Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. முன்னாள் படைத்தளபதி சரத் பொன்சேகாவை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அமைச்சர்கள் மட்டத்தில் கூட உருவாகியிருக்கும் நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்னதாக அவர் விடுதலை செய்யப்படக்கூடிய சூழ்நிலை உருவாகி வருவதாக கொழும்பு வார இதழ் ஒன்று தனது பதிப்பில் தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்துக்கு முன்னதாக பொன்சேகா விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்படும் நிலை ஏற்படலாம் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவர் கோரிக்கை விடுத்திருப்பதாக சில வாரங்களுக்கு முன்னர் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அவ்வாறு விடுதலை செய்யப…

  2. ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள பிரேரணைகளை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அரசு, இதற்காக முஸ்லிம் நாடுகளின் ஆதரவைத் திரட்டும் நோக்குடன் இராஜதந்திர மட்டத்திலான காய்நகர்த்தலையும் முன்னெடுத்து வருகிறது என நம்பகரமாகத் தெரியவருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.இலங்கைக்கு எதிராகக் கடும் போக்குடைய சில மேற்கத்தேய நாடுகள் தீர்மானமொன்றைக் கொண்டுவருவதற்கு உத்தேசித்துள்ளன. இந்த நிலையில், அவ்வாறு பிரேரணை வரும்பட்சத்தில் அதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதற்கு ஆபிரிக்க நாடுகளும் உள்ளூரத் தீர்மானித்துள்ளதால் கொழும்பு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது எனத் தெரியவருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் உட்பட முக்கியமான சில மாற்றங்களால் ஜெனிவாத் த…

  3. யாழ்.ஆயர் இல்லத்தில் நேற்று மாலை கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்களான சுங்ஸென் லியூங், ஜோன் டானியல் ஆகியேர் யாழ்.ஆயரைச் சந்தித்து யாழின் தற்போதைய அபிவிருத்தி நிலைப்பாடுகள் மற்றும் இலங்கை அரசின் அரசியல் தீர்வு விடையங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர் யாழ்.ஆயர் இல்லத்தில் நேற்று மாலை கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்களான சுங்ஸென் லியூங், ஜோன் டானியல் ஆகியேர் யாழ்.ஆயரைச் சந்தித்து யாழின் தற்போதைய அபிவிருத்தி நிலைப்பாடுகள் மற்றும் இலங்கை அரசின் அரசியல் தீர்வு விடையங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர் பேச்சுவார்த்தை நடத்தினர். யாழில் மீள்கட்டுமானங்கள், வீதி அபிவிருத்தி மற்றும் மிள்குடியேற்றம் போன்ற குறித்து விவாதிக்கப்பட்டதாக யாழ்.ஆயர் குறிப்பிட்டள்ளார். யாழில்…

  4. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உறவினர் நடேசன் குமரன், இராமேஸ்வரத்தில் உள்ள கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தபோது சில அமைப்புகளால் தாக்கப்பட்டுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ராஜபக்சேவின் சகோதரி கணவர் நடேசன் குமரன். இவர் இராமேஸ்வரத்தில் உள்ள கோவிலுக்கு அடிக்கடி வந்து தரிசனம் செய்வது வழக்கம். தற்போது அவருடைய வருகையை தெரிந்துகொண்ட சில அமைப்பினர், அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து நடேசன் குமரன் யாகம் ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது, அவரை சுற்றி வளைத்து தாக்கியுள்ளனர். நடேசன் குமரனை வெளியேற்றுமாறு சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக போலீசார் குவிக்கப்பட்டனர். நன்றி நக்கீரன்.கொம் http://www.nakkh…

  5. என்ன செய்யலாம் இதற்காக? நூலை தொடர்ந்து பென்னி குயிக் பதிப்பகத்தின் அடுத்த நூல் "அன்பார்ந்த சிங்கள மக்களுக்கு" நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னை புத்தக கண்காட்சியில் 08.01.12 அன்று மாலை 4 மணியளவில் நடை பெற்றது. இது. A4 அளவில் , முழுவதும் வண்ணத்தில், 36 பக்கங்களுடன் , 75 முக்கிய விளக்க படங்களுடன், கடித வடிவில் ஈழ நியாயத்தை விளக்கும் நூல் இது. நண்பர்கள்,உறவினர்கள் உட்பட எவரும் வாசித்து புரிந்து கொள்ளும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளர் இராம கிருஷ்ணன் , கவிஞர் காசி ஆனந்தன் , இயக்குனர் மணிவண்ணன், இயக்குனர் வ.கௌதமன் , எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், மற்றும் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர் நிகழ்வில் வெளியிடப்பட்ட மற்ற நூல்கள் : 1. ஈழமும் உலக மனிதாபிமானத்தின் ஆழம…

  6. இந்துகலாச்சார அமைச்சினால் நடாத்தப்பட்டுவரும் யோகாசன பயிற்சி வகுப்பின் இவ் வருடத்திற்கான ஆரம்ப நிகழ்வு ஞாயிறு (08.01.2012) அன்று நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஓய்வுபெற்ற நீதிபதி மு. திருநாவுக்கரசு கலந்து சிறப்பித்தார். அவருடைய யோகாசனம் தொடர்பான நகைச்சுவைப் பேச்சின் ஒரு பகுதி இங்கு தரப்பட்டுள்ளது. thx http://newjaffna.com/index.php

  7. இலங்கைத் தமிழர்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கு இந்தியா சிந்திக்க வேண்டும்: பார்த்தசாரதி இலங்கைத் தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்கான நிலையான தீர்வுக்காக இலங்கையிலுள்ள தமிழ் மக்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்த வேண்டியதைப் பற்றி இந்தியா ஆலோசிக்க வேண்டுமென முன்னாள் இந்திய இராஜதந்திர உத்தியோகத்தரான ஜி.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். இலங்கையுடனான அனுபவங்கள் இந்திய அமைதிப்படையும் அதற்கப்பாலும் என்னும் தலைப்பில் கருத்தரங்கொன்றில் பேசியபோதே அவர் இவ்வாறு கூறினார். இதற்காக வடக்கு, கிழக்கில் கைத்தொழில் பயிற்சி மற்றும் பொறியியல் நிறுவனங்களை அமைக்க வேண்டுமெனவும் ஜி.பார்த்தசாரதி குறிப்பிட்டுள்ளார். இதனால் இப்பகுதிக்கும் தமிழ் நாட்டுக்கும் பொருளாதார ஒன்றிணைவு …

    • 8 replies
    • 880 views
  8. பூரணைத் தினங்களில் சிலருக்கு பைத்தியம் ஏற்படுவதுண்டு எனவும் தனக்கு அவ்வாறான நிலை இல்லை எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார். அமைச்சர் மேர்வின் சில்வா மீது களனி பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தனக்கு கதிர்காம தெய்வத்தினதும் (முருகன்) விஷ்ணுவினதும் ஆசிர்வாதம் இருப்பதால் தனக்கு பைத்தியம் ஏற்படவில்லை எனவும் அவர் கூறினர். என்னை விரக்தியடையச் செய்வதற்காக பூரணைத் தினங்களில் எனக்குப் பயித்தியம் என களனியிலுள்ள சிலர் எனக்கெதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். நான் தெற்கில் கிருவபட்டுவவில் வளர்ந்தவன்.என்மீது குற்றம் சுமத்துபவர்களின் ஊழல்களுக்கு ஆவண ரீதியான ஆதாரம் என்னிடமுண்டு. நான் ஏதே…

  9. கூட்டமைப்புடன் பேசும் குழு அரச அங்கீகாரம் கொண்டதா? ஆக்கம்: சத்திரியன் அரச தரப்புக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுகள் குறித்த சர்ச்சைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தப் பேச்சுகளின் அடிப்படை தொடர்பாக கேள்வி ஒன்றை எழுப்ப வைத்துள்ளது அரசாங்கம். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான பேச்சுக்குழு உண்மையில், அரசின் சார்பில் பேசும் அதிகாரம் கொண்டதா என்பதே அந்தக் கேள்வி. இந்தக் கேள்வி எழுவதற்குக் காரணம் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பி.பி.சி. சிங்கள சேவைக்கு வழங்கிய பேட்டிதான். இந்தப் பேட்டியின் போது, அதிகாரப்பகிர்வு குறித்து அரசுக்குள் நிலவும் எதிர்ப்புகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிமல் சிறிப…

  10. இலங்கை அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ள நிலையில் இந்த வருடம் முதல் 50 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை ஏற்றுமதி செய்ய விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. 2015 ஆம் ஆண்டாகும் போது 2 இலட்சம் மெற்றிக் தொன் அரிசி ஏற்றுமதி செய்வதே அரசாங்கத்தின் இலக்காகும் என அமைச்சின் மேலதிகச் செயலாளர் சாந்த அமடியாகொட தெரிவித்தார். அரிசி ஏற்றுமதி இலக்குகள் அடங்கிய விவசாய அமைச்சின் யோசனை இன்று (10) திறைசேரிக்கு கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். அரிசி ஏற்றுமதி தொடர்பில் கவனிக்க விசேட குழு வொன்றும் நியமிக்கபட்டுள்ளது. அரிசி ஏற்றுமதிக்கென விசேட வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மன்னார், அம்பாறை, பொலன்னறுவை, ஹம்பாந் தோட்டை மற்றும் மகாவலி சீ, மற்றும் பீ வலயங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த வலயங்களில…

  11. மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியின் மாணவியான ஜெயகலா ஜெயரட்னம் அவர்கள், கடந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் மூன்று ஏ பெறுபேறினை பெற்றுள்ளார். மன்னார் கீரி கிராமத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஜெயகலா ஜெயரட்ணம் அவர்கள் மன்னார் மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும், இலங்கை மட்டத்தில் 9ம் இடத்தினையும் பெற்றுள்ளார். http://www.seithy.co...&language=tamil

  12. கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரி அதிபர் நியமனத்தில் மதப்பிரச்சினை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது [ கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரிக்கு புதிய அதிபராக மீண்டும் ஆர் உதயகுமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் ஏற்கனவே அதிபராக இருந்த மன்மதராஜன் என்பவர் ஓய்வுபெற்றதை அடுத்து அதிபர் தரமில்லாத அவரின் மனைவியான ஆசிரியை அதிபர் பதவியை கோரியதன் காரணமாக பிரச்சினை எழுந்தது இதனையடுத்து பிரச்சினையை தீர்க்க கல்வி திணைக்களம், பாணந்துறை முஸ்லிம் கல்லூரி ஒன்றில் கடமையாற்றிய முதலாம் தர அதிபர் தரம் கொண்ட உதயகுமார் என்பவரை இந்துக்கல்லூரியின் அதிபராக நியமித்தது. எனினும் முன்னாள் அதிபரின் மனைவியான குறித்த ஆசிரியை அதிபர் அலுவலகத்தின் சாவியையும் கொடுக்க மறுத்ததன் காரணமாக இன்று வரை ஒரு வா…

  13. பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டிய பின்னர் நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் நிலைப்பெறச் செய்து, மக்களின் வாழ்க்கையில் புதியதோர் நம்பிக்கையை ஏற்படுத்தி யிருக்கும் ஜனாதிபதி மஹிந்தராஜ பக்ஷ நல் எண்ணத்தை நிறைவேற்றுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட சகல தமிழ் அரசியல் கட்சிகளும் தேசப்பற்றுடன் ஒத்துழைக்க வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரும், ஈ. பி. டி. பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தினகரன் பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றில் வலியுறுத்தினார். அந்த பேட்டியில் அவர் மேலும் தெரிவித்ததாவது : கடந்த 30 ஆண்டு காலமாக துன்பத்திலும், துயரத்திலும் மூழ்கி கண்ணீர் மல்க வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு இன்றைய சமாதா…

  14. வெளிநாட்டுத் தூதுவர்கள் இந்து சமயத்தை ஓரங்கட்டுவது ஏன்? [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-01-07 12:15:22| யாழ்ப்பாணம்] யாழ்ப்பாணத்திற்கு வருகை தருகின்ற வெளி நாட்டுப் பிரதிநிதிகள், கத்தோலிக்க மதம் சார்பில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரை சந்தித்து குடாநாட்டு நிலைமைகளைக் கேட்டறிந்து கொள்வர். ஆனால், அவர்கள் எவரும் இந்து மதத் தலைமைகளை ஒருபோதும் சந்திப்பதில்லை. இதற்கான காரணம் என்ன என்று இந்து சமயத்தில் இருக்கக்கூடிய மதத் தலைமைகள் சிந்திப்பதும் இல்லை. வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்து என்ன பயன்? ஆகையால் நாங்கள் அதுபற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை என்று யாரேனும் கூறிக்கொள்ளலாம் . ஆனால் அதனை ஒரு தக்க பதிலாக ஏற்றுக் கொள்ள முடியாது. நேற்று முன்தினம்கூட பிரித்தானியத் த…

  15. கிளிறிசிடியா மரத்தில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆய்வு இலங்கையில் வெற்றி பெற்றுள்ளதாக சீன நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. இந்த ஆய்வை மேற்கொண்ட சீனாவின் ஹெனா சக்தி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சினிகியாங் சூ தலைமையிலான அதிகாரிகள் குழு இலங்கைப் பிரதமர் டி.எம்.ஜெயரட்ணவிடம் தனது ஆய்வு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில கிளிறிசிடியாவில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்த முழுமையான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. கிளிறிசிடியாவில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்றும், சீனாவின் உதவியுடன் வவுனியா, மொனராகல, அம்பாறை, எம்பிலிட்டிய, கண்டி, நுவரெலிய போன்ற இடங்களில் இந்த மின்உற்பத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் சீன …

  16. ஜெனீவா மாநாட்டின் போது இலங்கையை சர்வதேசப் பிடிக்குள் சிக்கவைப்பதற்கான சூழ்ச்சித் திட்டங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீவிரமாக வகுத்து வருகின்றது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடனடியாகத் தடைசெய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறிவிட்டது. எனவே, இனியும் அரசு மௌனம் காத்தால் அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் நூற்றாண்டு விழா அழைப்பை அரசு நிராகரித்துள்ள நிலையில், அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து சிறப்பிப்பதன் உள்நோக்கத்தை நாம் அறிவோம். ஜெனிவா மாநாடு நெருங்கிவரும் நிலை…

    • 2 replies
    • 562 views
  17. யாழ். புதிய சிறைச்சாலைக்கான கட்டட நிர்மானப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. யாழ். புதிய சிறைச்சாலைக்கான கட்டட நிர்மாணப் பணிகள் எதிர்வரும் 20ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஆர்.எம்.செனரத் பண்டார தெரிவித்துள்ளார். 2000 ற்கு மேற்பட்ட கைதிகளைத் தடுத்து வைக்கக்கூடிய வகையில் நவீன வசதிகளைக் கொண்டதாக இந்த புதிய சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான நிர்மானப்பணிகள் 2013ம் ஆண்டு பூர்த்தியடையும் எனவும் யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார். கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் ஏற்கெனவே நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.saritham.com/?p=47160

  18. தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரைகளைக் கொண்ட கடிதங்கள் மற்றும் பொதிகள் தொடர்பில் சர்வதேச தபால் ஒன்றியத்தில் சில விதிகளை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக சிறீலங்கா தபால் மா அதிபர் எம்.கே.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளின்படி எந்தவொரு முத்திரையும் அங்கத்துவ நாடொன்றினால் அங்கீகரிக்கப்பட்டால் அது சர்வதேச நாடுகளின் தபால் சேவைகளின்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கத்துவ நாடுகளில் முத்திரை ஒட்டப்பட்ட தபால்கள் எந்த நாட்டுக்கும் அனுப்ப முடியும். தமிழீழ விடுதலைப் புலிகளின் முத்திரை ஒட்டப்பட்ட தபால்களை சிறீலங்காக்கு அனுப்ப வேண்டாம் என பிரான்ஸ் தபால்துறைக்கு கூறியுள்ளதாக திசாநாயக்க தெரிவித்துள்ளார். உள்நாட்டு சட்டங்கள், விதிகளின்படியே செயற்படப் போவ…

  19. குழந்தைகள் யுத்தத்தில் ஊனமாக தந்தை வறுமையில் வாடும் குடும்பம் 33வயதுடைய தங்கராசா சந்திரமோகன் கொழும்பு மகசீன் சிறையில் இருக்கிறார். 4பிள்ளைகளும் சந்திரமோகனின் மனைவியும் தற்போது யாருடைய உதவிகளும் இல்லாமல் அன்றாட உணவுக்கே மிகவும் அவலப்படுகின்றனர். இறுதி யுத்தத்தில் சந்திரமோகனின் பிள்ளைகளும் எறிகணை வீச்சில் படுகாயமடைந்துள்ளனர். 5வயதுப் பிள்ளையொன்றும் உயிரிழந்துள்ளது. மற்றைய பிள்ளைகளும் உனமுற்ற நிலமையில் வாழ்ந்து வருகின்றனர். வாழ்வதற்கு வீடுமின்றி உறவினர் வீடுகளில் வாழ்ந்து வருகிற தனது மனைவி பிள்ளைகளுக்கு உதவுமாறு சந்திரமோகன் நேசக்கரத்தின் மனிதநேயம் மிக்க உதவும் உறவுகளுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். கடிதம் வருமாறு :- உதவ விரும்புவோர் நேரடியான தொடர்பு…

    • 0 replies
    • 789 views
  20. நாட்டில் நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இரத்து செய்யப்பட வேண்டுமென ஜே.வி.பி கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையையும் இரத்து செய்ய வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது என ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல, பெலவத்தையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விருப்பு வாக்கு முறைமை குறித்த மக்களின் அதிருப்தியை, அரசாங்கம் தேர்தல் சட்டதிருத்தங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றது. உரிய ஜனநாயக முறையில் தேர்தல் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார். அரச…

  21. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தா மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்கப்போவதில்லை என கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவின் மீள்நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்காக பிக்குகள் மற்றும் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதன்போது நிதியுதவியை கையளித்தனர். தம்மீது தாக்குதல் நடத்தியமை துரோகமான செயல் என ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்தார். இந்தத் தாக்குதலை நடத்துவதற்கு வழிகாட்டுதலாக இருந்த அனைவரும் மஹிந்த ராஜபக்ஸ…

  22. அதிகாரங்களை கொடு...! அல்லது ரத்து செய்...! ; ஜயலத்தின் கோரிக்கை நேர்மையா, தந்திரமா? ஆக்கம்: M.S.M. ஐயூப் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் ஜயலத் ஜயவர்தன, அண்மையில் ஊடகப் பேட்டியொன்றின்போது இனப்பிரச்சினை விடயமாக மிக முக்கிய கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். அரசாங்கம் ஒன்றில் 13ஆம் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளுக்குரிய காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும். அல்லது அரசியலமைப்பில் இருக்கும் அந்த அதிகாரங்களை தமது நாடாளுமன்ற பலத்தைக் கொண்டு இரத்து செய்துவிட வேண்டும் என்பதே அவரது வாதமாக இருந்தது. இதன் மூலம் அவர் அரசியலமைப்பில் இருக்கும் மாகாணங்களுக்கான பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை இரத்த…

    • 0 replies
    • 729 views
  23. உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் ஒன்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரை இறங்கியது. அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திலிருந்து துபாயை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த விமானம் எரிபொருள் தேவைக்காக கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறங்கியது. ஏ 380 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் இன்று அதிகாலை 4.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு. ஒரு மணித்தியாலம் தரித்து நின்றதன் பின்னர் மீண்டும் புறப்பட்டுச் சென்றுள்ளது. http://www.saritham.com/?p=47124

  24. தனது சக படை வீரரைச் சுட்டுக் கொன்று விட்டுத் தன்னைத்தானே சுட்டு தறகொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று முல்லைத்தீவு 59 ஆம் இராணுவ முகாமில் இடம்பெற்றுள்ளது. இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்கத்தையடுத்தே ஒரு படை வீரர் தனது சகாவைச் சுட்டுக் கொன்று விட்டு தான் தறகொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://www.saritham.com/?p=47127

  25. யாழ். குடாநாட்டில் பல பகுதிகளிலும் “தைபஸ்” எனப்படும் ஒட்டுண்ணிக் காய்ச்சலின் தாக்கம் வேகமாகப் பரவி வருகின்றது. இதனால் கடந்த வருடம் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த டிசெம்பர் மாதத்தில் மட்டும் 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; யாழ். குடாநாட்டில் “தைபஸ்” நோயின் தாக்கம் திடீரென அதிகரித்துள்ளது. இந்த நோய் உண்ணி தெள்ளு மற்றும் ஒரு வகைப் பாலுண்ணியாலேயே காவப்படுகின்றது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் தைபஸின் ஒரு வகையான சிறப்(scrub) என்னும் கிருமி ஊடாகவே யாழ்ப்பாணத்தில் இது பரவி வருகின்றது. பற்றைகள் முட்புதர் காடுகள், புல்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.