ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
கிருபாகரனை தேடவில்லை- இன்ரபோல் ஐ.நாவுக்கு தெரிவிப்பு! Published on March 11, 2012-2:27 pm · 1 Comment ஐ.நா. மனித உரிமைச்சபையில் வெளியான ஐ.நா. மனித உரிமை ஆர்வலருக்கான அறிக்கையில், தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச் செயலாளர் விசுவலிங்கம் கிருபாகரனை தாம் தேடவில்லையெனவும், இவர் பற்றி தம்மிடம் எந்தவிதத் தகவலும் இல்லை யெனவும் இன்ரபோல் ஐ.நா. மன்ற உரிமை நிபுணருக்கு எழுதியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்விடயமாக ஐ.நா. மனித உரிமை நிபுணர் சிறிலங்கா அரசிடம் வினவிய பொழுதும், இதற்கு பதில் அனுப்பாது காலம் கடத்தி வருகிறதாக ஐ.நா. வட்டாரங்கள் தெவிக்கின்றன. கடந்த காலங்களில் கிருபாகரனின் ஐ.நா.மனித உரிமை செயற்பாடுகள் காரணமாக சிறிலங்கா அரசின் சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளுடன் சில…
-
- 0 replies
- 791 views
-
-
ஜெனிவாத் தீர்மானம் வென்றாலும் தோற்றாலும் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-11 11:38:40| யாழ்ப்பாணம்] ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனிதவுரிமை பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவரும் போது, அதனை யார் ஆதரிக்கின்றார்கள் எவர் எதிர்க்கிறார்கள் என்ற கணக்கெடுப்புகளுக்கு அப்பால், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில், இந்தியாவின் நிலைப்பாடு என்ன? என்பதே இப்போதைய முதன்மை விடயமாக உள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் வெற்றிபெறுவதைக் காட்டிலும் அது தோற்கடிக்கப் படுமாக இருந்தால் அது அமெரிக்காவை மேலும் சினம் கொள்ள வைக்கும். சிறிய நாடாகிய இலங்கை அமெரிக்காவை சுத்த நினைத்தால் அது நாட்டுக்குப் படுபாதகமாக அமையும் என்பது இலங்கை…
-
- 0 replies
- 430 views
-
-
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரவுள்ள பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்காகக் முழுமூச்சுடன் செயற்படும் அமெரிக்கா - ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இந் நடவடிக்கைக்காக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும், மனித உரிமைகள் தொடர்பிலான சமூக ஆர்வலருமான ஜிம்மி கார்ட்டரைக் களமிறக்கியுள்ளது அமெரிக்கா. இதற்கமைய தனது தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி அமெரிக்காவின் பிரேரணையை ஜெனிவாவில் நிறைவேற்ற ஜிம்மி கார்ட்டர் முழுவீச்சில் செயற்பட்டு வருகிறார் என இராஜதந்திர வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன. "எமது முன்னாள் ஜனாதிபதி கார்ட்டர் ஆபிரிக்க நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களு…
-
- 9 replies
- 1.2k views
-
-
ஜெனீவா அமர்வை இடியப்ப சிக்கலாக்கிய மகிந்த – கொந்தளிக்கும் பீரிஸ்! எவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டாலும், இலங்கைக்கெதிராக அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பித்துள்ள பிரேணையை தோற்கடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் ஜனாதிபதி மகிந்தவின் திட்டமிடாத செயற்பாடுகளே என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு இலங்கைத் தூரக அலுவலகமொன்றில் அதிகாரிகளைச் சந்தித்த போதே வெளிவிவகார அமைச்சர் இதனை மிகவும் வெறுப்புடன் தெரிவித்துள்ளார். தான் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த போதிலும், ஜெனீவாவிற்கான இலங்கைக் குழுவின் தலைவராக அமைச்சர் மகிந்த சமரசிங்கவை நியமித்து தன்னை ஜனாதிபதி அவமதித்துள்ளதாகவும் ஜ…
-
- 12 replies
- 1.8k views
-
-
நாட்டில் சமாதானத்தை நிலை நாட்டுவதற்குப் பங்களித்த படைவீரர்களை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் பலி கொடுக்காது என்று சிறிலங்கா அமைச்சர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார். “ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக எழுந்துள்ள அச்சுறுத்தலில் இருந்து நாட்டை மீட்பதற்கு உச்சக்கட்ட முயற்சிகளைச் செய்து வருகிறோம். ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து, சிறிலங்கா பிரதிநிதிகள் குழு கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டு, அதனை தோற்கடிக்க தொடர்ந்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும். நாம் படையினரை காட்டிக்கொடுக்கப் போவதாக எதிர்த்தரப்பு கூறும் குற்றச்சாட்டு …
-
- 3 replies
- 630 views
-
-
கொல்லும் போது வராத விதி வெல்லும் போது வரும்… அரசை அறுபது ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்தாலும் சிங்கள அரசியல்வாதிகளுக்கு சர்வதேச நியமங்களை புரிந்து கொள்ளவோ அல்லது அதை கற்க வேண்டுமென்ற நாட்டமோ என்றும் இருந்ததில்லை. அதனால்தான் முன்னர் காலஞ்சென்ற கதிர்கமரையும், இப்போது இன்னொரு தமிழ் பெண்மணியையும் சர்வதேச விவகாரங்களில் தலைமைதாங்க அனுமதித்திருக்கிறார்கள். தமிழ் துரோகிகள் நாளுக்கு நாள் புதிது புதிதாய் விளைவது ஆச்சரியமானது, ஆனால் கருணாநிதியே செய்த பிறகு கதிர்கமர்கள் நமக்கு சிறியவர்களாகிவிட்டார்கள். ஜெனீவாவில்… சிறீலங்கா அரசுக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்திருக்கும் பிரேரணை பாலியல் வல்லுறவுக் கொலை செய்தவனை அடுத்த வருடத்திற்குள் திருந்திவிடு என்று கூறும் கோமாளித்தன…
-
- 3 replies
- 1.1k views
-
-
போர் தவிர்ப்பு வலயத்தில் பொதுமக்கள் மீது சிறிலங்காப் படையினர் கண்மூடித்தனமாக எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதற்கு சட்டபூர்வமான- நன்கு ஆவணப்படுத்தப்பட்ட- ஐ.நா அதிகாரிகளால் ஒளிப்படங்களுடன் பதிவு செய்யப்பட்ட சம்பவம் ஒன்றையும் சனல்-4 வெளிப்படுத்தவுள்ளது. வரும் புதன்கிழமை சனல்-4 தொலைக்காட்சி வெளியிடவுள்ள ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள் - தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்‘ என்ற ஆவணப்படத்திலேயே இந்தப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக அதன் தயாரிப்பாளர் Callum Macrae பிரித்தானியாவின் ‘தி இன்டிபென்டென்ட்‘ நாளேட்டில் இன்று எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் கூறியுள்ளார். “கடைசி உணவுத்தொகுதி அனுப்பப்பட்ட வாகனத் தொடரணியுடன் சென்றிருந்த ஐ.நாவின் இரண்டு அனைத்துலக மனிதாபிமானப் பணியாள…
-
- 1 reply
- 750 views
-
-
அடாவடித்தன அமைச்சர் றிசாட் பதியுதீனின் உத்தரவில் விளையாட்டு மைதான விஸ்தரிப்புக்காகப் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட குடும்பம் உதவிகளின்றி தவிப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கண்டனம் தெரிவித்துள்ளார். வவுனியா பாரதிபுரத்தில் விக்ஸ் காட்டு அருகில் சுமார் 40 வருடங்களாக வசித்து வந்த ஒரு குடும்பத்தை அமைச்சர் ரிசாட் பதியுதீனின் உத்தரவுக்கமைய பொலிசாரும் அயல் ஊரைச் சேர்ந்தவர்களும் பலவந்தமாக வெளியேற்றியுள்ள சம்பவம் குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வன்மையாகக் கண்டித்துள்ளார். கணவனை இழந்த 7 பிள்ளைகளைக் கொண்ட கணபதி புனிதவதி என்ற குடும்பப் பெண்ணிற்கே இந்த கொடுமை நிகழ்ந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ச…
-
- 1 reply
- 782 views
-
-
நீங்கள் மிகக் கொடுமையான முறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதால், உங்களது போராட்டம் நீதிக்கானதாக உள்ளதால், உங்களது அடிப்படை உளக் கோட்பாடானது இறையாண்மையை நாடி நிற்பதால் நான் உங்களது மக்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் ஈடுபாட்டைக் கொண்டுள்ளேன். இவ்வாறு பொதுவுடைமை சிந்தாந்த செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான Ron Ridenour* இலண்டன் Putney Leisure Centre அரங்கில் கடந்த March 4, 2012ல் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். அவரது இணையத்தளத்தில் Towards Tamil Eelam: London Speech என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட அந்த உரையை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அந்த உரையின் முழுவிபரமாவது, முழு உலகம் மீதும், அடக்கப்பட்ட மக்கள் உள்ளடங்கலாக இந்…
-
- 0 replies
- 432 views
-
-
முல்லைத்தீவு, கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியிலுள்ள மக்கள் வாழ்விட பகுதியான 200 ஏக்கர் நிலத்தில் சீன நிறுவனம் ஒன்று இல்மனைற் தொழிற்சாலையை அமைப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் நேற்று சீன அதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், உதவி அரச அதிபர் சகிதம் பார்வையிட்டனர். இதனை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் உறுதிப்படுத்தினார். 1984 ஆம் ஆண்டு போர் காரணமாக இந்தப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் 36 வருடங்களின் பின்னர் தற்போது மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். அந்தக் காலப் பகுதியில் குறித்த பிரதேசத்தில் 36 சிங்களக் குடும்பங்கள் வசித்து வந்தன. மீளக் குடியேற்றப்பட்ட பின் தற்போது இங்கு 310 சிங்களக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. சீனத் தொழிற்சாலைக்காக குறித…
-
- 0 replies
- 474 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மர்மமான முறையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அதிகாரிகள் திடீர் இலங்கை விஜயம் ஐக்கிய நாடுகள் பிரகடனங்களையும், இராஜதந்திர நியதிகளையும் மீறும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த அதிகாரிகளுடன் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் தெரியவருகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முனைப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகளின் விஜயம் சர்ச்சையை ஏற்படுத்தியு…
-
- 0 replies
- 793 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளினால் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எதிர்க்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து சில நாடுகள் மௌனம் காத்து வந்ததாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், பாரியளவிலான படுகொலைகள் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார். எனினும், பயங்கரவாதத்தை இல்லாதொழித்த அரசாங்கத்தின் மீது சில நாடுகள் தற்போது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். உயிரிழப்புக்கள் இடம்பெறாத சந்தர்ப்பத்திலேயே சில நாடுகள் மனித உரிமை …
-
- 0 replies
- 476 views
-
-
ஈழத் தமிழருக்கு என்ன வழி?- பா.செயப்பிரகாசம் சனிக்கிழமை, 10 மார்ச் 2012 03:53 கட்டுரை உலக அரங்கில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் முற்றுப்புள்ளியாகி விட்டதா என்ற பொதுக் கேள்வியிலிருந்து தொடங்குவோம். உலக அரசியல் பொருளாதார வல்லரசுகள் அவ்வப்போது புதிய அரசியல் ஒழுங்கைத் தோற்றுவித்து வருகின்றன. உலகின் இயங்கு திசை வல்லரசுக் குழுக்களின் இயங்கு திசையாகவே உள்ளது. அதை மக்களின் இயங்கு திசையாக மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது. தெற்கு சூடான் விடுதலை பெற்ற (2011) அண்மைக் காலம் வரை, உலக அரங்கில் தேசிய இன விடுதலைப் போராட்டம் முற்றுப் பெறாத நிகழ்வு என்பதையே காட்டுகிறது. 1990களில் உலகின் இயங்கு திசை வல்லரசுக் குழுக்களின் இயங்கு திசையாகவே உள்…
-
- 1 reply
- 790 views
-
-
போருக்குப் பிந்திய இலங்கையில் அதிகமதிகம் நெருக்கடிகளைச் சந்திக்கும் தலைவர்கள் நான்குபேர். ஒருவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ. அடுத்தவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க. மற்றவர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன். நான்காவது ஆள் சந்தர்ப்பவசம் காரணமாக அரசியலுக்கும் சிறைக்கும் இடையில் சிக்குண்டிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகா. முதலாவது நபர், போர் வெற்றியைத் தன்னுடைய அரசியல் வெற்றியாக்கியவர். அதேவேளை போர்க் குற்றங்கள் அவரைச் சுற்றி நெருப்பு வளையங்களாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. போர் வெற்றியையே எரித்து விடும் அளவுக்கு இந்த நெருப்பு வளையத்தைப் பாவிக்க முனைகின்றன இவருடைய எதிர்த்தரப்புகள். தவிர, குடும்ப மேலாதிக்கத்தினால் உருவாகிய அதி…
-
- 0 replies
- 801 views
-
-
திருகோணமலை கடற்படைசிப்பாய் பாலியல் துஷ்பிரயோகம்- அவரின் ஆணுறுப்பை அறுத்த பெண்! ) தனது வீட்டில் தனிமையில் இருந்த குடும்பப் பெண்ணொருவரை சிறிலங்கா கடற்படையை சேர்ந்த ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த போது அவரின் ஆணுறுப்பை அப்பெண் அறுத்து எடுத்துள்ளார். இச்சம்பவம் நேற்றுமுன்தினம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் தம்புழுகமுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. ஆணுறுப்பை பறிகொடுத்த கடற்படை வீரர்(?) திருகோணமலை கடற்படை தளத்தில் பணியாற்றுபவராவார். இரத்தம் ஓட ஓட கந்தளாய் வைத்தியசாலையின் ஏழாவது வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 22 வயதான இந்த கடற்படை வீரர் பொலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பெண்ணின் கணவர் வேலைக்குச் சென்றிருந்த போது …
-
- 6 replies
- 1.6k views
-
-
http://naathamnews.com/?p=4192 ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்கா கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளத்தில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு எதிரான பரப்பரையை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழினத்தின் மீதான சிறிலங்கா அரச பயங்கரவாதமாக, கட்டவிழ்த்தப்பட்ட கொடியயுத்தத்தில், சிறிலங்கா மீது போர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தனது கோபத்தை கொட்டித் தீர்த்துள்ளது. ஆயுதப்போராட்டம்தோற்றவுடன், சனநாயக போராட்டப்பாதையில் செல்வதற்காக தொடங்கப்பட்டதுதான் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்றும், தமிழீழ அரசாங்கத்தின் பிரதான நோக்கம் வெளிநாட்டு அரசுகளின் கவனத்தை வாங்கி இல…
-
- 3 replies
- 1k views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம், இந்திய நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கவுள்ளது. வரும் திங்கட்கிழமை இந்திய நாடாளுமன்றத்தின் வரவுசெலவுத்திட்ட கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிமுக மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தவுள்ளனர். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவது குறித்து தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தியுள்ளார். அதேவேளை, இந்திய நாடாளுமன்ற…
-
- 4 replies
- 1.4k views
-
-
பாலியல் வல்லுறவு தேசமாக மாறி வரும் யாழ்ப்பாணம்!ஒரு வைத்திய அதிகாரியின் வாக்குமூலம்! யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என்றும் ஏழு வயதுச் சிறுமிகள் முதல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வருகின்றனர் என்றும் சுகாதார துறை சார்ந்த அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் 32 சம்பவங்கள் இடம்பெற்று இருக்கின்றன என்று பதிவுகள் கிடைக்கப் பெற்று இருக்கின்றன என்று சுகாதார துறையை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எஸ். சிவரூபன். இந்த 32 துஷ்பிரயோகங்களில் 09 சம்பவங்கள் மிகவும் பாரதூரமானவை என்று குறிப்பிட்டார். 2010…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஐ.நா மனித உரிமைச் சபையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரரணையின் உள்ளடகத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் சிறிலங்கா தற்போது இறங்கியுள்ளது. அமெரிக்காவின் பன்முனை இராஜதந்திர அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க முடியாத நிலைக்கு பல நாடுகள் தள்ளப்பட்டுள்ள நிலையில் பிரேரணiயின் உள்ளடக்கத்தின் வீச்சினைக் குறைக்குமாறு குறித்த சில நாடுகளை சிறிலங்கா கேட்டுக் கொண்டுள்ளது. ஜெனீவா சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணைக்குத் திருத்தம் கொண்டு வரும்படி அமெரிக்கா அழுத்தத்தை பொறுக்க முடியாத சிறிலங்காவக்கு ஆதரவான நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளதாக சிறிலங்காவின் வெளிவிவகார துணை அமைச்சர் நியோமல் பெரேராவின் கூறியுள்ளமை இவ்விவகாரத்தை உறுதிசெய்…
-
- 0 replies
- 883 views
-
-
சனல்-4 : போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் மற்றொரு ஆவணப்படத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடவுள்ளது சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்ட பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் மற்றொரு ஆவணப்படத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடவுள்ளது. ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே இந்த ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளது. சனல்-4 வெளியிட்ட ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்ட ஜோன் சினோ என்ற செய்திவழங்குனரே இந்த ஆவணப்படத்தையும் வெளியிடவுள்ளார். ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவு…
-
- 3 replies
- 1k views
-
-
உலெகெங்கும் பரந்து வாழும் தமிழர்களே, நாம் எந்த அளவுக்கு மடையர்களாக ஆக்கபடுகிறோம் தெரியுமா :( ஐ நா மனிதவுரிமை சபையில் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவந்ததை அனவரும் பாராட்டி மகிழ்ந்து நாளையே நமக்கு நீதி கொடுக்கப்பட உள்ளது போல் அனைவரும் எழுதுகின்றனர். ஆனால் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் தீர்மானத்தில் என்ன இருக்கின்றது என்பதை யாரும் கவனித்ததாய் தெரியவில்லை. பிரேரணை தெளிவாக படித்தோமானால் அதில் ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்களை கண் மூடித்தனமாய் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசு தம்மை தாமே விசாரணை செய்வதாக உருவாக்கிய ராஜதந்திர முறையில் கூறப்படும் “நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ” அதாவது கொலைகாரன் தன்னையும் தனக்கு உதவியாக இருந்த சகாக்களையும்…
-
- 6 replies
- 1.8k views
-
-
யாழில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழ் மக்கள் இனிமேலும் அரசியலிலிருந்து விலகி இருப்பதென்பது சாத்தியப்படப் போவதில்லை. வெகுஜன அமைப்புக்களாயினும் சரி சிவில் அமைப்புக்களாயினம் சரி அனைவருக்கும் ஒவ்வொரு கடமைகள் உண்டு. இது ஓரு தனிப்பட்ட பிரச்சினையில்லையென்பதை அனைவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.இன்று யாழ்.நகரின் தமது கட்சி அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையினில் தமிழ் மக்களது அரசியல தலைவர்கள் எனக்கூறப்படுபவர்கள் மக்க…
-
- 0 replies
- 596 views
-
-
கதறக் கதறக் கொலைகள் செய்த சிங்கள அரசு முதன்முதலாகக் கதறுகிறது. சாட்சிகளை அழித்துவிட்டால், கேட்பதற்கு நாதி இல்லை என்று நினைப்பில், மிகமோசமான இன அழிப்பு இலங்கையில் நடத்தப்பட்டது. இனஅழிப்புக்கு எதிராக உலகநாடுகள் ஒன்று சேர்ந்த அடையாளம்தான், கடந்த 7-ம் தேதி அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம். ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பில் இலங்கைக்கு எதிராகக் களம் இறங்கி உள்ளது அமெரிக்கா. இதைக் கண்டு பயந்துபோன இலங்கை, தனக்கு நெருக்கமான நாடுகளிடம் ஆதரவு கேட்டு கையேந்தி நிற்கிறது. 47 நாடுகளை உள்ளடக்கிய இந்த சபையில் 24 நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு வாக்களித்தால், தீர்மானம் நிச்சயம் நிறைவேறும். இது அமெரிக்காவின் நம்பிக்கை மட்டும் அல்ல... முள்ளி…
-
- 0 replies
- 816 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு வேண்டும்: யசூஷி அகாஸி கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் சிபாரிசுகளை முழுமையாக அமுல்படுத்துவதில் இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பின் அவசியத்தை இலங்கைக்கான ஜப்பானிய அரசின் விசேட பிரதிநிதியான யசூஷி அகாஷி வலியுறுத்தியுள்ளார். ஜப்பான், இலங்கை ஆகிய இருநாடுகளுக்கிடையிலான வலுவான இருதரப்பு உறவுகளின்முக்கியத்துவத்தையும் அகாஷி வலியுறுத்தியதுடன், இலங்கைக்கு எப்போதும் ஆதரவளிக்கும் எனவும் எப்போது உதவி தேவைப்பட்டாலும் வழங்கும் எனவும் அகாஷி வலியுறுத்தியதாக கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதரகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. தற்போது ஜப்பானுக்கு சென்றுள்ள நாடாளுமன்ற உ…
-
- 5 replies
- 705 views
-
-
அமெரிக்காவும் அந்த ஆண்டவனும் பார்த்துக் கொள்ளட்டும் எங்களால் எதுவும் முடியாது. எல்லாவற்றையும் இழந்து உறவுகளைப்பறி கொடுத்து நடமாடும் மனித உடலங்களாக மட்டுமே நாங்கள். இதுதான் எங்கள் ஈழத்தமிழர்களின் சமகால நிலைமை. தேவையாயின் தேர்தல் காலத்தில் எங்களை நாங்களே உசுப்பேத்தி வாக்களிப்பு நிலையம் சென்று ஒரு புள்ளடியை போட்டுவிட்டு வருவோம். எங்கள் புள்ளடியில் வென்றவர்களுக்கு பெர்மிட் கார் கிடைக்கும். கனத்த சம்பளம் கிடைக்கும். நாலாண்டுகளை தாக்காட்டிவிட்டால், பென்சனுக்கும் பஞ்சமில்லை. அதனால் ஜெனிவா போனால் பதவி போகும் என்ற பயம். பதவியை தந்தவர்களுக்காகப் பதவி போனாலும் பரவாயில்லை என்று நினைப்பதற்கு யாரும் இலர். நிலைமை இப்படியிருக்கையில், உங்களுக்கு என்ன குறையென்று கேட்பவர்களும் இருக்கிறா…
-
- 5 replies
- 1.2k views
-