Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திங்கட்கிழமை, அக்டோபர் 4, 2010 குருநாகல் மாவட்டத்தில் 48 மாணவிகள் விபச்சாரத்தில் ஈடுபடுத்தபட்டுக்கொண்டிருந்தபோது பொலிசாரால் முற்றுகையிடப்பட்டனர். குருனாகல் மாவட்டத்தில் 54 அறைகொண்ட ஹோட்டல் ஒன்றில் மாணவிகளை அழைத்து வெளினாட்டில் வருபவர்களுக்குவிலைபேசி விபச்சாரம் செய்தல் நடைபெற்றுவந்துள்ளது. ஓர் அரசியல்வாதியின் அனுசரணையில் இந்த ஹோட்டல் இயங்கிவந்துள்ளது. உள்ளூர்வாசிகளின் தகவலை அடுத்து இந்த ஹோட்டல் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டபோது 48 மாணவிகள் அங்கு இருந்தனர். இவர்கள் தம் பெற்றோர்களிடம் டியூசன் கிளாஸ் போகின்றோம் என சொல்லிவிட்டு வந்ததாகவும் பொலிசார் கூறினர். ஆனால் குறித்த ஓர் வசதி படைத்த திருமணமான ஆணும் பெண்ணும் குறித்த ஹோட்டலை வாடகைக்கு அமர்த்தி அங்கு விசேட வகு…

    • 0 replies
    • 1.6k views
  2. திங்கட்கிழமை, அக்டோபர் 4, 2010 போரின்போதும் போரின் பின்னரும் புலம்பெயர் தமிழர்கள் அனுப்பிய உதவிகளை உதாசீனம் செய்த மஹிந்த அரசு இப்போ புலம்பெய ர் தமிழர்கள் உதவ வேண்டும் என எவ்வாற் கேட்கமுடியும் இவ்வாறு சிறிலங்கா காடியன் கேள்வி எழுப்பியுள்ளது. புலம்பெயர் மக்கள் வடக்கு கிழக்கை கட்டி எழுப்ப உதவ வேண்டும் என மஹிந்த அரசு கேட்கின்றது. ஆனால் புலம்பெயர் தமிழர்களால் அனுப்பபட்ட உதவிகளை அரசு புறக்கணித்தது. போரின் பின்னர் அனுப்பபட்ட மூன்று கொள்கலன் பொருட்கள் காணாமல் போயின. அடுத்ததாக வணங்கா மண் என்ற கப்பல் புலம்பெயர் தமிழர்களால் அனுப்பி வைக்கப்பட்டது. இதுவும் ஆரம்பத்தில் திருப்பி அனுப்பப்பட்டன. பின்னர் சர்வதேச அழுத்தம் காரணமாக நீண்ட இடைவெளியின் பின்னர் அனுமதிக்கப்பட்டன. …

    • 0 replies
    • 706 views
  3. வன்னி நிலப் பரப்பில் இராணுவ முகாம்களையும் பொலிஸ் நிலையங்களையும் அமைப்பதில் பாரிய முனைப்புக்களைக் காட்டி வருகின்ற அரசாங்கம், மீள் குடியமர்த்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற மக்கள் தற்போதைய மழை வெள்ளத்தால் ஒதுங்குவதற்குக் கூட இடமில்லாது தவித்துக் கொண்டிருப்பதைக் கண்டு கொள்ளாது இருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மீள்குடியேற்றக் கிராமங்கள் வெள்ளக் காடாக காட்சியளிப்பதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பெய்து வருகின்ற மழையின் காரணமாக மக்கள் பல் வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடு த்து வருகின்ற நிலையில் இடம்பெயர்ந்த மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களின் நிலைமைகள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பி…

    • 0 replies
    • 444 views
  4. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனால் அவ்வியக்கத்தின் பிரதித் தலைவராக இருந்த கோபாலசுவாமி மகேந்திரராசா அதாவது மாத்தையா எப்படி நடத்தப்பட்டாரோ அப்படித்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவால் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா நடத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றார் என்று அரசியல் ஆய்வாளர்களில் ஒருவரான Tisaranee Gunasekara என்று தெரிவித்துள்ளார். பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இரண்டரை வருட கடூழிய சிறைத் தண்டனை குறித்து எழுதிய பத்தி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் அதில் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:- ”புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் அவ்வியக்கத்தின் பிரதித் தலைவராக இருந்த மாத்தையாவை…

    • 0 replies
    • 714 views
  5. "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் தமிழ் மக்களின் எதிர்காலத்தை சூனியம் ஆக்கினார். அவரது தமிழீழக் கனவுக்காக தமிழ் இளைஞர்கள் பலிக் கடா ஆக்கப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மனித உரிமைகளை ஒரு போதும் மதித்து நடந்ததே இல்லை. அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான யுத்தத்தால்தான் நான் இன்று உயிரோடு இருக்கின்றேன்". இப்படி ஒரு பரபரப்புப் பேட்டி ஒன்றை வழங்கி உள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகத்துறைப் பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்ரர். இதே இயக்கத்தில் மொழிபெயர்ப்பாளராக இருந்த ஜோர்ச் மாஸ்ரருடன் சேர்ந்த தயா மாஸ்ரர் கடந்த வருடம் ஏப்ரல் 22 ஆம் திகதி முல்லைத் தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பிரதேசத்தில் வைத்து அரச படையினரிடம் சரண் …

    • 4 replies
    • 2.7k views
  6. முறைப்படி வேண்டுகோள் விடுத்தால் பொன்சேகாவுக்கு மன்னிப்பு - மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு திகதி:03.10.2010 பொலன்னறுவையில் நேற்று முன்தினம் பெளத்த மதத் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்வொன்றில் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, “சரத் பொன்சேகாவுக்கு இராணுவ நிதீமன்றம் வழங்கிய தீர்ப்பை நான் ஏற்றுக் கொண்டது தனிப்பட்ட பழிவாங்கல் அல்ல. நானே நியமித்த இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பை நானே ஏற்கா விட்டால் அந்த நீதிமன்றக் கட்டமைப்புக்கே அவமானத்தை ஏற்படுத்தியதாக அமையும். சரத் பொன்சேகாவுக்கு மன்னிப்பு வழங்குதல் சம்பந்தமாக முறைப்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டால் கவனம் செலுத்தப்படும். இது நித…

    • 4 replies
    • 535 views
  7. இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 5ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணைகளில் ஆஜராவதற்கு விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் தமிழகத்துள் பிரவேசிப்பதானால் அவர்களுக்கு இந்திய அரசு பாதுகாப்பை வழஙக் வேண்டும் எனும் கோரிக்கை ஒன்றை முன்வைக்க ஏற்பாட்டாளர்கள் தயாராகி வருகின்றார்கள். விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் இந்த வழக்கில் வைகோ ஆஜராகியிருந்த போதிலும் அவர் விடுதலைப்புலிகளின் பிரதிநிதி அல்ல எனக் கூறி அவரது வாதங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் விடுதலைப் புலிகளது பிரதிநிதிகளை இந்த வழக்கு விசாரணைகளின் போது ஆஜர்படுத்துவதாயின் அவர்கள…

  8. ராமேசுவரத்தில் இருந்து நேற்று சுமார் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன. நடுக்கடலில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அந்த வழியாக 4 ரோந்து கப்பலில் வந்த 20-க்கும் மேற்பட்ட இலங்கை கடற்படையினர் மீனவர்களை உடனடியாக திரும்பி செல்லும்படி கூறி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர். மேலும் அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த சில படகுகளை சுற்றி வளைத்தனர். பின்னர் அந்த படகுகளில் ஏறி அதில் இருந்த மீனவர்களை தாக்கியதுடன் அவர்கள் பிடித்து வைத்திருந்த இரால் உள்ளிட்ட விலை உயர்ந்த மீன்களையும் அள்ளிச்சென்றனர்.இதனால் அனைத்து மீனவர்களும் உயிருக்கு பயந்து மீன்பிடிப்பதை பாதியிலேயே நிறுத்தி விட்டு உடனடியாக கரை திரும்பினர்.http://www.tharavu.com/2010/10/blo…

  9. தரையில் படுத்து, வரிசையில் நின்று, பீங்கான் தட்டில்சோறு வாங்கி சாப்பிட்ட பொன்சேகா! கொழும்பு: 'தீவிரவாதிகளை' அழித்த மாவீரன், சிங்களத்து ஹீரோ, போர் வீரன் என்றெல்லாம் ஒரு நேரத்தில் சிங்களர்களாலும், ராஜபக்சே அன் கோவினராலும் புகழ்ந்து தள்ளப்பட்ட பொன்சேகாவின் இன்றைய நிலை படு கேவலமாகியுள்ளது. கக்கூஸ் போகக் கூட தண்ணீர் கொடுக்கப்படாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் பொன்சேகா. சிறையில் கைதியாக அடைபட்டுள்ளார் பொன்சேகா. 30 மாத சிறை [^]த் தண்டனையை அனுபவிக்க ஆரம்பித்துள்ளார். அவரை வெலிக்கடையில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர். அவருக்கு 0-22032 என்ற கைதி எண் தரப்பட்டுள்ளது. வழக்கமான கைதிகள் அணியும் கால் சட்டை, சட்டையைப் போட்டு விட்டுள்ளனர். சிமென்ட் தரை…

  10. ராஜபக்சே விருந்து... வற்புறுத்தி அழைத்தும் வராத தலைவர்கள்! கொழும்பு: இலங்கை [^] அதிபர் ராஜபக்சேயின் ஐநா பயணம் மகா வெற்றி என்று அரசு சார்பு ஊடகங்கள் பெரிதாக கூறிவரும் வேளையில், அங்கு உண்மையில் நடந்தது என்னவென்பதை சிங்கள இணையதளம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. ஐநா சபையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே பேசிய போது உலகத் தலைவர்கள் பலர் புறக்கணித்துவிட்டதாகவும், இதனால் அவர் காலி அரங்கில் உரை நிகழ்த்தியதாகவும் அந்த இணையதளம் கூறியுள்ளது. இலங்கைக்கு சர்வதேச அரங்கில் ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம் இது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டார் ராஜபக்சே. இந்த நிகழ்வின் போது இலங்கை அதிபரை, உலகத் தலைவர்கள் எவரும் சந்…

  11. தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கும் பழக்கம் அரசியல்வாதிகளிடம் நீண்ட காலமாக இருந்துவரும் அவர்களின் இரத்தத்திலேயே ஊறுவிட்ட ஒன்று. அதிலும் மக்களிடம் இருக்கும் போது அரசியல் தலைவர்களைக் கிழி கிழி என்று கழிக்கும் கிழிக்கும் மக்கள் சேவகர்கள் பதவிக் கதிரையை அடைந்ததும் முற்றிலும் புதிய மனிதர்களாக மாறிவருவதுடன் நம்பி வாக்குப் போட்ட மக்களின் விருப்பங்களுக்கு மாறாக தாம் நினைப்பதையே மக்களின் விருப்பமாக பிரதிநிதித்துவப்படுத்தும் திறமை இவர்களுக்கு உள்ளது. இதற்குப் பல உதாரணங்கள் இலங்கை வரலாற்றில் உள்ளது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் போது சமஷ்டி பற்றிய சித்தாந்தங்களை கோட்பாட்டு ரீதியாகத் தெரிந்துகொண்டு இலங்கைக்குள் காலடி எடுத்து வைத்ததுடன் சிங்கள மக்களின் வாக்கு வங்கியை பெறுவ…

  12. யாழ் நகரில், இரவு வேளைகளில் மதுப்பிரியர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.நகரில் உள்ள மதுபானசாலைகளில் மதுவை அதிகமாக அருந்திவிட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுவதும், வீதியால் செல்வோருக்கு இடையூறு செய்வதாகவும் அவர்களது அட்டகாசம் தொடர்கின்றது. தகாத வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபட்டு மற்றவர்களை வம்புக்கு இழுக்கும் இவர்களை பொலிஸார் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென பொலிஸாரிடம் மக்கள் கோரிக்ககை விடுகின்றனர்.http://www.tharavu.com/2010/10/blog-post_9147.html

    • 0 replies
    • 1.1k views
  13. கல்முனை சாய்ந்தமருது சுனாமி வீடமைப்புத் திட்டத்தில் 22 வயதுடைய இளம் பெண்ணின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கரைவாகு மேட்டுவெட்டை சுனாமி வீடமைப்பு திட்டத்திலேயே இச்சடலம் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இறந்தவர் 22 வயதுடைய பாத்திமா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.திருமணமான இப்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில் புரிகின்றார். சடலம் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கல்முனை பொலிசார் மேலதக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.http://www.tharavu.com/2010/10/blog-post_4782.html

    • 0 replies
    • 945 views
  14. Oct 3, 2010 / பகுதி: செய்தி / யாழில் வெளிவருகின்றது – துணைஇராணுவக்குழுவின் பத்திரிகை சிறீலங்காவின் தலைநகர் கொழும்பில் தினமுரசு என்ற வாரஏட்டை வெளியிட்டுவரும் சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கும் துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பி கட்சி அதனை யாழில் தினசரியாக வெளியிடத் தீர்மானித்துள்ளது. அதன் முதல் பிரதியை துணை இராணுவக்குழுவின் தலைவரும், சிறீலங்கா அரசின் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று முன்தினம் யாழில் வெளியிட்டு வைத்துள்ளார். யாழில் இருந்து உதயன், வலம்புரி, யாழ் தினக்குரல் ஆகிய பத்திரிகைகள் தற்போது வெளிவருகின்றன. இதனிடையே, முன்னர் வெளிவந்த நமது ஈழநாடு பத்திரிகையின் பணியாளர்களை பயமுறுத்தி தனது தினசரியில் பணிபுரிய தேவானந்தா நிர்ப்பந்தித்துள்ளதாகவும் யாழ் தக…

  15. நாங்கள் எதை எதிர்த்தோம்? ஏன் நிராகரித்தோம்? - மனம் திறக்கிறார்கள் மக்கள் பிரதிநிதிகள்! அக் 3இ 2010 அமெரிக்காவில் நியூயோர்க் நகரிலும்இ இங்கிலாந்தில் லண்டன் நகரிலும்இ பிரன்சில் பாரிஸ் நகரிலும் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசுக்கான இரண்டாவது அமர்வில் என்ன நடந்தது என்பதை எமது சக உறுப்பினர்களுக்கும்இ மக்களுக்கும் தெளிவு படுத்த வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளதால்இ நடைபெற்று முடிந்த அத்தனை நிகழ்வுகளையும் எங்கள் மனம் திறந்து உங்கள் அனைவர் முன்பாக வைக்கின்றோம். எமது தேசியத் தலைவர் மீது ஆணையாகவும்இ எங்களது மாவீரர்களின் கனவுகள் மீது ஆணையாகவும்இ எங்கள் மக்களது அர்ப்பணிப்புக்கள் மீது ஆணையாகவும் நடைறெற நிகழ்வுகளை உண்மையாகவும்இ நேர்மையாகவும்இ துணிவோடு இங்கே தெரிவிக்கின்றோம். …

    • 3 replies
    • 1.1k views
  16. ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 3, 2010 ஈழநாதம் தெற்கு ஆசியாவில் நீண்டகாலமாக தம் உரிமைக்காக ஆயுதம் ஏந்திய போராட்டம் பயங்கரவாதம் என்ற போர்வைக்குள் மிகவும் கீழ்த்தரமாக சர்வதேசத்தின் முழு ஒத்துக்ஷைப்புடன் ஒடுக்கப்பட்டு ஓராண்டிற்கு மேல் ஆகின்றது.மழை நின்றாலும் தூறல் நிற்காது என கூறுவார்கள் அதுபோலவே போர் முடிந்துவிட்டது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது என மஹிந்த அரசும் அதற்கு ஆதரவு வழங்கும் நாடுகளும் கூறிவருகின்றனர். என்றாலும் விடுதலைப்போராட்டத்தினை நடாத்தி வந்த தமிழீழ விடுதலைப்புலிகளை வைத்து வியாபாரம் செய்யும் பயங்கரவாத வியாபாரம் இன்னமும் நிற்கவில்லை. மழையினை விட தூறலே நீண்டகாலம் நிலைக்கும் போல இருக்கின்றது இன்றைய நிலை. விடுதலைப்புலிகள் என்பது பயங்கரவாதம் எனும…

    • 0 replies
    • 944 views
  17. ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 3, 2010 ஈழ நாதம் ஆசிரியர் பத்தி மெனிக் முகாமில் இன்னமும் 27 ஆயிரம் பேர்தான் உள்ளனர் அவர்களையும் நாம் விரைவில் விட்டுவிடுவோம் என சிறிலங்கா அரசு சந்திக்கு சந்தி நின்று பிரச்சாரம் செய்கின்றது என்றே கூறலாம். இதில் சர்வதேச ஊடகங்கள் சிலவும் கூடவே நிறுவனங்களும் சிங்கள அரசின் இந்த பிரச்சாரத்தை அப்படியே விழுங்கி விடுவது வினோதம் அல்லது நிலவரம் தெரியாமை என்றும் கூறலாம். உண்மையில் சர்வதேச அழுத்தத்தை குறைப்பதற்கு மஹிந்த அரசால் மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாயங்களில் இதுவும் ஒன்று எனவும் கூறலாம். சர்வதேச அழுத்தத்தை குறைத்தல் மீழ் குடியமர்வு என்ற பெயரில் நிதி வளங்களைப்பெறுதல் போன்றவற்றிற்காகவே மீழ் குடியமர்வு என்ற பெரும் திட்டத்தினை மஹிந்த குடும்பம் நட…

    • 0 replies
    • 720 views
  18. இலங்கைக்கு செல்லும் ஜேர்மனியர்களுக்கு கட்டுப்பாட்டில் தளர்வு _ வீரகேசரி இணையம் 10/3/2010 9:17:27 AM Share _Follow Virakesari on Twitter இலங்கைக்கு செல்லும் ஜேர்மனியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப் பாட்டினை மேலும் தளர்த்த உள்ளதாக ஜேமன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையில் தற்பொழுது நிலவும் அமைதியான சூழ் நிலையை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜேமன் தூதுவர் ஜென்ஸ் புலோட்னர் தெரிவித்துள்ளார். இந்த தளர்வு இம்மாதம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை வடகிழக்கு மாகாணங்களில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கை அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக ஜேர்மனிய அரசங்கம் 15 மில்லியன் அமெரிக…

  19. கிழக்கிலங்கையை முற்றாக தம்வசப்படுத்தியது இலங்கை இராணுவம் திகதி:03.10.2010 சிறிலங்காவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு இராணுவ டிவிசன் மற்றும் ஒரு சிறப்பு அதிரடிப்படை முகாமை நிறுவுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சிறிலங்காவின் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவின் வழிகாட்டலுக்கு அமைய வரையப்பட்டுள்ள புதிய தேசிய பாதுகாப்பு ஒழுங்குமுறையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இது பற்றிய தகவல்களை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய அனுராதபுரவில் நேற்று நடைபெற்ற இராணுவ நிகழ்வு ஒன்றில் வெளியிட்டார். “ பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்சவினால் வழிகாட்டலில் வரையப்பட்டுள்ள புதிய தேசிய பாதுகாப்பு ஒழுங்குமுறைக்கு …

  20. லலிதாவைப் போன்ற முன்னாள் பெண் போராளிகள் படும் இன்னல்களைச் பெருமளவில் சொல்லிக் கொண்டே போகலாம் ‐ தமிழில் ஜீரிஎன் அப்போது லலிதாவுக்கு 23 வயதாக இருந்தது. கிழக்கு மாகாணத்தில் மிக உள்புறமாக அமைந்துள்ள பெரிய புல்லுமலை அவருடைய கிராமம். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் வசித்த ஒவ்வொரு குடும்பத்தினரும் வீட்டுக்கொருவரை கடந்த 3 தசாப்தங்களாக தமிழீழத்தைப் பிரித்தெடுப்பதற்காக அவர்கள் நடாத்தி வரும் போராட்டத்துக்கு ஒரு பிள்ளையைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்தது. அவ்வடிப்படையில் தனது இளைய சகோதரியை இயக்கத்தில் இணைத்துக் கொள்வதைத் தவிரிப்பதற்காக லலிதா அதில் இணைய வேண்டியவளானாள். போராட்டத்தில் இணைந்து 9 வருடங்கள் பெண்புலிகள் குழுவொன்றுக்குத் தலைமையேற்ற…

  21. 02.10.1995 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேகப் பீரங்கிக் கலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் இளநிலா 15ம் ஆண்டு நினைவு வணக்க நாளும், ஓயாத அலைகள் 4 நடவடிக்கையில் 02.10.2000 அன்று எழுதுமட்டுவாழ் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தில்லையழகன்(தில்லை) உட்பட்ட மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு வணக்க நாளும் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம்மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள் படங்களைப் பெரிதாய்ப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.

  22. இலங்கை இராணுவம் ஒரு போராளியை சித்திரவதை செய்து கொலை செய்யும் அதிர்ச்சியூட்டும் காணொளி இலங்கையைத் தளமாகக் கொண்டு இயங்கும் War Without Witness என்கிற அமைப்பு கடந்த வருடம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது இலங்கை அரசினால் மனிதப் பேரழிவுகளும், யுத்தக் குற்றங்களும் நடத்தப்பட்டன என்று தீவிரமாகப் பிரசாரம் செய்து செய்து வருகின்றது. மனிதப் பேரழிவுகள் மற்றும் யுத்தக் குற்றங்கள் ஆகியவற்றுக்கான ஆதாரங்கள் என்று அவ்வப்போது புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றது. அரச படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டார் என்பதற்கான ஆதாரம் என்று சுமார் நான்கு மாதங்களுக்கு முன் புகைப்படங்கள் சிலவற்றை வெளிப…

  23. Oct 2, 2010 / பகுதி: செய்தி / ஸ்ரீலங்கா அரசு குறித்து டேவிட் மிலிபான்ட் கடும் கண்டனம் ஸ்ரீலங்கா அரசு குறித்து முன் நாள் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மிலிபான்ட் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை பிரித்தானிய தொழில்கட்சியின் வருடாந்த மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் முன் நாள் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சருமான டேவிட் மிலிபாண்டும் உரையாற்றியிருந்தார். பிரித்தானியாவின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக உரையாற்றிய அவர் ஸ்ரீலங்கா அரசாங்கம் பல மனித உரிமை மீறல்களைப் புரிந்துள்ளதாகவும், அங்கு வாழும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் உதவிபுரியும் எனவும் குறிப்பிட்டார். பர்மா நாட்டைப் போல் ஸ்ரீலங்காவிலும் மனித உரிம…

  24. சனிக்கிழமை , அக்டோபர் 2, 2010 எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவை சென்றடைந்திருக்கும் 492 இலங்கையர்களில் தம்பதி ஒன்றுக்கு அங்கு பிறந்த பெண் குழந்தைக்கு தமிழ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இக்குழந்தை கடந்த 23 ஆம் திகதி பிறந்தது. எம்.வி.சன்.சி தமிழ் பயணிகள் குழுவின் மத்தியில் முதன்முதல் கனேடிய பிரஜாவுரிமை இக்குழந்தைக்கே கிடைக்கப் பெறுகின்றது. கனேடிய சட்டத்தின் பிரகாரம் அங்கு பிறக்குகின்ற குழந்தைகள் அந்நாட்டுப் பிரஜைகள் ஆவர். Eelanatham.net

  25. புதன்கிழமை, செப்டம்பர் 29, 2010 CTYO விடுதலைப் புலிகளிற்கு எதிராக கனடாவில் போதிய நடவடிக்கைகள் இல்லையென்றும் அங்கே புலிகளின் நடவடிக்கை அதிகரித்துவருவதாகவும் பீரிஸ் குறியுள்ளார். ஆகையால் ஏனைய நாடுகள் போன்று தற்போது கனடாவிலும் புலிகள் மீதான நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இலங்கையின் தேசிய பாதுகாப்பினை அச்சுறுத்தும் வகையில் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்களை நிறுத்த இலங்கை அரசு கனேடிய அரசின் ஒத்தழைப்பையும் வேண்டியுள்ளது. இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட தீவிரவாதம், தற்போது தமது நடவடிக்கைகளை கனடா உட்பட சில நாடுகளில் இருந்து மேற்கொள்ள முயல்வதாக வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் கனேடிய அமைச்சர் லோரன்ஸ் கனோனிற்கு தெரிவித்துள்ளார…

    • 11 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.