ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143299 topics in this forum
-
http://www.yarl.com/files/110321-sumanthiran-mp.mp3
-
- 0 replies
- 1.2k views
-
-
http://www.yarl.com/files/110321-thavaratnam.mp3
-
- 0 replies
- 924 views
-
-
http://www.yarl.com/files/110321-colombo-reporter.mp3
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையை பிளவுபடுத்த இந்தியா மறைமுகத் திட்டம்! - பாகிஸ்தான் ஊடகம் தகவல் தென்னாசியப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக இலங்கையை பிளவுபடுத்த இந்தியா மறைமுகமாகத் திட்டமிட்டு வருவதாக பாகிஸ்தானின் த நேஷன் பத்திரிகை நேற்று (22.03.11) செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் சீனாவை நோக்கி சார்ந்து வரும் நிலையில் அதற்குப் பாடம் கற்பிக்கும் நோக்கத்துடன் இந்தியா இவ்வாறு திட்டமிடுவதாக நம்பகரமாக தெரிய வருவதாக இப் பத்திரிகை தெரிவித்துள்ளது. இலங்கையின் இனங்களுக்கு இடையில் பிரிவினைகளை உருவாக்குவதன் மூலம் இலங்கையைப் பிளவுபடுத்தும் புதுடில்லியின் திட்டங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் தகவல் குறிப்புக்களும் வெளிப்படுத்தியிருப்பதாக இப் பத்திரிக…
-
- 5 replies
- 2.6k views
-
-
Thursday, 24 March 2011 01:51 மாங்குளத்தில் விளையாட்டு வளாகம் - உதவுகிறார் இயன் போத்தம் போரினால் பாதிக்கப்பட்ட மாங்குளத்தில் அமைக்கப்படவுள்ள விளையாட்டு வளாக கட்டுமானத் திட்டத்துக்கு உதவ பிரித்தானிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் இயன் போத்தம் முன்வந்துள்ளார். வடமாகாணத்தின் இதயப்பகுதியான மாங்குளத்துக்கு அருகே இந்த சமூக விளையாட்டு வளாகத்தை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் சிறிலங்கா துடுப்பாட்ட அணியின் வீரர்கள் முத்தையா முரளிதரன், குமார சங்கக்கார, சமிந்த வாஸ் போன்வர்கள் ஈடுபட்டுள்ளனர். சிறிலங்காவைத் தளமாகக் கொண்ட அறக்கட்டளை நிறுவனம் ஒன்று சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்கும் நோக்கில் மாங்குளத்துக்கு அருகே சமூக விளையாட்டு வளாகத்தை அம…
-
- 0 replies
- 1k views
-
-
பொலநறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தையில் புனர்வாழ்வு முகாமில் சிகிச்சை பெற்றுவந்த தமிழீழ விடுதலைப்புலி போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை புனர்வாழ்வு பெற்றுவரும் இளைஞர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து இவர் நித்திரையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டதாக படை வட்டாரங்கள் தெரிவித்தன. கிளிநொச்சியை சேர்ந்த கந்தசாமி நடேசலிங்கம் (26வயது)என்ற முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெலிக்கந்தை பிரதேசத்தில் உள்ள திருகோணமடு பகுதியில் உள்ள புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவந்த விடுதலைப்புலி உறுப்பினரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த சட…
-
- 2 replies
- 1.2k views
-
-
இளவரசர் வில்லியத்தின் திருமணத்திற்கு இலண்டனில் சிஸ்விக் விகாரையின் புத்த பிக்குவும் அழைக்கப்பட்டுள்ளாராம்.இளவரசர் வில்லியம் மற்றும் கேற் மிடில்ரன் ஆகியோர்க்கு அரச திருமணம் உத்தியோகபூர்வமாக நடைபெறவுள்ளது. இதில் பல நாட்டு பல்லின தலைவர்களுக்கு அரச அழைப்பு சென்றுள்ளது. இவ்வாறு சிஸ்விக் புத்த கோயில் துறவி வண.போகொட சீலா விமல தேரர் இற்கும் அழைப்பு கிடைத்துள்ளதாம். My link
-
- 0 replies
- 1.4k views
-
-
வியாழக்கிழமை, மார்ச் 24, 2011 ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சட்டதரணியுமான விஜேதாஸ ராஜபக்ஷ்விற்கு 500 மில்லியன் ரூபாவினை நட்டஈடாக வழங்க வேண்டும் என லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 2007ஆம் ஆண்டு சிலுமின பத்திரிகையில் வெளியான செய்தியினால் தனது பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாக கூறி, பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ், கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணைகள் இன்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, எதிர்தரப்பான லேக் ஹவுஸ் நிறுவனத்தினால் எதுவித விவாதங்களையும் முன்வைக்கப்படவில்லை என எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்காவில் தற்போது செயற்பட்டுவரும் உள்ளூர் வெளியூர் தொண்டு அமைப்புக்களை இப்போ குற்றத் தடுப்பு பிரிவினர் சோதனைக்குட்படுத்துவதாக வெளியான செய்தியை தேசிய பாதுகாப்பிற்கான ஊடக தகவல் மத்திய நிலையம் மறுத்துள்ளது. இவ்வாறு சோதனைக்குட்படுத்துவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அந்த மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், சில நிறுவனங்கள் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு, அவ்வாறான நிறுவனங்களை மாத்திரம் சோதனைக்குட்படுத்தியதாகவும் அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு சர்வதேச நாடுகளிலிருந்து கிடைக்கப் பெறும் நிதியுதவிகளை எவ்வாறு அந்த நிறுவனங்கள் உபயோகிக்கின்றன என்பது தொட…
-
- 0 replies
- 956 views
-
-
நோர்வேயின் சுதந்திர பகுப்பாய்வுக் குழு இலங்கையில் அமைதி உடன்பாடு அமுலில் இருந்த காலத்திலும் அதற்கு முன்னான விடுதலைப்புலிகளுடனான காலப்பகுதியிலும் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக மேற்கொண்டு வரும் ஆய்வுகள் குறித்த அறிக்கை இந்த வருடம் மே மாதம் நடுப்பகுதியில் வெளியிடப்பட விருப்பதாகத் தெரியவருகின்றது. நோர்வே அரசாங்கமோ கொழும்பிலுள்ள நோர்வேத் தூதரகமோ நேரடி சம்பந்தமில்லாமல் விசேடமாக அழைக்கப்பட்ட சுதந்திர குழு மூலம் இந்த ஆய்வு செய்யப்பட்டதாம். இலங்கையில் நோர்வே அனுசரணை மூலமாக 1997 இல் இருந்து 2009 ஆம் ஆண்டுவரை அமுலில் இருந்த அமைதி உடன்பாட்டுகாலத்தில் அந்த நாடு பெற்றுக் கொண்ட தனித்துவமான அனுபவங்களை இந்தக் குழு ஆராய்ந்து வருவதாகவும் அதனை ஓர் அறிக்கையாக வெளியிடவிருப்பதாகவும் தெ…
-
- 0 replies
- 544 views
-
-
இன்று லிபியா விடயத்தில் காட்டிய அவசரத்தினை அன்று தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் வெளிக்காட்டவில்லை என ஐநா மனிதஉரிமைகள் கவுன்சிலின்கூட்டத்தொடரில் பங்கேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா குற்றஞ்சாட்டினார். ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 16வது கூட்டத் தொடரில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சக பிரதிநிதி சுகிந்தன் முருகையா, இளையோர் முன்னணி பொறுப்பாளர் ஜனர்தனன் புலேந்திரன்(சந்தோஸ்), இனப்படுகொலை-போர் குற்றங்களுக்கு எதிரான அமைச்சகத்தின் ஐநா மனித உரிமை சபைக்கான விவகாரங்களுக்கான பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா ஆகியோர் பங்கெடுத்துள்ளனர் 22 மார்ச் 2011 - செவ்வாய்கிழமை இடம்பெற்ற பொதுநிலவர…
-
- 18 replies
- 2.8k views
-
-
அமெரிக்கா வரும் என புலிகளை நம்பவைத்த மர்ம நபர்: வழுதி. இறுதிக்கட்டப் போரின்போது அமெரிக்க கப்பல் ஒன்றுவந்து, மக்களையும் புலிகளின் சிரேஷ்ட தலைவர்களையும் காப்பாற்றும் என புலிகள் நம்பியது உண்மை. ஆனால் அப்படி ஒரு கப்பல் வரவில்லை, அவ்வாறு புலிகளுக்குச் சொல்லியது யார் என்று தெரியாத ஒரு நிலை கடந்த 20 மாதங்களாக நீடித்துள்ளது. ஆனால் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. புதினம் இணையத்தில் கட்டுரைகள் எழுதி, அதனூடாக தமிழ் மக்களுக்கு நன்கு பரீட்சையமான வழுதி எனப்படும் பரந்தாமே ஆவார். இவரே புலிகளின் அரசியல் தலைவர்களிடம், அமெரிக்காவின் கப்பல் அல்லது, உலங்குவானூர்தி ஒன்று வர இருப்பதாகச் சொல்லி புலிகளை நம்பவைத்தவர் ஆவார். மேலும் வழுதி தனக்கு அமெரிக்க பேராசிரியர் ஜேம்ஸ் கி…
-
- 9 replies
- 2.2k views
-
-
அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா: எதிர்த்து மகிந்த ராஜபக்ச அதிரடி உத்தரவு ! [ பிரசுரித்த திகதி : 2011-03-23 07:21:23 AM GMT ] லிபியாவுக்கு எதிரான படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற மேற்கு நாடுகளைக் கண்டித்தும், லிபிய ஜனாதிபதி கேணல் கடாபிக்கு ஆதரவாகவும் போராட்டங்களை நடத்துமாறு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிய வருகின்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிற்சங்கத் தலைவரும், மேல் மாகாண ஆளுநருமான அலவி மௌலானா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் சிறிலங்கா ஜனாதிபதியின் மூத்த ஆலோசகருமான ஏ.எச்.எம்.அஸ்வர் ஆகியோரை மையப்படுத்தி இப் போராட்டங்களை நடத்துமாறு சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உத்தரவு பிறப…
-
- 2 replies
- 2.8k views
-
-
23 மார்ச் 2011 பிராபாகரன் UNல் முறைப்பாடு:- தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:- காட்டு மிராண்டித்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு பொய்குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளளேன் நான் காட்டுமிராண்டித்தனமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளேன் - பொய்குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளளேன்:- பிராபாகரன் ல் முறைப்பாடு:- நியூ மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் வர்த்தகர் இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தாலும் புலனாய்வுத் துறையினராலும் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதற்கு எதிராகவும் தன் மீதான சித்திரவதைக்கு எதிராகவும் நீதி கோரி ஐநாவிடம் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார். பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாகக் கூறி இலங்கையின் புலனாய்வுப் பொலிஸாரால்…
-
- 2 replies
- 2.3k views
-
-
ஆபிரிக்காவிலுள்ள நாடான லிபியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கி ஒரு சில நாட்களே ஆன நிலையில் அங்கே மனிதஉரிமைமீறல், போர் குற்றம் என்பன நடப்பதாக அந்த நாட்டில் புரட்சியை நடாத்திக்கொண்டிருக்கும் விடுதலைப் போராளிகள் உலக நாடுகளை நோக்கி குரல் கொடுத்தார்கள். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் கூட்டம் போட்டார்களோ இல்லையோ பிரான்ஸ் நாடு தனது மிராச்சையும் தூக்கிக் கொண்டு கேணல் கடாபியை சுட்டு வீழ்த்த புறப்பட்டது. அவர்களுக்குப் பின்னால் ஐக்கிய இராச்சியமும், ஐக்கிய அமெரிக்காவும் லிபியாவில் தாக்குதல்களை நடாத்தத் தொடங்கிவிட்டார்கள். இலங்கையில் உள்நாட்டுப்போர் 30 வருட காலமாக நடந்து 2009 மே யில் மிக உக்கிரமடைந்து 80 ஆயிரம் பேர்வரையில் பலிகொண்டு அப்போர் முற்றுப்பெற்றது. ஆனால் மனித உரிமை மீ…
-
- 2 replies
- 2.3k views
-
-
Tuesday, March 22nd, 2011 | Posted by thaynilam ஏப்ரல் முதல் அரச ஊழியர்களுக்கும் வருமான வரி புதிய நிதியாண்டு தொடக்கமான எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களிடம் வருமானவரி அறவிடப்படவுள்ளது.வரவு செலவுத்திட்டத்தில் அறிவித்தபடி சகல கொடுப்பனவுகளுடன் மாதாந்தம் ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட சம்பளம் பெறும் சகல அரச ஊழியர்களும் வருமான வரி செலுத்த வேண்டியுள்ளது. 1978 ஆம் ஆண்டு முதல் அரச ஊழியர்களது வருமான வரி நீக்கப்பட்டிருந்தது. 33 வருடங்களின் பின் மீண்டும் வருமான வரி செலுத்தும் நடைமுறை அரச ஊழியர்களுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Short URL: http://thaynilam.com/tamil/?p=3968
-
- 1 reply
- 576 views
-
-
நாடு கடத்தப்பட்டால் ஆபத்து:இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவில் மீள புகலிடம் [Wednesday, 2011-03-23 06:24:53] அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்ட இரண்டு இலங்கையர்களுக்கு மீள புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு இவ்வாறு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் ஆபத்து ஏற்படக் கூடும் என்ற அடிப்படையில் குறித்த நபர்களுக்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. விமானம் அல்லது படகு மூலமாக அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஒரே விதமான சட்டங்களே அமுல்படுத்தப்படும் என அந்நாட்டு உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழினியை மே 9ம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியவில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு! [Wednesday, 2011-03-23 05:55:32] தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவு பிரதானி என இனங்காணப்பட்டுள்ள தமிழினியை எதிர்வரும் மே 9ம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியவில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழினி எனப்படும் சுப்பிரமணியம் சிவகாமியை நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்திய இரகசியப் பொலிஸார் அறிக்கை ஒன்றையும் சமர்பித்தனர். குறித்த அறிக்கையை பரிசீலித்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. சட்டமா அதிபர் வழங்கும் ஆலோசனைக்கு அமைய தமிழினி குறித்து எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இரகசியப் பொலிஸார் நீதிமன்றிற்கு அற…
-
- 0 replies
- 996 views
-
-
கருவில் சிதைந்த ஆறு மாத சிசுவின் சடலம் இன்று யாழில் மீட்பு [Wednesday, 2011-03-23 03:26:16] யாழ்,திருநகர்,இராஜசிங்கம் வீதி என்ற இடத்தில் பாழடைந்த கட்டடம் ஒன்றிலிருந்து குழந்தை ஒன்றின் சடலத்தை யாழ் பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். கருவில் 6 மாதம் இருந்து சிதைக்கப்பட்ட குழந்தையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ள. இது குறித்து பிரதேச வாசிகளிடம் விசாரணைகளை மேற்கொண்ட யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். seithy.com
-
- 0 replies
- 1.2k views
-
-
3 உள்ளுர் மீனவர்கள் இந்திய கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் 22 மார்ச் 2011 யாழ்ப்பாணம் வடமராட்சியின் வல்வெட்டித்துறைப் பகுதியிலிருந்து தொழிலுக்குச் சென்ற 3 உள்ளுர் மீனவர்கள் இந்திய மீனவர்களாலும் இந்திய கடற்படையினராலும் இணைந்து சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது இவர்கள் ராமேஸ்வர காவற்துறையிரிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இன்று காலை வழமை போன்று தொழிலுக்குச் சென்ற வேளையிலேயே இந்திய கடற்படையினரால் பிடிக்கப்பட்டதாகவும் பின்னர் அங்கு மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய இழுவைப் படகு மீனவர்களிடம் கையளித்ததாகவும் தெரிய வருகின்றது. தற்பொழுது இவர்கள் ராமேஸ்வரம் காவற்துறையில் தடுத்…
-
- 0 replies
- 839 views
-
-
லிபியா மீதான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் நடவடிக்கை மற்றும் மேற்கு நாடுகளின் தாக்குதலால் அத்திரமுற்ற லிபிய ஆதரவாளர்கள் பான்கிமூனை தாக்கியுள்ளனர். அரபு லீக் கூட்டத்தில் கலந்துகொண்டு வெளியேறுகையில் நூற்றுக்கனக்கான மக்கள் பான்கிமூனை நோக்கி கற்களை வீசினர். வரலாற்று முக்கியத்தும் மிக்க தாகிர் சதுக்கத்தில் கூடிய மக்களே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாகீர் சதுக்கத்திலேயே அண்மையில் மக்கள் புரட்சி ஒன்ரை ஏற்படுத்தி ஆட்சியினை கவிழ்த்தனர். http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95…
-
- 2 replies
- 1.5k views
-
-
http://www.yarl.com/files/110321_wtf-sonia-meeting.mp3
-
- 2 replies
- 1.8k views
-
-
உலகெங்கும் வாழும் தமிழர்கள் நெஞ்சத்தில் போற்றிடும் அன்னை பார்வதி அம்மையார் 31-வது நினைவு நாளாகிய மார்ச் 22 அன்று, தமிழ் ஈழத்திலும், தரணியில் தமிழர்கள் வாழும் இடங்கள் அனைத்திலும், அன்னையாரின் அந்தியேட்டி நினைவு அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அந்நிகழ்வு தொடர்பில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைநகர் சென்னையில், வங்கக்கடல் அலைகளில் மலர்களைத் தூவி நீர்க் கடன் ஆற்றும் நிகழ்ச்சி, பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற இருக்கிறது. வேலுப்பிள்ளை பிரபாகரனை தன் வயிற்றில் சுமந்த நமது அன்னை பார்வதி அம்மையாரின் ஈமச்சாம்பல், ஈழத்தில் இருந்து வந்து சேர்…
-
- 4 replies
- 1.2k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஏப்ரல் 27 ஆம் திகதி அரசாங்கத்தின் தூதுக்குழுவை சந்திக்கும்போது அதிகாரப் பகிர்வு குறித்த ஒரு தொகுதி யோசனைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அரசாங்கத்திற்கும், பிரதான தமிழ் அரசியல் கட்சியான த.தே.கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையானது இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தரத் தீர்வை வழங்குவதுடன் தமிழ் மக்களின் மனத்தாங்கலையும் தீர்த்துவைக்கும் என தான் நம்புவதாக மாவை சேனாதிராஜா நம்பிக்கை தெரிவித்தார். அரசாங்கமும் த.தே.கூட்டமைப்பும் ஏப்ரல் 7 மற்றும் 27 ஆம் திகதிகளில் சந்திக்கவுள்ளதாக அவர் கூறினார். - உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குதல், - புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியுள்ள எல்.…
-
- 0 replies
- 878 views
-
-
ஈழத்தமிழர் மீது சோனியாவுக்கு உண்மையான அக்கறை இருந்தால் முதலில் நளினியை விடுதலை செய்யட்டும்: ஸ்ரீதரன் ஈழத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். நாம் இலங்கைத் தமிழர்களுடனேயே இருக்கின்றோம் என அண்மையில் கருத்து வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியாகாந்தி அதற்கான நல்லெண்ண நடவடிக்கையாக முதலில் நளினியை விடுதலை செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டுமென தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் இலண்டன் வந்திருந்த சோனியா காந்தி அங்கு உலகத்தமிழர் பேரவையின் நிர்வாகிகளுடனான சந்திப்பின்போது வன்னிப்போரில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த காணொளியை தான் பார்வையிட்டதாகவும் இவ்விடயத்தில் தான் அக்கற…
-
- 0 replies
- 926 views
-