ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142623 topics in this forum
-
] "சிறிலங்காவினால் தற்போது மீறப்பட்டுள்ள வடக்கு - கிழக்கு இணைப்பு பற்றிய இலங்கை - இந்திய அனைத்துலக ஒப்பந்த விவகாரத்தை, இந்தியாவினால் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் ஒழுங்குவிதிகளின், ஆறாவது அதிகாரத்தின், சாரம் 34, 35, 36 க்கு அமைய, முறையீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் நிறைய உண்டு." பிரான்சை தலைமையகமாகக் கொண்ட தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் செயலாளர் ச.வி.கிருபாகரன் விடுத்துள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "1987 ஆம் ஆண்டு யூலை 29 ஆம் நாள் கையெழுத்தான சிறிலங்கா - இந்தியா அனைத்துலக உடன்படிக்கையின் பிரகாரம், சிறிலங்காவின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தல…
-
- 1 reply
- 903 views
-
-
28-05-2008 அன்றைய நாள்: நேரம் காலைப்பொழுதைக் கடந்து நண்பகலை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருந்த பொழுது..., கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய அந்த நெய்தல் மண் சுறுசுறுப்பாகியது. ஆங்காங்கே சுடுகருவி ஏந்திய போர் வீரர்களின் நடமாட்டம். போர்ச் சூழலுக்குள் கால் பதித்து விட்டதை உள்ளுணர்வு உணர்த்தியது. வான்குண்டுத் தாக்குதல்களாலும், எறிகணை வீச்சுக்களாலும் தலைகள் சாய்க்கப்பட்ட பனை, தென்னை மரங்களும், கொப்புகளை இழந்து எலும்புக்கூடாய் நிற்கும் நெய்தல் நில மரங்களும் போரின் தாக்கத்தைத் தெளிவாகப் பறைசாற்றின. பல்குழல் எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததற்கான தடயங்களாக வீதிகளில் ஆங்காங்கே குழிகள். போர் முகத்துக்குள் இருந்தாலும், வீரம்மிக்க போராளிகளைத் தன் மடியில் சுமந்திருந்ததனால் மிடுக்கோட…
-
- 3 replies
- 2.6k views
-
-
'சிறைச்சாலை வாகனங்களுக்குள் கத்துவதால பிரயோசனம் இல்லை' -எம்.றொசாந்த் 'சந்தேகநபர்கள் தாங்கள் எதனையும் தெரிவிக்க வேண்டும் என்றால் நீதிமன்றத்துக்குள் வைத்து தெரிவிக்க முடியும். அதனை விடுத்து, நீதிமன்றத்துக்கு வெளியில் சிறைச்சாலை வாகனங்களுக்குள் இருந்து கத்துவதால் எந்தப் பிரயோனசனமும் இல்லை' என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கூறினார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட கோரிக்கை மனு மீதான விசாரணை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில்இன்று …
-
- 0 replies
- 447 views
-
-
'சிவபெருமானும் புத்தரும் சிரிக்கின்றனர்' -அழகன் கனகராஜ் கோயில்கள் மற்றும் விகாரைகளுக்கு சென்றுவருகின்ற சிங்கள - இந்து பக்தர்களின் செயற்பாட்டைப் பார்த்து சிவபெருமானும், புத்தரும் சிரிக்கின்றனர் என்று, சபையில் சுட்டிக்காட்டப்பட்டது. கோயில்களுக்கு பௌத்தர்களும், விகாரைகளுக்கு இந்துக்களும் செல்கின்றனர். விகாரைகளில் சிவபெருமான், விஷ்ணு மற்றும் விநாயகர் ஆகிய கடவுள்களின் சிலைகள் இருகின்றன அதனை வணங்குகின்றனர். அதேபோல, இந்து கோயில்களில் புத்தரின் சிலை இருகின்றது. இந்துக்குள் அதனை வணங்குகின்றனர் எனினும், வெளியில் வந்து அடித்துகொள்கின்றனர். இதனைப் பார்த்தே சிவபெருமானும் புத்தரும் சிரிக்கின்றனர் என்று, ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் …
-
- 0 replies
- 223 views
-
-
சிவ்சங்கர் மேனனுடனான பேச்சுவார்த்தையில் திருப்தி: இரா. சம்பந்தன் இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனனுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தாம் திருப்தியடைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையில் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு, அங்கு அமைதிப்பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற தமிழக கட்சிகளின் கோரிக்கை வ்டித்து வருகின்றன. இந்த நிலையில், இலங்கை அரசாங்க தரப்பினருடன் பேச்சு நடத்துவதற்காக இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் கொழும்பு சென்றுள்ளார். அங்கு அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளை அவர் சந்தித்து வருகின்றார். இலங்கை வெளிநாட்டமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவை அவரது அமைச்சில் சந்தி…
-
- 0 replies
- 1.5k views
-
-
'சுசுனாமி' 'கிரிசேமி' கொழும்பை வந்தடைந்தன ஞாயிற்றுக்கிழமை, 06 ஜனவரி 2013 10:17 0 COMMENTS ஜப்பானின் கடற்படையினருக்கு சொந்தமான இரண்டு யுத்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத் வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர். நல்லெண்ண அடிப்படையில் இந்த கப்பல்கள் இரண்டும் இலங்கைக்கு நேற்று சனிக்கிழமை வந்தடைந்துள்ளதாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருக்கும் என்றும் கடற்படையினர் தெரிவித்தனர். 'சுசுனாமி' மற்றும் 'கிரிசேமி' ஆகிய இந்த இரண்டு கப்பல்களுமே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன இந்த இரண்டு கப்பல்களும் ஜப்பான் கடற்படையினரிடம் உள்ள அதி நவீன கப்பல்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. 151 மீற்றர் நீளமான இரண்டு யுத்த கப்பல்களில் 'சுச…
-
- 0 replies
- 390 views
-
-
'படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரன் எம்.பி. கடந்த வாரம் யாழ் செல்வதற்கு முன் 'சுடர் ஒளி' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியவற்றை இந்த அரசு அப்படியே நடைமுறைப்படுத்திக் காட்டிவிட்டது. தனக்கு கொலை அச்சுறுத்தல்கள் இருக்கின்றன, போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என முன் கூட்டியே மகேஸ்வரன் பல முறை அரசிடம் கோரிக்கை விடுத்தும் அதனை அரசு உதாசீனப்படுத்தி அவருடைய உயிரையே பறித்துவிட்டது.' என்று அரசின் மீது குற்றம் சுமத்துகிறார் ஐ.தே..கட்சியின் ஊடகப் பேச்சாளரான நா.உ. கயந்த கருணாதிலக்க. நேற்றுக்காலை எதிர்க்ட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலே இதனை அவர் தெரிவித்ததார். கடந்த 22ம் திகதி 'சுடர்ஒளி' பத்திரிகையில் வெளியான செய்தியை (சிங்கள மொழி பெயர்ப்பை) கய…
-
- 0 replies
- 1.6k views
-
-
[size=2][size=4](எஸ்.கே.பிரசாத்) கார்த்திகை விளக்கீட்டுக்காக சுட்டி விளக்குகள் விற்பனை செய்து கொண்டிருந்த வர்த்தகர் ஒருவர் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலிப்பகுதியில் சுட்டிவிளக்குகளை விற்றுக்கொண்டிருந்த வர்த்தகர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புலனாய்வாளர்கள் என தங்களை அடையாளப்படுத்தி கொண்ட சிலரே அந்த வர்த்தகர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கார்த்திகை விளக்கீட்டை முன்னிட்டு திருநெல்வேலிப்பகுதியில் சுட்டிவிளக்குகள் 2 ரூபா 50 சதம் முதல் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஒரு வியாபாரி மட்டும் …
-
- 0 replies
- 293 views
-
-
'சுதந்திர சதுக்கத்தில் சுதந்திரம் இல்லையா?': அமைதிப் போராட்டம் இலங்கையின் தலைநகர் கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் அமர்ந்திருந்த இளம் ஜோடியை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பலவந்தமாக வெளியேற்றிய சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் இன்று அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று நடத்தப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர், சுதந்திர சதுக்கத்தில் அமர்ந்திருந்த இளம் ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் காவல் பணியாளர்கள் வெளியேற்றியபோது, அவர்களிடையே நடந்த வாக்குவாதத்தின் வீடியோ காட்சி இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து சுதந்திர சதுக்கத்தில் அ…
-
- 0 replies
- 297 views
-
-
'சுதந்திர ராஜபாட்டை' இன்று திறப்பு வடக்கையும்தெற்கையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள "சுதந்திர ராஜபாட்டை' அல்லது "பாதெனிய அனுராதபுரம் மார்க்கம்' ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று மு.ப 10 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது. கொரியக் கூட்டரசின் 700 கோடி ரூபா நிதியுதவியுடன் துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் இந்தப் பெருந்தெரு மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 15 மீற்றர் அகலமும், 80 கிலோமீற்றர் நீளம் கொண்ட இந்தப் பாதை மறு சீரமைக்கப் பட்டுள்ளதன் மூலம் வடமேல் மாகாணத்திலிருந்து பாதெனிய ஊடாக வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களுக்கு நேரடிப் போக்குவரத்து வசதி ஏற்பட்டுள்ளது என்று துறைமுகங்கள் மற்றும் பெருந்தெருக்கள் அம…
-
- 2 replies
- 607 views
-
-
கடந்தவருடம் தனியார் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் மரணமடைந்த சுதந்திர வர்த்தக வலய ஊழியரான ரொஷின் சானகவின் மரணம் தொடர்பான விசாரணை பூர்த்தியடையவில்லை எனவும் அரசாங்கம் வாக்களித்தபடி அவரின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை எனவும் தொழிற்சங்கங்கள் நேற்று தெரிவித்தன. [size=4]'பொலிஸாரின் தாக்குதலினால் காயமடைந்த பல ஊழியர்களுக்கு இன்னும் நஷ்ட ஈடு கிடைக்கவில்லை. இவர்களால் தமது ஜீவனோபாயத்தை கொண்டு செல்ல முடியாதுள்ளது. இவர்களை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்ட பொலிஸார் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தொழிற்சங்கங்கள் கூறின. ரொஷினின் மரணம் தொடர்பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட ஆணைக்குழ…
-
- 0 replies
- 477 views
-
-
'சுனாமி வீடு சரியில்லை' சுனாமிக்குப் பின்னர் கட்டித்தரப்பட்ட மாற்று வீடுகள் அதற்குள் சேதமாகி விட்டுள்ளதாக அம்பாறையின் திருக்கோவில் பிரதேச மக்கள் கூறுகின்றனர். இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் 2004ம் ஆண்டு சுனாமியின்போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகளில் ஒரு தொகுதி மக்கள் குடியிருப்பிற்கு உகந்ததாக இல்லை என அக்குடும்பங்களைச் சேர்ந்த பலரும் தெரிவிக்கின்றனர். இப்பிரதேசத்தில் சுனாமிக்கு முன்பு கடலோரங்களில் வசித்து வந்த குடும்பங்களுக்கு மாற்றுக் குடியிருப்பு வசதிகளை வழங்கும் வகையில் மண்டானை என்னுமிடத்தில் மூன்று தொண்டு நிறுவனங்களினால் 315 வீடுகள் கட்டப்பட்டு அக்குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அங்கு வ…
-
- 0 replies
- 557 views
-
-
'சுன்னாகம் குடிநீர் பிரச்சினையில் அரசியல் முறைகேடு' -சண்முகம் தவசீலன் சுன்னாகம் குடிநீர்ப் பிரச்சினையில் ஓர் அரசியல் முறைகேடு நடந்திருக்கின்றது. உண்மையில் அந்த மக்கள் கழிவு ஒயில் பிரச்சினை காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நியாயமானதொரு தீர்ப்பு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (19) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது வடமாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுக்கு மல்லாகம் நீதிமன்றத்தால் …
-
- 0 replies
- 453 views
-
-
'சுன்னாகம் பொலிஸார் எனது மகனின் படத்தின் நெற்றியில் பொட்டு வைத்திருந்தனர்' -எம்.றொசாந்த் இராணுவத்தினரால் காலில் சுட்டுக் பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் தொடர்பில் ஒரு கோப்பை வைத்திருந்த சுன்னாகம் பொலிஸார், அதில் ஒட்டப்பட்டிருந்த எனது மகனின் புகைப்படத்தில் நெற்றியில் சிவப்பு கலரில் பொட்டு வைத்திருந்தனர். ஏன் பொட்டு வைத்துள்ளீர்கள் எனக் கேட்டபோது, அது உனக்குத் தேவையில்லாத விடயம் எனக் கூறி என்னை அங்கிருந்து துரத்தினர் என காணாமற்போன சிவசோதி திவ்வியதாசனின் தாயார் சாட்சியமளித்தார். காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர…
-
- 0 replies
- 425 views
-
-
வான்வெளி சுற்றுவட்ட பாதையில் ஏவப்பட்டுள்ள தொடர்பாடல் செய்மதிபற்றி முரண்பாடான செய்திகள் வந்துள்ள பின்புலத்தில் இலங்கைக்கு ஒதுக்கப்பட்டள்ள செய்மதி சுற்றுவட்ட பாதையை சீனா பயன்படுத்துகின்றதா என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை விடுத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். இலங்கை ஊடகங்கள் இந்த செய்மதியை 'சுப்ரிம் சற்-1' என குறிப்பிடுகின்றன. ஆனால் சர்வதேச ஊடகங்கள் இதனை சீனா ஏவிய 'சைனா சற் 12' என குறிப்பிடுகின்றன என அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். சர்வதேச சட்டப்படி இலங்கையின் விண்வெளியை சகல நாடுகளும் சுதந்திரமாக பயன்படுத்த முடியும். சர்வதேச ஒழுங்கின்படி ஒவ்வொரு நாடும் தான் ஏவ…
-
- 0 replies
- 501 views
-
-
'சுப்ரீம் செற் 1' இலங்கையின் செய்மதியா இல்லை, சீனாவின் செய்மதியா? - ரணில் கேள்வி [Friday, 2012-12-07 10:40:34] அண்மையில் விண்ணுக்கு ஏவப்பட்ட சுப்ரீம் செற் 1 என்ற செயற்கைகோள் பற்றிய தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் 27ம் திகதி இலங்கை முதலாவது செயற்கைக்கோளை விண்ணுக்கு ஏவியதாக உள்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. வெளிநாட்டு ஊடகங்களில் சீனாவினால் மற்றுமொரு செயற்கைக்கோள் விண்ணுக்கு ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. உலக நாடுகள் விண்வெளியில் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு சர்வதேச ரீதியாக அனுமதிப் பெற்றுக்கொள்ள வேண்டும். இலங்கை பெற்றுக்கொண்ட அனுமதியை சீனா பயன்படுத்துகிறதா அல்லது, சீனா பிர…
-
- 0 replies
- 252 views
-
-
'சுமந்திரனை விடவும் மஹிந்தவுக்கு பல மடங்கு அச்சுறுத்தல்' -ஜே.ஏ.ஜோர்ஜ் "முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை குறைத்து அவரை கொலை செய்ய முயற்சிக்கின்றனர்" என, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நாடாளுமன்றில் இன்று குற்றஞ்சாட்டினார். ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க விளக்கமளித்ததன் பின்னர் விமல் இதனைக் கூறினார். "சுமந்திரன் எம்.பி.க்கு புலிகளின் புதிய குழுவொன்றினால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக கூறி அவருக்கு பாதுகாப்பை அதிகமாக வழங்கியுள்ளீர்கள். புலிகளை ஒழித்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு, சுமந்திரனை விடவும் பல மடங்கு அச்சுறுத்தல் …
-
- 2 replies
- 245 views
-
-
'சுற்றுலா' முடித்து திரும்பினர் எம்பிக்கள் - இன்று மாலை சென்னையில் விளக்கம்! இலங்கை தமிழர்கள் நிலை குறித்து ஆய்வு செய்ய பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் சென்ற இந்திய எம்.பி.க்கள் குழு இன்று காலை சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பியது. இந்த குழுவில் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் கிருஷ்ணசாமி, என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக்கம் தாகூர் ஆகிய 4 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்கள் 4 பேரும் இன்று மதியம் சென்னை திரும்புகிறார்கள். மாலை 4 மணிக்கு அவர்கள் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து தங்கள் இலங்கைப் பயண அனுபவங்கள், அங்கு பார்த்தவற்றை கூற உள்ளனர். போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஈழத் தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள்? அவர்க…
-
- 2 replies
- 585 views
- 1 follower
-
-
யாழ். மாணவர்கள் மரணம் ; 5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று (04) பிறப்பித்தது. யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் கடந்த 21 ஆம் திகதி இரு பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் குறித்த 5 பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.…
-
- 2 replies
- 554 views
-
-
வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் வீட்டுத்திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆதரவுடன் கட்டாயம் நடைமுறைப்படுத்தியே தீருவேன் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சர்வதிகாரமாகக் கூறுகின்றார். இது ஆரோக்கியமாக அமையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். மேற்படி வீட்டுத்திட்டத்தின் கீழ் உரும்பிராயில் அமைக்கப்பட்ட வீடொன்றை வெள்ளிக்கிழமை (01) பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'இந்த வீடுகள் ஐந்து வருடங்களில் சகல நிலைமைகளையும் இழந்துவிடும். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, மீள்குடியேறிய மக்கள், த…
-
- 1 reply
- 776 views
-
-
'சுவாமிநாதன் பதவி துறக்கவேண்டும்' தன்னுடைய அமைச்சுப் பதவியை முறையாக செய்யமுடியாவிடின், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், தன்னுடைய அமைச்சுப் பதவியை துறக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் தெரிவித்தார். - See more at: http://www.tamilmirror.lk/187568/-ச-வ-ம-ந-தன-பதவ-த-றக-கவ-ண-ட-ம-#sthash.MAgADxh4.dpuf
-
- 4 replies
- 841 views
-
-
ஆஸ்திரேலியாவின் பிரபல க்ரவுன் கஸினோ நிறுவனம் இலங்கையில் ஆடம்பர கஸினோ நட்சத்திர விடுதியை திறக்கும் தனது திட்டத்தை முதற்தடவையாக வெளிப்படுத்தியுள்ளது. சுமார் 40 கோடி டாலர்கள் செலவில் இலங்கையில் ஐந்து நட்சத்திர கஸினோ சூதாட்ட விடுதியை திறக்கும் தனது திட்டம் பற்றி க்ரவுன் கஸினோ நிறுவனத்தின் உரிமையாளர் ஜேம்ஸ் பாக்கர் ஆஸ்திரேலிய பங்கு பரிவர்த்தனைச் சந்தைக்கு அறிவித்துள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை அரசாங்கம் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளை வழங்கும் பட்சத்தில் தனது வேலைத்திட்டத்தை தொடங்கவுள்ளதாக ஜேம்ஸ் பாக்கர் கூறியுள்ளார். தலைநகர் கொழும்பின் மத்தியில் அமையவுள்ள இந்த பெரும் செயற்திட்டத்திற்கான முதலீட்டை ஈர்க்கும் வகையில் இலங்கை அரசாங்கமும் பல வகைகளிலும் ஜேம்ஸ்…
-
- 0 replies
- 317 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) கல்முனையை தளமாக கொண்டு செயற்படுவதாக கூறப்படும் 'சூப்பர் முஸ்லிம்' எனும் அமைப்பு அல்லது குழு தொடர்பில் விசேட அறிக்கை ஒன்று பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு அனுப்பட்டுள்ளது. பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிலும், மேல் மாகாண உளவுப் பிரிவிலும் சேவையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஒருவர் கடந்த செவ்வாயன்று (டிசம்ன்பர் 29) இரகசிய அறிக்கையாக இந்த விஷேட அறிக்கையை கையளித்துள்ளார். எவ்வாறாயினும் இந்த சூப்பர் முஸ்லிம் எனும் அமைப்பு தொடர்பில், எஸ்.ஐ.எஸ். எனப்படும் தேசிய உளவுச் சேவை தீவிர கண்காணிப்பு மற்றும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் முன்னர் சேவையாற்றியதாக கூறப்படும் வைத்தியர் ஒருவர்…
-
- 0 replies
- 353 views
-
-
'சென்.ஆன்ஸ் தேவாலய காணி சுவீகரிக்கப்படவுள்ளது' -எஸ்.ஜெகநாதன் கீரிமலை, வலித்தூண்டல் பகுதியில் அமைந்துள்ள சென்.ஆன்ஸ் தேவாலயத்தின் 4 ஏக்கர் காணியை கடற்படையின் தேவைக்கு சுவீகரிப்பதற்காக, நிலஅளவை செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட நிலஅளவையாளர் பி.சிவநந்தன் அறிவித்துள்ளார். தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே - 222 கிராமஅலுவலர் பிரிவிலுள்ள காணியே இவ்வாறு நிலஅளவை செய்யப்படவுள்ளது. இதுதொடர்பான அறிவித்தல் கடிதம் , யாழ்.மாவட்டச் செயலாளர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர், கடற்படையின் சில்லாலை கட்டளைத் தளபதி, ஜே -…
-
- 0 replies
- 412 views
-
-
'செய்திக்காக சிறுவர்களை பலிகொடுக்காதீர்கள்' 'சிறுவர்கள் தொடர்பில் செய்தி வெளியிடும்போது ஊடகங்கள் தம்மை பற்றி மட்டுமே சிந்தித்து செயற்படுவதுடன் அது தொடர்புடைய சிறுவர்களது எதிர்காலம் குறித்துச் சிந்திப்பதில்லை' என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சகல ஊடகங்களும் சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்களாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி கூறினார். பொலனறுவை ரோயல் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற தேசிய சிறுவர் சபை தேர்தல் மற்றும் தலைமைத்துவ பயிற்சி வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூற…
-
- 0 replies
- 356 views
-