ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
இலங்கை அரசை இந்தியா ஆதரிக்க கூடாது . இலங்கையை ஐ நா சபை மனித உரிமை கூட்டத் தொடரில் சர்வதேச போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து நாம் தமிழர் கட்சியின் எழுச்சிமிகு போராட்டம் சென்னையில் நடந்தது. போர்க்குற்ற விசாரணையை ஐநா மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும், ஜெனீவா கூட்டத்தொடரில் இந்தியாவின் நிலைப்பாடு மாற வேண்டும் என்று வலியுறுத்தியும் சென்னையில் கடந்த சனிக்கிழமை எழுச்சியுடன் நடந்த கோரிக்கை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமானின் தலைமையில் இனமான இயக்குனர் அய்யா மணிவண்ணன் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. அணைத்து படங்களையும் பார்க்க கீழே சொடுக்கவும்: நன்றி – முரளி, மருத்துவர் …
-
- 4 replies
- 1.1k views
-
-
மனித உரிமைச் சபையின் உறுப்பு நாடுகளுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அனுப்பியுள்ள கடிதத்துக்கு அரசாங்கம் பதிலளிக்குமென அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்;தன தெரிவித்தார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் உறுப்பு நாடுகளுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அனுப்பியுள்ள கடிதத்துக்கு ஜெனீவா கூட்டத்தில் அரசாங்கம் பதிலளிக்குமென ஊடகத்துறை பதில் அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவாத்தன தெரிவித்தார். இது தொடர்பாக இன்று முற்பகல் எமது செய்தியாளருக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர், இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்தி பல அமைப்புகள் கடிதங்களை அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டார். இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்…
-
- 1 reply
- 568 views
-
-
ஜெனிவாவில் காஷ்மீரிகளுக்கும் குரல் கொடுத்த ஈழத் தமிழர்கள்! "இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் கொண்டுவரக்கூடிய தீர்மானத்தை ஆதரிப்போம்," "ஐ.நா.மன்றமே மகிந்த ராஜபக்சேவை போர்க்குற்றவாளியை அறிவித்திடு" என பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத் தொடர் நடக்கும் ஜெனிவாவில் ஒன்றிணைந்து தங்கள் குரலை பதிவு செய்துள்ளனர். இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதை ஆராய்ந்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும்; சர்வதேசம் தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தந்திட முன்வர வேண்டும்; இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஐ.நா.மனித உரிமை சபையில் ஆதரித்திட வேண்டும் என்று சர்வதேச சமூகத்துக்கு ஐந்து அம்சக…
-
- 2 replies
- 848 views
-
-
ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்காவுக்கு மலேசியா ஆதரவு தெரிவிக்குமெனில், ஆட்சியில் இருக்கும் அரசாங்கமானது, வரும் தேர்தலில் மலேசியத் தமிழர்களின் வாக்குகளை இழக்க நேரிடுமென மலேசிய ஊடகமொன்று எச்சரித்துள்ளது. ஐ.நா மனித உரிமைச் சபையில், சிறிலங்கவை நோக்கிய பிரேரணையை மலேசியா எதிர்க்கும் என்ற செய்தி மலேசியத் தமிழர்களை கொதிப்படைய வைத்துள்ளது. இந்நிலையிலேயே, மலேசியத் தமிழர்களின் உணர்வலைகளை மேற்கோள்காட்டி, மலேசிய ஆளும் அரசுக்கு மலேசிய ஊடகம் எச்சரித்துள்ளது. http://youtu.be/-xnZL-QotYE மலேசியாவில் உள்ள 20 லட்சம் இந்தியத் தமிழர்களின் உணர்வுகளை புறந்தள்ளி, சிறிலங்காவுக்கு ஆளும் மலேசிய அரசு ஆதரவு வழங்குவது ஆபத்தான அரசியல் என அது எச…
-
- 0 replies
- 629 views
-
-
நுளைவாசலில் நின்று பேசுவதை அவமானமாகக் கருதும் மேட்டுக்குடித் தமிழன் சுமந்திரன் நுளைவாசலில் நின்று பேசுவதை அவமானமாகக் கருதும் மேட்டுக்குடித் தமிழன் சுமந்திரன் 2009ம் ஆண்டின் பின்னர் ஜ.நா மனிதவுரிமைகள் அமையம் தற்போது 12ஆவது தடவை அமர்வினைக் கூட்டியிருக்கின்றது. இதற்கு முன்னரும் 11தடவை கூட்டப்பட்டிருக்கின்றது. அப்போது கூட்டமைப்பிடம் யாரும் கேட்காத கேள்வி இப்போது ஏன் கேட்கப்படுகின்றது? இதை புரிந்தும் புரியாதது போல சிலர் கேட்கத் தூண்டுகிறார்கள். 47நாடுகளையும், பல அரசாங்கங்களையும் உள்ளடக்கியதாக மனிதவுரிமைகள் சபை உள்ளது. இதில் ஒரு நாட்டில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியான நாம் அங்கு சென்று எப்படி பங்கு கொள்ள முடியும்? ஜெனிவா அமர்வுகளில் பதிவு செய்யப்பட்ட மனிதவுரிமை அமைப்புக…
-
- 6 replies
- 1.3k views
-
-
போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு பொறுப்புக் கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கோரியும் இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை தொடர்பில் தளர்வுப் போக்கைக் கடைப்பிடிக்குமாறும் அமெரிக்காவிடம் இந்தியா இராஜதந்திர அடிப்படையிலான வேண்டுகோளை விடுத்துள்ளது என மிகவும் நம்பகரமாகத் தெரியவருகின்றது. இதற்கமைய ஜெனிவாவில் நிலைகொண்டுள்ள டில்லி அரசின் இராஜதந்திரிகள் குழாம், அமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இலங்கை விவகாரம் தொடர்பில் முக்கியமான பேச்சுகளை நடத்தியுள்ளது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனிவா மாநாட்டில் இலங்கையை ஆதரிக்கப் போவதா…
-
- 1 reply
- 1.1k views
-
-
'ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழு உறுப்பு நாடுகளுக்கு கூட்டமைப்பு கடிதம் எழுதியதையிட்டு சிறிலங்கா கடும் சீற்றம்!' ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் பங்குகொள்ளும் நாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் கடும் விசனம் வெளியிட்டுள்ளது. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றொரு நாட்டின் விருப்பங்களுக்கு அமைவாகச் செயற்படுகின்றதா எனவும் சிறிலங்கா அரசாங்கம் கேள்வி எழுப்பியிருக்கின்றது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் அமைச்சரான டலஸ் அழகப்பெரும, அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு இல்லாத பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமை…
-
- 3 replies
- 854 views
-
-
http://youtu.be/yFU29C6HSec http://naamtamilar.org/gallery/#/content/002_tamilnadu%20and%20other%20states/012_thenChennai/Geneva_India_Nilaipaadu_Maara_Perani/430665_312766068781362_119198598138111_870826_654591312_n.jpg
-
- 0 replies
- 549 views
-
-
இலங்கையின் கொலைக்களம் – 02 ஐ மார்ச் 14ஆம் திகதி வெளியிடஉள்ளது பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி அலைவரிசை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கையின் கொலைக்களம் – தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள் என்கிற இப்புதிய ஆவணப் படம் எதிர்வரும் 14.03.2012 அன்று சனல்4 தொலைக்காட்சி வெளியிட உள்ளது. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படுகின்ற நான்கு குற்றங்கள் தொடர்பாக இப்படத்தில் விசேடமாக ஆராயப்பட்டு உள்ளது. இக்குற்றங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்? என்றும் ஆய்வு செய்யப்பட்டு இருக்கின்றது. *யுத்த சூனிய பிரதேசத்தில் பொதுமக்கள் மீ…
-
- 30 replies
- 4.9k views
-
-
கொழும்பில் இனக்கலவரத்தைத் தூண்ட சில சக்திகள் முற்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார். ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதை முன்னிறுத்தி கொழும்பில் இனக்கலவரத்தை தூண்ட சில சக்திகள் முற்படுவதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும் தேசிய மொழிகள் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லுறவு தொடர்பான அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்தார். இன்று முற்பகல் அவரது அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சிறப்புரை நிகழ்த்திய அமைச்சர், தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் செயற்படுவதாக காண்பிப்பதற்கு முற்படும் தீய சக்திகளை இனம் காண வேண்டுமென வலியுறுத்தினார். படிப்பினைகள் ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்த நாடாளுமன…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஐ.நா மனித உரிமைச் சபையினை மையப்படுத்தி, தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்ட, தொடர் இராஜதந்திரச் செயற்பாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக நா.தஅரசாங்கத்தின் தகவல்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையொன்றின் அவசியத்தினை வலியுறுத்தி, ஐ.நா மனித உரிமைச் சபையிலும், பலலவேறு நாடுகளிலும் தொடர்சியான இராஜதந்திர மட்டத்திலான சந்திப்புக்களில், நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலல் தகவல்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்… பெப்பரவரி 20ம் நாள் முதல் ஐ.நா மனித உரிமைச் சபையில் பல்வேறு நாட்டு இராஜதந்திரகளுடன் சந்திப்புக்கள் இ…
-
- 1 reply
- 719 views
-
-
அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலை சர்வதேசம் உறுதிப்படுத்த வேண்டும். ஐ.நா குழுத்தலைவர் வலியுறுத்தல் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப் பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூறுவதை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் தலைவரான மார்சூகி தாருஸ்மன் வலியுறுத்தியுள்ளார். இவ்விவகாரம் தொடர்பிலான தனது கடப்பாட்டை சர்வதேச சமூகம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய காலம் இதுவெனக் குறிபிட்டுள்ள அவர், இப் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள சுயாதீனமான சர்வதேச பொறிமுறையயான்றை ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழு உருவாக்க வேண்டும…
-
- 0 replies
- 808 views
-
-
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தென்னாபிரிக்காவில் முக்கிய பேச்சுக்களை நடத்திக்கொண்டிருக்கும் அமேவேளை - சிறிலங்காவின் மனித உரிமைகளுக்கான விஷேட தூதுவர் மகிந்த சமரசிங்க ஜப்பானுக்கான தனது அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருவதில் அமெரிக்கா முழு முனைப்பாகச் செயற்படும் நிலையில் அதற்கு எதிரான வியூகங்களை வகுக்கும் நோக்கத்துடனேயே இவ்விருவரும் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது. ஜெனிவா கூட்டத் தொடரில் பங்குகொள்வதற்காகச் சென்றிருந்த சிறிலங்காவின் முக்கிய அமைச்சர் ஜீ எல் பீரிஸ் அங்கிருந்து நேரடியா…
-
- 1 reply
- 686 views
-
-
தயக்கம் தேவையில்லை! ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவாக வாக்களிக்குமா, எதிர்த்து வாக்களிக்குமா அல்லது வாக்கெடுப்பில் கலந்து கொள்வதைக் கடைசி நேரத்தில் தவிர்த்துவிடுமா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றன. 2009-ல் இதேபோன்ற நிலைமையை இலங்கை சந்திக்க நேர்ந்தபோது, இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்தியா மேற்கொண்டது. இலங்கை தனக்கு ஆதரவாக 29 வாக்குகளைப் பெற்று, சிக்கலில் இருந்து தப்பியது. இந்த முறையும் அதேநிலையை இந்தியா மேற்கொள்ளாது என்று உலக நாடுகள் கருதுகின்றன. இப்படி ஒரு தீர்மானத்தை, போர்க் குற்றங்கள் நிகழ்த்துவதில் எல்லாருக்கும் அண்ணனான அமெரிக்கா கொண்டுவருவதற்குக் காரணம், இலங்கையுடன் சீனா நெருக்கமாகி வருவதன…
-
- 1 reply
- 915 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் பின்னடித்து வருகிறார் என்று அறியவருகிறது. இந்த மாதம் முதல் வாரத்தில் கூட்டமைப்பின் தலைவர்களை மன்மோகன்சிங் சந்தித்துப் பேசுவார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தன ஆனாலும் அதற்கான திகதி இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்று தெரியவருகிறது. ஜெனிவாவில் இலங்கை மீது கொண்டு வரப்படவுள்ள பிரேரணையை ஆதரிக்குமாறு இந்தச் சந்திப்பில் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வலியுறுத்துவதெனக் கூட்டமைப்புத் தீர்மானித்திருந்தது. ஆனால், சந்திப்புக்கு இந்தியத் தரப்பு பின்னடித்து வருவது குறித்துக் கூட்டமைப்பு வருத்தமடைந்திருக்கிறது. இது தொடர்பில் தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியப் …
-
- 3 replies
- 818 views
-
-
இலங்கையில்ஆட்சி மாற்றத்தை மாத்திரமே மேற்கு நாடுகள் விரும்புகின்றன: தமரா இலங்கையில் ஆட்சி மாற்றமொன்றை மாத்திரமே மேற்கு நாடுகள் விரும்புகின்றன என ஜெனீவாவிலுள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம் கூறியுள்ளார். அவர்களின் உண்மையான இலக்கு ஆட்சி மாற்றம்தான். இலங்கையில் தாம் அடைய விரும்புவனவற்றில் இதுவும் ஒன்றாகும் என ஜெனீவாவிலுள்ள பல தூதுவர்கள் என்னிடம் கூறியுள்ளனனர். எனவே இதை நாம் மிகத் தீவிரமாக கருத்திற்கொள்கிறோம். கடந்த 10 வருடங்களில் தனது சொந்தப் பிரஜைகளை பாதுகாக்க முடியாதுள்ள அவர்கள் கூறும் இறைமை மிக்க ஏனைய நாடுகளில் தலையிடுவதை நியாயப்படுத்துவதற்காக பாதுகாப்பதற்கான கடப்பாடு – ஆர்2பி – எனும் கோட்பாட்டை அமெரிக்கா பின்பற்றி வருகிறது என அவர் க…
-
- 2 replies
- 980 views
-
-
நீதிமன்றுக்கு மதுபோதையில் சென்ற குருநகர் வாசியை நீதிமன்ற வளாகத்தில் மூன்று நாட்கள் துப்புரவுப் பணியில் ஈடுபடுமாறு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவமொன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் நடைபெற்றிருக்கிறது. சைக்கிளொன்றைத் திருடிய குற்றச்சாட்டில் ஊர்காவற்றுறைப் பொலிஸாரால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் ஒன்று செய்யப்பட்டிருந்தது. நீதிவான் ஆர்.எஸ் எம். மகேந்திரராஜா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த வழக்கில் குருநகரைச் சேர்ந்த பிரஸ்தாப நபர் மதுபோதையில் தள்ளாடிச் சென்றுள்ளார். அவரைக் கைதுசெய்த பொலிஸார் தடுப்பில் வைத்திருந்து மறுநாள் நீதிவான் முன் ஆஜர்படுத்தினர். சந்தேக நபர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து எச்சரிக்கை விடுத்த நீத…
-
- 1 reply
- 704 views
-
-
இலங்கை அரசுக்கு எதிராக கிளம்பும் சர்வதேச கண்டனங்களை திசை திருப்ப மக்களிடம் விதைக்கப்படும் நாட்டுப்பற்று - வ.திருநாவுக்கரசு ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 19 ஆவது கூட்டத் தொடர் அமர்வுகள் இடம்பெற்று வரும் வேளையில் இலங்கை அரசாங்கம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட நிலையில் உள்ளது எனலாம். குறிப்பாக அமெரிக்காவின் பிரேரணை தொடர்பாக மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பெரிதும் விசனம் அடைந்துள்ளது. அது இலங்கைக்கு எதிரான சதி எனச் சித்திரித்து சென்ற மாதம் 27 ஆம் திகதி கொழும்பிலும் நாட்டின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி இருந்தது. அன்று வடக்கு, கிழக்கிலும் குறிப்பாக யுத்த பூமியாக இருந்த வன்னியிலும் மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களில் இறங்கியிர…
-
- 0 replies
- 489 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடிதத்தினால் பாதிக்கப்படும் தமிழ் மக்களை யார் பாதுகாப்பார்கள்? இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச நாடுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இந்தச் சவாலை, நாடும் சிங்கள மக்களும் எதிர்கொள்வார்கள். ஆனால் இதனால் பாதிக்கப்படப்போகும் அப்பாவித் தமிழ் மக்களை யார் பாதுக்காப்பார்கள் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் நாட்டிற்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில் ஐந்து சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்படுகின்றன. அதே போன்று அமெரிக்கா மிகவும் மோசமான முறையில் இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றது. எவ்வாறாயினும் …
-
- 1 reply
- 884 views
-
-
பிள்ளையார் தலைமையில் யாழ்.செயலகத்தில் விசாரணை வன்னியில் உயிரிழந்தவர்களின் கோரிக்கையை அடுத்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த விநாயகர் தலைமையிலான குழுவினர், ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராக யாழ்ப்பாண செயலகத்தில் பேரணி நடத்திய அரச பணியாளர்களை இரகசியமான முறையில் சந்தித்து நிலைமையை கேட்டறிந்தனர். ஜெனிவாத்தீர்மானத்திற்கு எதிராக யாழ்.செயலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டது உண்மைதான். ஆனால் பயத்தின் நிமிர்த்தமே நாங்கள் அவ்வாறு கலந்து கொண்டோம். உண்மையில் எங்களுக்கு அதில் விருப்பமே இல்லை. எங்கள் கைகளில் பதாகைகளைத் தந்து தூக்கிப்பிடியுங்கள் என்றார்கள். பதாகைகளில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் தந்த பதாகைகள் மூலம் எங்கள் முகத்தை ம…
-
- 3 replies
- 1.5k views
-
-
இன்று (பங்குனி 5) ஜெனீவாவில் மனித உரிமைகள் காப்பகம் தனது முழுமையான நேரத்தை இலங்கை சம்பந்தமாகவே பேசியது Human Rights Watch (HRW) made a strong statement entirely on Sri Lanka today March 5th 2012 at the UN Human Rights Council General Debate (15th Meeting) Video link : http://www.unmultime...ts-council.html Full text of the HRW statement below Item 2: General Debate with the High Commissioner Thank you Madame President, In her statement, the High Commissioner noted that the report of the Sri Lanka Lessons Learned an…
-
- 1 reply
- 977 views
-
-
eohr@link.com.eg March 6, 2012 Dr. Yahia el Gamal, Honor President, EOHR, Cairo Dear President, I refer to the Egypt's Permanent Representative to the UN, Mr. Hisham Badr's recent address at the Human Rights Council's 19th session and he said 'Egypt has floated a plan at the UN Human Rights Council to resolve the Syrian crisis and stop bloodshed', while expressing his deepest concern over the deteriorating humanitarian situation in Syria. I have profound respect for the Egyptian ambassador for seizing the opportunity to tell the council and the international community that Syrian impunity is unjustifiable and all those respon…
-
- 2 replies
- 1.2k views
-
-
அனைத்துலக பெண்கள் நாளை முன்னிட்டு, பிரித்தானியாவில் இடம்பெறும் Million Women Rise எனும் பிரபல்யமிக்க, பெண்கள் பேரணியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து கொண்டது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கெடுத்துக் கொண்ட இந்த மாபெரும் பேரணியில், 'Raped' Abused, Widowed and Forgotten Tamil Women in Sri Lanka Still In Tears' என்ற வாசகங்களை தாங்கிய பதாதையுடன், தமிழீழத்தில் பெண்களின் இன்றைய நிலையினை வெளிப்படுத்தி, நா.த.அரசாங்கத்தின் பெண்கள் விவகாரங்களுக்கான அமைச்சு இதில் இணைந்து கொண்டிருந்தது. பெண்கள், சிறுவோர், முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் இதில் பங்கெடுத்திருந்தார். நீண்ட இந்தப் பேரணின் நிறைவில், தமிழீழத்தில் பெண்கள் எதிர்கொ…
-
- 3 replies
- 884 views
-
-
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் அமெரிக்காவினால் நிறைவேற்றப்பட்டால் அதனை தாம் ஆதரிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இணையதளத்தில் இந்தியா வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது. அதை விடுத்து மாறாக தனிப்பட்ட ரீதியில் நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பது பொருத்தமாக அமையாது.குறிப்பிட்ட சில நாடுகளுக்கு எதிராக நிறைவேற்றப்படும் பிரேரணைகளினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை…
-
- 2 replies
- 1.2k views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை குறித்து திருப்தி அடைய முடியாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் விவகாரம் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உரிய முறையில் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கலந்து கொண்ட அமெரிக்கப் பிரதிநிதி ஜோன் சீ. மாரிஸ் தெரிவித்துள்ளார். பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான திட்டங்கள் எதனையும் ஆணைக்குழு இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் நடவடிக்கைகயானது நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் முதன்மையானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உண்மையைக் கண்ட…
-
- 2 replies
- 788 views
-