Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட பெட்டிகலோ கெம்பஸ் 4 வருடங்களின் பின்னர் மீண்டும், அதன் ஸ்தாபகரான கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.எல்.எம் ஹிஸ்புல்லாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலைமையில் இதற்கான நிகழ்வு நேற்று மட்டக்களப்பு புனானை பகுதியில் 400 ஏக்கர் நிலப்பரப்பில் பெட்டிகலோ கெம்பஸ் என்ற தனியார் பல்கலைக்கழகமொன்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவினால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் அதனை அரசாங்கம் கையகப்படுத்தியதுடன், பின்னர் அது இராணுவ பாதுகாப்பில் கொரோனா பரவலுக்கான சிகிச்சை முகாமாக பயன்படுத்தப்பட்டது. இந்தநிலையில், ஜனாத…

  2. “என்னை பதவி விலக சொல்வதற்கு சுமந்திரன் யார்?” என சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இரா.சம்பந்தன் விலக வேண்டும் என சக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்த கோரிக்கை தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக இரா.சம்பந்தன் தம்முடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக மாவை சேனாதிராஜா கூறியுள்ளார். அத்துடன் தம்மை நேரடியாக கொழும்பில் சந்திக்குமாறு சம்பந்தன் கோரியிருப்பதாகவும் மாவை சேனாதிராஜா க…

  3. அமெரிக்காவும், இந்தியாவும் தன்னை ஏமாற்றி விட்டது சம்பந்தன் வெளிப்படையாக கூறினார் என மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான நிக்சன் தெரிவித்துள்ளார். ஊடறுப்பு நிகழ்ச்சியல் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில், சம்பந்தனை பொறுத்தவரை இப்போது ஓய்வுபெற வேண்டிய அல்லது ஓய்வு பெறக்கூடிய தேவை இருக்கிறது என்பது உண்மை. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் ஓய்வுபெற வேண்டும் என அறிவிக்கக்கூடிய காலம் இதுவல்ல. அது முன்னரே செய்திருக்க வேண்டிய ஒன்று. ஆனால் இப்போது ஏன் அந்த தேவை வருகிறது என்றால் அடுத்த ஆண்டு தேர்தல். நாடாளுமன்றத் தேர்தல் சிலவேளைகளில் ஒத்திவைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தல் வரப்போகிறது. அதற்கு …

  4. 05 NOV, 2023 | 04:03 PM யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டுப்போன சம்பவமும் இன்று (05) பதிவாகியுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இணுவில், மஞ்சத்தடி பகுதியில் உள்ள வீடொன்றில் அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த நிலையிலேயே நகைகள் திருட்டுப் போயுள்ளன. இன்று அதிகாலை 3 மணியளவில் சமையல் வேலைகளுக்காக எழுந்த வீட்டார், சார்ஜ் போடுவதற்கு கையடக்கத் தொலைபேசியை தேடியபோது கைப்பேசி இருக்கவில்லை. அத்தோடு, வீட்டிலுள்ள அலுமாரியும் கதவு திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது. பின்னர், நகைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்த்தபோது அங்கிருந்த நகைகளும் திருட்டுப் போயுள்ளதை கண்டு வீட்டார் அத…

  5. 05 NOV, 2023 | 05:36 PM பண மோசடி தொடர்பில் சந்தேகத்தில் தேடப்படும் ஆண் மற்றும் பெண் ஆகியோரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். பத்தரமுல்லை வீதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான கட்டடம் மற்றும் தோட்டம் ஒன்றை புனரமைப்பதற்காக இந்தச் சந்தேக நபர்கள் குறித்த நிறுவனத்திடமிருந்து சுமார் ஒரு கோடி ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளனர். இந்த சந்தேக நபர்கள் பெற்றுக்கொண்ட தொகை 9,943,108.03 ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த பணத்துக்கு நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளாமல் சந்தேக நபர்கள் பணம் மோசடி செய்தமை தொடர்பில் மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் குறித்த நிறுவனம் முறைப்பாடு செய்துள்ளதுடன், அதன்படி பொல…

  6. பொதுஜன பெரமுனவின் 7வது ஆண்டு நிறைவு விழா அண்மையில் நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். https://thinakkural.lk/article/280257

  7. Published By: DIGITAL DESK 3 04 NOV, 2023 | 08:02 PM ஆர்.ராம் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றையதினம் வவுனியாவில் உள்ள அக்கட்சியின் தாயகம் அலுவலகத்தில் முற்பகல் 10மணிக்கு நடைபெறவுள்ளது. அக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கட்சியின் மாநாட்டுக்கான திகதி தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே, கட்சியின் அரசியல் உயர்பீடத்தின் தீர்மானத்திற்கு அமைவாக, இந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கட்சி மாநாட்டுக்கான திகதியை இறுதி செய்தல் விடயம் மட்டுமே கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும், கட்சியின் புதிய யாப்பு தொடர்பிலும்…

  8. Published By: DIGITAL DESK 3 04 NOV, 2023 | 07:57 PM ஆர்.ராம் வலிகாமம் வடக்கில், அரச படைகள் மற்றும் திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாத நிலைமைகள் நீடிக்கின்ற நிலையில் அவற்றை மீட்பதற்காக சட்ட நடவடிக்கைளை முன்னெடுப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனதிராஜா சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனுடன் கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனின் இல்லத்துக்குச் சென்ற மாவை.சேனாதிராஜா, பொதுமக்களுக்குச் சொந்தமான உறுதிக்காணிகளை அரசாங்கம் பல தடவைகள் விடுப்பதாக அறிவித்தபோதும் இன்னமும் ஒப்படைக்காத நிலைமைகள் நீடிக்கின்றன. ஆகவே, அரசாங்க…

  9. பல்கலைக்கழக மாணவர்கள் 06 பேர் கைது கனகராசா சரவணன் மட்டக்களப்பு சித்தாண்டியில் மேச்சல் தரை பண்ணையாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பல்கலைக்கழக மாணவர்களை பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர். யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றினைந்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று காலை 9 மணிக்கு சித்தாண்டி முருகன் ஆலையத்துக்கு முன்னால் ஒன்று கூடிய மாணவர்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலமாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளரின் இடம் வரை சென்று அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்…

  10. Published By: DIGITAL DESK 3 04 NOV, 2023 | 07:56 PM ஆர்.ராம் இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பொதுவெளியில் தன்னை இராஜினாமாச் செய்யுமாறு கூறிய கருத்தானது மனவருத்தமளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவிடத்தில் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும், அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான இரு சந்திப்புக்கள் நேற்றையதினமும் நடைபெற்றிருந்தது. இந்தச் சந்திப்பின்பேதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தனது மனவருத்தத்தினை தெரிவித்துள்ளார். …

  11. Published By: DIGITAL DESK 3 25 OCT, 2023 | 09:39 AM ஆர்.ராம்- இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதன் காரணமாக அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றபோது, 288 பாராளுமன்ற நாட்களில் வெறுமனே 39 நாட்களில் தான் பாராளுமன்றத்துக்கு இரா.சம்பந்தன் வருகை தந்திருக்கின்றார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்…

  12. 04 NOV, 2023 | 06:32 PM அதிபர் தரத்துக்கு ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 401 புதிய அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (04) யாழ்ப்பாணம் கோப்பாயில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் வழங்கி வைக்கப்பட்டன. வட மாகாணத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கே இவர்கள் அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிலையில், இன்று வழங்கப்பட்ட புதிய நியமனங்களுடன் வட மாகாண பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என வட மாகாண கல்வி அமைச்சு த…

  13. 03 NOV, 2023 | 08:01 PM காஸா பகுதியின் மோதல் நிலைமைகளை ஒரு கோணத்திலும், ஐக்கிய நாடுகள் சபைக்குள் இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தூய்மையான கரங்களுடன் வந்தால் அடுத்த செப்டெம்பர் மாத ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை பதிலளிக்கும். இல்லையெனில் நியாயமற்ற விடயத்திற்கு இலங்கை பதிலளிக்க வேண்டுமா?'' என, வெலிமடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி திறப்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/168460

  14. 04 NOV, 2023 | 07:53 PM முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவடு கிழக்கு பகுதியில் இன்று சனிக்கிழமை (04) இனந்தெரியாத இருவர் சிலரது வீடுகளுக்கு சென்று உங்களுக்கான அஸ்வெசும கொடுப்பன 80,000 ஆயிரம் ரூபா உங்களது கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அதை பெறுவதற்கு 30 ஆயிரம் ரூபாய் தற்பொழுது தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், நீங்கள் ஒப்படைத்த பணம் மீண்டும் உங்களது கணக்கில் வைப்பிலிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் சமுர்த்தி உத்தியோகத்தர்களிற்கு வேலைப்பழு அதிகம் காணப்படுவதால் இன்றைய கணக்கினை முடிக்க வேண்டும் எனவும் ஆகையால் மக்களிடம் காசை அறவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். சமுர்த்தி உத்தியோகத்தரின் கட்டளைக்கமையவே தான் இ…

  15. 31 OCT, 2023 | 10:40 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆயிரம் பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை திங்கட்கிழமையில் (30 ) இருந்து ஐந்து தினங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வு நேற்று 30 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை வடக்கு மாகாண ஆளுநரின் பங்கு பற்றுதலுடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. அசிஸ்ட் ஆர் ஆர் ஐக்கிய இராச்சியம் – இலங்கை (Assist Resettlement & Renaissance UK & SL) நிறுவனத்தின் ஏற்பாட்டில் அலாக்கா மற்றும் ஆனந்தா பவுண்டேஷனின் நிதி ஒதுக்கீட்டி கீழ் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. உலக பார்வை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் – இரத்தினபுரி மருத்துவமனைகளின் நல்லுறவினை மேம்படுத்தும…

  16. நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் ஆலோசனைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்தத் தவறும் அரச நிறுவன பிரதானிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் பணிகளை, அரசாங்க அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டியது அவசியமெனவும், நாட்டை பின்நோக்கி கொண்டுச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று (04) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மாவட்ட அரசியல் குழுவினர் மற்றும் அரச அதிகாரி…

  17. இறக்குமதி செய்யப்படும் சீனி வரி அதிகரிப்பினால் சந்தையில் சீனியின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். நேற்று (02) முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ சீனிக்கான வரியை 25 சதத்தில் இருந்து 50 ரூபாவாக உயர்த்த நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. வரித் திருத்தத்துடன் சந்தையில் இன்று (02) காலை நிலவரப்படி சீனியின் விலை 300 ரூபாவைத் தாண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. அரசாங்கத்திற்குச் சொந்தமான லங்கா சதொசவில் கூட இன்று (03) காலை சீனியின் விலை அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு கிலோ பொதி செய்யப்பட்ட சீனியின் விலை 350 ரூபாவாக காணப்பட்டதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். சில்லறை விற்பனையில் ஒரு கிலோ சீனி 320 ரூபாவுக்கு விற…

  18. மக்கள் சனத்தொகை கணக்கெடுப்பு ஆரம்பம். பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மற்றும் வீடமைப்புக் கணக்கெடுப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட முதல் கட்டிடமாக ஜனாதிபதி செயலகம் பட்டியலிடப்பட்டுள்ளது. தரவு சேகரிப்புக்கு அச்சிடப்பட்ட ஆவணங்களுடன் டெப்லெட்டுகளைப் பயன்படுத்துவதே இவ்வருட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் சிறப்பான அம்சமாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இறுதியாக 2012 ஆம் ஆண்டு மக்கள் சனத்தொகை கணக்கிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1356628

  19. Published By: DIGITAL DESK 3 04 NOV, 2023 | 01:46 PM யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பொலிகண்டி தெற்கில் அமைந்துள்ள கிணறு ஒன்று திடீரென நேற்று வெள்ளிக்கிழமை (03) தாழிறங்கியதால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது, பொலிகண்டி தெற்கு J/395 கிராமசேவையாளர் பிரிவில் வீரபத்திரர் ஆலயத்துக்கு அருகில் நேற்றைய தினம் காலை இச்சம்பவம் இடம்பெற்றதை தொடர்ந்து அருகிலுள்ள நிலங்கள், மதிலில் வெடிப்பு ஏற்பட்டது. மிக அருகில் ஆலயமும், வீடுகளும் காணப்படும் நிலையில் அப்பகுதி மக்களுக்கு அச்சநிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அப்பகுதி பொதுமக்களால் பருத்தித்துற…

  20. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இலங்கை பயணம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று இலங்கைக்கு செல்கிறார். இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நூலகம், கலாச்சார மையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்கிறார். மேலும் யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலையில் எஸ்.பி.ஐ. வங்கி கிளைகளை நிர்மலா சீதாராமன் திறந்து வைக்க உள்ளார். அவரது இந்த பயணத்தின்போது இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களில் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இதில் பவுத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு சார்பில் 82.40 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

  21. 03 NOV, 2023 | 11:02 AM தேசிய புலனாய்வுப் பிரிவுடன் இணைந்ததாக புதிய சமூக புலனாய்வுப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். பாடசாலை வகுப்புகளில் இடம்பெறும் பல்வேறு சீர்கேடுகளைத் தடுக்கப் புதிய புலனாய்வு பிரிவின் ஊடாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த திட்டத்தை இந்த ஆண்டு ஆரம்பித்துள்ளோம். இதன்படி, பாடசாலைகளில் இடம்பெறும் தவறான செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தல்களை குறைப்பதற்கும் அவற்றை ஒழிப்பதற்கும் இந்தப் புதிய புலனாய்வுப் ப…

  22. விடுதலைப் புலிகளின் தலைவர் படத்தை பத்திரிகையில் பிரசுரித்தமைக்காக விசாரணை adminNovember 1, 2023 யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே. பிரபாகரனின் புகைப்படைத்தை வெளியிட்டமை தொடர்பில் பத்திரிகையின் ஆசிரியரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து, இன்றைய தினம் புதன்கிழமை வாக்குமூலம் பெற்றுள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி புலிகள் அமைப்பின் தலைவரின் புகைப்படத்துடன் , உதயன் பத்திரிகையில் செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. அது தொடர்பில் விசாரணைக்காக பத்திரிகையின் செய்தி ஆசிரியர் கு.டிலீப் அமுதனை சுமார் மூன்றாண்டுகளின் பின்னர் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் …

  23. கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே கணிசமான அளவு உடல் எடை அதிகரிப்பது குறித்து சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்தவகையில், கொழும்பு மாவட்டத்தில் சிறுவர்களிடையே உடல் எடை அதிகரிப்பு 8 சதவீதமாக இருப்பதாக சுகாதார அமைச்சின் அண்மைய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. சிறுவர்களிடையே உடல் எடை அதிகரிப்பு ஒரு பிரச்சினையாக இருப்பதாக சுகாதார நிபுணர்கள் தெவிக்கின்றனர். உடல் எடை அதிகரிப்பு என்பது உடலில் ஆரோக்கியமற்ற எடையைக் கொண்ட ஒரு சிக்கலான கோளாறு ஆகும். இன்றைய காலகட்டத்தில் வளர்ந்த நாடுகளில் உடல் எடை அதிகரிப்பு ஒரு பெரிய பிரச்சினையாகிவிட்டது. இது தொடர்பில் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளரான விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா,…

  24. ஹமாசினால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட இலங்கையர் உயிரிழந்துள்ளார் இஸ்ரேலிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையை சுஜித் பண்டார யட்டவர உயிரிழந்துள்ளதை இஸ்ரேல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்களின் இன்டர்போல் பிரிவினரே இதனை உறுதிசெய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சுஜித்பண்டார யட்டவரவின் பிள்ளைகளின் மரபணுவை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் இந்த முடிவிற்கு வந்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தாக்குதலை மேற்கொண்டவேளை இலங்கையர் ஒருவர் காணாமல்போயிருந்தார் அதனை தொடர்ந்து அடையாளம் காணப்படாத உடல் ஒன்றை சுஜித் பண்டாரவின் பிள்ளைகளின் மரபணுவுடன் ஒப்பிட்டு சோதனை செய்தவேளை அது இலங்கையரினது உடல் என்பது உறுதியானது. வென்னப்புவை சேர்ந்த யட்டவர 2015 இ…

  25. எமது பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள வளங்களை எமது மக்களே முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எமது மக்களினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளை பூகோள அரசியலுடன் சம்பந்தப்படுத்துவது அடிப்படையற்றது எனவும் கூறியுள்ளார். யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த உள்ளூர் தொழில் முயற்சியாளர் ஒருவருக்கு சொந்தமான வீ.ஆர். இன்ரநெஷனல் தனியார் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட்ட கடலட்டை குஞ்சு விற்பனையை இன்று (03) ஆரம்பித்துவைத்து, உரையாற்றும்போதே அமைச்சர் டக்ளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறுகையில், எமது பிரதேச வளங்களை பயன்படுத்தி எம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.