ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
02 NOV, 2023 | 07:11 PM மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு “நாம்-200” நிகழ்ச்சி கொழும்பில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் தற்போது இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டுள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. https://www.virakesari.lk/article/168355
-
- 28 replies
- 2.3k views
- 1 follower
-
-
வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைவதை தடுக்கவே சிங்கள பேரினவாதம் முயல்கிறது: வேலன் சுவாமிகள் குற்றச்சாட்டு வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைவதை விரும்பாத சிங்கள பேரினவாதம், தமிழர்கள் இணைந்து மேற்கொள்ளப்படும் போராட்டங்களை அடக்குமுறை மூலம் அடக்க நினைப்பதாக பொத்துவில் பொலிகண்டி பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் நிலங்கள் சிங்கள பேரினவாதத்தால் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. மாணவர்கள் மீதான தாக்க…
-
- 0 replies
- 159 views
-
-
அப்துல்சலாம் யாசீம் திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் தமிழர்களுடைய பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் திங்கட்கிழமை (06) காலை புத்தர்சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் தமிழ் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பொரலுகந்த ரஜமஹா விகாரைப்பகுதியில் பௌத்த பிக்குகள் மற்றும் சிங்கள மக்களினால் இரண்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் ஆரம்பத்தில் புத்த விகாரை கட்டுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் அதற்கு அப்பகுதி மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு ஆளுநர் செந்தில்…
-
- 7 replies
- 709 views
- 1 follower
-
-
ஹோட்டலில் உட்கார்ந்து கொண்டு தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது : வரதராஜப் பெருமாள் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்தியாவுடனான தங்கள் ஈடுபாட்டை வலுப்படுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர், இந்த விடயத்தில் தமிழ் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்களிடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 1983-87 காலப்பகுதியில் தமிழ் கட்சிகளும் அதன் தலைவர்களும் புதுடில்லி மற்றும் தமிழ்நாட்டிலுள்ள இந்தியத் தலைவர்களுடன் அடிக்கடி தொடர்பு இருந்ததை …
-
- 0 replies
- 465 views
-
-
ஜனாதிபதி ரணில் மீதான நம்பிக்கை வீழ்ச்சி: கருத்துக் கணிப்பில் அதிர்ச்சித் தகவல்! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது இலங்கையில் 10 வீதத்திற்கும் குறைவானவர்களே நம்பிக்கை வைத்துள்ளதாக வெரிட்டே ரிசர்ச் அமைப்பு தெரிவித்துள்ளது. தேசத்தின் மனநிலை எனும் தொனிப்பொருளில் குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த ஆய்வு அறிக்கையின் படி” ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் அங்கீகாரம் ஜூன் மாதத்தில் 21வீதமாக இருந்த நிலையில் அது நவம்பர் மாதத்தில் 9 வீதமாக குறைவடைந்துள்ளமை தெரியவந்துள்ளது. அதே போன்று கடந்த நான்கு மாதங்களில் அரசின் மீது மக்கள் கொண்டுள்ள திருப்தி என்ற கா…
-
- 0 replies
- 130 views
-
-
Published By: DIGITAL DESK 3 06 NOV, 2023 | 09:39 AM பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஒரு ஊழல் பேர் வழியாக காட்ட முனைந்தால் அது பிழை.சம்பந்தன் அவர்கள் தனது முதுமை காரணமாக பதவி விலக விரும்பினால் அவர் விலக முடியும். அது அவருடைய முடிவு என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மன்னாரில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (5) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் இலங்கையில் இடம் பெறும் ஊழல் …
-
- 1 reply
- 322 views
- 1 follower
-
-
06 NOV, 2023 | 05:22 PM புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் யாழ்.நகர மண்டபத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் அடுத்த வருடம் நிறைவடையும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வாகனத் தரிப்பிடம், நவீன அலுவலகங்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இது அமைக்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக 600 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. இது முழுக்க முழுக்க திறைசேரியில் இருந்து நிதியளிக்கப்பட்ட திட்டமாகும். மொத்த மதிப்பிடப்பட்ட தொகை 2350 மில்லியன் ரூபா ஆகும். யாழ்ப்பாண நகர மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் 2022 நவம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது.…
-
- 0 replies
- 138 views
- 1 follower
-
-
05 NOV, 2023 | 09:14 AM தையிட்டி சட்டவிரோத விகாரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) நாளை திங்கட்கிழமை (06) நடைபெறவுள்ள விசேட நிகழ்வுகளை முன்னிட்டு, மீண்டும் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு சட்டத்தரணி சுகாஷ் அழைப்பு விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/168527
-
- 4 replies
- 439 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 05 NOV, 2023 | 09:51 AM ஆர்.ராம் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் உட்பட இலங்கை அரசாங்கம் உள்ளக ரீதியில் முன்னெடுக்கின்ற முன்னேற்றகரமான செயற்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு ஒத்துழைப்புக்களை வழங்குவதாக தெரிவித்துள்ளதோடு, இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி வீரகேசரியிடம் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினருடனான சந்திப்பு குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார மீட்…
-
- 3 replies
- 373 views
- 1 follower
-
-
அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட பெட்டிகலோ கெம்பஸ் 4 வருடங்களின் பின்னர் மீண்டும், அதன் ஸ்தாபகரான கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.எல்.எம் ஹிஸ்புல்லாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலைமையில் இதற்கான நிகழ்வு நேற்று மட்டக்களப்பு புனானை பகுதியில் 400 ஏக்கர் நிலப்பரப்பில் பெட்டிகலோ கெம்பஸ் என்ற தனியார் பல்கலைக்கழகமொன்று கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாவினால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் அதனை அரசாங்கம் கையகப்படுத்தியதுடன், பின்னர் அது இராணுவ பாதுகாப்பில் கொரோனா பரவலுக்கான சிகிச்சை முகாமாக பயன்படுத்தப்பட்டது. இந்தநிலையில், ஜனாத…
-
- 2 replies
- 269 views
- 1 follower
-
-
“என்னை பதவி விலக சொல்வதற்கு சுமந்திரன் யார்?” என சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இரா.சம்பந்தன் விலக வேண்டும் என சக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்த கோரிக்கை தொடர்பாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக இரா.சம்பந்தன் தம்முடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக மாவை சேனாதிராஜா கூறியுள்ளார். அத்துடன் தம்மை நேரடியாக கொழும்பில் சந்திக்குமாறு சம்பந்தன் கோரியிருப்பதாகவும் மாவை சேனாதிராஜா க…
-
- 30 replies
- 2.6k views
- 1 follower
-
-
அமெரிக்காவும், இந்தியாவும் தன்னை ஏமாற்றி விட்டது சம்பந்தன் வெளிப்படையாக கூறினார் என மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமான நிக்சன் தெரிவித்துள்ளார். ஊடறுப்பு நிகழ்ச்சியல் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் கூறுகையில், சம்பந்தனை பொறுத்தவரை இப்போது ஓய்வுபெற வேண்டிய அல்லது ஓய்வு பெறக்கூடிய தேவை இருக்கிறது என்பது உண்மை. அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர் ஓய்வுபெற வேண்டும் என அறிவிக்கக்கூடிய காலம் இதுவல்ல. அது முன்னரே செய்திருக்க வேண்டிய ஒன்று. ஆனால் இப்போது ஏன் அந்த தேவை வருகிறது என்றால் அடுத்த ஆண்டு தேர்தல். நாடாளுமன்றத் தேர்தல் சிலவேளைகளில் ஒத்திவைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தல் வரப்போகிறது. அதற்கு …
-
- 36 replies
- 2.5k views
- 2 followers
-
-
05 NOV, 2023 | 04:03 PM யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டுப்போன சம்பவமும் இன்று (05) பதிவாகியுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இணுவில், மஞ்சத்தடி பகுதியில் உள்ள வீடொன்றில் அந்தியேட்டி கிரியை நடைபெறவிருந்த நிலையிலேயே நகைகள் திருட்டுப் போயுள்ளன. இன்று அதிகாலை 3 மணியளவில் சமையல் வேலைகளுக்காக எழுந்த வீட்டார், சார்ஜ் போடுவதற்கு கையடக்கத் தொலைபேசியை தேடியபோது கைப்பேசி இருக்கவில்லை. அத்தோடு, வீட்டிலுள்ள அலுமாரியும் கதவு திறந்த நிலையில் காணப்பட்டுள்ளது. பின்னர், நகைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்த்தபோது அங்கிருந்த நகைகளும் திருட்டுப் போயுள்ளதை கண்டு வீட்டார் அத…
-
- 0 replies
- 349 views
- 1 follower
-
-
05 NOV, 2023 | 05:36 PM பண மோசடி தொடர்பில் சந்தேகத்தில் தேடப்படும் ஆண் மற்றும் பெண் ஆகியோரைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். பத்தரமுல்லை வீதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான கட்டடம் மற்றும் தோட்டம் ஒன்றை புனரமைப்பதற்காக இந்தச் சந்தேக நபர்கள் குறித்த நிறுவனத்திடமிருந்து சுமார் ஒரு கோடி ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளனர். இந்த சந்தேக நபர்கள் பெற்றுக்கொண்ட தொகை 9,943,108.03 ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த பணத்துக்கு நிர்மாணப்பணிகளை மேற்கொள்ளாமல் சந்தேக நபர்கள் பணம் மோசடி செய்தமை தொடர்பில் மிரிஹான விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் குறித்த நிறுவனம் முறைப்பாடு செய்துள்ளதுடன், அதன்படி பொல…
-
- 0 replies
- 325 views
- 1 follower
-
-
பொதுஜன பெரமுனவின் 7வது ஆண்டு நிறைவு விழா அண்மையில் நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். https://thinakkural.lk/article/280257
-
- 0 replies
- 595 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 04 NOV, 2023 | 08:02 PM ஆர்.ராம் இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்றையதினம் வவுனியாவில் உள்ள அக்கட்சியின் தாயகம் அலுவலகத்தில் முற்பகல் 10மணிக்கு நடைபெறவுள்ளது. அக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கட்சியின் மாநாட்டுக்கான திகதி தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே, கட்சியின் அரசியல் உயர்பீடத்தின் தீர்மானத்திற்கு அமைவாக, இந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கட்சி மாநாட்டுக்கான திகதியை இறுதி செய்தல் விடயம் மட்டுமே கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும், கட்சியின் புதிய யாப்பு தொடர்பிலும்…
-
- 5 replies
- 522 views
- 2 followers
-
-
Published By: DIGITAL DESK 3 04 NOV, 2023 | 07:57 PM ஆர்.ராம் வலிகாமம் வடக்கில், அரச படைகள் மற்றும் திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாத நிலைமைகள் நீடிக்கின்ற நிலையில் அவற்றை மீட்பதற்காக சட்ட நடவடிக்கைளை முன்னெடுப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனதிராஜா சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனுடன் கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரனின் இல்லத்துக்குச் சென்ற மாவை.சேனாதிராஜா, பொதுமக்களுக்குச் சொந்தமான உறுதிக்காணிகளை அரசாங்கம் பல தடவைகள் விடுப்பதாக அறிவித்தபோதும் இன்னமும் ஒப்படைக்காத நிலைமைகள் நீடிக்கின்றன. ஆகவே, அரசாங்க…
-
- 1 reply
- 442 views
- 1 follower
-
-
பல்கலைக்கழக மாணவர்கள் 06 பேர் கைது கனகராசா சரவணன் மட்டக்களப்பு சித்தாண்டியில் மேச்சல் தரை பண்ணையாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பல்கலைக்கழக மாணவர்களை பொது போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் இன்று ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர். யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றினைந்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று காலை 9 மணிக்கு சித்தாண்டி முருகன் ஆலையத்துக்கு முன்னால் ஒன்று கூடிய மாணவர்கள் ஆர்ப்பாட்ட ஊர்வலமாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளரின் இடம் வரை சென்று அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்…
-
- 1 reply
- 158 views
-
-
Published By: DIGITAL DESK 3 04 NOV, 2023 | 07:56 PM ஆர்.ராம் இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பொதுவெளியில் தன்னை இராஜினாமாச் செய்யுமாறு கூறிய கருத்தானது மனவருத்தமளிப்பதாக அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவிடத்தில் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும், அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான இரு சந்திப்புக்கள் நேற்றையதினமும் நடைபெற்றிருந்தது. இந்தச் சந்திப்பின்பேதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தனது மனவருத்தத்தினை தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 448 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 25 OCT, 2023 | 09:39 AM ஆர்.ராம்- இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதன் காரணமாக அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றபோது, 288 பாராளுமன்ற நாட்களில் வெறுமனே 39 நாட்களில் தான் பாராளுமன்றத்துக்கு இரா.சம்பந்தன் வருகை தந்திருக்கின்றார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்…
-
- 50 replies
- 3.9k views
- 2 followers
-
-
04 NOV, 2023 | 06:32 PM அதிபர் தரத்துக்கு ஆட்சேர்ப்புக்கான போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 401 புதிய அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று (04) யாழ்ப்பாணம் கோப்பாயில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் வழங்கி வைக்கப்பட்டன. வட மாகாணத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களுக்கே இவர்கள் அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிலையில், இன்று வழங்கப்பட்ட புதிய நியமனங்களுடன் வட மாகாண பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் நிரப்பப்படும் என வட மாகாண கல்வி அமைச்சு த…
-
- 2 replies
- 459 views
- 1 follower
-
-
03 NOV, 2023 | 08:01 PM காஸா பகுதியின் மோதல் நிலைமைகளை ஒரு கோணத்திலும், ஐக்கிய நாடுகள் சபைக்குள் இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தூய்மையான கரங்களுடன் வந்தால் அடுத்த செப்டெம்பர் மாத ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை பதிலளிக்கும். இல்லையெனில் நியாயமற்ற விடயத்திற்கு இலங்கை பதிலளிக்க வேண்டுமா?'' என, வெலிமடை நீதிமன்ற கட்டிடத் தொகுதி திறப்பு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். https://www.virakesari.lk/article/168460
-
- 17 replies
- 822 views
- 2 followers
-
-
04 NOV, 2023 | 07:53 PM முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவடு கிழக்கு பகுதியில் இன்று சனிக்கிழமை (04) இனந்தெரியாத இருவர் சிலரது வீடுகளுக்கு சென்று உங்களுக்கான அஸ்வெசும கொடுப்பன 80,000 ஆயிரம் ரூபா உங்களது கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அதை பெறுவதற்கு 30 ஆயிரம் ரூபாய் தற்பொழுது தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், நீங்கள் ஒப்படைத்த பணம் மீண்டும் உங்களது கணக்கில் வைப்பிலிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் சமுர்த்தி உத்தியோகத்தர்களிற்கு வேலைப்பழு அதிகம் காணப்படுவதால் இன்றைய கணக்கினை முடிக்க வேண்டும் எனவும் ஆகையால் மக்களிடம் காசை அறவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். சமுர்த்தி உத்தியோகத்தரின் கட்டளைக்கமையவே தான் இ…
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
31 OCT, 2023 | 10:40 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆயிரம் பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை திங்கட்கிழமையில் (30 ) இருந்து ஐந்து தினங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன் ஆரம்ப நிகழ்வு நேற்று 30 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை வடக்கு மாகாண ஆளுநரின் பங்கு பற்றுதலுடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. அசிஸ்ட் ஆர் ஆர் ஐக்கிய இராச்சியம் – இலங்கை (Assist Resettlement & Renaissance UK & SL) நிறுவனத்தின் ஏற்பாட்டில் அலாக்கா மற்றும் ஆனந்தா பவுண்டேஷனின் நிதி ஒதுக்கீட்டி கீழ் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. உலக பார்வை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் – இரத்தினபுரி மருத்துவமனைகளின் நல்லுறவினை மேம்படுத்தும…
-
- 1 reply
- 521 views
- 1 follower
-
-
நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் ஆலோசனைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்தத் தவறும் அரச நிறுவன பிரதானிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் பணிகளை, அரசாங்க அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டியது அவசியமெனவும், நாட்டை பின்நோக்கி கொண்டுச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று (04) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். மாவட்ட அரசியல் குழுவினர் மற்றும் அரச அதிகாரி…
-
- 0 replies
- 285 views
- 1 follower
-