Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மாமனிதர் யோசெப்பரராஐசிங்கம் அவர்களது 5வது ஆண்டு நினைவு நிகழ்வு மாமனிதர் யோசெப்பரராஐசிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட 5வது ஆண்டு நினைவு நிகழ்வு கஜேந்திரகுமார்பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை(1-1-2011) மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது. இல 43, 3ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமைதாங்கினார். இந்நிகழ்வில் ஈகைச் சுடரினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வைத்தியர் திருலோகமூர்த்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பிர…

  2. சிங்கள கலாச்சார அமைச்சருக்கு சிலர் அனுப்பிய புகார்கள் / வேண்டுதல்கள் செவிமடுக்கப்படும் சந்தர்ப்பத்தில், புதிய ஆண்டில் "மினி ஸ்கேட்" தடை செய்யப்படலாம். இதற்கேற்ப எப்படியான ஆடைகள் கலாச்சாரத்தை பாதிக்காத வகையில் அணியவேண்டும் என விதிமுறைகள் தயாரிக்கபட்ட வண்ணம் உள்ளது. நாட்டுக்கு வரும் உல்லாசபிரயாணிகளாலும் நிலைமை மோசடைவதாக அமைச்சர் தெரிவித்தார். Mini skirt to be banned Government a mini Taliban? By Ranga Jayasuriya A new era of moral purity is in the offing in the New Year; if the new government directive has its way, miniskirts would be banned from public places. Cultural and Aesthetic Affairs Minister T.B.Ekanayake has instructed the Arts Council attac…

    • 0 replies
    • 737 views
  3. மஹிந்தரைத் தமிழர்கள் சிலை வைத்துக் கும்பிட வேண்டுமாம் ஞாயிற்றுக்கிழமை, 02 ஜனவரி 2011 21:59 E-mail அச்சிடுக PDF தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்து அவர்களை இன்றைய இழி நிலைக்கு ஆளாக்கியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலிகளுமே. பல்லாயிரக் கணக்கான விதவைகளை உருவாக்கியுள்ள இந்த இரு கூட்டத்தாரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பியசோம தெரிவித்தார். ஜனாதிபதியின் உருவப் படத்தினைக் கொண்ட 2011 ஆம் ஆண்டுக்கான கலண்டர்களை அச்சிட்டுள்ளமை தொடர்பில் அவரிடம் தமிழ் சி.என்.என் கருத்துக் கேட்போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தமிழ் மக்கள் தெய்வத்தின் தெய…

  4. 2011ஆம் ஆண்டின் நடவடிக்கைகளுக்குத் தயாராகி இருக்கின்ற உங்களோடு சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென விரும்பி இம்மடலை எழுதுகின்றோம். யாழ்ப்பாணத்தில் பலரதும் பகைமைக்கு ஆளான துறையாகப் பத்திரிகைகள் இருக்கின்றன என்பதை இவ்விடத்தில் முதலில் கூறியாக வேண்டும். தமக்குச் சாதகமாகச் செய்தி வெளிவரும் போது பத்திரிகைகள் சரியாக இயங்குகின்றன எனக் கூறுவோர், உண்மையைக் கூற முற்படும் போது பல கோணங்களில் நின்று விமர்சிக்கத் தொடங்கி விடுவர். இந்நிலைமை அரச நிர்வாகத்திலும், அரசியல் புலத்திலும் தாராளமாக உண்டு. இந்தக் குறை அளப்பிற்குப் பத்திரிகையின் பொறுப்பை அவர்கள் அறியாமல் இருப்பதும் பத்திரிகைகளை வாசிக்காமல் விடுவதுமே காரணம் எனலாம். பொறுப்பான பதவிகளில் உள்ளவர்கள் (இது அரச நிர்வா…

    • 0 replies
    • 668 views
  5. வடமாராட்சி கிழக்கில் சிங்கள ராணுவ புலனாய்வுப் பிரிவால் படுகொலை செய்யப்பட்டவர் ஒரு மணல் வியாபாரியாம் - தமிழோசை சொல்கிறது தனது பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் மணற்கொள்ளையை படங்களினூடாக இணையத்தில் பதிவுசெய்த கேதீஸ்வரன் எனும் சமூகப் பற்று மிக்க ஒருவரை ராணுவ புலநாய்வுப் பிரிவும், ஈ.பீ.டீ.பீ சமூக விரோதிகளும் சேர்ந்து படுகொலை செய்தது நினைவிருக்கலாம். அப்படுகொலையை நியாயப்படுத்து விதத்தில் இந்திய ரோவின் பிள்ளையான தமிழோசை, அந்த இளைஞரை ஒரு மணல் வியாபாரி என்று செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆக மணல் வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனை ஒன்றில் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஊகம் வெளியிட்டிருக்கிறது. யாழ் குடாவில் வன்முறைகள் யாழ் நகர் இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில் …

  6. சிங்கள அரசினால் இயக்கப்படும் ஒட்டுக்கும்பல் ஈபிடிபியினால் படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரனின் நினைவுநாள் இன்று! ஈபிடிபி ஆயுததாரியினால் கொழும்பு கொட்டாஞ்சேனை சிவனாலயத்தில் புதுவருட தினத்தன்று ஆலய வழிபாட்டுக்காக வந்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன், சிங்கள அரசினால இயக்கப்படும் ஈபிடிபி ஒட்டுக்கும்பலின் ஆயுததாரியினால் படுகொலை செய்யப்பட்டதும், அவ்வாயுததாரி இன்று வரை சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல், அதன் பின்னும் சிங்களத்தின் ஏவலில் பல தமிழ் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், புத்திஜீவிகள் இவ்வாயுததார 9ஒட்டுக்கும்பலினால் படுகொலை செய்யப்படுக்கொண்டிருப்பதும் தொடர்கதையாகவே உள்ளது!! ...... சிங்களத்தின் ஏவலில் கொலையுண்ட மகேஸ்வரனின் .... மனைவி ... இன்ற…

  7. மஹிந்தரின் மாகாணத்தில் சுற்றியடித்த சூறாவளி ஞாயிற்றுக்கிழமை, 02 ஜனவரி 2011 18:07 தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தில புத்தாண்டு தினமான நேற்று வீசிய சூறாவளி காரணமாக 63 வீடுகளுக்குச் சேதமேற்பட்டுள்ளன. என மாத்தறை மாவட்டச் செயலாளர் அதுகோரல தெரிவித்துள்ளார். இந்த மாவட்டத்தின் ஆறு கிராம சேவகர் பிரிவுகளிலேயே இந்தச் சூறாவளி சுற்றி அடித்ததாகவும் தொவித்த அவர், சேதமடைந்த வீடுகளைத் திருத்திக் கொடுப்பதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டள்ளன என்றும் கூறினார். tamilcnn.com

  8. 2010 இல் ஸ்ரீலங்காவின் பணவீக்கம் 5.9% என மத்தியவங்கி அறிவிப்பு! Posted by admin On January 2nd, 2011 at 11:21 am இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி 2010 ஆம் ஆண்டில் சராசரி பணவீக்கம் 5.9 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதன்படி 1990 ஆம் ஆண்டின் பின் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது குறைந்தளவிலான வருடாந்த பணவீக்க சராசரி இதுவென மத்தியவங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் பொருட்களின் விலை அதிகரித்த போதிலும், முன்றேபடான இறக்குமதிகளுடன் இலங்கை தயாரா இருந்தமையினால் இலங்கையில் நுகர்வோர் விலையினை கட்டுப்பாடக வைத்திருந்தமையே இவ்வாறானநிலைக்கு காரணம் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.மேலும் விவசாய உற்பத்தியின் அதிகரிப்பும் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. sarith…

  9. வன்னி மக்களைச் சொல்லி சிங்களக் குடியேற்றங்களுக்கு இந்தியா உதவி! முதற்கட்டமாக 200 உழவியந்திரங்கள் அன்பளிப்பு! January 2nd, 2011 at 6:10 am வன்னிமக்களுக்கு எனத் தெரிவித்து வடக்கில் சிங்களக்குடியேற்றங்களுக்கு உதவிபுரியும் நடவடிக்கையில் இந்தியா செயற்பட்டுவருவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென இந்திய அரசினால் அனுப்பப்பட்ட உழவியந்திரங்களில் 200 கஜூ பண்ணை, கோகொணெற் பண்ணை ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டதன் அடிப்படையிலேயே இந்தச் சந்தேகம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கவென ஐநூறு மில்லியன் ரூபாய்கள் பெறுமியான 360 உழவியந்திரங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த …

  10. ஓமந்தை வரை செல்லும் யாழ்தேவி புகையிரத சேவை _ வீரகேசரி இணையம் 1/2/2011 7:53:26 PM Share கொழும்பு தாண்டிக்குளம் இடையில் தற்போது சேவையில் உள்ள யாழ்தேவி புகையிரத சேவை ஓமந்தை வரை பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சேவை இம் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை இயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தாண்டிக்குளம் முதல் ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதை நிர்மாணப்பணிகள் முடியும் நிலையில் உள்ளது. எனவே ஓமந்தை வரை யாழ்தேவி பயணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. _

  11. புலிகளின் ஆயுதக் கப்பலை அழிக்க அமெரிக்காவே உதவி வழங்கியது Sunday, January 2, 2011, 4:21 விடுதலைப் புலிகளுடனான போரின்போது விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழித்தொழிப்பதற்கு அமெரிக்காவே உதவியதாக ஆங்கில நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அரச ஆதரவுடன் இயங்கும் பிரஸ்தாப ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, விடுதலைப் புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் இலங்கைக்கு மிகுந்த உறுதுணையாக இருந்தது. விடுதலைப் புலிகளோடு நடைபெற்ற போரில் இலங்கை அரசுக்கு அமெரிக்க இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் பல வழிகளில் உதவின. விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை ஏற்றிவந்த பல கப்பல்கள் அமெரிக்காவின் புலனாய்வுத் பிரிவினால் இனங்காண…

  12. இன்று கிளாலிப் படுகொலை நினைவுநாள். 1993 ஆம் ஆண்டு இதேநாளில் (ஜனவரி இரண்டாம் திகதி) கிளாலிக் கடற்பரப்பில் போக்குவரத்தில் ஈடுபட்ட மக்கள்மீது சிறிலங்காக் கடற்படையினர் மேற்கொண்ட கொலைவெறித் தாக்குதலில் ஐம்பது வரையான மக்கள் கொல்லப்பட்டனர்.இதுபோல் இதேகடற்பரப்பில் போக்குவரத்துச் செய்த மக்கள்மேல் நடத்தப்பட்ட படுகொலைகளுள் பெரிய படுகொலை இதுவாகும். முதலில் கிளாலிப் பாதை பிறந்த கதையைப் பார்ப்போம். யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளுடன் தரைவழியாகத் தொடர்பு கொள்ளவென்று இருக்கும் ஒரேபாதை ஆனையிறவுவழியாகச் செல்லும் நெடுஞ்சாலைதான். இது கண்டிவீதியென்றும் ஏ-9 என்றும் வன்னியில் யாழ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது. அதைவிட்டால் குடாநாட்டின் மேற்குப்பகுதி…

  13. உண்மைகள் சுடும் - யதார்த்தமும் கனவுலகும் [ சனிக்கிழமை, 01 சனவரி 2011, 00:04 GMT ] [ புதினப் பணிமனை ] 'புதினப்பலகை'க்காக நந்தன் அரியரத்தினம். "போர் அழிவுகளைக் கொண்டுவரும் - போராட்டம் அழிவிலிருந்து மீட்சியைக் கொண்டுவரும்" இவ்வாறு தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர்களில் ஒருவர் மேடையில் பேசும் போது, அதனை பார்வையாளர் வரிசையில் அமர்ந்தவாறு மயிர்கூச்செறிய கேட்ட அனுபத்தை இப்போது நினைத்துப் பார்க்கும் போது எங்குமே வெறுமை மட்டும்தான்.. சமீபத்தில் கிளிநொச்சிப் பக்கம் சென்றபோது நான் அவதானித்த சில விடயங்களால் மேற்படி வாசகத்தையே மீண்டும் ஒரு முறை அசை போட்டுக்கொள்ள நேர்ந்தது. போராட்டம் மீட்சியைக் கொண்டுவரும் உண்மைதான் ஆனால் அது வெற…

    • 10 replies
    • 1.7k views
  14. நேற்று கட்டுனாயக்கா விமான நிலையத்தில் வெளினாட்டிற்கு ஆட்களை அனுப்பும் முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர். இந்த நபரின் பெயர் விபரங்களை பொலிசார் தெரிவிக்கவில்லை. ஆனால் இவர் மலேசியாவிற்கு ஆட்களை அனுப்பி அங்கிருந்து வெளி நாடுகளுக்கு ஆட்களை அனுப்புபவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட நபர் நாளை நீதிமன்றம் கொண்டு செல்லப்படுவார் என பொலிசார் கூறியுள்ளனர். Eelanatham

  15. பத்து விமானங்களுடன் தனது சேவையை ஆரம்பித்த இலங்கை விமானப்படை 60 வது ஆண்டை பூர்த்தி செய்யும் நிலையில் 110 விமானங்கள், ஹெலிகொப்டர்களுடன் வீரநடை போடுவதாக பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியும், விமானப்படைத் தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க தெரிவித்தார். ஆரம்பத்தில் மொத்தமாகவே 1200 இராணுவ வீரர்கள் இருந்ததாக தெரிவித்த அவர் தற்பொழுது அதிகாரிகள் மாத்திரம் 1400 பேர் உள்ளதாக மேலும் தெரித்தார். இலங்கை விமானப் படையின் 60 வது ஆண்டு பூர்த்தி விழா எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள விமானப் படை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்றது. விமானப் படைத் தளபதி இங்கு ம…

  16. வன்னியில் இருந்து கடத்திச்செல்லப்பட்ட 20 வயதான இளைஞரையும் மேலும் நான்கு பேரையும் கையடக்க தொலைபேசியின் மூலமான குறுஞ்செய்தி காப்பாற்றியுள்ளது. நேற்று காலை 5.30 அளவில் மாணவனான கஜீவன் பவனீதரன், பிரத்தியேக வகுப்பு ஒன்றுக்கு சென்று வரும் போது கிளிநொச்சி நகரில் வைத்து பச்சை நிறை ஆடை அணிந்தவர்களால், பஸ் போன்ற வாகனம் ஒன்றில் கடத்திச்செல்லப்பட்டார். ஏ 9 வீதியின் ஊடாக அவரை கடத்திச்செல்லும் போது பவனீதரன் தமது கையடக்க தொலைபேசியின் மூலம் தாம் கடத்திச்செல்லப்படுவதை தமது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவித்துள்ளார். இந்தநிலையில் அவரும் அவருடன் கடத்திச்செல்லப்பட்ட ஏனைய நான்கு பேரும் வவுனியாவில் வைத்து காப்பாற்றப்பட்டனர். எனினும் அவர்களை கடத்தியவர்க…

    • 0 replies
    • 400 views
  17. தனிமையில் வாழ்ந்து வந்த தாயும் மகளும் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் ஊர்காவற்றுறை தம்பாட்டிமனோன்மணி அம்மன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீட்டில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.நடராசா சிந்தாமணி (78 வயது). இவரது மகள் இ.ராஜலக்ஷ்மி (45 வயது) ஆகிய இரு பெண்களே வெட்டிப் படுகாயப்படுத்தப்பட்டவர்களாவர். இனம்தெரியாத சிலர் இவர்களின் வீட்டுக்குள் புகுந்து கூரிய ஆயுதங்களால் இவர்களை வெட்டியதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.இவர்கள் படுகாயங்களுடன் வீட்டின் முன்பாகவுள்ள வீட்டிற்குச் சென்று நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர்.அந்த வீட்டார் கடற்படையினருக்குத் தகவல் கொடுக்கவே ஊர்காவற்றுறை பொலிஸார் அங்கு வந்து இருவரையும் ஊர்காவற்றுறை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ப…

  18. வருகின்ற உள்ளுராட்சி தேர்தலில் கொழும்பு மாவட்டம் மாநகராட்சியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் போட்டியிடவுள்ளதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.கொழும்பு மானகரசபையில் தாம் ஆசனங்களை கைப்பற்ற முடியும் என நம்புவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. Eelanatham

  19. முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 மே 19ஆம் திகதி முடிவுக்கு வந்தது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் மட்டும் தான். அத்தோடு இலங்கையில் போர் ஓய்ந்து விட்டதென்று கருதிவிடக் கூடாது. அந்தப் போரின் தொடர்ச்சியை இப்போதும் அரசாங்கம் எதிர்கொண்டவாறே இருக்கிறது. இப்போது அரசாங்கம் எதிர்கொள்வது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் விளைவாகத் தோன்றிய இன்னொரு துணைப் போரையே. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கின்ற போர் தான் அது. நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தி பொருளாதார வளர்ச்சியைக் காண வேண்டுமானால் இந்தப் போரையும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் இருக்கிறது. முன்னர் புலிகளுக்கு எதிரான போரில் அரசாங்கம் எந்தளவுக்கு மோசமான நிலையில் இருந்ததோ அதேபோன்ற மோசமான நிலையில் இந்த …

    • 0 replies
    • 288 views
  20. முகநூலில் (Facebook) படம் போட்டவர் யாழில் படுகொலை ஜன 1, 2011 வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தின் குடத்தனை கிழக்கில் வீடு புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது: நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் குடத்தனை கிழக்கில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் அவரது கணனியை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கிணங்க வீட்டினுள் அழைத்துச் சென்றபோது ஆயுததாரிகள் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இவரது மனைவி ஆயுததாரிகளை கட்டிப்பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த…

  21. புலம்பெயர் தமிழர்கள் மகிந்தரை தண்டிக்காமல் விடமாட்டார்கள்: வைகோ சர்வதேசம் சுமத்தியுள்ள ஈழத் தமிழர்கள் மீதான யுத்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை விரைவில் விடுவிக்கப்பட்டுவிட முடியாதென மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்திய சென்னையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும், யுத்தக் குற்றம் தொடர்பில் புலம்பெயர் தமிழ் மக்கள் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவை தண்டிக்காமல் விடமாட்டார்கள் என வைகோ குறிப்பிட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் முடிவு செய்வார் என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ள…

  22. செய்தி மூலம் TAMIL CNN புதன், 29 டிசம்பர் 2010 14:38 மரத்தால் விழுந்தவனை மாடு முட்டுவது போல்…, வெந்த புண்ணில் வேல் பாயச்சுவது போல்… என்றெல்லாம் பழமொழிகள் உள்ள நிலையில், இன்று நாம் அம்பலப்படுத்தப் போகும் விடயத்துக்காகப் புதிதாக ஒரு பழ மொழியைத் தேட வேண்டிய நிலையில் எமது தமிழ் இனம் உள்ளது. அதாவது, எமது இனத்தையே விற்றுப் பிழைக்கும் சில்லறை வியாபாரி ஒருவரின் மொத்த வியாபாரத்தை நாம் இங்கு அம்பலப்படுத்த வேண்டியுள்ளதன் காரணமாகவே நாம் புதிய பழமொழி ஒன்றினையும் தேட வேண்டியுள்ளது. தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த இந்த வியாபாரி இன்று தமிழ்ப் பெண்களை இரத்தக் கண்ணீர் விட வைத்துள்ளார். யுத்த காலத்தில் புலிகளைத் தேடிய இ…

    • 25 replies
    • 4.3k views
  23. இன்று(சனவரி 2) கேணல் கிட்டு பிறந்த நாள் பதிந்தவர்_மீனகம் on December 21, 2009 பிரிவு: முதன்மைச்செய்திகள், வரலாற்றுப்பதிவுகள் [படம் இணைப்பு] குழந்தைகளுக்கு கிட்டு மாமா, தோழர்களுக்கு கிட்டு, இயக்கப்பெயர் வெங்கிட்டு, இயற்பெயர் சதாசிவம் கிருஸ்ணகுமார். கேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993) என அழைக்கப்படும் சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார். வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இராணுவப் பயிற்சி பெற்றார். 1983 ஏப்ரல் 7 இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாள…

  24. சிறீலங்காவில் ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறை குறைந்தாலும் தடைகளும், சுய தணிக்கையும் தொடர்கிறன இலங்கையில் நிலவுகின்ற நிலைமைகள் தொடர்பில் சுதந்திரமாகச் செய்தி சேகரித்து வெளியிடுவதைத் தடுக்கும் வகையில் அரசாங்கம் தடைகளை ஏற்படுத்துவதாகவும் புதியவகைத் தணிக்கையைத் திணிப்பதாகவும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்கள் நேரடித் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் குறைந்திருக்கின்றபோதும் ஊடகவியலாளர்கள் தாம் நினைத்ததை எழுதும் நிலை தோன்றவேண்டும் என்றும் இதனை அதிகாரிகள் தடுக்கிறார்கள் என்றும் அந்த அமைப்புக் குற்றம் சுமத்தியிருக்கிறது. இலங்கையில் போர் உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் தங்களுக்கு ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தலிலிருந்து தப்புவதற்காக புலம்ப…

  25. இன்று நாட்டுப்பற்றாளர் தங்கவடிவேல் அவர்களின் 3ம் ஆண்டு வீரவணக்க நாள் 02-01-2008 அன்று நாட்டுப்பற்றாளர் தங்கவடிவேல் அவர்கள் வீரச்சாவைத் தழுவி கொண்டார் .நாட்டுப்பற்றாளர் தங்கவடிவேல் அவர்களின் 3ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தன்னை ஆகுதியாக்கிய இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.