ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
பிறப்பு வீதத்தின் வீழ்ச்சியினால் எதிர்காலத்தில் இலங்கை மக்கள் தொகையில் கணிசமான வீழ்ச்சியை சந்திக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் எமரிட்டஸ் சனத்தொகை பேராசிரியர் இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது பிறப்பு வீதத்தில் 25% குறைந்துள்ளமை எதிர்கால சனத்தொகை வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இனங்காணப்பட்டுள்ளதாக பேராசிரியர் டி சில்வா தெரிவித்தார். 2022 இல் இலங்கையில் பதிவான பிறப்புகளின் எண்ணிக்கை 2013 இல் பதிவானதை விட 90,000 ஆக குறைந்துள்ளது என கூறிய அவர், தற்போதைய பிறப்பு விகிதம் இறப்பு எண்ணிக்கையை நெருங்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதால் இந்த நிலைமை மேலும் மோசமடையலாம் என பேராசிரியர் …
-
- 1 reply
- 372 views
- 1 follower
-
-
ஒரு நாட்டுக்கு - சமூகத்துக்கு அபிவிருத்தி என்பது தவிர்க்கப்பட முடியாததுதான் ஆனால், அந்த அபிவிருத்தியின் அடிப்படை சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமைய வேண்டும் என்று ஜனாதிபதி ரணிலிடம் ஆணித்தரமாகத் தெரிவித்திருக்கின்றனர் சர்வ மதத் தலைவர்கள். வடமாகாணத்துக்கு நான்கு நாள்கள் பயணமாக கடந்த நான்காம் திகதி வந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றார். இந்தத் தொடர் சந்திப்புகளின் துணை நிகழ்வாக மதத்தலைவர்களையும் அவர் நேற்றுமுன்தினம் சந்தித்தார். இதன்போதே, உண்மையான அபிவிருத்தி என்றால் என்ன? அபிவிருத்தி எப்போது அதன் இலக்கை அடைந்து கொள்ளும்? இனங்களுக்கும் மதங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையிலான நல்லிணக்கம…
-
- 0 replies
- 494 views
-
-
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பொலிசாரால் ஒரு தொகுதி கஞ்சா இன்று(08) திங்கள்கிழமை அதிகாலையில் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்கவிற்க்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து வல்லிபுர ஆழ்வார் சமுத்திர தீர்த்தம் இடம் பெறும் கடற்கரையில் நீருக்கு அடியில் பதுக்கிவைத்திருந்த நிலையிலேயே குறித்த கஞ்சா மீட்டெடுக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/பருத்தித்துறை_பொலிஸாரால்_ஒரு_தொகுதி_கஞ்சா_மீட்பு!
-
- 7 replies
- 863 views
-
-
வவுனியாவில் அரச தலைவர் வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவியான சி. ஜெனிற்றாவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வவுனியாவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை வருகை தந்த அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். அரச தலைவரின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு செல்லும் பாதையில் வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க…
-
- 0 replies
- 249 views
-
-
தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கான முதலீட்டு தளமாக மாற்றப்படுகிறதா பூநகரி அபிவிருத்தி திட்டம் - செல்வராஜா கஜேந்திரன் Published By: VISHNU 07 JAN, 2024 | 07:58 PM பூநகரி அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அப் பகுதி மக்களுடன் கலந்துரையாடப்படவில்லை. மாறாக ரணில் அரசின் தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கான முதலீட்டு தளமாக மாற்றப்படுகிறதா என்ற கேள்வி எழுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் சனிக்கிழமை (06) இடம்பெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 19 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வில் கலந்து ஊடகங்களுக்கு …
-
- 1 reply
- 448 views
- 1 follower
-
-
Published By: VISHNU 07 JAN, 2024 | 07:52 PM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயத்திற்கு சமாந்தமரமாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்து வேட்டையினை, குரலற்றவர்களின் குரல் அமைப்பு முன்னெடுத்திருந்தது. அந்தவகையில், மிகநீண்ட காலங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள திகளையும், எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னதாக விடுதலைசெய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்னிறுத்தி; மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலதரப்பட்டவர்களிடம் இருந்தும் திரட்டப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய குறித்த மகஜர், நேற்று முன்தினம் யாழ். மாவட்ட செயலகத்தில் வைத்து ஜனாதிபத…
-
- 1 reply
- 251 views
- 1 follower
-
-
நாட்டைக் கட்டியெழுப்பும் அபிவிருத்தித் திட்டத்தில் இணையுங்கள் – பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரச அதிபர் அழைப்பு! [புதியவன்] பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்லும் வேலைத்திட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முக்கிய பங்கு வகிக்க முடியும் என அரச அதிபர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக் காட்டினார். விவசாயம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அபிவிருத்திக்காக பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த அரச அதிபர், இந்த முயற்சிகளில் தீவிரமாக இணைந்து கொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார். யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுடன் அண்மையில் யாழ்.ஜெட்விங் ஹோ…
-
- 2 replies
- 555 views
-
-
ஜனாதிபதியின் யாழ். விஜயத்தில் எந்த பயனுமில்லை என்கிறது ஜேவிபி! ஜனாதிபதியின் வடக்கு விஜயம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாத மக்களின் வரிப்பணத்தை வீணடித்த வெற்றுபயணமாகவே அமைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துநெந்தி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களின் அடிப்படை வசதிகள் இன்னும் பூர்த்தி செய்யாத வகையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். காணி விடுவிப்பு, மீள்கட்டுமானம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தீர்வு மற்றும் அரசியல…
-
- 1 reply
- 578 views
-
-
என்னை கொல்ல வந்தவரை மன்னித்து விட்டேன் adminJanuary 7, 2024 தன்னை கொலை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பெண்மணியை தான் மன்னித்து விட்டதாகவும், அவரது விடுதலை தொடர்பில் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி, அவரது விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தை வாழ்விடமாகக் கொண்டு, முன்பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான செ.சத்தியலீலா என்பவர், கடந்த 2004 ஆம் ஆண்டு, அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மீதான குண்டுத் தாக்குதல் சம்பவம்தொடர்பில், அவசரகாலச் சட்டவிதியின் கீழ் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்தார். …
-
- 3 replies
- 796 views
-
-
வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் ஆலயங்களின் பிரச்சினைகளுக்கு, விரைவில் தீர்வு! வடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகள் வழங்கப்படும் எனவும், அந்த மத ஸ்தலங்களை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை மத தலைவர்களுடனான சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது. வடக்கில் யுத்தத்தினால் இழந்த வருமானத்தை வடக்கிற்கு மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த உள்ளது. அதற்கு மதத் தலை…
-
- 0 replies
- 366 views
-
-
Published By: DIGITAL DESK 3 06 JAN, 2024 | 09:10 PM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் போராட்டத்தைத் தடுப்பதன் மூலம் யுத்தத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் அரசியல் ரீதியான தன்முனைப்பைக் காண்பிக்கமுடியாது எனவும், தமிழ் சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கமுடியாது எனவும் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினர் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வவுனியா விஜயத்துக்கு எதிராக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் வவுனியா மாவ…
-
- 2 replies
- 328 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 06 JAN, 2024 | 09:15 PM (எம்.மனோசித்ரா) பெறுமதி சேர் வரி ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் வரியாகும். கொள்ளையடித்தவர்களிடமிருந்து பணத்தை மீட்பதற்கு பதிலாக, அவர்கள் அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகின்றனர். எனவே இந்த வற் வரியை ஊழல் நிறைந்த வரி என்று அழைக்கலாம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசனம் வெளியிட்டார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 62 ஆவது கட்டமாக மினுவாங்கொட நெதகமுவ கனிஷ்ட வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் சனிக்கிழமை (06) கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், …
-
- 1 reply
- 211 views
- 1 follower
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 6 ஜனவரி 2024, 08:36 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு சோழர் ஆட்சிக்குப் பிறகு மீண்டும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் ஏறு தழுவுதல் என்ற பெயரில் நடத்தப்பட்டது. தமிழகத்தின் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்க உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன், இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகளை நடத்துவதற்காக தமிழகத்தில் இருந்து ஜல்லிக்கட்டு வீரர்கள் இலங்கைக்கு வருகை தந்தனர். சம்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஏற்பாட…
-
- 19 replies
- 1.7k views
- 2 followers
-
-
பூநகரி நகர அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு! வடமாகாணத்திற்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (05) பிற்பகல் பூநகரி பிரதேசத்திற்கு விஜயம் செய்தார். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட பூநகரி நகர அபிவிருத்தித் திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக பூநகரி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் பூநகரி நகர அபிவிருத்திக்காக 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு இணங்க, உரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, சுற்று…
-
- 0 replies
- 213 views
-
-
மட்டக்களப்பில் 48 கோடி செலவில் தபாலக கட்டிட தொகுதி மட்டக்களப்பு நகரில் 48 கோடி செலவில் தபாலக கட்டிட தொகுதியை அமைச்சர் பந்துல குணவர்தன திறந்து வைத்தார். நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோரின் முயற்சியினால் கிழக்கு மாகாணத்தில் தபால் சேவை நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் பொருட்டு இந்த மாகாண தபாலக கட்டிட தொகுதி அமைக்கப்பட்டது. அன்றைய தபால்துறை அமைச்சரினால் இந்த கட்டிட தொகுதி வேறு மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் ப…
-
- 0 replies
- 598 views
-
-
05 JAN, 2024 | 05:04 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியுடன் வரி சுமை மக்கள் மீது சுமத்தப்பட்டதால் கடும் வறுமை நிலைக்கு ஆளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50இலட்சத்தை தாண்டியுள்ளதாக குடிசன மற்றும் புள்ளிவிபர திணைக்கள அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2019 காலப்பகுதியில் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்த இந்த வறிய மக்கள், முழு சனத்தொகையில் 25 இலட்சமாக பதிவாகி இருந்தபோதும் தற்போது வறிய மக்கள் பிரிவுக்கு புதிதாக 30இலட்சம் பேர் இணைந்திருக்கின்றனர். நாட்டின் மொத்த சனத்தொகை சுமார் இரண்டு கோடி 20 இலட்சமாகும் இந்த சனத்தொகையில் 2019ஆகும் போது நூற்றுக்கு 11.9 வீதமானவர்களே …
-
- 8 replies
- 823 views
- 1 follower
-
-
06 JAN, 2024 | 07:46 AM வெளிவிவகார அமைச்சின் முன்னாள் செயலாளரான திருமதி சேனுகா திரேனி செனவிரத்ன, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை (5) தனது நற்சான்றிதழ்களை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் ஒப்படைத்துள்ளார். இது தொடர்பாக இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு குறிப்பையும் பதிவிட்டிருந்தார். முன்னதாக, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக மிலிந்த மொரகொட அந்தப் பதவியை வகித்தார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/173239
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
வற் வரி அதிகரிப்புக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் 05 JAN, 2024 | 06:54 PM வற் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு, இராஜகிரியவில் இன்று வெள்ளிக்கிழமை (5) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியினால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (படப்பிடிப்பு- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/173234
-
- 2 replies
- 566 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 05 JAN, 2024 | 11:58 AM செங்கடலில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிரான அமெரிக்கா முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளில் இலங்கை கடற்படையினரும் இணைத்துக்கொள்வதுகுறித்து இலங்கை கடற்படை ஆராய்ந்து வருகின்றது. ஏவுகணை தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் பகுதிக்கு இலங்கை கடற்படையின் கப்பல்களை அனுப்புவதற்கு முன்னர் அது குறித்து தீவிரமாக ஆராயவேண்டும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் நடவடிக்கைகளில் இலங்கையும் இணைந்து கொள்ளக்கூடும் என மூன்றாம்திகதி ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை குறிப்பிட்டிருந்தார். செங…
-
- 29 replies
- 2.8k views
- 1 follower
-
-
கொள்ளுப்பிட்டியில் சோதனை என்ற பெயரில் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் வெளியானதை தொடர்ந்து சமூக ஊடகங்களில் பொலிஸாரின் நடவடிக்கைகளிற்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இரண்டு இளைஞர்களில் ஒருவரின் தந்தை தனது மகன் எதிர்கொண்ட துன்புறுத்தல்கள்குறித்த விபரங்களை சமூக ஊடகத்தில் விபரமாக பதிவிட்டுள்ளார். இரவு 8.45 மணியளவில் முச்சக்கரவண்டியொன்றில் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களையும் யுவதியொருவரையும் கொள்ளுப்பிட்டி சந்திக்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மறித்துள்ளனர் பொலிஸார் மகனை கடும் சோதனைக்கு உட்படுத்தினார்கள் அவரது உடமைகளை வீசி எறிந்தார்கள் என தந்தை ஜெரால்ட் டி சேரம் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். ஏன் தாங்கள் மீது …
-
- 3 replies
- 752 views
-
-
05 JAN, 2024 | 05:16 PM முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட தேராவில் குளம் நீர் நிரம்பி காணப்படுவதால் குளத்தினை அண்டிய மக்கள் இன்றும் தண்ணீருக்கு மத்தியில் வாழ்ந்து வருவதுடன் வீதிகள் குளத்துநீர் நிரம்பி காணப்படுவதால் போக்குவரத்து செய்வதிலும் மக்கள் பெரும் இடர்களை எதிர் கொண்டுள்ளார்கள். தேராவில் குளக்கரையினை அண்டிய 10 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தேராவில் முதன்மை வீதி குளத்து நீரினால் மூழ்கி காணப்படுவதால் வீதியால் செல்லமுடியாத நிலை கிராமத்திற்கு செல்லும் சிறு வீதிகளும் குளத்து நீரினால் மூழ்கியுள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தேராவில் குளம் விவசாய செய்கைக்கு உட்படாத மூ…
-
- 0 replies
- 270 views
-
-
Published By: VISHNU 05 JAN, 2024 | 03:18 PM மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது. எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேபோல் அதிகாரப் பகிர்வு என்பது ஒரு அரசியல் எண்ணக்கருவாக மாத்திரம் அன்றி, பொருளாதார அடிப்படையிலும் யதார்த்தமாக அமைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதேபோல், மாகாண மட்டத்தில் சுயாதீன பொருளாதாரத்தை உருவாக்குவது தொடர்பிலான தெரிவை ஜப்பான், கொரியா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் போன்ற நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறும், 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் வழங்கப்பட…
-
- 10 replies
- 680 views
- 2 followers
-
-
05 JAN, 2024 | 12:45 PM இலங்கைக்கு 20 ரயில் எஞ்ஜின்களை இலவசமாக வழங்க இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட 20 டீசல் எஞ்ஜின்களை இலங்கை்க்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார தெரிவித்துள்ளார். அவற்றை இந்நாட்டின் ரயில் பாதைகளில் இயக்க முடியுமா என சமீபத்தில் இந்தியா வந்த ரயில்வே துறை நிபுணர்கள் குழு ஆய்வு செய்திருந்தது. இதனையடுத்தே முதல் கட்டமாக எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டு எஞ்ஜின்களை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/173190
-
- 3 replies
- 456 views
- 1 follower
-
-
ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம்: வவுனியாவில் பதற்றம்! வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீது பொலிசார் பலப்பிரயோகத்தை முன்னெடுத்ததுடன் சங்கத்தின் தலைவி உட்பட இருவர் வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டனர். இதனால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை (5) வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெறும் வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். இதனையடுத்து வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் கலந்துரை…
-
- 5 replies
- 844 views
- 1 follower
-
-
யாழ் சூழலை மாசுபடுத்திய ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனம்! ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாணத்திற்கான நேற்றைய விஜயத்தின்போது அவரது பாதுகாப்பு வாகனம் ஒன்று கடும் புகையினை வெளியேற்றியவாறு சென்றதை அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் புகையினை வெளியேற்றும் போது தண்டங்களை விதிக்கும் பொலிஸார் ஏன் அரச வாகனங்களுக்கு அந்த நடைமுறைகளை பேணுவதில்லை என இவ்விடயம் குறித்து பொதுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அத்துடன் இவ்வாறு அதிகளவில் புகையை வெளிவிடும் வாகனங்களுக்கு எவ்வாறு புகைச்சான்றிதழ் வழங்க முடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், அரசாங்க வாகனங்களுக்கு ஒரு சட்டமும் பொதுமக்களது வாகனங்களுக்கு ஒரு சட்டமும் இலங…
-
- 2 replies
- 566 views
-