Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில் புதிய வாக்காளர் இடாப்பில் 3,31,214 பேர் நீக்கம்! செவ்வாய், 31 மே 2011 21:12 யாழ் மாவட்ட வாக்காளர் இடாப்பிலிருந்து 3,31,214 பேரின் பெயர்களை தேர்தல் திணைக்களம் முற்றாக அகற்றியுள்ளது. இன்றைய தினம் தேர்தல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட 2010ம் ஆண்டிற்கான புதிய வாக்காளர் இடாப்பிலேயே இவர்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த 2008 ம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் 7,21,359 பேரின் பெயர்களும் 2009ம் ஆண்டு 8,16,005 பேரின் பெயர்களும் பதியப்பட்டிருந்தன. ஆனால் இம்முறை வெளிவந்துள்ள வாக்காளர் இடாப்பில் 4,84,791 பேரின் பெயர்கள் மட்டுமே பதியப்பட்டுள்ளன. இதனால் எதிர்காலத்தில் யாழ்.மாவட்டத்திற்கான ஒதுக்கீடுகள் சலுகைகள் உள்ளிட்ட பல விடயங்கள் பாதிக்கப்படவுள்…

  2. சிறிலங்கா தொடர்பிலான தங்களது கடுமையான நிலைப்பாட்டினை,அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் முன்வைத்துவருவதாக கூட்டத் தொடரில் பங்கெடுத்திருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் நாதம் ஊடகசேவைக்கு தெரிவித்துள்ளனர். கூட்டத் தொடரின் தொடக்க நாளில், ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை வரவேற்று உரையாற்றிய Amnesty International பிரதிநிதி, போர்குற்றங்கள் - மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் சிறிலங்காவில் இடம்பெற்றுள்ளமை தொடர்பில், தாங்கள் தெளிவாக நம்புவதாக தெரிவித்தார். சிறிலங்கா அரசினால் நிறுவப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழு, நம்பிக்கை;குரியதாக இல்லையென தெரிவித்த Amnesty International பிரதிநிதி, கடந்த காலங்களில் சிறிலங்கா அரசினால் …

  3. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா அரசின் பரப்புரைகளை முறியடிக்க, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரிதிநிதிகள் பங்கெடுத்துள்ளனர். ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை மையப்படுத்தி, உலக நாடுகள் - மனித உரிமை அமைப்புக்கள் - அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகியன, தங்களது கருத்துக்களை கூட்டத் தொடரில் முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், கூட்டத் தொடர் இடம்பெறும் காலப்பகுதி முழுவதும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தொடர்சியாக பங்கெடுக்கவுள்ளதாக கூட்டத்தொடரில் பங்கெடுத்திருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நாவுக்கான அரசியல் வெளிவிகார அமைச்சுப் பிரதிநிதி முருகையா சுகிந்தன் தெரவித்துள்ளார். இதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியூரைஞர் க…

  4. Monday, May 30, 2011, 15:08சிறீலங்கா யாழ். நாவற்குழி பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான பெண்ணொருவரைக் கைவிட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் கணவர் வாழ்க்கை நடத்துவதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்ட பெண் “அவருக்கு எங்களை வேண்டாமாம். நான் என்ன செய்ய?” என்று, கைக்குழந்தை ஒன்றைக் தோளில் சுமந்தபடி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு வந்து முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு நான்கு பிள்ளைகள் இருப்பதாகவும் கணவர் மேசன் தொழில் செய்பவர் எனவும் அந்தப்பெண் தெரிவித்துள்ளார். இவ்வாறு தகப்பனால் கைவிடப்பட்ட இந்தக் குடும்பத்தின் வறுமை நிலையைப் போக்குவதற்காக, குடும்பத்தில் மூத்த பிள்ளைய…

  5. பிரசுரித்தவர்: Sukkran May 30, 2011 கிழக்கில் நடைபெற்று வரும் கொலைச் சம்பவங்களின் தொடர்ச்சியாக மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி காவற்றுறைப் பிரிவிற்குட்பட்ட மாங்காடு செட்டிப்பாளையம் பிதேசத்தில் கடுமையாகத் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மாங்காடு செட்டிப்பாளையத்தை சேர்ந்த 54 வயதுடைய வைரமுத்து சின்னத்தம்பி என்ற நபரே கைகள் கட்டப்பட்டு மரத்தில் கட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளவராவார். இந்தக் கொலை தொடர்பில் விசாரணைளை மேற்கொண்ட களுவாஞ்சிக்குடி காவற்றுறையினர், கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மாங்காடு பிதேசத்தில் உள்ள ஒருவரையும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த நால்வரையும் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் இன்று களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றில…

  6. செவ்வாய், 31 மே 2011 18:08 எனது உயிருக்கு ஆபத்து ஏற்படுமானால் அதற்கான பொறுப்பை ஜனாதிபதியும், பாதுகாப்பு செயலாளரும் பொறுப்புக்கூற வேண்டும் என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று வெள்ளைக்கொடி வழக்கில் சாட்சியமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மூன்று வருடத்துக்குள் ஒழித்துக்கட்டுவேன் என நான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினேன். இதற்கு எனக்கு ஒத்துழைத்த அனைத்து இராணுவத்தினருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் யுத்தத்தின் போது உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் சிறந்த இராணுவ தளபதியா…

  7. Published on May 31, 2011-3:22 pm சிறிலங்கா விமானப்படையினரால் 1983ஆம் ஆண்டு விமானப்படைத்தள விஸ்தரிப்பு என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பினால் விளையாட்டு மைதானத்தை இழந்த புதுநகர் விளையாட்டுக்கழகம் தற்போது வேறு இடம் ஒன்றில் காணியை பெற்று விளையாட்டு மைதானத்தை அமைத்துள்ளது. விமானப்படைததள விஸ்தரிப்பு என்ற பெயரில் புதுநகர், சேத்துக்குடா, வலையிறவு ஆகிய கிராமங்களில் உள்ளவர்களின் வீடுவாசல்கள், சித்திவிநாயகர் ஆலயம், வலையிறவு பிள்ளையார் ஆலயம், ஆலையடிச்சோலை புதுநகர் பாடசாலை என்பன சுவீகரிக்கப்பட்டது. இது தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் சிங்கள படைகளின் ஒரு திட்டமாகவே இக்காணிகள் சுவீகரிக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர். இப்போது யாராவது இறந்தால் கூட சிங்கள படைகளிட…

  8. Tuesday, May 31, 2011, 16:13சிறீலங்கா மஹிந்தவின் போர் பற்றிய அனுபவங்களை கற்றுக்கொள்ளும் மா நாடு இன்று ஆரம்பமாகியது. இதில் 52 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் மிகப்பெரும் நாடுகள் கலந்துகொள்ளவில்லை. குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ்,ஐரோப்பிய ஒன்றியம், சுவிஸ்,அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் உட்பட 22 நாடுகள் கலந்துகொள்ளவில்லை. இதே வேளை சீனா, இரஸ்யா தமது கீழ் மட்ட இராணுவ அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளது. போர்க்குற்றம் புரிந்ததாக குற்ற சாட்டப்பட்ட நிலையில் இராணுவத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் இந்த மா நாட்டை பல நாடுகள் புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது. source:tamilthai.

  9. இலங்கை அரசைக் காப்பாற்றும் வச்சிர ஆயுதம் தமிழர்களே! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-31 07:05:32| யாழ்ப்பாணம்] நீண்ட பயணத்தை ஆரம்பித்த கப்பல் ஒன்றில் இருந்த குடிநீர் முற்றாக தீர்ந்து போனது. கப்பலில் இருந்தவர்கள் தண்ணீர்... தண்ணீர் என்று கண்ணீர் விட்டனர். அந்தக் கப்பலின் மாலுமியோ வயர்லஸ் மூலமாக ஏனைய கப்பல் தளபதிகளுடன் தொடர்பு கொண்டு எங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டும் எனக் கேட்கின்றார். எங்கிருந்தும் நல்ல பதில் வரவில்லை. கப்பலில் இருந்தவர்கள் வாடிவிட்டனர். மீட்சி பெறுவது சந்தேகமே என்ற நினைப்பு அவர்களைச் சூழ்ந்த வேளை கப்பல் மாலுமி கண்ணுக்கு தெரியக் கூடியதான தூரத்தில் வந்துகொண்டிருந்த கப்பல் தலைவனுடன் தொடர்பு கொண்டு, ஐயா எங்களுக்குக் குடிப்பதற்க…

    • 0 replies
    • 1.1k views
  10. செவ்வாய், 31 மே 2011 12:09 தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரசு பெற்ற யுத்த வெற்றி அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் கருத்தரங்கு இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கருத்தரங்கு இன்றுமுதல் ஜூன் மாதம் 2ம் திகதி வரை நடைபெறவுள்ளது. ‘பயங்கரவாத ஒழிப்பு - இலங்கையின் அனுபவம்’ என்ற தொனிப்பொருளில் இடம்பெறும் இந்தக் கருத்தரங்கு கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெறுவதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார். இந்நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ விசேட உரையாற்றவுள்ளார் என்ற உபய மெதவல தெரிவித்துள்ளார். 46 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு, இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் யுத்தவெற்றிக் கருத்தரங்கில் பங்குபற்ற…

  11. இன்று மே மாதம் 16ம் திகதி. நான் கொழும்பில் இருக்கிறேன். வீதி முழுதும் புத்தரின் பிறந்த நாளைக் கொண்டாடும் மகிழ்ச்சி எதிரொலிக்கிறது. எனது கைத்தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. எனக்கு மட்டுமல்ல. அது நாட்டிலிருக்கும் எல்லோருக்கும் அனுப்பப்பட்டவோர் தகவல். ‘நோயற்ற சுக வாழ்வோடு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்’ எனும் வாழ்த்துச் செய்தி அது. அவ் வாழ்த்தினை நினைவிலிருத்திக் கொண்டு நான் இப்பொழுது கிழக்குக்குச் செல்கிறேன். இப்பொழுது நான் திருகோணமலை – சேருநுவர வீதியிலிருக்கும் கிளிவெட்டி இடம்பெயர் முகாமுக்கு முன்னால் இன்னும் சில நண்பர்களுடன் நிற்கிறேன். இடம்பெயர் முகாமுக்கு முன்னாலிருக்கும் பாதையின் மறுபுறம் இருக்கும் வெற்றுவெளியின் மூலையில் தகரக் கொட்டகையொன்று இருக்கிறது. …

  12. பாடவிதானம்: நாள் ஒன்று: காலை: சர்வதேச தொண்டர் நிறுவனங்களை முடக்கம் செய்தல் - மதிப்புக்குரிய கோத்தபாய ராசபக்‌ஷ கொலை செய்வதற்கு முன்னரும் பின்னரும் கூட்டாளிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ளுதல் - பேராசிரியர் ரொகான் குணரத்ன மக்களை கொல்வதற்கு மல்ரிபரலின் அவசியம் - மதிப்புக்குரிய கோத்தபாய ராசபக்‌ஷ வசதிக்கேற்றவகையில் வகைவகையான சட்டங்களின் முக்கியத்துவம் - லலித் வீரதுங்க சர்வதேச நிறுவனங்களை கண்டித்தல் - பேராசிரியர் பீரிஸ் அடிப்படை வசதிகளை துண்டித்தல் - அஜித் நிவாட், ஆளுனர் இலங்கை மத்தியவங்கி இடக்கு முடக்காக வினா தொடுப்பவர்களை இனங்கண்டு கொள்ளுதல் - மதிப்புக்குரிய கோத்தபாய ராசபக்‌ஷ மாலை: குறுகிய நேரத்தில் குற்றத் தடயங்களை அழித்தல் - இராண…

  13. ஈழநாதம் மலேசிய நிருபர் செவ்வாய்க்கிழமை, மே 31, 2011 2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும். யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜி.நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார். நீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றாது விட்டாலும், ஒரு முழுநேர ஊடகவியலாளன் ஆற்றும் பணிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாகவும் தனது ஊடப்பணியை செவ்வனே ஆற்றி வந்தவர். இவரது …

    • 3 replies
    • 667 views
  14. இந்தத் தலைகீழ் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?: "ஒப்பற்ற தியாகிகளாகக் கருதப்பட்டவர்கள்; பெரும் போர் வீரர்களாக மதிக்கப்பட்டவர்கள்; வரலாற்றை உருவாக்கக்கூடிய வல்லவர்கள்" என்று புகழப்பட்டவர்கள் எல்லாம் இன்று,தெருவிலே........? "..................................ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் சிறந்த சமூகமொன்றிற்கான அடிப்படைத் தேவையாகும். துருவ மயப்படுத்தப்பட்ட சிந்தனைக்கு ஊடாக இதுவரை கட்டி வளர்க்கப்பட்ட தமிழ்ச் சமூகம் மேற்குலகிற்கு இடம்பெயரத் தொடங்கியதும் புதிய விடயங்களைக் காணத் தொடங்கியது. ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பங்கள் தமிழ் மக்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் அமைய வேண்டிப் பாடுபட்டோரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.…

    • 1 reply
    • 1.6k views
  15. ஒருசில நாடுகளுக்கு இராஜதந்திர வழியினூடாவுகம் பொருளாதார முறையினூடாகவும் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடிந்த போதும் இந்தியாவினால் மாத்திரமே இலங்கையின் இராணுவ நடவடிக்கையில் செல்வாக்கு செலுத்த முடிந்தது என கோத்த பாய கூறினார். இலங்கை தீவிரவாத ஒழிப்பு அனுபவங்களை சர்வதேசத்தின் மத்தியில் பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கோத்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், தெளிவானதொரு உயர்மட்ட தொடர்பாடல்கள் மூலம் இரு நாடுகளுடன் ஜனாதிபதி தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு பெருமைப்படக் கூடிய ஒருவிடயம் எனவும் தவறான புரிந்துணர்வுகளை தவிர்ப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ யுத்த முன்னேற்றங்களை இந்தியாவுக்கு தெளிவுபடுத்த முழு முயற்சிகளை மேற்கொண்டார் எனவும…

  16. அரசாங்கத்திற்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தி கவிழ்ப்பதற்காகவே பரந்தளவிலான அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றது என்று அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். எமது பிரச்சினைகளை பயன்படுத்தி எம்மை மண்டியிடச் செய்ய இந்தியா முயலுமானால் அதற்கு ஒருபோதும் இடமளிக்கலாகாது என்றும் வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கையும் இந்தியாவும் அண்மையில் வெளியிட்ட கூட்டறிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே நிர்மாணத்துறை பொறியியல் சேவைகள் மற்றும் வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவித்திருப்பதாவது, இக் கூட்டறிக்கையில் இலங்கை அரசாங்கம் எதனையும் நிச்சயப்படுத…

  17. 31 மே 2011 ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பில் காந்தி குடும்பத்தாரிடம் குமரன் பத்மநாதன் மன்னிப்பு.. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் இலங்கை மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி வலிறுயுத்தியுள்ளது. தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடம் குமரன் பத்மநாதன் மன்னிப்பு கோர வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 1990ம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் திகதி 600 காவல்துறை உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்ட சம்பவம் n;தாடர்பிலும் குமரன் பத்மநாதன் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பில் காந்தி குடும்பத்தாரிடம் குமர…

  18. 31 மே 2011 யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் போதியளவு வசதிகளை .. வடக்கில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் பி.எம்.ஏ. சுப்பியான் தெரிவித்துள்ளார். குறிப்பாக வடக்கில் உள்ளக இடப்பெயர்விற்கு உள்ளான முஸ்லிம் மக்களுக்கு உரிய நிவாரணங்கள் அளிக்கப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மீள்குடியேறிவரும் முஸ்லிம்களுக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் போதியளவு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். கூரைத் தகடுகள் விநியோகத்தின் போது 400 முஸ்லிம் குடும்பங்கள் இவ்வாறு உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண பிரதேச செயலாளர் தெய்வேந்திரனின் நடவடிக்கைகள் அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை ப…

    • 1 reply
    • 435 views
  19. May 31, 2011 விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட இலங்கையை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவிடம் காட்டிக் கொடுத்துள்ளதாக தேசிய பிக்குகள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கை அமைச்சர் பீரிஸ் இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளதாகவும் இதனால் நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்பட்டுளளாகவும் தேசிய பிக்குகள் முன்னணியின் ஆலோசகர் அத்தன்கனே ரத்னபால தேரர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு பதிலாக சிலர் போர் வெற்றியை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். குறிப்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோர் சமீபத்தில் …

    • 2 replies
    • 470 views
  20. செவ்வாய், 31 மே 2011 15:47 தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரசு பெற்ற யுத்த வெற்றி அனுபவத்தை பகிர்ந்துகொள்ளும் கருத்தரங்கு இன்று கொழும்பில் ஆரம்பமாகியபோது நோர்வே பாராளுமன்றத்தில் இலங்கை அரசிற்கு எதிரான கண்டத் தீர்மானமும் வாதப்பிரதிவாதமும் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜரோப்பிய ஆதரவாளர்களுக்கு எதிராகவும் இலங்கை அரசிற்கு எதிராகவும் அண்மையில் வெளிவந்த ஜ.நா அறிக்கையினை அடிப்படையாக வைத்து வாதப்பிரதிவாதங்கள் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக இடம்பெற்றன. நோர்வேயின் கென்சர்வேரிவ் கட்சியின் பாதுகாப்பு மற்றும் சர்வதேச விவகார குழு தலைவர் பீரர் கெட்மாக் தலைமையில் தொடக்கி வைக்கபட்ட வாதத்திற்கு நோர்வேயின் வெளிநாட்டு அமைச்சர் ஜோன் கோர…

  21. தமக்கு சாதகமான விதத்தில் இலங்கை அரசை ஆட்டிவைக்க இந்திய அரசு முயற்சி - சீனாவின் கொள்கையே சிறந்தது என்கிறார் அமைச்சர் விமல் வீரவன்சே..! அரசாங்கத்திற்குள் முரண்பாடுகளை ஏற்படுத்தி கவிழ்ப்பதற்காகவே பரந்தளவிலான அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றது என்று அமைச்சர் விமல் வீரவன்சே குற்றம் சாட்டியுள்ளார். எமது பிரச்சனைகளை பயன்படுத்தி எம்மை மண்டியிடச் செய்ய இந்தியா முயலுமானால் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றும் கூடுதலாக தெரிவித்துள்ளார். இந்தியாவும் இலங்கையும் அண்மையில் வெளியிட்ட கூட்டறிக்கையில், இலங்கை அரசை எதிர்த்து எதனையும் குறிப்பிடப்படவில்லை, இதில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் வெளிப்படைத்தன்மை கொண்டவை. இது…

  22. Tuesday, May 31, 2011, 15:26சிறீலங்கா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ். மாநகர சபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தனது வீட்டில் இருந்து மனைவியுடன் சென்ற போது பிஸ்டலுடன் இருவர் மோட்டார் சைக்கிளில் துரத்தினர் என்றும் தான் அருகில் இருந்த வீட்டில் புகுந்ததால் தப்பித்தாகவும் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்களே இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் யாழ்பாணம் காவல்நிலையத்திலும், மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் நாம் அரசுக்கும்; நாட்டிற்கும் எதிராக ஒருபோதும் செயற்படவில்லை ஆனால் மாநகர…

  23. [Tuesday, 2011-05-31 04:11:45] ஐநா நிபுணர் குழு அறிக்கையில் இலங்கை குறித்து கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கான இலங்கையின் சிறப்புத் தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்ஸிலின் நேற்றைய கூட்டத் தொடரில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டதாக ஐநா நிபுணர்குழு அறிக்கை கூறுவதற்கு எந்தவிதமான அடிப்படையும் கிடையாது என்று அவர் கூறியுள்ளார். இத்தகைய உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை முற்றிலும் தேவையற்றது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க விமர்சித்துள்ளார். அதேவேளை, இலங்கை அரசாங்கம் அங்கு தேசிய …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.