Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. May 13, 2011 / பகுதி: செய்தி / இலங்கையர்கள் உள்ளிட்ட 183 பேர் மெக்ஸிகோ பொலிசாரால் கைது! இலங்கையர்கள் உள்ளிட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் 183 பேர் மெக்ஸிகோ சமஷ்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குவாத்தமாலா, எல்செல்வடோர், ஹோண்டுராஸ், நேபாளம், இந்தியா, எகிப்து, மற்றும் இக்குவடோர் ஆகிய நாட்டவர்களுடன் ஐந்து இலங்கையர்களும் சமஷ்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன. கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகள் அனைவரும் அமெரிக்கா நோக்கி பயணமாகியதாக முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட அனைவரையும் மேலதிக விசாரணைகளுக்காக சமஷ்டி பொலிஸார் தேசிய குடியேற்றவாசிகள் நிறுவனத்திடம்…

  2. யாழில் அதிசயம்! சிவப்பு நிறமாக மாறியுள்ள வடமராட்சி வடக்கு கடல் நீர் வியாழன், 12 மே 2011 14:18 யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பிரதேச கடல் நீர் சிவப்பு நிறமாக காட்சியளிப்பதாக தெரியவந்துள்ளது. இதனை யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க தலைவர் திரு எஸ். தவரட்ணம் உறுதிப்படுத்தியுள்ளார். வடமராட்சி வடக்கு கடற்கரையிலிருந்து 10 கிலோமீற்றர் தூரத்துக்கு இந்த சிவப்பு நிற நீர் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கான காரணத்தை அறிவதற்காக தற்போது அந்தக் கடற்பரப்பில் உள்ள நீர் எடுத்துச் செல்லப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகஅவர் மேலும் தெரிவித்தார். ஆய்வின் முடிவில் அதற்கான காரணத்தை கண்டறிந்து விடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். tamilenn

    • 3 replies
    • 2.6k views
  3. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் உள்ளிட்ட பன்னாட்டு மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையின் மீது இந்திய அரசு காத்து வரும் மெளனம், “அது சிறிலங்க அரசிற்கு ஆதரவாக நிற்கிறது என்பதையே காட்டுகிறது” என்று சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியதாக வந்துள்ள செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கொழும்புவில் இருந்து வெளிவரும் உள்ளூர் ஊடகங்களின் ஆசிரியர்களுடன் நேற்று பேசியுள்ள மகிந்த ராஜபக்ச, இந்திய தேச பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் தலைமையில் கொழும்பு வரத் திட்டமிட்டுள்ள “இந்திய அரசுக் குழுவின் பயணம் ஐ.நா.நிபுணர் குழு தொடர்பானது அல்ல” என்றும் கூறியிருக்கிறார்! …

    • 1 reply
    • 1.4k views
  4. ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று அறிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமென நிபுணர் குழுவினால் செய்யப்பட்டுள்ள பரிந்துரை முக்கியமான ஓர் அபிவிருத்தியாகக் கருதப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இரண்டு தரப்பினராலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக நிபுணர் குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பாரிய குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்படுவதன் மூலம் மெய்யான நல்லிணக்கத்தை நாட்டில் ஏற்படுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் நிலையான சமாதானத்தையும், பாதுகாப்பையும் ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் நிபுணர்…

    • 2 replies
    • 2.1k views
  5. இலங்கையின் போர்க்குற்றஙகள் தொடர்பான கருத்தரங்கு நாளை புதுடில்லியில்:காணொளிப் பதிவுகளும் காண்பிக்கப்படும், நீதித்துறை சார்ந்தோர் மற்றும் பேராசிரியர்களும் பங்கேற்பு [Monday, 2011-05-09 09:56:02] இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் - ஐ.நாவின் அறிக்கையும், அதன் சம்பந்தப்படுத்தல்களும் என்ற தலைப்பிலான கருத்தரங்கு ஒன்று நாளை இந்திய தலைநகர் புதுடெல்லியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது புதுடெல்லி உச்ச நீதிமன்றத்துக்கு அருகிலுள்ள கிருஸ்ணமேனன் பவானில் நாளை பிற்பகல் 2.30 மணி தொடக்கம் 7.30 மணிவரை நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கின் ஆரம்பத்தில் ஐ.நாவின் இலங்கை தொடர்பான போர்க்குற்ற அறிக்கை வெளியிடப்படவுள்ளது. அதையடுத்து இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பா…

    • 2 replies
    • 1.2k views
  6. கொஹண, சவேந்திர சில்வா ஆகியோரை ஐ.நா.விற்கான பதவிகளிலிருந்து வெளியேறுமாறு கோதாபய உத்தரவு Thursday, May 12, 2011, 9:45 சிறீலங்கா ஐ.நா. சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹண மற்றும் துணை நிரந்தரப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் விரைவில் அங்கிருந்து அகற்றப்படவுள்ளதாக சில நம்பகரமான தகவல்கள் மூலம் அறியக்கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் நிபுணர் அறிக்கை வெளிவர முன் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள இலங்கைக்குப் பாதகமான விடயங்கள் குறித்து ஓரளவுக்கேனும் அழுத்தங்களைப் பிரயோகித்து நெகிழ்வுத் தன்மை கொண்டதாக அறிக்கையை வெளிவரச் செய்வதில் அவர்கள் தோல்வியடைந்துள்ளமையே அதற்கான காரணம் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் மட்டுமன்றி நியூயோர்க…

  7. லண்டனில் தமிழ்க்கடையொண்டின் மீதி சராமாரியான துப்பாக்கிப்பிரயோகம்... லண்டன் ஸ்டொக்வெலில் உள்ள தமிழ் கடை மீதான துப்பாக்கிப்பிரொயொகத்தில் 5 வயது சிறுமியும் அவர் அப்பாவும் பலத்த துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்கள்.. மேலதிக விபரம் தெரியவில்லை.. இது பற்றி மெட்ரோபொலிட்டன் குறிப்பிடுகையில்.. இது தமிழ் கோஷ்டிகளினால் தமிழ் கடைகாறர்களிடமிருந்து வசூலிக்கப்படும் ''அநியாயவரி'' சம்பந்தபட்ட கொலை முயற்சியாக இருக்கலாம் எண்டு கருத்து தெரிவித்துள்ளனர்.

  8. இலன்டனில் வியாபார ஸ்தாபனம் நடாத்தும் தமிழ் உறவுகளே ஓர் அன்பான வேண்டுகோள். அண்மை காலமாக சிறிலங்கா சிங்கள ரெலிகொம் நிறுவனம் டயலொக் இலன்டனில் தங்களது மொபைல் சிம் கார்ட் அறுமுகபடுத்தி மொபைல் போன் வசதியை செய்து கொடுத்து வருகிறது. இதில் இருந்து சிறிலங்காவுக்கு பேசலாம் என்றெல்லாம் விளம்பரப்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் பிரபல படுத்தி வருகிறார்கள். அதில் வெற்றியும் பெற்று வருகிறார்கள்.. இவர்களது திட்டம் ஒவ்வொரு தமிழனும் சிம் கார்ட் பெற்று கொண்டால் தங்கள் வியாபாரம் வெற்றி. ஏனெனில் இப்போ சாதரணமாக, இலங்கையின் எப்பகுதிக்கும் மொபைல் தொலை பேசி வசதி உண்டு. இலன்டனில் வாழும் உறவுகளின் விற்பனயே போதுமானது. எனவே இதை நாம் கவனத்தில் கொள்வோம். கிட்டதட்ட அனைத்து சாதாரண பே…

    • 9 replies
    • 3.3k views
  9. அவதி' முகாம்கள்! கவின் மலர் படங்கள் : வி.செந்தில்குமார், ச.வெங்கடேசன் ''இருக்குறம்!'' ''எப்படி இருக்கீங்க?' என்று தமிழ்நாட்டின் இலங்கை அகதி கள் முகாம்களில் வசிப்பவர்களிடம் விசாரித்தால், இப்படியான விரக்தி தொனிக்கும் பதிலையே எதிர்கொள்ள நேர்கிறது. ஈழம் - கண்ணீர்த் துளியாய் உறைந்து நிற்கும் கனவு! மண்ணை மீட்கவும் முடியாமல், உரிமைகொள்ளவும் இயலாமல், அந்நிய மண்ணில் கையேந்தி நிற்கும் அவலத்துக்கு இணையாக எதைச் சொல்வது? முகாம்களில் ஒரு குடும்பத்துக்கு பத்துக்குப் பத்து அளவில் வீடு. பலர் முன்னும் பின்னும் இழுத்துக்கட்டி இருக்கிறார்கள். அடித்தட்டு மக்களும் முகஞ்சுளிக்கும் வாழ்க்கைத் தரத்தில்தான் பல முகாம்களின் நிலை அமைந்திருக்கிறது. ஆனால் அதற்கே, 'தமி…

  10. எது தமிழீழம்? ரீ.சிவக்குமார் ஈழத்தின் மனிதம் மரணித்து ஆயிற்று இரண்டு வருடங்கள். இன்னமும் விலகாத சோகத்துக்கு இடையில், பாவம் படராத புன்னகையுடன் வளைய வருகிறது அதிகார வர்க்கம். உலகில் கொலைத் தொழிலை அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளும் ஒரு தீவுத் தலைவனுக்கு, அண்டை நாட்டு அரசாங்கத்தின் ஆரவார ஆதரவு இருக்கும் வரை, விதியை நோவதைத் தவிர என்ன செய்ய முடியும்? வேதனை வார்த்தைகளில் ஈழப் போராட்டம் குறித்த தனது நினைவுகளையும் உணர்வுகளையும் பகிர்ந்துகொள்கிறார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன். ''1948-ல் எனக்கு 10 வயது இருக்கும். அப்பா என்னைக் கை பிடித்து தந்தை செல்வாவின் கூட்டங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். தமிழர்களுக்கான உரிமை களை வலியுறுத்தி தந்தை செல்வா எழுப்பிய உணர்ச்…

  11. பிரபாகரன்...? விடை சொல்கிறார் உருத்திரகுமாரன் சமஸ் ''உலகிலேயே மிக மோசமான இனப் படுகொலைகள் நடந்த சூடான் பிரிவதையும், தெற்கு சூடான் உதயமாவதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?'' ''தென் சூடானிய விடுதலைப் போராட்டத்துக்கும், எமது விடுதலைப் போராட்டத்துக்கும் இடையில் சமாந்திர நிகழ்வுகள் பல உள்ளன. ஈழத் தமிழ்த் தேசிய இனமும், தென் சூடானிய மக்களும், ஒரே வகையில் அமைந்த இனப் படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டோம். இருவருமே, தத்தமது போராட்டத்துக்குக் கடுமையான விலை கொடுக்க நேர்ந்தது. சமாதானப் பேச்சுவார்த்தைகளும், ஏறத்தாழ ஒரே காலத்தில் இடம் பெற்ற நிகழ்வுகள்தாம். இந்த இரண்டு பேச்சுவார்த்தைகளையும் நெறிப்படுத்தியவர்கள்கூட ஏறத்தாழ ஒரே நாடுகள்தாம். ஆனால், தென் சூடானிய மக்களுக்குத் …

  12. ஐ. நா பாதுகாப்புச் சபையில் இலங்கை மீது மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் 12 மே 11 01:51 (GMT) முன்வைக்கப்பட்டன : ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நேற்று இலங்கை மீது மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. 'பொதுமக்களின் பாதுகாப்பு' என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கருத்தமர்வில், ஐ.நாவின் அதிகாரிகள் பலரும் இந்தக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டிய நிலையில் கொழும்பு அரசு இருக் கின்றது என ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தலைவர் நவிபிள்ளை தெரிவித்துள்ளார். அதிகாரிகள் குற்றச்சாட்டுக்களை அடுக்கியதை அடுத்துக் கோபமடைந்த ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி பாலித ஹோகன்ன, பாதுகாப்புச் சபை…

  13. வடமராட்சி மாணவி சிங்களவர்களால் கடத்தப்பட்டு மிகிந்தலையில் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்! Posted by admin On May 12th, 2011 at 11:07 am / தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர்களால் வெள்ளை வானில் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட யாழ்.வடமாட்சி கிழக்கைச் சேர்ந்த மாணவி ஒருவர் மதவாச்சியில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார். கடந்த 9ஆம் திகதி வடமராட்சி கிழக்கு கற்கோவளப் பகுதியில் வைத்து கடத்தப்பட்ட பிரஸ்தாப மாணவி மிகிந்தலைக் காட்டுப்பகுதியில் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட மாணவி வடமராட்சியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சம்பவ…

  14. பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்ற 76 வயது முதியவர் கடத்தல் 12th May, 2011 பிரித்தானியாவில் இருந்து சுமார் 30 வருடங்களின் பின்னர் பிரித்தானிய கடவுச்சீட்டில் இலங்கைக்கு சென்ற 76 வயது உடைய தமிழ் முதியவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் இலங்கை சர்வதேச விமான நிலையாத்தை குவைத் நாட்டு விமானத்தில் சென்றடையந்த தமிழ் முதியவர் இன்றுவரை விமான நிலையத்திற்கு வெளியே வரவில்லை என தெரிய வருகிறது. இவரை கூட்டிவருவதற்கு சென்ற குடும்பம் ஏமாற்றத்துடன் இலங்கையில் வீடு திரும்பி உள்ளது. குறித்த முதியவர் தொடர்பாக இலங்கை குடிவரவு திணைக்களத்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த முதியவர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகாரிகளின் பரிசோதகைன முடி…

  15. நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பான் கீ மூன் இன்னமும் தீர்மானிக்கவில்லை – ஐ.நா : 12 மே 2011 நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பான் கீ மூன் இன்னமும் தீர்மானிக்கவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுப்பது என்பதனை பான் கீ மூன் இன்னமும் நிர்ணயிக்கவில்லை என ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். பான் கீ மூன் தீர்மானமொன்றை எடுத்ததன் பின்னர் அது பகிரங்கப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் எவ்வாறான பதிலை அளிக்கும் என்பது தொடர்பில கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பதிலளிக்கப்பட மாட்டாது எனவும், நிலைமைகளை விளக்கும…

  16. மீண்டும்மொரு துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு தயாராகிறது மட்டக்களப்பு? Posted by uknews On May 12th, 2011 at 4:05 am மட்டக்களப்பு வாவிக்கரையில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலய தலைவரும்,சுதந்திரக்கட்சியின் மட்டு மாவட்ட பொறுப்பாளரும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின்(கருணா)நெருங்கிய நண்பருமான மதியழகன்(மதி) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இராணுவ சோதனைக் கெடுபிடிகள் மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு இரண்டு வருடங்களுக்குப்பிறகு துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்தில் கொல்லப்பட்ட முதலாவது அரசு சார்ந்த நபர் மதி என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவரது இந்த கொலை விடுதலை…

  17. புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். ஐ.நா. அறிக்கை தந்த நம்பிக்கையைத் தொடர்ந்து ஒரு வெற்றிச் செய்தி! சமீபத்தில் நடந்து முடிந்த கனடா நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இலங்கைத் தமிழரான ராதிகா வெற்றிபெற்றுள்ளார். இருபத்தொன்பதே வயதான ராதிகா,கனடா பாராளுமன்ற எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டிக்கும் முதல் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. ராதிகாவைச் சந்தித்தோம். நீங்கள் கனடாவுக்கு வந்தது இனக் கலவரத்துக்கு முன்பா, பின்பா? ”யாழ்ப்பாணம் அருகே ஒரு குட்டிக் கிராமம் எங்களுடையது. 1983 இனக் கலவரத்துக்குப் பின்னரான குழப்பமான,நம்பிக்கையற்ற சூழலில் அங்கிருந்து தப்பி வந்த குடும்பத்தினர் நாங்கள். எனது ஐந்தாவது வயதில் மூன்று சகோதரிகளுடன் என் பெற்றோர் கனடாவு…

  18. இலங்கையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டு, அழிவதைக் கண்டு உலகத் தலைவர்கள் குரல் கொடுத்துக் கொண் டிருக்கும் போது, ஈழத்து வவுனியாவின் நினைவாக தமிழகத்தில் ஒரு வவுனியாவை மக்கள் உருவாக்கி யிருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வை.கோ.பிறந்த கலிங்கப்பட்டி அருகே இந்த வவுனியா உருவாகி உள்ளது. வவுனியா நகரைச் சேர்ந்த தேவதாஸ் பேச ஆரம்பிக்கிறார். '‘2003-ம் ஆண்டு இந்த நகரை உருவாக்கினோம். உலகத் தலைவர்கள் யாருடைய பெயரை யாவது வைக்கலாமா? என யோசிச்சோம். பல பகுதிகள் தலைவர்களின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ளன. அதனால் வேறு பெயரை வைக்க யோசிச்சபோது, இலங்கை வவுனியாவிலுள்ள வன்னிக் காட்டில் எங்க…

  19. சுவிசில் இருந்து மகிந்தவிற்கு கடிதம் எழுதிய ஈனத்தமிழன் Wednesday, May 11, 2011, 17:55 சிறீலங்கா புலிப் பயங்கரவாதிகளை அழித்ததற்கு நன்றி தெரிவித்து, சுவிற்சர்லாந்தில் இருந்து தமக்கு மின்னஞ்சல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக, சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு இன்று (11-05-2011) அறிவித்துள்ளது. சூசை அருளானந்தம் என்ற பெயரில் இந்தக் கடிதம் தமக்கு கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ள சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு, அந்தக் கடிதத்தில் விடுதலைப் புலிகளை அழித்ததற்கு, போர்க்குற்ற நபர்களான சிறீலங்கா அரச அதிபரும், முப்படைத் தளபதியுமான மகிந்த ராஜபக்ச, மற்றும் பாதுகாப்புச் செயலர் கொட்டாபய ராஜபக்ச ஆகியோருபக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. …

  20. மே முதலாம் நாள் 'நீதிகோரி 1000 கிலோ மீற்றர்கள்'- அனைத்துலக மக்களவையின் அறிக்கை மே முதலாம் நாள் 'நீதிகோரி 1000 கிலோ மீற்றர்கள்' என்ற தலைப்பில் டென்மார்க் நாட்டிலிருந்து செருமனியூடாக நெதர்லாந்து நாட்டில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை நோக்கி தமிழினவழிப்புத் தொடர்பான விசாரணையை முன்னெடுத்து தமிழ்மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரக்கோரி மிதிவண்டிப் பயண கவனயீர்ப்புப் போராட்டத்தை தொடங்கவுள்ளார்கள். மே 18ஆம் நாள் நெதர்லாந்து நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்து, அவ்விடத்திலே நீதிகோரி உரிமைப் போராட்டத்தை நடாத்துவதோடு, அனைத்துலக ரீதியாக சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களுடன் மனுவும் கையளிக்கப்படவுள்ளது என்பதை அனைத்துலக மக்களவைகள் அறியத்தருகின்றனர். அனைத்துலக மக்களவை வெளியிட்…

    • 5 replies
    • 1k views
  21. போர்க்குற்றச்சாட்டை எதிர்கொள்ள இந்திய அரசின் உதவி அவசியம்: ஜனாதிபதி தெரிவிப்பு [Wednesday, 2011-05-11 03:02:05] ஐ.நா. நிபுணர் குழுவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்களை சர்வதேச அரங்கில் எதிர்கொண்டு இலங்கைக்கு எதிரான முயற்சிகளை முறியடிக்க இந்தியாவின் உதவி மிக மிக அவசியம் என்று தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் நேற்றுப் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். "இந்தியா எப்போதுமே இலங்கையுடன் இணைந்து புரிந்துணர்வுடன் செயற்பட்டுள்ளது. எல்லாச் சமயங்களிலுமே இரு தரப்புகளுக்கும் இடையிலான உறவுகள் சிறப்பாகவே இருந்து வருகின்றன'' என்று தெரிவித்தார் ஜனாதிபதி. இருப்பினும் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் …

    • 5 replies
    • 1.5k views
  22. மே மாதம் 18ம் திகதியன்று மத்திய லண்டனில் இனப்படுகொலைக்கு எதிராக அணிதிரளுமாறு பிரித்தானியத் தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது அதே வேளை இதே நாளில் ஜெனீவாவில் புலம் பெயர் தமிழர்களை அணிதிரளுமாறு நாடு கடந்த தமிழீழம் அறிக்கை விடுத்துள்ளது: முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் உறவுகள் இனவழிப்பு செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு லண்டனின் மத்தியிலுள்ள ட்ரபல்கர் சதுக்கத்தில் (Trafalgar Square) எதிர்வரும் 18ஆம் நாள் நடைபெறவுள்ளது. மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணிவரை இந்த நிகழ்வை நடத்துவதற்கு பிரித்தானிய காவல்துறையினர் எமக்கு அனுமதி வழங்கியுள்ளனர். தமிழர் தாயகத்தில் நீண்ட காலமாக இடம்பெற்றுவந்த இனவழிப்பின் உச்சகட்டமாக இருக்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுக…

    • 0 replies
    • 783 views
  23. அரசுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களில் முஸ்லிம்கள் இணைக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லீம் கொங்கிரஸ் கேட்டுள்ளது. அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே இடம்பெற்று வரும் பேச்சுக்களில் முஸ்லிம்கள் மூன்றாம் தரப்பாக இணைக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லீம் கொங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. இருதரப்புக்கும் இடையே இதுரை இடம்பெற்ற ஐந்து சுற்று பேச்சிலும் காணப்பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பாக முஸ்லிம்களுக்கு சந்தேகம் ஏற்படுள்ளதெனவும், பேச்சில் வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டுமெனவும் முஸ்லீம் கொங்கிரஸ் தவிசாளரான பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான பே…

  24. I தம்மீதான நிறவெறிக் கொடுமைகளை மன்னிக்கலாம், மறக்க முடியாது என்றார் தென் ஆப்ரிக்க விடுதலை இயக்கத் தலைவரான நெல்சன் மண்டேலா. வரலாற்றிலிருந்து இனக்கொலை தொடர்பான விசாரணை ஒன்று, உள்நாட்டில் நிறவெறி தொடர்பான கொலைகள் குறித்த விசாரணையென ஒன்று என இரண்டு விதமான விசாரணைகளை மட்டும் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்வோம். சென்ற நூற்றாண்டின் மத்தியில் யூதர்கள் மீது ஜெர்மானியர்கள் நிகழ்த்திய இனக்கொலைகள் குறித்த நூரம்பர்க் விசாரணைகள் நாம் அறிந்தவை. விசாரணையின் முடிவில் இனக்கொலை புரிந்த நாசித்தலைவர்கள் தண்டனை பெற்றார்கள். சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் தென் ஆப்ரிக்காவில் நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்தபோது உண்மை காணலும் நல்லிணக்கமும் என்பதற்கு அமைக்கப்பட்ட…

  25. 2009 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக போர்குற்ற விசாரணை செய்ய வேண்டும் உலக நாடுகளிடையே பொது வாக்கெடுப்பு ஐ நா பாதுகாப்பு சபையில் நடந்தது. அதில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் 29 அவை Angola, Azerbaijan, Bahrain, Bangladesh, Bolivia, Brazil, Burkina Faso, Cameroon, China, Cuba, Djibouti, Egypt, Ghana, India, Indonesia, Jordan, Madagascar, Malaysia, Nicaragua, Nigeria, Pakistan, Philippines, Qatar, Russian Federation, Saudi Arabia, Senegal, South Africa, Uruguay, and Zambia. இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் 12 அவை Bosnia and Herzegovina, Canada, Chile, France, Germany, Italy, Mexico, Netherlands, Slovakia, Slovenia, Switzerland, and United Kingdom. …

    • 0 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.