ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143323 topics in this forum
-
கொழும்பிலுள்ள பிரபலமான கணக்காய்வு நிறுவனத்தில் பணிபுரியும் தமிழர் ஒருவருக்கு நேர்ந்த கதி இது. கணக்காய்வு நிறுவனங்கள் பிற நிறுவனங்களின் நிதியிடல் அறிக்கைகளையும் கணக்காய்வுகளையும் மேற்கொள்கின்றன. அந்த வகையில் இந்தப் பிரபலமான நிறுவனத்துக்கு துறைமுகத்திலுள்ள ஏற்றுமதி இறக்குமதியுடன் தொடர்புடைய நிறுவனமொன்றின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்பந்தம் கிடைத்துள்ளது. அதன்பிரகாரம் துறைமுகத்துக்குள் அமைந்துள்ள அந்த நிறுவனத்துக்குச் சென்று கணக்காய்வுகளை மேற்கொள்ள பிரபல நிறுவனத்தின் சார்பாக நால்வர் நியமிக்கப்பட்டனர். அவர்களில் இந்தத் தமிழ் இளைஞரும் ஒருவர். ஆர்வத்துடன் பணியாற்றக் காத்திருந்த இவருக்கு இறுதியில் மிஞ்சியது ஏமாற்றம் மாத்திரமே. தமிழர் என்பதற்காக துறைமுகத்…
-
- 4 replies
- 1.1k views
-
-
மீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை வெறித் தாக்குதல்- 30 பேர் காயம் தமிழக மீ்னவர்கள் மீது இலங்கை கடற்படை காடையர்கள் மீண்டும் வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 30 பேர் காயமடைந்துள்ளனர். நடுக் கடலில் நடந்த இந்த அட்டூழியச் செயலால் தமிழக மீனவர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர். ராமேஸ்வரம், வேதாரன்யம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென இலங்கைப் படையினர் வந்தனர். தமிழக மீனவர்களை முற்றுகையிட்ட அவர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்களைத் தாக்கினர். அவர்கள் வைத்திருந்த ஜிபிஎஸ் கருவிகள், மீன்கள் உள்ளிட்டவற்றைப் பறித்துக் கொண்டனர். இன்று அதிகாலை நடந்த இந்த தாக்குதலில் 30 மீனவர்கள் காயமடைந்தனர். பின்னர் அனைவரையும் மிரட்…
-
- 7 replies
- 885 views
-
-
யாழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளது : 28 ஜூலை 2011 யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பத்தாகக் காணப்பட்டது. தற்போது அந்த எண்ணிக்கை ஆறாக குறைக்கப்பட உள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. வாக்காளர் எண்ணிக்கையின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 320000த்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து குறைக்கப்படும் ஆசனங்கள் ரத்தினபுரி, மாத்தறை, குருணாகல் மற்றும் பது…
-
- 1 reply
- 625 views
-
-
Jul 29, 2011 / பகுதி: செய்தி / ஓமந்தையில் தொடருந்தின் குறுக்கே பாரஊர்தி பாய்ந்து கோர விபத்து: மூவர் பலி! கொழும்பிலிருந்து ஓமந்தை நோக்கி பயணித்த தொடருந்து ஒன்று பார ஊர்தியுடன் மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இருவர் படுகாயமடைந்த நிலையில் ஒமந்தைப் பொலிஸாரினால் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் அங்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று வியாழக்கிழமை நண்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது:- குறிப்பிட்ட தொடருந்து ஓமந்தை தொடருந்து நிலையத்தை அண்மித்தவேளை திடீரென மரமேற்றி வந்த பாரஊர்தி ஒன்று தொடருந்துக் கடவையைக் கடக்க முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்துள…
-
- 2 replies
- 657 views
-
-
ராஜபக்ஷக்கள் தீர்மானிக்காவிடின் நாட்டின் யுத்தத்திற்குப் பின்னரான நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படாது: லூயிஸ் ஆர்பர் [Thursday, 2011-07-28 08:55:37] தென்னாபிரிக்காவிடமிருந்து மட்டுமே இலங்கை பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியுமென்று சர்வதேச நெருக்கடிக் குழுவின் தலைவரான லூயிஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவ தென்னாபிரிக்காவால் செய்யக்கூடியது என்ன என்ற தலைப்பில் லூயிஸ் ஆர்பரின் கருத்தை பிரிட்டனின் த சன்டே டைம்ஸ் பத்திரிகை கடந்த 24 ஆம் திகதி பிரசுரித்திருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; கடந்த கால உண்மையை வெளியிடுவதற்கான உறுதியான முயற்சி இல்லாமல் பல தசாப்த கால உள்நாட்டு மோதலை வெற்றிகொள்ள ஆரம்பிக்க முடியாது என்பதுடன், நல்லிணக்கத்…
-
- 1 reply
- 508 views
-
-
கத்தியின் நுனியில் தொங்கும் ரணிலின் தலைமைப் பதவி புதிய தலைவராகப் பொறுப்பேற்க கரு ஜசூரிய தயாராகிறார் [Thursday, 2011-07-28 17:21:23] நாட்டையும் நாட்டு மக்களின் நலனையும் பாதுகாப்பதற்காக உயர்மட்டக் குழுவின் வேண்டுகோளுக்கிணங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு கரு ஜயசூரிய இணக்கம் தெரிவித்துள்ளார் என சஜித் பிரேமதாச கூறியுள்ளார். இன்று பிற்பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே ஐ.தே.க. பிரதித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச மேற்படி கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறுகையில், எமது நாடும் நாட்டு மக்களும் வரலாற்று ரீதியான ஆட்சி மாற்றத்தை வேண்டி நிற்கும் தருணம் ஏற்பட்டுள்ளது. காரணம் தற்போத…
-
- 0 replies
- 800 views
-
-
கொழும்பில் டெங்குநோய் வேகமாகப் பரவிவரும் இடங்கள் இனங்காணப்பட்டன _ 7/28/2011 4:28:00 PM Share கொழும்பில் டெங்குநோய் வேகமாகப் பரவிவரும் இடங்களை இனங்கண்டுள்ளதாக மாநகரசபையின் பிரமத வைத்திய அதிகாரி பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையை அண்டிய பகுதி, வனாத்தமுல்லை, மருதானை, மாளிகாவத்தை, கிரான்ட்பாஸ், மட்டக்குளிய, ஆட்டுப்பட்டித்தெரு, கொச்சிக்கடை ஆகிய பகுதிகளிலேயே டெங்கு நோயாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதிவரை நாடு முழுவதிலும் 13 ஆயிரத்து 516 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் 5 ஆயிரத்து 141 பேர் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பி…
-
- 0 replies
- 552 views
-
-
ஐதேகவில் மீண்டும் பிளவு: தலைவர் கரு, ஜனாதிபதி வேட்பாளர் சஜித்? Thursday, July 28, 2011, 19:38 சிறீலங்கா நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியை கண்டதன் விளைவாக அக்கட்சிக்குள் பாரிய மாற்றங்கள் ஏற்படக் கூடுமென கட்சியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று மாலை கூடி கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதோடு இன்று காலையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்புக்களில் எடுக்கப்பட்ட தீர்மானம் மற்றும் முடிவுகள் குறித்து சஜித் பிரேமதாஸ இன்று ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவ…
-
- 0 replies
- 543 views
-
-
தொடரும் பதிவுகளால் கிலி கொள்ளும் தமிழர்கள் வடமாகாணத்தில் பாதுகாப்பு அமைச்சின் தேவைக்காக வாழ்நிலைத் தகவல்களைக் கணக்கெடுத்தல் என்ற செயற்பாட்டு புள்ளி விவரத் திணைக்களத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாமல் வடக்கில் மட்டுமே இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆசிரியர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் களேபரங்களுக்கு மத்தியில் வன்னியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் கணக்கெடுப்பு முழுமையாக முடிந்து விட்டது. வன்னி மாவட்டத்தில் கணக்கெடுப்புப் பணியை தம்மால் மேற்கொள்ளமுடியாது என ஒரு பகுதி ஆசிரியர்கள் எதிர்த்த போதும் எஞ்சியவர்களைக் கொண்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு முடிக்கப்பட்டன. இந்தப் பணியை மேற்க…
-
- 1 reply
- 888 views
-
-
சிங்கள அரசின் தமிழினப் படுகொலை – வைக்கோவின் விளக்கம்!(காணெளி) Published on July 28, 2011-10:24 am No Comments சிங்கள் பேரினவாத அரசின் தமிழினப் படுகொலை தொடர்பாக ஐ.நா நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கைக்கு பொருத்தமான காட்சிகள் இணைக்கப்பட்டு வைக்கோ அவர்கள் காணொளி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் முழு வடிவத்தை அப்படியே இங்கு தருகிறோம். http://www.saritham.com/?p=27967
-
- 1 reply
- 732 views
-
-
தோல்வியை அடுத்து; யாழ். உயர் அதிகாரிகளை இலக்கு வைக்கிறது அரசு; சிலர் வீட்டுக்கு; பலருக்கு இடமாற்றங்கள் Thursday, July 28, 2011, 9:38 சிறீலங்கா நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கில் அரசு பெரும் தோல்வி அடைந்தது. இதனை அடுத்து வடக்கில் உள்ள அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகளின் பதவிகளில் விரைவில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன. முதல் நடவடிக்கையாக வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு ஆளுநரால் பணிக்கப்பட்டுள்ளார். வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாகப் பணியாற்றுபவர்கள் உட்பட மீள் நியமனம் பெற்றுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அதிகாரிகளையும் கூட உடனடியாகப் பணி நீக்கம் செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.…
-
- 1 reply
- 488 views
-
-
சிங்களத்திற்கும் சர்வதேசத்திற்கும் தெளிவான தீர்க்கமான செய்தியும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய மீள்ஆணையும்! அச்சுறுத்தல் அடாவடித்தனங்களுக்கு மத்தியில் அமைதியாகப் பதில் அளித்த மக்களை தமிழர் நடுவம் பாராட்டி வாழ்த்துகின்றது. தமிழ் மக்கள், கடந்த பல தசாப்தங்களாக, வெளிப்படுத்தி வந்த தமது தேசிய நிலைப்பாட்டை, மீண்டும் ஒரு முறை மிகத் தெளிவாகவும், தீர்க்கமாகவும் நடந்துமுடிந்த உள்ள+ராட்சித் தேர்தலின்மூலம் வெளிப்படுத்தி உள்ளனர். நடந்து முடிந்தது உள்ள+ராட்சித் தேர்தல் என்று பொத்தாம் பொதுவில் கருதப்பட்டாலும், அது தமிழ் மக்கள் தமது தேசிய நிலைப்பாட்டில் கொண்டிருக்கும் ஈடுபாடு தொடர்பான அளவிடுதல் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது. வன்னி மண்ணில், மிகமோசமான, காட்டுமிராண…
-
- 0 replies
- 521 views
-
-
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. சோஷலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சிறிது நேரத்தின் பின்னர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்ப…
-
- 0 replies
- 394 views
-
-
பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்ட ஆதார காணொளியை பார்க்க சில நிமிடங்கள் கூட ஒதுக்க முடியாத உலகத்தலைவராக இருக்கின்ரார் பான் கி மூன். . பான் கி மூன் இன்னமும் சனல்4 இன் இலங்கையில் கொலைக்களம் என்கின்ற காணொளியை பார்க்க இல்லையாம். அதே நேரம் இலங்கையில் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் அதனை விசாரிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் கடமையே தவிர அது ஐக்கிய நாடுகளின் பொறுப்பு இஒலை எனவும் கூறியுள்ளார் ஐ. நா. பேச்சாளர். இது தொடர்பான மேலதிக தகவல் வருமாறு; இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வது இலங்கையின் சொந்த நடவடிக்கையாகும் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது இந்தநிலையில் இலங்கையின் இந்த விசாரணை நடவடிக்கை, எவ்வாறு முன்னெடுக்கப்படுகிறது என்பதை அவதானிப்பதே ஐக்கி…
-
- 3 replies
- 988 views
-
-
சிறிலங்காவைச் சேர்ந்த 151 பேர் ஆந்திராவில் கைது – சந்தேகத்துக்கிடமாக தங்கியிருந்தனராம் [ வியாழக்கிழமை, 28 யூலை 2011, 03:09 GMT ] [ அ.எழிலரசன் ] இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் தங்கியிருந்த சிறிலங்காவைச் சேர்ந்த 151 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலை அடுத்து துணி என்ற இடத்தில் லோவா என்ற மலைப்பகுதி கிராமத்தில் அமைந்துள்ள தலுபுலம்மன் கோவில் சுற்றாடலில் வைத்து நேற்று அதிகாலை இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளைப் பேசுவதாக தகவல்கள் கூறுகின்றன. பத்து நாட்களுக்கு முன்னர் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த இவர்கள் ஆலயத்தில் தங்கியிருந்த போத…
-
- 0 replies
- 555 views
-
-
பகுப்பாய்வு அறிக்கையில் உறுதியாம். 11 ஆண்டுகளின்பின் தூசுத்தட்டப்படும் மிருசுவில் மனிதப்புதைகுழி வழக்கு. இன்று மீண்டும் விசாரணைக்கு. [Wednesday, 2011-07-27 21:32:05] யாழ், மிருசுவில் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை மீண்டும் நடைபெற்றது.புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆடைகள் தொடர்பான அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் சாட்சியத்துக்காக அழைக்கப்பட்டிருந்தது. புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த ஆடைகள் அந்த படுகொலை செய்யப்பட்டிருந்தோர் அணிந்திருந்தவை தான் என்பதை அரச பகுப்பாய்வு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரதி பகுப்பாய்வாளர் டி.எச்.எல். ஜயமான நீதிமன்றத்தில் தெரிவித்தார். கதிரேஸ் ஞானவி…
-
- 5 replies
- 550 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தார்மீகப் பொறுப்பு என்ன? [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-07-28 12:25:18| யாழ்ப்பாணம்] தமிழர் பகுதிகளில் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியடைந்தமைக்கான காரண காரியங்கள் பற்றி ஆராய்ந்த நாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைந்த மகத்தான வெற்றியின் தாற்பரியம் குறித்தும் ஆராய்வது தக்கார் தொழில் பாற்படும். அவ்வகையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடைந்துகொண்ட மகத்தான வெற்றி என்பது அந்தக் கட்சிக்கான வெற்றியன்று. மாறாக தமிழ் மக்கள் தம் இனத்திற்கு ஈனம் இழைத்த ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்க முடிபு செய்தனர். அப்படியானால், யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வி எழுகின்றது. இங்குதான் தந்தை செல்வநா…
-
- 0 replies
- 380 views
-
-
வாழ்வாதார மேம்பாட்டுக்கான நேசக்கரம் வழங்கிய கடனுதவி திருமுறிகண்டியில் வசிக்கும் 7குடும்பங்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவிகளை வேண்டியிருந்தோம். எமது வேண்டுதலை ஏற்று உதவிகளை வழங்கிய புலம்பெயர் உறவுகள் அனைவருக்கும் நேசக்கரம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 7குடும்பங்களில் முதற்கட்டமாக 4குடும்பங்களுக்கான உதவிகளை வழங்கியிருக்கிறோம். தலா குடும்பமொன்றுக்கு 30000ரூபா அடிப்படையில் மொத்தம் 120000,00ரூபா வழங்கப்பட்டுள்ளது. இவ்வுதவியினை மீளளிப்புக்கடன் திட்ட அடிப்படையில் வழங்கியிருக்கிறோம். பயனாளிகள் 3மாதங்களின் பின்னர் மாதாந்தம் ஆயிரம் ரூபா வீதம் உதவியினை மீளளிப்பதாக உறுதியளித்தமைக்கு அமைவாக மேற்படி திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். உதவிபெற்றவர…
-
- 2 replies
- 922 views
-
-
யாழ் நகர பகுதியில் 5 நட்சத்திர விடுதி ... 25 ஜூலை 2011 ஒன்று அமைப் பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பமாகி விட்டதாகத் தெரிய வருகின்றது. யாழ் நகர பகுதியில் 5 நட்சத்திர விடுதி ... யாழ் நகர பகுதியில் 5 நட்சத்திர விடுதி ஒன்று அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பமாகிவிட்டதாகத் தெரிய வருகின்றது. யாழ்ப்பாணம் கோட்டையை அண்டிய குடாக்கடல் பகுதியில் இப்பணிகள் இடம்பெறுகின்றது. கொழும்பை சேர்ந்த தாஜ் ஹொட்டல் உரிமையாளர் தரப்பே காணிகளைக் கொள்வனவு செய்து விட்டதாக தெரியவருகிறது. 5 நட்சத்திர விடுதியை யாழ்ப்பாணத்தில் அமைக்க முடிவுகள் மேற்கொண்டு அதற்கேற்ப காணிகள் கொள்வனவு செய்யப்பட்டு யாழ் கோட்டைக்கு முன்னதாக 5 நட்சத்திர விடுதி ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. க…
-
- 19 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவாகும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆசன எண்ணிக்கை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்;ப்பாண மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 3லட்சத்தினால் குறைவடைந்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. . தேர்தல் திணைக்களத்தின் தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன.இதன் படி, இதுவரையில் 10 நாடாளுமன்ற ஆசனங்களை கொண்டிருந்த யாழ்ப்பாண மாவட்டம், இனி வரும் தேர்தல்களில் 6 ஆசனங்களுக்கு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. . இந்த ஆசனங்கள், பதுளை, ரத்தினபுரி, மாத்தரை மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்களுக்கு பகிரப்படவுள்ளன. Eelanatham. Net
-
- 0 replies
- 1k views
-
-
மூவின மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றினையே விரும்புவதாக சுமந்திரம் இலண்டனில் கூறியதற்கு அரசாங்கம் வரவேற்பு தெரிவித்தது. ஒட்டுக்குழு மந்திரி கருணாவும் வரவேற்பு கூறி இருந்தார். இது விடயம் பற்றி மட்டு மாவட்ட கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அரிய நேந்திரன் கூறுகையில்; சுமந்திரன் இலண்டனில் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. சிங்கலமக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பது அவர்களது பிரச்சினை. அதில் நாம் தலையிடத்தேவை இல்லை. தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு தேவை என்பதனை நாம்தான் கூறவேண்டும் அதுதான் எமது பணி என்று கூறினார். . அத்துடன் அரசுடன் 10 வது தடவையாக கூட்டமைப்பு பேசப்போவதாகவும் கூறியுள்ள அரிய நேந்திரன் இந்த தடவை அரசாங்கத்தின் பக்கம் சில மாறுதல்கலை அவதான…
-
- 0 replies
- 699 views
-
-
இந்தியாவிலிருந்து திரும்பிய 1000 பேருக்கு தலா 137000 ரூபாவாம்! Published on July 28, 2011-4:42 am யுத்தம் காரணமாக இந்தியாவுக்குச் சென்று அகதி முகாம்களில் வாழ்ந்து தாயகம் திரும்பிய ஆயிரம் பேருக்கு மீள்குடியேறுவதற்காக தலா ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபா உதவிப்பணம் வழங்கப்பட்டுள்ளது என்று மீள்குடியேற்ற அமைச்சு நேற்றுத் தெரிவித்தது. அத்துடன், யுத்தத்தினால் இடம்பெயர்ந்து ஏனைய நாடுகளில் அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கையர்கள் மீண்டும் தாயகத்துக்குத் திரும்பினால், அவர்களுக்கும் இவ்வாறு உதவிகளை வழங்கத் திட்டமிட்டு வருகின்றனர் என மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறினார். இந்தியாவிலுள்ள பல்வேறு அகதி முகாம்களில் தங்கியிருந்த 1,000 இலங்கையர்கள் அண்மையில…
-
- 3 replies
- 648 views
-
-
வியாழக்கிழமை, 28 யூலை 2011, 03:09.46 AM GMT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை கொச்சைப்படுத்துவதால் அரசுக்கு சர்வதேச அழுத்தம் ஏற்படும் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன எச்சரிக்கின்றார். இது தொடர்பாக அவர் தெரிவித்தவை வருமாறு: நடைபெற்ற உள்ளூராட்சி சபைத்தேர்தல்களில் எப்படியாவது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடனேயே அரசு செயற்பட்டது. இதற்காக ஜனாதிபதி, அமைச்சர்கள், அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வடக்குக்குப் படையெடுத்துச் சென்றனர். அங்கு சென்று அப்பட்டமாகத் தேர்தல் விதிகளை மீறி செயற்பட்டனர். அதுமட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகத் திட்டமிட்டபடி வன்முறைகளைக் கட்டவி…
-
- 0 replies
- 659 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான போராளிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்தும் மறைந்து வாழ்ந்து வருகின்றனர் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறானவர்கள் உடனடியாக முகாமில் சரணடையுமாறும் அவ்வாறு சரணடைபவர்களுக்கு புனர்வாழ்வு ஏற்பாடுகளையும் தொழிற் பயிற்சிகளையும் வழங்க முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை,கிழக்கு மாகாணத்தைச் சிறிலங்கா அரச படை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒரு பேராளி கூட சரணடையவில்லை எனச் சுட்டிக் காட்டியுள்ள அவர்,வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 11,696 போராளிகள் படையினரிடம் சரணடைந்தனர…
-
- 0 replies
- 1k views
-
-
சனல் - 4 தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பான காணொளியும் பொய் எனக் கூறுகிறது இலங்கை இராணுவத் தரப்பு [Thursday, 2011-07-28 10:43:52] பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் - 4 இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்ற ஆதாரமெனக் கூறி நேற்றைய தினம் ஒளிபரப்பிய 13 நிமிடக் காணொளித் தொகுப்பினையும் பொய்யானது எனக் கூறியுள்ள இலங்கை இராணுவத் தரப்பு, அதனை முற்றாக நிராகரித்துள்ளது. நேற்றைய தினம் ஒளிபரப்பான குறித்த காணொளியில் இலங்கையின் யுத்த களத்தில் இருந்த வீரர்கள் எனக் கூறி இருவர் கருத்துகள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=47307&category=TamilNews&language=tamil
-
- 1 reply
- 686 views
-