Jump to content

சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கை வருகை !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: PRIYATHARSHAN   18 NOV, 2023 | 08:23 PM

image

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் உள்ளிட்ட  தூதுக்குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் உள்ளிட்ட தூதுக் குழுவினர் இன்று சனிக்கிழமை 18ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நாட்டில் தங்கியிருக்கும் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.

இதேவேளை கொழும்பு துறைமுக நகர் திட்டம், ஹம்பாந்தோட்டையில்  உத்தேசிக்கப்பட்டுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உட்பட பல்வேறு சீன முதலீட்டு திட்டங்கள் தொடர்பில் அரச தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதுடன், கண்டி தலதா மாளிகை உள்ளிட்ட பல இடங்களுக்கும் விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள முகமது முய்சுவின் பதவியேற்பு நிகழ்வு நேற்று 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில் பங்கேற்கும் வகையில் முதலில் மாலைதீவுக்கான விஜயத்தை சீன ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர் ஷென் ஹிகின் முடித்துக்கொண்டு இதனை தொடர்ந்தே இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நாட்டுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/169657

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் இந்தியக் கப்பல் ...மூட்டை முடிச்சுடன் வெளி யேறினதோ...

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு : சுற்றுலா, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து கூடுதல் அவதானம்

20 NOV, 2023 | 08:28 PM
image

 சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதிக்கும்  ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில்  இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலா, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் (Shen Yiqin) இன்று திங்கட்கிழமை (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் உட்பட இலங்கைக்கு சீனா வழங்கும் ஆதரவைப்  பாராட்டிய ஜனாதிபதி, அதற்காக சீன ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

அத்துடன், சுற்றுலா, விளையாட்டு, விவசாயம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதே இலங்கையின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் துறைமுக நகரம் என்பன இன்று முதலீட்டுக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

பொருளாதார ரீதியில் அதிக பங்களிப்பை வழங்கக் கூடிய பெல்ட் என்ட் ரோட் (Belt & Road) திட்டத்தின் இரண்டாவது கட்டத்திற்குப்  பிரவேசிப்பதற்கு அதன் பங்காளரான இலங்கை போன்ற நாடுகள் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார் . 

 பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்திற்குள் (RCEP) பிரவேசிக்க இலங்கை எடுத்துள்ள  நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்.

இந்துசமுத்திரம், கடற்பயணத்திற்கான  சுதந்திர வலயமாக இருக்க வேண்டும் எனவும் புவிசார் அதிகாரப்  போட்டியின்றி அமைதியான வலயமாக பேண இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மிக  விரைவில் நடைமுறைப்படுத்தவும் இரு தரப்பும் உடன்பாடு தெரிவித்தன. 

இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய  ஷென் யிங்க், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

இந்தச்  சந்திப்பில்  ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான  சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் தினுக் கொழம்பகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/169814

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப டெல்லீல இருந்து தாராவது மூட்டயக் கட்டிக்கொண்டு வர ரெடியாவினமே🤔

Edited by Nathamuni
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/11/2023 at 21:05, alvayan said:

இதுதான் இந்தியக் கப்பல் ...மூட்டை முடிச்சுடன் வெளி யேறினதோ...

 

19 minutes ago, Nathamuni said:

அப்ப டெல்லீல இருந்து தாராவது மூட்டயக் கட்டிக்கொண்டு வர ரெடியாவினமே🤔

இவை... போக, அவை வருவினம்.
அவை... போக, இவை வருவினம்.
இதுதான்.... இலங்கை அரசியல். இது எத்தனை நாளைக்கு தாக்குப் பிடிக்கும் என்று தெரியாது.
ஒரு நாள்...   ஒரு நாடு இலங்கையின் குரல் வளையை பிடித்து நசிப்பது நிச்சயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

 

இவை... போக, அவை வருவினம்.
அவை... போக, இவை வருவினம்.
இதுதான்.... இலங்கை அரசியல். இது எத்தனை நாளைக்கு தாக்குப் பிடிக்கும் என்று தெரியாது.
ஒரு நாள்...   ஒரு நாடு இலங்கையின் குரல் வளையை பிடித்து நசிப்பது நிச்சயம்.

இவயலிண்ட கூத்தை பார்த்துக் கொண்டு இன்னோரு பார்ட்டி, கம்மெண்டு இருக்குது, கண்டியளே?

அதுதான் கோத்தாவை கிளப்பி, ரணிலை இருத்தினது.

ஓரமா போய் விளாடுங்கோ எண்டு சொல்லிப் போட்டு, அது தனது அலுவலை பார்க்கும்.

அதன் கையில தான் இலங்கையின் ராணுவமும் அதன் பெரும் தலைகளும் இருக்குது.

நிலைமை மிஞ்சிப்போனா, ரணிலும் அவுட். இலங்கை முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் ராணுவம், மகுடிப்பாம்பு போல, அந்த பார்ட்டி சொல் கேட்டு ஆடும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

இவயலிண்ட கூத்தை பார்த்துக் கொண்டு இன்னோரு பார்ட்டி, கம்மெண்டு இருக்குது, கண்டியளே?

அதுதான் கோத்தாவை கிளப்பி, ரணிலை இருத்தினது.

ஓரமா போய் விளாடுங்கோ எண்டு சொல்லிப் போட்டு, அது தனது அலுவலை பார்க்கும்.

அதன் கையில தான் இலங்கையின் ராணுவமும் அதன் பெரும் தலைகளும் இருக்குது.

நிலைமை மிஞ்சிப்போனா, ரணிலும் அவுட். இலங்கை முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் ராணுவம், மகுடிப்பாம்பு போல, அந்த பார்ட்டி சொல் கேட்டு ஆடும்.  

பெரிய அண்ணன் அமெரிக்காவை தானே சொல்கிறீர்கள். 🙂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

பெரிய அண்ணன் அமெரிக்காவை தானே சொல்கிறீர்கள். 🙂

டேவிட் காமெரானை அனுப்பினதும் அதுதான். அவரை பிரித்தானிய வெளிவிவகார செயலர் ஆக்கினதும் அதேதேன்.

ஆக, இலங்கையில், மிக ஆழமாக காலை ஊன்றி விட்டது. விரைவில தெரியும். 👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

டேவிட் காமெரானை அனுப்பினதும் அதுதான். அவரை பிரித்தானிய வெளிவிவகார செயலர் ஆக்கினதும் அதேதேன்.

ஆக, இலங்கையில், மிக ஆழமாக காலை ஊன்றி விட்டது. விரைவில தெரியும். 👋

இதை தான் பல வருடங்களாக சொல்லுகிறார்கள்   ஆனால் ஒன்றும் நடந்த மாதிரி தெரியவில்லை  இலங்கை. பெரிய சமுத்திரத்துக்கு மத்தியில் கம்பீரமாக. இருக்கிறது    இந்த இலங்கைக்கு இந்தியா ஒரு கிழவியை போன கிழமை அனுப்பியது இந்த சீனா ஒரு குமாரியை அனுப்பி உள்ளன்.    இந்தியா 1987 இல்  விமான மூலம் சாப்பாடு போட்ட போது யார்?? என்ன??? சொன்னார்கள்??   ஆகவே இலங்கையில் அமெரிக்கா அல்லது சீனா எதுவும் செய்ய போவதில்லை    சீமான் தமிழ்நாட்டில் முதல்வர் ஆனாதும். இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலம் ஆகி விடும்  🤣🤣🤣🤣🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

அப்ப டெல்லீல இருந்து தாராவது மூட்டயக் கட்டிக்கொண்டு வர ரெடியாவினமே🤔

அதுதான்  சிங்களத்தின் சாணக்கியம். 

நாங்களோ அணில் ஏரவிட்ட நாய்களாய்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

பெரிய அண்ணன் அமெரிக்காவை தானே சொல்கிறீர்கள். 🙂

நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை பாருங்கோ. அமெரிக்காவும் களத்தில் இறங்கி விட்ட்து. அதுதான் இலங்கையில் அதானியின் முதலீட்டுக்கு 600 மில்லியன் டொலர்களை வழங்கி கொழும்பு துறைமுக திடத்தை ஆதரிக்கிறது.

சீனா ஹம்பாந்தோட்டை துறை முகத்தை ராணுவத்தேவைக்கு பயன்படுத்தினால் அமெரிக்கா இந்த துறைமுகத்தை ராணுவ தேவைக்கு பயன்படுத்தும். இந்தியா திருகோணமலை துறைமுகத்தை பயன்படுத்தும்.

இன்னும் அமெரிக்கா பல முதலீடுகள் சேய்போவதாக அறிய கிடைக்கிறது. இப்போது இலங்கையில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளின் முதலீடுகள் இலங்கைக்கு பிரச்சினைகளைத்தான் பிட்காலத்தில் ஏட்படுத்தப்போகின்றது.  இப்போது இலங்கை நிலைமை ஆப்பிழுத்த குரங்குதான். 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.