ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
காக்கைதீவு - சாவக்காடு விவகாரத்துக்கு சுமூக தீர்வு பு.கஜிந்தன் யாழ்ப்பாணம், சாவக்காடு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் காக்கைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டிருந்த தொழில்சார் முரண்டுபாடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டின் மூலம் சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட இரண்டு கடற்றொழில் சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் பொதுவான இறங்குதுறை மற்றும் மீன் சந்தை போன்ற பொதுவானதாக இருந்து வருகின்ற நிலையில் வற்றை பகிர்ந்து கொள்வது தொடர்பில் ஏற்பட்டிருந்த முரண்பாட்டினையே கடற்றொழில் அமைச்சர் தலையிட்டு சுமூகமாக தீர்த்து வைத்துள்ளார். குறித்த விவகாரம் அமைச்சரின் கவன்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில்…
-
- 2 replies
- 660 views
-
-
03 NOV, 2023 | 03:04 PM மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு வாவியில் நீந்தி எழுவாங்கரைப் பகுதிக்கு இரண்டு காட்டு யானைகள் வெள்ளிக்கிழமை (03) அதிகாலை உட்புகுந்துள்ளதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் இக்காட்டு யானைகள் மட்டக்களப்பு வாவியை நீந்தி களுதாவளைக் கிராமத்திற்குள் உட்புகுந்துள்ளன. இவ்வாறு கிராமத்திற்குள் உட்புகுந்த இரு காட்டு யானைகளும், தோட்டங்களையும் வீட்டு வேலிகளையும், துவம்சம் செய்துவிட்டு கடற்கரைப் பகுதியூடாகச் சென்று தேத்தாத்தீவு கடற்கரையில் அமையப்பெற்றுள்ள சவுக்கு பற்கை காட்டினுள் தங்கியுள்ளன. பின்னர் பொதுமக்கள் ஒன்றிணைந்த…
-
- 0 replies
- 202 views
- 1 follower
-
-
28 OCT, 2023 | 02:02 PM (எம்.வை.எம்.சியாம்) நாட்டில் 30 ஆபத்தான மேம்பாலங்களும், 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகளும் காணப்படுகின்றன. மேம்பாலங்களை நிர்மாணிப்பதாயின் 350 மில்லியன் ரூபா தேவைப்படுகிறது. இருப்பினும் 200 கோடி ரூபாயே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். மேலும் இவற்றை புனரமைக்க போதுமான நிதி இல்லை எனவும் நிதியை ஈட்டுவதற்கான பிரதான மூலம் வரியை அதிகரிப்பதாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். பம்பலப்பிட்டி ரயில் நிலையத்துக்கு செல்லும் மேம்பாலம் சேதமடைந்துள்ளதால் அதனை புனர்நிர்மானம் செய்தவற்காக ஜனாதிபதி 50 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியிருந்ததுடன் அத…
-
- 3 replies
- 421 views
- 1 follower
-
-
மீண்டும் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவிற்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் மூன்று வார கால சேவை நீடிப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இவ்வாறு சேவை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சேவை நீடிப்பானது நான்காவது முறையாக வழங்கப்படுவதோடு இதற்கு முன்னர் சி.டி.விக்ரமரத்னவுக்கு இரண்டு முறை சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1356975
-
- 0 replies
- 252 views
-
-
01 NOV, 2023 | 11:46 AM இலங்கையில் கடந்த 9 மாதங்களில், 14 வயதுக்கு உட்பட்ட 120 பாடசாலை மாணவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தொழுநோய் கட்டுப்பாட்டு இயக்கம் கூறுகிறது. அதிக எண்ணிக்கையான மாணவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதுடன் அந்த எண்ணிக்கை 31 ஆகும். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 பாடசாலை மாணவர்களும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 11 மாணவர்களும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காலகட்டத்தில், முழு நாட்டிலும் 1150 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளனர். https://www.virakesari.lk/article/168230
-
- 5 replies
- 872 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 02 NOV, 2023 | 04:47 PM (இராஜதுரை ஹஷான்) பல்கலைக்கழகங்களின் வளப்பற்றாக்குறை,விரிவுரையாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி 17 அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் இன்று வியாழக்கிழமை (02) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரச பல்கலைக்கழகங்களின் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. விரிவுரையாளர்களர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்தின் தலைவர் பரண ஜயவர்தன குறிப்பிடுகையில், பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களினால் நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.புதிய வரி கொள்கையினால…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
31 OCT, 2023 | 10:41 AM நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு மேற்குப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய குணாராசா தனுஷன் என்பவர் இனங்காணப்பட்டுள்ளார். அவரது உறவினர் வீட்டுக்கு அண்மையில் உள்ள ஆட்களற்ற வீட்டினை குறித்த இளைஞரே பராமரித்து வருவதாகவும், பகல்வேளைகளில் அவ்வீட்டில் படுத்து உறங்குவதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில், நேற்று திங்கட்கிழமை (30) அவரை காணவில்லை என வீட்டார் தேடிச்சென்றவேளை பூட்டிய வீட்டினுள் படுக்கையிலேயே இறந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் நெடுந்தீவு பிரதேச பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்த…
-
- 1 reply
- 398 views
- 1 follower
-
-
Published By: VISHNU மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டம் இன்று 49 ஆவது நாளாக சித்தாண்டியில் தொடர்கிறது. பண்ணையாளர்களும், கால்நடைகளும் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் அநீதிக்கு எதிராக நீதி வேண்டி இச் சுழற்சி முறை போராட்டம் இடம்பெற்று வருகிறது. இதற்கு வலுச் சேர்க்கும் முகமாக வியாழக்கிழமை (2) கிழக்கு பல்கலைக் கழகத்தின் அனைத்துப் பீட தமிழ் மாணவர்கள், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களது நிண்ட கால மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத் தருமாறு அரசிற்கு கோரிக்கை விடுத்தனர். கிழக்கு பல்கலைக்கழக முன்றலில் வியாழக்கிழமை (2) காலை ஒன்று கூடிய மாணவர்கள…
-
- 0 replies
- 205 views
-
-
01 NOV, 2023 | 12:10 PM (நா.தனுஜா) தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து பேசினாலும், அவை எதிர்பார்க்கப்பட்டவாறு செயல்வடிவம் பெறவில்லை என ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் விசனம் வெளியிட்டுள்ளனர். அதே வேளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்புக்கள் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனால் எடுத்துரைக்கப்பட்ட விடயங்களை செவிமடுத்த அவர்கள், இதனையொத்த கருத்துக்களையே தாம் சந்தித்த ஏனையோரும் கூறியதாகத் தெரிவித்துள்ளனர். நாட்டின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஆராய்தல்…
-
- 3 replies
- 385 views
- 1 follower
-
-
வட மாகாண அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் போராடப் அறிவிப்பு! November 2, 2023 வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணியிலிருந்து நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 8 மணி வரை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில், நாங்கள் பல மாதங்களாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற இருப்பதையும், அது தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும், அதை தடுப்பதற்குரிய வழி வகைகளைப் பற்றியும் ஆட்சியாளர்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும்,…
-
- 0 replies
- 215 views
-
-
இலங்கையில் எயிட்ஸால் பாதிக்கப்பட்ட 43 பேர் உயிரிழப்பு இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் மொத்தம் 485 பேர் எச்.ஐ.வி அல்லது எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அதேநேரம் 43 இறப்புகளும் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், நாடு முழுவதும் உள்ள 41 நிலையங்களில் இலவசமாக எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ள முடியும் என பொதுமக்களுக்கு தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டம் அறிவித்துள்ளது. இதற்காக www.know4sure.lk என்ற இணையத்தின் ஊடாக முன்பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் மேலதிக தகவல்களுக்கு 0112 667 163, 0703 633 533 இலக்கத்தை தொடர்புகொள்ள முடியும் என்றும் அறிவித்துள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள ப…
-
- 0 replies
- 223 views
-
-
யாழ். பல்கலை மாவீரர் நினைவு தூபியில் சுடர் ஏற்றப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்பரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை துப்பரவு செய்யும் பணிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் புதன்கிழமை ஈடுபட்டனர். அதன்பின் தூபியில் ஈகைச்சுடர் ஏற்றி மாணவர்கள் மரியாதை செலுத்தினர். https://athavannews.com/2023/1356773
-
- 0 replies
- 340 views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மாவீரர் துயிலும் இல்லங்களை சிரமதான அடிப்படையில் தூய்மைப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பின் பிரதான மாவீரர் துயிலும் இல்லமாக கருதப்படும் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. தரவை மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் இந்த சிரமதான பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன. தரவை மாவீரர் துயிலும் இல்…
-
- 0 replies
- 279 views
-
-
கல்வியை இடைநிறுத்தி வேலைக்கு செல்லும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு பொருளாதார நெருக்கடி காரணமாக பன்னிரெண்டு முதல் பதின்மூன்று வயது வரையிலான பல சிறுவர்கள் பாடசாலை கல்வியை இடை நிறுத்தியுள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. குடும்ப சுகாதாரப் பணியகத்தின் பாடசாலை சுகாதாரப் பிரிவின் தலைவர் டொக்டர் ஆயிஷா லொகு பாலசூரிய இதனை தெரிவித்துள்ளார் இந்த நிலைமை பல பாடசாலைகளில் குறிப்பாக கொழும்பு நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகள் மற்றும் தொல…
-
- 0 replies
- 262 views
-
-
பணமோசடி வழக்கு: நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் விடுதலை ! கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட வழக்கில் இருந்து நாமல் ராஜபக்ஷ உட்பட அனைத்து பிரதிவாதிகளையும் விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு, குறித்த நிறுவனத்தின் ஊடாக நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் 30 மில்லியனை முறைகேடாக சம்பாதித்ததாக குற்றம் சாட்டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1356831
-
- 0 replies
- 381 views
-
-
Published By: DIGITAL DESK 3 02 NOV, 2023 | 09:36 AM (நா.தனுஜா) தொல்பொருள் திணைக்களமானது நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் அப்பிரதேசங்களிலுள்ள கட்டமைப்புக்கள் மற்றும் பௌத்த பிக்குகளுடன் இணைந்து இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் வணக்கத்தலங்களைக் கைப்பற்றுவதற்கு வசதி ஏற்படுத்துகின்றது என சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேவேளை, நாட்டில் வாழும் சிறுபான்மையின இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கான மீயுயர் மத சுதந்திரத்தை உறுதிசெய்யும் வகையில் அரசாங்கமானது தற்போது நடைமுறையிலுள்ள 'ஒடுக்குமுறை' கொள்கைகள் மற்றும் சட்டங்களை முற்றாக நீக்கவோ அல்லது திருத்தியமைக்கவோ நடவடி…
-
- 0 replies
- 153 views
- 1 follower
-
-
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக உலக பௌத்த மகா சம்மேளனம் கவனயீர்ப்பு போராட்டம் காஸா மீதான இஸ்ரேலியினரின் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட பெருமளவானோர் உயிரிழந்திருக்கும் நிலையில், போர்நிறுத்தம் சமாதானம் மற்றும் அமைதி நிலைநாட்டப்படுவதை வலியுறுத்தி உலக பௌத்த மகா சம்மேளனம் - இலங்கை நிலையத்தினால் செவ்வாய்கிழமை (31) கொழும்பில் அமைந்துள்ள உலக பௌத்த மகா சம்மேளனத்துக்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கவனயீர்ப்புப்போராட்டத்தில் சர்வ மதத்தலைவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக உலக பௌத்த மகா சம்மேளனம் கவனயீர்ப்பு போராட்டம் | Virakesari.lk
-
- 3 replies
- 429 views
-
-
01 NOV, 2023 | 10:58 AM அமெரிக்கா விசா மறுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர ஆசியாவின் தவிர்க்க முடியாத நம்பகமான நண்பன் சீனா என அந்த நாட்டிற்கு புகழாரம் சூட்டியுள்ளார். பிஓஏஓஉச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஆசிய நாடுகளிற்கு இடையிலான பிணைப்பை நெருக்கத்தை மேற்குலகினால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இந்த பிணைப்பு வர்த்தகம் மூலமும் முக்கியமாக பௌத்தம் மூலமும் வளர்ச்சியடைந்தது வளர்த்தெடுக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள சரத்வீரசேகர சீனா ஆசியாவின் தவிர்க்க முடியாத நம்பகதன்மை மிக்க நண்பன் எனவும் தெரிவித்துள்ளார். மனித உரிமை பேரவையில் பாதுகாப்பு சபையின் ந…
-
- 1 reply
- 440 views
- 1 follower
-
-
இலங்கை இளநீருக்கு வெளிநாட்டு சந்தையில் கேள்வி துரிதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இவ் வருடம் இளநீர் ஏற்றுமதி 117 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தரவுகள் தெரிவித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகார சபை (CDA) அதிகாரிகளுடன் நேற்று அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே இதனை தெரிவித்துள்ளது. இச்சந்திப்பின் போது, இலங்கையின் தென்னைச் செய்கையின் அபிவிருத்திக்காக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இதுவரையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. 2022 ஆம் ஆண்டு 11 ம…
-
- 0 replies
- 529 views
-
-
தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களைத் திருப்பி அனுப்ப நடவடிக்கை : அமைச்சர் டக்ளஸ்! வட மாகாணத்தில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் நியமிக்கப்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட வட மாகாணத்தில் உள்ள பல அரச நிறுவனங்களில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்பின் கீழ் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த விடயம் குறித்து, பிரதமரோடு கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், வட மாகாணத்தில் வேலை வாய்ப்புகளை வழங்கும் போது தமிழ் மக்களுக…
-
- 8 replies
- 883 views
-
-
01 NOV, 2023 | 11:10 AM (நா.தனுஜா) பாராளுமன்ற உறுப்பினர் தராதரம் தொடர்பான சட்டமூலத்தின் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய ஒழுக்கக்கோவை தயாரிக்கப்படும் எனவும், அதனை மீறுபவர்களுக்கு பாராளுமன்ற உறுப்புரிமை இரத்துச்செய்யப்படக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் புதிதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் கொழும்பில் அமைந்துள்ள நீதியமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை (31) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:…
-
- 0 replies
- 148 views
- 1 follower
-
-
பணவீக்கம் குறித்த அதிர்ச்சியளிக்கும் தகவல்! ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, 2023 செப்டம்பர் மாதத்தில் 1.3 சதவீதமாக காணப்பட்ட பணவீக்கம், இம்மாதம் 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், எவ்வாறு இருப்பினும் உணவுப் பணவீக்கம் மாறாமல் தொடர்ந்து -5.2 தவீதமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1356558
-
- 0 replies
- 453 views
-
-
உலக வங்கி குழு யாழ்ப்பாணத்திற்கு பயணம்! adminOctober 30, 2023 இலங்கை சென்றுள்ள உலக வங்கிக் குழு, இன்றைய தினம் திங்கட்கிழமை (30.10.23) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பயணம் செய்துள்ளது. அதன் போது , உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை பார்வையிட கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு உலக வங்கி குழு சென்று பார்வையிட்டது. உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜியர்ட் தலைமையிலான குழுவினருடன், உலக வங்கியின் உயர் மட்ட குழு, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் உள்ளிட்ட பலரும் குறித்த பயணத்தின் போது கலந்துகொண்டனர். …
-
- 2 replies
- 403 views
- 1 follower
-
-
மனைவியின் கடவுச்சீட்டில் வேறொரு பெண்ணை அழைத்துச் செல்ல முயன்றவர் கைது! யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி யாழில் உள்ள மற்றொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்றவேளை சந்தேக நபர் நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர், தனது 5 வயது மகன் மற்றும் அவரது மனைவி என குறிப்பிடப்பட்ட காங்கேசன்துறையைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவருடன் இத்தாலி செல்வதற்காக இன்று மதியம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். விமானநிலையத்தில் தமது பயண ஆவணங்களை வழங்கியபோது, நம்பகத்…
-
- 0 replies
- 299 views
-
-
இலங்கையை சேர்ந்த ஒருவர் ஹமாசிடம் பணயக்கைதியாக சிக்கியிருக்கலாம் என இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சுஜித் பண்டார யட்டவர என்ற இலங்கையர் ஹமாசின் தாக்குதலை தொடர்ந்து காணாமல்போயுள்ள நிலையில் அவர் ஹமாசினால் பணயக்கைதியாக பிடிபட்டிருக்கலாம் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது என இஸ்ரேலிற்கான இலங்கைதூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கையை சேர்ந்த ஒருவர் ஹமாசிடம் சிக்குண்டிருக்கலாம் - இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு | Virakesari.lk
-
- 1 reply
- 308 views
-