Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 25 JAN, 2024 | 01:44 PM யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நடைபவனி நேற்று (24) காலை திருநெல்வேலி சந்தி முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் வரை இடம்பெற்றது. வட மாகாண சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த நடைபவனி திருநெல்வேலி சந்தியில் ஆரம்பமாகி, பலாலி வீதி வழியாக பரமேஸ்வரா சந்தியினை அடைந்து, அங்கிருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலை அடைந்தது. இந்த விழிப்புணர்வு நடைபவனியில் வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன், நல்லூர் பிரதேச செயலாளர் யசோதா உதயகுமார், நல்லூர் ச…

  2. Published By: VISHNU 24 JAN, 2024 | 07:41 PM (எம்.மனோசித்ரா) வடக்கை அடிப்படையாகக் கொண்டு மீன்பிடித்துறை சார் முதலீட்டு வலயத்தை ஆரம்பிப்பது தொடர்பில் வியாழக்கிழமை (25) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சீன நிறுவனமொன்றுடன் விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார். அத்தோடு உள்நாட்டு டின்மீன் உற்பத்தியாளர்களின் மேம்பாட்டைக் கருத்திற் கொண்டு டின் மீன் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கும் அண்மையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவ…

  3. ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. நள்ளிரவு கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் பயனித்த வாகனத்தில் 4 பேர் பயனித்துள்ளதாகவும் அவர்களில் அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் பலியாகியுள்ளதாக ராகம வைத்தியசலையில் இருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. https://www.madawalaenews.com/2024/01/blog-post_48.html

  4. 24 JAN, 2024 | 07:39 PM இராணுவத்தின் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்.டபிள்யூ.பீ.ஆர்.எஸ்.பீ. என்.டி.யூ. இராணுவ பரசூட்டில் தனது நிபுணத்துவம் மற்றும் அறிவின் மூலம் கடந்த திங்கட்கிழமை 22ஆம் திகதி இராணுவ பரசூட் வீரராக தகுதி பெற்றார். இராணுவ பரசூட் வீரராக மாறுவதற்கான தளபதியின் பயணம் குடாஓய கொமாண்டோ படையணி பயிற்சிப் பாடசாலையில் இடம்பெற்றது. திங்கட்கிழமை இராணுவத் தளபதி, மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையணியின் 18 படையினர் மற்றும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 14 படையினர் உட்பட ஏனைய பங்கேற்பாளர்களுடன் உஹான விமானப்படைத் தள ஓடுபாதையில் எம்.ஐ-17 ஹெலிகொப்டரில் விமானத்தில் சென்றார். தளபதி உஹான விமானப்படை தளத்தின் துளி மண்ட…

  5. 24 JAN, 2024 | 05:39 PM முல்லைத்தீவு துணுக்காய் பாணலிங்கேஸ்வரம் அருள்மிகு நர்மதா நதீஸ்வரர் சிவன் கோவிலின் காணிப் பிரச்சினை தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்தார். ஆலயத்தின் நான்கு திக்கு இராஜ கோபுரங்களுக்குமான அடிக்கல் நடும் நிகழ்வும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவும் இன்று (24) இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் கலந்துகொண்டார். இதன்போது, ஆலய காணிப் பிரச்சினை உள்ளிட்ட சிக்கல்கள் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினர் ஆளுநரிடம் தமது கருத்துக்களை தெரிவித்தனர். அதற்கு பதிலளிக்கையிலேயே ஆளுநர், நர்மதா நதீஸ்வரர் சிவ…

  6. Published By: DIGITAL DESK 3 24 JAN, 2024 | 05:38 PM நாட்டை பொருளாதார ரீதியாக வங்குரோத்தாக்கி, நாட்டு மக்களை மிகவும் நிர்க்கதியான எதிர்காலத்திற்கு ஆளாக்கிய தரப்பினர் யார் என்பதனை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பின் ஊடக வெளிக்கொணரப்பட்டது. இவ்வாறு வெளிக்கொணரப்பட்ட கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச, பசில் ராஜபக்ச, அஜித் நிவாட் கப்ரால், எஸ்.ஆர்.ஆடிகல, பி.பி. ஜயசுந்தர, டபிள்யூ.டி.லக்ஷ்மன் மற்றும் சமந்தா குமாரசிங்க போன்றவர்களைத் தவிர பொறுப்புக் கூற வேண்டிய மேலும் பலர் இந்த அரசாங்கத்தில் உள்ளனர். இந்த ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகளுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என வரிச்சுமைக்கு ஆளான மக்கள் கேள்வ…

  7. 24 JAN, 2024 | 04:12 PM ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐ.நா.வின் பெண்கள் அமைப்பும் மற்றும் கிறிசாலிஸ் நிறுவனனும் இணைந்து நாட்டில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டபெண்கள் தலைமையிலான 600 சிறு மற்றும் நடுத்தர தொழிவல் நிறுவனங்களுக்கு வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு 110 மில்லியன் ரூபா மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 'நெருக்கடியில் உள்ள பெண்களுக்கு அதிகாரமளித்தல்' என்ற நோக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரியில் ஆரம்பிக்கப்பட்ட ஒருவருட திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பெண்கள், சிறுவர்கள் விவகாரங்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் ஒத்துழைப்புடன் ஐ.நா. பெண்கள் அமைப்பு மற்…

  8. சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் தொடர்பில் தகவல் தருவோருக்கு பண வெகுமதிகள் வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். நாடு தழுவிய ‘யுக்திய’ நடவடிக்கைக்கு இணங்க பணச் சலுகைகளை அறிமுகப்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதேச அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்தநிலையில் தகவல் அளிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, தானியங்கி துப்பாக்கிகளுடன் (T56, AK47, M16, SAR 80, T81) சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ய உதவினால் 250,000 ரூபா வழங்கப்படும். சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு தானியங்கி துப்பாக்கியை…

  9. 7 மீனவர்களுக்கு மரண தண்டனை : மேல் நீமன்றம் உத்தரவு. மீன்பிடி கப்பலை கடத்தி மூன்று மீனவர்களை கொலை செய்த வழக்கில் 7 மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு ஒக்டோபர் 15ஆம் திகதி இலங்கைக் கடற்பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டவர்களை ஏற்றிச் சென்ற ‘தேஜான்’ என்ற மீன்பிடிக் கப்பல் கடத்தப்பட்டு மூன்று மீனவர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் பல மீனவர்கள் படுகாயமடைந்தனர். குறித்த வழக்கு இன்று (24) கொழும்பு உயர் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போது நீதிபதி ஆதித்ய பட்டபாண்டிகே 7 மீனவர்களுக்கு உரிய உத்தரவை பிறப்பித்துள்ளார். வழக்கின் 10வது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த பிரதிவா…

  10. கிளிநொச்சியில் அதிகாலை நடந்த கோர விபத்து! கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச பேருந்துடன், கொழும்பியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எதிரே பயணித்த வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்து, விதியில் பயணித்த மாடுகளுடன் மோதிய பின் வேனுடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் வவுனியாவை சேர்ந்த 50 வயதுடைய திருமணி திருச்செல்வம் எனும் பெண் உயிரிழந்துள…

  11. நடிகைகளால் சிக்கலில் சிக்கிய அமைச்சர் ஜீவன்! ஹட்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் தென்னிந்திய நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா மேனன் மற்றும் மீனாட்சி (பிங்கி சர்க்கார்) ஆகியோர் கலந்துகொண்டமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சர்ச்சைக்குரியவராக மாறியுள்ளார். அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை அறிவித்த போதிலும், இந்த தென்னிந்திய கலைஞர்கள் வரி செலுத்துவோரின் பணத்தைப் பயன்படுத்தி நிதியுதவி செய்தார்களா? என்று அவரைக் கேள்வி எழுப்பும் அவரது அரசியல் எதிரிகளின் விமர்சனத்திற்கு அவர் ஆளாகியு…

  12. செங்கடலிற்கு கப்பலை அனுப்புவது தொடர்பில் பேச்சுவார்த்தை! அரசாங்கம் அனுமதி வழங்கியதும் செங்கடலிற்கு கப்பலை அனுப்ப இலங்கை கடற்படை தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை செங்கடலிற்கு கப்பலை அனுப்புவது குறித்து இன்னமும் உயர்மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றனதுடன் எந்தநேரத்திலும் கப்பலை அனுப்ப தயாராகவுள்ளோம் எனவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது மேலும் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கும் கடற்படை தளபதி உட்பட்டவர்களிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் திகதி தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1367012

  13. மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும்-தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிக்கை! மாகாண சபைகளின் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் நிதியில்லை என்றால் அந்நிதியை இந்தியா வழங்க வேண்டும் என இலங்கைக்கான இந்தியாவின் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தவைர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பிலே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை இனப்பிரச்சினைகான நிரந்தரமான தீர்வினை வழங்குவதற்கு இந்த…

    • 3 replies
    • 388 views
  14. நால்வரால் பிக்கு சுட்டுக்கொலை. கம்பஹா – மல்வத்துஹிரிபிட்டிய – கஹதான ஸ்ரீ ஞானராம விகாரையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு சுட்டு கொல்லப்பட்டவர் வெலிவேரிய கெஹல்கந்த பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் 45 வயதுடைய கலபாலுவாவே தம்மரதன தேரர் என பொலிஸார் தெரிவித்தனர். மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு டி-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக ஹோண்டா ஃபிட் காரில் வந்த நான்கு சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தெரணம கம்பஹா வைத்தியசாலையில் …

  15. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர். வைத்தியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை இந்த மாதம் முதல் 35,000 ரூபா முதல் 70,000 ரூபா வரை அதிகரிப்பதாக அரசாங்கம் முன்னதாக உறுதியளித்திருந்தது. எவ்வாறாயினும், குறித்த மேலதிக கொடுப்பனவை வழங்காதிருப்பதற்கு தற்சமயம் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதன் அடிப்படையில், தாம் நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அதேநேரம், வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபா மேலதிக கொடுப்பனவு தமக்கும் வழங்கப்பட வேண்டுமென கோரி…

  16. பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் , அதிபர்களின் நேர்முகப்பரீட்சையின் பின்னர் மாணவர்களை தெரிவு செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையின் பிரகாரம் , குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மாத்திரம் ஆறாம் தரத்திற்கு மாணவகளை இணைத்துக்கொள்ளும் செயற்பாடு நடைபெறும் எனவும் குறித்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், 2024 ஆம் ஆண்டில், தரம் 1, 5 மற்றும் 6 தவிர இடைநிலை வகுப்புகளுக்கு க.பொ.த. மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்கள் (உயர்தரம் உட்பட) பாடசாலைகளுக்க…

  17. அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவின் படுகொலை தொடர்பில் கருத்து வெளியிடுவதை தவிர்த்துக் கொள்வதாக அக்கட்சியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். அத்துரலியே ரதன தேரருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றில் ஆஜராகாமல் இருந்த அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேராவுக்கு நீதவான் எதிர்வரும் ஜூன் 4 ம் திகதியன்று அழைப்பாணை விடுத்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியஅத்த நுழைவாயிலுக்கு அருகில் நேற்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.…

    • 2 replies
    • 477 views
  18. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய சதுரங்க மேடைகளில் நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ளும் வாப்புக்களை தன்வசமாக்கி சாதித்துக் காட்டியுள்ளார் யாழ்ப்பாணத்தின் இளம் சதுரங்க நாயகன் வேணுகானன் நயனகேஷன் காமன்வெல்த் சதுரங்க சம்பியன்ஷிப், ஐரோப்பியாவின் அல்பானியா நாட்டில் நடைபெறவுள்ள உலக கேடட் சம்பியன்ஷிப், தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ள உலக இளைஞர் சதுரங்க சம்பியன்ஷிப், கசகஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ள ஆசிய இளைஞர் சதுரங்க சம்பியன்ஷிப், மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள மேற்கு ஆசிய இளைஞர் சதுரங்க சாம்பியன்ஷிப் ஆகிய போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார். மிக சிறுவயதில் சதுரங்க போட்டி மேடைகளை கலங்கடித்து வரும் அவர் அண்மையில் கொழும்பு தர்மபால வித்தியாலயத்தில் நடைபெற்ற…

  19. பராமரிப்பு நிறுவனங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஜனவரி மாதம் முதல் 2000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாவட்ட செயலாளர்கள் ஊடாக இக்கொடுப்பனவை தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதுவரையில் பயனடைந்த 16,146 பேருக்கு, அதாவது பிரிவேனா, சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், பராமரிப்பு இல்லங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் என 16,146 பேருக்கு இந்தப் பணம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/289025

  20. இந்தியாவின் முதன்மையான பொறியியல் நிறுவனமான இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) இந்த ஆண்டு கண்டியில் கிளை வளாகத்தைத் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வெளிநாடுகளில் ஐஐடிகளின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகும், அதே நேரத்தில் புதிய வளாகத்திற்கான முன்மொழிவு கடந்த நவம்பரில் 2024 வரவு -செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தனது அமைச்சினால் கல்வியாளர்கள் குழுவொன்றை மெட்ராஸ் ஐஐடிக்கு அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளார். வளாகத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலுக்காக அடுத்த மாதம் இலங்கைக்கு ஐஐடியில் இருந்து குழு வருவதற்கு முன்னதாக இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்கள். ஐஐடி மெட்ராஸ் குழு இலங்கையி…

  21. Published By: VISHNU 22 JAN, 2024 | 07:47 PM ஆர்.ராம் வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகான நிரந்தரமான தீர்வினை வழங்குவதற்கு அழுத்தமளிக்குமாறு இலங்கைக்கான இந்தியாவின் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தவைர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், வடக்கு,கிழக்கு மாகணங்களின் சபைகளுக்காகவாவது தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினை வலியுறுத்துமாறு கோரியதோடு, அதற்கு இலங்கை அரசாங்கம் நிதியில்லை என்று கூறுமாக இருந்தால் அந்நிதியை இந்தியா வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ் …

  22. Published By: DIGITAL DESK 3 22 JAN, 2024 | 06:41 PM இவ்வருடம் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு ஆங்கில மொழி உட்பட தகவல் தொழில்நுட்பம் பற்றிய அறிவுடன் தொழில் கல்வியை கற்பிக்கும் வேலைத்திட்டம் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். உயர்தரக் கல்வியினை நிறைவு செய்யும் மாணவர்களை தொழில் கல்வியை நோக்கி வழிநடத்தும் நோக்கில், நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 299 பாடசாலைகளில் இந்தத் தொழிற்பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இவ்வருடம் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பரீட்சைக்குத் தோற்றியுள்ள மாணவர்கள் பெப்ரவரி 9 ஆம் திகதிக்கு முன்னர் இந்த…

  23. 22 JAN, 2024 | 07:44 PM இலங்கையில் 91வீத குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார். தட்டம்மை நோய் இந்நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த காலங்களில் தட்டம்மை நோய் மீண்டும் தலைதூக்கியதையடுத்து, இவ்வாறான தடுப்பூசித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பதிரண, “நோய்த் தடுப்ப…

  24. 22 JAN, 2024 | 05:59 PM பதில் பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமிப்பதைத் தடுக்குமாறு கோரி கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, நீதிமன்றத்தில் தனது வாதங்களை முன்வைத்தார். இந்நிலையில் இந்த மனுவை எதிர்வரும் 31 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்க…

  25. கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறியும் நோக்கில் இலங்கை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள CCTV நிகழ்ச்சி இன்று (ஜனவரி 22) முதல் அமுலுக்கு வருகிறது. இதன்படி, கொழும்பில் உள்ள 33 முக்கிய இடங்களில் பொலிஸாரின் சிசிடிவி கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் அடையாளம் காணப்படவுள்ளனர். முதல் நடவடிக்கையாக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களின் அபராதத் தாள்கள் வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களின் முகவரிக்கு அனுப்பப்படும். இதேவேளை, கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறியும் பொலிஸாரின் சிசிடிவி திட்டத்திற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் (LPBOA) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.