ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143323 topics in this forum
-
யாழ். வைத்தியஸ்வரக் கல்லூரி மாணவர்கள் இருவர் திடீர் மாயம் Thursday, July 28, 2011, 9:52 சிறீலங்கா யாழ். வைத்தியஸ்வரக் கல்லூரியில் தரம் 9 கல்வி கற்கும் மாணவர்கள் இருவர் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் அவர்களது பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். இம் மாணவர்கள் இருவரும் பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்து பாடசாலை ஒப்படை ஒன்று இருப்பதாகவும் அதற்கு தாங்கள் களவேலை செய்யவேண்டும் என்று கூறிவிட்டு 26 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு வெளியேறிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் இருவரும் இன்றுவரை வீடு திரும்பவில்லை என பெற்றோரின் முறைப்பாட்டிலிருந்து தெரியவந்துள்ளது. …
-
- 2 replies
- 454 views
-
-
நாணயக் குற்றிகள் தட்டுப்பாட்டுக்கு மதத்தலங்கள் மீது குற்றம் சாட்டும் மத்திய வங்கி: கொள்ளையடிக்காமல் வெளியே எடுப்பது குறித்து திட்டம் [Thursday, 2011-07-28 10:52:10] மத வழிபாட்டு தலங்களிலுள்ள உண்டியல்கள் மற்றும் வங்கிகளால் வழங்கப்படும் உண்டியல்களில் நாணயக் குற்றிகள் சிக்கிக் கொண்டிருப்பதால் நாட்டில் நாணய குற்றிகளுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இவ்வாறு சிக்கிக் கொண்டுள்ள நாணயக் குற்றிகளை வெளியே கொண்டு வந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கான திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் மேலதிக வர்த்தக அதிகாரி திருமதி எச்.பீ.ரி.விஜேசூரிய கருத்து தெரிவித்தபோது, நாட்டில்…
-
- 0 replies
- 544 views
-
-
அம்பலத்துக்கு வரும் உண்மைகள்:வலிகாமம் வடக்கு, பலாலி உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் மேலும் 25,114 பேர் மீளக்குடியேற்றப்பட வேண்டியுள்ளனராம் [Thursday, 2011-07-28 09:41:44] வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தின் எல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள தெல்லிப்பழையில் 11,879 குடும்பங்களை சேர்ந்த 38,637 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு இன்னும் 6,928 குடும்பத்தை சேர்ந்த 25,114 பேர் மீளக்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாகவும் சட்டமா அதிபர் - உயர் நீதிமன்றத்திற்கு நேற்று புதன்கிழமை அறிவித்தார். யாழ். குடாநாட்டில் வெவ்வேறு பிரதேசங்களில் குடியேற்றப்பட்ட குடும்பங்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளிவிபரங்களைக் கொண்ட யாழ…
-
- 0 replies
- 507 views
-
-
வியாழக்கிழமை, 28, ஜூலை 2011 (10:3 IST) இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்க இந்தியாவும் முன்வர வேண்டும்: மதிமுக பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கவுள்ளது. இதையொட்டி, டெல்லியில் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் தலைமையில் 27.07.2011 அன்று, அனைத்து கட்சி கொறடாக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பல்வேறு கட்சியினரும் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு பேசினர். அப்போது, தமிழகத்தைச் சேர்ந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கட்சியின் எம்.பி.,யான ஈரோடு கணேசமூர்த்தி இது பற்றி கூறியதாவது: உலகம் முழுவதும் மிக முக்கிய பிரச்னையாக இலங்கைத் தமிழர் பிரச்னை உரு…
-
- 0 replies
- 259 views
-
-
Australia’s cricketers should shun Sri Lanka Despite growing international outrage over the Sri Lankan military’s mass killings of over 40,000 Tamil civilians in 2009, the Sri Lankan government is defiantly refusing to heed international demands for an independent investigation into the atrocities. Instead it is escalating a range of discriminatory and repressive policies towards the Tamil people. Australia’s cricketers should take a principled stand in defence of human rights and justice, and boycott play with Sri Lanka until the government there conducts itself according to the rules of international society. In doing so, they will have the support of the Australian…
-
- 4 replies
- 372 views
-
-
28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த ஐந்து படைத் தளங்களையும் அழித்தொழிப்பதற்காக 28.07.1995 அன்று விடுதலைப் புலிகளால் கடும் தாக்குதல் நடாத்தப்பட்டது. எனினும் சில காட்டிக்கொடுப்புகளால் இத்திட்டம் வெற்றியளிக்காதபோதும் படைத்தளத்திற்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா படைகளின் இரு ஆட்டிலறிப் பீரங்கள் உட்பட பெருமளவு படைக்கலங்களை அழித்திருந்தனர். …
-
- 10 replies
- 880 views
-
-
எம்.வீ.சன் சீ கப்பலில் சென்ற அகதிகளில் ஒருவர் இலங்கையில் யுத்தக் குற்றம் புரிந்தவராம்: நாடு கடத்த உத்தரவு [Wednesday, 2011-07-27 09:43:14] எம்.வீ.சன் சீ கப்பலில் சென்ற அகதிகளில் ஒருவர் இலங்கையில் யுத்தகுற்றம் புரிந்தவர் எனக் கூறி அவரை நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு இவ்வாறான நாடு கடத்தல் தொடர்பான தீர்மானம் கடந்த வாரம் எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா என அகதிகள் சபை விசாரணைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் குறித்த நபர் யுத்த குற்றத்தினை செய்வதற்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என அவருக்கு கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபையால் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்ட ஆவணத்தில் குறி…
-
- 1 reply
- 372 views
-
-
ஈழத்தமிழ் அகதிகள் 130 பேர் தமிழகப் பொலிஸாரால் தடுத்து வைப்பு:துருவித் துருவி விசாரணை [Thursday, 2011-07-28 09:26:13] 130 இலங்கைத் தமிழ் அகதிகள் துனி கிராமப்புர பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அமைந்துள்ள முகாம்களில் வாழ்ந்து வந்தனர். ஆனால் கடந்த ஒரு கிழமையின் முன்பு இவர்கள் சந்தேகத்துக்கு இடமாக துனி கிராமத்தில் உள்ள தளுபுளம்மா லோவா கோவில் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர் என பெத்தபுரம் பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மேலும், பொலிஸார் நேற்றையதினம் அகதிகளை அழைத்து அடையாள அட்டை குறித்து விசாரணை நடத்தியுள்ளனர் என அவர் …
-
- 0 replies
- 534 views
-
-
நூறு வருடங்கள் பழைமை வாய்ந்த நீர்த்தாங்கி இடிந்து விழும் நிலையில் news மன்னார் பொது விளை யாட்டு மைதானத்தில் காணப்படும் 100 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த மிகப் பெரிய நீர்த்தாங்கி எந்த நேரத்திலும் இடிந்து வீழ்ந்து பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய நிலையிலுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் இதன் மூலமாகவே மன்னார் மாவட்டம் முழுவதுக்கும் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. யுத்தத்தின் போது இதற்கும் மோசமான பாதிப்புக்கள் ஏற்பட்டன. ஆனால் இதுவரை எந்தவிதமான பராமரிப்பு வேலைகளும் மேற்கொள்ளப்படாத நிலையிலேயே இது காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த நீர்த்தாங்கி சிறு சிறு துண்டு களாக உடைந்து கீழே விழுந்து கொண்டிருக்கின்றது.அத்துடன் இதன் சிமெந்து மேற்பூச்சுக்கள் க…
-
- 0 replies
- 272 views
-
-
லண்டன் சென்றுள்ள எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஸ் சர்மாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பானது நேற்று லண்டனில் இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பின் போது பொதுநலவாய நாடுகளின் திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளின் 57 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளவுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம்பொக்ஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் வெளிவிவகார தொடர்பு செயலாளர் சாகலரட்நாயக்க மற்றும்…
-
- 3 replies
- 1.7k views
-
-
ஊழ்வினை வந்துறுத்தும்போது மாரகச் சிந்தனையே வெளிப்படும் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-07-27 14:08:44| யாழ்ப்பாணம்] வடபகுதியில் நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் முடிபுகள் வெளிப்படுத்திய அதிர்வலைகள் நீண்டதொரு வரலாற்றுச் சிறப்பம்சமாக அமைந்துவிட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை. ஏனெனில் யாருமே எதிர்பார்க்காத வகையில், தமிழ் மக்கள் தங்கள் தீர்ப்பினை வழங்கியிருந்தனர். யாருக்கு வாக்களிப்பது என்று அடுத்தவருக்கும் சொல்லாமல் வீட்டிலிருந்து வாக்களிப்பு நிலையம் - மை பூசுதல், வாக்களித்தல் - மெளனம் காத்தல் - மீளவும் வீடு திரும்புதல் - வழமைபோல் தம் வேலையில் ஈடுபடுதல் என்ற ஒழுங்கில் மிகவும் பெளவியமாக தமிழ் மக்கள் நடந்துகொண்டனர். தமிழ் மக்களிடம் இத்தகையதொரு ஒற்றுமையை, உத…
-
- 1 reply
- 526 views
-
-
2,709 ஆசிரியர்கள் புதிதாக நியமனம்! 230 பேர் மட்டுமே தமிழர்கள்! Published on July 27, 2011-10:34 am நாடுமுழுவதும் 2,709 ஆசிரியர் நியமனங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளன. இதற்கான அறிவித்தலை கல்வி அமைச்சு விடுத்துள்ளது. எனினும் அவற்றில் 230 நியமனங்கள் மட்டுமே தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அமைச்சின் அறிவித்தல்படி 1,662 சிங்கள மொழி மூல ஆசிரியர்களும் 230 தமிழ் மொழி மூல ஆசிரியர்களும் 138 அழகியல்பாட ஆசிரியர்களும் 84 தகவல் தொழில்நுட்ப பாடஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான நியமனக் கடிதங்கள் விரைவில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஊடாக அனுப்பி வைக்கப்பட உள்ளது. அரசு விரைவில் 4,000 பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் என்று இரு ம…
-
- 3 replies
- 603 views
-
-
செனல்4 ஆவணப்படம் போலியானது – உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு 26 ஜூலை 2011 செனல்4 ஆவணப்படம் போலியானது என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த ஆவணப்படம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக செனல்4 ஊடகம் அண்மையில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த ஆவணப்படம் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்புடன் குறித்த ஆவணப்படம் பரீட்சிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவணப்படத்தின் சில காட்சிகள் பல சந்தர்ப்பங்களில் தொகுக்கப்பட்டுள்…
-
- 14 replies
- 1.1k views
-
-
யுத்தத்தை முன்பே முடித்திருக்கலாம்:சொல்கிறார் போர்குற்றவாளி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரே யுத்தத்தை நிறைவுசெய்திருக்க முடியும் எனினும் வெளியக மற்றும் உள்ளக அழுத்தங்கள் காரணமாக 2009 ஆம் ஆண்டுவரை அந்த இலக்கை அடையமுடியவில்லை என ஜேர்மனிக்கான இலங்கை தூதுவரான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுத்தின் 57 ஆவது படைப்பிரிவின் முன்னாள் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், பாரிஸ் நகரிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு கடந்த 22 ஆம் திகதி விஜயம் செய்தபோது, அங்கு நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். ஜனாதிபதியின் உறுதியான தலைமைத்துவத்தினாலும் அர்ப்பணிப்பினாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான மிக நீண்ட யுத்தமாக அறியப்பட்ட யுத்தத்த…
-
- 3 replies
- 450 views
-
-
இலங்கையின் கொலைக்களம் - உறுதிப்படுத்தும் புதிய ஆதாரங்களும் வெளியாகி உள்ளன:- 27 ஜூலை 2011 சனல் 4 வெளியிட்ட மிக முக்கியமான விடயங்கள் - கேளுங்கள் பாருங்கள் http://bcove.me/1k9i6jv4 http://bcove.me/knq597e0 போர்க்குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபேய ராஜபக்சவும் படையணிகளின் தலைமையதிகாரி சர்வேந்திர சில்வாவும் உத்தரவிட்டதாக இறுதிப்போர் இடம் பெற்ற போது அங்கிருந்த இரண்டு பேர் சனல் 4க்கு அளித்த புதிய சாட்சியங்களை அது இன்று வெளியிட்டுள்ளது. சாட்சிதாரிகளில் ஒருவரான இராணுவ அதிகாரி ஒருவர் விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரணடைவதற்கான உத்தரவாதம் ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நிலையில், சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களைச் சுட்டுக் கொ…
-
- 1 reply
- 1.3k views
-
-
அதிகாரப் பகிர்வின் மூலம் இனங்களுக்கு இடையில் பிணைப்பை ஏற்படுத்த முடியும் - சந்திரிக்கா : 27 ஜூலை 2011 "வீடியோவைப் பார்த்த தனது மகனும் மகளும் தங்களை சிங்களவர் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப்படுகிறோம்" என்றார்களாம் http://bcove.me/knq597e0 முதலாம் இணைப்பு 25-07-2011 - 01:58 பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்றில் இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணத் திரைப்படத்தை பார்த்து விட்டு என்னுடன் தொலைல பேசியில் தொடர்பு கொண்ட 28 வயதான எனது மகன் விம்மி அழுதவாறு தான் ஒரு இலங்கை சிங்களவர் எனக் கூறிக் கொள்வதில் வெட்கப்படுவதாக குறிப்பிட்டார். அதே விடயத்தை எனது மகளும் ஆச்சயத்துடன் கூறினார். ஏனையவர்கள் தொடர்பில் அக்கறை கொண்டுள்ள எனது மகன் மற்றும் மகள் தொடர்பில் நான் பெரு…
-
- 1 reply
- 584 views
-
-
உள்ளுர், வெளியூர் அழுத்தங்கள் இல்லாவிட்டிருந்தால் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரே யுத்தத்தை முடித்திருக்கலாமாம் [Wednesday, 2011-07-27 23:28:52] உள்ளுர், வெளியூர் அழுத்தங்கள் இல்லாவிட்டிருந்தால் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரே யுத்தத்தை முடித்திருக்கலாம் என ஜேர்மனிக்கான இலங்கை தூதுவரான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரே யுத்தத்தை நிறைவுசெய்திருக்க முடியும் எனினும் வெளியக மற்றும் உள்ளக அழுத்தங்கள் காரணமாக 2009 ஆம் ஆண்டுவரை அந்த இலக்கை அடைய முடியவில்லை என ஜேர்மனிக்கான இலங்கை தூதுவரான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுத்தின் 57 ஆவது படைப்பிரிவின் முன்னாள் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், பாரிஸ் நகரிலுள்ள இலங்கைத் தூத…
-
- 2 replies
- 620 views
-
-
மட்டக்களப்பு புதூர் மக்கள் வங்கியில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் 12 கோடி ரூபா பெறுமதியான நகைகள் கல்கிசை மற்றும் மட்டக்களப்பு பகுதி வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரகசிய காவல்துறையினர் மீட்டுள்ளனர். புதூர் மக்கள் வங்கியில் அண்மையில் 15 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளும் 35 லட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டன. இவற்றில் 12 கோடி ரூபா தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மிகுதி 3கோடி ரூபா பெறுமதியான தங்கநகைகள் மற்றும் பணத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வங்கிக் கொள்ளை தொடர்பாக மட்டக்களப்பைச் சேர்ந்த பிள்ளையான் குழவைச்சேர்ந்த ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் …
-
- 4 replies
- 918 views
-
-
இலங்கை கொலைக்களமாக இந்தியாவே காரணம் – வீரமணி சிங்கள ராஜபக்சே ஆட்சிக்கு இந்தியா இதுவரை கொடுத்த உதவிகள் ராணுவ உதவிகளில் தொடங்கி பல்வேறு உதவிகள்தான் இவ்வளவு பெரிய கொலைக்களக் காட்சி சிங்கள அரசால் தங்கு தடையின்றி நடப்பதற்கு மறைமுகமாக உதவியதாகவே அமைந்துவிட்டது என்பது மறுக்கப்பட முடியாத உண்மைகளாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுள்ள, 30 கல் தொலைவில் உள்ள அண்டைய நாடான இலங்கையில் தற்போது உள்ள சிங்கள ராஜபக்சே அரசு, பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போரை நடத்துகிறோம் என்றுகூறி, அந்த மண்ணின் பூர்வீக மைந்தர்களான தமிழர்களின் வாழ்வுரிமையையே பறித்து, அவர்களில் பல லட்சக்கணக்கான அப்பாவி…
-
- 8 replies
- 987 views
-
-
இலங்கைக்கு தடைவிதிக்கும் தீர்மானம் குறித்து ஜெயலலிதா மகிழ்ச்சி Posted by சங்கீதா on 27/07/2011 in செய்தி இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது நடந்ததாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறும் வகையில் இலங்கைக்கான உதவியை தடை செய்யும் தீர்மானம் அமெரிக்க காங்கிரஸ் (நாடாளுமன்றம்) குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளதையிட்டு ஜெயலலிதாவின் தலைமையிலான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பெரும் மகிழச்சியில் ஆழ்ந்துள்ளது என ‘தி ஏசியன் ஏஜ்’ செய்தி வெளியிட்டுள்ளது. அ.இ.அ அண்ணா தி.மு.க வைச் சேர்ந்த பல அமைச்சர்களும், சிரேஷ்ட அங்கத்தவர்களும் அமெரிக்காவின் முன்னுதாரணத்தை பாராட்டி செவ்வாய்க்கிழமை தமிழ் பத்திரிகைகளில் பெரிய விளம்பரங்களை பிரசுரித்திருந்தனர். உலகி…
-
- 1 reply
- 853 views
-
-
தமிழர் சமஷ்டி கோர முடியாது- ஹெல உறுமய இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெற்றி பெற்ற பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை அவர்களே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருக்கிறார். நாட்டின் ஒரு சில பிரதேசங்களில் பெற்ற வெற்றியைக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி நிர்வாக அதிகாரங்களைக் கோரமுடியாது எனவும் கடுந்தொனியில் அவர் பேசியிருக்கிறார். உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான அரசாங்கத்தின் திறனாய்வு பற்றி செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதான செயலாளர் சம்பிக்க ரணவக்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ‘நாட்டின் ஒருமைப்பாட்டு…
-
- 23 replies
- 2.1k views
-
-
இலங்கை தொடர்பான இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி – மகளிர் உரிமை அமைப்பு 27 ஜூலை 2011 தமிழல் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- இலங்கை தொடர்பான இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி – மகளிர் உரிமை அமைப்பு இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இந்தியாவின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அந்நாட்டின் மகளிர் உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. இலங்கையில் பாரியளவு மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக குறித்த மகளிர் உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் காலத்துக்கு காலம் வழங்கி வரும் வாக்குறுதிகளில் எவ்வித நம்பிக்கையும் கிடையாது என தெரிவித்து…
-
- 0 replies
- 473 views
-
-
சிங்களவர்களுடன் தமிழ் மாணவர்கள் கிரிக்கெட் போட்டியா? பெரியார் தி.க. கண்டன போராட்ட அறிவிப்பு டெல்லியில் நடைபெறவிருக்கும் கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக விளையாட பொள்ளாச்சி கல்லூரி மாணவர்கள் 4 பேர் சென்றுள்ளனர். இதற்கு பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். Short URL: http://meenakam.com/?p=31521
-
- 0 replies
- 694 views
-
-
வட கிழக்கு சிறார்களின் எதிர்காலத்திற்கு பிரான்ஸ் அரசாங்கம் உதவும் Wednesday, July 27, 2011, 21:32 சிறீலங்கா பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ. கிறிஸ்டின் ரொபிகொன் நேற்று சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவை அவரது அமைச்சில் சந்தித்து கிழக்கு மாகாணத்திலுள்ள வறிய மாணவர்களின் எதிர்காலம் தொடர்பாக கலந்துரையாடினார். குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் இன்றைய நிலமைகள் தொடர்பாகவும், வட கிழக்கிலே யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட சிறார்களுடைய கல்வி மற்றும் அவர்களுடைய எதிர்காலம் தொடர்பாகவும், இதற்கான உதவிகளை பிரான்ஸ் அரசாங்கம் இலங்கை அரசுக்கு வழங்குவது தொடர்பாகவும் மிக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. கடந்த 30…
-
- 0 replies
- 376 views
-
-
கொழும்பு விளையாட்டு தமிழகத்திலும் தொடர்கிறது. Wednesday, July 27, 2011, 21:41 இந்தியா, கட்டுரைகள் கொழும்பு அரசத்தலைவர் மகிந்தா கைகளுக்கு வந்த பின்பு, எல்லாவற்றிலும் தமிழருக்கு எதிரான “சதி” என்பது நாளொரு வண்ணமும் அரங்கேறி வருகிறது. அதில் ” டக்லஸ் தேவானந்தாவை” மெல்ல,மெல்ல தனது வலைக்குள் இழுத்து, கடைசியில் “தேவானந்தா” தனது ஈ.பி.டி.பி சின்னத்தில் கூட நிற்கவிடாமல்,, ராஜபக்சேவின் “வெற்றிலை” சின்னத்தில் நிற்கவைத்த “தந்திரம்” மகிந்தாவின் வெற்றியாக சிங்களவெறியர்களால் கருதப்படுகிறது. “துரோகி கருணாவை” முழுமையாக தனது கட்சியுடன் இணையவைத்ததில் மஹிந்தாவென்றதாக அதே சிங்கள இன வெறியர்கள் கூறிவருகிறார்கள்.புலிகளை “நாகப்பாம்பு” என்றும் அதை அழித்து விட்டதாகவும், இனி “ச…
-
- 0 replies
- 756 views
-