Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 11 FEB, 2024 | 09:35 PM மக்கள் பங்கேற்பு அபிவிருத்தி என்ற எண்ணக்கருவுடன் மக்கள் பங்களிப்பு அபிவிருத்தித் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்துவதிலும் அரச தாபனங்கள் சிரத்தை எடுக்குமாயின் கிராம மட்ட உட்கட்டுமானங்களை விருத்தி செய்வது இலகுவாக அமையும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். நீர்வேலியில் நேற்று சனிக்கிழமை (10) இடம்பெற்ற தமிழ் முற்றம் மற்றும் தபாலகக் கட்டிடத் திறப்பு விழாவில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், நீர்வேலி மண் தமிழ் மக்களின் பாரம்பரியத்திற்கு உரிய மண்ணாகும். இந்த மண்ணில் தமிழ் முற்றத்தினை அமைக்க வேண்டும் என நான் த…

  2. பாடசாலை வரலாற்றில் முதல் முறையாக நெல் அறுவடை. பாடசாலை வரலாற்றில் முதல் முதலாக இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காணியில் நெல் அறுவடை விழா இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மத்திய கல்லூரி சமூகத்தினால் சுமார் முக்கால் ஏக்கரில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக நெல் அறுவடை விழாவானது பாடசாலை முதல்வர் சபரி பூலோகராஜா தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் உதவிக்கல்விப் பணிப்பாளர் நளாயினி வசந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். குறித்த பாடசாலைக் காணி கடந்த வருடம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது. தரிசு நிலமாக காண…

    • 1 reply
    • 389 views
  3. இலங்கை விமான நிலையங்கள் தொடர்பில் அதானி குழுமம் கலந்துரையாடல் இலங்கையின் 03 விமான நிலையங்களின் நிர்வாகத்தை கையகப்படுத்துவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் அதானி குழுமம் கலந்துரையாடியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு இரத்மலானை விமான நிலையம் மற்றும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை மேற்கோள்காட்டி த இந்து வர்த்தக இணையத்தளம் செய்தி வௌியிட்டுள்ளது. அந்த விமான நிலையங்களின் வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் பயணிகளின் திறனை அதிகரிப்பதற்கும் ஒரு தனியார் பங்காளியின் ஆதரவு எதிர்பார்க்…

  4. Published By: VISHNU 08 FEB, 2024 | 02:02 AM அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பெப்ரவரி 9ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்திய மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயத்தில் இணைந்துள்ள ஜனாதிபதி, இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் அங்கு ஆராயவுள்ளார். https://www.virakesari.lk/article/175852

  5. Published By: RAJEEBAN 05 FEB, 2024 | 08:10 AM மருந்து தட்டுப்பாடு குறித்த போலியான அச்சத்தை அமைச்சரவையில் ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அதனை பயன்படுத்தி தரம்குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்தார் என பிரதிசொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார். 2022 மே 30 ம் திகதி மருந்து தட்டுப்பாடு காரணமாக நாட்டின் சுகாதார துறை மூன்று வாரங்களிற்குள் வீழ்ச்சியடையும் என அமைச்சரவையில் அச்சத்தை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் அதனை பயன்படுத்தி தரம்குறைந்த மருந்துகளை அரசாங்க மருத்துவமனைக்கு விநியோகம் செய்தார் என பிரதிசொலிசிட்டர் ஜெனரல் மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளார். இந்திய கடன் உதவியில் எஞ்சியிருந்த நிதியை கூடிய விரை…

  6. 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான உணவு, பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு அடுத்த வார தொடக்கத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதுவரையில் பெறப்பட்ட கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக, வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவில் பாதி உடனடியாக வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். கனிஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உதவித்தொகை 17,000 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது. அதில் 11,800 ரூபா உடனடியாக வழங்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/291253

  7. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அயோத்தி இராமர் கோயிலுக்கு விஜயமொன்றை முன்னெடுக்கவுள்ளார். புதுடெல்லிக்கு 02 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர் அயோத்தி இராமர் கோயிலுக்கு முன்னெடுக்கவுள்ளார். இந்தநிலையில், நாளை மாலை அயோத்தி இராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், புதுடெல்லியில் தங்கியிருக்கும் காலத்தில் நாமல் ராஜபக்ஷ பல்வேறு உயரதிகாரிகளை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/291042

  8. திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம் குறித்த ஆலோசனையை கிழக்கு ஆளுநரிடம் முன்வைத்த இந்திய பாதுகாப்பு அமைச்சு 10 FEB, 2024 | 02:30 PM இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்துக்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது. திருகோணமலை துறைமுகத்தை மேம்படுத்துவதன் ஊடாக வங்காள விரிகுடாவில் பயணிக்கும் கப்பல்களுக்கு அவசர நிலையின்போது விரைவான சேவைகளை வழங்க முடியும் என இ…

  9. Published By: VISHNU 09 FEB, 2024 | 11:38 PM (எம்.மனோசித்ரா) இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் திருகோணமலை எண்ணெய் தாங்கி மற்றும் கொழும்பை இணைக்கும் பெற்றோலியக் குழாய் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம் மூலம் இந்திய அரசாங்கம் சமர்ப்பித்த முன்மொழிவு குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்திய எரிசக்தி வாரத்தை முன்னிட்டு இந்தியா சென்றுள்ள மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியன் எரிபொருள் கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இ…

  10. 10 FEB, 2024 | 10:29 AM சிறைக்கைதிகளின் கைரேகைகளை பெற்று கைதிகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களமர நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, தற்போது நாட்டிலுள்ள முப்பது சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் கைரேகைகளை பெற்று டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளது . இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். கைதியின் கைரேகைகளைப. பெற்று அவர்களுக்காக தயாரிக்கப்பட்பள்ளி தொழில்நுட்ப அமைப்பில் உள்ளீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளாகவும் பணிப்பாளர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/176022

  11. Published By: VISHNU 09 FEB, 2024 | 09:13 PM உலகின் பலமான நாடுகள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல், தமக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இந்து சமுத்திர வலய நாடுகளின் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான இந்து சமுத்திரத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 2050 ஆண்டளவில் இந்தியா, இந்தோநேசியா போன்ற நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி 8 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் உ…

  12. கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்! இலங்கையில் கஞ்சா பயிர்செய்கை மற்றும் ஏற்றுமதி தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதேவேளை வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கை முதலீட்டு சபை ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1368588

  13. எமது மக்கள் நலன் கருதிய இலக்கானது எமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களது காலத்திலேயே எட்டப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (09) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இச்சாறு தெரிவித்திருந்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில் - எமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகளாக இருந்தாலும் சரி, அரசியல் தீர்வுப் பிரச்சினையாக இருந்தாலும் சரி. இந்த காலகட்டத்ததை நாம் தவற விடுவோமானால், மீளவும் இத்தகையதொரு பொன்னான காலத்தை நினைத்துப் பார்க்க இயலாது என்றே கருதுகிறேன். தேர்தல்களில் நாங்கள் தனித்தனியே போட்டியிடுவோம். நாட்டைக் கட்டி எழுப்புவதில் ஒன்றிணைவோம் என்ற ஜனாதிபதி அவர்க…

  14. இந்தியா பறந்தார் அனுரகுமார! தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட நால்வர் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர். இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் மேலும் இருவரும் இன்று (05) காலை புதுடில்லிக்கு பயணித்ததாக "அத தெரண" செய்தியாளர் தெரிவித்தார். தேசிய மக்கள் கட்சி முதலில் மக்கள் விடுதலை முன்னணியினால் கட்டமைக்கப்பட்டதுடன், அந்தக் கட்சி முன்பு இந்தியாவுக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றியது. இந்திய-இலங்கை சமாதான உடன்படிக்கையின் போது, மக்கள் விடுதலை முன்னணி வெளிப்படையாகவே அதற்கு எதிராக செயல்பட்டு இந்திய விரிவாக்கத்திற்கு எதிரான ஒ…

  15. பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் மற்றும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . குற்றவியல் சட்டத்தின் 345ஆம் பிரிவுக்கு அமைய, இந்த சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பொதுப்போக்குவரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், சிவில் உடையில் உள்ள பொலிஸார் அவர்கள் தொடர்பில் கண்காணிப்பதுடன், தமது கமராக்கள் மூலம் அதனை சாட்சியமாக பதிவு செய்வார்கள். பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இதேவே…

  16. யாழ் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது : சரத் வீரசேகர! யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடிய ஏந்தியவாறு பொதுமக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடியதை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடம் யாழ்ப்பாண நகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேசிய கொடியினை ஏந்தியவாறு இலங்கை 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியமை வரவேற்கத்தக்க விடயம். யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றமை அனைவரும்…

  17. 09 FEB, 2024 | 12:33 PM யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளராக ச.கிருஷ்னேந்திரன் இன்று (09) தனது கடமைகளை பொறுப்பேற்றார். இதுவரை காலமும் யாழ். மாநகர சபை ஆணையாளராக பணியாற்றிய இ.த.ஜெயசீலன் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளராக கடமையாற்றிய ச.கிருஷ்னேந்திரன் யாழ். மாநகர சபையின் புதிய ஆணையாளராக பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/175963

  18. சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 4 கோடி ரூபா பெறுமதியான உணவுப்பொருள்கள் அழிப்பு -(ஆதவன்) சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்ட சான்றுப் பொருள்கள் வவுனியா மேலதிக நீதிவான் முன்னிலையில் நேற்று அழிக்கப்பட்டன. இவற்றின் பெறுமதி சுமார் 4 கோடி ரூபா என்று தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டுபரப்பட்ட அரிசி, மஞ்சள், கொத்தமல்லி, நிலக்கடலை உட்பட 7 ஆயிரம் கிலோ உணவுப் பொருள்களும், கிருமிநாசினிகளும் இவ்வாறு அழிக்கப்பட்டன. இவை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச எல்லைப்பகுதியில் வைத்து பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றில…

  19. 09 FEB, 2024 | 10:35 AM நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான துணைத்தூதுவர் இவன் ருட்ஜென்ஸ் (Iwan Rutjens), வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை நேற்று (08) சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆளுநர் துணைத்தூதுவருக்கு தெளிவுபடுத்தினார். அவ்விடயங்களை கேட்டறிந்த இவன் ருட்ஜென்ஸ் குடா நாட்டுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் என கூறியுள்ளார். அத்துடன் முதலீட்டுத் திட்டங்களை ஊக்குவித்து வட மாகாண அபிவிருத்திக்க…

  20. யாழ். மாவட்ட செயலாளர் - மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சந்திப்பு 09 FEB, 2024 | 11:04 AM யாழ்ப்பாண மாவட்டத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை நேற்று (08) சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தல், போதைப்பொருள் பாவனை, சட்டம் ஒழுங்கு என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இந்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனும் இணைந்துகொண்டார். https://www.virake…

  21. தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை புறக்கணிக்கும் ரணில்: சுமந்திரன் பகிரங்கம் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க வழங்கும் வாக்குறுதிகள், மக்களை ஏமாற்றும் வகையில் அமைந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இனப்பிரச்சனைக்கான தீர்வை முழுமையாக நிராகரித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் தனது கொள்கை பிரகடனத்தை முன்வைத்ததாக, இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய போது சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கொள்கை பிரகடன உரை மீதான ஆர்வம் காரணமாக சிறிலங்கா நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரணிலின் நடவடிக்கை இது தொடர்பில்…

  22. Published By: DIGITAL DESK 3 08 FEB, 2024 | 04:37 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தில் ஜனாதிபதி தேர்தல் பற்றி குறிப்பிடப்படவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யும் யோசனையை முன்வைத்து, ஜனாதிபதி தேர்தலை ஒருவருட காலத்துக்கு பிற்போட அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. ஜனநாயகத்துக்கு எதிராக செயற்பட்டு விட்டு, பாராளுமன்றத்துக்குள் வந்து எதிர்க்கட்சிகளிடம் ஒத்துழைப்பு கோருவதற்கு வெட்கமில்லையா என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையின் மீதான சபை ஒத்திவைப்ப…

  23. தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு (TPNA) பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே சிறந்த வேட்பாளராக தாம் கருதுவதாக தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்ற அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தம்முடன் பாராளுமன்ற வளாகத்தில் பேசியதாகவும் ஆனால் என்ன பேசப்பட்டது என்பதை வெளியிட மறுத்துவிட்டாா். தற்போதைய வேட்பாளர்களில் சிறந்த வேட்பாளராக ஜனாதிபதியை தான் கருதுவதாக அவர் கூறினார். https://www.ilakku.org/சிறந்த-ஜனாதிபதி-வேட்பாளா/?amp

  24. Published By: DIGITAL DESK 3 07 FEB, 2024 | 03:50 PM நாட்டில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் தமிழகத்தில் இன்று புதன்கிழமை (7) காலை தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீட்டு தமிழக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022 ஆண்டு மார்ச் மாதம் முதல் தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நேற்று புதன்கிழமை (6) மாலை மன்னாரில் இருந்து படகில் புறப்பட்டு இன்றைய தினம் அதிகாலை ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் கடற்கரையை சென்றடைந்…

  25. Published By: VISHNU 08 FEB, 2024 | 09:35 PM சாந்தனை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, அவருக்குரிய கடவுச்சீட்டு தேவைப்பட்ட நிலையில், இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டதிட்டங்களின் அமைவாக அவருக்குரிய கடவுச்சீட்டு (Passport) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறைக்குச் சாந்தனுடைய கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சால் அறியத்தரப்பட்டுள்ளது. இதன்படி, சாந்தன் இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பயணம் செய்வதற்கான ஏற்பாடுகள் வருநாட்களில் இந்திய அரசு தரப்பினால் மேற்கொள்ளப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/175928

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.