Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்வரும் மே மாதத்தின் பின்னர் வட மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மே மாதமளவில் வருடாந்த வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் பூர்த்தியாகும் என குறிப்பிட்டுள்ளார். மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக வடக்கு மாகாண சபைக்காக தேர்தல்கள் நடத்தப்பட உள்ளது. மே மாதத்தின் பின்னர் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்மிடம் குறிப்பிட்டார் என அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார்.1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜே.வி.பி. கட்சி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் வடக்கு கிழக்கு தனித் தனி மாகாணங்களாக அற…

  2. வெளிநாட்டு பொருட்கள் பயன்பாடு தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பொருட்கள் மட்டுமன்றி ஏனைய வெளிநாட்டு பொருட்கள் நிராகரிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். சட்ட ரீதியான நடவடிக்கைகளின் மூலம் இதனை மேற்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டு மக்களுக்கு போதியளவு தெளிவினை ஏற்படுத்துவதன் மூலம் வெளிநாட்டுப் பொருள் பயன்பாட்டை வரையறுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltam...IN/article.aspx

    • 4 replies
    • 529 views
  3. சுதந்திரமான தமிழீழம் என்ற கோரிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுகையுடன் ஏற்பட்ட ஒன்றல்ல. சிறிலங்கா சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் இது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன. இவ்வாறு இந்தியாவை தளமாகக் கொண்ட The Pioneer ஊடகத்தில் அதன் பத்தி எழுத்தாளர் Priyadarshi Dutta தனது அண்மைய பத்தியில் குறிப்பிட்டுள்ளார். அப்பத்தியின் விபரமாவது, 500 ஆண்டுகளின் பின்னரோ அல்லது 500 நாட்களின் பின்னரோ கூட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது எதனைப் பெற்றுக் கொடுக்கும்? சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதுடன் அரசியல் தீர்வெதனையும் பெறாது அந்த மக்கள் தொடர்ச்சியாக துன்பப்படுவதுடன், மேலும் வதைபடும் நிலைக்கே தள்ளப்பட்டுள…

  4. ஈழத்தமிழனத்தின் மீது சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மானிடத்திற்க்கு எதிரான குற்றங்கள் தொடர்பில், ஓர் சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும் என்று பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், தற்போதையை நிழல் அமைச்சருமாகிய Stephen Timmes அவர்கள் தெரிவித்துள்ளார். லண்டன் ஈஸ்காமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01-04-2012), நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள்,சிறுவர் முதியோர், விவகார‌ங்களுக்கானஅமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே Stephen Timmes அவர்கள் இதனை வலியுறுத்தினார். மேலும் அவர் தெரிவிக்கையில், சர்வதேச நெருக்கடிகளுக்கான மூலாய்வமைப்பு, ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை, மற்றும் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட ஐ…

  5. தமிழீழ விடுதலைப்பு லி உறுப்பினர்கள் நாட்டுக்குள் ஊடுறுவியிருப்பதாக வெளியான தகவல்கள் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என இராணுவம் அறிவித்துள்ளது. புலி உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தில் ஊடுறுவியிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. புலி உறுப்பினர்கள் ஊடுறுவியிருப்பதாக வெளியான செய்திகள் வெறும் ஊகங்களே என இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், குறித்த தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, புலி உறுப்பினர்கள் நாட்டுக்குள் ஊடுறுவியதாக மக்கு எவ்வித உத்தியோகபூர்வ அறிக்கைகளும் கிடைக்கவில்லை என காவல்துறை ஊடகப் பே…

    • 1 reply
    • 796 views
  6. தேவிபுறத்தில் பாரிய மனிதப் படுகொலைகளுக்கு மத்தியிலும் நடத்தப்பட்ட பாரிய கூட்டுப் பாலியல் வன்புணர்வு இனவழிப்பிற்கெதிரான தமிழர் அமைப்பினால் தேவிபுறத்தில் நடந்ததாக உறுதிசெய்யப்பட்டுள்ள கூட்டுப் பாலியல் வணன்புணர்வு பற்றிய சாட்சிகள் கண்ணால் கண்ட சாடிசியங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன. சுமார் 200 பேர்கொண்ட பொதுமக்கள் குழுவொன்று முன்னேறிவந்த இராணுவ அணி ஒன்றிடம் சரணடைந்தபோது சுமார் 20 இளம் பெண்களைத் தனியாகப் பிரித்தெடுத்த இராணுவம் அவர்களைக் கூட்டாகப் பாலியல் வன்புணர்விற்கு உற்படுத்தியதாக கண்ணால் கண்ட சாட்சியங்கள் கூறியுள்ளன. 2009 ஏப்ரில் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் சிறிலங்காவில் நிலவி வரும் அடக்குமுறை மற்றும் சாட்சியங்களுக்கான பாதுகாப்பின்மை என்பவற்றால் இதுவரை வெளியே வ…

    • 3 replies
    • 1.7k views
  7. தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் தொடர்பில் இலங்கை ஊடகங்களில் வெளியான தகவல்களை இந்தியா மறுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் தமிழகத்தில் இயங்கி வருவதாக அண்மையில் இலங்கையில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. மூன்று இரகசிய முகாம்களில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தகவல்களில் எந்தவிதமான உண்மையும் கிடையாது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இந்தத் தகவல் முழுமையாகவே பிழையானதும், அடிப்படையற்றதுமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான முகாம்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரோ அல்லது அரசாங்கமோ தகவல்களை பரிமாறவில்லை என தெரிவ…

  8. முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டிலிருந்த முல்லைத்தீவுக்கு தெற்கிலிருந்து விஜயம் செய்யும் மக்களின் தொகை கடந்த சில மாதங்களில் பெருமளவு அதிகரித்துள்ளது என பாதுகாப்பு அமைச்சு இன்று அறிவித்துள்ளது. முல்லைத்தீவுக்குச் செல்லும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், அப்பகுதி மக்களின் கலாசார நியமங்களை மதித்து நடக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு ஆலோசனை தெரிவித்துள்ளது. கோவில்களுக்குச் செல்லும் சுற்றுலாப்பயணிகள் பிரதேசத்தின் கலாசார, சமய மரபுகளுடன் ஒத்துப்போகும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், வீதிகளின் தரத்தை அறிந்து அதற்கேற்ப வாகனங்களின் வேகங்களை கண்காணித்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. முல்லைத்தீவுக்குச…

  9. ஈழத்தமிழனத்தின் மீது சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மானிடத்திற்க்கு எதிரான குற்றங்கள் தொடர்பில், ஓர் சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும் என்று பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், தற்போதையை நிழல் அமைச்சருமாகிய Stephen Timmes அவர்கள் தெரிவித்துள்ளார். லண்டன் ஈஸ்காமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01-04-2012), நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள்,சிறுவர் முதியோர், விவகார‌ங்களுக்கானஅமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே Stephen Timmes அவர்கள் இதனை வலியுறுத்தினார். மேலும் அவர் தெரிவிக்கையில், சர்வதேச நெருக்கடிகளுக்கான மூலாய்வமைப்பு, ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை, மற்றும் அமெ…

  10. வடக்கு, கிழக்கில் மீண்டும் விடுதலைப் புலிகள் - சிறப்புப்பயிற்சி பெற்றுத் திரும்பியுள்ளதாக எச்சரிக்கை [ திங்கட்கிழமை, 02 ஏப்ரல் 2012, 01:05 GMT ] [ கார்வண்ணன் ] தமிழ்நாட்டில் மூன்று முகாம்களில் சிறப்பு ஆயுதப்பயிற்சி பெற்ற சுமார் 150 விடுதலைப் புலிகள் சிறிலங்காவுக்குத் திரும்பியுள்ளதாகவும் அவர்கள் வடக்கு,கிழக்கில் மறைந்திருந்து சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் சிறிலங்காவின் அரச புலனாய்வுச் சேவைகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஐலன்ட் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது. “வடக்கு,கிழக்குப் பகுதிகளில் தற்போது மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகளைக் குழப்பி பிரச்சினைகளை உருவாக்குவதும், அழிவுகளை ஏற்படுத்துவதுமே…

  11. 35வருட தண்டணைபெற்ற இலங்கேஸ்வரன் பதிவுத்திருமணம் செய்து கொள்கிறார் கடந்த 12வருடங்களாக சிறையிருக்கும் சக்திவேல் இலங்கேஸ்வரன் அவர்களும் அவரது காதலி சுதர்ஜினியும் 05.04.2012 அன்று பதிவுத்திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். இலங்கேஸ்வரன் மீது திருமதி சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 35வருட சிறைதண்டனை வழங்கப்பட்டது. இலங்கேஸ்வரனின் மேன்முறையீட்டு வழக்கிற்கு 60ஆயிரம் ரூபாவும் பதிவுத்திருமணத்திற்கு 30ஆயிரம் ரூபாவும் உதவி வேண்டி நேசக்கரத்திடம் விண்ணப்பித்திருந்தார். இலங்கேஸ்வரனின் வேண்டுகோளை புலம்பெயர் உறவுகளிடம் நேசக்கரம் கொண்டு வந்தது. மனிதநேயம் கொண்ட உறவுகள் இலங்கேஸ்வரனுக்கான பண உதவியினைத் வழங்கியுதவியுள்ளனர். தனது காதலனை பத…

    • 0 replies
    • 792 views
  12. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரீஸ் அமெரிக்காவிற்கு விஜயம் செய்வதற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் அமெரிக்காவிற்கு அழைத்திருப்பதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவிற்கு வருகை தருமாறு வெளிவிவகார அமைச்சருக்கு அமெரிக்க இராஜங்க செயலாளர் அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பினை ஏற்று வெளிவிவகார அமைச்சர் மே மாதம் இரண்டாம் வாரத்தில் அங்கு பயணமாகவிருக்கின்ற நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் அமெரிக்காவிற்கு வருகை தருமாறு அவர் அழைப்பு விடு…

    • 10 replies
    • 973 views
  13. சுதந்திரமான தமிழீழம் என்ற கோரிக்கையானது தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுகையுடன் ஏற்பட்ட ஒன்றல்ல. சிறிலங்கா சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் அதற்குப் பின்னரும் இது தொடர்பான பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன. இவ்வாறு இந்தியாவை தளமாகக் கொண்ட The Pioneer ஊடகத்தில் அதன் பத்தி எழுத்தாளர் Priyadarshi Dutta தனது அண்மைய பத்தியில் குறிப்பிட்டுள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அப்பத்தியின் விபரமாவது, 500 ஆண்டுகளின் பின்னரோ அல்லது 500 நாட்களின் பின்னரோ கூட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது எதனைப் பெற்றுக் கொடுக்கும்? சிறிலங்காவில் வாழும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதுடன் அரசியல் தீர்வெதனையும் பெறாது அந்த மக்…

  14. பாகிஸ்தானுக்கு ஆறு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய தனது பாரியார் சகிதம் பாகிஸ்தான் சென்றுள்ளார். பாகிஸ்தான் இராணுவத்தளபதி ஜெனரல் அஸ்பக் பர்வேஷ் கயானியின் அழைப்பையேற்றே ஜெனரல் ஜகத் ஜயசூரிய தனது மனைவி சகிதம் பாகிஸ்தான் சென்றுள்ளார். சுக்லாலாவிலுள்ள பாகிஸ்தான் விமானப் படைத்தளத்தில் வந்திறங்கிய லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் அவரது பாரியார் மஞ்சுலிகா ஜயசூரியவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ஆறு நாள் விஜயத்தின் போது இலங்கை இராணுவத்தளபதி அந்நாட்டு இராணுவத்தளபதி இராணுவ தலைமை அதிகாரி மற்றும் சிரேஷ்ட படை அதிகாரிகளைச் சந்திப்பதுடன் படைத்தலைமையகங்கள், கூட்டுப் படைத் தலைமையகங்கள், ஆயுத உற்பத்திச் சாலைகள் மற…

  15. வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்ள தமிழ் எம்பீக்களுக்கு நல்லதோர் வாய்ப்பு எதிர்வரும் செவ்வாய், புதன் கிழமைகளில் பாராளுமன்றத்திலே நடைபெற இருக்கின்ற ஐநா மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம் பற்றிய விவாதத்தில் அனைத்து தமிழ் எம்பீக்களும் கட்டாயமாக கலந்துகொண்டு உண்மைகளை துணிச்சலுடனும், நேர்மையுடனும் எடுத்து கூறுவதன் மூலம் தமக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு விசுவாசமாக நடந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 3ம், 4ம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெற உள்ள ஐநா மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம் பற்றிய விவாதம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இந்த சூழலிலேயே இலங்கை பாராளுமன்றத்தில், ஜெனீவா தீர்ம…

    • 3 replies
    • 747 views
  16. பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் தலைவர்களும் கடமைகளைச் செய்யத் தவறும் பெற்றோரும் நிலைமைகளைப் புரிந்து கொள்ளாத மூத்தோரும் உண்மைகளை ஏற்றுக்கொள்ளாத ஊடகவியலாளரும் கருணையும் இரக்கமுமில்லா மக்களும் வரலாற்றாற் தண்டிக்கப்படுவர். இலங்கைத் தமிழர்களின் நிலை ஏறக்குறைய இதை ஒத்ததாகவே உள்ளது. ‘ஈழத்தமிழர்களுக்குப் பிறத்தியார் இழைத்த அநீதிகளுக்கு நிகரானவை அவர்களுக்குள்ளே இருக்கும் குறைபாடுகளும் தீங்குகளுமாகும்’ என்று ஒரு நண்பர் அடிக்கடி சொல்வார். உள்ளடுக்குகளில் ஜனநாயகமின்மையையும் தார்மீக நெறிகளிற் குறைபாடுகளையும் கொண்டது ஈழத்தமிழ்ச் சமூகம். குறிப்பாகச் சாதீயத்தாலும் பிரதேச வாதத்தினாலும் அறப்பிறழ்வைக் கொண்டது அது. இதனால், அதனுடைய அரசியலிலும் விடுதலைச் சிந்தனையிலும் பலவீன…

  17. எதிர்க்கட்சித் தலைவர் திரு. ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய குழுவினருடன் கடந்த வாரம் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ரணில், அங்கே சில பிரதேசங்களுக்குச் சென்று மக்களுடன் சந்திப்புகளை நடத்தினார். அங்குள்ள சில முக்கியஸ்தர்களையும் சந்தித்தார். ‘ரணிலின் விஜயம், அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிவதும் ஐ.தே.கவின் நிலைப்பாட்டைப் புரியவைப்பதுமாகும். மேலும் யாழ்ப்பாண மக்களின் உணர்வுகளை அறிந்து கொள்வதுமாகும்’ என ரணிலின் பயணத்தில் கலந்து கொண்டிருந்த ஐ.தே.க வின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். ரணிலின் வருகையும் யாழ்ப்பாணத்தில் அவர் பேசியவையும் தலைப்புச் செய்திகளாகின ஊடகங்களில். அவர் அங்கே பேசத் தயங்கிய விசயங்களும் விதி விலக்காகத் தலைப்ப…

  18. இலங்கை அரசியலில் ‘பொறுப்புக்கூறுல்’ என்ற பதம் இன்று அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது மிக ஆழமான அர்த்தமுடைய ஒரு பதம். இந்தப் பதத்தின் உட்பொருளை அதன் பரிமாணங்களோடும் ஆழத்தோடும் புரிந்து கொண்டால், அந்தப் புரிதலின் வழியாக நடைமுறைகளை உருவாக்கினால், இலங்கையின் நீடித்த துக்கங்களையும் தீராப் பிரச்சினைகளையும் கடந்து விட முடியும். வரலாறு இத்தகைய சில தருணங்களை – புதிய வழிகளை எதிர்பாராத விதமாகத் தருவதுண்டு. அத்தகைய ஒரு தருணம் இப்போது, இந்தப் பதத்தின் வழியாக இலங்கைக்குக் கிடைத்துள்ளது. இது தனியே ஒரு சொல் அல்ல. இது ஒரு வழி@ ஒரு நிவாரணி. முரண்பாடுகளைத் தணித்துச் சமனிலைப்படுத்தும் ஆற்றலை வழங்கும் ஒரு திறவுகோல். இந்தப் பதத்தை அதன் அர்த்தத்தில் விளங்கிக் கொள்ள வேண்டுமானால், வரலாற…

  19. முள்ளிவாய்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை 'சமூக சிற்பிகள்' அமைப்பினர் [The Social Architects -TSA]* சாட்சியமான மக்களிடம் கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். March 12 முதல் March 19 வரையில் வெளியான அக்கதைகளின் முக்கியத்துவம் கருதி 'புதினப்பலகை' மொழிமாற்றம் செய்து இங்கே வெளியிடுகின்றது. 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. [யுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இவர் தனது சிறுபராயத்தில், பனையோலைகளால் கூரை வேயப்பட்டு, நான்குபுறமும் பனைமட்டைகளால் சுத்தி வரியப்பட்ட குடிசை ஒன்றில் வ…

  20. சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இந்தமாதம் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர். அரசசார்பற்ற நிறுவனம் ஒன்று ஒழுங்கு செய்துள்ள சிறப்புக் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்கே இவர்கள் மூவரும் புதுடெல்லி செல்லவுள்ளனர். இந்தக் கருத்தரங்கில் முக்கிய உரை நிகழ்த்துவதற்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, கருத்தரங்கில் பங்கேற்கச் செல்லும் மூவரும், சிறிலங்காவின் அரசியல் நிலைமைகள் குறித்து இந்திய அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளனர். ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததை அடுத்து, …

  21. கடாபியை போன்று வீதியில் இழுத்துச்சென்று நாட்டுத் தலைவரை பழிவாங்க இலங்கை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் : ஜனாதிபதி லிபியாவின் தலைவர் கடாபியை போன்று வீதியில் இழுத்து சென்று நாட்டு தலைவரை பழிவாங்குவதற்கு இந்த நாட்டு மக்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கூறினார் இன்று மாலை சனிக்கிழமை மாலை கண்டி போகம்பறை மைதானத்தில் இடம் பெற்ற 'ஒன்றிணைந்த நாடு' என்ற பொதுக்கூட்டத் தொடரின் முதலாவது கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, "ஏகாகிபத்தியவாதிகள் பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னிருந்தே எமது நாட்டை கைப்பற்ற முயற்சித்தனர். ஒல்லாந்தர், போர்த்துகேயர், ஆங்;கிலேயர் என பலர…

  22. சர்வதேசத் தொலைக்காட்சியான அல்ஜசீராவில், இலங்கையில் ஊடகவியலாளர்களின் இன்றைய நிலை என்னும் தலைப்பில் ஒரு ஆவணப்படம் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்த கருத்துக்கள் உட்பட, இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக இதில் ஆராயப்பட்டுள்ளது. http://youtu.be/e1rIeJ_3oqI http://www.eeladhesa...lle-nachrichten

  23. சர்வதேசத் தொலைக்காட்சியான அல்ஜசீராவில், இலங்கையில் ஊடகவியலாளர்களின் இன்றைய நிலை என்னும் தலைப்பில் ஒரு ஆவணப்படம் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்த கருத்துக்கள் உட்பட, இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக இதில் ஆராயப்பட்டுள்ளது. காணொளி..... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=4244:2012-04-02-03-33-39&catid=1:latest-news&Itemid=18

  24. தமிழர்களும், எருமைகளும், ஐ.நா. அவையும் 02 ஏப்ரல் 2012 "மழை பெய்கிறது ஊர் முழுவதும் ஈரமாகிவிட்டது தமிழர்கள் எருமைகளைப் போல எப்போதும் ஈரத்திலேயே நிற்கிறார்கள் ஈரத்திலேயே நடக்கிறார்கள் ஈரத்திலேயே படுக்கிறார்கள் ஈரத்திலேயே சமையல்; ஈரத்திலேயே உணவு உலர்ந்த தமிழன் மருந்துக்குக் கூட அகப்பட மாட்டான்." மார்ச் மாதம் இருபத்திரண்டாம் நாள் இலங்கை பற்றிய தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் அவையில் நிறைவேற்றப்பட்ட பிற்பாடு தமிழர்களில் பலருடைய – குறிப்பாகப் புலம் பெயர்ந்த தமிழர்களில் பலருடைய – செயற்பாடுகளைப் பார்க்கிற போது பாரதியின் மேற்கூறிய வரிகள் நினைவு வருவதைத் தவிர்க்க முடியவில்லை (புலிகளாக இருந்த தமிழர்களை …

    • 0 replies
    • 573 views
  25. April 2nd, 2012 அன்று வெளியிடப்பட்டது - கிளிநொச்சி மாவட்டத்தில் உருத்திரபுரத்தில் உள்ள மிகவும் பழமையான ஆலயமான உருத்திரபுரீச்சரத்தை இலங்கை இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர். அங்கு புத்தர் சிலை ஒன்று இருப்பதாகவும் அதனை மீட்கும் நடவடிக்கையாகவும் இலங்கை இராணுவத்தினர் கோயில் பகுதியில் ஆயுதத்துடன் முற்றுகையிட்டுள்ளனர். கோயில் பூசகர்கள் மற்றும் நிர்வாகிகளை அச்சுறுத்தியதுடன் தம்மிடம் புத்தர் சிலையை ஒப்படைக்குமாறு இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.புத்தர் சிலையை ஒப்படைக்க மறுக்கும் பட்சத்தில் ஆலயத்தை இடிக்க நேரிடும் என்று இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உருத்திரபுரீச்சரம் ஈழத்தின் ஈச்சர சிவாலயங்களில் ஒன்று. மிகவு…

    • 0 replies
    • 550 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.