ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
மக்களை வீதிக்கு இறக்காது சர்வதேசத்திற்கு நிரூபியுங்கள்; ஐ.தே.க 30 வருட கால யுத்தம் முடிவுக்குப் பின்னர் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதில்லை என்பதோடு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் எனவும் அரசு சர்வதேசத்திற்கு நிரூபித்துக் காட்ட வேண்டுமே தவிர ஐ. நாவிற்கு எதிராக மக்களை வீதியில் இறக்கிப் போராட்டம் நடத்துவது என்பது முட்டாள் தனமானது என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சர்வதேச ரீதியில் வலுப்பெற்றுள்ள நிலையில், இலங்கை அரசானது சர்வதேச சமூகத்தை வென்றெடுக்கக் கூடிய வகையிலான திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி செயற்பட வேண்டும். அத்துடன் சர்வதேச சமூகத்துடன் ம…
-
- 1 reply
- 536 views
-
-
இலங்கை இலங்கை காடுகளில் வாழும் அரிதான உயிரினங்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்ல முற்பட்ட 6 வெளிநாட்டு பிரஜைகள் புத்தளம், கற்பிட்டி ஆலங்குடா பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள், புத்தளம் மாவட்ட வன இலாகா அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜேர்மன், அவுஸ்திரேலியா, பெல்ஜியம், வெனிசுவேலா ஆகிய நாடுகளின் பிரஜைகளே கைதுசெய்யப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து அரிதான உயிரினங்கள் பல மீட்கப்பட்டதுடன், அவற்றைப் பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், மீண்டும் எ…
-
- 3 replies
- 566 views
-
-
இலங்கை புத்தளம், நாத்தாண்டிய மைலாவ பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர். நாத்தாண்டிய பிரதேசத்தை சேர்ந்த எதிரிகுலசேகர ருக்மல் ஹஷான் (வயது 42) என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேற்படி நபரின் மனைவி வெளிநாட்டில் பணிபுரியும் நிலையில் தனது 5 வயது மகளை உறவினர் ஒருவரின் வீட்டில் விட்டுவிட்டு மோட்டார் சைக்களில் பயணித்தபோதே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இவரது உடலில் 4 இடங்களில் துப்பாக்கி சூட்டு காயங்கள் காணப்படுவதாகவும் 9மி.மி ரக துப்பாக்கியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை …
-
- 1 reply
- 480 views
-
-
விஜயம் நம்பியார் தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- 2ம் இணைப்பு வெள்ளைக் கொடி ஏந்தி வருவோருக்கு அடைக்கலம் வழங்கத் தயார் எனஜனாதிபதி உறுதியளித்தார் – விஜயம் நம்பியார் தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- வெள்ளைக் கொடி ஏந்தி சரணடையும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிஉறுப்பினர்களுக்கு அடைக்கலம் வழங்கத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் என ஐக்கியநாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரின் விசேட அதிகாரி விஜய் நம்பியார் தெரிவித்துள்ளார். இன்னர் சிற்றி பிரஸ் ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைய விரும்பியதாக அண்மையில் சிரியாவில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மேரி கொல்வின், தொலைபேசிஊடாக தமக்கு அறிவித்தா…
-
- 4 replies
- 854 views
-
-
இலங்கையின் பாதுகாப்பு செயலாளரும் மகிந்தரின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷவின் தொலைபேசி உரையாடல் ஒன்று ஓட்டுக்கேட்க்க ப்பட்டதாக தற்போது புதிய சர்ச்சை ஒன்று ஆரம்பமாகியுள்ளது. 2009ம் ஆண்டு மே மாதத்தில் புலிகளின் அரசியல் தலைவர்களான ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர்… அரச படைகளிடம் சரணடைய விரும்பியது யாவரும் அறிந்ததே. இதற்கு அனுசரணை வழங்கிய ஊடகவியலாளர் மெரி கொல்வின் அவர்களும் சமீபத்தில் சிரியாவில் கொல்லப்பட்டார். புலிகளின் அரசியல் தலைவர்கள் சரணடைய விரும்பிய செய்தியை மெரி கொல்வின் அவர்கள் நம்பியார் ஊடாக கோத்தபாயவுக்குத் தெரிவித்துள்ளார். இருப்பினும் மே 17ம் திகதி கோத்தபாய ராஜபக்ஷ வன்னித் தலைமையகத்துடன் தொடர்புகளை மேற்கொண்டு சரணடையும் புலிகளின் தலைவர்களை சு…
-
- 2 replies
- 843 views
-
-
ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பங்கேற்பதாக அறிவித்து பின்னர் பங்கேற்பதில்லை என்று திடீரென்று கூட்டமைப்பு அறிவித்த நிலையில் அச்சுறுத்தலுக்கு அஞ்சியே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆதரவு தேடும் நடவடிக்கையில் சில ஊடகங்கள் செயற்படத் தலைப்பட்டிருக்கின்றன. நேற்று நண்பகல் கொழும்பு ஊடகம் ஒன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவா மாநாட்டில் பங்கேற்காது என்ற விடயத்தினை வெளிப்படுத்தியிருந்தது. குறித்த தகவல் வெளியாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே ஏனைய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இந்த விடயம் தொடர்பில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த விடயம் தொடர்பில் அறிவித்திருக்கின்றார். ஜெனீவா செல்வது தொடர…
-
- 5 replies
- 799 views
-
-
பெப்-27 ஐ.நா முன்றலில் அணிதிரளத் தயாராகும் தமிழினம் ! முள்ளிவாய்க்காலின் பின்னரான இலங்கைத்தீவின் இனநெருக்கடி விவகாரத்தில், ஐ.நா மனித உரிமைச் சபையின் 19வது இம்முறைக் கூட்டத் தொடர் முக்கிய விடயமாகவிட்டது. சிறிலங்கா அரசு மீதான சர்வதேசத்தினது அழுத்தங்கள், ஐ.நா மனித உரிமைச் சபையில் தீர்மானமாக வடிவம்பெறவுள்ள நிலை, சிங்கள தேசத்தை அச்சங்கொள்ள வைத்திருக்கும் சமவேளை, சர்வதேசத்திடம் நீதிகேட்டு நிற்கும் தமிழர்களுக்கு, தங்களின் நியாயப்பாட்டை நிலைநிறுவதற்கான ஒரு வாய்ப்பை இது ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை, சர்வதேசத்திடம் வலியுறுத்தும் வகையில், ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குகின்ற நாளில், நீதிக்காய் ஒன்றுபடுவோம்…
-
- 0 replies
- 433 views
-
-
ஜெனிவாவில் இலங்கை அரசிற்கான அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளிலும் அரச ஆதரவு ஆர்ப்பாட்டங்களை நடத்த அரசு தயாராகியுள்ளது. குறிப்பாக எதிர்வரும் திங்கட்கிழமை வன்னிப்பகுதியில் முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் ஆர்பாட்டங்களை நடத்த உள்ளுர் மக்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. வீடு வீடாகச் செல்லும் படையினர் பொதுமக்கள் அனைவரையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள நிர்ப்பந்தித்து வருவதுடன் பதிவேடுகளில் ஒப்பங்களை பெற்று செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்ப்பாட்டத்திற்கான முன்னணஜ ஏற்பாடுகளை செய்வதற்கான கூட்டம் கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சியிலுள்ள சுதந்திரக்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற…
-
- 1 reply
- 488 views
-
-
யாழ்.சிறுப்பிட்டியில் பருவமடைந்த தனது மூன்று பிள்ளைகளை 6 வருடங்களாக வற்புறுத்தி பாலியல் உறவு கொண்ட தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 6 வருடங்களாக இம் மூன்று பெண் பிள்ளைகளையும் பாலியல் உறவு கொண்ட இந் நபரின் தொல்லை தாங்க முடியாது 3 வருடங்களாக தமது அப்பம்மா வீட்டில் அடைக்கலம் புகுந்தனர் இப் பெண்கள். இருந்தும் தனது தாயார் இல்லாத வேளைகளில் அவ் வீட்டில் புகுந்து அங்கு நிற்கும் தனது பிள்ளைகளில் யாராவது ஒருவரை பாலியல் உறவு கொண்டு விட்டு சென்றுவிடுவாராம் இந் நபர். கடந்த செய்வாய்க்கிழமை தந்தையின் தொல்லை அதிகமாகக் காணப்படவே அதிகாலை 3 மணிக்கு அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர் இப் பெண்கள். தற்போது கைது செய்யப்பட்ட த…
-
- 20 replies
- 2.6k views
-
-
ஜெனிவா செல்வதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கத்தினதும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கடும் போக்காளர்களதும் கடுமையான அழுத்தங்களே காரணம் என குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்த நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கூட்டமைப்பு ஜெனீவா பயணமாவது என்ற முடிவே எடுக்கப்பட்டு இருந்ததாக எமக்கு தகவல் கிடைத்தது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொள்ளவில்லை. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே கலந்துகொண்டிருந்தார். இதில் ஜெனிவா மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து வலியுறுத்தி உள்ளனர். எனினும் இன்று இலங்கை நேரம் …
-
- 5 replies
- 2.2k views
-
-
கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் வெலிக்கந்தை பிரதேசத்தில் கடத்திச் செல்லப்பட்ட ஏறாவூரைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் இன்று (சனிக்கிழமை) உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏறாவூர் ஓடாவியார் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான எம்.ஐ.எம்.இப்றாஹீம் (வயது 42) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவர் கடந்த 4ம் திகதி வெலிக்கந்தை செவனப்பிட்டி பிரதேசத்திற்கு வியாபாரத்திற்காக சென்றிருந்த வேலை காணாமல் போனதாக அவரது குடும்ப உறவினர்கள் வெலிக்கந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். கருவாடு மற்றும் தேங்காய் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கென பதின்மூவாயிரம் ரூபா பணத்துடன் இவர் சென்றிருந்தார் என குடும்பத்தினர் …
-
- 4 replies
- 668 views
-
-
'ரோம் ஒப்பந்தத்தில் கையொழுத்திடாததன் மூலம் அரசாங்கத்தை பாதுகாத்துள்ளேன்' அரசாங்கம் கூறுவது போல் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று தண்டனை வழங்க முடியாது. நான் பிரதமராக இருந்த போது ரோம் ஒப்பந்தத்தில் கையொழுத்திடாததால் அவற்றை செய்ய முடியாது நான் இந்த அரசாங்கத்தை பாதுகாத்துள்ளேன் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கண்டி, கட்டுகஸ்தோட்டை நகரில் இன்று சனிக்கிழமை கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் தலமையில் ஐக்கிய தேசிய கட்சி கூட்டமொன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த அரசாங்கம் அதனை பொருட்படுத்தாது மக்களை…
-
- 3 replies
- 1.1k views
-
-
அமைதிக்காக்கும் நடவடிக்கை தொடர்பாக ஐ.நா பொதுச்செயலருக்கு ஆலோசனை வழங்கும் குழுவின் கூட்டத்தில் பங்கேற்க சிறிலங்காவின் பிரதிநிதி சவேந்திர சில்வாவுக்குத் தடைவிதிக்கப்பட்டது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூர்க்கத்தனமானது என்றும் இதன் பின்னால் உயர்மட்ட தொடர்பு இருப்பதாகவும் சிறிலங்கா கூறியுள்ளது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைதிகாக்கும் நடவடிக்கைக்கான ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தில் சவேந்திர சில்வா பங்கேற்பது பொருத்தமானது அல்ல என்று குழுவின் தலைவரான லூயிஸ் பிரெசெற் அம்மையார் கூறியிருந்தார். இதையடுத்து அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற சவேந்திர சில்வா, எதுவும் பேச அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், அவருக்கு கூட்டம…
-
- 2 replies
- 669 views
-
-
அபகீர்த்தியிலிருந்து நாட்டை காப்பற்ற அரசாங்கம் புத்திசாலித்தனமான செயற்பாடுகளைமுன்னெடுக்க வேண்டும் - கிரியல்ல ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகதொடுக்கப்பட்டுள்ள யுத்தத்திலும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவெற்றியீட்டிப்பார் என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டைப் பாதுகாக்கும் பொறுப்பு சரத் பொன்சேகாவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் ஜெனீவா அழுத்தங்களிலிருந்தும் அரசாங்கம் மீண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு உறுப்பினர்களை சந்திக்க சரத் பொன்சேகாவிற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யு…
-
- 1 reply
- 627 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சில பாராளுமன்றஉறுப்பினர்கள் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர். இலங்கை நிலைமைகள் குறித்து இந்தியாவிற்கு விளக்கம் அளிக்கும் நோக்கிலேயே இந்த விஜயம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம்அடைக்கலநாதன் மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்களையும், மத்தியஅரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சந்தித்து பேச்சுவார்த்தைநடத்த உள்ளனர். இலங்கையின் அரசியல் நிலைமைகள் குறித்து மாவட்ட ரீதியில்விளக்கமளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கபடுகி…
-
- 2 replies
- 710 views
-
-
பொதுமக்களுக்கு எள்ளளவும் இழப்பின்றி யுத்தம் செய்ததாக முழுப் பொய் சொல்லி வந்த சிறீலங்கா தற்போது 2009ம் ஆண்டு இறுதிப் போர் காலத்தில் சுமார் 9000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று இப்போ கணக்குக் காட்டியுள்ளது. ஜெனிவாவில் இருந்து எழக்கூடிய அழுத்தத்தின் தாக்கத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள.. உலகை ஏமாற்ற.. இப்படி ஒரு புள்ளி விபரத்தை அது வெளியிட்டு தன்னை நேர்மையானவனாக காட்ட முனைகிறது. ஏலவே ஐநா மூவர் விசாரணைக் குழு 40,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டது என்று வெளியிட்ட அறிக்கையை சிறீலங்கா முற்றாக நிராகரித்திருந்ததோடு.. பொதுமக்களுக்கு இழப்பின்றி வன்னியில் தான் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து விடுவிக்க.. மனிதாபிமானப் போர் புரிந்ததாக இனப்படுகொலையை மனிதாபி…
-
- 5 replies
- 643 views
-
-
சனல் 4 தொலைக்காட்சிக்கு பிரித்தானியாவில் 3 விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. றோயல் டெலிவிஷ சொசாயிட்டி எனப்படும் சமூக தொலைக்காட்சி அமைப்பு ஒன்று, வருடந்தோறும் வழங்கி வரும் விருதுகளில், இம் முறை 3 விருதுகளை சனல் 4 தட்டிச் சென்றுள்ளது. இதில் இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்துக்கும் விருது கிடைத்திருப்பது ஒரு சிறப்பு அம்சமாகக் கருதப்படுகிறது. இவ்விருதுகளை தட்டிச் செல்ல அல்ஜசீரா, மற்றும் BBC போன்ற சர்வதேச தொலைக்காட்சி நிறுவனங்கள் கடும்போட்டியில் இறங்கியிருந்தது. மேலும் பல சர்வதேச தொலைக்காட்சிகள் தமது ஆவணப்படங்களையும் இப் போட்டிக்காக அனுப்பியிருந்து. இதில் BBC மற்றும் அல்ஜசீராவின் ஆவணப்படங்களும் போட்டியில் சேர்த்துக்கொள்ளப்பட்டு, அவற்றுள் சனல் 4 ஆவணப்படும் மட்டும் தேர்ந்தெ…
-
- 2 replies
- 1.1k views
-
-
http://www.hrw.org/n...r-and-observer- கனேடிய தமிழ் வானொலியின் வணக்கம் கனடா அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள் இணைந்து கொள்ளும் முதன்மைச் செய்திகளின் ஆய்வரங்கம் 01/22/2012 What Tamils have to do?திரு வரதராஜன் செவ்வி தயவு செய்து கேளுங்கள்.(after Mr Selvam Adaikalanathan MP's interview) http://ctr24.com/new...ts/Default.aspx Please spread the news - write to Argentinian and other South American embassies, Spanish embassy, Caribbean embassies, and colleagues at work, friends, relatives, etc Get your children who are doing Spanish at school take this to the class for ''translation'' exercise, etc http://www.diariolat...0velazquez.html página …
-
- 35 replies
- 3.3k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும்திட்டத்தை ஒக்ரோபர் மாதம் வரையில் ஒத்தி வைக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது. அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முனைப்பு காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒரு தடவையும் உறுப்பு நாடுகளின் மனிதஉரிமை மீளாய்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் இந்த மீளாய்வு நடத்தப்பட உள்ளது. எனவே குறித்த காலப்பகுதியில் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில்மீளாய்வு நடத்தப்படும் வரையில், தீர்மானம் நிறைவேற்றும் திட்டத்தை ஒத்தி வைக்குமாறுஇலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் மனித உரிமை நி…
-
- 5 replies
- 978 views
-
-
பங்கெடுப்போம் ! நீதியை வென்றெடுப்போம் ! By naatham On 24 Feb, 2012 At 02:31 PM | Categorized As முதன்மைச்செய்திகள் | With 0 Comments மக்களின் பங்களிப்பை வேண்டி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர வேண்டுகோள் ! சிறிலங்கா தொடர்பில் ஒரு இறுக்கமான நிலைப்பாட்டை சர்வதேச எடுக்க முனைந்திருக்கும் இவ்வேளை, எமது விடுதலைக்கான நியாயப்பாடுகளை நிலைநிறுத்தவற்குரிய வாய்ப்புக்களை தவறவிடாது பணிகளை முன்னெடுக்க மக்களின் பங்களிப்பை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டி நிற்கின்றது. இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் நிதியமைச்சு அவசர அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. அறிக்கையின் முழுவிபரம் : ஈழத்தமிழினத்தின் மீது சிறிலங்கா அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்த இனவழிப்பு, சர்வதேச அரங்கி…
-
- 17 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்காவிடம் கையை விரித்து விட்டார். ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை ஜெனிவாவில் நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர். சிறிலங்காவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தவே அவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் அந்த முயற்சி கைகூடவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின் போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொறுப்புக் கூறுதல் தொடர்பான எந்தப் பரிந்துரைகளும் செய்யப்படாதது குறித்து சிறிலங்கா தரப்பிடம் நவநீதம்பிள்ளை கேள்வி எழ…
-
- 7 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவில் பதிலளிக்கவேண்டுமென இலங்கை அரசு தெரிவித்தது விடுதலைப் புலிகள் புரிந்த மனித உரிமை மீறல்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பதிலளிக்கவேண்டுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கேட்டுள்ளார். செய்தியாளர் மகாநாடு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜெனிவாவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டால், விடுதலைப் புலிகளின் மீறல்கள் குறித்துப் பதிலளிக்கவேண்டுமென கூறினார். விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட தமிழ் அரசியல்வாதிகளின் உறவினர்கள் ஜெனிவா சென்றுள்ளதாக அரசுக்குத் தகவல் கிடைத்துள…
-
- 6 replies
- 1k views
-
-
போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வெள்ளைக்கொடியுடன் சரணடைய முன்வந்த விவகாரத்தில், தனது பங்கு தொடர்பாக ஐ.நாவின் மூத்த அதிகாரியான விஜய் நம்பியார் தகவல்களை வெளியிட்டுள்ளார். சவிந்திர சில்வா விவகாரம் தொடர்பாக நேற்று நியுயோர்க்கில் செய்தியாளர் சந்திப்பில் இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளார் விஜய் நம்பியாரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த நம்பியார், “இனப்படுகொலையில் நான் சம்பந்தப்பட்டுள்ளதாக நீங்கள் கூறுவது உங்களில் உள்ள பிரச்சினை. இந்த விவகாரத்தில் மேரி கொல்வின் தொடர்புபட்டிருந்தார். தற்போது அவர் மரணமாகி விட்டார். எனது நிலையை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். சிரியாவின் கடந்தவாரம் கொல்லப்பட்ட பிரித்தானிய ஊடகவியலாளர் மேரி கொல்வின், சிறிலங்க…
-
- 12 replies
- 1.2k views
-
-
ஜெனீவா யுத்தத்திலும் பொன்சேகா வென்றிருப்பார்: ஐ.தே.க. நாட்டை பாதுகாப்பதற்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அனுமதிக்கப்பட்டிருந்தால் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரிலும் இலங்கை சிறந்த நிலையில் இருந்திருக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது. யுத்தத்தின் கடைசிக்கட்டத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆலோசனை கூறுவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவை சரத் பொன்சேகா சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென தான் கோரியதை அரசாங்கம் செவிமடுத்திருக்க வேண்டும் எனவும் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார். http://www.tamilmirror.lk/2010-07-14-0…
-
- 2 replies
- 638 views
-
-
இலங்கை அரசை கை விட்டது இந்தியா! ஆதரவு திரட்டித்தர மறுப்பு!- அதிர்ச்சியில் உறைந்துள்ள கொழும்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தனக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணையைத் தோற்கடிக்க உதவுமாறு இலங்கை அரசு இராஜதந்திர மட்டத்தில் இந்தியாவிடம் விடுத்த வேண்டுகோளை புதுடில்லி நிராகரித்துள்ளது என நம்பகரமாகத் தெரியவருகிறது. ஜெனிவா மாநாடு நெருங்கிவரும் நிலையில், அவசரமாகக் கொழும்பிலிருந்து புதுடில்லிக்குச் சென்ற உயர்மட்ட இராஜதந்திரிகள் குழுவொன்று, அந்நாட்டின் உயர்மட்டத் தூதுக்குழுவிடம் விடுத்த வேண்டுகோளை சாதகமான முறையில் பரிசீலிப்பதற்கு இந்தியா மறுத்துவிட்டது என்று அறியமுடிகின்றது. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை ஆதரிப்பதற்கு பலம்பொருந்திய நாடுகள் சில தீர்ம…
-
- 13 replies
- 1.7k views
-