ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143232 topics in this forum
-
மாதிரி திட்டம் முன்வைக்கப்படாது பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது அர்த்தமில்லை – விஜித ஹேரத் அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் முதலில் மாதிரி யோசனைத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும் எனவும், அதன் பிறகே ஏனைய அரசியல் கட்சிகளுடன்ஆலோசனை நடத்த வேண்டுமென ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டுமென ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு விரும்பினால், எவ்வாறான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதனையும் ஆளும் கட்சியே முதலில் தெரிவிக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் மாதிh யோசனைத் திட்டமொன்றை பிரேரித்தால் அதனை அடிப…
-
- 0 replies
- 435 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 18, ஜூலை 2010 (18:4 IST) ராஜீவ்காந்தி சொன்னதை கேட்டிருந்தால் பிரபாகரன் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்: ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு பெருந்தலைவர் காமராஜரின் 108-வது பிறந்த நாள் விழா மற்றும் காங்கிரஸ் கட்சியின் 125-வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் விருதுநகர் தேசபந்து திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் EVKS இளங்கோவன் முன்னிலை வகித்தார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய போது இலங்கை பிரச்சனை பற்றி தெரிவித்தார். அவர், ’’ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால் அந்த நாட்டில் கலவரமோ, வன்முறையோ இருக்கக் க…
-
- 12 replies
- 2.2k views
-
-
திசை திருப்பவே இலங்கைக்கு சிறப்புத் தூதர் அனுப்ப கருணாநிதி யோசனை: வைகோ திருநெல்வேலி , ஞாயிறு, 18 ஜூலை 2010( 17:32 IST ) இலங்கைத் தமிழர் பிரச்சினையை மீண்டும் திசை திருப்பும் நோக்கிலேயே, இலங்கைக்கு சிறப்புத் தூதரை அனுப்ப வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதி என்று கூறியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாற்றியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று நெல்லையில் நடந்த திருமண விழாவில் கலந்துகொண்டு பேசுகையில் கூறியதாவது: இலங்கை போர் குற்றங்களை விசாரிக்க ஐ.நா. சிறப்பு விசாரணைக்குழு அமைத்தது. அந்தக் குழுவுக்கு இலங்கை பெரும் கண்டனம் தெரிவித்தது. இதற்கு மாநில அரசோ, மத்திய அரசோ எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்பு இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந…
-
- 1 reply
- 539 views
-
-
யாழ்ப்பாணத்திலுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அரசு பக்கம் சாயலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன. தற்பொழுது யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யும் அமைச்சர்கள் பலரதும் முக்கிய விருந்தினர் மையமாக பலாலி வீதியிலுள்ள விஜயகலா மகேஸ்வரனின் வாசஸ்தலமே இருப்பதாக ஜீரீஎன் செய்தியாளர் கூறுகிறார். ஆளும் பொதுசன முன்னணியில் அங்கத்துவம் வகிப்பவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சந்திப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டாது இருக்கும் அரசின் முக்கிய அமைச்சர்கள், பிரதிநிதிகள் குறிப்பாக விஜயகலா மகேஸ்வரனின் வீட்டிற்கு விஜயம் செய்வதை முக்கிய பாக்கியமாகக் கொண்டுள்ளனர் என ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் விஜயகலா மகேஸ்வரனின் வீடே குடாநாட்டிற்க…
-
- 5 replies
- 1.3k views
-
-
தற்போது இலங்கை அரசின் பாடாய்ப் படுத்தி நிம்மதியைக் கெடுத்து நித்திரையை பறிக்கச் செய்கின்ற ஒரு விடயமாக பார்க்கப்படுவது ஐ.நா.செயலாளர் பான் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட போர்க்குற்ற விசாரணை ஆலோசனைக் குழுவின் செயல்பாடாகும். இக்குழு தாமதமாக ஆரம்பிக்கப்பட்டாலும், மிக மிக குறைந்த வேகத்தோடு, தனது இலக்கு நோக்கிய பயணத்தை ஆரம்பித்து இருக்கிறது. இதனால் இப்போது இலங்கை அரசின் அடிவயிற்றில் புளி கரையத் துவங்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத் தான் ஜனநாயக அரசு என கூறிக் கொண்டு இருக்கும் இலங்கை அண்மைக் காலமாகவும், அசிங்கமான அறுவெறுக்கத்தக்க நிகழ்வுகளை கொழும்பில் அரங்கேற்றி வருகிறது. இது அதன் தோல்வியின் ஆரம்பப் புள்ளியாக நடுநிலையாளர்களால் பார்க்கப்படுகின்றது. இக்குழு அமைப்புத் தொடர்பான ஒர…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 18, ஜூலை 2010 (22:9 IST) சிறைக்குள் சீமானிடம் முருகன் வைத்த கோரிக்கை தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக் கொல்வதைக் கண்டித்தும் கடந்த 10ம் தேதி நாம் தமிழர் அமைப்பு சார்பி்ல், சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சீமான் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி இம்மனுவை தள்ளுபடி செய்தார். இந்நிலையில் சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில், ‘’பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த பா…
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கையில் சீன ஆதிக்கமானது சூடானில் சீனா ஏற்படுத்திய ஆதிக்கம் போல வந்துவிட்டது. ஆனால் இலங்கை ஆட்சியாளர்கள் தான் மீண்டும் மீண்டும் வரலாற்று பாடங்களை கற்க மறுக்கின்றனர் என கொழும்பு வார ஏடு ஒன்று தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு சீனா 1000 மில்லியன் டொலர்களை கொட்டி வேலைத்திட்டங்களை துவங்கியுள்ளது. இந்த திட்டமானது சீனா சூடானில் செய்தது போன்றுதான் உள்ளது. சீனா இந்து சமுத்திரத்தில் தனது கடல் வாணிப மற்றும் படைத்துறைக்கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் திட்டத்துடன் மற்றும் கலங்களை பராமரிக்கும் நோக்குடந்தான் இதனை செய்கின்றது. வரையறுக்கப்படாத நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தத்தில்தான் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. கூடவே நிரந்தர பணியாளர்களாக ஆயிரக்கணக்கான சீ…
-
- 2 replies
- 1k views
-
-
Jul 18, 2010 / பகுதி: கட்டுரை / ஈழத்திற்கு விலைபேசும் ‘புத்தக’ஜீவிகள் - சேரமான் அண்மையில் தமிழகத்தில் இடம்பெற்ற செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்ட பேராசிரியர் சிவத்தம்பி செய்தியாளர்களிடம் கருத்துக் கூறுகையில், ஈழம் என்ற சொற்பதத்தை தான் பயன்படுத்துவதில்லை என்றும், அது சிங்கள மொழியில் இருந்த உருவாகிய சொல் என்றும், அதனை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் தவறாகக் கையாண்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், தமிழ்நாட்டவர்கள் தங்களை இந்தியர்கள் என்று கூறிக்கொள்வது போன்று, தானும் தன்னை இலங்கையன் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைவதாகவும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் மேலும் தெரிவித்திருந்தார். உண்மையில் ஈழத்தில் இன்று மிஞ்சியிருக்கக்கூடிய குறிப்பிடத்தக்க மூத…
-
- 0 replies
- 1k views
-
-
அல் குவைதாவுக்கும் புலிகளுக்குத் தொடர் உண்டாம் - ஆஸிக்கான சிறீலங்காத் தூதுவர் சொல்கின்றார் திகதி: 18.07.2010 // தமிழீழம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புகள் உள்ளன என்று இலங்கை நேற்றுத் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர் சேனக வலகம்பாய அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அப் பேட்டியில் முக்கியமாகத் தெரி வித்துள்ளவை வருமாறு, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற் குப் பயங்கரவாத அமைப்புக்கள் பலவற்று டனும் தொடர்புகள் உள்ளன. குறிப்பாக அல் கொய்தாவுடன் தொடர்புடைய அமைப்புக்க ளுடனும் அல் கொய்தாவுடனும் புலிகளுக்குத் தொடர்புகள் உ…
-
- 2 replies
- 773 views
-
-
எதிரியின் அரசியல் : சபா நாவலன் மூன்று தசாப்தகால அரசுக்கெதிரான புலிகளின் யுத்தம் அழிவுகளை மட்டுமே எச்சங்களாக விட்டுச்சென்றிருக்கிறது. இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு கோலோச்சியதற்கான அடையாளங்கள் எல்லாம் அழிவுகளாகவும், சிதைவுகளாகவுமே காணப்படுகின்றது. புலிகள் விடாப்பிடியாக முன்வைத்த ஏகப்பிரதிநிதித்துவ உரிமையிலிருந்து தமிழ் மக்களின் அனைத்து தார்மீக உரிமைகளையும் இனப்படுகொலை ராஜபக்ச அரசிடம் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டனர். இலங்கையைப் பொறுத்தவரை வடக்கிலும் கிழக்கிலும், அங்கும் இங்குமாகப் புலிகள் இயக்கத்தின் தொடர்ச்சியும் ஆயுதக் குழுக்களும் காணப்படுவதை யாரும் மறுக்கமுடியாது. புலிகள் தலைமையின் எஞ்சிய ஒரு பகுதி ராஜபக்ச அரசோடு கைகோர்த்துக்கொண்டுள்ள…
-
- 0 replies
- 897 views
-
-
Jul 16, 2010 / பகுதி: செய்தி / கயல்வழி புலிகள் உட்பட 200 பேருடன் கனடா நோக்கி கப்பலாம் - இலங்கை பத்திரிகை விடுதலைப் புலிகள் உட்பட 200 இலங்கையருடன் தாய்லாந்துக் கப்பல் ஒன்று கனடா நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக இலங்கைப் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள தகவல் தொடர்பாக கவனம் செலுத்தப்படுவதாக கனடா அறிவித்துள்ளது. இவ்வாறு யாராவது தமது நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டால், கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக பன்னாட்டு சட்டத்திற்கு அமைவாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கனடிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை செய்துள்ளார். கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் இலங்கையர்கள் 76 பேருடன் கப்பல் ஒன்று கனடாவைச் சென்றடைந்திருந்தது. இதில் விடுதலைப் புலிகளும் உள்ளடங்கி இருப்பதாக…
-
- 9 replies
- 934 views
-
-
-
- 3 replies
- 591 views
-
-
விடுதலைப் போராட்டம் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் சொந்தம் அதே போல் போராட்டத்தால்வரும் கஷ்டங்களும் துன்பங்களும் எல்லோரும் ஒன்றிணைந்து பங்குகொள்ள வேண்டும் .ஒன்றினைந்துநாம் மனஉறுதியுடன் போராட்ட ஆரம்ப காலத்தில் எப்படி ஆரம்பித்தோமோ அதேபோல் எல்லோரும் தமிழுக்காகமீண்டும் ஒருமுறை ஆரம்பிக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் எம் முன்னுள்ளது .அமைதிவழி ,அஹிம்சாவளி ,ஆயுத போராட்டம்என விரிவுபட எமது போராட்டம் உலகை உலுக்கியதால் உலகம் தந்திரமாக எமது போராடத்தை அழித்தேவிட்டது . ஆரம்ப காலத்தில் எமது போராட்டம் நவீனமயப்படாமல் ஆரம்பித்த போது இல்லாத பிரச்சனைகள் இப்போது ஆரம்பித்துஎமது தமிழ் தாயின் இதயத்தில் குத்தி கீறி கிழித்துவிட்டது.அதற்கு மருந்து எம்மால் கொடுக்க முடியாவிட்டாலும்வெந்த புண்…
-
- 0 replies
- 974 views
-
-
பல்கலைக்கழகங்களில் பகிடிவதையில் ஈடுபடுவோரின்பல்கலைகழக அனுமதி ரத்து செய்யப்படும். இலங்கையின் பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளுக்கு தடை கொண்டு வரப்பட்டுள்ளது. பகிடிவதை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அடையாளம் காணும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேற்றப்படுவர் என உயர்கல்வி அமைச்சர் எஸ் பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக பகிடிவதைக்கு எதிரான சட்டத்தின் கீழ்,குற்றம் காணப்படுபவர்களுக்கு எட்டு மாத சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல்கலைக்கழக மாணவர்கள்,ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.என்றும் ஆனால் ; வகுப்புகளை பகிஸ்கரிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் மாணவர்களின் வரவு 80 வீதத்…
-
- 1 reply
- 474 views
-
-
இன்ரபோலின் உதவியுடன் சிறிலங்கா புலனாய்வுத்துறையின் சர்வதேச புலிகள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்வதாக கூறப்படுகின்றது. இதில் முக்கியமாக அவர்களால் இலக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்களையும் வெளியிட்டுள்ளது சிறிலங்கா அரசு. ஐயா எனப்படும் சங்கானையினை பிறப்பிடமாக கொண்ட பொன்னையா அனந்தராஜா அல்லது இராஜா எனப்படும் ஐயா இவர் அமெரிக்கன் பாஸ்போட் வைத்துள்ளாராம். இவர் விடுதலைப்புலிகளுக்கு ஆயுத கொள்வனவிற்கு பொறுப்பாக 2003 ஆம் ஆண்டில் இருந்து நியமிக்கப்பட்டவர் என கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக அச்சுதன் எனப்படும் சிவராஜா பிருந்தாபன் இவர் யாழ்ப்பாணத்தினை சேர்ந்தவர் 1972 ஆம் ஆண்டு பிறந்தவர் பிரான்ஸ் பாஸ்போட்டினை வைத்துள்ளாராம். இவரும் தென் ஆசிய நாடுகளில் கொள்வனவு நடவடிக்கை மற்றும் விடுதலைப்புலிக…
-
- 0 replies
- 1.2k views
-
-
முன் நாள் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பர நாதன் அவர்களும் அவரது கணவர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் கொடிகாமத்தில் விபத்திற்குள்ளாகினர். யாழில் இருந்து கொழும்பிற்கு செல்கின்றவேளை கொடிகாமத்தில் லொறி ஒன்றுடன் அவர்களது வான் மோதியதில் படுகாயத்திற்குள்ளாகிய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் Eelanatham
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை விவகாரத்தை கையாளத் தகுதியற்ற சக்திகளிடம் தமிழக, மத்திய ஆட்சி சிக்கியுள்ளது: தினமணி நாளிதழ் ஞாயிற்றுக்கிழமை, 18 யூலை 2010, 12:23.17 AM GMT +05:30 ] இலங்கை விவகாரம் தென்னிந்தியா வின் அமைதிக்கு ஊறு விளைவிக்கும் ஆபத்து என்பதை உணர்ந்த மத்திய அரசைப் புரிய வைத்து நடவடிக்கை எடுக்க வைக்கும் திறமையற்ற சக்திகளிடம் 20 ஆண்டுகளாகத் தமிழகத்தின் ஆட்சி சிக்கிவிட்டது. என்று தமிழக ஆட்சியாளர்களைச் சாடி நேற்றைய தினமணி நாளிதழில் ஆசிரியர் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது. அதே ஆசியர் தலையங்கத்தில் ஒரு ராஜபக்ஷவை எதிர்கொள்ளும் இராஜதந்திரம் கூடத் தெயாதவர்களின் கைகளில் நாடும் ஆட்சியும் அதிகாரம் சிக்கிச் சீரழிகின்றது என்று மத்திய அரசின் கையாலாகாத்தனம் பற்றியும் குறிப்பிட்டுள்ள…
-
- 1 reply
- 684 views
-
-
ஐக்கிய நாட்டிற்கான இலங்கை பொலிசார் தெரிவில் இழுபறி ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைக்கு இலங்கையில் இருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ள 100 பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் யாவும் இடை நிறுத்தப்பட்டுள்ளன. முன்னர் நடைபெற்ற நேர்முகப்பரீட்சையில் 100 பொலிஸார் இறுதிக்கட்ட தெரிவு இன்று இடம்பெறவிருந்தது. இதற்காக ஐக்கிய நாடுகளின் இரண்டு அதிகாரிகள் வருகைதரவிருந்தனர் எனினும் அவர்கள் வரும் விடயம் குறித்து தற்போதைக்கு தகவல்கள் எவையும் இல்லை என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு நியமனத்தில் இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலையே இதற்கான காரணம் என தெரிவிக்…
-
- 0 replies
- 436 views
-
-
ஏர்டெல்லை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும் – மே 17 இயக்கம் “ஏர்டெல்லை நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்” என்ற தலைப்பில் நாளையும் நாளை மறுநாளும் ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவையில் மே 17 இயக்கத்தினரால் கருத்தரங்கம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு நமது மீனகம் தளத்தில் நேரலை ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது. 18.07.2010 தாயக நேரப்படி காலை 11.30 மணியளவில் மீனகம் தளத்தில் நேரலையாக ஒலிபரப்பு செய்யப்படுகிறது. http://meenakam.com/?p=2650
-
- 0 replies
- 653 views
-
-
சர்வதேச நீதிமன்றில் இலங்கை வழக்கு தொடரவுள்ளது பான் கீ மூனின் ஆலோசனைக் குழுவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பிரகடனத்தின் 6ம் மற்றும் 33,34ம் உப பிரிவுகளுக்கு புறம்பான வகையில் செயலாளர் நாயகம் ஆலோசனைக் குழுவினை உருவாக்கியுள்ளதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. பான் கீ மூனின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஹேக்கில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடர்வதற்கான ஆயத்தங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது வழக்குத் தொடர்வது குறித்து சர்வதேச சட்ட வல்லுனர்களின் ஆலேசானைப் பெற்றுக்கொள்ளப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடு என்ற ரீதி…
-
- 0 replies
- 611 views
-
-
நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையை உருவாக்குவதற்கு ஜே வி பி எதிர்ப்பு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமக்கசிங்கவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதம மந்திரி முறையை ஏற்படுத்தவதற்கான இணக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜே வி பியுடனும் தமிழ்தேசியக்கூட்டமைப்பினருடனும் பேச்சு நடத்த அரசு விரும்புகின்றது. http://meenakam.com/?p=2782
-
- 0 replies
- 482 views
-
-
தமிழ் தொண்டு நிறுவனம் கனடாவில் தடை கனடாவில் இயங்கி வந்த ஒட்டாவா தமிழ் அகதிகளுக்கான சமுக சேவை நிறுவனத்தின்; பதிவுகளை, கனேடிய வருமான வரித்துறையினர் ரத்து செய்துள்ளதாக கனேடிய வரிவருமான சட்டத்தின் 168 – 1ம் இலக்க சரத்தின் கீழ், நேற்று ; அமுலுக்கு வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நிதிகளை கையாள்தல் மற்றும் நிர்வகித்தல் தொடர்பில் குறித்த நிறுவனம் முறையாக செயற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு அதன் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ் அமைப்பினால் சுமார் 7 லட்சத்து 13 ஆயிரம் அமெரிக்க டொலர்கள், பெயர் குறிப்பிடாத அமைப்பு ஒன்றுக்கு நிதியாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிதி தமிழீழ விடு…
-
- 0 replies
- 675 views
-
-
தமிழ் மக்களுக்கான காவல்துறைப் பதிவு மீண்டும்! அவசரகாலச் சட்டத்தை தளர்த்தி காவற்துறை நிலையங்களில் இனிமேல் பொதுமக்கள் பதிவுசெய்யப்பட மாட்டார்கள் என அமைச்சர் பீரிஸ் நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்த நிலையில், அதற்கு முரணாக காவற்துறையினர் தமிழ் மக்களை மீண்டும் காவற்துறை நிலையங்களுக்கு அழைத்து பதிவுசெய்யும் நடவடிக்கைகளை காவற்துறையினர் ஆரம்பித்துள்ளனர் மேல் மாகாணத்தின் வெள்ளவத்தை கொட்டாஞ்சேனை, புறக்கோட்டை போன்ற பிரதேசங்களில் இந்த காவற்துறை பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் இதன் ஊடாக தமிழ் மக்களிடம் சந்தேகத்திற்கு இடமான விடயங்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளர் தமிழ் மக்களை அசௌகரித்…
-
- 0 replies
- 465 views
-
-
திருகோணமலைத் துறைமுகத்தில் முதல் தடவையாக இரு நாட்டு போர்க் கப்பல்கள்! திகதி: 18.07.2010 // தமிழீழம் திருகோணமலைத் துறைமுகத்தில் முதல் தடவையாக இரு நாட்டு கடற்படை கப்பல்கள் ஒன்றாக தங்கியுள்ளன. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல் கடந்த புதன் கிழமை திருக்கோணமலை துறைமுகத்தை வந்தடைந்து விசேட நிகழ்வுகளில் பங்குபற்றி வருகின்றது. இந்நிலையில் “ஐ.என்.ஸ் நிருபக் ” என்கிற இந்தியக் கடற்படைக் கப்பலும் வியாழக்கிழமை மாலை திருக்கோணமலையை வந்தடைந்தது. இந்திய-அமெரிக்க கடற்படையுடன் இணைந்து இலங்கைக் கடற்படை கூட்டுப் பயற்சியில் ஈடுபடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சங்கதி
-
- 0 replies
- 396 views
-
-
சனிக்கிழமை, 17, ஜூலை 2010 (22:27 IST) இலங்கையில் நடந்த ஐஃபா நிகழ்ச்சியை தமிழ்த்திரையுலகம் புறக்கணித்தது சரிதான் - ஏ.ஆர்.ரகுமான் பேட்டி! வரும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கிலாந்தில் தன்னுடைய இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். இதற்காக லண்டன் சென்றிருக்கும் அவர் அங்கே செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது, இலங்கையில் நடந்த ஐஃபா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில்லை என்று தமிழ்த்திரையுலகம் முடிவு எடுத்தது சரிதான் என்றும்....மிகவும் உணர்வுப்பூர்வமான விடயங்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த முடிவு சரியானதாகவே அமைந்திருக்கும். மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்ட விஷயம் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறா…
-
- 2 replies
- 1.3k views
-