ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143373 topics in this forum
-
ஐ.நா.மனித உரிமை பேரவையில் அமெரிக்கா முன்வைத்த இலங்கை தொடர்பான பிரேரணையை ஒஸ்ரேலியா அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் என ஒஸ்ரேலிய செனட்சபை இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இன்று கூடிய செனட்சபை மூன்று விடயங்களை கருத்தில் கொண்டுள்ளது. 2012 பிப்ரவரி 13ம் நாளன்று, அப்போதைய வெளியுறவு அமைச்சர் கெவின் ரட், இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் இணக்க ஆணையம் வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளிக்கும் ஒரு ஊடக செய்தியை வெளியிட்டார். அதில்: 1. சமரசம் மற்றும் புனரமைப்பை முன்னெடுக்கும் ஆக்கபூர்வமான திட்டங்கள் சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் உள்ளது, குறிப்பாக வடக்கில் பாதுகாப்புப் படைகள் குறைக்கப்படுதல், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான சேவைகள், மற்றும் ஊடக சுதந்திரம…
-
- 2 replies
- 863 views
-
-
இலங்கை தமிழர்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து தாம் நன்கு உணர்ந்துள்ளதாக இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். சோனியா காந்தி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். சகல அரசியல் கட்சிகளும் இணைந்து இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை காண்பது அவசியம் எனவும் அந்த கடிதத்தில் சோனியாh காந்தி சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வெகுவிரைவில் காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் கோடிட்டு காட்டியுள்ளார். இலங்கை தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக விரைவில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் ஒன்ற…
-
- 2 replies
- 1.3k views
-
-
| இலங்கை போர்குற்ற நாடு தான் என்று வாக்களிக்கும் வரை போராட்டம்: புதுக்கோட்டை எம்.எல்.ஏ புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் புளிச்சங்காடு கைகாட்டியில் அப்பகுதி தமிழின உணர்வாளர்கள் சார்பில் ஐ.நா அவையில் அமெரிக்கா கொண்டு வரும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது. உண்ணாவிரதத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.முத்துக்குமரன் தொடங்கி வைத்து பேசினார். முத்துக்குமரன் எம்.எல்.ஏ பேசியதாவது. தொடர்ந்து இந்திய அரசு தமிழர்களை வஞ்சித்தே வருகிறது. இப்போது…
-
- 1 reply
- 642 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கோராத வடக்கு – கிழக்கு இணைப்பு விவகாரத்தினை ஏன் பெரிதாகக் கதைக்கிறீர்கள் என்று சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க கேள்வி எழுப்பியிருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்தது. இச் சந்திப்பின் போது சிவில் சமூகப் பிரதிநிதிகள் ரணில் விக்கிரமசிங்கவிடம் தற்போதைய நிலைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியிருக்கின்றனர். நாட்டில் இயல்பு நிலை ஏற்பட வேண்டுமாக இருந்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். அவ்…
-
- 4 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தில், இந்தியா திருத்தங்களை செய்வதற்குத் தலையிடும் என்று இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படுவதற்கு முன்னதாக, அதில் இந்தியா திருத்தங்களை மேற்கொள்ளும் என்று சிறிலங்கா இராஜதந்திரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். அதேவேளை, 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல்தீர்வு ஒன்றை நடைமுறைப்படுத்து குறித்தும் ஜெனிவா தீர்மானத்தில் உள்ளடக்க இந்தியா விரும்புவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக கொழும்பு ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது. இதனிடையே ஐ.நா மனிதஉரிமைகள் பே…
-
- 8 replies
- 874 views
-
-
மணல் அகழ்வால் கடலுக்குச் சொந்தமாகும் மண்டைத்தீவு! (படங்கள்) மண்டைதீவு 7 ஆம் வட்டாரப் பகுதியில் அமைந்திருக்கும் கடற்கரையோரமாக இனந்தெரியாதோர் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இவ்வாறு கண்மூடித்தனமான முறையில் நடைபெற்று வரும் மணல் அகழ்வால் மண்டைதீவுப் பகுதி எதிர்காலத்தில் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள மக்கள் ஏற்கனவே நீர் உவராதல் மற்றும் குடிநீர் பற்றாக்குறை என்பன ஆரம்பித்து விட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை தொடர் மணல் அகழ்வுகள் இடம்பெறும் பட்சத்தில் கடல் அரிப்புக்கள் ஏற்பட்டு எதிர்காலத்தில் மண்டைதீவு கடலுக்குள் போகக் கூடிய அபாய நிலை ஏற்படுவதற்கும் வாய்ப்பிருப்பதாகவும் சுட்டி…
-
- 7 replies
- 1.3k views
-
-
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் முன் பிக்குகள் ஆர்ப்பாட்டம் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னால் பிக்குமார் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். ஜெனீவா, ஐநா பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை இந்தியா ஆதரிக்கப் போவதாக நேற்று முன்தினம், பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்ததையடுத்து இந்த ஆர்ப்பாட்டத்தை தேசிய சங்க சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்தது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37178
-
- 3 replies
- 855 views
-
-
2016ம் ஆண்டு இலங்கையில் முதன் முறையாக பெருநகர வேக ரயில் இலங்கையில் முதன் முறையாக அதிவேக பெருநகர வேக ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வரை இந்த பெருநகர வேக ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. மலேசியாவை மையமாகக் கொண்ட விமான எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் கம்பெனி லிமிடெட் நிறுவனம் இத்திட்டத்திற்கென 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய முன்வந்துள்ளது. இதற்காக முதலீட்டாளர்கள் மலேசியா, அமெரிக்கா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் இருந்து வருவார்கள் என விமான எக்ஸ்பிரஸ் மற்றும் ரயில் கம்பெனி லிமிடெட் நிறுவன தலைவர் பரிமலன் ராஜோ இசா மைக்கல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். …
-
- 3 replies
- 1k views
-
-
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படக் கூடிய சாத்தியம் கிடையாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் எதுவும் விதிக்கப்பட மாட்டாது என அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக தடைகளை விதிப்பதனை நோக்காகக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் நோக்கில் இந்தத் திர்மானம் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltam...IN/article.aspx
-
- 1 reply
- 563 views
-
-
முள்ளிவாய்க்கால் போல் அனைவரையும் கொல்ல காவல்துறை திட்டம்: உதயகுமார் நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் முள்ளிவாய்க்கால் ஆபரேஷன் போல் அனைவரையும் கொல்ல காவல்துறை திட்டமிட்டிருப்பதாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். இடிந்தகரையில் உள்ள லூர்து மாதா ஆலயத்தில் 10 கிராம மக்களுடன் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் இன்று 3வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகள் கூட்டத்தை போல் எங்களை மத்திய, மாநில அரசுகள் பிடித்து வைத்துள்ளதாக கூறினார். இடிந்தகரை…
-
- 4 replies
- 1.4k views
-
-
வன்னி யுத்த நடவடிக்கைகளின் போது கிளஸ்ரர் ரக குண்டுகள் பயனபடுத்தப்பட்டமை தொடர்பான மற்றும் சில முக்கிய தடயங்களும் தற்போது சிக்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மனித நேய கண்ணி வெடியகற்றல் பணியினில் ஈடுபட்டிருக்கும் சர்வதேச அமைப்பொன்றின் பணியாளர்களிடையே இததடயம் சிக்கியிருப்பதாக கூறப்படுகின்றது. கிளிநொச்சி நகரையண்டிய திருவையாறு பகுதியினில் வீசப்பட்டு வெடித்த நிலையினில் காணப்படும் கொத்து குண்டெனப்படும் கிளஸ்ரர் ரக குண்டுகளது எச்சங்களே மீ;ட்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த மனித நேய கண்ணி வெடியகற்றல் பணியினில் ஈடுபட்டிருக்கும் சர்வதேச அமைப்பு மீட்டெடுக்கப்பட்டுள்ள கொத்து குண்டின் தடயங்களை தமது அலுவலகத்தில் காட்சிக்கென உள்ளே வைத்துள்ளதாகவம் கூறப்படுகின்றது. இக்குண்டின…
-
- 1 reply
- 1.2k views
-
-
MOTION PASSED ON 21 March 2012 at Australian SENATE செனட் சபையில் 2012 மார்ச் 21 தீர்மானமான மனு 1) The Senate notes செனட் சபை பின்வருபனவற்றைக் கருத்தில் கொள்கிறது: a) On the 13th of February 2012, the then Foreign Minister Kevin Rudd issued a media release in response to the Sri Lankan Lessons Learned and Reconciliation Commission (LLRC) final report that stated: 2012 பிப்ரவரி 13ம் நாளன்று, அப்போதைய வெளியுறவு அமைச்சர் கெவின் ரட், இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் இணக்க ஆணையம் (LLRC) வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளிக்கும் ஒரு ஊடக செய்தியை வெளியிட்டார். அதில்: i) The LLRC report contains constructive proposals for advancing rec…
-
- 0 replies
- 678 views
-
-
யாழ் இணுவிலில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்கு வாதம் மோதலில் முடிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன், மூன்று இளைஞர்களைக் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இணுவில் காரைக்கால் பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, இணுவில் பகுதியில் உள்ள இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே கடந்த சில நாட்களாக முறுகல் நிலைமை காணப்பட்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இளைஞர் குழுவில் ஒரு பகுதியினர் தமக்கு உதவியாக அரியாலையில் இருந்து ஒரு குழுவினரைக் கொண்டுவந்து மோதலுக்கு தயாராகி உள்ளனர். இதன் காரணமாக இரு இளைஞர் குழுக்…
-
- 4 replies
- 750 views
-
-
ஜனாதிபதியின் உத்தரவில் 50 படகுகளும் ஆளணியும் இறக்குமதி:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- முல்லைத்தீவு செம்மலை கிழக்கு கரையோரப்பகுதி மீன்பிடிக்கென 50 மீன்பிடிப் படகுகள் மற்றும் கரைவலைக்கான ஆளணிகள் தெற்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மீனவ மக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு சற்று முன்னர் தெரிவித்துள்ளனர். இப்பிரதேச தமிழ் மக்களின் ஜீவாதார தொழிலை சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அடாவடித் தனம் குறித்து தாம் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டும் அதனை சம்பந்தப்பட்ட தரப்பினர் கணக்கெடுக்கவில்லை எனவும் இறக்குமதி செய்யப்பட்ட மக்களுக்கான வாடிகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த நிலமைகள் …
-
- 0 replies
- 588 views
-
-
யாழ் மக்களுக்கு சுதந்திரச் சோழர் படையணியின் எச்சரிக்கை துண்டறிக்கை சுதந்திர சோழர் படையணி” என்று உரிமைகோரப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் யாழ் மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் “யாழ் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு அவசரமானதும் அவசியமானதுமான வேண்டுகோள்!” என்று குறிப்பிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது என்றும், ஒரு சில இடங்களில் உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளது என்றும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்படித் துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிட்டிருப்பது யாதேனில், மதுபான நிலையங்கள் அனைத்தும் உடனடியாக மூடப்பட வேண்டும். தவறான நோக்கத்துடன் செயற்படும் விடுதிகளை அதன் முகாமையாளர்கள் உடனடியாக மூடவேண்டும். அளவிற்கதிதமாக ஒலியை எழுப்பும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தும்…
-
- 4 replies
- 1.4k views
-
-
அமைச்சர் சிதம்பரம் தென்னிந்தியாவில் செய்வினைகள் செய்து வருகிறார் சாமியின் அடுத்த குண்டு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தென்னிந்தியாவில் செய்வினை செய்து வருவதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தைப் பற்றி இஷ்டத்துக்கு எதையாவது எழுதுவதே வேலை எனும் அளவுக்கு செயற்பட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சிதம்பரம் உஸ்பெகிஸ்தான் பெண்களுக்காக எவ்வளவு செலவு செய்கிறார் என்று தெரியுமா என்று டுவிட்டரில் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். ஆனால் அதற்கு ஒரு ஆதாரமும் தரவில்லை. இப்போது சிதம்பரம் பற்றி டுவிட்டரில் மீண்டும் ஒரு புரளியைக்…
-
- 5 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா நாணயத்தின் மதிப்பு இன்று முன்னெப்போதும் இல்லாதளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 125.50 ரூபாவாக இருந்த ஒரு டொலரின் மதிப்பு இன்று 127 ரூபாவாக அதிகரித்தது. டொலருக்கு நிகரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 127 ரூபாவாக சரிந்திருப்பது இதுவே முதல்முறையாகும். போர் உக்கிரமடைந்திருந்த காலகட்டத்தில் சிறிலங்காவின் பொருளாதாரம் தள்ளாடிய போது கூட இந்தளவுக்கு ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடையவில்லை. அனைத்துலக அரங்கில் சிறிலங்கா அரசின் நம்பகத்தன்மை வேகமாகச் சரியத் தொடங்கியுள்ளதைப் போன்று ரூபாவின் மதிப்பும் மோசமான சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. http://www.puthinapp...?20120319105814
-
- 9 replies
- 2k views
-
-
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை பெரும்பாலும் அமெரிக்கா இன்று சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜெனிவாவில் குவிந்துள்ள சிறிலங்காவின் 70 இற்கும் அதிகமான இராஜதந்திரிகள் கலக்கத்துடன் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா தொடர்பாக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தின் வரைபு ஏற்கனவே ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அமெரிக்கா சமர்ப்பித்து விட்டது. எனினும் அதில் திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர், இறுதித் தீர்மானம் இன்று பெரும்பாலும் சபையின் விவாதத்துக்காக சமர்ப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்மானம் இன்று சமர்ப்பிக்கப்பட…
-
- 0 replies
- 927 views
-
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்த்துறை சிறிலங்கா தனக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணையில் தனக்குச் சார்பாக வெற்றியைப் பெற்றுக் கொள்வது கடந்த தடவையை விடக் கடினமானதாக இருக்கும் என நியுயோர்க் ரைம்ஸ் ஏட்டில், ஜெனீவாவில் இருந்து NICK CUMMING-BRUCE எழுதிய செய்திக்குறிப்பில் கூறியுள்ளார். இதனை ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்காவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்ட உள்நாட்டுப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சி, ஜெனிவாவில் இராஜதந்திர ரீதியான விவாதத்தை உருவாக்க…
-
- 0 replies
- 483 views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்யத் தயார் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எப்போது விஜயம் செய்வது என்பது பற்றிய திகதிகள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கலந்து கொண்ட தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர் எஸ்.வி;. கிருபாகரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் ஏற்கனவே தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாக நவனீதம்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக தமது அலுவலக பிரதிநிதகளை அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltam...IN/article.aspx
-
- 4 replies
- 1k views
-
-
http://naathamnews.com/?p=4598 சனல்-4க்கு பதிலடி என்ற முழக்கத்துடன் சிறிலங்கா அரசு இன்று செவ்வாய்கிழமை விவரணப்படமொன்றை திரையிடவுள்ள நிலையில் சிறிலங்கா அரசின் கபடத்தனங்களை அம்பலப்படுத்தி ஐ.நா மனித உரிமைச் சபையில் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற உப மாநாடொன்றில் சிங்களக் காடையர்கள் நடத்திய அடாவடித்தனம் கடும் பரபரப்பை ஐ.நா மனித உரிமைச் சபையில் ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறிலங்கா அரகு இந்த விவரண்படத்தினை திரையிட முற்பட்டுள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழனத்தின் மீதான இனவழிப்பை மூடிமறைத்து சிங்கள தேசத்துக்கான ஆதரவினைத் திரட்ட முனையும் சிறிலங்கா அரசின் கபடத்தனத்தை அம்பலப்படுத்துவோம் என நா.த.அ…
-
- 9 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்; மன்மோகன் அறிவிப்பு ஐ.நா. மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என பாரதப் பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் இதனை அறிவித்துள்ளார். இலங்கை தமிழர் தொடர்பான விவகாரத்தில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். இந்த உணர்வை நாங்கள் மதிக்கிறோம். சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள தீர்மானத்தின் இறுதி வரைவு அறிக்கை இன்னும் எமக்குக் கிடைக்கவில்லை. எனினும் அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும். தமிழர்களின் அதிகாரப்பகிர்வு குறித்தும் இலங்கை அ…
-
- 40 replies
- 2.8k views
-
-
கோட்டே ரஜமஹா விகாரையில் தங்கியிருந்த பௌத்த பிக்குகள் இருவர் இனந்தெரியாத நபர்களால் இன்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா பொலிஸார் தெரிவித்தனர். வண. பொரலஸ்கமுவ குணரட்ன தேரர் (65), வண பிட்டிகல தினசிறி தேரர் (75) ஆகியோரே பலியானவர்களாவர். இவ்விரு பிக்குகளும் நீண்டகாலமாக இவ்விகாரையில் வசித்து வந்தவர்களாவர். இப்பிக்குகளில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்றொருவர் காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோது உயிரிழந்தார். இப்பிக்குகள் இருவருக்கும் கடும் காயங்களுக்குள்ளாகியிருந்தனர். இச்சம்பவத்தினால் கோட்டே பகுதிமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்த நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் அப்பகுதியில் திரண்டனர். இக்கொலைகளை புரிந்த குழுவினர் வான…
-
- 6 replies
- 1.4k views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை முடக்கும் முயற்சியா? - கொதிக்கும் இன உணர்வாளர்கள் ஆக்கம்: சி.சுரேஷ் 'நடராஜன் மீது வழக்கு போடுவதற்குக் காரணம் பழிவாங்கும் நடவடிக்கையா அல்லது தமிழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை முடக்கும் முயற்சியா?’ என்று பொங்குகிறார்கள் தமிழ் இன உணர்வாளர்கள். காரணம், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை மையமாகக்கொண்டே அடுத்தடுத்து நடராஜன் மீது வழக்குகள் தொடரப்படுவதுதான். தஞ்சாவூர் விளார் சாலையில் பழ.நெடுமாறன் தலைமையில் உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளையினர், முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்காகவும், தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த முத்துக்குமார் உள்ளிட்ட 19 தாய்த் தமிழர்களுக்காகவும் நினைவகம் கட்டி வரு கின்றனர். முள்ளிவா…
-
- 4 replies
- 1.2k views
-
-
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை என்பது மிக நீண்டதொரு பட்டியலை கொண்டது .எந்த அலுவலுக்கு எந்த அமைச்சுக்கு போவதென்பது சாதாரண மக்களுக்கு புரியாத புதிராக உள்ளது . ''தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சு '' செயற்பாடுகள் நடைபெறுகிறதோ இல்லையோ இப்படியும் ஒரு அமைச்சு இயங்குகிறது .இடதுசாரி என்ற முகமூடியுடன் இந்த அரசாங்கத்தோடு கலந்து கொண்ட திரு .வாசுதேவ நாணயக்கார இதற்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கிறார் . கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த அமைச்சினால் ''இன விவகாரம் தொடர்பான அலகு'' என்று ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது .அமைச்சின் மேலதிக செயலாளர் திரு …
-
- 10 replies
- 1.7k views
-