ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143340 topics in this forum
-
மட்டக்களப்பில் தமிழர்களின் காணிகள் பறிபோகின்றன: செல்வராசா எம்.பி நமது சமுகம் தற்போது செல்லொணாத் துயரத்தினைச் சுமர்ந்வர்களாக இருக்கின்றார்கள். துற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் தழிழர்களின் காணிகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. இது மட்டக்களப்பினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் கவனித்து வருகின்றனர். இந்நிலைமை தொடருமாக இருந்தால் திருகோணமலை, அம்பாறை போன்ற பிரதேசங்கள் பறிபோன நிலைமையே மட்டக்களப்புக்கும் ஏற்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார். மட்/கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட…
-
- 1 reply
- 515 views
-
-
கடந்த ஒக்டோபர் மாதத்திற்கான இலங்கையின் பணவீக்கம், மேலும் சரிவு கண்டுள்ளதாக மத்திய வங்கியின் புள்ளிவிபரத் தினைக்களம் நேற்று தெரிவித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டியின் ஆண்டுக்காண்டு மாற்ற விகிதத்தின் அடிப்படையில் கணிக்கப்படும் இலங்கையின் பணவீக்கம், சென்ற ஒக்டோபர் மாதத்தில் ஐந்து புள்ளி ஒரு சதவீதம் என வீக்கம் கண்டுள்ளது. இதுவே முன்னைய மாதத்தில் (செப்தொம்பர்) ஆறு புள்ளி நான்கு சதவீதம் என உயர்வாக வீக்கமடைந்து காணப்பட்டதுடன் இலங்கையின் பணவீக்கம், கடந்த யூன் மாதத்தில் இருந்து வீழ்ச்சி கண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்த மாதத்திற்கான இலங்கையின் பணவீக்கம, மீண்டும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக அரிசி மற்றும் மரக்கறிக…
-
- 6 replies
- 1.8k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமரிக்காவில் – இன்னொரு முறை இரத்தக்கறை : அஜித் இரத்தக் கறைகளோடு அறுபது ஆண்டுகள் கடந்து போயின. தென்னாசியாவின் பேசப்படாத மூலையில் மௌனமாய் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் பேரினவாத இரத்தப்பசிக்கு இரையான வரலாறு கடந்துபோன ஆறு தசாப்தங்களின் கறைபடிந்த வரலாறு. தமிழ்ப் பேசும் மக்கள் மீது திணிக்கப்பட்ட இரணுவ ஒடுக்கு முறையை பேரினவாத்தோடும் அதன் எஜமானர்களோடும் பேசித் தீர்த்துகொள்ள முடியாது என்பதற்கு தமிழ்ப் பேசும் மக்களுக்கு நீண்ட அரசியல் பாடம் தேவைப்பட்டிருக்கவில்லை. இன்றைக்கு வரைக்கும் இனச்சுத்திகரிப்பிற்கும், பாசிசத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும், ஒடுக்குமுறைக்கும் எதிராக மக்கள் போராடவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கொண்டிருக்க…
-
- 12 replies
- 2.6k views
-
-
யாழ் மாவட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மேலும் குறைவடையவுள்ளது. யாழ். மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை, எதிர்வரும் ஆண்டில், மேலும் சுமார் 25 ஆயிரம் பேரால் குறைவடையுமெனத் தெரியவருகிறது. தற்போது முதற்கட்டமாக வெளியிடப்பட்டிருக்கும் வாக்காளர் பெயர்ப் பட்டியலில், 16 ஆயிரத்து 999 பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அதேவேளை 41ஆயிரத்து 715 பேர் நீக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 24 ஆயிரத்து 716 பேரினால் மேலும் குறைவடையவுள்ளது. இவ்வாண்டு ஜூன் மாதத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட 2011ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்புப் பணிகளை முன்னிட்டு விநியோகிக்கப்பட்ட படிவங்களில் இருந்து இந்தத் தகவல்கள் பெறப்பட்டுள்ளன. வடக்கு, கி…
-
- 1 reply
- 542 views
-
-
பிரித்தானியாவில் மன்செஸ்ரரில் 2009, 2010 காலப்பகுதியில் கர்ப்பிணிப் பெண்கள் பரிசோதனைக்கு வந்தபோது அவர்களை பாலியல் முறைகேடு செய்துள்ளார் ஓர் சிங்கள வைத்தியர். டாக்டர் பிரியந்த பெரேரா என்பவரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டார். எனினும் இவர் தான் சுற்றவாளி எனக்கூறி வாதிட்டார். ஆனால் இந்த டாக்டரை விசாரணை செய்த பிரிட்டனின் மருத்துவ கவுன்சில் இவரது நடவடிக்கை காரணமாக பணி இடை நீக்கம் செய்துள்ளது. . மகப்பேற்று மருத்துவரான இவர் இளம் கர்ப்பிணி தாய்மார் பரிசோதனைக்காக சென்றவேளை அவர்களை பரிசோதனை செய்வதாக கூறி வித்தியாசமாக அணுகியதாகவும் கூடவே பாலியல் கருத்துப்பட பேசியதாகவும் முறைப்பாடு செய்தனர் கர்ப்பிணி தாய்மார்கள். ஆகவே இவர் தொழில்சார் விதிமுறைகளை மீறியதாகவும், தொடர்ந்தும் பணிகளை செய…
-
- 13 replies
- 1.6k views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான இளைஞன் 13 வருடங்களின் பின் மேல்நீதிமன்றத்தால் விடுதலை 1998ஆம் ஆண்டு மாங்குளம் மூன்று முறிப்புப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து ஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு எதிராகப் போரிட்டாரென்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இளைஞரொருவர் 13 வருடங்களின் பின்னர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞன் 13 வருடங்களின் பின்னர் யாழ். மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். கிளிநொச்சி திருநகர் தெற்கை சேர்ந்த நவரத்தினம் பாலசிறி என்ற இளைஞரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவராவார்.இவர் காலி மற்றும் யாழ். சிறைச்சாலைகளில் விளக்கமறியலிலும்…
-
- 0 replies
- 697 views
-
-
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹலரி கிளிண்டனின் தாயார் ட்தொர்தி ரொட்ஹாம் (92) நேற்றுக் காலமானார். ரொட்ஹாம் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் 1919-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் திகதி பிறந்தார்.. கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் தனது 92ஆவது வயதி்ல் மரணமானார்.. ஏற்கனவே தாயார் சுகவீனமடைந்த காரணத்தினால் ஹிலரிகிளிண்டன் தனது இங்கிலாந்து மற்றும் துருக்கிக்கான பயணத்தை இரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது. Re .... எங்கட சனங்கள் அல்லது அமைப்புக்கள் கொண்டலன்ஸ் அனுப்பினால் நல்லது.
-
- 4 replies
- 1.2k views
-
-
சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், உயிருக்காக சிறையில் போராடிக்கொண்டிருந்த ஜெகதீஸ்வரனுக்கு நீதிமன்றம் பிணை! Published on November 2, 2011-4:46 pm கொழும்பு மகசின் விளக்கமறியல் சிறைச்சாலையில் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தடுப்புக்காவலி;ல் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியாகிய இராசரத்தினம் ஜெகதீஸ்வரனை கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றம் சரீரப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள இவருக்கு வன்னிப்பிரதேசத்தில் இடம்பெற்ற யுத்த மோதல்களின்போது காயமடைந்திருந்த இவர், சிறுநீரகங்கள் இரண்டும் பாதிக்கப்பட்ட நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையிலும், தேசிய வைத்தியசாலை…
-
- 0 replies
- 977 views
-
-
சிறீலங்கா விடயத்தை ஐ.நாவில் மீண்டும் எழுப்பியது கனடா கனடாவின் வெளிவிவகாரக் கொள்கை சனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள், நல்லாட்சியே என்பதை கனடா தொடர்ந்தும் அனைத்து சர்வதேச நிகழ்வுகளிலும் வலியுறுத்திவரும் நிலையில், அதனை மோசமாக மீறிவரும் நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் சிறீலங்கா கனடவின் தொடர் கண்டனத்திற்கு உள்ளாகிவருகின்றது. கடந்த ஒக்டோபர் 26ஆம் நாள் ஐ.நாவின் மனித உரிமைகளைக் காப்பதற்கும் முன்னெடுப்பதற்குமான மூன்றாவது குழு நிலை விவாதத்தில் பேசிய கனடாவின் ஐ.நா வதிவிடப் பிரதிநிதி குலர்மோ ரிச்சன்ஸ்கி, சிறீலங்காவின் பிரச்சனைக்கான மூல விடயங்களுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை என்பது கனடாவின் கரிசனையாக உள்ளது, என்றார். அத்துடன் சிறீலங்காவில் நடாத்ததாத உறுதிப்படுத்தப்ப…
-
- 2 replies
- 1k views
-
-
நவம்பர் 5 இலண்டனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பு ஏற்பாடு: Wednesday, November 2, 2011, 10:28 அமெரிக்கா கனடா சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. திரு. எம். ஏ. சுமந்திரன் எம். பி. திரு. சுரேஸ் பிரமச்சந்திரன் எம்.பி திரு. மாவை சேனாதிராசா எம.பி. ஆகியோர் நவம்பர் 5ம்திகதி இலண்டன் வரவுள்ளனர். இலண்டனில் மூன்று தினங்கள்; தங்கியிருக்கும் இவர்களுக்கு நெருக்கமான நிகழ்ச்சிநிரல் த.தே. கூட்டமைப்பு (பிரித்தானிய ) தயாரித்துள்ளது. நவம்பர் 5ம் திகதி காலை இலண்டன் வருகைதரும் தலைவர்களை த.தே. கூட்டமைப்பு ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் சென்று வரவேற்பர். அன்ற மாலை த.தே. கூட்டமைப்பு (பிரித்தானிய) உறுப்பினர்களுடனான சந்திப்பு இடம்பெறும். …
-
- 3 replies
- 769 views
-
-
தந்தை செல்வநாயகம் என்பவர் யார்? அவரது சிலை உடைக்கப்பட்டதா? எனக்கு அவரைத் தெரியாதே........யார் அவர்? இந்தச் சம்பவம் எப்போது இடம்பெற்றது? இப்படி நேற்று சகோ தரப் பத்திரிகையான சுடர் ஒளியிடம் கேட்டார் பெருந் தோட்டத்துறை மற்றும் இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர் பாகக் கடமையாற்றும் அமைச்சரான மஹிந்த சமரசிங்க. திருகோணமலை, சிவன் கோயிலுக்கு அருகில் நிறுவப்பட்ட தமிழர்களின் முன்னாள் தலை வரும் தமிழர் அரசியல் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாதவருமான தந்தை செல்வநாயகத் தின் சிலை கடந்த ஞாயிற் றுக்கிழமை காடையர்களால் சேதமாக்கப்பட்டது. இதனால் சிலையின் தலைப் பகுதி கொய்து வீசப்பட்டது.. இந்த விவகாரம் குறித்து அரசியற் கட்சிகளின் கருத்தை நேற்று நாம் வினவினோம். இதுதொடர்பாக உங்கள் கரு…
-
- 2 replies
- 2k views
-
-
முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுக்கு நோர்வே தூதரகம் 57 மில்லியன் ரூபா நிதியுதவி விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்துவரும் குடிபெயர்விற்கான சர்வதேச அமைப்பின் திட்டத்திற்கு, கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் சுமார் 57 மில்லியன் ரூபாக்களை வழங்கி யுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கையெழுத்திடும் நிகழ்வு நோர்வே நாட்டுத்தூதர் ஹில்டே ஹரால்ஸ்டெட் மற்றும் குடிபெயர்விற்கான சர்வதேச அமைப்பின் தலைமை அதிகாரி ரிச்சர்ட் டேன்சைகர் முன்னிலையில் ரோயல் நோர்வே தூதரகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. இந்தப் புனர்வாழ்வுத் திட்டமானது 2009 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் ஏற்கனவே சுமார் 3 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களி…
-
- 0 replies
- 598 views
-
-
அரசால் தமக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் முறையிடுவதற்கு முன்னாள் பிரதமநீதியரசர் சரத் என்.சில்வா தீர்மானித்திரு க்கிறார் என நம்பகரமாகத் தெரியவருகிறது. பிரதம நீதியரசராகப் பதவிவகித்த காலத்தில் சரத் என்.சில்வாவின் செயற்பாடுகள் குறித்து ஆராய நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது. இந்தச் சூழ்நிலையில், அரசின் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, தமது உரிமைகளைப் பாதுகாக்க வலியுறுத்தி சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் சபைகளுக்கு முறைப்பாடுகளைச் செய்வதற்கு முன்னாள் பிரதம நீதியரசர் தயாராகி வருவதாகத் தெரியவருகிறது. …
-
- 1 reply
- 885 views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் யுத்தம் தொடர்ந்திருந்தால் கடந்த மூன்று ஆண்டுகளில் பல்லாயிரம் இளைஞர்களின் உயிர்கள் பறிக்கப்ட்டிருக்கும். அதேபோல் பல கோடான கோடி சொத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கும். ஆனால் மாண்புமிகு மஹிந்த அவர்கள் யுத்தத்தினை தடுத்து நிறுத்தி எல்லோரையும் காப்பாற்றிவிட்டதாக பிள்ளையான் கூறுகின்றார். . பிள்ளையான் அவர்களே போரினை எப்போது மஹிந்த நிறுத்தினார். சொத்துக்கள் எப்போது காப்பாற்றப்பட்டது? 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.கிட்டத்தட்ட இரண்டுவருடங்களில் 6000 போராளிகள் வீரச்சாவு, 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட இளையோர்கள், ஆண்கள், பெண்கள் என சிங்கள வதை முகாம்களில் அடைபட்டுக்கிடக்கின்றனர். வன்னியின் 90 விழுக்காடு பொருளாதாரம், குடிமனைகள் எல்லாம் அழிந்துவிட்டன. இதற்கு …
-
- 0 replies
- 1.1k views
-
-
வெளிநாடு சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் நாடு திரும்புகையில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட வேண்டும். அது மட்டுமின்றி அவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமைகளை பறிப்பதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர குறிப்பிட்டார். அரசியலமைப்பின் 6 ஆவது சரத்திற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுள்ளமை ஆதாரபூர்வமாக வெளிப்பட்டுள்ளது. எனவே வெளிநாடுகளுடன் சேர்ந்து நாட்டிற்கு எதிரான திட்டங்களை முன்னெடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். சர்வத…
-
- 2 replies
- 1.1k views
-
-
வடமாகாணத்தில் எதிர் வரும் 7ஆம் திகதி முதல் 118 வைத்தியர்கள் வைத்திய சாலைக்கு நியமனம் பெறுகின்றனர் என்று வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: வடமாகாணத்தில் வைத்தி யர்கள் பற்றாக்குறை காணப்படுவதாக பல முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றன. இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் சுகாதார அமைச்சுக்கு எம்மால் முன்வைக் கப்பட்டன. அதனடிப்படையில் தற்போது வைத்திய கல்வி நெறியை முடித்து வெளியேறியுள்ள 600 பேரில் 118 பேர் வட மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 72 வைத்தியர்களும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு 28 வைத்தியர்களும், முல்லைத் தீவு மாவட்டத்துக்கு 26 வைத் தியர்களும் மன்னார் மாவட்டத் துக்…
-
- 0 replies
- 644 views
-
-
இராணுவ முகாம் விஸ்தரிப்புக்காக எமது மக்களின் குடியிருப்புகள் உடைக்கப்பட்டன. இதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதாக யாழ். மாவட்ட ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உறுதியளித்தார். நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இதற்கான உறுதி மொழியை வழங்கினார்.வலி. வடக்கு பிரதேச சபை தலைவர் எஸ்.சுகிர்தன் தனது பிரதேச சபை எல்லைக்குள் அமைந்துள்ள இராணுவ முகாம்களின் எல்லைகளை விஸ்தரிப்பதாகக் கூறிக்கொண்டு எமது மக்களின் வீடுகளை உடைகின்றனர். இது பொது மக்களுக்குப் பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி உள்ளது. இராணுவத்தினர் தமது எல்லைகளை விஸ்தரிக்க வீடுகளை உடைத்து மதில் கட்டாமல் கம்பி வேலிகளை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.இதனைச் செவிமடுத…
-
- 0 replies
- 710 views
-
-
[ புதன்கிழமை, 02 நவம்பர் 2011, 03:34 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] கொலன்னாவில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கி மோதலில் படுகாயமடைந்த ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்படுவதற்காக சிறி ஜெயவர்த்தனபுர மருத்துவமனையில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளார். நேற்றிரவு 9 மணியளவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் நோயாளர் காவுவண்டி மூலம் மருத்துவமனையில் இருந்து கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அவுஸ்ரேலியாவில் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாகவும், நேற்றிரவே சிறப்பு விமானம் மூலம் மருத்துவர்கள், தாதிகள் அடங்கிய குழு ஒன்றுடன் அவரை கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. …
-
- 0 replies
- 733 views
-
-
சிலை உடைப்பைக் கண்டறிய விசேட பொலிஸ் குழுவாம்! Published on November 2, 2011-9:37 am தந்தை செல்வாவின் உரு வச்சிலை சேதமாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகத் துரிதகதியில் விசாரணைகளை முன்னெடுப் பதற்கு விசேட பொலிஸ் குழுவொன்றை பொலிஸ் திணைக்களம் நியமித்துள்ளது. இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரு மான அஜித் ரோகண நேற்று உதயனுக்குத் தெரிவித்தார்.மாபெரும் தமிழ்த் தலை வர் தந்தை செல்வாவின் உருவச்சிலையை காடை யர் கும்பலொன்று ஞாயிற் றுக்கிழமை நள்ளிரவில் சேதப்படுத்தியது. இந்த அராஜகமான சம்பவத்தால் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், பல் வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன.இந்தநிலையில், தந்தை செல்வாவின் நினைவுச் சிலை உடைக்கப்பட்…
-
- 0 replies
- 579 views
-
-
கிளிநொச்சியில் மூன்று பிரதேசங்களில் மக்கள் மீளக்குடியேற இராணுவம் தடை Wednesday, November 2, 2011, 10:56 கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் பொதுமக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாத வகையில் 3 பிரதேசங்களை இராணுவத்தினர் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். மாவட்டத்தில் கடந்தாண்டின் ஆரம்பதில் தெடர்ரப்பட்ட மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இவ்வாண்டு, நடுப்பகுதியுடன் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் மீள் குடியேற்றம் எனும் பெயரில் அழைத்து வரப்பட்டு இடைத்தங்கல் முகாம்களிலும், உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் சுமார் ஆயிரம் வரையான குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் நகர்ப்பகுதியை அண்டியுள்ள பர…
-
- 0 replies
- 374 views
-
-
முன்னாள் புலிகளின் உறவினரை துன்புறுத்தும் புலனாய்ப்பிரிவு – சிறிலங்கா கார்டியன் Wednesday, November 2, 2011, 10:48 சிறிலங்காப் படையினரிடம் சிறைப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக கருதப்படும் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களின் உறவினர்கள் சிறிலங்கா அரசின் தீவிரவாத முறிடிப்பு பிரிவு காவல்துறையினரால் துன்புறுத்தப்படுவதாக ‘சிறிலங்கா கார்டியன்‘ தகவல் வெளியிட்டுள்ளது. 2009 மே மாதம் போரின் இறுதியில் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களின் உறவினர்களிடம் சென்று தீவிரவாத முறியடிப்பு காவல்துறையினர் தொந்தரவு செய்து வருகின்றனர். சரணடைந்த இந்த விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பேருந்து ஒன்றில் அடையாளம் தெரியாத இடம் ஒன்றுக்கு ஏ…
-
- 0 replies
- 520 views
-
-
கூட்டணியினரின் வார்த்தைகள் 1965களை நினைவுபடுத்துகின்றன. அதாவது 1965 - 1980 இடைப்பட்டகாலங்களில் தமிழரசு கட்சிக்காரர்கள் அரசியல் பொது மேடைகளில் சுதந்திரம், உரிமைப்போராட்டம், விடுதலை பற்றி முழங்கும் போது நாங்கள் போரடத்தொடங்கினால் எங்களுக்காக ரஷ்சியா வரும். இந்தியா வரும் நாங்கள் பலமான பக்கத்துணை வைத்திருக்கின்றோம் என்று முழங்குவார்கள். நாங்கள் அப்போது சின்னவர்கள். அதைக்கேட்டு கைதட்டி ஆர்ப்பரிப்போம். இவர்களின் முழக்கம் அடுத்த ஆண்டில் தமிழீழம் கிடைத்திடும் போல எண்ணிவிடுவோம். பின்னர் தமிழர் கூட்டணிஆகி ஆயுதப்போராட்டமாகி அழிந்த கதை வேறு. இப்போது ஆயுதப்போரட்டம் முற்றுப்பெற்ற நிலையில், திரும்பவும் கூட்டணித்தொடர்- 2 ஆரம்பமாகியுள்ளது. அதே வழி வந்த மனிதர்கள் தான். திரும்பவும் …
-
- 0 replies
- 689 views
-
-
திருகோணமலை தென்னைமரவாடி தமிழ்க் கிராமத்தில் சிங்களவர் அத்துமீறி விவசாயம் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தென்னைமரவாடி தமிழ் கிராமத்தில் சிங்களவர்கள் அத்துமீறி விவசாய செய்கையில் ஈடுபட்டு வருவதாக இக்கிராம மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். போர் காரணமாக இக்கிராமத்தில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் 1982 ஆம் ஆண்டு முதல் இடம்பெயர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது மீளக்குடியேறி விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தமக்குச் சொந்தமான வயல் நிலத்தை உழுது பண்படுத்தியிருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கு வருகை தந்த சிங்கள விவசாயிகள் குறித்த வயல் நிலங்களில் நெல் விதைகளைத் தூவிவிட்டுச் சென்றிருப்பதாக இ…
-
- 3 replies
- 1k views
-
-
கடந்த சில மாதங்களாக தனது உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிற ஜெகதீஸ்வரனெண்ட ஒரு முன்னாள் போராளியை விடுவிக்கிறதுக்கும் அவருக்கான சிகிச்சையை செய்யிறதுக்கும் மனிதநேயப்பணியாளர்களும் அவருடைய குடும்பமும் பெரும் பிரயாசைப்பட்டு உழைச்சதிற்கான பயன் இண்டைக்கு எட்டியிருக்கு. ஜெகதீஸ்வரனுக்கான சிசிச்சையை மேற்கொள்ள பிணை கிடைச்சிருக்கு அது பற்றி அவருடன் இருந்த கைதிகள் அவருடைய அக்கா புலம்பெயர்ந்த உறவுகளுக்கு சொல்ல வருகிறதை இந்த ஒலிப்பதிவிலை கேப்பம்… ஒலிப்பதிவினை கேட்க இணைப்பில் அழுத்துங்கள். ஜெகதீஸ்வரனுக்கு மேலதிக உதவிகளை வழங்க தொடர்பு கொள்ள :- Nesakkaram e.V Hauptstr – 210 55743 Idar-Oberstein Germany Shanthy Germany – 0049 6781 70723 மின்னஞ்சல்: nesakkaram@g…
-
- 2 replies
- 1.6k views
-
-
“தலையிடியும் தடிமனும் தனக்கு தனக்கு வந்தால் தான் தெரியும்'என்பர். அந்த வகையிலேயே தான் உறவுகளின் தகவல்கள் அறியாது தவித்துத் திரியும் மக்களின் கதையும். யுத்தத்தின் நிறைவின் பின்னர் காணாமல் போனோர் தொகை இலங்கையில் அதிகரித்திருப்பதாக பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டி நிற்கும் நிலையில் அதனோடு சம்பந்தப்பட்ட மக்களின் உள்ளக் குமுறல்களும் சற்று வெளியே வரும் பட்டசத்திலேயே அவர்களுக்கு ஆத்ம திருப்தியாக இருக்கும் என்பது ஜதார்த்தம். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடங்கிய காலப்பகுதியில் இருந்து இற்றைக்கு ஏராளமான மூவினமக்களும் காணாமல் போயிருப்பது பதிவுகளின் சாட்சி. எனினும் முள்ளிவாய்க்காலில் முடிந்துபோன தமிழரது ஆயுதப்போராட்டத்தின் பின்னரான காலத்தில் காணாமல் போன தமிழ் இளைஞர் யுவதிகளின்…
-
- 1 reply
- 876 views
-