ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
கரு ஜயசூரிய இந்தியாவுக்கு விஜயம்! Published on July 30, 2011-2:13 am ஐ.தே.க. மறுசீரமைப்புக் குழுவின் கட்சித் தலைமைத்துவம் தொடர்பாக கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, நேற்று வெள்ளிக்கிழமை காலை இந்தியாவுக்கு புறப்பட்டுச் சென்றதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கரு ஜயசூரிய, தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாகவும் 4 நாட்கள் அவர் வெளிநாட்டில் இருப்பார் எனவும் அவரின் அலுவலகம் தெரிவித்தது. http://www.saritham.com/?p=28249
-
- 2 replies
- 352 views
-
-
ஐரோப்பிய யுனியன் நாடாளுமன்ற உறுப்பினர் போல்மேர்ஃபி கொழும்புக்கு செல்வதற்கு இலங்கை அரசாங்கம் விசா வழங்க அனுமதி மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டு வடபகுதியிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அலயர்லாந்து பிரஜா உரிமை பெற்ற இலங்கைத் தமிழரான குணசுந்தரம் ஜெயசுந்தரம் என்பரை பார்வையிடுவதற்கு போல்மேர்ஃபி கொழும்பு செல்ல அனுமதி கோரியிருந்தார். ஆனால் காரணங்கள் எதுவும் கூறாது அவருக்கு விசா மறுக்கப்பட்டதாக போல்பேசி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். http://www.tamilthai.com/?p=27973
-
- 0 replies
- 777 views
-
-
யாழ்.நகரின் முன்னணி பாசாலையான வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் முன்னாள் இந்நாள் பாடசாலை அதிபர்களுக்கு இடையேயான மோதல்களில் நடுவராக வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி களமிறங்கியுள்ளார். நேற்று மாலை சுமார் நான்கு மணி நேரமாக இடம்பெற்ற பேச்சுக்களில் முடிவு ஏதும் எட்டபடாது மோதல்கள் இழுபட்டே செல்வதாக தெரிகிறது என குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் ஓய்வு பெற்ற பாசாலை அதிபரால் உத்தரவிடப்பட்ட கழுத்துப்பட்டிகளை புதிய அதிபர் ஏற்றுக்கொள்ள மறுத்ததையடுத்தே குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற பாசாலை அதிபரால் உத்தரவிடப்பட்ட கழுத்துப்பட்டிகளை புதிய அதிபர் ஏற்றுக்கொள்ள மறுத்து வருவதாக கழுத்துப்பட்டி விநியோகஸ்தரான பெரும்பான்மையினத்தைச் சேர்…
-
- 2 replies
- 1.4k views
-
-
இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை நடுக்கடலில் தாக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். ராமநாபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, அங்கே வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்தினர். சுமார் 15 மணி நேரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் தடுத்துள்ளனர். 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வெறுங்கையோடு இன்று கரை திரும்பினர். கடந்த ஒரு மாதத்தில் பல முறை தமிழக மீனவர்களை தாக்குவது, மீன்கள், செல்போன்களை பறித்துச் செல்வது, படகுகளை சேதப்ப…
-
- 1 reply
- 920 views
-
-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 ஈழத் தமிழ் அகதிகளில் 15 பேரை தமிழக அரசு விடுவித்திருப்பது பாராட்டிற்குரியதாகும். ஈழத்தில் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலை உச்ச கட்டத்தில் இருந்தபோது, அங்கே படுகாயமுற்றுக் கிடந்த மக்களுக்கு மருந்துப் பொருட்களையும், மண்ணெண்ணை உள்ளிட்ட சில அத்யாவசியப் பொருட்களையும் கடத்தினார்கள் என்ற குற்றச்சாற்றின்பேரில் இங்கிருக்கும் பல ஈழத் தமிழ் அகதிகளை தமிழக காவல் துறை கைது செய்து, சிறப்பு முகாம்கள் என்று பெயரில் சிறையை ஏற்படுத்தி தடுத்து வைத்தது. அவர்களுக்கு எதிரான வழக்குகளில், பிணைய விடுதலை உள்ளிட்ட சட்ட ரீதியான நிவாரண…
-
- 1 reply
- 719 views
-
-
மனித உரிமை பாதுகாப்பு தொடர்பில் செயல் திட்டமொன்று ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்த மனித உரிமை செயல் திட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இந்த செயற் திட்டம் சமர்ப்பிக்ப்பட உள்ளது. செயல் திட்டம் மற்றும் அதன் பயன்பாடு தொடர்பில் உலகின் ஏனைய நாடுகளுக்கும், மனித உரிமை ஆர்வ அமைப்புக்களுக்கும் தொடர்ச்சியாக தகவல்க…
-
- 1 reply
- 808 views
-
-
உயிருக்குப் போராடும் ஜெகதீஸ்வரனுக்கு உதவுங்கள் அவசரம் ஒரு உயிர்காக்க வேண்டிய அவசியம் நேற்று முதல் ஒரு உயிரைக்காக்குமாறு வேண்டுதல்கள் ஊடகங்கள் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கடைசி யுத்தத்தில் முதுகுப்பகுதியில் காயமடைந்து மருத்துவம் பெற்றுக்கொண்ட நேரம் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டவர் ஜெகதீஸ்வரன். இந்த ஜெகதீஸ்வரன் என்ற முன்னாள்போராளி கொழும்பு வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப்பிரிவில் தனது உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த 33வயது இளைஞனின் 2சிறுநீரகங்களும் பாதிப்புற்றுள்ள நிலமையில் மாற்றுச்சிறுநீரகம் பொருத்த வேண்டிய நிலமையில் இருக்கிறார். எதிர்வரும் 3மாதங்களுக்குள் சி…
-
- 16 replies
- 2.4k views
-
-
சகல மனித உரிமை அமைப்புகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் உயிருக்காகப் போராடும் தமிழ் அரசியல் கைதி ஜெகதீஸ்வரனின் உயிரைக் காப்பாற்றுங்கள். போரின்போது படுகாயமடைந்ததால் இரத்தமாற்று நோய்க்கும் சிறுநீரக வியாதிக்கும் ஆளான திருக்கேதீஸ்வரம் மன்னாரைச் சேர்ந்த இராஜேந்திரம் ஜெகதீஸ்வரன் (32 வயது) என்ற தமிழ் அரசியல் கைதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றார். கொழும்பு விளக்க மறியல் சிறைச்சாலையில் பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற யுத்தத்தில் படுகாயமடைந்து கப்பல் மூலமாக திருகோணமலை வந்து மருத்துவமனையில் சிகிச்சை …
-
- 0 replies
- 863 views
-
-
தென்கொரிய கடற்படைக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் இன்று முற்பகல் சிறீலங்கா கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. பயிற்சி நடவடிக்கையொன்றில் ஈடுபட்டிருந்த இரண்டு கப்பல்களே கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக சிறீலங்கா கடற்படை பேச்சாளர் கொமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். கெங் கம் ச்செங் மற்றும் ச்சுங் ஜீ ஆகிய இரண்டு கப்பல்களும் நாளை மறுதினம் வரை கொழும்பு துறைகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்தக் கப்பல்களில் 608 பணியாளர்கள் இருப்பதாகவும் தென் கொரிய கடற்படையினருக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையில் நட்புரீதியான உதைப்பந்தாட்டப் போட்டியொன்று இடம்பெறவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். http://www.eeladhesa...ndex.php?option
-
- 0 replies
- 765 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்கள் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலமே பேரினவாத கடும் போக்காளர்களை கட்டுப்படுத்த முடியும் என்று புளொட் இயக்கத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். தமிழர் பிரச்சினை தீர்வு தொடர்பாக அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனேயே பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென்றும் அவர் கூறினார். இது தொடர்பாக புளொட் இயக்கத் தலை வர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண் பதற்காக ஜனாதிபதி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றார்.இவ்வாறானதோர் தருணத்தில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியின் மூலம் அமைச்சராக பதவி வகிப்பவரின் கீ…
-
- 11 replies
- 1.4k views
-
-
இறுதி பிரசார கூட்டத்தில் மனோ கணேசன் கல்முனையிலிருந்து வந்த தகவலின்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்பு மற்றும் தெகிவளை-கல்கிசை தேர்தல்களிலே ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவை தெரிவித்திருக்கின்றது. இது சம்பந்தமான அறிவித்தலை கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்பி வெளியிட்டுள்ளார். கூட்டமைப்பின் ஆதரவு எங்களது வெற்றியை மென்மேலும் உறுதிப்படுத்துகின்றது. நாம் பெறப்போகும் வெற்றி இந்த தமிழர் விரோத சர்வாதிகார அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் முகமாக தென்னிலங்கையிலே பாரிய எதிர்கட்சி கூட்டணியை உருவாக்குவதற்கு வித்திடுகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் இறுதி பிரசாரக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். 5ம் திகதி புதன் கிழமை இரவு 11.00 மணிக்கு …
-
- 0 replies
- 802 views
-
-
கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கான வெற்றி நிச்சயம் என அரசபுலனாய்வுப் பிரிவு இன்று முற்பகல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கிய புலனாய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கைக்கு அமைய, இந்தத் தேர்தலில் 58வீதமான வாக்குகள் பதிவாகும் எனவும் இதில் 52 வீதமானவை ஐக்கிய தேசியக் கட்சிக்கும் 38 வீதமானவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும் ஏனைய வாக்குகள் இதர கட்சிகளுக்கும் கிடைக்கும் என புலனாய்வுப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் தலையீடு, அரசினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் ஆகியவற்றினால் கடந்த பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகளைவிட இம்முறை கிடைக்கும் வாக்கு வீதம் குறைவாக இர…
-
- 0 replies
- 849 views
-
-
அண்மையிலை லண்டன் முத்துமாரியம்மன் கோயிலை இடிக்கத் துடிக்கும் தூதர் அம்சா எண்டொரு செய்தி ஊடகம் ஒன்றிலை வெளியாகி யாழிலும் இணைச்சிருந்தார்கள். ஆனால் அந்தக் கோயில் பற்றிய உண்மை விபரங்கள் கடந்த ஒரு பேப்பரில் வெளியாகியிருந்தது அதனை இங்கு இணைக்கிறேன். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு முக்கிய சந்திப்பு இடங்களாக இருப்பதில் கோவில்களும் அடங்குகிறது. உண்மையான அருள் வேண்டிக் கும்பிட, உணவு உண்ண, சனங்களைச் சந்தித்துக் கதைக்க, தேர் தீர்த்தக் கடைகளில் சாமான் வாங்க என பல வசதிகள் கோயில்களில் கிடைக்கிறது. கோயில்களுக்கும் பக்தர்களால் நிதி பெருமளவு வசூலாகிறது. இலண்டன் கோயில்களில் பல அவற்றின் அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்படும் நிர்வாகத்தால் பரிபாலனம செய்யப்படுகின்றன. இ…
-
- 14 replies
- 2.8k views
-
-
வியாழக்கிழமை, 06 அக்டோபர் 2011 04:42 இனப்பிரச்சினைக்கு காணப்படவுள்ள அரசியல் தீர்வானது தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதைப் போன்று முஸ்லிம் மக்களாலும் அது ஏற்றுகக் கொள்ளக்கூடியதாக அமைவதை உறுதி செய்வதே எமது முயற்சியாக இருக்கும். தீர்வு குறித்த அரசுடனான பேச்சின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் அதிக கவனம் எடுத்து செயற்படும் எனத் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சம்பந்தன் இதனைத் தெரிவித்திருக்கிறார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழ் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சி கல்முனை மாநகர சப…
-
- 0 replies
- 347 views
-
-
வியாழக்கிழமை, 06 ஒக்ரோபர் 2011, 07:09 GMT ] [ மட்டக்களப்புச் செய்தியாளர் ] திருகோணமலையில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிறிலங்காப் படைச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 13 படையினர் படுகாயமடைந்துள்ளனர். திருகோணமலை திஸ்ஸ கடற்படைத் தளத்தில் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்ட சிறிலங்கா படையினரை ஏற்றிச் சென்ற வாகனமே பூநகர் பகுதியில் மரம் ஒன்றுடன் மோதியுள்ளது. இந்தச் சம்பவத்தில் 14 சிறிலங்காப் படையினர் படுகாயமடைந்தனர். இவர்கள் சேருநுவர, கந்தளாய் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறிலங்காப் படையினரில் ஒருவர் இன்று காலை மரணமானதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகே…
-
- 0 replies
- 858 views
-
-
[ வியாழக்கிழமை, 06 ஒக்ரோபர் 2011, 07:11 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] மனிதஉரிமைகள் தொடர்பான நடவடிக்கைத் திட்டம் ஒன்றை ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கான சிறிலங்காவின் சிறப்பு தூதுவரும், அமைச்சருமான மகிந்த சமரசிங்க இன்று காலை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளருக்கு அனுப்ப்ப்படவுள்ள இந்த நடவடிக்கை திட்ட அறிக்கை, யாருக்கெல்லாம் தேவைப்படுகிறதோ அவர்களுக்கெல்லாம் வழங்கப்படும் என்றும் மகிந்த சமரசிங்க மேலும் கூறியுள்ளார். மனிதஉரிமைகள் நிலைமை தொடர்பாக அண்மைக்காலமாக அனைத்துலக அளவில் அதிகரித…
-
- 0 replies
- 441 views
-
-
[ வியாழக்கிழமை, 06 ஒக்ரோபர் 2011, 08:36 GMT ] [ நித்தியபாரதி ] "நாங்கள் கியூபா, வெனிசுலா, மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசாங்கங்களுடன் எமது நிலைப்பாடு தொடர்பாக எடுத்துரைப்பதற்கும், அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காகவும் எமது பிரதிநிதிகளை அனுப்ப விரும்புகின்றோம்" இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்ததாக தென்னமெரிக்கா நாடான கியுபாவை தளமாக கொண்ட 'HAVANA TIMES' இணையத்தள ஊடகத்தில் அவருடனான உரையாடலினை நடத்திய Ron Ridenour தனது அண்மைய கட்டுரையில் எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. Ron Ridenour எழுதிய கட்டுரை வடிவிலான அந்த உரையாடலின் முழுவி…
-
- 0 replies
- 588 views
-
-
நீர்கொழும்பு விமான விற்பனை முகவராகவும் வாகனங்களை விற்பனை மற்றும் வாடகைக்கு விடுவதிலும் ஈடுபட்ட வர்த்தகர் பல மில்லியன் ரூபா மோசடி செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். இவரிடம் சுமார் 35 பேர் வரை ஏமாந்துள்ளதாகத் தெரியவருகின்றது. இவர்கள் நீர்கொழும்பு, பேலியகொடை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர். சுமார் 150 மில்லியன் ரூபா முதல் 200 மில்லியன் ரூபா வரை மோசடி செய்துள்ளதாக அறியவருகின்றது. விதானகங்கானகே பியங்கா கருணாரத்ன என்பவரே மோசடியில் ஈடுபட்டவராவார். இவர் தனது மனைவி பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து குழுவாக இயங்கியே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவர் நீர்கொழும்பு கொப்பராசந்தியில் தனது அலுவலகத்தை நடத்திவந்தார். வாகனங்களை அதன் பெறுமதியிலும் பார்க்க 5,6 இலட்சம் ரூ…
-
- 0 replies
- 611 views
-
-
11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியை 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் சுழிபுரம் பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: வட்டுக்கோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே குறித்த இருவரும் கல்வி கற்று வருகின்றனர். அவர்கள் இருவரும் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.சம்பவதினம் குறித்த மாணவி பாடசாலையால் வீடு திரும்பி தனியாக இருந்த வேளையிலேயே மாணவன் அவரை வன்புணர் வுக்கு உட்படுத்தியுள்ளார். மாணவி சத்தமிட்ட போதும் மாணவன் வாயினுள் துணியைத் திணித்துவிட்டு வன்புணர்வு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி தற்போது யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருக…
-
- 11 replies
- 2.4k views
-
-
திருகோணமலையில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிறிலங்காப் படைச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 13 படையினர் படுகாயமடைந்துள்ளனர். திருகோணமலை திஸ்ஸ கடற்படைத் தளத்தில் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்ட சிறிலங்கா படையினரை ஏற்றிச் சென்ற வாகனமே பூநகர் பகுதியில் மரம் ஒன்றுடன் மோதியுள்ளது. இந்தச் சம்பவத்தில் 14 சிறிலங்காப் படையினர் படுகாயமடைந்தனர். இவர்கள் சேருநுவர, கந்தளாய் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறிலங்காப் படையினரில் ஒருவர் இன்று காலை மரணமானதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிகால் ஹப்புஆராய்ச்சி தெரிவித்துள்ளார். http://www.puthinapp...?201110061…
-
- 0 replies
- 970 views
-
-
கொள்கையில் உறுதியும் நேர்மையும் கொண்டவர்கள் கஜேந்திரன் குழுதான் என்றும் அவர்களின் கீழ்தான் மக்கள் அணிதிரள வேண்டும் என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பிரான்ஸில் நடைபெற்ற ஒன்று கூடல் நிகழ்ச்சியில் தெரிவித்தார். பிரான்ஸில் உள்ள வட்டக்கச்சி இராமநாதபுரம் ஒன்றியம் ஏற்பாடு செய்த ஒன்று கூடல் கடந்த திங்கட்கிழமை மாலை பரிசில் நடைபெற்றது. இந்த ஒன்று கூடலில் காரைநகரைச்சேர்ந்த தம்பிப்பிள்ளை மாணிக்கவாசகம் என்பவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சிறிதரன் இதனைத்தெரிவித்தார். கஜேந்திரகுமார், கஜேந்திரன் போன்றவர்களை ஏன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இணைத்துக்கொள்ளவில்லை என மாணிக்ஸ் என அழைக்கப்படும் மாணிக்கவாசகம் என்பவர் அக்கூட்டத…
-
- 1 reply
- 999 views
-
-
முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழினம் பேரழிவைச் சந்தித்ததன் பின்னர், தமிழினத்தின் இருப்பையும் வாழ்வையும் உறுதிப்படுத்துவதில் புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை இரண்டு விடயங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. இதனை தான் தமிழரல்லாத கல்விமான்களும், அரசியல் தலைமைகளும், ஏன் தேர்ந்த தமிழர் தேசிய செயற்பாட்டாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். புலம்பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் அரசியல் பார்வையாளர்கள் என்ற நிலையில் இருந்து பங்காளிகள், தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற நிலையை அடைதல். தாயகத்தில் தேர்தல் களங்களில் இருந்து தம்மை விளக்கிக் கொண்டவர்கள் புலம்பெயர்ந்த தேசங்களில் அரசியல் மயப்படுத்தப்பட்ட ஒரு இனக்குழுமமாக தம்மை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை. அதனுடன் சேர்த்து …
-
- 0 replies
- 614 views
-
-
யாழ். குடாநாட்டில் பிள்ளைகளினால் கைவிடப்படும் முதியவர்களின் தொகை அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலக சமூக சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் பிள்ளைகளினால் பெற்றோர்கள் முதியோர் இல்லங்களில் பெரும் தெகையில் சேர்க்கப்படுவதாகவும் அவர்களை வீடுகளில் வைத்து பராமரிப்பதற்கு பிள்ளைகள் தயங்குவதாகவும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிப்பதாக யாழ். மாவட்ட செயலக சமூக சேவைகள் பணிமனை குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக அரச உத்தியோகத்தில் உள்ள பிள்ளைகள் தங்கள் வேலைப்பளு காரணமாகவும் உரிய முறையில் பெற்றோர்களைக் கவனிக்க முடியாத நிலையில் இருப்பதன் காரணமாகவும் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் தங்கவைத்து பராமரிப்புக்கான தொகையை மாதா மாதம் கட்டுவதாக தெரிவிக்கப்பட்ட…
-
- 0 replies
- 785 views
-
-
அண்மையில் நோர்வேயில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏரிக் சொல்ஹெம் அவர்களை சந்தித்து இலங்கையின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து விரிவான சந்திப்பொன்றை நடாத்தியதாக தெரியவருகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நோர்வேக்கு விஜயம் செய்த போது, ஏரிக் சொல்ஹெம் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியதுடன், இனப்பிரச்சினை தொடர்பாக இலங்கை அரசாங்கம் மோற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடியதாகவும், அரசாங்கம் – கூட்டமைப்பு பேச்சுவார்த்தையின் முன்னேற்றங்கள் மற்றும் அவற்றில் உள்ள தடைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராய்ந்ததாகவும் தெரியவருகிறது. இச்சந்திப்பின் போது இலங்கை அரசாங்கத்தின் தமிழர் தாயக…
-
- 0 replies
- 692 views
-
-
இலங்கை அரசின் பேச்சை கேட்டு தமிழ்ப் பாடசாலைகளை மூடுவதற்கு நெதர்லாந்து அரசாங்கம் ஆலோசனை Thursday, October 6, 2011, 8:51 நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகளால் நடத்தப்படும் வார இறுதிப் பாடசாலைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தீவிரவாத முறியடிப்பு மற்றும் பாதுகாப்புக்கான தேசிய இணைப்பாளர் ஆலோசனை நடத்தி வருவதாக நெதர்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. நெதர்லாந்தின் பாதுகாப்பு மற்றும் நீதி அமைச்சர் ஐவோ ஒப்ஸ்ரெல்ரன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகளால் 21 வார இறுதிப் பாடசாலைகள் நடத்தப்பட்டு வருதாகவும்,இங்கு விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் பற்றி தமிழ்ச் சிறுவர்களுக்குப் போதிக்கப்படுவதாகவும் டச்சு கா…
-
- 1 reply
- 802 views
-