ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
வீரத்தின் விலாசங்களாக வெற்றியின் அடையாளங்களாக ஒளிர்ந்தவர்களின் வழியில் வந்தவள்தான் இவள். பெண்ணின விடுதலையின் அடையாளச் சின்னங்களாய் அணிவகுத்த ஆயிரமாயிரம் தங்கைகளின் அக்காக்களின் வழியில் இவளும் ஒரு பொழுது ஊரிலிருந்து புறப்பட்டுச் சென்றாள். அடக்குமுறைகளினாலும் அடக்குமுறையாளர்களினாலும் அதிகம் வலிகள் சுமந்த கிழக்கு மாகாணத்திலிருந்து தன்னினவிடுதலைக்காகச் சென்றவள் இன்று மறதிகளுடனும் மனநிலைக் குழப்பத்துடனும் ஊனமாகித் திரும்பியிருக்கிறாள் ஊருக்கு. அக்காக்கள் இருவருக்குப் பின்னால் பிறந்த குடும்பத்தின் கடைக்குட்டி காணாமல் போன பொழுது அழுதவர்கள் அவள் திரும்பி வரும்வரை இவள் நினைவோடிருந்தார்கள். இன்று இவளோ நினைவுகளில் கூட பல விடயங்களை புரிந்து கொள்ளச் சிரமப்படுகிறாள். தலையில் ஏற்…
-
- 20 replies
- 3.4k views
-
-
நம்பிக்கைகள் சிதைவுற்று நாளை மீதான எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் ஆயிரமாயிரம் பேருக்குள் இவனும் ஒருவன். நினைவறிந்த நாள் முதல் போரின் துயரமும் அழிவுகளும் இவனது மனதில் ஆளமான வடுக்களாய் பதிந்தவை. தானாக எல்லாவற்றையும் புரியத்தொடங்கிய பொழுதொன்றில் காணாமல் போனான். காலங்கள் சில கழிந்த பின்னர் போராளியாகி ஊருக்குள் வந்தான். நாளைய சந்ததி வாழ்வதற்காக தங்களை அர்ப்பணித்த பல்லாயிரம் பேரின் கனவுகளைச் சுமந்து கொண்டு களங்களில் காடுகளில் காப்பரண்களிலென இவனது காலம் இலட்சியக்கனவோடே கழிந்தது. களமொன்றில் காயமடைந்து இடுப்பின் கீழ் இயங்காது போனபோது கூட தான் இழந்தது பெரிதல்லவென்றே கர்வத்தோடிருந்தான். சுழல்சக்கர நாற்காலிக்குள் தனது இயல்பு ஒடுங்கிப்போனதில் கூட எதுவித கவலையும் இவனை…
-
- 2 replies
- 892 views
-
-
இன்னும் வாழ்வதில் நம்பிக்கையற்றுப்போன குடும்பத்தின் எஞ்சிய உருப்படி இவன்தான். கடுமையான எறிகணைத் தாக்குதலொன்றில் இந்த 19வயது இளைஞனும் இவனது குடும்பத்து உறுப்பினர்கள் யாவரும் காயமடைந்து போனார்கள். இனி வாழ்வில்லை ஒன்றாய் யாவரும் பிணமாகப் போகிறோம் என்ற நினைவில் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். இவர்களது செல்லத்தம்பி வீட்டின் கடைக்குட்டி குற்றுயிராய் துடித்ததை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாமல் அவனுடன் போய்விடும் நினைப்போடு இருந்தவர்களை மருத்தவத்துக்காக சேர்த்ததில் கடைக்குட்டி நினைவு தெளிந்து எழுந்தான். அத்தோடு வவுனியாவுக்குள் கொண்டு வரப்பட்டார்கள். கையையிழந்த தந்தை கையில் காயங்களுடன் அண்ணன் வயிற்றில் காயத்தோடு தங்கை கையிலும் காலிலும் காயத்தோடு தம்பி உடலில் எறிகணைச் …
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழ். வலிகாமத்தில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் 22.10.1995 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் குட்டிமணியின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். விடியலுக்காய் வித்தாகிய இந்த வீரமறவனுக்கு வீரவணக்கங்கள்
-
- 6 replies
- 1.7k views
-
-
இலங்கை கிழக்குப் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் 600 போலீஸார் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று அமைச்சரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதியுமான கருணா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புலிகளின் உளவுப்பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானின் உத்தரவின் பேரில், நியூட்டன் என்பவரே 600 போலீஸார் கொல்லப்பட்ட சம்பவத்தை மேற்கொண்டார் என்றும், அதனால் தான் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கருணா கூறியிருப்பதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஆனாலும், அச்சம்பவம் நடைபெற்ற போது கிழக்குப் பகுதிக்கான புலிகளின் தளபதியாக இருந்தவர் கருணா தான் என்பதால் அச்சம்பவத்துக்கு அவரே பொறுப்பு என்று கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையான் என்னும…
-
- 1 reply
- 1.1k views
-
-
பான்கிமூனின் போர்குற்றத்திற்கான நிபுணர் குழு பாதிக்கப்பட்டோர் மற்றும் ஆர்வலர்களிடம் இருந்து அறிக்கைகளைக்கோருகின்றது. 10 பக்கத்திற்கு உட்பட்டதாக அறிக்கை அனுப்புவோர்களது தொடர்பு விபரத்துடன் அனுப்பவேண்டும். இந்த அறிக்கைகையினை panelofexpertsregistry@un.org. எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அனுப்புவோர்களது.விபரம் பாதுகாப்பாக பேணப்படும் என கூறியுள்ளார் ஐக்கிய நாடுகளின் பேச்சாளர் ஈழ நாதம் UN panel of experts call for submissions Ban Ki-moon with President Mahinda Rajapaksa The UN panel of experts advising the Secretary General on alleged violations of international human rights and humanitarian law during the final stages of the conflic…
-
- 7 replies
- 1.3k views
-
-
கடந்த வாரம் ஈழ மண்ணிற்கு சென்று வந்த ஒருவர் தந்த 3 படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. முதல் 2 படங்களும் சிறீலங்கா அரசாங்கத்தின் ”வடக்கின் வசந்தம்” எனும் பெயரில் எமது பாரம்பரிய ஊர்களின் அடையாளங்களும், பெயர்களும் மறைந்து கொண்டிருப்பதற்கு சாட்சியாக அமைகின்றது. கீரிமலையிலிருந்து புகழ்பெற்ற ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ள “பொன்னாலை“ நகரத்திற்கு செல்வதற்கான பழைய பெயர் பலகையையும், பெயர் மாற்றம் பெற்ற புதிய பெயர் பலகையையும் (தம்பபொல பட்டுன) படங்களில் காண்கிறீர்கள். இதை கண்டு கொள்வார் யாரோ? தமிழ்மக்களின் ஆமோக ஆதரவுடன் பதவிக்கு வந்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு எம்பி மார்களா? அல்லது அரச சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் தமிழ் அமைச்சர்களே இந்த அநியாயத்தையும் தட்டிக் கேட்க முடியாம…
-
- 0 replies
- 2.2k views
-
-
நகைகளை ஒப்படைக்க வேண்டும் - மனோகணேசன் இலங்கை அரசு, ராணுவத்தினரால் போரின் இறுதிக்கட்டங்களில் கைப்பற்றப்பட்ட நகைகளை, மீண்டும் நகைகளின் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறினார். இலங்கை ராணுவத்தினர், போரின் இறுதி மாதங்களில், வடக்கே பல்வேறு இடங்களில் சுமார் 49 கோடி இலங்கை ருபாய் மதிப்புள்ள தங்க நகைகளை சேகரித்திருப்பதாகவும், இந்த நகைகள் சட்ட ரீதியாக இலங்கை மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும், இலங்கை நாடாளுமன்றத்தில் அரசாங்கத் தலைமைக் கொறடா, தினேஷ் குணவர்த்தன கூறியதாக செய்திகள் கூறின. இது குறித்து தமிழோசைக்கு பேட்டியளித்த மனோகணேசன், இந்த நகைகள் தமிழீழ வங்கி என்ற பெயரில் விடுதலைப்புலிகள் நடத்த…
-
- 0 replies
- 1k views
-
-
சிங்களவர்கள் எதிரான கருத்துக்களை எழுத முன்பு உங்களின் கருத்துக்களைப் பகிருங்கள். A one-eyed view of Sri Lanka A Western journalist visits the Sudanese capital Khartoum to interview President Omar al-Bashir. The reporter, after calling him "controversial" due to his "bloody" record in fighting terrorism, gives the leader a platform to explain his views and tactics. The only other voice featured in the piece is a commentator who backs the government wholeheartedly. The fact that Bashir has been charged in 2010 by the International Criminal Court for genocide in Darfur is glossed over in the story. This piece would be rightly called propaganda, the lack of enq…
-
- 0 replies
- 950 views
-
-
Oct 22, 2010 / பகுதி: செய்தி / யாழில் மது அருந்துபவர்களின் தொகை அதிகரித்துள்ளது - மக்கள் விசனம் யாழ் நகரப் பகுதியில் மது அருந்துபவர்களின் தொகை அதிகரித்துள்ளதால் மக்கள் பாரிய இடர்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரப்பகுதியில் மாலை நேரங்களில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள். பொது இடங்களில் மது அருந்திவிட்டு பின்னர் மயக்கத்தில் சத்தமிடுவதும் அநாகரிகமான முறையில் நடந்துகொள்வதும் குறிப்பிட்ட பகுதியால் செல்லும் பொதுமக்கள் பெண்களுக்கு தொந்தரவு கொடுக்கும் செயல்களும் அதிகரித்துள்ளதால் மது அருந்துபவர்கள் தொடர்பாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் என்றுமில்லாதவாறு தற்போது …
-
- 3 replies
- 954 views
-
-
பேரறிவாளன் - துயரக் காற்றில் அலையும் தீபம்.- மணி.செந்தில் ( ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளன் எழுதிய தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல் – என்று நூலை முன் வைத்து) மனித நாகரிக சமூகம் மேம்பட தனக்குள் வரைந்து கொண்ட அறக்கோடுகள் விழைந்த ஓவியமாய் திகழும் பேரறிவாளன் தூக்குக் கொட்டடியில்.. மரணக் கயிற்றின் நிழலில் நிற்பது நாம் வாழ்க்கையின் மீது அமைத்துக் கொண்டுள்ள அனைத்து சமன்பாடுகளையும் கலைத்துப் போடுகிறது . மனித மாண்புகளின் மீது கட்டப்பட்டுள்ள எளிய மனித வாழ்வின் இருப்பினை பேரறிவாளன் தலைக்கு மேல் ஊசலாடும் தூக்குக் கயிறு சிதைத்துப் போடுகிறது . மரணத்தின் நிழல…
-
- 1 reply
- 1.1k views
-
-
கைத்தொலைபேசியில் விடுதலைப் புலிகளின் காணொலிக் காட்சி - தமிழ் பெண் கைது திகதி:21.10.2010 கைத்தொலைபேசியில் புலிகள் சம்பந்தப்பட்ட காணொலிக் காட்சிகளை சேமித்து வைத்திருந்ததாகக் கூறி தமிழ்ப் பெண் ஒருவரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொலன்னறுவ - சேனபுரவில் உள்ள சோதனைச்சாவடியில் வைத்தே 23 வயதான இந்தப் பெண் நேற்று கைது செய்யப்பட்டார். வவுனியா பூந்தோட்டத்தைச் சேர்ந்த இவர் திருகோணமடுவில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது சகோதரனைச் சந்திக்கச் சென்ற போதே சோதனைச் சாவடியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்த இரண்டு கைத்தொலைபேசிகளிலும் புலிகள் சம்பந்தமான காணொலிக் காட்சிகள் இருந்ததாக சிறிலங்கா காவல்துறையினர…
-
- 0 replies
- 976 views
-
-
இவளது குரலைக் கேட்கின்ற போது ஒரு சிறுமியின் கதைபோலவே இருக்கிறது. இவளது சுபாவமும் இன்னும் சிறு குழந்தைத்தனம் மிகுந்ததாகவே இருக்கிறது. இதயம் முட்டிய வேதனைகளைச் சுமந்து கொண்டு ஒற்றைக்காலிக் துணையோடு நடமாடும் இவள்ஆறுவயதில் அம்மாவையும் அப்பாவையும் இழந்தவள். ஆடி5 1987 தமிழினத்தின் முக்கியம் வாய்ந்த நாளில் பிறந்தவள். நினைவுகொள்ளப்படும் நினைவுகளால் பலரது நினைவுகளை ஞாபகம் கொள்ளும் தினத்தில் பிறந்தவளை அணைத்து ஆதரவுகொடுத்து அடைக்கலம் கொடுத்தது செஞ்சோலை இல்லம். அம்மாவாக அப்பாவாக சுற்றமாக அவளுக்கு அவளுக்கான உறவுகள் அந்தச்சோலையும் அங்கிருந்தோரும்தான். அனாதரவற்று இப்படித் தனித்துவிடுவேனென்று கனவில் கூட எண்ணவில்லையென விம்மும் இவளுடன் கூடப்பிறந்த அக்கா ஒருத்தி உள்ளதாக அறிந்து ய…
-
- 3 replies
- 1k views
-
-
Oct 21, 2010 / பகுதி: செய்தி / த.தே.கூ அலுவலகக் கட்டிடத்திற்கு பெயர் பலகை சூட்டுவதில் பிரச்சனை கொழும்பில் உள்ள தமிழ்த் தேசிய கூட்மைப்பினரின் புதிய அலுவலகக் கட்டிடத்திற்கு பெயர் பலகை சூட்டுவதை தமிழரசுக் கட்சியினர் விரும்பவில்லை என்று கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மற்றய கட்சி உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கொழும்பில் உள்ள கூட்டமைப்பின் புதிய அலுவலகம் இந்தவாரம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலத்திற்கு பெயர் பலகை சூட்டினால் அதற்கு கல்லெறி விழும் என்று தமிழரசுக் கட்சியினர் கூறுவதாகக் தெரிவிக்கப்படுகின்றது. pathivu
-
- 0 replies
- 669 views
-
-
கிளிநொச்சி இராணுவ முகாமில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவர் பாடசாலை மாணவி ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்தியது தொடர்பில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் முகாமில் பணியாற்றி அவர், வெல்லவாய மொரவேவ பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். பின்னர் அவரை காதலிப்பதாக கூறிய இராணுவ அதிகாரி சில நாட்களுக்கு பின்னர், மொரவேவ பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு மாணவியை அழைத்துள்ளார். பொது மக்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் இருவரும் விடுதியில் இருந்த போது கைது செய்யப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் குறித்த மாணவி 15 வயதுக்கு உட்பட்ட ஒருவர் எனவும், இராணுவ சிப்பாய் 22 வயதுடைய ஒருவர் எனவும் தெரியவந்துள…
-
- 9 replies
- 1.7k views
-
-
கப்பல்களில் கனடாவை வந்தடையும் அகதிக் கோரிக்கையை முன்வைப்போரின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் நடவடிக்கையாகப் புதிய சட்டமூலம் ஒன்றை கொன்சவேற்றிவ் (Conservertive) அரசு நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. புதிய சட்டங்களைக் கனேடிய அரசு அறிமுகப்படுத்தவுள்ளதென நேற்று ஒட்டாவாவில் புதிய கனேடியர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பிரதம மந்திரி ஸ்டீபன் ஹாப்பர் தெரிவித்தார். கனடாவில் குடியேறுவதற்கு ஏற்கனவே வரிசையில் காத்திருப்போரைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, வரிசையின் முன்பாகச் செல்வதற்கு ஏதுவாக, பெருமளவானோர், சட்டவிரோதமாகக் கனடாவுக்கு அனுப்பப்படுவது ஆழ்ந்த கரிசனை தருவதாக அவர் கூறினார். தனது அரசு நடவடிக்கை எடு…
-
- 3 replies
- 580 views
-
-
அன்புள்ள அண்ணா! - மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம் நக்கீரன் அண்ணாவுக்கு, முல்லைத் தீவிலிருந்து அதீதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)ங்கிற 14 வயசு பொண்ணு எழுதறேன். நல்லாயிருக்கீங்களா? நாங்க இங்கு நல்லயில்லையண்ணா. 'நல்லாயிருக்கீங்களா... எப்படி இருக்கீங்க'ன்னு கேட்க எந்த ஒரு சனமும் இல்லையண்ணா. நல்லாயிருக்கீங்களான்னு ஒரு வார்த்தையை எங்க செவிகள் கேட்டு ரொம்ப நாளாச்சு. எங்கிருந்தாவது அந்த வார்த்தை ஒருமுறை எங்க செவிகள்ல விழாதான்னு ஏங்கிக் கிடக்கிறோமண்ணா. உக்கிரமான போர் முடிஞ்சதும் வவுனியா முகாமுக்குள் நாங்க அடைத்து வைக்கப்பட்டோம். நாங்கன்னா...நான், என் அம்மா, என் தாத்தா, என் அண்ணா. எங்க அப்பா (சந்திரேசன்) போரில் வீர மரணம் அடைஞ்சிட்டாரு. கதிர்காமம் முகாமுலதான் …
-
- 21 replies
- 2.2k views
-
-
பிள்ளையான் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக கொடுத்த சாட்சியத்தின் சுருக்கம் தொண்ணூறுகளில் கிழக்கில் அப்போதைய இராணுவத்தினர் மக்களை சித்திரவதை செய்தனர்.பலர் காலில் விழுந்தபோதும் துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டனர். எனவே அன்று இவ்வாறான சம்பவங்களை இயக்கிய அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும். அன்று மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடூர சம்பவங்களே நான் புலிகள் இயக்கத்தில் இணைவதற்கு காரணமாக அமைந்தன என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மேலும் நாட்டில் நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமை மேலும் பலப்படுத்தப்படவேண்டும் என்பதுடன் மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் சுயாதீனமாக இயங்க வைக்கப்படவேண்டும். இந்த விடயத்தில் நல்லிணக்க …
-
- 1 reply
- 640 views
-
-
இலங்கையிலிருந்து படகொன்றில் அவுஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்த இலங்கையைச் சேர்ந்த சுமார் 85 புகலிட கோரிக்கையாளர்களை இந்தோனேசிய துறைமுக பொலிஸார் தடுத்து மீட்டுள்ளனர். இவர்கள் பயணித்த படகு எரிபொருள், உணவு மற்றும் நீர் பற்றாக்குறை காரணமாக பனாயிட்டான் தீவில், இடைநடுவில் நின்ற போதே துறைமுக பொலிஸார் இவர்களை மீட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கையிலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளனர். மீட்கப்பட்டவர்களில் 15 பெண்களும் 18 குழந்தைகளும் அடங்குவர். இவர்களில் பல குழந்தைகள் சுகயீனமுற்றிருந்ததாகவும், பலர் பல நாட்கள் ஒழுங்கான உணவின்றி தவித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இப்பயணத்தின் போது ஒரு பெண் மற்றும் ஆண் உட்பட இருவர் மரணமடைந்துமுள்ளனர். …
-
- 3 replies
- 626 views
-
-
தனது சொந்த மகளான 8 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி வீ.இராமகமலன் உத்தரவிட்டுள்ளார். களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.எஸ்.மானவடு தெரிவித்தார். 3ஆம் தரத்தில் கல்வி பயிலும் 8 வயது மகளையே தந்தை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திருப்பது குறிப்படத்தக்கது. இந்நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.http://www.tharavu.com/2010/10/8.html
-
- 0 replies
- 1.2k views
-
-
Oct 21, 2010 / பகுதி: செய்தி / சீனாவின் செயற்பாடுகளை கண்காணிக்க ஹம்பாந்தொட்டையில் இந்திய தூதகரம் ஸ்ரீலங்காவின் தென் பகுதி துறைமுக நகரான ஹம்பாந்தோட்டையில் சீனாவின் செயற்பாடுகள் குறித்து இந்தியா கண்காணிக்கும் என்று உள்நாட்டு ஸ்ரீலங்காவின் ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பில் அது வெளியிட்டுள்ள ஆக்கம் ஒன்றில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ஸ வரும் நவம்பவர் மாதம் 11ம் நாள் தமது இரண்டாவது பதவிக்காலத்தை ஆரம்பிக்கிறார். அதே தினத்தில் நுரைச் சோலை மின்சார நிலையத்தின் முதல் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றனர். இது தவிர, ஹம்பாந்தொட்டை துறைமுகத்திற்கான முதலாவது கப்பலும் அதே தினத்தில் வருகிறது. இந்த நிலையில், அதற்கு மு…
-
- 4 replies
- 489 views
-
-
இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் - பிரித்தானியா வலியுறுத்தல் இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என, பிரித்தானிய அரசாங்கம் சிறீலங்கா அரசாங்கத்திடம் வலியுறுத்தி இருக்கின்றது. பிரித்தானிய வெளியுறவுச் செயலர் (அமைச்சர்) வில்லியம் ஹேக்கை, சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று (புதன்கிழமை) சந்தித்தபோது நேரடியாக இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டது. இலங்கையில் ஏற்படுத்தப்படும் நிரந்தர அரசியல் தீர்வு அனைத்து மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைய வேண்டும் எனவும் ஹேக் சுட்டிக்காட்டினார். சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள ‘கற்றுக்கொண்ட அனுபவங்களு…
-
- 0 replies
- 804 views
-
-
தாய்லாந்து ஏதிலிகளை காக்கக்கோரி சென்னை UNHCR அலுவலகத்தில் இன்று மனு: இயக்குநர் புகழேந்தி தாய்லாந்து ஏதிலிகளுடன் “காற்றுக்கென்ன வேலி” திரைப்பட இயக்குநர் புகழேந்தி அவர்கள் மீனகம் வழியாக உரையாற்றினார். நாளை சென்னையிலுள்ள UNHCR இல் அனைத்து அமைப்பினருடன் சென்று மனு கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் மொத்தம் எத்தனை பேர்? 281 பெண்கள் : 80 குழந்தைகள் ; 40 நிறைமாத கற்பிணி பெண்கள் : 6 நீங்களெல்லாம் எத்தனை வருடங்களாக இருந்தவர்கள் அங்கு? நான் இங்கு வந்து நான்கு வருடங்கள். இங்கு பிடிபட்டவர்கள் பல மாதிரி இருக்கிறார்கள் மூன்று வருடங்களிலிருந்து ஏழு வருடங்கள் வரை இருக்கிறார்கள். எந்த சிறையில் இருக்கிறார்கள்? பாங்…
-
- 0 replies
- 582 views
-
-
விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை ரத்து செய்வதா அல்லது நீடிப்பதா…? விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை ரத்து செய்வதா அல்லது நீடிப்பதா? என்று இன்று ஊட்டியில் நடைபெற்ற தீர்ப்பாயத்தின் முழு விபரத்தினை வழக்கறிஞர் பகத்சிங் தொலைப்பேசியில் நமது மீனகம் தளத்திற்கு தெரிவித்தவை… http://meenakam.com/2010/10/20/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE.html
-
- 0 replies
- 1.1k views
-
-
‘‘தோல்வியை கண்டு துவண்டு விடாதே, தடைக்கற்களை வெற்றிப்படிகளாக கருது,வீழ்ச்சியை எழுச்சியாக மாற்றுஅடிக்கப்படும் பந்து துள்ளி எழுவது போல” பாரிஸ் 19.10.2010.தமது இனத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதிகேட்டு மனிதநேய நடை செல்லும் டென்மார்க் வாழ் ஈழத்தமிழ் மகன்களுக்கும், மக்களுக்கும்,புருசல்ஸிலிருந்து பெர்லின் வரை மாந்தநேய மதிவண்டி பயணம்; மேற்கொண்டிருக்கும் ஜேர்மன் வாழ்ஈழத்தமிழ் மகன்களுக்கும், மக்களுக்கும் பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை தனது ஆதரவையும், வாழ்த்துதல்களையும் முதலில் தந்துநிற்கின்றது. ‘‘தோல்வியை கண்டு துவண்டு விடாதே, தடைக்கற்களை வெற்றிப்படிகளாக கருது,வீழ்ச்சியை எழுச்சியாக மாற்றுஅடிக்கப்படும் பந்து துள்ளி எழுவது போல” என்ற வாசகங்களுக்கமைய எமது இத்தனை…
-
- 0 replies
- 3.5k views
-