ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143276 topics in this forum
-
Nov 25, 2010 / பகுதி: செய்தி / இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விமானமூலம் புறப்பட்டுச் சென்றவரை காணவில்லை! யாழ் அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த செல்வரத்தினம் ருதீபன் என்பவரை கடந்த ஒருவாரமாக காணவில்லை என அவரின் சகோதரன் தெரிவித்துள்ளார். இவரைப் பற்றி மேலும் தெரியவருவதாவது; 28 வயதுடைய மேற்படி நபர், கடந்த 19.11.2010 அன்று காலை 8:45 மணிக்கு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விமானமூலமாக புறப்பட்டுச் சென்றதாகவும், ஆனால் இதுவரையும் இவர் நாட்டிற்கு சென்றதற்கான அறிகுறிகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என அவரது சகோதரன் தெரிவித்திருந்தார். இந்திய விமான நிலையத்தில் இருந்து உறவினர்களோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிவிட்டு, விமானத்தில் ஏறிய இவர், இலங்கை விமான நிலையத்தில் இருந்து வெள…
-
- 1 reply
- 588 views
-
-
வெள்ளிக்கிழமை, 26, நவம்பர் 2010 (17:4 IST) சென்னை: இலங்கையைச் சேர்ந்தவர் கைது இலங்கையைச் சேர்ந்தவர் ஜோசப்கிருஷ்டி (வயது 55). இவர் கடந்த ஜனவரி மாதம் சுற்றுலா விசாவில் சென்னை வந்தார். பின்னர் அவர் இலங்கைக்கு திரும்பி செல்லவில்லை. விசா காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிந்து விட்டது. வளசரவாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்துள்ளார். சென்னையில் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்தார். இந்நிலையில் ஜோசப் கிருஷ்டி, இலங்கை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அதிகாரிகள் அவரது விசாவை பரிசோதித்தபோது, சுற்றுலா விசாவுக்கான காலம் முடிந்து இருந்தது தெரிந்தது. இதையடுத்து ஜோசப்கிருஷ்டி நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவரை போல…
-
- 1 reply
- 824 views
-
-
தற்போது ஐ.நாவிலேயே போர்க்குற்றவாளி இருக்கிறார், மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தான் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற பல படுகொலைகளுக்கு பொறுப்பானவர் என கருதப்படுபவர், சிறீலங்காவை பிரதிநிதித்துவப்படுத்துபவரும் அவர் தான். அவரை நேர்ணால் மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபை முயற்சி செய்ததா? என ஐக்கிய நாடுகள் சபையின் ஊடக அமைப்பான இன்னசிற்றி பிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறீலங்காவின் பிரதி பிரதிநிதியாக நியமனம் பெற்று வந்துள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கடந்த வருடம் இடம்பெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட பல போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர். ஐக்கிய நாடுகள் சபையின் பிரதம அதிகாரிகளில் ஒருவரான இந்தியாவை சேர்ந்த நம்ப…
-
- 2 replies
- 846 views
-
-
நாளை 27ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள். அதனையொட்டிச் செய்திகளை வெளியிட்டு யாழ்ப்பாண மக்களைக் குழப்ப வேண்டாம் என்று நேற்றிரவு யாழ்ப்பாணப் பத்திரிகைகள் மூன்றுக்கு அனாமதேய மிரட்டல் விடுக்கப்பட்டது. நேற்றிரவு உதயன் அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பாதுகாப்பு ஊழியரிடம் இது தொடர்பான அநாமதேய மிரட்டல் கடிதத்தைக் கொடுத்து விட்டுச் சென்றனர். அதில்இ ”தமிழ் மக்கள் சந்தோசமாக வாழ்கின்றனர். இந்த நிலையைக் குழப்ப நீங்கள் முயற்சி எடுக்க வேண்டாம்.சுயாதீனமாக மக்களுக்குச் செய்தி கொடுக்கும் நீங்கள் இப்போது இருக்கும் சமாதானச்சூழ்நிலையைக் குழப்பும் வகையில் இந்த முறை மாவீரர் நாளுக்கு இயக்கச் செய்தி எதையும் போட வேண்டாம். அப்படிப் போட்டால் உங்கள் அலுவலகம் கொ…
-
- 4 replies
- 788 views
-
-
கனடா இலங்கை குடியுரிமை உடைய மக்களின் அகதி விண்ணப்பங்களை ஏற்று அங்கீகாரம் கொடுக்கும் வீதத்தில் தற்போது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 2009ம் ஆண்டில் 90.7% இலங்கை குடியுரிமை உள்ளவர்களின் அகதி விண்ணப்பங்களை அங்கீகரித்த நிலமை கடந்து தற்போது அகதி கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதில் பெருமளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய மாதத்தில் அகதிவிண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகாரம் கிடைக்கும் வீதம் 47%ஆக குறைந்துள்ளது.
-
- 5 replies
- 666 views
-
-
ஈழநாதம் இணையத்திற்காக வன்னியில் இருந்து சீராளன் தவம் கிடப்போம்! வாராய்! மாறிலா மாண்பின் வீறே மதிக்குமோ; தலைமைக்கூறே பேறிலா பெரிய பேறே பெற்றதோர்; கருணை ஆறே வேறிலா திருந்தவாறே விளங்கிடும் தலைவன்; எல்லை மீறிய துயரில் மீண்டு மீளவும் வருவான் நாளை! சூரியனைச் சுட்டதாரு சுட்டதைப் பார்த்ததாரு நீ வரும் திசையைப் பார்த்து நாம் தவிக்கின்றோம். யாரை யார்; வென்றார்; கேளு வென்றது தர்மம் ஒன்றே வீரியன் வந்தே வீரம் விளங்கிட வைப்பான் நாளை போரியல் படைத்த வேலுப் பிள்ளையின் பிள்ளை வெல்வான்! இத்தனை காலம் எம்மை இறகினுள் காத்ததெய்வம் எத்தனைதுயருக்குள்ளும் எங்களை மீட்ட செல்வம் பொத்தியே காப்போம்: தமிழா; பொக்கிச…
-
- 13 replies
- 1.6k views
-
-
வெள்ளிக்கிழமை, நவம்பர் 26, 2010 அமெரிக்கா, பிரான்ஸ்போன்ற வல்லரசு நாடுகள் போரிற்கு பின்னர் புலிகளை மறைமுகமாக ஆதரிக்கின்றன என ரம்புக்வெல இன்று காலை செய்தியாளர்கள் மா நாட்டில் கூறினார். நாடு கடந்த அரசை அமெரிக்கா ஆதரித்து|ள்ளது. தமிழ்செல்வன் அவர்களின் நினவு சில அமைத்ததன் ஊடாக பிரான்ஸ் புலிகளை ஆதரிக்கின்றது. இவ்வாறு கூறியுள்ளார் ரம்புக்வெல. இவ்வாறு ஜன நாயக நாடுகள் புலிப்பயங்கரவாதத்தினை ஆதரிப்பது இலங்கைக்கு அச்சுறுத்தல் ஆகும். புலிகள் வெளி நாடுகளில் தமது கட்டமைப்புக்களை விஸ்தரித்து வருகின்றனர். இந்த செயற்பாடுகள் எம் நாட்டிற்கு அச்சுறுத்தல் ஆகும். எனவும் கூறினார் Eelanatham.Net
-
- 0 replies
- 2k views
-
-
குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஐ.நா அனலை நிதிஸ் ச. குமாரன் அநியாயமாக பல்லாயிரம் உயிர்கள் மண்ணோடு மண்ணாக சிதைந்து போக காரணமாக இருந்தவர்களில் முதன்மையானவர் சிறிலங்கா இராணுவத்தின் 58-ஆவது பிரிவின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா. இவருடைய நேரடிக் கட்டளைக்கு அமைவாகவே பல பொதுமக்களும், புலிகளின் அரசியல் தலைவர்களும் வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்தபோது மான்களை வேட்டையாடச் சென்ற வேட்டையாளிகள் போன்று ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொலைசெய்யக் காரணமாக இருந்த இந்த சில்வா தற்போது ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றுகிறார். ஐ.நாவின் நம்பகத்தன்மையையே இது எடுத்துக்காட்டுகிறது. ஐ.நாவின் உறுப்பு நாடுகளாக இருக்கும் 192 நாடுகளில் சிற…
-
- 0 replies
- 602 views
-
-
மதிப்புக்குரிய தமிழீழ மக்களே, தமிழக மக்களே, தமிழ்பேசும் எம்முறவுகளே, தமிழீழத்தின் தேசியக்குரலாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் புலிகளின்குரல் வானொலியின் மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்புக்கள் கார்த்திகை 26-27ம் நாட்களில் உலகம் முழுவதும் ஒலிக்கும் வண்ணம் எமது நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. அந்த வகையில் எமது அதிகாரபூர் இணையத்தளமான www.pulikalinkural.com ஊடாகவும், ஐரோப்பா, ஆசியா, மத்தியகிழக்கு நாடுகளில் செய்கோள் ஊடாகவும் 24மணி நேரமும் நீங்கள் எமது ஒலிபரப்புகளைக் கேட்கலாம், செய்கோள் விபரம்: Name : Tamilarkural Satellite : Hotbird 13 Frequency : 10815 Polarization : Horizontal Symbol Rate : 27500 Fec : 5/6 Broadcast : Digital Free-Ai…
-
- 0 replies
- 781 views
-
-
25.11.1990 அன்று மாங்குளம் சிறிலங்கா படைத்தளத்தை தாக்கியழித்து வீரகாவியமான கரும்புலி லெப்.கேணல் போர்க் உட்பட்ட மாவரர்களின் 20ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் விழிமூடிய இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 9 replies
- 906 views
-
-
-
கருணை மனுக்களுக்கு மத்தியில் கசங்கியே கிடக்கின்றன நான்கு உயிர்கள்! - ஜூனியர் விகடன் சிறை வாழ்க்கை பற்றி சினிமாவில் பார்த்து இருக்கிறோம். சிறை பற்றிய கற்பனைகள் நிறைய நமக்கு உண்டு. ஆனால், உண்மையான சிறை வாழ்க்கைக்கும் நம் கற்பனைக்கும் வெகுதூரம்! சுற்றி வளைக்கப்பட்ட மதில் சுவர்களின் உள்ளே துளித்துளியாகக் கழியும் வாழ்க்கை, பெரிய ரணம். வேலூர் சிறைச்சாலையின் உயர்ந்த சுவர்களுக்கு உள்ளாகக் கிட்டத்தட்ட இருபது வருடங்களை நெருங்கிக்கொண்டு இருக்கின்றனர், ராஜீவ் கொலை வழக்கின் கைதிகள். சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், பேரறிவாளன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், நளினி என அனைவரும் சிறைக்குச் சென்று 19 வருடங்கள் முடிந்துவிட்டன. இதில் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூவரும் தூக்கு தண்டன…
-
- 1 reply
- 628 views
-
-
-
- 1 reply
- 726 views
-
-
உள்நாட்டு அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்கின்றமைக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உதவியை கோரி இருக்கவில்லை என்று நேபாள அரசு அறிவித்து உள்ளது. நேபாளத்தின் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண்கின்றமைக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மத்தியஸ்தத்தை அந்நாட்டு ஜனாதிபதி ராம் பரன் யாதவ் கோரி இருந்தார் இலங்கை வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார். ஆனால் இது அடிப்படை எதுவும் அற்ற கூற்று என்றும் அவ்வாறான கோரிக்கை ஒன்று ஜனாதிபதி ராம் பரன் யாதவ் இனால் எக்கட்டத்திலும் விடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் நேபாள ஜனாதிபதி யாதவ்வின் ஊடக ஆலோசகர் இராஜேந்திர தால் தெரிவித்துள்ளார். http://www.tamilcnn.com/index.php?option=com_conten…
-
- 2 replies
- 1.2k views
-
-
அமைச்சரவையின் புதிய அமைச்சர்களாக 59 பேர் இன்று ஜனாதிபதியின் முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். இவற்றுள் ரவூப் ஹக்கீம், சரத் அமுனுகம, மஹிந்தானந்த அளுத்கம, டிலான் பெரேரா, மேர்வின் சில்வா, லக்ஷ்மன் செனவிரத்ன, மஹிந்த அமரவீர மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அமைச்சர்கள் இம்முறை புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் தி.மு.ஜயரத்ன - பிரதமர் நிமல் சிறிபால டி சில்வா - பெருந்தெருக்கள், நீர்ப்பாசன முகாமைத்துவம் மைத்திரிபால சிறிசேன - சுகாதாரம் சுசில் பிரேமஜயந்த - பெற்றோலியம் ஆறுமுகம் தொண்டமான் - கால்நடை கிராமிய அபிவிருத்தி தினேஷ் குணவர்தன - நீர் வழங்கல், வடிகாலமைப்பு டக்ளஸ் தேவானந்தா - பாரம்பரிய கைத்தொழில் சிறு…
-
- 2 replies
- 936 views
-
-
அர்த்தம் உள்ள அதிகாரப் பரவலாக்கல் மூலம் இலங்கைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்று நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்நாட்டுக்கு வருகை தந்திருக்குமிந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்து உள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய இவர் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்கின்றமைக்கான பேச்சுக்கள் விரைவில் ஆரம்பம் ஆகும் என்று நம்புகின்றார் என்றும் கூறி உள்ளார். தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரங்களை பரவலாக்கம் செய்ய முழு மனதுடன் தயார் என்று மஹிந்த அரசு உறுதியாக தெரிவித்து வருகின்றது என்றும் இவர் சுட்டிக் காட்டினார். இராணுவ மோதல் முட…
-
- 0 replies
- 920 views
-
-
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு முகாம்களை அமைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதால் நாடு இராணுவ மயமாகும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “இன்று எதிர்க்கட்சிகள் தமது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாத நிலை உள்ளது. பாதுகாப்புக்காக ஏன் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனக்கூட கேட்க முடியாது. முன்னாள் இராணுவத் தளபதியை சிறைக்குள் அடைத்துப் பழிவாங்கும் அரசாங்கம் அவருக்கு சார்பாக சுவரொட்டிகளை ஒட்டினால் கூட எதிரியாகத்தான் பார்க்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார். http://www.virakesari.…
-
- 1 reply
- 754 views
-
-
ஆயுதக்கொள்வனவு கொடுப்பனவு விபரங்களை வெளியிடுமாறு ஐ.தே.க. கோரிக்கை யுத்தகாலத்தில் இராணுவ விநியோகங்களுக்காக இன்னும் செலுத்தப்பட வேண்டியுள்ள கொடுப்பனவுகளின் விபரங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி இன்று வலியுறுத்தியுள்ளது. தாமதக் கொடுப்பனவு நிபந்தனையின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்ட இராணுவ விநியோகங்களுக்கான விபரங்களை அரசாங்கம் வெளியிடும் என நம்புகிறோம். மக்களை இனியும் முட்டாளாக்க முயற்சிக்காமல் இதைச் செய்ய வேண்டும் என ஐ.தே.க. பிரதிதித் தலைவர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தில் கூறினார். யுத்தவெற்றியில் இராணுவத்திற்குத் தலைமைதாங்கிய முன்னாள் தளபதி சரத் பொன்சேகா சில ஆயுத கொள்வனவு ஒப்பந்தங்களால் தொந்தரவுக்குள்ளாக்கப்பட்டுள்ளார் எனவும் அவ…
-
- 0 replies
- 442 views
-
-
கடந்த இரு வாரமாக பிபிசி தெற்காசியாவில் சிறீலங்கா பற்றிய செய்தியை படிக்கும் ஒருவருக்கு தெரிவது என்னவென்றால் தமிழ் புலிகள் தம்மிடம் பிடிபட்ட 26 சிறீலங்கா இராணுவத்தை சித்திரவதை சுட்டுக்கொன்று எரித்து புதைத்த புதைகுழி பற்றிய செய்திகள் தான். வடக்கு கிழக்கில் சிறீலங்கா அரசு ஒரு விசாரணையை அமைத்துக் கொண்டு அதற்கு பிபிசி போன்ற ஊடகங்களை அனுமதிக்க மறுத்து வருகின்ற அதேவேளை.. சிறீலங்கா மீதான போர் குற்ற விசாரணைக்கு ஆதரவாக குரல்கள் எழும் நிலையில் பிபிசி தொடர்ச்சியாக இந்த இராணுவ வீரர்கள் பற்றிய செய்தியை வெளியிட்டு வருகிறது. பிபிசி உட்பட பல ஊடகங்கள் நன்கு அறியும். போரின் போது கொல்லப்பட்டு கையளிக்கப்படாத எதிரி இராணுவவீரர்களின் உடலங்கள் புலிகள் இராணுவ மரியாதையோடு எரிப்பதும் புதைப்…
-
- 2 replies
- 1.8k views
-
-
தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இன்று மாலை கொழும்பில் வைத்து சாட்சியம் வழங்கினார். அவர் சாட்சியம் வழங்கிக் கொண்டு சென்றபோது சில விடயங்களை இரகசியமான முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆணைக்குழுவுக்கு தெரிவித்தார். இதை அடுத்து ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் வெளியில் அனுப்பி வைக்கப்பட்டனர். இரகசிய சாட்சியம் வழங்குகின்றமைக்கு முன்பாக அரச அதிபர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்த விடயங்கள் வருமாறு:- நான் 2007ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக கடமையை பொறுப்பு ஏற்றபோது பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. கிழக்கு மாகாணத்தில் பிந்திய நாட்களில் இடம்பெற்ற யுத்தத்தின்போது திருகோணமலை மாவட்ட மக்…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழ் மண்ணின் விடிவிற்காக தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தந்து களமாடி வித்தான மாவீரர்களின் நினைவாய் தமிழர் தாயகமெங்கிலும் மாவீரர் நினைவாலயங்கள் அமைக்கப்பட்டு அவை புனிதமாகப் பேணப்பட்டு வந்தமையும் தமிழ் உறவுகள் உணர்வு பூர்வமாக அந்த நினைவாலயங்களுக்குச் சென்று தமது வணக்கங்களை செலுத்தி வந்ததும் அனைவரும் அறிந்ததே. தாயகத்தில் அண்மையில் ஏற்பட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து உலக நாகரீகங்களுக்கெல்லாம் முரணாக சிங்கள அரசாங்கத்தினால்; எமது மாவீரர் துயிலுமில்லங்கள் சிதைக்கப்பட்டு உருத்தெரியாமல் அழிக்கப்பட்ட செய்தி உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை மட்டுமன்றி மனித நேயத்தை மதிக்கின்ற அனைவரையும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளன. மாவீரர்கள் மயானங்களைச் சிதைப்பதன் மூலமும் ஆவணங…
-
- 1 reply
- 1.3k views
-
-
மன்னாரில் அடை மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு வீரகேசரி இணையம் 11/25/2010 6:08:56 PM மன்னாரில் நேற்று புதன் கிழமை மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தமையினால் மன்னாரின் பல கிராமங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதோடு மக்கள் இன்று இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். சாந்திபுரம், எமிழ்நகர், நூறுவீட்டுத்திட்டம், எழுத்தூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மன்னார் நகரப்பகுதியில் உள்ள பல வீடுகளும் மழை நீரில் முழ்கியுள்ளது. இந்நிலையில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையும் மழை நீரில் மூழ்கியுள்ளது. பாடசாலையினைச் சூழ மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பாடசாலை மாணவர்கள் பெரு…
-
- 0 replies
- 458 views
-
-
புத்தரின் புனித தந்தத்தை தமிழ் மக்கள் வணங்குகின்றனரா? – நோர்வேயின் சந்தேகம் நவ 25, 2010 கண்டி தலதா மாளிகையில் உள்ள புத்தரின் புனித தந்தத்தை அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களும், வெளிநாட்டவர்களும் வணங்குகின்றனரா என்ற கேள்வியை சிறீலங்காவுக்கான நோர்வே தூதுவர் திருமதி ஹில்டே ஹரால்ஸ்ரட் எழுப்பியுள்ளார். நேற்று (24) தலதா மாளிகைக்கு பயணம் மேற்கொண்ட தூதுவர் தலதா மாளிகையின் பிரதம பௌத்த துறவியிடம் இந்த கேள்வியை எழுப்பியிருந்தார். எனினும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் உட்பட பெருமளவான மக்கள் அங்கு தினமும் வருவதாகவும், அவர்கள் புனிததந்தத்தை வணக்குவதாகவும் மதகுரு நிலமே பிரதீப் டெல பண்டாரா தெரிவித்துள்ளார்.…
-
- 0 replies
- 674 views
-
-
Nov 25, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / மாவீரர் தினத்தை கொண்டாடுமாறு யாழில் துண்டுப்பிரசுரம் நாளை மறுதினம் (27) நடைபெறும் மாவீரர் தினத்தை உணர்வுபூர்வமாக கொண்டாடுமாறும், தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி உயிர்நீத்த விடுதலைப்புலிகளுக்கு அஞ்சலி செலுத்துமாறு தெரிவித்தும், இன்று (25) யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தினுள் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன. உந்துருளியில் வந்தவர்கள் இந்த துண்டுப்பிரசுரங்களை அவசரமாக விநியோகித்துவிட்டு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறீலங்கா இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தினுள் இந்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது அங்கு பரபரப்பை ஏற்ப…
-
- 0 replies
- 773 views
-
-
ஒரு போதும் என்னை முஸ்லிமாக உணர்ந்ததில்லை http://www.ponguthamil.com/mugangal-nirangal/mugangalnirangalcontent.asp?sectionid=3&contentid={1F2161FE-F8D7-4AAA-9252-2C5786BD87D4}
-
- 0 replies
- 1.2k views
-