ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143304 topics in this forum
-
இந்தியாவில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. நாம் தமிழர் அமைப்பும் சீமானும் செல்வாக்கு பெற்றிருக்கிறார்கள். சோனியா காந்தி அ.தி.மு.க.வுடன் உறவை விரும்புகிறார். முதலமைச்சர் ஜெயலலிதா முதல்முறையாக தெளிவாக ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். விடுதலைப்புலிகளும் ஆயுதப்போராட்டமும் அரசியல் இராஜதந்திர தீர்வுக்கு வழிவிட்டு ஒதுங்கியிருக்கிறார்கள். ஐரோப்பாவும் அமெரிக்காவும் அரசியல் இராஜதந்திர தீர்வுக்கு முயற்சி செய்கின்றன. அவை இந்தியாவை ஒதுக்கிவிட்டு இந்த தீர்வுக்கு முயற்சித்தது இல்லை. இந்த நிலையில் இந்தியாவின் ஆதரவு இல்லாமல் தீர்வு சாத்தியமா? என்ற கேள்வி எழுகிறது.
-
- 63 replies
- 4.8k views
- 1 follower
-
-
இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஏற்ற வகையில் தமிழர்களுக்கு இன்னொரு அரிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இதை இன்னும் சரியாகச் சொன்னால், இலங்கையிலுள்ள அனைவருக்கும் கிடைத்திருக்கின்ற அரிய வாய்ப்பு இது என்றும் சொல்லலாம். இந்த வாய்ப்பு என்பது ஏற்கெனவே தமிழர்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டது. அதைப்போல அனைத்துத் தரப்பினர்களுக்கும் இது ஒரு நல்வாய்ப்பேயாகும். அதேவேளை, இந்த வாய்ப்பு முன்னைய வாய்ப்புகளையும் விடப் பெறுமதி கூடியதும் கூட.இங்கே தமிழர்களை அல்லது தமிழ் பேசும் மக்களை அழுத்தமாக ஏன் விழிக்க வேண்டியிருக்கிறது என்றால், இந்தத் தரப்பினர்கள் இன ரீதியாக ஒடுக்கு முறைக்குள்ளாகுவோராக இருப்பதனாலும் அதன் விளைவாக இந்தத் தரப்பினரே அதி…
-
- 0 replies
- 1.1k views
-
-
International diplomacy is not about the truth -ABC International diplomacy is not about the truth. The truth can be ignored most of the time. It is sometimes about who speaks the truth. If someone of sufficient importance states that the emperor is naked, the rest of us are forced to acknowledge what we already knew, namely, that the old fool had been parading in the nude for some time. So it is with Sri Lanka and war crimes during the closing months of the civil war which formally concluded in May 2009. The evidence that the both the Sri Lankan government and its civil war opponents, the Liberation Tigers of Tiger Eelam (LTTE), engaged in war crimes has …
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசியல் யதார்த்தம் மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியதே தமிழ் அரசியல் பிரதிநிதித்துவங்களின் காலத்தின் தேவையாகும்.ஏனெனில் அரசியல் என்பது பிச்சையல்ல. ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை ஊடாக சர்வதேச சமூகம் தமிழர் அரசியல் பிரச்சினையை கையிலெடுத்துள்ள சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பினர் அரசுடன் பேச்சு நடத்துவது பாதகமான விளைவுகளையே பெற்றுக் கொடுக்கும். எனவே நிபுணர் குழு அறிக்கையின் சர்ச்சை சற்று ஓய்கின்ற வரையாவது பேச்சு வார்த்தைகளை ஒத்திவைக்க வேண்டியது அவசியமாகும் என்று பேராசியர் எஸ்.ஐ.கீதபொன்கலன் குறிப்பிட் டார். இரண்டாவது சபை அல்லது செனட்சபை அமைக்கும் யோசனையானது மோசமான விடயமல்ல பாராளுமன்றத்தின் அதிகாரம் குறைவடைந்து மாற்று தெரிவாக இரண்டாவது பிரச்சினைக்க…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழக மீனவர் மரணம் தொடர்பான யாழ் சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கையைத் தென்பகுதி அதிகாரிகள் நிராகரித்தார்கள் யாழ்ப்பாணம் நெடுந்தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழக மீனவரின் உடல் குறித்து யாழ் மாவட்ட சட்ட மருத்துவ அதிகாரி சமர்ப்பித்த அறிக்கையை தென்னிலங்கை சட்ட மருத்துவ அதிகாரிகளின் குழுவொன்று நிராகரித்தது. மீனவரின் நெஞ்சிலும், இடது தொடை, வலது கை, வலது காற் பெருவிரல் ஆகியவற்றில் அடி காயங்களும், வேறு காயங்களும் காணப்பட்டதாகவும், உடலின் பின்புறத்தில் அடையாளங்கள் காணப்பட்டதாகவும் யாழ் சட்ட மருத்துவ அதிகாரி சிவரூபன் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். அந்த அறிக்கையை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்த பின்னர், மற்றொரு அறிக்கையைத் தருமாறு, மூத்த சட்ட மருத்த…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களே! மூன்றாவது முறையாகத் தமிழ் நாட்டு மக்கள் தமது முதலமைச்சராகத் தெரிவுசெய்து, இப்பொறுப்பு மிக்க பதவியை ஏற்றிருக்கும் தங்களுக்கு, தென்துருவத்தில் வாழும் புலம்பெயர் ஈழத் தமிழரதும் மற்றும் ஈழம் வாழ் தமிழ் மக்களதும் நலன் குறித்துக் கடந்த 27 வருடங்களாகச் செயலாற்றிவரும் தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம் (தெ.த.ச.ச – AFTA)எமது பாராட்டுக்களையும் உளம்கனிந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். தம்மினம் ஈழத்தில் செத்துமடிவதைக் கைகட்டிப்பார்த்து நின்ற அரசொன்றைத் தூக்கி எறிந்து, அவ்வினம் காக்கத் தங்களில் நம்பிக்கை வைத்து, மக்கள் தங்களை ஆட்சியில் அமர்த்தியுள்ள இந்த வேளையில், நீங்கள் முதன்முதல் அளித்த பேட…
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழகத்தில் இருந்தான ஒரு பார்வை.................. ஈழப் பிரச்சனையை கையிலெடுக்கும் அதிமுக...சும்மா இருக்குமா திமுக? சென்னை: காட்சிகள் வேக வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. போர் என்றால் மக்கள் சாவது சகஜம் என்ற ஜெயலலிதா, இப்போது தமிழக முதல்வர். ஈழப் படுகொலைகளுக்காக ராஜபக்சேவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சிப்பேன் என முதல் நாளே அறிவித்துள்ளார். தமிழுணர்வாளர்கள் அகமகிழ்ந்து போயிருக்கிறார்கள்! ஈழப் படுகொலைகளுக்கு உற்ற துணைவர்களாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பிரதமர் மன்மோகன் சிங்கும் இதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடத் தயாராக இல்லாத நிலையில், இதில் மாநில முதல்வரான ஜெயலலிதா முயற்சி என்னவாக இருக்கும்... எந்த அளவு பலன் தரும்... எந்த அளவு உண்மையாக …
-
- 5 replies
- 2.1k views
-
-
ஈழநாதம் கொழும்பு நிருபர் திங்கட்கிழமை, மே 16, 2011 சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சேவை நீடிப்பு வழங்கப்படாத நிலையில் அண்மையில் ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவுக்கு ராஜதந்திரப் பதவி ஒன்றினை வழங்குவதற்கு சிறிலங்கா அரசு தலைமை தீர்மானித்திருந்த நிலையில், அவர் அதனை ஏற்க மறுத்துள்ளார் என உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தன. . அசோக டி. சில்வா பிரதம நீதியரசராகக் கடமையாற்றிய இறுதிக் காலப் பகுதியில் அவரால் வழங்கிய தீர்ப்புகள் மற்றும் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் எரிச்சலும் சீற்றமும் கொண்டிருந்த சிறிலங்கா அரசு தலைமை, அவருக்கான சேவை நீடிப்பை நிராகரித்திருந்ததுடன் ஓய்வு பெற்ற பின்னர் அவரை எந்த உயர் பதவியிலும் நியம…
-
- 1 reply
- 1.6k views
-
-
இலங்கை எனும் பயங்கரவாத நாடு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில், இரண்டு நாடுகளுக்கு இடையேயான போர் போன்ற ஒப்பனையுடன் ஆரம்பிக்கப்பட்ட போரில், உலகில் உள்ள அத்தனை வல்லரசுகளிடமும் ஆயுதமும், ஆதரவும் வாங்கி குவித்திருந்த சிங்கள தேசம் ஒருபுறம். தங்களுக்கு உரிய உரிமை மறுக்கப்பட்ட போது அதனை எந்த விலை கொடுத்தாவது பெற்று விட வேண்டும் என்ற புலிகள் மறுபுறம். ஆனால் கொடுமை என்னவென்றால் பயங்கரவாத இயக்கம் என உலகால் அறிவிக்கப்பட்ட புலிகள் நான்காம் கட்ட ஈழப்போரின் எந்த கட்டத்திலும் சிங்கள பொதுமக்களை இலக்காக கொண்டு எந்த ஒரு தாக்குதலையும் நடத்தவில்லை. ஆனால் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கபட்ட அரசு என்ற முகமூடியுடன், ஒரு பயங்கரவாத இயக்கம் செய்ய வேண்டிய அத்தனை ப…
-
- 0 replies
- 1.7k views
-
-
-
அக்கராயன்குளம் கரும்புத்தோட்டக் காணியை இராணுவத்துக்கு வழங்குமாறு கோரிக்கை கிளிநொச்சி, அக்கராயன் குளம் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டக் காணியை இராணுவத்தினரின் பாவனைக்கு முழுமையாக வழங்குமாறு இரா ணுவத்தினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. கடந்த மார்ச் மாதம் நடை பெற்ற மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் அக்கராயன் குளம் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டக் காணியைப் படையினரின் பாவனைக்கு வழங்குவதற்கான ஒப்புதல் கோரப்பட்டது. குறித்த காணி 25 தனி நபர்களுக்கு உரிமையானதெனவும் இதனைத் தற்போது ஏழை விவசாயிகளே பயன்படுத்தி வருகின்றனர் எனவும் இதனை காணிகளற்ற தற்போது இதில் செய்கைகளில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கே வழங்க வேண்டும் எனவும் கமக்கார அமைப்பினரால் கேட்டுக் க…
-
- 0 replies
- 899 views
-
-
தமிழர் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு புலம்பெயர் தமிழரின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது.எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை இன்று உலகம் எப்படி ஏற்றுக்கொண்டதோ, அதேபோல் எமது மக்களின் உரிமைகளையும் ஏற்கும் காலம் வெகு தொலைவிலில்லை என்பது காலத்தின் கட்டளையாக அமையும். தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/04/11 தமிழீழ விடுதலைப் புலிகள்,தமிழீழம். 16/05/ 2011. தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2011 அன்பான தமிழ் மக்களே, மே-18. தமிழர் இனவழிப்பு நினைவுநாள். காலங்காலமாகத் தமிழர் தேச…
-
- 4 replies
- 2.5k views
-
-
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கை தொடர்பாக இந்திய அரசின் ஆதரவைப் பெற டெல்லி வந்துள்ள சிறிலங்க அயலுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரீஸ், இந்திய அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்துப் பேசினார். ஆனால் இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து மத்திய அரசின் சார்பில் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை. ஐ.நா.அறிக்கை தொடர்பாக டெல்லியின் ஆதரவை நாடியே பெய்ரீஸ் வந்துள்ளார் என்றாலும், அவருடன் அமைச்சர் கிருஷ்ணா நடத்திய சந்திப்பில் தமிழக மீனவர்கள் பாதுகாப்பு பிரச்சனை குறித்துப் பேசப்பட்டதாக அரசு அதிகாரிகள் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/national/1105/16/1110516049…
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் கிருஷ்ணானந்தராஜா கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் கொழும்பில் இருந்து சென்ற பொலிஸ் குழுவொன்றே அவரைக் கைது செய்துள்ளதுடன் தற்போது அவர் கொழும்புக்கு அழைத்து வரப்படுவதாகவும்; குற்றப் புலனாய்வுத் தலைமையகத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் கொலை சம்பவமொன்று தொடர்பாக சந்தேகத்தின் பேரிலேயே பிரதீப் மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் கைது தொடர்பாக அவரது குடும்பத்தினருக்கோ அல்லது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கோ அறிவிக்கப்படவில்லை என்றும் கட்சி அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கிடையே மாக…
-
- 0 replies
- 1.3k views
-
-
மக்களிடம் வரிப்பணத்தை வாங்கி அதை வருமான வரி இலாகாவுக்கு செலுத்தாமல் மோசடி செய்தபலரின் செயல்கள் மக்கள் மூலமாக வருமானவரி இலாகாவிற்கு தெரியபடுத்தபட்டது.இதில் கூடிய அளவு பல உணவுச்சாலைகள்,சிறு அங்காடிகள்.பெரும் மளிகை பொருள் அங்காடிகள்,விடுதிகள் இபடிப்பல அடங்கும் இதை தடுக்கும் முகமாக கியூபெக் மா நிலத்தில் முதல்கட்டமாக ஆரம்பித்து பின்னர் ஒன்ராறியோ இப்படி பல மா நிலங்களுக்கும் எடுத்து செல்லபடவிருக்கின்றது.இத்திட்டம் மிகவும் சாதாரணமானதும் சக்திவாய்ந்ததுமாகவிருக்கபோகிறது.விற்பனவு கணனியை வருமானவரி இலாகாவுடன் மென்பொருள் மூலமாகவிணைப்பதாகும்.இதனால் பல சிறிய வர்த்தகங்கள் மூடப்படும் அபாயமும் உண்டு.பொருட்களின் விலைகளும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கபடுகிறது La presse (quebec)
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழகத்தின் ஆட்சி மாற்றம் எதிர்காலத்தில் இலங்கைக்கு சவாலா கவே அமையும். இலங்கை தமிழர்க ளின் அரசியல் பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தலையீடுகளை மேற்கொள்ள தவறியமையினா லேயே சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி தோல்வியடைந்தார். அதே பிரச்சினையை தீவிரமாகக் கொண்டு பிரசாரம் செய்தமையால் பெரும் பான்மை ஆதரவுடன் ஜெயலலிதா ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. அரசாங்கம் போலி இனப்பற்றையும் உணர்வுபூர்வ செயற்பாட்டையும் தவிர்த்து இராஜதந்திர முறையில் செயற்பட்டு புதிய தமிழக ஆட்சியின் ஆதரவை வெற்றி கொள்ள வேண்டும். இல்லை யென்றால் எதிர்வரும் நாட்களில் இந்தியாவின் தலையீடு அதிகரிப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளதென்றும் அக்கட்சி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ஐ.தே…
-
- 2 replies
- 1.3k views
-
-
திங்கட்கிழமை, 16 மே 2011 09:19 .இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து சுவிட்சர்லாந்தும், கனடாவும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன. ஜெனீவாவில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு இலங்கையைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இது நட்புரீதியற்றது என இலங்கை அரசு தனது எதிர்ப்பைத் வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள கனேடியத் தூதுவர் புறூஸ் லெவி மற்றும் சுவிஸ் தூதுவர் தோமஸ் லிற்சர் ஆகியோரை அழைத்து வெளிவிவகார அமைச்சு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஒட்டாவா மற்றும் பேர்ன் பகுதிகளில் உள்ள இலங்கை தூதரகங்களும் இந்த கூட்டத்தை நிறுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்…
-
- 0 replies
- 829 views
-
-
திங்கட்கிழமை, 16 மே 2011 15:11 .ஐ.நா. நிபுணர்குழு அறிக்கைக்கு ஆதரவு திரட்டுவதற்காக ஐ.நாவின் உறுப்பு நாடுகளின் தூதரகங்களுடனான சந்திப்புக்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயகவாதிகள் மேற்கொண்டுள்ளனர். இதன் முதற்கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை கனடாவின் ஒட்டாவா நகரில் அமைந்துள்ள தென்னாபிரிக்க மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகளின் தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயகவாதிகளின் கனேடிய பிரதிநிதிகளான திரு.எஸ்.திருச்செல்வம், பாலன் ரட்ணராஜா, ஈசன் குலசேகரம், சுரேஸ் ரட்ணபாலன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். மனித உரிமை மீறல்கள் எந்த வடிவில் இடம்பெற்றாலும் தமது நாடுகள் அதனை எதிர்த்து மற்றைய உறுப்பு நாடுக…
-
- 0 replies
- 740 views
-
-
புனர்வாழ்வளிக்கப்பட்டதாகக் கூறி விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளது இயல்பு வாழ்வு மீண்டும் கேள்விக் குறியாகியிருக்கின்றது. தமது குடும்பத்துடன் இணைந்து வாழ்வதில் பெரும்பாலான முன்னாள் போராளிகள் அச்சங் கொண்டவர்களாகவே இருந்து வருகின்றனர். அதிகத்து வரும் கெடுபிடிகள், மீண்டும் விசாரணைக்கென அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றமை, சித்திர வதைகளுக்குள்ளாகின்றமையென குற்றச்சாட்டுக்கள் அவர்களிடமிருந்து எழுந்த வண்ணம் உள்ளன. கிளிநொச்சி, வட்டக்கட்சியின் குறித்த கிராமமொன்றினில் மட்டும் புனர் வாழ்வளிக்கபட்ட தாகக் கூறப்படும் 24 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பெரும் பாலானவர்கள் ஏற்கனவே திருமணமாகியிருந்த நிலையில், தற்போதே குடும்பங்களுடன் இணைந்துள்ளனர். எனினும் இ…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐ.நா. மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் - தடுத்து நிறுத்துவதில் கொழும்பு தீவிரம் ஜெனிவாவில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப் படுவதால் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை கொழும்பு மேற்கொண்டு வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், பிரான்ஸ், தென்னாபிரிக்கா, சுவிற்சர்லாந்து மற்றும்…
-
- 1 reply
- 2.2k views
-
-
கவரிமான் தமிழர்கள் உயிர் துறந்த நாள் இழிநிலை வரினும் நம் இலட்சியத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்ற கவரிமான் தமிழர்கள் உயிரினும் மேலாக தாம் கொண்ட இலட்சியத்திற்காக இன்னுயிரை துறந்தார்கள். இலட்சியததுடன் சென்றவர்கள் மீணடும் இலட்சியத்திற்காக திரும்பவும் வருவார்கள். தியாகச்செம்மல்களின் துயர்பகிர்வு உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் ஒணர்வு ப+ரவமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. ஓரினம் தன்னுரிமைக்காகப் போரட உரிமை இருக்கின்றது என்று சட்டம் இருந்தாலும் உரிமைக்காகப்போராடிய இனத்தை கொடூரமாக அழித்த இவ்வுலகம் வெகுநாட்கள் வாழாது. என்பது தான் உண்மை. 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய கொடூரவதைக் கொலையை இலங்கை அரசு மட்டும் செய்யவில்லை. வல்லாதிக்கங்களும் இணைந்தே நடத்தின. இது உலகம் செய்த கொடூரக்கொலைதான…
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
-
“[ ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011, 00:17 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை இந்திய அமைதிகாப்புப் படையினர் நிறுத்தத் தவறினால், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஆர். பிறேமதாச இந்தியாவை மிரட்டினார் என்று சிறிலங்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதுவர் லெகான் மெஹ்ரோத்ரா தகவல் வெளியிட்டுள்ளார். ‘சிறிலங்காவில் எனது நாட்கள்‘ என்ற தலைப்பில் எழுதியுள்ள நூல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை இந்திய அமைதிகாப்புப் படையினர் 1989 ஜுலை 29ம் நாளுக்கு முன்னதாக நிறுத்தத் தவறினால், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக முன்னாள் சிறிலங்கா அதிபர் ஆர்.ப…
-
- 1 reply
- 1.8k views
-
-
அமரிக்காவில் நடக்கும் நிகழ்வுக்கு கனடா உறவுகளே! முடிந்தளவு கலந்து கொள்ளுங்கள் இன் நிகழ்வுக்கு நாம் எதிர்பார்க்காதவர்கள் எல்லாம் வருகை தரவிருக்கிறார்கள்.சிங்கள அரசின் பிதற்றல் கதையால் உண்மையாக சுதந்திரத்துக்காக போராடியவர்களையும் அவர்களை நம்பியிருந்த அப்பாவிகளையும் சிங்கள அரசுடன் சேர்ந்து நின்று இனப்படுகொலைக்கு உதவிய நாடுகளின் முக்கியஸ்தர்கள் தாங்கள் செய்த தவறிற்காகவும் சிங்களத்தின் காலில் மிதிபடும் தமிழினத்தின் விடுதலைக்காகவும் குரல் கொடுக்கவுள்ளனர்.இன் நிகழ்வுக்கு முடிந்தளவு தமிழர்கள் கலந்துகொள்ள வேண்டும்.இப்போ நாம் தமிழர்.எங்களுக்காக விசேட போக்குவரத்து இலவசமாக ஒழுங்கு செய்யபட்டுள்ளது.விபரங்களுக்கு கனடாவில் இயங்கும் தொலைக்காட்சி வானொலிகளை செவிமடுங்கள். மதிப்புக்குரிய ஒபாம…
-
- 0 replies
- 1.1k views
-
-
கலைஞர் கருணாநிதிக்கு ஓர் ஆறுதல் கடிதம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-16 09:04:38| யாழ்ப்பாணம்] கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு அன்பு வணக்கம்! தமிழக முதல்வர் என அழைக்கப்பட்ட தாங்கள் இன்றிலிருந்து முன்னாள் முதல்வர் என அழைக்கப்படவுள்ளீர்கள். அரசியல் என்ற நாடக மேடையில் இவையயல்லாம் சகஜம் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இவை அரசியலில் பழுத்த தாங்கள் அறியாததுமல்ல. இருந்தும் தங்களின் வயோதிப காலத்தில் பதவி துறப்பதென்பது சாதாரணமான விடயமன்று. எங்கள் வடபுலத்தில் அறுபது வயதோடு அதி காரிகளை ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்புவ தென்பது முடியாத காரியமாக இருக்கும் போது எட்டுக் கோடி மக்களைக் கொண்ட தமிழகத்தின் முதல்வராக இருந்த தாங்கள் தங்களின் 86 வயதில் அந்த உன்னதமான ப…
-
- 0 replies
- 1.8k views
-