ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
வவுனியா வடக்கு மாதா தேவாலயத்தினுள் புகுந்த இராணுவத்தினர் திருச் சொரூபங்களை வெளியே வீசி அட்டகாசம் வவுனியா வடக்குப் பகுதியிலுள்ள மாதா தேவாலயத்தினுள் புகுந்த இராணுவத்தினர் அங்கிருந்த திருச் சொரூபங்களை வெளியே வீசி அதனை அசிங்கப்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இப்பகுதியிலுள்ள இளமருதங்குளம் கார் மேல் மாதா தேவாலயத்தினுள் புகுந்த படையினரே இவ்வடாவடியில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. தேவாலயத்தினுள் புகுந்து அங்கிருந்த மாதாவின் திருச் சொரூபத்தினை அகற்றி வெளியே கொண்டு சென்று வைத்து அதன் மீது கழிவு நீர் போன்றவற்றை ஊற்றி படையினர் அசிங்கப்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நேற்றிரவு இந்த அடாவடி நடவடிக்கை இடம்பெற்றுள்ள நிலைமையில் அந்தப்…
-
- 0 replies
- 568 views
-
-
பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த ஒரு வருட அவகாசம் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஐ.நாவில் சமர்ப்பித்தது அமெரிக்கா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் வரைவை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத் தொடரில் நேற்றுப் புதன்கிழமை சமர்ப்பித்தது அமெரிக்கா. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு ஒரு வருட கால அவகாசத்தை வழங்கியுள்ள இந்தத் தீர்மான வரைவு, அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் அது தொடர்பான நவநீதம்பிள்ளையின் அறிக்கையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த பிரேரணை தொடர்பிலான உப மாநாடு ஒன்றையும் இன்று வியாழக்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா ஏற்பாட…
-
- 6 replies
- 1.3k views
-
-
கச்சத்தீவு: கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மற்றும் மீனவர்கள் தாக்குதல் நடத்துவது அனுமார்வால் போன்று நீண்டு கொண்டே செல்கின்றது. கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வருவதாக கூறி ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படை சிறை பிடித்து செல்வதும், சில நேரங்களில் கண்மூடித்தனமாக மீனவர்களை தாக்குவதுமான நிலை நீடித்து வருகின்றது. இவ்வாறு இலங்கை கடற்படை தாக்குதலில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். பல நூறு மீனவர்கள் துப்பாக்கி சூட்டில் பலியாகியும் உள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 28 ந் தேதி மீன் பிடிக்க சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேரை போதைப் பொருள் கடத்தியதாக கூறி இலங்கை அரசு வழக்கு தொடர்ந்து, கடந்…
-
- 1 reply
- 1.1k views
-
-
அமெரிக்காவின் தீர்மானம் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசுகளுக்கு அப்பால் போகவில்லை: மனோ அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மானம், இலங்கை அரசாங்கத்தினால் கதை, திரைகதை, வசனம் எழுதி தயாரிக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டதே தவிர, ஐநா செயலாளர் நாயகத்தின் தருஷ்மன் அறிக்கையை அடிப்படையாக கொண்டதாக இல்லை. இதில் இலங்கை அரச தலைவர்களுக்கு எதிரான போர்க் குற்றங்கள் பற்றியோ அல்லது யுத்தத்தின் இறுதி கட்டத்தில் இறந்துபோன ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 562 views
-
-
டக்ளஸ், கனகரத்தினத்தார் ஏறிய குதிரையில் ஜெனிவா வருகிறார் சக்கடத்தார் தில்லைநாதன்! Published on March 9, 2012-8:03 am · தமிழர்களுக்கு இலங்கையில் எந்த பிரச்சினையும் இல்லை, சிறிலங்கா படைகள் போர்க்குற்றமிழைக்கவில்லை என பிரசாரம் செய்வதற்காக நேஷன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மாலிந்த செனவிரத்னா, மற்றும் தினகரன் தினசரி பிரதம ஆசிரியர் தில்லைநாதன் ஆகியோர் ஜெனிவா வருகின்றனர். டக்ளஸ், கனகரத்தினம், யோகேஸ்வரி பற்குணம் போன்றவர்கள் ஜெனிவாவுக்கு ஏறிவந்த குதிரையில் இப்போது சக்கடத்தார் தில்லைநாதனையும் மகிந்த ஜெனிவாவுக்கு அனுப்பியிருக்கிறார் என தினகரன் பத்திரிகையின் ஆசிரிய பீடத்தை சேர்ந்த தமிழ் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார். மாலிந்த செனவிரத்னவை அழைத்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதியை சந்தித்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு அமெரிக்கா இலங்கைக்கு எதிரான யோசனையை சமர்ப்பித்துள்ள போதிலும் அரசாங்கம் அவசரப்படவில்லை எனவும் அதனைப் பொறுமையுடனேயே அணுகும் எனவும் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இது தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்புக்குப் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிக் கூற முடியும் எனவும் கூறினார். அமெரிக்கா ஜெனீவா மனித உரிமைகள் அமர்வின் போது 7 ஆம் திகதி இலங்கைக்கு எதிரான யோசனையை சமர்ப்பித்துள்ளது. ஜெனீவா அமர்வின் ஆரம்பக் கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் பின்னர் இலங்கைக் குழு நாடு திரும்பியதன் பின்னர் நேற்று முன்தினம் அமெரிக்கா அதன் யோசனையை சமர்ப்பித்துள்ளது. …
-
- 1 reply
- 826 views
-
-
எங்களுக்காக வாழ்ந்த போராளியின் விடுதலைக்கு வேண்டியது ஒன்றரை லட்சரூபா மட்டுமே. இராசவர்மனின் குரலிலிருந்து சில துளிகள் ஒலிவடிவில் கேட்க… இராசவர்மன் ! 5வருடங்களாக சிறையிருக்கிறான். இவன் மீது 2குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. எப்படியும் 27வருடத்தண்டனைதான் முடிவென்று சட்டவல்லுனர்கள் ஆரூடம் கூறியிருந்தனர். சிறை போனதோடு வர்மன் வீட்டுக்கு விளங்காதவானாகிப் போனான். அம்மாவைத் தவிர யாருமே அவனைப் பார்ப்பதுமில்லை நினைப்பதுமில்லை. அக்கா அண்ணா தம்பியென்ற உடன்பிறப்புகள் அவனோடு பிறந்திருந்தும் அவன் அவர்களால் மதிக்கப்படவில்லை. யார் போனாலென்ன நாடு தன்னைக் காக்குமென்ற நம்பிக்கையில் 27வருடங்களையல்ல ஆயுளையும் சிறையில் கழிக்கத் தயாராகியிருந்தான். ஒவ்வொரு தவணையும் கூண்டில் ஏறியிறங்கிய…
-
- 4 replies
- 1.3k views
-
-
நினைப்பது கிடைக்கவில்லை என்பதால் கிடைப்பதை எடுப்போம் என்பதற்கு இது விளையாட்டு பொருள் அல்ல . இது ஒரு இனத்தின் இருப்புக்கான விடுதலைப் போராட்டம் . - ஈழத்தமிழர் மக்கள் அவை - யேர்மனி கடந்த வாரங்களாக பல்வேறு இணையதளங்களில் தலைப்பு செய்திகளாக வாசிக்கப்படும் விடையம் :" ஐ நா மனிதவுரிமை சபையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எடுக்கின்றது , எடுத்திருக்கின்றது" என்பதே . நீதி வேண்டி போராடும் அனைத்து தமிழ் மக்களும் இச் செய்திகளை வாசிக்கும் பொழுது மகிழ்ச்சி அடைகின்றனர் . ஆனால் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் தீர்மானத்தில் என்ன உள்ளடக்கி இருக்கின்றது என்பதை தெளிவாக உற்று நோக்குவோமானால் அதில் ஆயிரம் ஆயிரம் தமிழ் மக்களை கண் மூடித்தனமாய் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரச…
-
- 1 reply
- 835 views
-
-
ஈழ இனப் படுகொலை இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் அவலம் - கவிஞர் சேரன் [ வியாழக்கிழமை, 08 மார்ச் 2012, 13:37 GMT ] [ புதினப் பணிமனை ] [சென்னையில் இருந்து வெளிவரும் 'காக்கைச் சிறகினிலே..' இலக்கிய மாத இதழில் [மார்ச். 2012] வெளிவந்த கவிஞர் சேரனின் நேர்காணலை அதன் முக்கியத்துவம் கருதி எமது தளத்தில் மீள் பிரசுரம் செய்கிறோம்.] ‘நீரற்றது கடல் நிலமற்றது தமிழ் பேரற்றது உறவு’ என்று மிகச் சிக்கனமான வரிகளில் ஈழத்தில் நடந்த பேரழிவை எடுத்துச் சொல்லும் கவிஞர் சேரன் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்தவர். ஈழத்தில் நடந்த பல அதிகாரம் சார்ந்த அதிர்வுகளுக்கு எதிர்வினையான எழுத்துச் சாட்சியங்களாக இருக்கின்றன இவருடைய கவிதைகள். தற்போது கனடாவில் உள்ள வி…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக, அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று புதுடெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ள அமெரிக்கா, அதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதுபற்றி இந்திய அரசுடன் பேச்சு நடத்தவே உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்றை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இந்தக் குழுவினர் நேற்றுக்காலை புதுடெல்லியைச் சென்றடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அமெரிக்க அதிகாரிகள் புதுடெல்லியில் யாருடன் பேச்சு நடத்தினர் என்ற விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.…
-
- 0 replies
- 656 views
-
-
வவுனியா வடக்கு இளமருதங்குளம் கார் மேல் மாதா தேவாலயத்தினுள் புகுந்த இராணுவத்தினர் அங்கிருந்த திருச் சொருபங்களை வெளியே வீசி அதனை அசிங்கப்படுத்தியிருக்கின்றனர். தேவாலயத்தினுள் புகுந்து அங்கிருந்த மாதாவின் திருச் சொருபத்தினை அகற்றி வெளியே கொண்டு சென்று வைத்து, அதன் மீது நீர் ஊற்றி அசிங்கப்படுத்தப்பட்டிருக்கின்றது. கடந்த இரவு இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளமையால் அந்தப் பகுதி கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு நிலை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து மன்னார் ஆயர் விடுத்த வேண்டுகோளின் எதிரொலியாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது. இளமருதங்குளம் …
-
- 0 replies
- 617 views
-
-
இலங்கை மீது நட்பு நாடுகள் சினம் கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். தேசப்பற்றுள்ளவர்களை மடக்கி அவர்களின் மூலம் மக்களை ஏமாற்றும் கலாச்சாரம் உருவாகியுள்ளது. இந்த நாட்டுக்கு ஆபத்து ஏற்படுவதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும், ஜெனீவா பிரச்சினையை பெரிதுபடுத்தி நாட்டு மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்குவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எவரேனும் மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்து குரல் கொடுத்தால் உடனடியாக விடுதலைப் புலி முத்திரை குத்தப்படுகின்றது. நாட்டை ஆட்சி செய்யும் விடயங்களில் சண்டித்தனம் காட்டுவதில் அர்த்தமில்லை. இராஜதந்திர ரீதியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்…
-
- 0 replies
- 488 views
-
-
ஈ.பி.டி.பியின் ஆடும் வாலை ஒட்ட நறுக்குவோம் – றோயல் கல்லூரி பிரதி அதிபர் எச்சரிக்கை! Published on March 6, 2012-10:04 am யாழ். தீவகத்தில் அராஜகம் தொடர்ந்தால் சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக்குழுவாக செயற்படும் ஈ.பி.டி.பியின் வாலை ஒட்டநறுக்குவோம் என கொழும்பு றோயல் கல்லூரி பிரதி அதிபர் எம்.கணபதிப்பிள்ளை எச்சரிக்கை விடுத்தார். கொழும்பில் நடைபெற்ற புங்குடுதீவு வாழ்வும் வளமும் என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கணபதிப்பிள்ளை இந்த எச்சரிக்கையை விடுத்தார். சுற்றுலா அபிவிருத்தி என்று கூறிக்கொண்டு யாழ். தீவகத்தின் பாரம்பரிய கலாசாரத்திற்கும் அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் பங்கம் விளைவிக்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டால் மக்…
-
- 40 replies
- 3k views
-
-
[ வியாழக்கிழமை, 08 மார்ச் 2012, 06:52.05 PM GMT ] ஐ.நா மனித உரிமைச் சபையில் இடம்பெற்று வரும் பல்வேறு விவதாங்களிலும், சிறிலங்கா அரச தரப்பினர் தங்களை நியாயப்படும் வகையில், சபை அமர்வுகளில் தொடர்சியாக பங்கெடுத்து வருகின்றனர். உள்நாட்டில் இடம்பெயர்தோர் தொடர்பிலான விவாதத்தின் போது கருத்துரைத்த சிறிலங்காவின் பிரதிநிதி, 2009ம் ஆண்டின் போரின் காரணமாக, இடம்பெயர்ந்த மக்களில் 98வீதமானர்கள் மீளக்குடிமர்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். போரின் விளைவாக 2 90 000 இடம்பெயந்த மக்களை சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொள்ள நேர்ந்த நிலையில், இவர்களுக்கான வசதிகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்ததாக தெரிவித்த சிறிலங்காவின் பிரதிநிதி, இடம்பெயர்ந்த மக்களை உடனடியானதும், நீண்ட கால ந…
-
- 3 replies
- 1k views
-
-
ஜெனீவாவில் அமெரிக்கா பரிந்துரைக்கப்போகும் தீர்மானம் 13 ஆம் திருத்தச் சட்டத்தினைக் காட்டிலும் குறைவானது ஜெனீவா மனிதவுரிமை மாநாட்டில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட இருப்பதாகக் கூறப்படும் தீர்மானம் பற்றிய குறிப்பொன்றின்படி, அத்தீர்மானம் 13 ஆம் திருத்தச் சட்ட மூலத்தினைக் காட்டிலும் மிகவும் குறைவான உரிமைகளையே தமிழர்களுக்குப் பரிந்துரைத்துள்ளதாக அறியப்படுகிறது. இதன் படி ஒன்றுசேர்ந்த வடக்குக் கிழக்கு மாகணங்கள் என்று 13 ஆம் திருத்தச் சட்டத்தினில் கூறப்பட்டிருக்கையில், அமெரிக்காவின் தீர்மானமோ வெறும் வடக்கில் மட்டுமே இராணுவ விலகல் எனும் கோரிக்கையை முன்வைக்கிறது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளை நடைமுறைப்படுத…
-
- 18 replies
- 1.2k views
-
-
ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான ஒரு பிரேரணையை முன்மொழிவதற்கு அமெரிக்கா அறிவித்தல் கொடுத்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். நேற்று ஊடகங்களுக்கு இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,இதனைத் தவிர்த்துக் கொள்வதற்காக நாம் பல முயற்சிகளை மேற்கொண்டோம். ஆயினும், அரசியல் காழ்ப்புணர்ச்சிக் கொண்டு அமெரிக்காவும் அதன் சில நேச நாடுகளும் இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்மொழிந்திருந்தாலும் கூட, இலங்கை அரசாங்கம் உள்நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் காட்டி வரும் ஆர்வம் குறித்து மிகவும் தெளிவாக அறிந்து வைத்திருக்கும் எமது நேச நாடுகள் இந்தப் பிரேரணையை…
-
- 3 replies
- 911 views
-
-
ஐ.நா மனித உரிமைச் சபையில் இடம்பெற்று வரும் பல்வேறு விவதாங்களிலும், சிறிலங்கா அரச தரப்பினர் தங்களை நியாயப்படுத்தும் வகையில், சபை அமர்வுகளில் தொடர்சியாக பங்கெடுத்து வருகின்றனர். உள்நாட்டில் இடம்பெயர்தோர் தொடர்பிலான விவாதத்தின் போது கருத்துரைத்த சிறிலங்காவின் பிரதிநிதி, 2009ம் ஆண்டின் போரின் காரணமாக, இடம்பெயர்ந்த மக்களில் 98வீதமானர்கள் மீளக்குடிமர்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். போரின் விளைவாக 2,90,000 இடம்பெயந்த மக்களை சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொள்ள நேர்ந்த நிலையில், இவர்களுக்கான வசதிகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்ததாக தெரிவித்த சிறிலங்காவின் பிரதிநிதி, இடம்பெயர்ந்த மக்களை உடனடியானதும், நீண்ட கால நோக்கத்திலுமான திட்டங்கள ஊடாக, சொந்த இடங்களில் மீள…
-
- 0 replies
- 568 views
-
-
ஈழத்தமிழனத்தின் மீது சிறிலங்கா அரசு மேற்கொண்ட போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றம், இனப்படுகொலை ஆகியனவற்றுக்கு பொறுப்புக்கூறும் வகையில், அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றை வலியுறுத்தும் வகையிலான காத்திரமான உள்ளடக்கத்தை, ஜெனிவாவில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மான வரைபில் எதிர்பார்ப்பதாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைச் சபையில் அமெரிக்காவினால் சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணை குறித்து, கருத்து தெரிவித்த போது இக்கூற்றினை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர்கருத்து தெரிவிக்கையில் அமெரிக்காவினால் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைய…
-
- 0 replies
- 898 views
-
-
சிறீலங்கா அரசிற்கு நன்மதிப்பை பெற்றுக்கொடுத்து பன்னாடுகளின் செயற்பாடுகளுக்கு உண்மையினை தெரிவித்தார் எனக் கூறி யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டாசுகுமாருக்கு இதுவரை அரசாங்க அதிபர்கள் பெற்றுக்கொள்ளாத விருது ஒன்றினை மகிந்தராஜபக்ச வழங்கிவைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்திற்கு நன்மதிப்பை பெற்றுக்கொடுத்தார் என்ற நன்றிக்காக யாழ் அரச அதிபர் இமெல்டாசுகுமாருக்கு இன்று விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் யாழ் மாவட்டத்தில் கடமையாற்றிய அரச அதிபர்கள் பெற்றுக் கொள்ளாத இவ் விருதினை முதன்முதல் இமெல்டாசுகுமார் இம்முறை பெற்று முதல் முதலாக தமிழ் பெண் ஒருவர் பெற்றுக்கொள்கின்றார். இமெல்டாசுகுமா தனது நிலையை மாற்றி அரசாங்கத்திற்கும் யாழ் ஊடகற்களி…
-
- 0 replies
- 827 views
-
-
வியாழக்கிழமை, 08 மார்ச் 2012, 07:03.14 PM GMT ] சிறிலங்கா தொடர்பிலான தனது பிரேரணையினை, ஐ.நா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா முன்வைத்திருந்த நிலையில், இன்று வியாழக்கிழமை இது தொடர்பிலான உப மாநாடொன்றினை ஐ.நா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா நடாத்தியிருந்தது. இந்த உப மாநாட்டில் 25 நாடுகள் பங்கெடுத்திருக்கின்றன. மனித உரிமை அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், ஐ.நா அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், இராஜதந்திரிகள் மற்றும்தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் பங்கெடுத்துள்ளனர். அமெரிக்காவின் இந்த உப மாநாடு குறித்து, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி தெரிவிக்கையில்.... சிறிலங்கா உட்பட 25 நாடுகள் இதில் பங்கெடுத்திருந்தனர். சிறிலங்காவின் தரப்பில் மொகன் ப…
-
- 2 replies
- 1k views
-
-
ஜெனீவா கூட்டத்தொடர் குறித்து கருத்துகூற வேண்டாம் : ரணில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் குறித்து தற்போது கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இவ்விடயம் அரசாங்கத்தினால் கையாளப்பட வேண்டியதொன்றாகும் என அவர் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 1987 ஆம் ஆண்டின்பின் பின்னர் முதல் தடவையாக இலங்கை விடயம் எவ்வாறு கலந்துரையாடலுக்கு வந்தது என இன்று நடைபெற்ற கூட்டமொன்றின்போது தனது கட்சி அங்கத்தவர்களுக்கு ரணில் விளக்கினார். அப்போதைய அரசாங்கம் அச்சவால்களை புத்திசாதுர்யமான அணுகுமுறை மூலம் எவ்வாறு வெற்றிகொண்டது என்பதையும் ரணில் விபரித்தார். இதேவேளை …
-
- 0 replies
- 734 views
-
-
பத்மினி மீதான விசாரணைக்கு நவ சம சமாஜ கட்சி கண்டனம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான பத்மினி சிதம்பரநாதன் மீது புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தியமைக்கு நவசம சமாஜ கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சி விடுத்துள்ள அறிக்கையில்; யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை விடுத்து பழிவாங்கும் செயற்பாட்டில் அரசு ஈடுபட்டு வருகிறது. நாட்டில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உலக அரங்கில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் அரசின் இவ்வாறான செயற்பாடுகளானது அதன் கொள்கையில் இருந்து மாறில்லை என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடும் நேர்மையான மனிதர்களின் மீ…
-
- 0 replies
- 784 views
-
-
இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தி விசாரணைப் பொறிமுறையொன்றை அமைப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் தருஸ்மன் தலைமையிலான நிபுணர்கள்குழு விசேட கடிதமொன்றினூடாக கோரிக்கை விடுத்துள்ளது. ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை இலங்கையின் பொறுப்புகூறும் கடப்பாட்டுக்கு முழுமையானதொரு நடவடிக்கையாக அமையாது எனறும், யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிவதே முழுமையான நடவடிக்கை என்றும் நிபுணர்கள் குழு அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது என அறியமுடிகின்றது. இலங்கை அரச படையினர் வைத…
-
- 1 reply
- 755 views
-
-
அமெரிக்கா கூறுவதில் ஒரு விடயமே தெளிவாக இருக்கிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்பதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற கருத்தையே அமெரிக்கா வலியுறுத்துகிறதென்று திருமதி தமரா குணநாயகம் குறிப்பிட்டுள்ளார். ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக இருந்து வரும் திருமதி தமரா குணநாயகம், இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா கண்டனப் பிரேரணை ஒன்றை கொண்டு வருவதில் ஆர்வம் காண்பித்து வருவதற்கான காரணத்தை சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது – அமெரிக்க அரசாங்கம் நோக்கங்களை அடிப்படையாக வைத்து தீர்மானம் மேற்கொள்கிறதே தீவிர …
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
அமெரிக்காவின் பிரேரணை தோற்றதாக சரித்திரம் இல்லை - சுமந்திரன் (காணொளி) ஐ.நா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் இலங்கை குறித்து அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. அமெரிக்கா முன்வைத்துள்ள பிரேரணை இலங்கைக்கு எதிரானது அல்ல எனவும் அது இலங்கைக்கு நன்மை தரக்கூடிய ஒன்றாகவே அமையும் எனவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். எமது அழைப்பை ஏற்று அத தெரண தமிழிணைய செய்தி அலுவலகத்திற்கு இன்று (08) வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட பிரேரணை ஒன்று தோல்வியடைந்ததாக சரித்திரம் இல்லை என அ…
-
- 1 reply
- 1.7k views
-