ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143380 topics in this forum
-
ராஜபட்ச விரித்த வலை... இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு திங்கள்கிழமை இலங்கை சென்று சேர்ந்தவுடன், மாற்றியமைக்கப்பட்ட பயணத் திட்டத்தை வெளியிடுகிறது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம். புதிய பயணத் திட்டத்தின்படி, 21-ஆம் தேதி இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் சிற்றுண்டி உண்பதாக இருந்த திட்டம் மாற்றப்பட்டு, 20-ஆம் தேதி மாலை அவரைச் சந்தித்து உரையாடுவதாக மாற்றப்பட்டுள்ளது. திமுகவும், அதிமுகவும் இந்தப் பயணத்திலிருந்து விலகிக் கொண்டுவிட்டதால், இலங்கை அதிபர் ராஜபட்சவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் கேள்விகளை யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் மாற்றி அமைத்திருப்பார்களோ என்னவோ! இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் அதிமுக சார்பில் யாரும் இடம் பெறமாட்டார்கள…
-
- 0 replies
- 893 views
-
-
இந்திய உதவியுடன் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் வீடுகள் யாழ். குடாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எச்.எம். அஸ்வர் இந்திய நாடாளுமன்றக் குழுவினரிடமும் வலியுறுத்தினார்.நேற்று முன்தினம் நாடாளுமன்றத்துக்கு பயணம் செய்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினருடனான சந்திப்பு நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியின் குழு அறையில் இடம்பெற்றது. அதில் அஸ்வர் மேலும் தெரிவித்ததாவது. 48 மணித்தியாலங்களில் யாழ். குடாநாட்டிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் இன்னமும் சிங்கள கிராமங்களில் தொடர்ந்தும் தங்கியுள்ளனர். இந்த இனச் சுத்திகரிப்புக்கு எதிராக எந்தவொரு தமிழ்த் தலைவர்களும் குரல் கொடுக்கவில்லை…
-
- 5 replies
- 697 views
-
-
இலங்கை சென்றுள்ள இந்திய எம்.பிக்கள் குழுவினர் அக்கறையற்ற முறையில் பயணம் மேற்கொண்டு வருவதால் ஐக்கிய நாடுகள் சபையின் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:இலங்கையில் தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள் குறித்து நேரில் கண்டறியச் சென்ற இந்திய எம்.பிக்கள் குழுத் தலைவரான சுஷ்மா சுவராஜ், ஒரே நாளில் வன்னி முகாமில் இருந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு வரை புயல் வேகத்தில் பயணம் செய்து ஆங்காங்கே வாழும் சிலரிடம் மட்டும் பேசிவிட்டு, இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுத் தொடர்பாக அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் பணிகள் திருப்தியளிப்பதாகத் தெரிவித்துள்ளது வியப்பளிக்கிறது. வன்னி முகாம்களில்…
-
- 2 replies
- 930 views
-
-
செங்கல்பட்டு காந்திபுரம் நெடுஞ்சாலையில் உள்ள கிளை சிறையில் கைதிகள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதம் இன்று 5வது நாளாகவும் தொடர்கிறது. இச்சிறையில் ஈழத்தை சேர்ந்த 32 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். கடவுச்சீட்டு இல்லாமல் தங்கியது, சந்தேகப்படும் வகையில் செயல்பட்டது போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இராமேஸ்வரம், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் பிடிபட்ட இவர்கள் கடந்த சில மாதங்களாக இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை திறந்த வெளி முகாமுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி கடந்த 3 மாதங்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்தனர். அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 45 நாட்களுக்குள் உங்கள் கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.…
-
- 0 replies
- 453 views
-
-
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வராவிட்டால் வேறு எந்த வழிகளிலும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.இந்திய நாடாளுமன்றக்குழு இலங்கை வந்திருக்கும் நிலையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசர பேச்சொன்றை நடத்தியுள்ளார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். நல்லிணக்க ஆணைக்குழு விவகாரம், நாடாளுமன்றத் தெரிவுக்குழு விடயம், தீர்வுப்பேச்சு, மே தினக் கூட்டம் உட்பட சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இச்சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த விடயங்கள் தொடர்பில்…
-
- 0 replies
- 448 views
-
-
“திராவிடர் – தமிழர்” கொளத்தூர் மணியின் உரை நேரடி ஒளிபரப்பு (Live) . http://www.livestream.com/tamil24news?utm_source=lsplayer&utm_medium=embed&utm_campaign=footerlinks <iframe width="560" height="340" src="http://cdn.livestream.com/embed/tamil24news?layout=4&height=340&width=560&autoplay=false" style="border:0;outline:0" frameborder="0" scrolling="no"></iframe><div style="font-size: 11px;padding-top:10px;text-align:center;width:560px">Watch <a href="http://www.livestream.com/?utm_source=lsplayer&utm_medium=embed&utm_campaign=footerlinks" title="live streaming video">live streaming…
-
- 0 replies
- 401 views
-
-
தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நனவாகாத கனவு தமிழீழம் என்றால், அவர் இலங்கையில் அல்லாமல் இந்தியாவில் அதை உருவாக்குவதற்கு பாடுபட வேண்டும் என கோட்டாபய ராஜபக்ஷ நேற்றுகூறினார். ‘இலங்கையிலுள்ள தமிழ் மக்களைவிட இந்தியாவில் பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் வசிக்கின்றனர். அவர் ஈழத்தை உருவாக்குவதற்காக இலங்கைக்கு வரக்கூடாது. இது இறைமையுள்ள ஒருநாடு. ஈழம் பற்றி பேசுபவர்களை நாம் துரோகிகளாக கருதுகிறோம்’ என கோட்டாபய ராஜபக்ஷ கூறினார். இலங்கையில் தமிழீழத்தை உருவாக்குவதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐ.நாவை இந்தியா வலியுறுத்த வேண்டும் என கருணாநிதி கூறியமைக்கு பதிலளிக்கும் முகமாகவே கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். ‘இலங்கையி…
-
- 11 replies
- 993 views
-
-
மார்ச் 2013இல் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை நிறைவேற்றி அது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசிடம் 19 ஆவது கூட்டத் தொடரில் கேட்டுக் கொண்டது. இந்தக் கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஏப்ரல் 04 இல் இலங்கை நாடாளுமன்றில் விவாதம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறெனினும், கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் எவற்றை இலங்கை அரசு நிறைவேற்றவுள்ளது என்பது தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றில் அறிவிக்கத் தவறிவிட்டார். கற்றுக் கொண்ட பாடங்க…
-
- 0 replies
- 609 views
-
-
மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கத் தயாரில்லை என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை பகிரத் தயார் என சிறீலங்காவுக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய மாநிலங்களில் அமுலில் உள்ள பொலிஸ் அதிகாரங்களைப் போன்று, சிறீலங்காவில் மாகாணங்களுக்கு வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதனால் மத்திய அரசாங்கம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும். பயங்கரவாத ஒழிப்பு நிலையமொன்றை ஆரம்பிப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை இதற்கு சிறந்த உதாரணமாகும் என சிறீலங்கா அரசாங்கம் சுட்டிக…
-
- 0 replies
- 600 views
-
-
யேர்மனி முன்சென் நகரில் சமூக ஜனநாயக கட்சியின் ( SPD ) ஏற்பாடில் சென்ற செவ்வாய்க்கிழமை “இலங்கை உள்நாட்டு போர் மற்றும் இடையே அமைதியான ஒருங்கிருத்தல்” எனும் தலைப்பில் பேராசிரியர் டக்மார் ராஜநாயகம் அவர்களின் சொற்பொழிவும் அதன் தொடர்ச்சியாக ஓர் கலந்துரையாடலும் இடம்பெற்றது. திருமதி டக்மார் ராஜநாயகம் அவர்கள் Passau பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு அபிவிருத்தி மற்றும் கலாச்சாரஆராய்ச்சி (தென் கிழக்கு ஆசியா ) பேராசிரியர் , மற்றும் முனிச் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வுக்கான விரிவுரையாளரும் ஆவார் . பேராசிரியர் டக்மார் ராஜநாயகம் அவர்கள் தனது உரையில் லிபிய சர்வாதிகாரி கடாபி தூக்கியெறியப்பட்டதற்கு வழிவகுத்த சர்வதேச சக்திகளின் இராணுவ தலையீடு படங்கள், நாம் அனைவரும் மனதில் உள்ளது, அத…
-
- 0 replies
- 531 views
-
-
லண்டனில் தமிழ்ச் சிறுமி ஒருவரைத் துப்பாக்கியால் சுட்ட மூவருக்கு நீதிமன்றம் நேற்று ஆயுள்தண்டனை விதித்துள்ளது. தெற்கு லண்டனில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கடந்த ஆண்டு மார்ச் மாதம், கொள்ளையடிப்பதற்காக புகுந்த மூவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் துசா கமலேஸ்வரன் என்ற சிறுமி நெஞ்சில் படுகாயமடைந்தார். இதனால் அவர் உடல் செயலிழந்த நிலையில் தற்போது சக்கரநாற்காலியில் நடமாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிறுமி சுடப்பட்ட காட்சி வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் காணொலிப் பதிவுக் கருவியில் பதிவானது. இதையடுத்து குற்றவாளிகள் மூவரையும் கைது செய்த பிரித்தானியக் காவல்துறையினர், அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கின் மீதான…
-
- 1 reply
- 622 views
-
-
சுஷ்மாவுக்கு விருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற தூதுக் குழுவின் தலைவி சுஷ்மா சுவராஜ் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை காலை சந்தித்துள்ளார். அலரி மாளிகையில் சுஷ்மாவுக்கு காலை உணவளித்து விருந்துபசாரம் அளிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்தது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்தியத் தூதுவர் அஷோக் கே.காந்தா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர். ___ http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37688
-
- 2 replies
- 498 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடனான சந்திப்புக்கு அழைப்பு வந்தபோது முதலில் போவதில்லை என்று தான் முடிவெடுத்தேன். அப்பாவிடம் சொன்னபோது “உனக்கென்ன விசரா? அவர் கருத்தை அவர் வாயாலேயே நேரடியாக கேட்டால் தானே அவரின் நிலைப்பாடு அறியமுடியும். சும்மா பத்திரிகைகள் எழுதுவதை படித்து வியாழமாற்றத்தில விமர்சித்தால் சரியா?” என்று நெத்தியடி தர, சரி போவோம் என்று முடிவெடுத்தேன். முருகன் தானும் வருகிறேன் என்று சொல்ல, வேலை முடிந்து ஏழு மணி சந்திப்புக்கு ஆறரைக்கே போக அங்கே சுமந்திரன் ஏற்கனவே தன் காரில் டிரைவ் பண்ணி வந்திருந்தார்! அப்புறமாக ஒழுங்கமைப்பாளரும் வந்து சேர்ந்தார். என்னை அறிமுகப்படுத்தும்போதே, இவர் ஜேகே, வியாழ மாற்றத்தில சிலவேளைகளில் உங்களை…
-
- 3 replies
- 988 views
-
-
"ராஜபக்ச தான் வழங்கிய வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றுவதில் மறுப்புத் தெரிவித்ததானது இந்தியாவை அதிருப்தி கொள்ள வைத்துள்ளது" என இந்திய அதிகாரிகள் தனிப்பட்ட ரீதியாகத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு இந்தியாவை தளமாகக்கொண்ட Hindustan Times என்னும் தேசிய ஆங்கில ஊடகத்தில் அதன் சிறப்பு செய்தியாளர்களான Sutirtho Patranobis and Pramit Pal Chaudhuri ஆகியோர் எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளனர். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அச்செய்திக் கட்டுரையின் விபரமாவது, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், மே மாதத்தில் இந்தோ – சிறிலங்கா உறவுகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக் கூடியதாகக் காணப்பட்டது. அதாவது தமிழ்ப் புலிகளின் தலைவரான வே. பிரபாகரன் கொல்லப…
-
- 0 replies
- 699 views
-
-
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வராவிட்டால் வேறு எந்த வழிகளிலும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட மாட்டாது என மஹிந்தராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.இந்திய நாடாளுமன்றக்குழு இலங்கை வந்திருக்கும் நிலையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் மஹிந்த ராஜபக்ஷ அவசர பேச்சொன்றை நடத்தியுள்ளார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். நல்லிணக்க ஆணைக்குழு விவகாரம், நாடாளுமன்றத் தெரிவுக்குழு விடயம், தீர்வுப்பேச்சு, மே தினக் கூட்டம் உட்பட சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் இச்சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.அத்துடன், இந்த விடயங்கள் தொடர்பில் அரசில் அங்கம் வகிக்கும…
-
- 1 reply
- 751 views
-
-
முச்சக்கரவண்டிகளில் வந்த இளைஞர் கோஷ்டியொன்று இளங்குடும்பஸ்தரொருவரைப் பலமாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. பருத்தித்துறை கிராமக் கோட்டுச் சந்தியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மூன்று முச்சக்கர வண்டிகளில் வந்திறங்கிய 10 பேரைக் கொண்ட இளைஞர் கோஷ்டியொன்று அல்வாய் வடமேற்கு, திக்கத்தைச் சேர்ந்த கமலநாதன் மகேஸ்வரன் ( வயது 30) என்ற குடும்பஸ்தரைப் பலமாகத் தாக்கியுள்ளது. இச்சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பொதுமக்களும் இரு இராணுவத்தினரும் இருந்துள்ள போதும் எவராலும் இச்செயலைத் தடுக்க முடியவில்லையெனவும் இச்சம்பவம் தொடர்பாக அறிந்து கொண்ட பருத்தித்துறைப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த வேளை, இக்கோஷ்டி தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் தாக்குதலு…
-
- 0 replies
- 684 views
-
-
முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் தமக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க சிங்களவர்கள் முயன்றுவரும் நிலையில், இதற்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலர் உறுதுணையாக இருந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். முல்லைத்தீவின் பல பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டுவரும் நிலையில் இந்த ஆக்கிரமிப்பு முயற்சியையாவது தடுத்து நிறுத்த தமிழ் அரசியல்வாதிகள், கட்சி பேதமின்றி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமெனவும் அம்மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர். கொக்கிளாய்ப் பகுதியில் குடியேறியுள்ள சிங்களவர்களுடனான சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை முற்பகல் 9.45 மணியளவில் முகத்துவாரம் பகுதியில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் பிரதேச இராணுவ அதிகாரி மற்றும் கரைதுறைப்பற்று பிரதே…
-
- 0 replies
- 544 views
-
-
கடற்படைத் தளபதி அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்கவிற்கு பணி நீடிப்பைப் பெற்றுத்தருமாறு, கடற்படைத் தளபதியின் மனைவியும், திரைப்படத் தயாரிப்பாளரும், நடிகையுமான ரேணுகா பாலசூரிய மகிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வேண்டுகோளுக்கமைய, கடற்படைத் தளபதிக்கு நான்கு மாத கால பணி நீடிப்பை வழங்குவதற்கு மகிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. மகிந்தரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அழுத்தம் ஏற்படாத வகையிலேயே மகிந்த ராஜபக்ஷ நான்கு மாத கால பணி நீடிப்பை வழங்கத் தீர்மானித்துள்ளார். சோமரத்ன திஸாநாயக்கவின் பதவிக் காலம் முடிந்த பின்னர் கடற்படைத் தளபதியாக வான்படைத் தளபதி ரியல்…
-
- 0 replies
- 1.3k views
-
-
சந்திரிக்கா குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்வதற்கு மகிந்த ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார்.இதற்கான பொறுப்பை ஜாதிக்க ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர், அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், அமைச்சர் விமல் வீரவங்ச ஆகியோரிடம் வழங்கியுள்ளார். சந்திரிக்கா குமாரதுங்க. ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கூட்டணி அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைகள், இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் காண்பிக்கும் அசமந்து போக்கு ஆகியவற்றை விமர்சித்தமையினால் மகிந்த ஆத்திரமடைந்து மேற்படி சேறுபூசும் பிரசாரத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து உடனடியாக ஊடக அறிக்கைகளை …
-
- 0 replies
- 453 views
-
-
கடத்திச் சென்று தடுத்துவைக்கப்பட்டு, மரணத் தருவாயில் உள்ள மக்கள் எழுச்சிய இயக்கத்தின் செயல்பாட்டாளர்களான லலித், குகன் ஆகியோர் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 12ஆம் திகதி இரவு முதல் தெமட்டகொடவிலுள்ள கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த லலித், குகன் ஆகியோர் நேற்று (19) அதிகாலை 2.20 அளவில் அந்த இடத்திலிருந்து மற்றுமொரு இடத்திற்கு மாற்றப்பட்டதாக மிகவும் நம்பகரமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் பொலிஸ் நலன்புரி தலைமையகக் கட்டத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கடந்த 12ஆம் திகதி எமது இணையத்தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதனையடுத்து அன்றிரவே இவர்கள் இருவரும் பொலிஸ் குற்றத் தடுப்புப் பி…
-
- 0 replies
- 818 views
-
-
ஈழத்து எம்.ஜி.ஆர் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் மெய் மறந்து நின்றார். இன்று மாலை 5 மணியளவில் யாழ். மத்திய கல்லூரியில் வந்திறங்கினர் இவர்களை இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் வரவேற்றார். அவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பர் டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து ஈழத்து எம்.ஜி.ஆர் என அழைத்தும் இவர் தன்னையே மறந்து சிரித்துக் கொண்டிருந்தார். இவருடைய இந்த பெயர் சூட்டலின் படி டக்ளஸ் தேவானந்தாவும் பல திரைப்படங்களை நடித்துள்ளார் போலும் என அவ்விடத்தில் சிலர் பேசிக்கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. யாழ்.விஜயம் மேற்கொண்ட இந்தியநாடாளுமன்றக் குழுவ…
-
- 23 replies
- 2.6k views
-
-
இந்தியாவில் தமிழீழம் அமைக்க கருணாநிதி முயற்சிக்கலாம்: கோட்டாபய தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நனவாகாத கனவு தமிழீழம் என்றால், அவர் இலங்கையில் அல்லாமல் இந்தியாவில் அதை உருவாக்குவதற்கு பாடுபட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்றுகூறினார். 'இலங்கையிலுள்ள தமிழ் மக்களைவிட இந்தியாவில் பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் வசிக்கின்றனர். அவர் ஈழத்தை உருவாக்குவதற்காக இலங்கைக்கு வரக்கூடாது. இது இறைமையுள்ள ஒருநாடு. ஈழம் பற்றி பேசுபவர்களை நாம் துரோகிகளாக கருதுகிறோம்' என டெய்லி மிரருக்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறினார். இலங்கையில் தமிழீழத்தை உருவாக்குவதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொ…
-
- 2 replies
- 708 views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவின் தலைவரான இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த முன்மாதிரியானவர் என பதில் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பாராட்டுத் தெரிவித்தார்.தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு பாராட்டினார். அவர் தொடர்ந்து கூறுகையில். இங்கு வந்துள்ள அவர் அவருடைய நாட்டின் கொள்கைகளை விமர்சிக்கவில்லை. அவர்களுடைய பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாதவிவாதங்கள் பற்றி வீணாக கதைக்கவில்லை. வடக்கு கிழக்கு நிலைகளை அறியவும் இலங்கை தொடர்பான நல் அபிப்பிராயத்தை ஏற்படுத்தவும் இ…
-
- 3 replies
- 938 views
-
-
அன்பார்ந்த முஸ்லிம் சகோதரர்களுக்கு ஓர் அன்பு மடல் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-04-19 15:42:59| யாழ்ப்பாணம்] அன்பார்ந்த முஸ்லிம் சகோதரர்களுக்கு முதற்கண் வணக்கம். அவசரமாக இக்கடிதம் எழுதப்படுகின்றது. தமிழ்-முஸ்லிம் உறவு என்பது நீண்டகாலமாக நட்பு, அன்புடையதாக இருந்துள்ளது. எனினும் இடைப்பட்ட காலங்களில் உங்களுக்கு ஏற்பட்ட இடப்பெயர்வுகள் துன்பமான தென்பது மறுக்கமுடியாததே. அதேநேரம் உங்களின் இடப்பெயர்வு நியாயப்படுத்தவும் முடியாதவை. எனினும் உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து தமிழ் மக்கள் மெளனமாக அழுததும் உண்டு. ஆனாலும் முஸ்லிம் சகோதரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை-இடப்பெயர்வை தமிழ் மக்க ளால் ஏற்பட்டதாகக் கருதுகின்றனர் என எண்ணத் தோன்றுகின்றது. அண்மையில் சம்…
-
- 2 replies
- 909 views
-
-
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதியின் கோரிக்கைக்கு, இலங்கையின் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க பதிலளித்துள்ளார். தமிழ்ஸ்தான் மற்றும் காஸ்மீர் ஆகியவற்றுக்கு முதலில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் தனித் தமிழீழம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக, காஸ்மீர் மற்றும தமிழ்ஸ்தான் ஆகியவற்றுக்காக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். தனித் தமிழ் நாட்டுக்காக போராடியவர் என்ற ரீதியில் மத்திய அரசாங்கத்திடம் தனித் தமிழ்நாட்டு கோரிக்கையை கருணாநிதி முன்வைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காஸ்மீரை தனிநாடாக அங்கீகரிப்பது தொடர்பி…
-
- 1 reply
- 987 views
-