Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அமெரிக்காவை வதிவிடமாக் கொண்டவருமான கோடீஸ்வரர் ராஜ் ராஜரத்தினத்திடம் 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டஈடு தரக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்த மாதம் நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நீதிமன்றத்திலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் மேற்கொண்ட குண்டுத் தாக்குதல் ஒன்றில் உயிரிழந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு ராஜ் ராஜரட்ணத்துக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரியே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ராஜ் ராஜரட்ணம் நான்கு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியிருந்தார் என அமெரிக்க எவ்.பி. ஐ யினர…

  2. அமெரிக்கா என்ன செய்யப்போகின்றது? கூட்டமைப்பினை ஏன் அழைத்துள்ளார்கள்? நோர்வே மீண்டும் ஏன் களத்தில் இறங்கியுள்ளது? இந்தியா அமைதியாக உள்ளதே, இந்தியாவை மீறி அமெரிக்காவால் ஏதும் செய்ய முடியுமா? . இப்படி பல கேள்விகள் எம்முன் விரிகின்றது. அமெரிக்காவிற்கு நாளை கூட்டமைப்பு விஜயம் ஒன்றை செய்யப்போவதாக கூறும் நிலையில் அவர்களில் சிலருக்கு இன்னமும் வீசா ஒழுங்குகள் கூட சரிவரவில்லை. அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இன்னமும் ஹிலாரி கிளிங்டனை சந்திக்கவோ அல்லது முக்கிய இராஜ தந்திரிகளைச் சந்திக்கவோ நேர அட்டவணை கொடுக்கவில்லை. . ஆனால் பல அமைப்புக்கள், தமிழ் அரசியல் கட்சிகள், பத்திரிகைகள் உட்பட ஏதோ இந்த நடவடிக்கையினை ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாக பிரச்சாரப்படுத்தியும்,அமெரிக்கா ஏதோ என்னமோ செய்…

  3. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை அமெரிக்காவுக்கான விஜயத்தினை மேற்கொள்கின்றனர். நாளை அதிகாலை இலங்கையிலிருந்து அமெரிக்கா நோக்கி இவர்கள் புறப்படவுள்ளனர். எம்.பி.க்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ்பிரேமச்சந்திரன், எம். சுமந்திரன் ஆகியோரே அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளனர். அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ அழைப்பினையேற்றே இவர்கள் அங்கு செல்கின்றனர். அமெரிக்காவில் இவர்கள் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளின்டன், தெற்காசிய விவவாரங்களுக்கான அமெரிக்க பிரதி வெளிவிவகார செயலாளர் ரொபட் ஓ பிளேக் உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்து பேசவுள்ளனர். இவர்கள் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ ம…

  4. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள நிலையில், அவருக்கு எதிராக மெல்போர்ன் நீதிமன்றம் ஒன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவுஸ்திரேலிய பிரஜையான அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் என்பவரே இந்த வழக்கை நேற்றுத் (23) தாக்கல் செய்துள்ளார். வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஆகாய மார்க்கமாகவும் தரை மார்க்கமாகவும் குண்டுகளைப் போட்டு பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களின் இறப்புக்கு ஜனாதிபதி மஹிந்த காரணமாக இருந்தமை மற்றும் பாடசாலைகள், வைத்தியசாலைகள், சமூக நல நிலையங்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை உட்பட பல குற்றச்சாட்டுகள் இலங்கை ஜனாதிபதி மீது சுமத்தப்பட்டே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு …

  5. Sri Lankan envoy 'war crimes' SRI Lanka's high commissioner to Australia, former navy Admiral Thisara Samarasinghe, should be investigated for war crimes, a brief before the Australian Federal Police says. The submission, from the International Commission of Jurists' Australian section, has compiled what a source has told The Age is direct and credible evidence of war crimes and crimes against humanity. Witnesses - former Sri Lankan residents now living in Australia - can attest to the crimes, the source said Admiral Samarasinghe was the commander of the Sri Lankan navy's eastern and then northern areas, as well as naval chief of staff, during the fin…

  6. யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இனந் தெரியாத நபர்களினால் இன்று தாக்கப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று மாலை தெரிவித்துள்ளது . யாழ். பல்கலைக்கழக கலைத்துறை நான்காம் வருட மாணவரான ராஜவரோதயன் கவிதாஸ் (வயது 26) இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தவபாலன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தைச் செர்ந்த யாழ்.பல்கலைக்கழக மாணவன் ராஜவரோதயன் கவிதாஸ், கிளிநொச்சி - பரந்தன் பூநகரி வீதியை அண்மித்த பகுதியில் வைத்து இன்று அதிகாலை முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த குழுவினரினால் பொல…

    • 2 replies
    • 1k views
  7. கிளிநொச்சி மாவட்டத்தில் 37,707 குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்காக கடந்த காலங்களில பதிவுகளை மேற்கொண்டிருந்ததாகவும் இதில் 35,822 குடுங்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்க வேண்டியிருந்ததாகவும் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். . இதற்குள் 26,867 குடும்பங்களுக்கு புதிய வீடுகளும் 8,955 குடும்பங்களுக்கு வீடுகளை திருத்துவதற்குமாக உதவிகளை வழங்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். . ஆனால் இதுவரைக்கும் திருத்த வீடுகளுக்கான உதவிகள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. அதில் 1,692 திருத்த வீடுகள் முடிவுற்ற வேலைகளாகவும் 1,203 திருத்த வீடுகள் தற்போது வேலைகள் நடைப்பெற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், புதிதாக அமைத்துக்கொடுக்கும் வீடுகளிலேயே தாம் ப…

  8. சனல்4 இனரால் தயாரிக்கபப்ட்ட சிறிலங்காவில் கொலைக்களம் எனும் போர்க்குற்ற ஆதார காணொளி நம்பிக்கையானதும், ஊடக சட்டங்களை மதித்தும் தயாரிக்கபப்ட்ட ஒன்று என ஊடக ஒழுங்குபடுத்தல் ஆணையம் ( OFCOM) கூறியுள்ளது.. சனல் 4 காணொளி தொடர்பில் சிங்கள அர்சாங்கத்தின் தூண்டுதலின்படி புலம்பெயர் சிங்களவர்கள் மற்றும் சிலர் 118 முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். இந்த காணொளி உண்மைக்கு புறம்பானது, பார்வையாளர்களை கலங்க வைக்க கூடியது, சாதாரண பொதுமக்கள் இதனால் பாதிப்படைந்துள்லனர் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை முறைப்பாடாக செய்திருந்தனர்.. இந்த முறைப்பாடுகளை விசாரித்த ஓவ்கொம் எனப்படும் ஊடக ஒழுங்குபடுத்தல் ஆணையம் தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது.. அதாவது இந்த காணொளியில் உள்ள காட்சிகள், படங்கள் உரிய முறை…

  9. அமெரிக்க நீதிமன்றின் பிடியாணை தமிழ்நெட்டில் வெளியானது மகிந்தவுக்கு எதிரான அமெரிக்க நீதிமன்றின் பிடியாணை தமிழ்நெட்டில் வெளியானது. K. Manoharan et al. v. Mahinda Rajapakse: Complaint, Summons [TamilNet, Sunday, 23 October 2011, 23:13 GMT] As per order issued on the 13th day of October 2011, by the United States District Judge, Colleen Kollar-Kotelly of the District Court of District of Columbia, with respect to Civil Action No. 11-00235 (CKK) Dr. Kasippillai Manoharan, et al. v. Percy Mahendra Rajapakse, the Court Summons and the Complaint are published here in full. The 29-page complaint is published as a single PDF document, and as 29 separate jpg images…

    • 3 replies
    • 1.4k views
  10. கோலியாத் என்ற மாபெரும் வீரனை வீழ்த்தியது தாவீது என்ற சிறுவனின் சாணக்கியமே. அதாவது அவன், புத்திசாலித்தனமாக வீசிய கல்லே கோலியாத்தைத் தோற்கடித்தது. அதுவரையும் கோலியாத்தும் இருந்தான்.கல்லும் இருந்தது. ஆட்களும் இருந்தார்கள். ஆனால், புத்திசாதுரியத்தைப் பயன்படுத்திக் கல்லை எறியக்கூடிய ஒரு தாவீது வரும் வரைக்கும் கோலியாத்தே “கிங்'. மிகச் சிறிய வயதிலேயே சொல்லிக் கொடுக்கப்படும் இந்த விடயத்தைத் தமிழ் அரசியலாளர்களிற் பெரும்பாலானோர் இன்னும் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை. என்றபடியாற்தான், இவர்கள் மலைகளை உடைத்துக் கற்களை வீசுகின்றபோதும் ஒரு கல்லுத்தானும் எதிர்த்தரப்பைச் சேதப்படுத்தாமல் இருக்கிறது. இப்போது இவர்கள் எறிந்த கற்களின் குவியலே மலைகளாகப் போகிறது. “தமிழர்கள் காலத்த…

    • 2 replies
    • 839 views
  11. கனடாவில் ‘பொங்கு தமிழ்’ காலத்தின் கட்டளை இது “பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசம் என்று சங்கே முழங்கு.” இது பாரதிதாசன் வரிகள். கனடியத் தமிழருக்காகவே அன்று எழுதி வைத்தார் போலும். கனடியத் தமிழர் துணிச்சலுடனும், ஒற்றுமையுடனும், உற்சாகத்துடனும் செயற்பட வேண்டிய தருணமிது. ‘பொங்கு தமிழ்’ ரொறன்ரோவில் நிகழவுள்ளதாக அறியப்பட்டவுடனேயே அதற்கெதிராக செயற்படத் தொடங்கி விட்டனர் இங்குள்ள உள்ள மகிந்த அரசின் கைக்கூலிகள். இதனை நிகழவிடாமல் செய்வதற்கு அனைத்து வழிகளையும் - சாம பேத தான தண்டம் அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். புலம்பெயர் தமிழரின் அரசியல் அழுத்தம் காரணமாக மகிந்தவின் இனவெறி அரசு மேற்குலகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படுவதுடன், சர்வதேச போர்க்குற்ற விசாரண…

  12. லண்டனில் இருந்து, விடுமுறையை கழிப்பதற்காக கொழும்பு சென்ற, பிரித்தானிய பிரஜைகளான தாயாரும், அவரது இளம் மகளும் கொழும்பில், இன்று சிங்கள இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, சிங்கள சித்திரவைதை கூடமான 4'ம் மாடியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. இவர்களை விடுவிப்பதற்காக பெருமளவு பணம் கேட்க்கப்பட்டிருப்பதாகவும், கொடுக்கத் தவறின் புலிகளுடன் தொடர்பு உடையவர்களென குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வரும் என எச்சரிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களின் குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்தார். புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட இவர்கள், பல வருடங்களாக லண்டனில் வசித்து வருவதாகவும் தெரிய வருகிறது. அண்மைக்காலங்களாக, இவ்வாறு புலத்தில் இருந்து கொழும்பு சென்ற பலர்…

    • 29 replies
    • 3.8k views
  13. கூட்டமைப்பின் பயணம் வெற்றிகரமாக அமைய எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள், போர்க் குற்ற விசாரணையை சமரசம் செய்ய இடமளிக்கக் கூடாது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அமெரிக்கா செல்லும் கூட்டமைப்பு சுயநிர்ணய உரிமையையும் தமிழ் தேசத்தின் தனித்துவமான இறைமையையும் ஆணித் தரமாக வலியுறுத்த வேண்டும். தமிழ் மக்களும் இளைஞர்களும் செய்த உயிர்த்தியாகங்களை பேரம்பேசும் வகையில் போர்க் குற்ற விசாரணையை சமரசம் செய்ய இடமளிக்கக் கூடாது என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் அவர்களது பயணம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் பத்திரிகையாளார் மகாநாடு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின…

  14. ஜேர்மனி செய்மதியின் பாகங்கள் சிறிலங்காவில் வீழ்ந்தன? ஆபத்தை எச்சரிக்கத் தவறிய விஞ்ஞானிகள் விண்வெளியில் செயலிழந்த ஜெர்மனியின் ஆய்வுச் செய்மதியின் உடைந்த பாகங்கள் தென்கிழக்காசியாவில் விழுந்திருக்கலாம் என்று ஜேர்மனிய விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். சிறிய பேருந்து ஒன்றின் அளவுடைய - 1.87 தொன் எடையான இந்த செய்மதி செயலிழந்து, 30 துண்டுகளாக உடைந்து 450 கி.மீ வேகத்தில் பூமியில் விழுந்துள்ளது. 1990ம் ஆண்டில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்த செய்மதி 1999ம் ஆண்டில் செயலிழந்த நிலையில் புவிச்சுற்று வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டிருந்தது. இந்த செய்மதி சனிக்கிழமை இரவு 9.45 மணிக்கும், 10.15 மணிக்கும் இடையில் புவியை நெருங்கியதாகவும், அது தரையில் விழுவதற்கு 10 தொடக்கம்…

  15. கோடிய‌க்கரை அருகே ‌மீ‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த வேதார‌ண்ய‌த்தை சே‌ர்‌ந்த நான்கு கடல்தொழிலாளர்களை சுற்றிவளைத்த சிங்கள கடல்தொழிலாளர்கள்அரிவாளால் வெட்டி காயப்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்கள். வேதாரணியம் கடல்தொழிலாளர்கள் இரண்டாவது தடவையாக சிங்கள கடல்தொழிலாளர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்கள். நாகை மாவ‌ட்ட‌ம் வேதார‌ண்ய‌த்தை அடு‌த்த ‌விழு‌ந்தமாவடியை சே‌ர்‌ந்த 4 ‌மீனவ‌ர்க‌ள் நே‌ற்‌றிரவு கடலு‌க்கு ‌‌மீ‌ன்‌பிடி‌க்க செ‌ன்றன‌ர். கோடிய‌க்கரை‌யி‌ன் தெ‌ன்‌கிழ‌க்கே அவ‌ர்க‌ள் ‌மீ‌ன்‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்தன‌ர். படகில் வந்த சிங்கள கடல்தொழிலாளர்கள் நான்கு கடல்தொழிலாளர்களையும் சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டினார்கள் இதில் அர்ச்சுனன் என்ற கடல்தொழிலாளி கையில் காயம் அடைந்த …

  16. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இலங்கையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவும் இந்தியாவும் செயற்படுகின்றன. இதற்கு கூட்டமைப்பினன் அமெரிக்க விஜயம் இதன் ஒரு கட்டமே யாகும். எனவே தமிழ்க் கூட்டமைப்பின் தேசத்துரோக செயல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சரு மான சம்பிக்க ரணவக்க தெவித்துள்ளார். கேணல் கடாபியின் கொலையுடன் உண்மையான போர்க் குற்றவாளிகள் யார்? என்பது வெளிப்பட்டுள்ளது. எனவே ஐ.நா. இலங்கைக்கு எதிராக செயற்படுவதை நிறுத்தி விட்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு எதிராக கடும் நடவ டிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளா…

  17. அரசியல்வாதிகள் வழங்குகின்ற வாக்குறுதிகள் பற்றியும் இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது குறித்தும் இன்று கவனம் செலுத்தப்படுகின்றன. இந்த இரு விடயங்கள் தொடர்பாக ஆங்கில, தமிழ்ப் பத்திரிகைகளில் ஆசிரியர் தலையங்கங்கள் தீட்டப்பட்டுள்ளதுடன் இவை தொடர்பான செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் வழங்குகின்ற வாக்குறுதிகள் குறித்து ஜனாதிபதி அரசியல்வாதிகளுக்கு நினைவூட்ட வேண்டிய நிலை தோன்றியுள்ளது. அக்டோபர் 8 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் வெற்றி பெற்ற அரசாங்க சார்பான உறுப்பினர்களுக்கு சத்தியப் பிரமாணம் செய்து வைக்கும் வேளையிலேயே ஜனாதிபதி தேர்தல் காலங்களில் உறுப்பினர்கள் வழங்கிய உறுதி மொழிகள் குறித்து பேசியுள்ளார். …

  18. அதிகாரிகளின் அசிரத்தையினால் மட்டு சிறைச்சாலையில் தமிழ் இளைஞர் (கைதி) ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த சில தினங்களாக சுகயீனமுற்றிருந்த குறித்த கைதி உணவு உட்கொள்ள முடியாது வாந்தி எடுத்தவாறு இருந்ததாகவும் அது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்தும் அவர்கள் அதனை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் சிறைச்சாலையின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.. சிறைச்சாலை அதிகாரிகள் கவனம் செலுத்தியிருந்தால் கைதியின் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் எனத் தெரிவித்துள்ள கைதிகள், சிறைச்சாலை அதிகாரிகளின் கவனயீனத்தைக் கண்டித்து இன்று தொடக்கம் உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.. சிலரை படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்க முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்…

  19. அரசாங்க படை அதிகாரிகள் கூறிய பாதுகாப்பு உத்தரவாதத்தினை நாம் நம்ப தயாராக இல்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது. எமது மாணவ சமூகம் அச்சமின்றி கல்வியைத் தொடர முடியும் என்ற உத்தரவாதத்தினை அரசாங்க படைத்தரப்பு வழங்கியுள்ளதாக யாழ். பல்கலைக்ழக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் நாம் அதனை நம்பமாட்டோம். . எமது மூன்று அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாளை திங்கள் தொடக்கம் தொடர் வகுப்புப் பகிஸ்கரிப்பு போராட்டம் தொடரும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் பாலசுப்பரமணியம் தவபாலசிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களிலும் வாய்மூல பாதுகாப்பு உறுதி மொழிகள் வழங்கப்பட்டது. ஆனால், எங்களுக்கான பாதுகாப்பு தொடர்பாக பாதுகாப்பு பிரிவினர் எமுத்துமுல உறுதி மொழிகள் வ…

  20. அமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிகழ்ந்த படுகொலை. இந்தியப்படையின் துப்பாக்கிச் சூட்டில், வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிமார்கள், மேற்பார்வையாளர், ஊழியர்கள் உட்பட இருபத்தியொரு பணியாளர்களும், நோயாளார் விடுதிகளில் சிகிச்சை பெற்றுவந்த நாற்பத்தியேழு நோயாளர்களுமாக, மொத்தம் அறுபத்தியெட்டுப் பேர் கொல்லப்பட்டார்கள். 1987 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ம் நாள் நடாத்தப்பட்ட அந்தக் கோரப் படுகொலையின் இருபத்து நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று. இன்றுவரை மறக்க முடியவில்லை. அந்தச் சம்பவத்தில்தான், வைத்தியசாலைய…

  21. [ ஞாயிற்றுக்கிழமை, 23 ஒக்ரோபர் 2011, 07:42 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்கா அதிபர் ராஜபக்ச மற்றும் அவருடைய குடும்பத்தினர், கேணல் கடாபியின் மறைவு தொடர்பான தமது இரங்கல் செய்தியையும், தமது ஆழ்ந்த அனுதாபங்களையும் அவரது மகனான கன்னிபல் கடாபிக்கு தெரிவித்துள்ளனர். ஒக்ரோபர் 21,2011 அன்று மிஸ்றற்றாவின் புறநகர்ப் பகுதியிலுள்ள மசூதி ஒன்றின் அருகில் உள்ள மரக்கறிச் சந்தையின் அறையொன்றுக்குள் இருந்த மெத்தை மீது லிபிய நாட்டின் பலம்மிக்க ஆட்சியாளரான முகமர் கடாபியின் இறந்த உடல் வைக்கப்பட்டிருந்தது. கடாபி கொல்லப்பட்டமை தொடர்பாக பல்வேறு குழப்பகரமான சூழல் நிலவுகின்ற போதிலும் கூட, லிபியத் தலைவர்கள் தமது நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதிலும், ஜனநாயக …

    • 7 replies
    • 2.1k views
  22. ரணிலும் மகிந்தவும் ஒரே இலக்கை நோக்கியே பயணிக்கின்றனர்:- 24 அக்டோபர் 2011 நாட்டின் ஆட்சித் தலைவரான மகிந்த ராஜபக்கவும், எதிர்கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்கவும் ஒருவரை ஒருவர் குறைகூறி வந்தாலும் அவர்கள் இருவரும் ஒரே இலக்கை நோக்கியே பயணிக்கின்றனர். உலக ஒப்பாசாரத்துக்காக தாம் மோதிக் கொள்வதுபோல் காட்டிவருகின்றனரே தவிர அவர்கள் இருவருக்கும் இடையில் இறுக்கமான நட்பும், ஒற்றுமையும் உள்ளது. இருவருமே தமது கட்சிக்குள் தீவிர ஜனநாயகம் வேண்டி நிற்பவர்களை ஓரம் கட்டி வருகின்றனர். பாரதலக்ஸ்மன் பிரேமச்சந்திரா இன்று இல்லாதது ஒழிக்கப்பட்டுள்ளார். மகிந்த ராஜபக்ஸவிற்கு சவாலாக விளங்கிய ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஆட்சியாளரின் நவ தாராளவாத கொள்கைகளுக்கு எதிர…

    • 3 replies
    • 998 views
  23. வெள்ளைக்கொடி சம்பவத்தை ஒத்ததே கடாபியின் கொலை - மனித உரிமைகள் கண்காணிப்பகம் _ லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபியின் கொலைக்கும் இலங்கையின் வெள்ளைக்கொடி சம்பவத்துக்கும் ஒற்றுமைகள் தென்படுவதாக நியூயோர்க்கைத் தலைமையகமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மேற்படி கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்துக்கான பணிப்பாளர் பிறட் அடம்ஸ் தெரிவித்திருப்பதாவது, சிர்தே நகரில் கேர்ணல் கடாபி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் புரட்சிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். எனினும் சண்டையின் போது அவர் கொல்லப்பட்டதாக இடைக்கால அரசு கூறி வருகிறது. இலங்கையின் வெள்ளைக்கொடி சம்பவத்திலும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களே முன் வைக்கப்பட்டுள்ளன. விடு…

  24. இலங்கை காவல்துறை மீது குற்றச்சாட்டு இலங்கையில் பொலிஸ் காவலில் இருப்போர் மீதான சித்திரவதைகளும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளும் அளவின்றி தொடர்வதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன. இந்த ஆண்டில் கடந்த 9 மாதங்களில் மட்டும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கு வெளியே பொலிஸ் நிலையங்களுக்குள் நடந்துள்ள சித்திரவதைகள், மோசமான நடாத்துதல் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் என கிட்டத்தட்ட 98 சம்பவங்கள் தம்மிடம் பதிவாகியிருப்பதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் நிகழ்சித்திட்ட இயக்குநர் பசில் பெர்ணான்டோ பிபிசியிடம் சுட்டிக்காட்டினார். கொல்லப்பட்ட 13 பேரில் பெரும்பாலானவர்கள் பொலிஸ் காவலில் இருந்து தப்ப முயன்றபோது அல்லது பொலிசாருடன் ஏற்பட்ட மோதல…

  25. இந்த முறை (2012) சிறிலங்கா அரசாங்கம் சமர்ப்பித்துள்ள வரவு செலவுத்திட்டத்தில் 222 பில்லியன் டொலர் செலவீடாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் துண்டு விழும் தொகை 110 பில்லியன் டொலர்கள். இந்த துண்டு விழும் தொகையில் மஹிந்த குடும்பத்திற்கு ஐந்தில் ஒரு பங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 22 பில்லியன் டொலர்கள். இந்த ஒதுக்கீட்டில் மஹிந்த குடும்பம் 25 விழுக்காட்டினை விழுங்கினால் அவர்களுக்கு மொத்தமாக ஒரு வருடத்திற்குள் புரளப்போகின்ற பணம் எவ்வளவு தெரியுமா? 5.5 பில்லியன் டொலர்கள். . எப்படித்தான் என்று பார்ப்போம்; . மஹிந்த இராஜபக்‌ஷவின் கீழ் உள்ள மூன்று அமைச்சுக்களுக்கும் 32 திணைக்களங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதி 6161 மில்லியன் ரூபாய்கள். கோத்தபாய இராஜபக்‌ஷவின் கீழ் உள்…

    • 4 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.