ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142976 topics in this forum
-
ஈழத்தில் போர் முடிந்தும் சித்திரவதை ஓயவில்லை வாக்களித்தபடி முகாம்களிலிருந்து தமிழர்களின் மீள் குடியமர்த்தமும் நடைபெறவில்லை தமிழர்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் பிப்.16 இல் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!! ஒத்த கருத்துள்ள தமிழர்களே பங்கேற்பீர்! தமிழர் தலைவர் அறிக்கை போராளிகளை ஒடுக்குவதுதான் எங்கள் நோக்கம்; ஈழத் தமிழர்களுக்கு வாழ்வளிப்போம் என்று கூறிய இலங்கை அரசு போர் முடிந்த பிறகும்கூட, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான செயல்களில் இறங்காமல், முள்வேலி முகாமுக்குள் பல்லாயிரக் கணக்கான தமிழர்களை சிறைபடுத்தி வைத்திருக்கும் நிலையில், அவர்களின் வாழ்வுரிமையை வலியுறுத்தி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: …
-
- 0 replies
- 900 views
-
-
கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் புலத்துத் தமிழருக்கும் இடம் கொடுங்கள். ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான ஆரவாரங்கள் தொடங்குகின்றன. நாடாளுமன்றமும் பெப்ரவரி மாதம் 9ம் திகதி கலைக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 19 - 26 வரையான திகதிக்குள் வேட்பாளர் நியமனம் கோரப்படும் எனவும் ஏப்ரல் மாதம் 8ம் ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நாடாளுமன்றத் தேர்தல், ஈழத் தமிழர் தேசத்தினைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான தேர்தலாக அமையும். இத் தேர்தலில் தமிழர் பிரதேசங்களில் வெற்றி பெறுவோரே ஈழத் தமிழர் தேசத்தின் தாயக அரசியல் தலைமையாகக் கருதப்படுவர். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழரசுக் கட்சியின் சார்பில் வீடு சின்ன…
-
- 0 replies
- 989 views
-
-
சரத் பொன்சேக்கா போன்ற நாட்டை விடுவித்த ஒரு யுத்த வீரனுக்கு இழைக்கப்பட்டுள்ளது ஒரு பெரிய அநியாயம் என்றும் இதனை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்றும் மல்வத்தை பீட மகாநாயக்கர் தெரிவித்துள்ளார். அதே போல உண்மையை அறிவது மக்களின் உரிமை என்றும் அதை எழுதுதுவது ஊடகவியலாளரின் கடமை என்றும் அதை மறைக்கவும் தடுக்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகளை சகலரும் கண்டிக்க வேண்டும் என்றும் மகாநாயக்கர் கேட்டுள்ளார். இது குறித்து நீங்கள் ஆட்சியாளருக்கு எடுத்துச் சொல்ல முடியாதா என்று கேட்டதற்கு நாம் சொல்வதைக் கேட்பவர்களாக இன்றைய ஆட்சியாளர்கள் இல்லையென்றும் இது போன்றவர்களைத் தெரிவு செய்தது மக்களின் தவறு என்றும் மகாநாயக்கர் தெரிவித்தார். பௌத்தி பீடங்களின் அதிஉயர் பதவியான மகாநாயக்கர் பதவியி…
-
- 20 replies
- 2.6k views
-
-
செவ்வாய், பிப்ரவரி 9, 2010 19:55 | ஞானசீலன், யாழ்ப்பாணம் இடம் பெயர்ந்த நிலையில் கல்வி கற்றுவரும் 2 மாணவர்கள் தற்கொலை!! யாழ் பல்கலைக்கழகம் துக்கத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த முதலாமாண்டு மாணவர்கள் இருவர் இன்று காலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று யாழ் பல்கலைக்கழகத்தையும் கல்வி சமூகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள என பதிவு இணையத்தின் யாழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். புதுக்குடியிருப்பு மற்றும் வள்ளிபுனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த உற்ற நண்பர்களான இருவரும் இருபாலையில் உள்ள தமது உறவினர் வீடு ஒன்றுக்கு இன்று காலை சென்ற பின்னர் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றினுள் வீழ்ந்து தற்கொலை செய்துள்ளனர். இவ் முடிவுக்கு முன்னர் அவர்க…
-
- 11 replies
- 1.6k views
-
-
ஜெனரல் சரத் பொன்சேகா ஓய்வு பெற்றாலும் 6 மாத காலம் இராணுவ சட்டத்திற்கு உட்பட்டவர் வீரகேசரி நாளேடு 2/10/2010 9:56:42 AM - இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, ஓய்வு பெற்ற நிலையிலும் இராணுவ சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவராவார். ஓய்வு பெற்று ஆறு மாத காலத்துக்குள் அவர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைக்குட்படுத்த பாதுகாப்பு அமைச்சுக்கு பூரண அதிகாரம் உள்ளது. எனவே இதன் அடிப்படையில் அவர் இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இராணுவ தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகாவை சந்திப்பதற்கான அனுமதி…
-
- 0 replies
- 659 views
-
-
செவ்வாய்க்கிழமை, 9, பிப்ரவரி 2010 (11:25 IST) பொன்சேகாவை தூக்கிலிட திட்டம்? இலங்கை முன்னாள் தலைமை ராணுவ தளபதி பொன்சேகாவுக்கு தூக்கு தண்டனை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்களை ரகசியமாகவும், விரைவாகவும் விசாரணை நடத்தி அதிகபட்ச தண்டனை வழங்க அதிபர் ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போரின்போது, அந்நாட்டு ராணுவ தலைமை தளபதியாக இருந்தவர் சரத் பொன்சேகா. போர் முடிவடைந்ததை தொடர்ந்து, அதிபர் ராஜபக்சேவுக்கும், பொன்சேகாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பொன்சேகா, முக்கியத்துவம் இல்லாத பதவிக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, பொன்…
-
- 28 replies
- 3.5k views
-
-
ராஜபக்சேவுக்கு சுஷ்மா சுவராஜ் கோரிக்கை இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா அந்நாட்டின் அதிபர் ராஜபக்சேவை கொலை செய்ய முயன்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’அண்டை நாடான இலங்கையில் இத்தகைய சம்பவம் நடைபெறுவதை, மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவினால் ஏற்றுக் கொள்ளமுடியாது’’ என்று கூறியுள்ளார். ##################### ஆனால் ஒருத்தரை பிடித்து வைத்திருப்பதற்கு சத்தம் போடும் இந்திய அரசிய…
-
- 4 replies
- 1.7k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் போராளிகள் படையினரால் கொல்லப்பட்டது தொடர்பில் விஜய் நம்பியாரைக் பாதுகாக்கும் முயற்சிகள் ரகசியமாக நடந்து வருவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வெள்ளைக் கொடியுடன் விடுதலைப் புலிகள் இயக்க மூத்த தலைவர்கள் ராணுவத்திடம் சரணடைய வந்தபோது அவர்கள் அனைவரும் கோத்தபயா ராஜபக்சேவின் உத்தரவின் பேரில் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்தபோது விஜய் நம்பியார் கொழும்பில் இருந்ததாக கூறப்படுகிறது. விஜய் நம்பியார் கொடுத்த உறுதிமொழியை நம்பித்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்கள் சரணடையச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த விவகாரத்தில் நம்பியாரின் தொடர்புகளும் தற்போது வலுவாக ஆராயப்பட்டு வருகின்றன. ஆனால் நம்பிய…
-
- 6 replies
- 2.7k views
-
-
கடத்திச் சென்று சிறைவைத்த நடவடிக்கையானது 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து மக்களுக்கு சமாதானத்தை உருவாக்கிய தமது கணவருக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கிய பரிசு என அனோமா பொன்சேக்கா கூறியுள்ளார். ஜெனரல் பொன்சேக்காவின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். 30 வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த ஜெனரல் ஒருவரை அரசாங்கம் இவ்வாறு நடத்துமாயின் எதிர்காலத்தில் நாட்டு மக்களை நடத்தும் விதத்தை எண்ணிப் பார்க்க முடியாது. சரத் பொன்சேக்கா இரகசியமான இடமொன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவர் கைதுசெய்யப்பட்டிருந்தால் ஏன் இரகசியமாக தடுத்துவைக்க வேண்டும். ஜெனரல் பொன்சேக்கா கைதுசெய்யப்படவில்லை. அவர் கடத்தப்பட்டுள்ளார். நேற்றிரவு 9.30 அளவ…
-
- 16 replies
- 1.4k views
-
-
சரத் பொன்சேகா கைது பற்றி அச்சந்தர்ப்பத்தில் அவருடன் கூட இருந்த மனோ கணேசன் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வி இங்கு நன்றி ATBC
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்தத் திரியில் சிறிலங்கா சனாதிபதித் தேர்தல் முடிவுகளை முடிந்தளவுக்கு தர முயல்கின்றேன். ஏனையவர்களும் தொடர்ந்து கிடைக்கப்பெறும் முடிவுகளை தாருங்கள் UPFA: மகிந்த NDF: சரத் நாடளாவிய ரீதியில் மஹிந்த: 6,015,934------57.88% சரத்: 4,173,185------40.15% சிவாஜிலிங்கம்: 9,662-------0.09% விக்கிரமாகு: 7,055-------0.07% தொகுதி ரீதியான முடிவுகள் Galle / Karandeniya Mahinda Rajapaksha 34,809 --71.00% Sarath Fonseka 13,420 -27.37% கண்டி / கம்பளை Mahinda Rajapaksha 33,078 49.62% Sarath Fonseka 32,090 48.14% Matara District /Kamburupitiya Mahinda Rajapaksha 40,879 --70.04% Sarath Fonseka 16,561 --28.37% வித்திய…
-
- 272 replies
- 22.5k views
-
-
பொன்சேகா கைது: சிறிலங்கா நிலைவரம் குறித்து அமெரிக்கா கவலை .சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக அமெரிக்க அரசு கவலை தெரிவித்துள்ளது. அரசு மேற்கொண்டுள்ள கைது நடவடிக்கை சமூகங்களின் மத்தியில் மேலும் பிளவுகளை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளத என்று அமெரிக்காவின் இராஜாங்கத்திணைக்கள பேச்சாளர் பிலிப் க்ரெளலி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் - "போர் முடிவடைந்துள்ள நிலையில் சிறிலங்காவில் சமூகங்களுக்கு மத்தியில் காணப்படும் பிளவுகளை சீர் செய்து ஒற்றுமையை கட்டி வளர்ப்பது என்பது சிறிலங்காவுக்கு பிரதான சவாலாக உள்ளது. இவ்வாறான ஒரு நிலையில், அந்த பிளவுகளை மேலும் மோசமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்பதில் சிறிலங்கா …
-
- 6 replies
- 1.4k views
-
-
ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு மீண்டும் ஆதரவு மட்டு. முதல்வர் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவாக செயற்படத் தீர்மானித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதித் தேர்தலின்போது ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்தேன். எனினும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணையவில்லை. இன்னும் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவே இருந்து வருகிறேன். அந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதே பொருத்தமானது என நினைக்கிறேன். எனினும் எனது நிலைப்பாடு தொடர்…
-
- 20 replies
- 1.4k views
-
-
ஜி.எஸ்.பி சலுகையைப் பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் நிபந்தனைகளை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் ஆயினும் ஐரோபிய ஒன்றியத்துடன் சுமுக உறவுகளைப் பேணுவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தப் போவதாகவும் சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் றோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். ஏற்கனவே எடுத்த முடிவின் படி ஐரோப்பிய ஒன்றியம் இந்தத் தடையை கொண்டு வருமானால் தமது முடிவு தவறானது என்பதைக் காலம் கடந்து உணர்ந்து கொள்ளும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். http://www.eelamweb.com/
-
- 4 replies
- 1.1k views
-
-
வெளிநாட்டு தமிழரின் பணத்தில் தெற்கு அபிவிருத்தி: யாழ்ப்பாணம் நோக்கிப் படையெடுக்கும் சிறிலங்காவின் வங்கிகள் [ புதன்கிழமை, 20 சனவரி 2010, 01:59 GMT ] [ கார்வண்ணன் ] யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களின் சேமிப்புகளை முதலீடாக்கிக் கொள்வதில் சிறிலங்காவின் வங்கிகள் போட்டி போடத் தொடங்கியுள்ளன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்த பின்னர், யாழ்ப்பாணத்தில் கிளைகளை அமைத்து தமிழ் மக்களின் சேமிப்புகளை முதலீடாக்கும் முயற்சிகளில் பெரும்பாலான சிறிலங்கா வங்கிகள் இறங்கியுள்ளன. நேற்று ஒரே நாளில் இரண்டு வர்த்தக வங்கிகள் யாழ்ப்பாணத்தில் தமது கிளைகளைத் திறந்துள்ளன. சனச வங்கி, வர்த்தன வங்கி ஆகியனவே நேற்று யாழ்.நகரில் கிளைகளை ஆரம்பித்துள்ளன. அதே வேளை, போர் முடிவுக்க…
-
- 6 replies
- 1.3k views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 09.02.2010 அன்று ஒலிபரப்பாகிய தமிழகபப் பக்கம் செவ்வி. நன்றி- ATBC
-
- 0 replies
- 1.1k views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 09.02.2010 அன்று ஒலிபரப்பாகிய உதயன் / சுடரொளி ஆசிரியரின் செவ்வி. நன்றி- ATBC
-
- 0 replies
- 980 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 09.02.2010 அன்று ஒலிபரப்பாகிய கொழும்புச் செய்தியாளரின் செய்தித் தொகுப்பு. நன்றி- ATBC
-
- 0 replies
- 818 views
-
-
அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலியில் பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் செய்தியலைகள் நிகழ்ச்சியில் 09.02.2010 அன்று ஒலிபரப்பாகிய யாழ்ப்பாணச் செய்தியாளரின் கருத்தாய்வு நன்றி- ATBC
-
- 0 replies
- 779 views
-
-
சிறிலங்காப் பாராளுமன்றம் சற்று முன்னர் கலைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் பிரசுரத்திற்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார் புதிய தேர்தல் தொடர்பான விபரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை. http://www.eelamweb.com/
-
- 8 replies
- 1.1k views
-
-
செவ்வாய், பிப்ரவரி 9, 2010 19:21 | கோகுலவதனன், வவுனியா தமிழர் தாயகத்தில் எண்ணை அகழிவில் ரஸ்ய நிறுவனம் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் எண்ணெய் வளத்தை அபகரிக்க சிறீலங்கா அரசு அவசரமாக மேற்கொள்ளும் முயற்சிகளில் பல நாட்டு நிறுவனங்களுக்கு எண்ணெய் படிமங்கள் உள்ளதாக கூறப்படும் பகுதிகளை குத்தகைக்கு விட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக இறுதியாக ரஸ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் அகழ்வு நிறுவனமான கஸ்பிரோமிற்கும் மன்னார் வளைகுடாவில் எண்ணெய் அகழும் அனுமதியை வழங்கி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சீனா இந்தியா போன்றவை தமக்கான அகழ்வுப் பகுதிகளை வரையறுத்து ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ள நிலையில் தற்போது ரஸ்யாவும் அதில் இணைந்துள்ளது. முன்னர் …
-
- 2 replies
- 869 views
-
-
தமிழர்களை காக்கத் தவறிய தமிழக அரசின் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க முடியாது: மலேசிய துணை முதல்வர் அறிவிப்பு திகதி: 09.02.2010 // தமிழீழம் இலங்கைத் தமிழர்களின் துயர நிலையை இந்திய மத்திய அரசிடம் எடுத்துக் கூறி நிவாரணம் பெற்றுத் தர தமிழக அரசு தவறி விட்டது. எனவே கோவை உலக செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என்று மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் டாக்டர் பி.இராமசாமி கூறியுள்ளார். கோவையில் உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாடு கோவை வ.உ.சி.பூங்கா மைதானத்தில், கலந்து கொண்ட டாக்டர் பி.இராமசாமி மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகையில், 'உலகம் எங்கும் பரந்து கிடக்கும் தமிழர்களுக்கு கடந்த காலங்களில் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டது. உலக அளவில் உள்ள தமிழர்கள் பல்வேறு அச்சுறுத்தல்க…
-
- 3 replies
- 1.5k views
-
-
சரத் பொன்சேகா சற்று நேரத்தின் முன் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்..... Former Army Chief General Sarath Fonseka Was arrested a short while ago .........MP Mano Ganeshan Dilly morror
-
- 47 replies
- 4.9k views
-
-
முன்னாள் தமிழ் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் நாடு திரும்பத் திட்டம்: முரளிதரன் (கருணா) தமிழீழ விடுதலைப் புலி அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு தப்பிச் சென்ற முன்னாள் தமிழ் அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் நாடு திரும்ப உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிக்காக இவர்கள் பாடுபட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தற்போது லண்டனில் வசித்து வரும் முன்னாள் அமைச்சர் கணேசமூர்த்தி, முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஆர்.மௌனகுருசாமி ஆகியோர் ஏற்கனவே நாடு திரும்பி உள்ளதாக தேசநிர்மான அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். குறித்த இருவரும் ஐக்கிய மக்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
செவ்வாய்க்கிழமை, 9, பிப்ரவரி 2010 (11:55 IST) தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: மீன்களை பறித்து இலங்கை கடற்படை அட்டகாசம் நாகப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதால் நாகை மீனவர்கள் ஆவேசமடைந்தனர். நாகை அக்கரை பேட்டை பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று நள்ளிரவு 2 விசைபடகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். சில கி.மீ தூரம் அவர்கள் சென்ற போது திடீரென இலங்கை கடற்படையினர் 2 படகுகளையும் சுற்றி வளைத்தனர். இலங்கைடற்படையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 3 முறை சுட்டனர். மேலும் தண்ணீரிலும் சுட்டனர். மேலும் மீனவர்கள் பிடித்த மீன்களை பறிமுதல் செய்து படகையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அக்கரைபேட்டை மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்…
-
- 3 replies
- 693 views
-