ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
திங்கட்கிழமை, 15, நவம்பர் 2010 (8:58 IST) இலங்கை கடற்படையினர் அட்டூழியம் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 250 விசைப்படகுகளில் கடலுக்கு சென்ற மீனவர்கள் மீன்பிடித்துவிட்டு நேற்று கரைக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது 5 கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் 25 பேர் ஜெகதாப்பட்டினம் மீனவர்களை விரட்டினர். இதை பார்த்ததும் மீனவர்கள் படகை வேகமாக ஓட்டிக் கொண்டு கரைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களில் 240 படகுகளில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு பாதுகாப்பாக திரும்பி வந்து விட்டனர். கரைக்கு திரும்பி வந்து கொண்டு இருந்த அங்கப்பன், சுந்தரமூர்த்தி, சம்பந்தமூர்த்தி, சக்திவேல், விஜயன், இளையராஜா, கந்தன், இள…
-
- 0 replies
- 441 views
-
-
ஜே.வீ.பீ நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் மீது யாழ்ப்பாணத்தில் கடுமையான தாக்குதல் ‐ பத்மினி – மற்றும் சிதம்பரநாதன் மயிரிழையில் தப்பித்தனர்‐ GTN செய்தியாளர்‐ ஜே.வீ.பீ நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்கள் மீது யாழ்ப்பாணத்தில் இனம்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர் என ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் மற்றும் சிரேஸ்ஸ்ட விரிவுரையாளர் சிதம்பரநாதன் ஆகியோர் மயிரிழையில் தப்பியுள்ளனர்:‐ இன்று இரவு கந்தர் மடம் பகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதனின் அலுவலகத்தில் ஜே.வீ.பியின் முக்கியஸ்த்தர்கள் உரையாடிக்கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஜீரீஎன் …
-
- 11 replies
- 1.2k views
-
-
…………….வன்னியிலிருந்து ஆதவன் இது கார்த்திகை மாதம். நம் இல்லங்கள் தோறும் சோகத்தின் வெளிச்சம். அப்படியும் ஒரு காலம் இருந்தது என்பதை எவரும் மறுக்க முடியாதுதான். ஆனால் எல்லாமும் முடிந்துவிட்டது. சரிகளுடனும் பிழைகளுடன் முன்று தசாப்த கால அரசியல் வாழ்வு முற்றுப் பெற்றுவிட்டது. அது பல்லாயிரக் கணக்கான மக்களின், போராளிகளின் தியாகத்தால் உருப்பெற்ற ஒன்று. வெறும் வாய்ச் சொல் வீரத்தாலோ, விதண்டா வாதங்களாலோ நிலைபெற்ற ஒன்றல்ல. எனவே இனி அதனை நாம் காயப்படுத்தவும் தேவையில்லை. கொச்சைப்படுத்தவும் தேவையில்லை. சமீப நாட்களாக நடந்தேறிக் கொண்டிருக்கும் சில நிகழ்வுகளை பார்த்தால் எல்லாவற்றையும் தூக்கி வீசிப்போட்டு போனால் என்ன என்று கூட யோசிப்பதுண்டு. ஒரு புறம், உணவுக்காவும், தங்கள் மானம் மறை…
-
- 5 replies
- 766 views
-
-
பிரித்தானியா உல்லாசப்பயணிகளைக் கவர சிறீலங்கா திட்டம் நவ 14, 2010 மேற்குலக நாடுகளை சேர்ந்த உல்லாசப்பயணிகளை கவர்ந்திழுக்கும் திட்டம் ஒன்றை கடந்த வாரம் சிறீலங்கா அரசு பிரித்தானியாவில் மேற்கொண்டிருந்தது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றால் சிறீலங்கா அரசு அனைத்துலக சமூகத்தினால் புறக்கணிப்புக்கு உள்ளாகும் நிலையை அடைந்துள்ளது. இதனால் அங்கு செல்லும் உல்லாசப்பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் மேற்குலக நாட்டவரை கவரும் நடவடிக்கைகளில் சிறீலங்கா அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக பிரித்தானியா மக்களை வரவ…
-
- 2 replies
- 519 views
-
-
இறுதி யுத்தத்தின் போது காணமல் போனவர்களை கண்டு பிடித்து தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட சிலரை கிளிநொச்சியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒரு வாரம் காலமாக இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர்களை பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவல் அடிப்படையில் கைது செய்துள்ளனர். எனினும் இது வரைக்கு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.http://ulavannews.blogspot.com/2010/11/blog-post_14.html
-
- 0 replies
- 510 views
-
-
யாழில் சிங்களவருக்கு கொட்டில்கள் அமைத்துக் கொடுக்கும் சிப்பாய்கள்! ஞாயிற்றுக்கிழமை, 14 நவம்பர் 2010 23:14 யாழ். நாவற்குழி வீடமைப்புத் திட்டத்தில் கடந்த வெள்ளி, சனி இரவுகளில் ஒரு தொகை சிங்கள குடும்பங்கள் இராணுவ பாதுகாப்புடன் குடியேற்றப்பட்டுள்ளன. இதற்கு முன் ஆரம்பத்தில் சுமார் 30 குடும்பங்கள் வரை குடியேற்றப்பட்டு இருந்தன. தற்போது மொத்தமாக 55 குடும்பங்கள் வரை இங்கு வசிக்கின்றன. இங்கு இக்குடும்பங்களுக்கு தேவையான கொட்டில்களை இராணுவ சிப்பாய்கள் அமைத்து கொடுத்துள்ளனர். வீடமைப்புத் திட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதி இச்சிங்கள குடும்பங்கள் வசம் தற்போது உள்ளது. tamilcnn
-
- 3 replies
- 841 views
-
-
சிறீலங்கா வர்த்தகர்களுக்கு மண்ணை அனுப்பி ஏமாற்றியது சீன நிறுவனம் நவ 14, 2010 சிறீலங்காவில் உள்ள உலோகங்களை ஒட்டும் நிறுவனங்கள் 10 மில்லியன் ரூபாய்களுக்கு கொள்முதல் செய்த கல்சியம் கார்பைட் எனப்படும் இராசாயணப் பொருளுக்குப் பதிலாக மண்ணையும், கற்களையும் அனுப்பியுள்ளது சீன நிறுவனம். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கொழும்பில் உள்ள உலோகக் கைத்தொழிலை மேற்கொண்டுவரும் முக்கிய ஐந்து நிறுவனங்கள் 10 மில்லியன் ரூபாய்களுக்கு கல்சியம் கார்பைட் எனப்படும் இராசாயணப் பொருளை சீன நிறுவனம் ஒன்றிடம் கொள்முதல் செய்வதற்கு பணத்தை செலுத்தியிருந்தன. இதனைத் தொடர்ந்து கொழும்பு துறைமுகத்திற்கு ஐந்து கொள்கலன்களில் பொருட்கள் அனுப்பப்பட்டன. அவற்றில் இரண்டு கொள்கலன்களை கடந்த வெள்ளிக்…
-
- 1 reply
- 838 views
-
-
சட்டத்தை சரியான முறையில் அமுல்படுத்துவது அவசியம் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-14 07:27:35| யாழ்ப்பாணம்] யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தங்கி யிருந்த சிங்கள மக்கள் இப்போது நாவற் குழியில் குடியேறியுள்ளனர். நாவற்குழியிலுள்ள அரச காணியில் அவர்கள் குடியேறியதாக கூறப்படுகின்றது. நாவற்குழியில் அரச காணி இருப்பதாக அவர்கள் எப்படி அறிந்தார்கள். அந்த இடம் எப் படி அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இந்தக் கேள் விகளைக் கேட்பது நமக்கு அழகல்ல என்பதால் அதனை அப்படியே விட்டுவிடலாம். ஆனால் சிங்கள மக்கள் குடியேறிய நாவற் குழி அரச காணியில் ஏற்கெனவே தமிழ் மக்கள் குடியிருந்துள்ளனர்.இருந்தும் தென்மராட்சியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அவர்கள் இடம்பெயரவேண்டிய தாயிற்று. அவ்வாறு இடம்பெயர…
-
- 1 reply
- 578 views
-
-
Nov 14 தமிழரின் உறுதிக் காணிகளை அரசு கடந்தவாரம் திட்டமிட்டு சிங்கள மக்களுக்கு விநியோகம் செய்தது வருகின்றது. Posted in : eelam news | Posted by : Admin Permanent link | Add comments (0) திருக்கோணமலையில் புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள தமிழரின் உறுதிக் காணிகளை அரசு கடந்தவாரம் திட்டமிட்டு சிங்கள மக்களுக்கு விநியோகம் செய்தது வருகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:‐ கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட ஒருவரின் திருக்கோணமலை புல்மோட்டை பிரதேசத்தில் உள்ள உறுதிக் காணியை அரசு திட்டமிட்டு சிங்களமக்களுக்கு வழங்கி வருகின்றது. இதை தடுக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள எதுவும் வெற்றியள…
-
- 0 replies
- 598 views
-
-
நாவற்குழி அரச காணிகளை கைப்பற்றும் யாழ்.மக்கள் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-11-14 08:26:30| யாழ்ப்பாணம்] நாவற்குழியில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை யாழ்ப்பாண மக்களும் நேற்றுக் கைப்பற்றிக் கொண்டனர். நாவற்குழியில் உள்ள அரச காணிகளில் சுமார் 70 சிங்கள குடும்பங்கள் கடந்த 10 ஆம் திகதி இரவோடு இரவாக குடியேறினர். இது பல்வேறு மட்டத்திலும் பிரச்சினைகளைத் தோற்றுவித்தது. இந் நிலையில் நேற்று அப்பகுதிக்குச் சென்ற சாவகச்சேரி மற்றும் குருநகர் வாசிகள் எஞ்சிய நிலப்பரப்புக்களையும் கைப்பற்றினர். இதனால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. எனினும் சிங்கள மக்கள் பிடித்த நிலப் பரப்புக்களை தவிர மற்றைய நிலங்களை யாழ். வாசிகள் பிடித்துக் கொண்டனர்.…
-
- 0 replies
- 743 views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இரண்டாக வெடித்து விட்டது என்று தகவல்கள் கசிந்துள்ளன. மஹிந்தர்ஆதரவாளர்கள் அணி, மஹிந்தர் அதிருப்தியாளர்கள் அணி என்று இரு பிரிவுகள் தோற்றம் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஸ எம்.பி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மஹிந்தர் அதிருப்தியாளர் அணியின் பிதாமகர்கள் என்று கூறப்படுகின்றனர். ஐ.தே.கவில் இருந்து ஆளும் கூட்டமைப்புக்கு தாவியவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை கொடுக்க மஹிந்தர் தீர்மானம் எடுத்தமையை அடுத்து கூட்டமைப்புக்குள் பூசல் ஏற்பட்டு இருந்தது. தற்போது ம…
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறையில் வாடும் போராளிகளை செஞ்சிலுவைச்சங்கம் பார்வையிட அனுமதி வழங்க வேண்டும் :- இலங்கைக்கு கனடா வலியுறுத்தல். [sunday, 2010-11-14 08:15:47] சிறையில் வாடும் போராளிகளை செஞ்சிலுவைச்சங்கம் பார்வையிட அனுமதி வழங்க வேண்டும் என்று இலங்கை அரசை கனடா வலியுறுத்தியுள்ளது. இலங்கை தொடர்பான கனடா அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி கனட ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுபினர் புருஸ் ஸ்ரான்ரொன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்ச பக்ச, இனங்களுக்கிடையே நல்லுணர்வை ஏற்படுத்தல், மீள்கட்டுமானம் என்பவற்றை விரைந்து முன்னெடுக்கவேண்டிய நிலையில் உள்ளார். மொழி, மதம் அல்லது இனவேறுபாட்டுக்கப்பால் சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உரிமைகளை, சகல …
-
- 3 replies
- 561 views
-
-
முப்படைத் தலைமையகங்களை கொழும்புக்கு வெளியில் மாற்ற நடவடிக்கை நவ 14, 2010 சிறீலங்காவின் முப்படையினரும் தற்போது பயன்படுத்திவரும் படைத்தலைமையகங்களை கொழும்பு நகருக்கு வெளியில் மாற்றுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கைக்காக பத்தரமுல்ல பகுதியில் உள்ள அக்குரகொட பகுதியில் 48 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரும் தளங்களை அமைக்கும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இராணுவம், கடற்படை, வான்படை ஆகியவற்றின் தலைமையகங்களே கொழும்பு நகருக்கு வெளியில் மாற்றப்படவுள்ளன. தற்போது இந்த தளங்கள் அமைந்துள்ள இடங்களில் 500 மில்லியன் டொலர் செலவில் உல்லாசப்பயணத்துறை மையம் அமைக்கப்படவுள்ளது. மேலும் 100 மில்லியன் டொலர்கள் செலவில் ஆடம்பர கேளிக்கை விடுதி ஒன்றும…
-
- 1 reply
- 504 views
-
-
Nov 14, 2010 / பகுதி: செய்தி / கொழும்பு வரும் தமிழ் வர்த்தகர்கள் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்படலாம்? யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வருகின்ற வர்த்தகர்கள் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான வர்த்தகர்களின் தொடர்புகள் குறித்த விசாரணைகள் இடம்பெறும் நிலையிலேயே இந்த அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொழும்பு வருகின்ற வர்த்தகர்கள், பொலிஸில் தம்மை பதிவு செய்து அறிக்கை படுத்த வேண்டும் என குற்றப் புலனாய்வுத் துறையினர் கோரியுள்ளனர். இதற்கிடையில் - விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கினார் என்ற குற்றச் சாட்டின் கீழ் யாழ்ப்பாணத்தில் முக்கிய வர்த்தகர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் துற…
-
- 0 replies
- 839 views
-
-
ஞாயிற்றுகிழமை, நவம்பர் 14, 2010 தென் இலங்கை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் முன்னாள் பெண்போராளிகள் ஒவ்வொரு போயா தினமும் கட்டாயம் விகாரைக்கு வரவேண்டும் என அந்த பகுதி பிக்கு சட்டம் போட்டுள்ளார். இதன்படி அந்த பெண்கள் போயா தினத்திற்கு விகாரைக்கு அழைத்து செல்ல பிக்கு ஒரு வாகனத்தில் சில சிங்கல இளைஞர்களை அனுப்புவாராம். வராதவர்களுக்கு சித்திரவதை செய்யப்பட்டு பலாத்காரமாக அழைத்து செல்லப்படுவர். விகாரைக்கு செல்லும்போதும் விகாரையில் வழிபடும் போதும் சிங்கல இளைஞர்கள், பிக்குமாரின் சில்மிஷங்கள் வேறு. இவ்வாறு கொழும்பு செய்திகள் கூறுகின்றன. Ti-Star எப்ற ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களுக்கே இந்த நிலைமை. முன்னாள் பெண்போராளிகளை வேலைக்கமர்த்தியிருக்கும் ஆடைத்தொழிற்சா…
-
- 1 reply
- 538 views
-
-
சிறீலங்காவுக்கு 520 மில்லியன் டொலர் தொழில்நுட்ப உதவிகள்: ஈரான் நவ 14, 2010 சிறீலங்காவுக்கு 520 மில்லியன் டொலர்கள் பெறுமதியான தொழில்நுட்ப மற்றும் பொறியியல் துறை உதவிகளை வழங்கவுள்ளதாக ஈரான் வர்த்தகத்துறை அமைச்சர் மெதி ஹசான்பாரி தெரிவித்துள்ளார். சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரீஸ் உடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களைத் தொடர்ந்தே இந்த உதவிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், சிறீலங்காவில் பொருளாதார அபிவிருத்திகளை ஏற்படுத்த தாம் பாடுபடப்போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாக த தெகிரான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. sangathie
-
- 1 reply
- 398 views
-
-
Nov 14, 2010 / பகுதி: செய்தி / நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் மாயம்! யாழ். வடமராட்சியில் உள்ள நெல்லியடி முருகையன் கோயில் மண்டபத்தில் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் மாலை நேர அமர்வு இன்று இடம்பெற்றபோது ஆணைக் குழுவின் தலைவர் சுமார் திடீரென்று வெளியில் சென்று மாயமாக மறைந்து போனார். இவ்வமர்வு மதியம் 2.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணி வரை இடம்பெற்றது. ஆனால் ஆணைக்குழுவின் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சி.ஆர்.டி.சில்வா மதியம் 2.25 மணி அளவில் வெளியே எழுந்து சென்றவர்தான். அமர்வு முடிவடையும் வரை திரும்பி வரவே இல்லை. இதே நேரம் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதே தூங்கி வழிந்து கொண்டிருந்தமையையும் காண முடிந்தது. pathivu
-
- 1 reply
- 731 views
-
-
இலங்கையின் இன நெருக்கடி தொடர்பில் இந்திரா காந்தியின் முதலாவது தூதுவராக வெளிவிவகார அமைச்சர் பி.வி.நரசிம்மராவ் 1983 ஜூலையில் அனுப்பப்பட்ட போதிலும், இந்தியாவின் நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கிலான அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பவராக இந்தியாவின் மூத்த இராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதியே செயற்பட்டார். 83 ஆடிக்கலவரத்துக்குப் பின்னரான இந்திய - இலங்கை அரசியல் நகர்வுகளைப் பொறுத்தவரையில் அதில் பார்த்தசாரதியின் பங்கு பிரதானமானதாக இருந்துள்ளது. பார்த்தசாரதியின் அரசியல் நகர்வுகளைப் பொறுத்தவரையில் அது இரண்டு வகையான இலக்குகளை அடிப்படையாகக் கொண்வையாக அமைந்திருந்தது. ஒன்று - இந்தியாவின் பிராந்திய ரீதியான நலன்களைப் பாதுகாத்தல். அதாவது இலங்கையைத் தளமாகப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிர…
-
- 1 reply
- 998 views
-
-
கே.கே.எஸ்.வீதி அகலிக்கும் பணிகள் பஸில் இன்று ஆரம்பித்து வைப்பார் [14 நவம்பர் 2010, ஞாயிற்றுக்கிழமை 8:05 மு.ப இலங்கை] யாழ்ப்பாணம்,நவ.14 சீன அரசின் உதவியுடன் காங் கேசன்துறை வீதியை அகல மாக்கும் பணியை இன்று முற் பகல் 11 மணிக்கு பொருளா தார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ வைபவ ரீதி யாக ஆரம்பித்து வைக்கிறார். தந்தை செல்வா சதுக்கத்துக் குச் சமீபமாக பண்ணை வீதி யும் காங்கேசன் துறை வீதியும் இணையும் சந்தியில் அமைக் கப்பட்டுள்ள நினைவுக்கல்லை பஸில் ராஜபக்ஷ திறந்து வைத்து வீதி அகலிக்கும் பணியை ஆரம் பித்து வைக்க விருக்கிறார். இதேவேளை, ஏ9 பாதையில் புத்தூர் சந்தியில் இருந்து மீசாலை நோக்கிச் செல்லும் வீதியை அக லமாக்கும் பணியையும் பஸில் ராஜபக்ஷ ஆரம்பித்து வைப்பார். …
-
- 3 replies
- 606 views
-
-
சிங்களத் தலைவர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்கள் நாட்டின் உயர்ந்த நிறுவனமான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி எக்காரணம் கொண்டும் வடக்கு, கிழக்கை இணைக்க முடியாது, பிரிக்கப்பட்ட வடக்கு. கிழக்கு மாகாணங்களை அடிப்படையாக வைத்தே எவ்வாறான தீர்வுத் திட்டமும் முன்னெடுக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். கெஹெலிய ரம்புக்வெலவும் ஏனைய ஆளுங்கட்சி உறுப்பினர்களும் நீதிமன்றத் தீர்ப்பை எப்போதும் மீறி நடவாத சனநாயக வாதிகளாகவே நடந்து வருபவர்கள் என்பதற்கு இதற்கு முன் எந்தச் சான்றுகளும் இல்லை. இருப்பினும் தங்கள் அபிலாசைகளுக்கு நீதிமன்றத்தீர்ப்பை மீறமுடியாது எனக்காரணம் காட்டியிருக்க…
-
- 3 replies
- 828 views
-
-
ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்புக்கு வைபவத்துக்கு 11,000 பேர் பாதுகாப்பு! ஞாயிற்றுக்கிழமை, 14 நவம்பர் 2010 00:31 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்துக்கு பாதுகாப்பு வழங்க 11,000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இராணுவத்தினரையும் கொண்டதாக மிகவும் பலம் வாய்ந்த அணி ஒன்று எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறுகின்ற இவ்வைபவத்துக்கு பாதுகாப்பு வழங்க உள்ளது என்று பொலிஸார் தெரிவித்து உள்ளனர். பதவியேற்பு வைபவத்தின்போது மழை, வெள்ளம் ஆகியவற்றால் ஏற்படக் கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்கும் வகையில் வேண்டிய முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. tamilcnn.com
-
- 0 replies
- 382 views
-
-
யாழ்ப்பாணத்தில் இன்று நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் அளிக்கப்பட்ட வாக்குமூலத்தில் கருணா குழு தொடர்பான வாக்குமூலங்களும் பல அளிக்கப்பட்டிருந்தன. கருணா குழுவினரால் கொழும்பிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள் தொடர்பாக அதிலிருந்து தப்பியவர்களும் மற்றும் அவர்களது குடும்ப ,உறவினர்களும் பல்வேறு வாக்குமூலங்களை அளித்திருந்தனர். மொனறாகலை வெள்ளவாயாவைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட சிவஞானம் செல்வதீபன் என்ற யாழ் தினக்குரல் பத்திரிகையைச் சேர்ந்த ஊடகவிலாளர் ஒருவரும் வாக்குமூலம் அளித்திருந்தார். கருணாவின் இனியபாரதி குழுவினரால் 2007ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடத்தப்பட்ட தாங்கள் வெலிகந்தை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும பின்னர…
-
- 1 reply
- 906 views
-
-
ஞாயிற்றுகிழமை, நவம்பர் 14, 2010 யுத்தம் முடிவுக்கு வந்த காலப்பகுதியில் அரச படையினரிடம் சரணடைந்தவர்களுக்கு தாங்கள் எதுவும் செய்யவில்லையென அரசும் படையினரும் கூறுவது உண்மையென்றால் அவர்களிடம் சரணடைந்த எமது பிள்ளைகள் எங்கே? அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை அரசு உடனடியாகக் கூறவேண்டும். இதற்குரிய பதிலை நல்லிணக்க ஆணைக்குழு பெற்றுத் தர வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நேற்று சனிக்கிழமை பிற்பகல் வடமராட்சி நெல்லியடி முருகன் கோவிலில் சாட்சியங்களைப் பதிவு செய்த போது அங்கு சாட்சியமளித்த காணாமல் போயுள்ள கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவனொருவரின் தந்தை இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். தென்மராட்சி பளையைச் சேர்ந்த கணபதிப…
-
- 0 replies
- 377 views
-
-
முள்ளிவாய்க்காலில் நடந்த கொடுமை ! கண்களால் காணாவிட்டாலும், உங்கள் உறவினர் குறித்தாவது சாட்சியங்களை கொடுக்க முன்வாருங்கள். ஜ.நா நிபுணர்கள் குழு தற்போது உங்களிடம் இருந்து சாட்சியங்களை எதிர்பார்த்து காத்து நிற்கிறது. எனவே உங்கள் குடும்பத்தவரை இழந்தவரா, இல்லை யாராவது காணாமல் போயுள்ளனரா, இல்லை நீங்கள் நேரடியாகவே பாதிக்கப்பட்டிருந்தாலும், உடனே பிரித்தானிய தமிழர் பேரவையை அணுகவும். உங்கள் சாட்சிகள் ஒவ்வொன்றும் பெறுமதியானவை. நாளை இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் திறன் ஒவ்வொரு தமிழனுக்கும் தான் உண்டு, எனவே நேரத்தை வீண் விரையம் செய்யாமல் உடனே உங்கள் சாட்சியங்களை கொடுங்கள். நீங்கள் கொடுக்கும் சாட்சியங்கள் மிக மிகப் பத்திரமாகவும், ரகசியமாகவும் பேணப்படும். பெயரைக் க…
-
- 4 replies
- 947 views
-
-
புகைப்படங்களை சாட்சியமாக ஏற்பதா ஐ.நா நிபுணர்கள் குழுவே தீர்மானிக்க வேண்டும் : ஐ.நா பிரதி பேச்சாளர் வீரகேசரி இணையம் 11/14/2010 11:04:13 AM இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பெரும் எண்ணிக்கையிலான கொலைகள் நடைபெற்றுள்ளமையை பெருமளவிலான புதிய புகைப்படங்கள் வெளிப்படுத்துவதாக இன்னர் சிட்டி பிரஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பதில் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம் கேள்வியொன்றையும் இன்னர் சிட்டி பிரஸ் கேட்டுள்ளது. இதனை சாட்சியமாகக் கொண்டு செயலாளர் நாயகத்தின் மூவரடங்கிய நிபுணர்கள் குழு இலங்கையின் பொறுப்புக் கூறும் தன்மை குறித்து பரிசீலிக்க முடியுமா அல்லது பரிசீலிக்கப்படுமா என்பதே அந்தக் கேள்வி…
-
- 0 replies
- 546 views
-