Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மௌலவியின் கருத்தால் சர்ச்சை: மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டம்! பரதக்கலை தொடர்பாக மௌலவி ஒருவர் தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 45 நிமிட நேரம் விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் முன்பாக இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள்,விரிவுரையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது நடன உடையுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் ”பரதக்கலை என்பது தமிழர்களின் பூர்வீக கலையாகும். இக்கலையை தெய்வீக கலையாக நாங்கள் கருத…

  2. எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி மற்றும் நட்சத்திர இரவு நிகழ்ச்சி என்பன இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்ச்சியானது Northern Uniஆல் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. இசை நிகழ்ச்சி இவ்வாறான சூழலில் குறித்த நிகழ்ச்சியில் குஷ்பு கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் குறித்து அவர் செவ்வியொன்றில் தெரிவித்த கருத்துக்கள் காரணமாக மக்கள் மத்தியில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவருக்கு பதிலாக டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினியை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக Northern Uni ஏற்பாடுகளை செய்துள்ளது. …

  3. இந்திய கடற்பகுதியில் எல்லைத் தாண்டி வரும் இலங்கை கடற்படையினரையும், கடற்கொள்ளையர்களையும் இந்திய அரசு பாரபட்சமின்றி சுட்டு வீழ்த்தினால் தான் இந்தியாவின் மீது இலங்கை அரசுக்கு பயம் வரும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். ''எல்லைத் தாண்டி மீன் பிடிக்கச் சென்றதாக கூறி, பாம்பன் மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் சனிக்கிழமை (18) கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் விடுவிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், அவர்களுடைய படகுகள், மீன்பிடி வலைகள், திசைகாட்டும் கருவிகள் உள்ளிட்ட உடைமைகள் பறிக்கப்படுவதும் வாடிக்கையாக …

    • 4 replies
    • 922 views
  4. Published By: PRIYATHARSHAN 18 NOV, 2023 | 08:23 PM சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் உள்ளிட்ட தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் உள்ளிட்ட தூதுக் குழுவினர் இன்று சனிக்கிழமை 18ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நாட்டில் தங்கியிருக்கும் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசாங்கத்தின்…

  5. யாழ்ப்பாணம் – காரைநகரில் 100 கிலோ கிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 101 கிலோகிராம் 750 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவினை கடற்படையினர் இன்று காலை பறிமுதல் செய்துள்ளனர். மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, 11 ஆயிரத்து 880 மில்லிகிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்கள் பதுளை பொலிஸ் பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமையவே இரு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ள…

  6. 17 NOV, 2023 | 06:30 PM கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த இந்திய கடற்படைக் கப்பல் (INS) கோரா இன்று வெள்ளிக்கிழமை ( 17) இந்தியாவிற்கு புறப்பட்டது. இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்தில் வைத்து கடற்படை மரபுகளுக்கு அமைய குறித்த கப்பலை வழியனுப்பி வைத்தனர் . 91.1 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலானது இந்திய கடற்படைக்கு சொந்தமான ஏவுகணை கப்பலாகும். கோரா கப்பலின் கட்டளை அதிகாரியான கொமாண்டர் ஆர்.எம். நம்பியர், ரியர் அட்மிரல் சமன் பெரேராவை சந்தித்து கலந்துரையாடினார். இந்த கப்பலில் வருகை தந்திருந்த இந்திய கடற்படையினர் நாட்டில் இருந்த போது கொழும்பில் உள்ள சில சுற்றுலாத் தலங்களை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. …

  7. திருநர் வலையமைப்பினால் நடைபயணம் November 19, 2023 யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்றுகூடியவர்கள் நகரை சுற்றி நடைபயணத்தில் ஈடுபட்டனர். இந்த சமூகத்தில் வாழ்கின்ற அனைவரும் சமூக பொறுப்புடையவர்கள் என்பதை வலியுறுத்துவதோடு திருநர் சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம், மனிதர்களை மனிதர்களாக மதிப்போம் என நடைபயணத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர். திருநர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையால் உயிரிழந்தவர்களுக்கு இதன்போது மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. https://globaltamilnews.net/2023/197515/

  8. யாழ்ப்பாணம் உரும்பிராயில், முதியவர் ஒருவர் அடித்து கொலை! adminNovember 19, 2023 யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில், முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். உரும்பிராய் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய எஸ். பிரேமராஜன் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை சம்பவம் தொடர்பில் செல்வபுரம் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையான நபர் கோண்டாவில் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்பவர் எனவும் கைது செய்யப்பட்ட நபரை கோப்பாய் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். அதேவேளை கொலை சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் நேரில் சென்று விச…

  9. தனிச் சிங்களச் சட்டமே நாடு பிளவுபடக் காரணம் : அமைச்சர் மனுஷ நாணயக்கார! 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே நாடு இன, மத ரீதியாக பிளவடைய பிரதான காரணமாக காணப்படுவதாக தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். நமக்கு நாம் மட்டுமே என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நல்லிணக்கம் மனிதநேயத்தின் ஆரம்பம் என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியல் நோக்கத்திற்காகவும் பொருளாதார நோக்கத்திற்காகவும் இனவாதமும் மதவாதமும் …

  10. வவுனியா – குறிசுட்டகுளத்திலிருந்து நேற்று(14) அடையாளம் தெரியாத சடலமொன்று கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 20 – 25 இற்கு இடைப்பட்ட வயதுடைய பெண்ணொருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் சில தினங்களுக்கு முன்னரே உயிரிழந்திருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த பெண்ணின் சடலம் நீதவான் விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா – ஈச்சங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். https://thinakkural.lk/article/281313

  11. 19 NOV, 2023 | 09:32 AM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் 22 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று சனிக்கிழமை (18) மதியம் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் தமிழகம் - பாம்பன் பகுதியில் இருந்து இரண்டு படகுகளில் வந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேரையும் படகுகளுடன் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைதான அனைவரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (19) காலை யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பருத்தித்துறை நீதிவானிடம் முன்னிலைப்படுத்தப்…

  12. 19 NOV, 2023 | 09:31 AM யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை சந்தியில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் உள்ள புதர் ஒன்றிற்குள் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் நீல நிற சேட்டும், நீலம் மற்றும் சாம்பல் நிற சாறமும் அணிந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/169662

  13. இலங்கை கடற்பரப்பின் விசேட பொருளாதார வலயத்தை ஆராய்வதற்காக மற்றுமொரு ஆய்வுக் கப்பலை பயன்படுத்துவதற்கு இலங்கையின் அனுமதியை சீனா கோரியுள்ளது. இம்முறை சீனா Xiang Yang Hong 03 எனும் கப்பலை அனுப்பவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி முதல் பெப்ரவரி 20 ஆம் திகதி வரை இந்த ஆய்வு முன்னெடுக்கப்படவுள்ளது. Xiang Yang Hong 03 கப்பல் சீனாவின் இயற்கை வள அமைச்சகத்திற்கு சொந்தமானது. Xiang Yang Hong 03 கப்பல் 99.06 மீற்றர் நீளம் கொண்ட பல்நோக்குக் கப்பலாகும். இதேவேளை, இந்தியாவின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வருகை தந்த Shi Yan 6 கப்பல் நேற்று மீண்டும் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என தானியங்கி அடையாள கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும்,…

  14. அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் டிசம்பரில் இலங்கையின் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைகிறது அமெரிக்காவை தளமாகக் கொண்ட பெற்றோலிய விநியோக நிறுவனமான RM Parks இலங்கையில் அடுத்த மாதம் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ், தங்களது ஆரம்பக் கட்டணத்தை அரசாங்கத்திடம் வைப்பு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். “அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் ஆரம்பத்தில் 150 எரிபொருள் நிலையங்களை எடுத்து அவற்றை இயக்கும். புதிய எரிபொருள் நிலையங்களை தாங்களாகவே கட்டுவதற்கும் இலங்கையில் இயங்குவதற்கும் RM Parks நிறுவனத்திற்கு அங்கீகாரம் …

  15. 18 NOV, 2023 | 12:45 PM யாழ்ப்பாணத்தில் பேருந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் மூவர் யாழ்ப்பாணம் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான 8 கையடக்க தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணம் செய்பவர்களின் தொலைபேசிகள் திருட்டுப் போவது சம்பந்தமாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்பட்டு வந்த நிலையில், யாழ்ப்பாண பொலிஸ் குற்றதடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். விசாரணைகளின் அடிப்படையில், யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளை சேர்ந்த வண்ணார் பண்ணை, பிரப்பங்குளம்…

  16. 18 NOV, 2023 | 03:51 PM காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையில் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் காலநிலையைப் பொறுத்து ஆரம்பிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இந்த ஸ்ரீ கப்பல் சேவைகள் தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் இதுதொடர்பில் தெரிவிக்கையில், ஜனவரி முதல் கப்பல் சேவையை நடத்துவதற்கான பூர்வாங்க அனுமதிகள் இரண்டு அரசாங்கங்களிடம் இருந்தும் கிடைத்து விட்டன. இதற்காக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 'சிவகங்கை' என்ற கப்பல் ஈடுபடுத்தப்படவுள்ளது. இக்கப்பல் டிசம்பர் நடுப்பகுதியில் நாகபட்டினத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது. இக்கப்பலில் 150 பயணிகள் தலா …

  17. பத்து மாதங்களில் 75 ரயில்கள் தடம் புரண்டுள்ளது. இந்த வருடத்தின் கடந்த பத்து மாதங்களில் 75 ரயில்கள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு கொழும்பு புகையிரத வீதிகளில் 38 ரயில்கள் தடம் புரண்டுள்ளதுடன், புகையிரத பாதைகளில் 37 ரயில்கள் தடம்புரண்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டை விட இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டுகிறது என்று ரயில்வே துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். புகையிரதப் பாதையில் பயன்படுத்தப்படும் தண்டவாளங்கள் துருப்பிடித்து அழுகிப் போவதினால் தடம் புரளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார். இதுவரையில் புகையிரதப் பாதைகளுக்குப் பயன்படுத்துவ…

  18. Published By: DIGITAL DESK 3 18 NOV, 2023 | 03:29 PM இலங்கையின் முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது என யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை முதுநிலை விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். தற்போதைய வானிலை மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். வட கிழக்கில் இன்று தொடக்கம் எதிர்வரும் 21வரை மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. சீரற்ற காலநிலையினால் தொடர்ச்சியாக மழை கிடைக்கப்பெற்று வருகின்றது. இம்மழை இன்னும் சில தினங்களுக்கு தொடர்ச்சியாக இருக்கும் என வானிலை ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றது. இன்றையதினம் சனிக்கிழமை காலை 7 மணியளவி…

  19. யாழில் தொடர்ந்து அரங்கேறும் முச்சக்கர வண்டி சாரதிகளின் அட்டகாசம் யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் செயலி மூலம் ஓடும் சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் பலாலி வீதியில், திருநெல்வேலி பழம் வீதி அருகில் நேற்று (17) இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றபோதும் பொலிஸாரும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்ததாக பாதிக்கப்பட்ட சாரதி கவலை வெளியிட்டார். முச்சக்கரவண்டி சாரதிகள் அதிக கட்டணம் அறவிட்ட நிலையில் செயலி வழியான முச்சக்கரவண்டி சேவை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் செயலி வழியான முச்சக்கர…

  20. மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி! மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க கோரிய மனுவை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸாரினால், தமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தத் தடை விதிக்கக் கோரி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மனு மீதான விசாரணை நேற்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது ”நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது” எனத் தெரிவித்து குறித்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. https://athavannews.com/2023/1359412

  21. அடுத்த ஆண்டு 31 பில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 3 தேர்தல்கள். அடுத்த வருடத்துக்காக (2024) சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மூன்று தேர்தல்கள் தொடர்பாக 31 பில்லியன் ரூபா மதிப்பீட்டை தேர்தல்கள் ஆணைக்குழு சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இந்த மதிப்பீடு முன்வைக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்காக 10 பில்லியன் ரூபா மதிப்பீட்டை சமர்ப்பித்திருந்தது. ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைவதற்கு இரண்டு மாதங்களுக்கும் ஒரு மாதத…

  22. புத்த பெருமான் போதித்த காருண்யம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு , மாதவனை பகுதிகளில் மீறப்படுகின்றது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் வாய் பேச முடியாத மாடுகளுக்கு வாய்க்குள் வெங்காய வெடியை வைத்து வாயை சிதறடிக்கின்றீர்கள். இதனால் அந்த மாடுகள் உணவுகூட அருந்த முடியாமல் அணு அணுவாக செத்துடுப்போகின்றது என்றார். காலை இழந்த ஒரு இராணுவ வீரர் தான் இவ்வாறான கொடூரத்தை செய்கின்றார். மயிலத்தமடு , மாதவனையில் பெரும் பாவத்தினை இந்த நாடு செய்து கொண்டிருக்கின்றது என்று தெரிவித்த அவர், இலங்கையில் சமாதானத்தின் கதவுகள் இறுக மூடப்பட்டுள்ளன. நல்லிணக்கத்தின் கதவுகளுக்கு ''சீல்'' வைக்கப்பட்டுள்ளது.பௌத்தத்தை பின்பற்றுகின்ற , புத…

  23. இந்தியா – இலங்கை இடையிலான 9 ஆவது கூட்டு இராணுவ பயிற்சி ஆரம்பம்…. இந்தியா – இலங்கை இடையிலான 9 ஆவது கூட்டு இராணுவ பயிற்சி புனேயில் இடம்பெற்று வருகின்றது, ‘மித்ரா சக்தி -2023’ எனும் கூட்டு இராணுவ பயிற்சி எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக வுhந ர்iனெர செய்தி வெளியிட்டுள்ளது. 120 வீரர்களைக் கொண்ட இந்திய படைப்பிரிவில் மராத்தா தரைப்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளதுடன் இலங்கை தரப்பில் 53 தரைப்படை பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்திய விமானப்படையை சேர்ந்த 15 வீரர்களும், இலங்கை விமானப்படையை சேர்ந்த 5 வீரர்களும் இந்த பயிற்சியில் பங்கேற்பதாக வுhந ர்iனெர செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாத எதிர்ப்ப…

  24. கிரிக்கெட் நிறுவனம் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் இரண்டு வகையாகப் பேசுவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தமக்கு பாதகமான தீர்ப்புகள் வரும்போது அதை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், தனக்கு சாதகமாக தீர்ப்பு வரும்போது அதை முன்னிலைப்படுத்துவதாக அமைச்சர் தெரிவித்தார். நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சிக்க எவருக்கும் உரிமை இல்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றம் இன்று (17) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்த…

    • 1 reply
    • 203 views
  25. எரிமலையின் மேல் வாணலியை வைத்து சொசேஜஸ் பொரிக்கும் இனம் நாம் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எரிமலை வெடித்தால் யாரும் மிச்சமிருக்க மாட்டார்கள் என்றும் குணவர்தன கூறினார். பாராளுமன்றத்தில் இன்று (17) நடைபெற்றுக்கொண்டிருக்கும் வரவு-செலவுத் திட்டம் மீதான, நான்காம்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய கடன் தொகை முப்பத்தாறு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவித்த அமைச்சர், இருபது வருடங்களின் பின்னர் கடன் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார். யாராக இருந்தாலும் இந்தக் கடனைச் செலுத்துவதற்கு அரசாங்கம் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருப்பதாகவும், க…

    • 1 reply
    • 271 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.