ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழ் பெண்களைப் பிடித்து தென்னிலங்கைக்கு வெள்ளை வானில் கடத்திச் செல்லும் மர்மக் கும்பலைச் சேர்ந்த இருவர் எதிர்பாராத விதமாக நேற்று மாலை பொலிஸில் சிக்கி உள்ளார்கள். கைது செய்யப்பட்ட இருவரும் முஸ்லிம்கள் ஆவர். வடமராட்சியில் இருந்து யுவதி ஒருவரையும், சிறுமி ஒருவரையும் கடத்திக் கொண்டு வந்தபோது ஆனையிறவுப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து இக்கைது இடம்பெற்றுள்ளது. இவர்கள் கைது செய்யப்பட்டமையைத் தொடர்ந்து இம்மர்மக் கும்பலைச் சேர்ந்தவர்கள் யார்? எதற்காக தமிழ் பெண்களைத் தென்னிலங்கைக்குக் கடத்திச் செல்கின்றனர் போன்ற அதிர்ச்சித் தகவல்கள் பல வெளி வர உள்ளன என்று பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தமிழ் சி.என்.என் இற்கு தெரிவித்தார். வெள…
-
- 0 replies
- 764 views
-
-
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவுக்கு ராஜபக்சேவை அழைத்ததைக் கண்டித்துவிடுதலை சிறுத்தைகள் கட்சித்தல்வர் தொல். திருமாவளவன் அந்த விழாவை புறக்கணித்துள்ளார். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் புறக்கணிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’புது தில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவுவிழா வரும் 16.Š10.Š2010 அன்று நடைபெறவுள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சிங்கள இனவெறியன் ராஜபக்சேவை இந்திய அரசு அழைத்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஈழத் தமிழர்களை ஈவிரக்கமின்றி லட்சக் கணக்கில் கொ…
-
- 1 reply
- 771 views
-
-
பொன்சேகா வெலிக்கடை சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் கட்டை காற்சட்டையுடன் காணப்படும் புகைப்படம் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படத்தை யார் ஊடகங்களுக்கு வழங்கினர் என்பதை கண்டறிய சிறைச்சாலை திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அண்மையில் பொன்சேகாவை பார்க்க சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த புகைப்படத்தை தனது கையடக்க தொலைபேசியில் பதிவுசெய்துள்ளதாக சந்தேகிப்பதாக சிரேஷ்ட சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.http://www.tharavu.com/2010/10/blog-post_4709.html
-
- 2 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், மன்னார் மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 8 replies
- 1.7k views
-
-
கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்த பெரும்பாலான பெண்கள் தங்களது கணவன்மார் மற்றும் பிள்ளைகளை படைத்தரப்பினர் கைதுசெய்த பின்னரே காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்தனர். இங்கு சாட்சியமளித்த அண்மையில் காணாமல் போன மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சகாயமணியின் மனைவி சகாயமணி மேரி யோசப் சாட்சியமளிக்கையில்;எனது கணவர் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு மாநகர முதல்வரை சந்திக்கச் சென்றிருந்தார். ஆனால் வீடு திரும்பவில்லை. கடத்தியவர்களைத் தெரியும். எனது கணவரை அடித்து சங்கிலியில் கட்டி பற்பொடி கொம்பனியில் வைத்திருந்தனர். இங்கு உள்ள இராணுவத்தினரே இவரை துன்புறுத்தி வைத்திருந்தனர். அங்கிருந்த ஒருவரிடம் எனது கணவர் தகவல் கூறி அனுப்பி இருந்தார். என…
-
- 3 replies
- 2k views
-
-
எனது கணவர், மருமகனை சுட்டுக் கொன்றுவிட்டனர். மகன், மகளை கடத்திவிட்டனர். மகளை கடத்தியவரை எனக்கு தெரியும். அவரிடம் மகளை கேட்டால் வீட்டிற்கு குண்டு வீசி அழித்து விடுவதாக மிரட்டுகிறார் என்று மூதாட்டி ஒருவர் நேற்று செங்கலடியில் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார். அத்துடன், மகளை கடத்தியவரை கண்டால் அடையாளம் காட்டுவேன். எனினும் நீண்ட நாட்களாகவே அவரை இப்பகுதியில் காணக் கிடைக்கவில்லை. மகளும் திரும்ப வில்லை என்றார். செங்கலடி பிரதேச செயலகத்தில் வைத்து கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை சாட்சியமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். எனது கணவர் கோபாலப்பிள்ளையை 1985 ஆம் ஆண்டு இராணவத்தினர் சுட்டுக…
-
- 0 replies
- 843 views
-
-
செவ்வாய்க்கிழமை, 12, அக்டோபர் 2010 (13:25 IST) ராஜபக்சேவுக்கு அழைப்பா? வைகோ கண்டனம் டெல்லியில் நடைபெற்று வரும் காமன்வெல்த் 2010 போட்டிகள் வரும் 14 ந்தேதி (வியாழக்கிழமை) நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அழைப்பிதழை காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டு குழு ராஜபக்சேவுக்கு அனுப்பி உள்ளது. இந்நிலையில் காமன்வெல்த் நிறைவு விழாவில் ராஜபக்சே கலந்து கொள்வதற்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், 71 நாடுகள் கலந்து கொள்ளும் காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள், டெல்லியில் 70,000 கோடி செலவில் நடத்தப்படுகின்றன. விழாவை…
-
- 2 replies
- 776 views
-
-
ஜனநாயகத்தின் நான்காவது தூண் “ஊடகம்” என்று கூறப்படுகின்றது. ஊடகங்கள் தமது பணியை நேர்மைத் திறத்துடன்‘ ஆற்றினால் ஜனநாயகம் பழுதறாது இயங்கும் என்பது முடிபு. இருந்தும் சமகாலத்தில் “ஊடகப் பயங்கரவாதம்” பற்றிய சொல்லாடலும் வாதப் பிரதி வாதங்களும் எழுகை பெற்றுள்ளமை மிகப் பெரும் துரதிர்ஷ்டமாகும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய ஊடகங்கள் எழுந்தமானமாக - தமக்கு எதிரானவர்களை வஞ்சிக்கும் நோக்குடன் - அரசியல் கலப்புடன் செயற்படும் போது ஜனநாயகப் பண்புகள் நஞ்சேறி விடுகின்றன. இந்த நஞ்சடைத லால் மக்களும் பாதிப்படைகின்றனர். இந்த அபத்தமே இலங்கைத் தீவில் நடந்து கொண்டிருக்கின்றது. தமக்குச் சார்பானவர்களுக்கு விருது வழங்குதல் முதல் ஐந்து நட்சத்திர விடுதிகளில் நடக்கும் இராப்போசன விருந்தோடு நியாயத்தை …
-
- 2 replies
- 802 views
-
-
Oct 12, 2010 / பகுதி: செய்தி / அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கும் இந்து சமுத்திரத்துக்கும் இடையில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கும் இந்து சமுத்திரத்துக்கும் இடையில் இருந்து வந்த நிலப்பகுதி குண்டு வைத்து தகர்க்கப்பட்டு இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நேற்றுக்காலை 8. 30 மணியளவில் இந்த இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. சிறிலங்காவின் தரைப்பகுதிக்குள் அமைக்கப்பட்ட அம்பாந்தோட்டைப் துறைமுகத்துக்குள் வாய்க்கால் ஒன்றின் மூலம் நீர் நிரப்பப்பட்டு வந்தது. இந்தப் பணிகள் முடிவுற்ற நிலையில் கப்பல்களை கொண்டு வரும் வகையில் இந்து சமுத்திரத்துக்கும் துறைமுகத்துக்கும் இடையில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. pathivu
-
- 0 replies
- 735 views
-
-
சரத்பொன்சேகா சிறை வைக்கப்பட்டுள்ள வெலிக்கடைச் சிறைச்சாலையின் சிறைக்கூடத்தைச் சுற்றிலும் தகரத்தினாலான தடுப்பு போடப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற கைதிகளுடன் தொடர்புகொள்ள முடியாத வகையில் அந்த சிறையைச்சுற்றி ஏற்கனவே கம்பி வேலி வைக்கப்பட்டுள்ளது என்பது செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த கம்பி வேலியை இணைத்துதான் தற்போது தகரத்தினால் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் சரத்பொன்சேகா மற்ற கைதிகளை பார்க்கக்கூட முடியாது. இதனால் மற்ற கைதிகளுடன் பேசமுடியாத நிலை இருப்பதால் பொன்சேகா அவதிப்பட்டுவருவதாக என்று செய்திகள் தெரிவிக்கின்றன.tharavu.com
-
- 0 replies
- 911 views
-
-
சிறிலங்கா கடற்டையினருடன் இணைந்து பயிற்சி நடவடிக்கைளில் ஈடுபடுவதற்காக இந்தியக் கடற்படையின் நான்கு கப்பல்கள் சிறிலங்காவுக்கு வந்துள்ளன. இன்று காலை திருகோணமலைத் துறைமுகத்துக்கு மூன்று இந்தியக் கடற்படைக் கப்பல்களும் ஒரு கப்பல் கொழும்புத் துறைமுகத்தையும் வந்தடைந்தன. இந்தக் கப்பல்களுக்கு சிறிலங்கா கடற்படையினர் தரப்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. எதிர்வரும் 15ம் திகதி வரை இந்தக் கப்பல்கள் சிறிலங்காவில் தங்கியிருந்து கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன. இவற்றில் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்துள்ள ஐ.என்.எஸ் தரங்கினி என்ற கப்பல் 54 மீற்றர் நீளத்தைக் கொண்டது. இது மாலுமிகளுக்குப் பயிற்சி வழங்கும் கப்பலாகும். வருண, வீர், சர்துல் ஆகிய இந்தியக் கப்பல்கள்…
-
- 2 replies
- 838 views
-
-
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன், அன்னையே.. என் அன்னையே. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு பலவீனமடைந்து காங்கிரசின் காலடியில் தன்னை சமர்ப்பித்துக் கொண்டுள்ளது திமுக. இந்த பலவீனத்திற்கான ஒரே காரணம், இன்று திமுகவை தன்னுடைய குடும்ப நிறுவனமாக மாற்றி வைத்துள்ள கருணாநிதி மட்டும் தான். தமிழகம் வருகை தந்துள்ள சோனியா, தன்னை வந்து சந்திக்காமல் போய் விட்டாரென்றால், கூட்டணியில் பிளவு என்று செய்திகள் வந்து விடுமோ என்று அஞ்சிய கருணாநிதி, திமுக காங்கிரஸ் கூட்டணி மிகுந்த பலமாக இருக்கிறது என்று காண்பித்துக் கொள்வதற்காகவே, தனது தன்மானத்தை அடகு வைத்துக் கொண்டாலும் பரவாயில்லை என்று, விமான நிலையத்திலேயே சென்று சோனியாவை சந்தித்து, தனது விசுவாசத்தை காண்பித…
-
- 2 replies
- 1.5k views
-
-
11.10.2006 அன்று வடபோர்முனை கிளாலி - முகமாலை முன்னரங்கினூடாக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் துருபதன் உட்பட்ட மாவீரர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். பலத்த எறிகணைச் சூட்டாதரவுடனும், குண்டு வீச்சு வானூர்திகளின் துணையுடனும் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய நகர்வு முயற்சி விடுதலைப் புலிகளின் போரணிகளால் சில மணிநேரத்தில் முறியடிக்கப்பட்டது. இதன்போது 150 வரையான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பல கவச ஊர்திகளும் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டிருந்தன. சிறிலங்கா படையாள் ஒருவர் விடுதலைப் புலிகளால் சிறைப் பிடிக்கப்பட்டதுடன் கொல்லப்பட்ட படையினரில் 75 வரையானோரின் உடலங்களும…
-
- 5 replies
- 1.7k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் போராளி வித்து 2ம் லெப். மாலதி அவர்களின் 23ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் பிரான்சின் கிழக்குப் பாகத்தில் இருக்கும் ஸ்ரார்ஸ்பூர்க் நகர மக்களால் St Vincent de Paul மண்டபத்தில் நினைவுகூரப்பட்டது. ஈகைச்சுடரினை மகளிர் அமைப்பின் சார்பில் திருமதி. மேரி யோசப்பின் பாக்கியராஜா அவர்கள் ஏற்றிவைத்தார். அகவணக்கம் தேசியத் தலைவர் அவர்களினது சிந்தனை மலர்வணக்கம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து 2ம் லெப். மாலதி அவர்களினுடைய நினைவுப் பகிர்வை அடுத்து அனைத்துலகத் தமிழ்ப் பெண்கள் அமைப்பினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கை வாசித்தளிக்கப்பட்டது. தொடர்ந்து கவிதைகளும் எழுச்சிப்பாடல்களும் இடம் பெற்றிருந்தன. நிகழ்வின் ந…
-
- 0 replies
- 602 views
-
-
திங்கட்கிழமை, அக்டோபர் 11, 2010 வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்புவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் இலங்கை துணைப் பிரதிநிதி ஜெனீப்பர் பெகோனிஸ் தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் மலேசியா, ஹொங்கொங் போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவது குறித்து தீவிரமாக யோசித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய அரசாங்கத்தினால் இறுதியாக வெளியிட்ட புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையில் 71654 இலங்கை அகதிகள் 112 முகாம்களில் தங்கியிருப்பதுடன், 32467 அகதிகள் முகாம்களுக்கு வெளியே தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம…
-
- 2 replies
- 961 views
-
-
. 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஐநா பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினராகிறது இந்தியா! நியூயார்க்: 19 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினராகிறது இந்தியா. நாளை ஐநாவின் பொது அவையில் நடக்கும் தேர்தல் மூலம் இந்தப் பதவியில் அமர்கிறது இந்தியா. இந்த தேர்தலிலிருந்து கஜகஸ்தான் திடீரென்று விலகிக் கொண்டதால், ஆசிய பிராந்தியத்திலிருந்து இந்தியா உறுப்பினராவது எளிதாகியுள்ளது. இந்த பதவிக்காக ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் ஒரு நாடு தேர்வு செய்யப்படும். ஏற்கெனவே இந்தப் பொறுப்பில் உள்ள நாடுகள்: ஆஸ்திரியா, ஜப்பான், மெக்ஸிகோ, துருக்கி மற்றும் உகான்டா. இவற்றுக்கு பதில்தான் புதிய உறுப்பு நாடுகள் தேர்வு செய்யப்படுகின்றன. …
-
- 2 replies
- 1.1k views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசை சிதைக்க சிறிலங்கா திட்டம்: கைக் கூலிகளாக கனடா உலகத்தமிழர் இயக்க ஊழியர்கள் சிலர்! திகதி: 10.10.2010 “நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அமர்வில் நடந்தது என்ன? ஏன் வெளியேறினோம்?” என்னும் தலைப்பில் “மக்கள் பிரதிநிதிகளின் மனம் திறந்த அறிக்கை” எனக் குறிப்பிடும் ஒரு அறிக்கை ரொறன்ரோவில் இருந்து வெளியாகும் பல பத்திரிகைகளில் இந்த வாரம் வெள்ளிக் கிழமையன்று வெளியாகிய அதிசயத்தை எமது உடன்பிறப்புகளாகிய தமிழ் மக்கள் யாவரும் அறிவர். குறிப்பிடப்பட்டுள்ள இந்த விடயத்தைச் சுருக்கமாகக் கூறுவதானால் தமிழ் மக்களுக்குத் தற்போது இருக்கும் ஒரேயொரு வழியாக விளங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு யாப்பு எழுதியவர்களே இந்த அமைப்பிலும் தங்களுடைய ஆதிக்கத்தைத் தொடர்ந்த…
-
- 4 replies
- 1.2k views
-
-
இறுதி யுத்தம் உக்கிரமடைந்திருந்த வேளையில் அங்கிருந்து தப்பித்து வந்து படையினரிடம் சரணடைந்த புலிகள் கொலை செய்யப்படவில்லை என்பது உண்மையா என்று நல்லிணக்க ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளித்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் மனைவி கேள்வி எழுப்பினார். ஓமந்தை திறந்த வெளி மைதானத்தில் 2009 மே மாதம் 17ஆம் திகதி 700 பேர் படையினடம் சரணடைந்தனர். இன்னும் பலர் படையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சாட்சியமளிக்கையில் குறிப்பிட்டார். கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக் குழு கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு, ஓட்டமாவடி ஆகிய இரு இடங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக சாட்சியங்கள…
-
- 0 replies
- 818 views
-
-
அரசாங்கம் எதிர்பார்த்திருக்காத வகையில் கற்றுக் கொண்ட பாடங்கள் தொடர்பான ஆணைக்குழு முன்னிலையில் பலர் பகிரங்கமாகச் சாட்சி சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மனித உரிமை நிறுவனங்கள், ஊடக அமைப்புக்கள், ஜனநாயக அமைப்புக்கள் தொடர் ஒடுக்குமுறைக்காளாகி வாய் திறக்க அஞ்சியுள்ள சூழ்நிலையில், அதுவும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டுள்ள இன்றைய சூழ்நிலையில் அரசாங்கத்திற்கெதிராக எவரும் வாய்திறக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையே இவ்விசாரணையை அரசாங்கம் தொடங்க ஒரு காரணமாக இருந்தது. ஆனால், அரசாங்கத்தின் இந்த எதிர்பார்ப்பிற்கு மாறாக வவுனியாவில் நடைபெற்ற விசாரணையின் போது திருமலை மாவட்டத் தளபதியாக இருந்த எழிலனின் மனைவி துணிந்து சாட்சியமளித்திருந்த…
-
- 4 replies
- 1.3k views
-
-
ரயில் நிலையத்தில் தங்கி இருக்கும் சிங்கள மக்களுக்கு முழுப்பாதுகாப்புப் போடப்பட் டுள்ளது. செய்தியாளர்கள் உட்பட யார் சென்றாலும் விவரங்கள் பதியப்பட்ட பின்னரே அவர்களை சந்திக்க அனுமதிக்கப்படுகிறது மீளக்குடியேறும் நோக்கத்தோடு ஏற்கனவே யாழ்ப்பாணம் வந்து ரயில் நிலையத்தில் தற்காலிகமாகத்தங்கி உள்ள சிங்கள மக்களில் ஒருவரே சந்திரசிறி. அந்த மக்களின் சார்பில் ஊடகங்களிடம் இவரே பேசுகின்றார். மூன்று நாள்களின் முன்னர் யாழ்ப்பாணம் வந்த இவருடன் 180 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட சிங்கள மக்களும் வந்திருக்கின்றனர். இவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் நிரந்தர வதிவிடங்கள் எவையும் இல்லாத போதும்,தமக்கு அரச காணிகளை ஒதுக்கித் தருமாறு அரச அதிபரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …
-
- 23 replies
- 2.1k views
-
-
வடக்கில் சிங்களக் குடியேற்றம் – அரசியல் பேச வேண்டாம் என்கிறார் டக்ளஸ் இலங்கை அரசின் சிங்களமயமாக்கல் திட்டத்தின் கீழ் கிழக்கில் நடைபெறுவது போல் யாழ்ப்பாணத்திலும் சிங்கள மக்களைக் குடியேற்ற இலங்கை அரசு திட்டமிடுகிறது. வன்னியில் அரச படைகளால் தமது சொந்த மண்ணிலிருந்து அறுத்தெடுக்கப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்கள் மர நிழலிலும், தெருவோரங்களிலும் குடியிருக்கும் நிலையில் யாழ்ப்பாணத்தில் திட்டமிடப்படும் குடியேற்றம் குறித்து அரச சார்பு துணைக்குழுக்களின் கட்சித்தலைவர்களின் கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. யாழ்ப்பாணம் மேட்டுக்குடி சிந்தனையைப் பிரதிபலிக்கும் இவர்கள் கிழக்கில் நாளாந்தம் நடைபெறும் குடியேற்றங்கள் குறித்து மூச்சுக்கூட விட்டதில்லை. கோரமான பாசிச குடும்ப ச…
-
- 4 replies
- 1.7k views
-
-
திங்கட்கிழமை, அக்டோபர் 11, 2010 1987 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் பிரச்சார குழு ஒன்று வில்லிசையில் ஒரு பாட்டு பாடினார்கள்.. மதகு வருது ரோட்டு வருது மகாவலி கங்கை வடக்க வருது என்று.. அப்போ வடக்கு கிழக்கையே முழுவதுமாக அவர் பாடினாரோ தெரியவில்லை. ஆனால் உண்மையாகவே மகாவலி கங்கை வடக்க வரப்போகுது. மகாவலி கங்கையினை வடக்கே திருப்பி இரணம்டுவிற்கு கொண்டுவந்து அதன் வழியே கிழக்கினை துண்டாடியது போல வடக்கைனையும் துண்டாடி சிங்கள குடியேற்றங்களை நிறுவ சிங்களத்தின் மாபெரும் திட்டம் நடக்கப்போகின்றது. இரணைமடுக்குளத்துக்கு மொறகஸ்கந்த நீர்த்ததேக்கத்திலிருந்து மகாவலி கங்கை நீரைப் பெற்றுக் கொடுக்கவுள்ள திட்டத்தின் பின்னணியில் வட பகுதி மக்களின் நிலங்கள் பறி போகும் அபாயம் ஏற்படலாம் என தமிழ…
-
- 0 replies
- 1.5k views
-
-
திங்கட்கிழமை, அக்டோபர் 11, 2010 ஈழநாதம் சூரியன் அஸ்தமிக்காத இராச்சியமாக உலகில் திகழ்ந்த பிரித்தானிய முடியாட்சிக்குள் 1815ம் ஆண்டு இலங்கை முழுமையாக உள்வாங்கப்பட்டு பிரித்தானிய குடியேற்ற நாடாகியது. உற்பத்திக்கான மூலப்பொருட்களை பெறவும், முடிவுப்பொருட்களுக்கான சந்தையை அமைத்துக் கொள்வதற்கான போட்டியில் பிரான்ஸ், போர்த்துக்கள், ஒல்லாந்து என பல நாடுகள் போட்டியில் குடியேற்ற நாடுகளை பிடித்துக்கொண்டாலும் ஆசியாவில் அதிலும் தெற்காசியாவின் கூடிய பிரதேசங்களை தனது குடியேற்ற பிரதேசங்களாக பிரித்தானிய முடியே கொண்டிருந்தது. பிரித்தானியாவிற்கு கோப்பியை ஏற்றுமதி செய்த மேற்கிந்திய குடியேற்றங்களில் அடிமை வியாபாரம் தடை செய்யப்பட்டதால் அங்கே மலிவான தொழிலாளர்களுக்கான வாய்ப்ப…
-
- 0 replies
- 1k views
-
-
திங்கட்கிழமை, அக்டோபர் 11, 2010 ஈழநாதம் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரான தற்போதைய சூழ்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தினசரி நான்கு பேருக்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்துகொள்வதாக அந்த மாவட்ட வைத்தியசாலையின் உளநல மருத்துவர் தெரிவித்துள்ள விடயம் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இந்த அவலநிலைமைக்கு பிரதான காரணியாக இருப்பது சமூகப் பின்னணியே என்றும் விதவைகள்,கணவன்மார் காணமற் போனவர்கள்,தனிமையிலுள்ள பெண்களே அதிகளவுக்கு தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாக அந்த மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார். மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த மோதலை முடிவுக்கு கொண்டுவந்து விட்டதாகவும் உலகநாடுகளுக்கே இலங்கை முன்மாதிரியாக விளங்குவதாகவும் சர்வதேசம் இந்த விடயத்தில் இலங்கையிடமிருந்தே பாடம்…
-
- 0 replies
- 403 views
-
-
சுவிஸ் ஈழத்தமிழர் அவையால், தமிழீழ முத்திரைகள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. 1 பிராங் பெறுமதியான இம் முத்திரை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே மக்கள் அதனை வாங்கி தமது உறவினர்களுக்கு கடிதம் எழுதும் போது அனுப்ப முடியும். சுவிஸ் அரசால் நடாத்தப்படும், தபால் சேவையில் இம் முத்திரைகள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இது நல்லதொரு உதாரணமாகவும் அமைந்துள்ளது! இம் முத்திரையில் இலங்கை அரசே இன அழிப்பை நிறுத்து என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அத்தோடு, தமிழீழ தேசியப் பூ, முகாமில் அடைபட்டுள்ள மக்கள், முள்ளிவாய்க்கால் பேரவலம், என பலதரப்பட்ட சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளதால், பார்க்கும் அனைவருக்கும், மற்றும் வேற்றின மக்களுக…
-
- 6 replies
- 1.2k views
-