர் சாதாரணமான மின்னஞ்ல்த் தொடர்பு மட்டுமேயிருந்தது. சம்பிரதாயமான பேச்சுக்கள் முடிய, அவர் அதிகமும் கதைத்துக் கொண்டது யுத்தத்தின் இறுதிக்காலம் பற்றியே. அதிலும் குறிப்பாக இறுதிநாட்களில் கொல்லப்பட்ட அல்லது தற்கொலை செய்துகொண்ட முக்கியஸ்தர்கள் பற்றிய கதைகளை அறிந்து கொள்வதில் ஆர்வமாகயிருந்தார். இவற்றையெல்லாம் கதைத்துக் கொண்ட போது மிகுந்த ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார். அவரது ஆவலும், ஆதங்கமும் என்னால் புரிந்து கொள்ளக்கூடியதே. ஏனெனில் அவர் ஒரு அதிதீவிரமான தேசியவாதியாகயிருந்தார். தமிழ்த் த…

    • 5 replies
    • 1.6k views
  19. ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர்.லெமோரியா கண்டம் அழிந்த பின் தமிழர்களின் பூர்வீக மண்ணாக இலங்கை இருந்தது என்றும் சிங்களர்கள்தான் குடியேறியவர்கள் என்று கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர் பால்பெய்ரிங் குறிப்பிடுகிறார். ஐரோப்பியர் தங்கள் காலனிகளாக நாடுகளைப் பிடிக்கப் பல்வேறு திசையை நோக்கி ஸ்பெயினிலிருந்தும் போர்ச்சுகல்லில் இருந்தும் புறப்பட்டது வரலாற்றுச் செய்தி. வாஸ்கோடகாமா 1495-இல் இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள …

    • 15 replies
    • 2.9k views
  20. கடந்த மார்ச் 22 ஆம் திகதி, தற்கொலை மூலம் ‘இலங்கை தமது இராஜதந்திரத்தை மாய்த்துக்கொண்ட நாள்’ என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. ஜெனீவாவில் இலங்கையின் மனித உரிமைகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் இந்த ஜனநாயக தற்கொலை இடம்பெற்றதாக இராஜதந்திரியும் முன்னாள் சமாதான செயலக தலைவருமான ஜயந்த தனபால தெரிவித்துள்ளார். கொழும்பின் தற்கொலை இராஜதந்திரம் மற்றும் அரசியல் வழிகாட்டல் என்பனவே ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கான காரணங்களாகும். எனவே 64 வருடங்களாக கட்டிக்காத்த இராஜதந்திர தன்மையை இலங்கை இழந்து விட்டது என்று ஜயந்த தனபால குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, கறுப்பு ஜூலைக்கு பின்னர் 1984 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஜெனீவா மனித உரிமை மாநாட்டின் போதும் அத…

  21. வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியாக் கிளையினர் மேற்கொண்டுள்ளனர். வன்னியில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ளன. உயிர் நீத்த அனைவரதும் ஆத்மா சாந்தியடையவும் அவர்களின் குடும்பத்தினரின் துயரங்கள் நீங்கி சுபீட்சமாக வாழவும் இந்த அஞ்சலி நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன "எமது இறைமையை, வாழ்வுரிமையை அழித்தொழிக்கும் நோக்கில் மானிடமே வெட்கித் தலை குனியும் அளவுக்கு எமது உறவுகள் முள்ளிவாய்க்காலில் கொல்லப்…

  22. தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர் வழிபாட்டுத் தலங்களையொட்டிய பிரதேசங் களிலும், தனியார் காணிகளிலும் அத்து மீறிப் பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளை அமைப்பதற்கு எதிராக ஐ.நா. சபையிடம் முறைப்பாடொன்றைச் சமர்ப்பிக்கும் முயற்சியில் இந்து மத அமைப்புக்களும் தமிழ் புத்திஜீவிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசின் ஆசிர்வாதத்துடன் அத்துமீறி அடாத்தாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையீடு செய்வதற்கான முன்முயற்சிகள் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருவதாக நம்பகரமாக அறியமுடிகின்றது. தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் இந்த அப்பட்டமான மத …

  23. SLMC VS TMVP - கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக முஸ்லிம் ஒருரே - SLMC அதிக விருப்பு வாக்குகளை பெறுபவரே -முதலமைச்சர் - TMVP நடைபெறவுள்ள கிழக்கு மாகாண தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக முஸ்லிம் ஒருரே நிறுத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. கடந்த முறை தமிழர் ஒருவர் கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவி வகித்ததால், இம்முறை முஸ்லிம் ஒருவர் அந்த பதவிக்கு தெரிவு செய்யப்பட வேண்டும் என காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளை பெறுபவரே முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நடைபெற்…

  24. ஒல்லாந்தர் காலத்தில் அழிக்கப்பட்ட சிவன்கோவிலின் சிவலிங்கம் சாவகச்சேரியில் மீட்பு! யாழ்.சாவகச்சேரி நீதிமன்ற கட்டிடம் இருந்த பகுதியில் சிவலிங்கம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஒல்லாந்தர் பிரித்தானியர் காலத்தில் இப்பகுதியில் இருந்த சிவன் ஆலயம் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் நீதிமன்ற கட்டிடம் அமைக்கப்பட்டிருக்கலாம் என யாழ். பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் புஷ்பரத்தினம் தெரிவித்துள்ளார். பிரித்தானியர் காலம் தொட்டு சாவகச்சேரியில் இயங்கி வந்த உயர்நீதிமன்றக் கட்டிடங்கள் தற்போது அங்கிருந்து முற்றாக அகற்றப்பட்டு அவ்விடத்தில் மீண்டும் புதிய நீதிமன்றம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கான அத்திவாரம் வெட்டும் பணி நடந்துவரும் இடங்களில் வரலாற்றுப் பெறுமதி …

  25. சர்வதேச சமூகம் எமது ஈழவிடுதலைப் போராட்டத்தினை ஏற்றுக்கொள்ளாத சூழலில் நாம் எமது உரிமைப்போரட்டத்தினை கூர்மைப்படுத்தவேண்டும், தமிழீழ பிரதேசத்தில் நடந்த இனப்படுகொலைகளையும், 2009 மே மாதத்தில் நடந்த இன அழிப்பையும் சர்வதேசத்திற்கு உரத்துக்கூறுவதற்கு வருகின்ற மே 19 பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒழுங்கு படுத்தப்படுகின்ற முள்ளிவாய்க்கல் இன அழிப்பின் மூன்றாம் ஆண்டு நினைவு கூரலுக்கு பிரித்தானியாவில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் ஒன்று கூடுங்கள் என மே 17 இயக்கம் சார்பாக திரு திருமுருகன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். லண்டனின் மையப்பகுதியில் அமைந்துள்ள ரவல்கர் சதுக்கத்தில் மே 19 சனிக்கிழமை மாலை 5:00 மணிதொடக்கம் 8:00 மணிவரை ஆரம்பமாகும் இவ் நினைவு குரலுக்கு ஒன்று கூடுவோம் என்னும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.