ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
திஸ்ஸ அத்தநாயக்க தேசிய சேமிப்பு வங்கியின் ஆயிரத்து 940 லட்சம் ரூபா பணத்தை பணிப்பாளர் சபையின் அனுமதியின்றி, த பைனான்ஸ் நிறுவனத்தின் 7 லட்சத்து 80 ஆயிரம் பங்குகளை கொள்வனவு செய்ய பயன்படுத்திய சம்பவமானது அரசாங்கம் வெளிப்படையாகவே பொதுமக்கள் பணத்தை கொள்ளையடித்து வருவது தெரியவந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சுமத்தியுள்ளது. அப்பாவி பொதுமக்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள் மற்றும் சிறு பிள்ளைகள் ஆகியோரே தேசிய சேமிப்பு வங்கியில் பணத்தை வைப்பிலிடுகின்றனர். இவர்களின் பணத்தை தனி ஒருவருக்கு சொந்தமான பணமாக கருத்தி, வங்கி இவ்வாறு அரசாங்கம் பயன்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஈழத்தமிழர்களின் தீர்வு விடயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பனர்ஜி அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனிடம், கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் நேற்று மம்தா பனர்ஜியைச் சந்தித்தார். அதன்போதே, மம்தா மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள ஹிலாரி கிளின்டன், ஈழத்தமிழர் விடயத்தில் அமெரிக்கா மிகுந்த அக்கறையும் கவனமும் செலுத்தி வருவதாகவும், இந்திய பிரதமர் மன்மோகன் சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோருடன் இவ்விடயம் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். http://www.saritham.com…
-
- 0 replies
- 1.4k views
-
-
சில நாட்களாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சோமாலிய பிரஜைகள் நால்வரை இலங்கை மீனவர்கள் காப்பாற்றி அழைத்து வந்துள்ளனர். மோதரை கடற்பரப்பில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் மீன்பிடி நடவடிக்கைகளுக்குச் சென்ற ரோலர் படகு இன்று 8ம் திகதி காலை 8.30 அளவில் மோதரை கடற்பரப்பை வந்தடைந்தது. இப்படகில் மீன்பிடிக்கச் சென்றவர்களைவிட மேலதிகமாக நால்வர் கரை திரும்பியுள்ளனர். இது தொடர்பில் படகின் கெப்டனிடம் வினவியபோது நால்வரும் சோமாலிய நாட்டு பிரஜைகள் என்பது தெரியவந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 2012-05-02 அன்று சிறிய படகு ஒன்றில் இவர்கள் வந்ததாகவும் கடலில் திசை தெரியாது தத்தளித்துக் கொண்டிருந்த வேளை, காப்பாற்றப்பட்டதாகவும் இலங்கை மீனவர்கள் குறிப்பிட்ட…
-
- 0 replies
- 724 views
-
-
அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கை விடயத்தில் இணைந்திருப்பது இலங்கைக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் புதுடெல்லிக்கும் கொல்கத்தாவுக்கும் மேற்கொள்ளும் பயணம் குறித்து நெருக்கமாகக் கண்காணிப்பதற்கு கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுக்கான பயணத்தை நேற்று தொடங்கிய ஹிலாரி கிளின்டன் சீனா வழியாக வாசிங்டன் திரும்பவுள்ளார். புதுடெல்லிப் பயணத்தின் போது அவர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மத்தாய் உள்ளிட்ட இந்தியத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்புக்களில் …
-
- 4 replies
- 1.4k views
-
-
வீரத்தோடு நெஞ்சுநிமிர்த்தி நின்ற எமது இனம் எதிரிக்கு அடிபணியாது முள்ளிவாய்க்கால் மண்ணிலே வித்தாகிப் போனது. மூன்று ஆண்டுகள் இதயம் கனக்க நாம் மெல்ல மெல்ல எழுகின்றோம். எம் உறவுகள் சிந்திய இரத்தம் எம் கண்களில் வழிய சிவந்த விழிகளோடு நாம் நியாயம் கேட்கப் புறப்படுவோம்.கொத்துக் கொத்தாய் குண்டுகள், செத்து செத்து விழுந்தனர் எம் சொந்தங்கள்.அத்தனையையும் வீசச் செய்தது ஆறேழு நாடுகள்.அவர்கள்தான் இன்று ஆதரிக்க வருகிறார். பெற்றவர்கள் முன் பிள்ளைகள் மடிய, பிள்ளைகள் கண்முன் பெற்றவர் மடிய,உற்ற சொந்தங்கள் உதிரத்தில் நனைய, உயிர் கொண்ட மனிதம் அய்யோ எனக் கதற, உண்ணுங்கள் குண்டுச் சிதறல்களை ,உடுத்துங்கள் உங்கள் குருதியையே ,எண்ணுங்கள் உங்கள் இறுதி நாட்களை ,எனச் சிரித்ததே இப்பாழ்புவி அன்று. …
-
- 0 replies
- 923 views
-
-
லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான உடைத் தயாரிப்பில், தொழிலாளர்களுக்கான மனித உரிமைகள், சிறிலங்காவில் மீறப்பட்டுள்ள விடயம், பிரித்தானியாவின் independent ஊடகத்தினால் அம்பலத்துக்கு வந்துள்ளது. லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்குரிய பிரத்தியேக உடைகள், சிறிலங்கா உட்பட சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறித்த இந்த நாடுகளில் உடைத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் 8 நிறுவனங்களில், ஒலிம்பிக் சம்மேளத்தினால் மேற்கொள்ளப்பட்ட களஆய்வின் போதே, இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மேற்குறித்த நாடுகளில் உடைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில், 175 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்தே, தொழிலாளர்களுக்கான மனித உரிமைகள் ம…
-
- 0 replies
- 869 views
-
-
கடற்படைசிப்பாய் யொருவரை துப்பாக்கியால் சுட்ட கடற்படை சிப்பாய் ஒருவர் பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருகோணமலை கடற்படைத் தளத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் டொக்யார்ட் கடற்படைத் தளத்தில் பணியாற்றும் சிறிலங்கா கடற்படைச் சிப்பாய் ஒருவர். சிறிலங்கா கடற்படையின் பெண் அதிகாரி ஒருவரைச் சுட்டுக் கொன்றார். அதையடுத்து அந்த கடற்படைச் சிப்பாய் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். சிறிலங்கா கடற்படையும், காவல்துறையும் இதுதொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.இதுபோன்ற உள்…
-
- 4 replies
- 1.2k views
-
-
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஈழத் தமிழர் ஆதவாளர்கள் அமைப்பு எனும் டெசோவை உயிர்ப்பித்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. அவர் தலைமையில், இன்று நடந்த அந்த அமைப்பின் முதல் கூட்டத்தில் தனி தமிழ் ஈழம் அமைக்க ஐ.நா. சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது முந்தா நாள் அறிவித்து, இன்று தொடங்கிவிட்டார் கருணாநிதி இந்த அமைப்பை. ஆனால் டெசோவுக்கு முன்பு கிடைத்த ஏகோபித்த ஆதரவு இந்த முறை அவருக்குக் கிடைக்கவில்லை. மாறாக கடும் விமர்சனங்களே எழுந்துள்ளன. டெசோ மூலம் என்ன சாதிக்க முடியும் கருணாநிதியால்? டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பு கடந்த 1985ம் ஆண்டு மே 13ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டது. கர…
-
- 1 reply
- 2.2k views
-
-
'சீனாவுக்கு எதிராகவே இலங்கையை பழிவாங்கும் இந்தியா' அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து சீனாவை பழிவாங்கும் வகையில் இலங்கை விடயத்தில் தலையிடுகின்றன என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ், பாரிஸை தலைமையகமாகக் கொண்ட ஜனநாயக மற்றும் ஒத்துழைப்புக்கான கற்கை நிலையத்தின் பணிப்பாளர் ஜோன் லால்லேன்ட் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு நாடுகளும் இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் தலையிடுவதாக கருத்தரங்கு ஒன்றின் போது அவர் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம், தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை போன்ற ந…
-
- 0 replies
- 1.2k views
-
-
பெண் ஒருவரை ஏமாற்றி திருமணம் புரிந்த பிக்கு ஒருவரை நாவலப்பிட்டி பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர். நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவை சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைபாட்டை அடுத்த பொலிஸார் இந்த பிக்குவை கைதுசெய்துள்ளனர். சந்தேகநபரான குறித்த பிக்கு, போலியான பெயரில் தன்னை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளதை அறிந்த பெண் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து குறித்த பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.tamilmirr...6-11-29-43.html
-
- 8 replies
- 1.6k views
-
-
தம்மைச் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தாம் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் பலாலியில் இருந்து இடம்பெயர்ந்து வசிக்கும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமது மீளக்குடியமர்வு தொடர்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவைச் சந்தித்துப் பேசிய போதே அவர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்தனர். பலாலியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் சுமார் 30 வருடங்களாக நலன்புரி நிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும் வசித்து வருகின்றனர். இடம்பெயர்ந்து நீண்ட காலம் கடந்துள்ளபோதும் இவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் எவையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. வலி.வடக்கில் தற்போது பல பகுதிகளிலும் மக்…
-
- 0 replies
- 710 views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு எதிராக சிறிலங்கா மீண்டும் போர்க்கோடி தூக்கியுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடந்தமார்ச் மாதம் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வருவதில் நவநீதம்பிள்ளையும் அவரது செயலக அதிகாரிகளும் பங்காற்றியுள்ளதாக குற்றம்சாட்டி, அவருக்கு அதிகாரபூர்வமான எதிர்ப்பை தெரிவிக்க சிறிலங்கா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று, இது தொடர்பான பணிகளை ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் நிரந்தரப் பிரதிநிதி தாமரா குணநாயகம் மேற்கொண்டு வருவதாக அறியக் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளது. அதேவேளை, ஐ.நா சாசனம் மற்றும் ஐ.நா பொதுச்சபை வழங்கியுள்ள ஆணையை மீறும் வகையில் நவநீதம்பிள…
-
- 0 replies
- 904 views
-
-
புதுக்குடியிருப்பில் இருந்து முல்லைத்தீவுக்குச் செல்லும் வெள்ளான் வீதி முள்ளிவாய்க்கால் ஊடாகச் செல்கிறது. இந்த வீதியினூடாக பொதுமக்கள் போக்குவரத்து பேரூந்துகள் அனுமதிக்கப்படுகின்ற போதிலும், அந்தப் பகுதிக்குள் இறங்கிச் செல்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படுகின்ற இந்தப் பகுதியில் வீதியினூடாகச் செல்வதற்கும் பொதுமக்களுக்கு முன்னர் அனுமதி கிடையாது. ஆனால், இந்திய நாடாளுமன்றக் குழுவின் விஜயத்தின் பின்னர், அது தற்போது பொதுமக்கள் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னதாக இறுதிப் போர் நடந்த புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் உட்பட ஏனைய பகுதிகளுக்கு தற்போது பொதுமக்கள் சென்று, அங்கு கைவிடப்பட்டுக் கிடக்கும் தமது …
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த எண்பதாயிரம் மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும், பத்தாயிரம் பேர் தொடர்ந்தும் தற்காலிக நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பதாக அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். போதியளவு வசதிகள் இல்லாத காரணத்தினால் சிலர் சுய விருப்பின் அடிப்படையில் தற்காலிக நலன்புரி நிலையங்களில் விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகவும், சிலர் உறவினர்களுடன் தங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகள் பூர்த்தியாவதற்கு எதிர்பார்த்ததனை விடவும் அதிகளவான கால அவகாசம் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், இந்த ஆண்டின் இறுதிக்குள் எஞ்சிய பத்தாயிரம் இடம்பெயர் மக்களையும் மீள்குடியேற்ற முடியும் என அவர் நம்பிக…
-
- 0 replies
- 608 views
-
-
மன்னார் திருக்கேதிஸ்வர திருத்தள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்காண அனுமதிப்பத்திரம் கடந்த வியாழக்கிழமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்டச்செயலாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால் புத்தர் சிலை இன்று நான்கு நாட்களாகியும் அகற்றப்படவில்லை.புத்தர் சிலை வைக்கப்பட்ட காணி இரு தனி நபருக்குச் சொந்தமானதாக காணப்பட்டது.இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மன்னாருக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா அரசுத் தலைவரின் ஆலோசகரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவ விஜய சிங்க திருக்கேதிஸ்வரத்திற்கு சென்று புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டபின்னர் தனியாருக்கு சொந்தமான காணி என்பதால் அதனை அகற்றுமாறு கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிகின்றன.. http://thaaitamil.…
-
- 0 replies
- 758 views
-
-
செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு ஆதரவு தாருங்கள் விடுதலைப்புலிகளால் நடாத்தப்பட்ட செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலை போன்ற சிறுவர் இல்லங்களில் வளர்ந்த பல பிள்ளைகள் தற்போது பிற இல்லங்களிலும் தங்கள் உறவினர்கள் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உறவினர்கள் எனச்சொல்லிக் கொள்ளவோ ஆதரவு கொடுக்கவோ ஆட்களில்லாத பிள்ளைகள் நிரந்தரமாக பல பராமரிப்பில்லங்களில் வாழ்ந்து கொண்டிருக்க உறவினர்கள் உள்ள பிள்ளைகள் பலர் தங்களது உறவினர்களுடன் வாழ்கிறார்கள். இல்லங்களில் வாழ்கிற பிள்ளைகள் போன்று வெளியில் வாழ்கிற பிள்ளைகளை பராமரிக்கிற உறவுகளால் இந்தப்பிள்ளைகளிற்கான கல்வியையோ அல்லது வசதியையோ வழங்க முடியாத நிலமையில் இருக்கின்றனர். இத்தகைய நிலமையில் உள்ள பிள்ளைகளை இனங்கண்டு நேசக்கரம் தன்னா…
-
- 17 replies
- 2k views
-
-
பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இடம்பெறுவதற்கு முன் அரசுடன் பேச ஆசைப்படுகிறது கூட்டமைப்பு! இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவில் இடம்பெறுவதற்கு முன்னர் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கி சில இணக்கப்பாட்டிற்கு வர விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல் தீர்வு விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதம் முறிவடைந்தது. அதற்கு பிரதான காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரம் என்ற கோரிக்கையை அரசு தரப்பு நிராகரித்தமையாகும். எனினும் பொலிஸ் அதிகார விடயம் குறித்து பாராள…
-
- 2 replies
- 764 views
-
-
ஹிலாரி கிளிண்டன் இன்று இந்தியா வருகை புதுடில்லி: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இன்று இந்தியா வருகிறார். ஆசிய கண்டத்தை சேர்ந்த மூன்று நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் சீனா மற்றும் வங்கதேசத்தி்ல தனது பயணத்தை முடித்து விட்டு இன்று இந்தியா வருகிறார்.மூன்றுநாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் நாளை மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க உள்ளார். அவரது சந்திப்பின் போது மாநில நிதியமைச்சர் அமித்மித்ரா மற்றும் தலைமை செயலாளர் சமர் கோஷ் ஆகியோர் உடனிருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து கிளிண்டன் தலைநகர் புதுடில்லியில் ஈரானிய வர்த்தகர்களை சந்தித்துபேச உள்ளார்.செவ்வாய்கிழமை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்., கிரு…
-
- 0 replies
- 596 views
-
-
அரசின் புலிக்கொடி பிரசாரம் தோல்வி!- ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்க யாழ்ப்பாணத்தில் ஐ.தே.கட்சி நடத்திய கூட்டு மே தினத்தின் வெற்றியை திசைதிருப்ப அரசாங்கம் மேற்கொண்ட “புலிக் கொடி' பிரசாரம் தோல்வியடைந்துவிட்டதென ஐ.தே.கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்க எம்.பி. தெரிவித்தார். ஐ.ரி. என்.தொலைக்காட்சியின் பொய்யான பிரசாரத்திற்கு மத்தியில் தனியார் ஊடகங்களின் உண்மைத் தன்மைக்கு எமது நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ரவி கருணாநாயக்க எம்.பி இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், எமது மே தினத்தில் புகுந்து புலிக் கொடிகளை காட்சிப்படுத்தியவர்கள் …
-
- 0 replies
- 709 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொன்சேகாவுக்கும் நியாயம் வழங்கப்பட வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீண்ட கால கைதிகள் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. நீண்ட காலமாக இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் அல்லது அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய பாராளுமன்றின் தெற்கு ஆசிய தொடர்புகளுக்கான தலைவர் ஜீன் லம்பேர்ட் இன்று 6ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். நூற்றுக்கு மேற்பட்ட புலிச் சந்தேகநபர்கள் மற்றும் அரசியல் கைதிகள் இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களில் சிலர் பல மாதங்களாக பல வருடங்களாக விசாரண…
-
- 1 reply
- 610 views
-
-
யாழில் அடுத்த வாரம் தொடர்ச்சியாக மின்தடைப்படும் யாழில் வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்ய வேண்டியிருப்பதாலும் கட்டமைப்பு வேலைகள் செய்யவேண்டியிருப்பதால் பின்வரும் பிரதேசங்களில் மின்விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சாரசபையின் யாழ்.பிராந்திய நிலையம் அறிவித்துள்ளது. 07.05.2012 திங்கட்கிழமை, 09.05.2012 புதன்கிழமை, 11.05.2012 வெள்ளிக்கிழமை மற்றும் 13.05.2012 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரையும் கோண்டாவில் பிரதேசத்தின் மேற்குப் பகுதி, குளப்பிட்டிப் பிரதேசம், கொக்குவில் பிரதேசத்தின் ஒரு பகுதி, நாச்சிமார் கோவிலடி, புன்னாலைக்கட்டுவன், அச்சசெழு, புத்தூர், ஆவரங்கால், …
-
- 1 reply
- 677 views
-
-
கனடாவில் பாதுகாத்து பேணப்பட்டுவந்த வல்லை ஆவணக்காப்பக நூல்கள் - 07.05.12 அன்று வல்லையில் கையளிப்பு செய்யப்படுகிறது! [sunday, 2012-05-06 21:16:35] 1969 ஏப்பிரல் 7,8,9 மல்லாகம் தமிழரசுக்கட்சி மாநாடு நடந்தது. மேற்படி மாநாட்டில் குரும்பசிட்டி கனகரத்தினத்தால் முன்வைக்கப்பட்ட ஆவணக்கண்காட்சியும் பெரு மளவு மக்களினால் விரும்பிப் பார்க்கப்பட்டது. அந்த ஆவணக்கண்காட்சி ஈழத் தமிழர்களின் வாழ்வினைச் சித்திரிக்கும் பத்திரிகைச் செய்திகள், துணுக்குகள் என்ப வற்றின் ஊடாக வரலாற்றுப் பார்வையைக் கொண்டிருந்தது. மாநாட்டின் பல்வேறு நிகழ்ச்சிகளிற்கிடையே ஆன பரபரப்பான நேரங்களிலும் ஒரு இளைஞனின் பார்வையில் பட்ட இந்த ஆவணக் கண்காட்சி அவன் மனதைப் பற்றிக் கொண்ட…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் 36-வது அகவையில் கால் பதிக்கிறது . தமிழினம் தலை நிமிர்ந்த தினம் தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இன்று மே 5-ம் தேதியன்று 36-வது அகவையில் கால் பதிக்கிறது. 1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17-வது வயதில், புதிய தமிழ்ப்புலிகள் என்ற இயக்கத்தைத் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை (எல்.டி.டி.ஈ) 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தொடங்கினார். தமிழ்த் தே…
-
- 4 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவின் களைகட்டியுள்ள வெசாக் பண்டிகை கொண்டாட்டங்களில் ஆக்கிரமித்துள்ள சீனாத் தயாரிப்பு வெசாக் அலங்கார விளக்குகளினால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பெரும் பாதிப்பினைச் சந்தித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மூங்கிலினால் வடிவமைக்கப்பட்டு பின்னர் வண்ணமயமான மெல்லிய காகித தாள்கள் சூழப்பட்டும் உள்நாட்டு உற்பத்தியளர்களின் பாரம்பரிய விளக்குகளுக்கு பதிலாக தற்போது சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்ரிக் வகை விளக்குகளே அங்காடிகளெங்கும், அலங்காரத்திடல்கள் எங்கும் ஆக்கிரமித்துள்ளன. 200 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை விலையில் சீன விளக்குகள் விற்கபடுகின்றன. இந்நிலையில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள உள்நாட்டு உற்பாத்தியாளர்கள் தங்களுக்கு வருவாய் இழப்…
-
- 1 reply
- 895 views
-
-
தமிழீழ மண்ணின் மீதான சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்துநின்று களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களினதும் மக்களினதும் நாளான மே.05 இன் மூன்றாவது ஆண்டு நினைவு நிகழ்வு Hagen நகரில் இன்று (06.05.2012) சிறப்பாக நடைபெற்றது. பொதுச்சுடரினைத் தமிழாலயங்களின் மத்திய மாநிலச் செயற்பாட்டாளர் பிறேமினி அவர்களும். பொதுஈகைச்சுடரினை தமிழாலயங்களின் மத்தியமாநில செயற்பாட்டாளரும் ஆசிரியருமான திரு.தெய்வேந்திரம் அவர்களும் ஏற்றிவைத்தனர். தொடர்ந்து சுடர் வணக்கத்துடன் கூடிய மலர்வணக்கம் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து, இசைவணக்கம், சீர்யாழிசை, கவிதைகள், நடனங்கள், சிறப்புரை ஆகியன மாவீரர் நினைவை மனதில் ஏந்தி நடைபெற்றன. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற உறுதியோடு நிகழ்வு மாலை 19 :00 மண…
-
- 0 replies
- 613 views
-