ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகள் , ஆட்கடத்தல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு பொறுப்பான இயக்குனர் பிலிப் அல்ஸ்ரன் இலங்கை அரசை சரத்பொன்சேகாவின் கூற்றுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார். இந்த கடிதத்திற்கு மனித உரிமை அமைச்சின் செயலர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க உடனடியாக பதில் கடிதம் ஒன்று காரசாரமாக அனுப்பியுள்ளார். அனுப்பிய கடிதத்தினை பின்னர் வாசித்து பார்த்த கொழும்பு புத்திசாலிகள் இந்த கடிதம் மிக மிக ஆபத்தானது உடனடியாக வாபஸ்பெறப்பட வேண்டும் என கூறியுள்ளனர். உடனடியாக அரசாங்கம் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளிற்கான இலங்கையின் நிரந்தர செயலர் ஊடாக அந்த கடிதத்தினை மீழபெற கூறியுள்ளனர். இதன்படி ஜெனீவாவில் உள்ள செயலர் கடிதத்தினை மீழ பெறுமாறு கூறியுள்ளதாக பிலிப் அல்ஸ்ர…
-
- 0 replies
- 624 views
-
-
சரத்பொன்சேகா ஊடகவியலாளர் ஃப்ரெட்ரிகா ஜயன்ஸ் அவர்களுக்கு வழங்கிய செவ்வியில் கோத்தபாய அவர்கள் சரணடைந்த புலிகளை கொல்லும்படி உத்தரவு பிறப்பித்தார் என்று கூறியதும் பின்னர் அதனை அரச ஊடகங்கள் பூதாகரமாக்கி சரத்பொன்சேகாவினை தேச துரோகியாக்கியதுமே கடந்த வாரம் மட்டுமல்ல தேர்தல் முடியும் வரை அதனையே மஹிந்த தரப்பு துரும்பாக வைத்திருக்கும் என்பதில் ஐய்யமில்லை. ஆனால் தான் அவ்வாறு கூறவில்லையென்று சரத் எவ்வாறுதான் சொன்னாலும் அதனை ஏற்க தயாராகவில்லை மஹிந்த தரப்பு இப்போ சரத்பொன்சேகா உட்பட ஐக்கிய தேசிய கட்சி ஏன் ஃப்ரெட்ரிகா ஜயன்ஸ் கூட சரத்பொன்சேகாவின் வீடியோவினை முழுமையாக ஒளிபரப்பவேண்டும் என சவால் விட்டுள்ளனர். ஆனால் மஹிந்த தரப்பு அதனை கருத்தில் எடுப்பதாக தெரியவில்லை காரணம் மஹிந்த சார்பு …
-
- 0 replies
- 941 views
-
-
பிரின்சஸ் கிறிஸ்டீனா கப்பல் ஒரு அரச பிரச்சார திட்டத்தின் பொதிகளின் ஒன்று தவிர வேறெந்த விசேடமும் இல்லையென எதிரணிகள் கூச்சலிட தொடங்கியுள்ளன. எதிரணியினரின் புலனாய்வு தகவலின் படி இந்த கப்பல் இந்தோனேசியாவில் மிக குறுகிய காலத்தில் இலங்கை கடற்படை அதிகாரி ஒருவரால் பணம் கொடுத்து வாங்கப்பட்டதாகவும் இதற்கு முன்னர் இந்த கப்பல் இரும்பிற்க்காக உடைப்பதற்கு ஆயத்தமாக இருந்ததாகவும் கூறுகின்றனர் எதிரணியினர். புத்தளம் மாவட்ட ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் றங்க பண்டார அவர்கள் இந்த கப்பல் புலிகளின் உடையதோ யாருடையதோபரவாயில்லை ஆனால் இந்த கப்பல் இலங்கை கடற்படையினரால் தடுக்கப்பட்டு கட்டி இழுத்து வரப்பட்டது என்றால் இந்த கப்பலில் இருந்த மாலுமிகள் எங்கே? இந்த கப்பல் இலங்கைக்கு கொண்…
-
- 0 replies
- 558 views
-
-
பிரதான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி யிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்றும் தொடர்ந்து உயர்மட்டப் பேச்சுகள் நடைபெற்றன. நேற்று முற்பகல் நடைபெற்ற இந்தப் பேச்சுகளில் ஜெனரல் பொன்சேகாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் எதிரணித் தரப்பில் பங்குபற்றினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. ஆகியோர் இப்பேச்சுகளில் கலந்துகொண்டனர். கொழும்பு 07, ஐந்தாம் ஒழுங்கையில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் நேற்று முற்பகல் 11 மணி மு…
-
- 0 replies
- 458 views
-
-
சிறுபான்மை இனத்தவர்களுக்கு நெருக்கமான ஐக்கிய தேசியக் கட்சி, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஆதரிப்பதால் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்கக் கூடும் என ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி "ரொய்ட்டர்' செய்தி வெளியிட்டுள்ளது. யுத்தத்திற்குப் பிந்திய தேசிய நல்லிணக்கம் குறித்து இரு பிரதான வேட்பாளர்ளும் இதுவரை எதனையும் தெரிவிக்காத போதிலும், அரசியல் தீர்வொன்றை முன் வைப்பதற்கான சாதகமான தன்மை சரத் பொன்சேகாவிடம் உள்ளதாகத் தெரிவித் துள்ள "ரொய்ட்டர்', மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: முன்னர் விடுதலைப் புலிகளால் ஆதரிக்கப்பட்ட முக்கிய தமிழ்க் கட்சியான கூட்டமைப்பு இரு பிரதான வேட்பாளர் களில் ஒருவருக்கும் இன்னமும் ஆதரவு அளிக்க முன்வரவில்லை. இலங்கையின…
-
- 0 replies
- 430 views
-
-
மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பொன்சேகாவுடன் சந்திப்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நடாளுமன்றக்குழுத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கும் எதிக்கட்சிக் கூட்டணிகளின் அதிபர் தேர்தலுக்கான பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று முற்பகல் அளவில் நடைபெற்றுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கினறன. இந்த சந்திப்பின் போது அதிபர் தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்குவது பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது சம்பந்தமாக எமது செய்தியாளரிடம் பேசிய தமிழ்த்தேசிய நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் தமது நிபந்தனைகள் சம்பந்தமாக ஜெனரல் சரத்பொன்சேகாவிடம் பேசியதாகவும், அவரின் அழைப்பின் பேரிலேயே இச்சந்திப்பு…
-
- 0 replies
- 454 views
-
-
கனடா சென்ற கப்பல் ஏதிலிகளில் மேலும் 50 பேரை விடுவிக்க ஏற்பாடு கடந்த அக்டோபர் மாதம் மேற்கு கனடாவில் தரையிறங்கிய கப்பலிலிருந்த 76 இலங்கையர்களில் 50பேர் விடுவிக்கப்படவுள்ளதாக கனடிய செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் எதிர்வரும் வாரமளவில் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் 26பேரை விடுவிப்பதற்கான உத்தரவு தற்சமயம் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே 15பேர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. இது தவிர ஏனையவர்களினது விண்ணப்பங்களும் பலிசீலிக்கப்பட்டு அவர்களையும் விடுவிப்பது சம்பந்தமான முடிவுகள் எடுக்கப்படும் என கனடிய குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://meenakam.com/?p=994
-
- 0 replies
- 500 views
-
-
தெற்கில் சீனாவின் உதவியுடன் விமான நிலையம்! சீனா அரசாங்கம் நிதி உதவி தெற்கில் சர்வதேச விமானநிலையம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கைக்கும் சீனா அரசாங்கம் நிதி உதவி வழங்கவுள்ளது. ஏற்கனவே தெற்கின் ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச துறைமகத்திற்கு சீனா தனது ஒத்துழைப்பை வழங்கி வரும் நிலையில் தற்போது மாத்தறையில் சர்வதேச விமானநிலையம் அமைக்கும் பணிகளுக்கும் உதவி வழங்க முன்வந்துள்ளமை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு சீனா சென்றிந்த திறைசேரியின் செயலாளர் பி.பி ஜெயசுந்தர சீனாவிடம் இருந்து மாத்தறையில் அமைக்கப்படவுள்ள விமானநிலைய கட்டுமான பணிகளுக்கு 410 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக் கொண்டுள்ளார். சீனாவின் துணை வாத்த அம…
-
- 2 replies
- 663 views
-
-
இலங்கை அரசின் ஏற்பாட்டின் கீழ் வெளிநாட்டு நிபுணர்களால் நடத்தப்பட்டுள்ள கருத்துக்கணிப்பொன்றின் முதற்கட்ட முடிவுகள் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா 53 வீத வாக்குகளைப் பெறுவார் என்றும் பதவியிலிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ 45 வீதவாக்குகளையே பெறுவார் என்றும் தெரிவித்துள்ளன. கொழும்பிலிருந்து வெளிவரும் "இருதின" சிங்கள வார ஏடு இந்தத் தகவலைத் வெளியிட்டிருக்கிறது. அப்பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலின் விவரம் வருமாறு: அரசினால் கோடிக்கணக்கில் செலவழிக்கப்பட்டு வரவழைக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்களால் இக் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமையே இதன் விஷேட அம்சமாகும். வாரந்தோறும் இவ்விதமாக மேற்கொள்ளப்படவுள்ள கருத்துக் கணிப்புகளின் அறிக்கைகள் ஜ…
-
- 29 replies
- 2.7k views
-
-
2ம் உலகப்போருக்கு பின்னர் அதிகமான இனப்படுகொலை நடந்தது தமிழ் இனம் மட்டுமே என்றும், இத்தனை அவலம் இருந்தும் தமிழ் மக்களுக்கான வலுவான குரல் எழவில்லை என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். http://parantan.com/pranthannews/srilankanews.htm
-
- 3 replies
- 566 views
-
-
தமிழ் இளையவர் சமூகம் தூர நோக்கம் கொண்ட ஜனநாயக செயற்பாட்டில் முழுமையாகப் பங்கேற்று, அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க வேண்டுமென்று விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அழைப்பு விடுத்துள்ளார். http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2IeOJlaccaeoOAd4deKKMMW0a3cdlYOed4dBTnB33022m4BZ4e
-
- 0 replies
- 473 views
-
-
இலங்கை அரசாரங்கத்தின் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில், சரண டையச் சென்ற புலிகளின் மூத்த தலைவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இப்போது பூதாகாரமாகி உள்ளது. இதன் ஆரம்பத்தில் இத்தகைய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் கசிந்தபோது வெளியான சமாச்சாரங்களைவிட, ஜனாதிபதித் தேர்தல் களச்சமர் தொடங்கிய பின்னர் அதா வது இப்போது அந்த நிகழ்வு குறித்த சர்ச்சைகள் மிகச் சூடுபிடித்துள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் அது தரக்கூடிய பலன் கள், பிரதிபலன்கள் குறித்து, போட்டியில் ஈடுபட் டிருக்கும் பிரதான தரப்புக்கள் இரண்டும் உசார் அடைந்துள்ளன. காரணம் எல்லோருக்கும் தெரிந் ததுதான். தமிழ்மக்களின் வாக்கு வங்கியைத் தம தாக்கிக் கொள்வதில் இருதரப்…
-
- 6 replies
- 1.3k views
-
-
ரணில் ரீ.என் ஏ சந்திப்பு‐இலங்கையர் என்ற தேசிய அடையளத்துடன் கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்கும் தீர்மானம் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று தீர்மானகரமான பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றது. இன்று மதியம் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதில் பொது வேட்பாளர் சரத் பொன்சேக்கா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது கடந்த காலத்தை மறந்து, இலங்கையர் என்ற தேசிய அடையளத்துடன் கூடிய …
-
- 1 reply
- 632 views
-
-
சிறிலங்காவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கும் திட்டம் மற்றும் துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அபிவிருத்திக்கும் என பல நூறு மில்லியன் டொலர் உதவியை வழங்கி சிறிலங்காவில் இறுகக் கால் ஊன்றுகின்றது சீனா. (படங்கள் இணைப்பு) http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2oeOJlaccaeoOAd4deKKMMW0a3cdlYOed4dBTnB33022m4BZ4e
-
- 1 reply
- 720 views
-
-
சென்ற திங்களன்று சரத்பொன்சேகா மற்றும் ரணில் உடனான கலந்துரையாடலில்கூட்டமைப்பினர் எட்டு முக்கிய விடயங்களை முன்வைத்ததாகவும் அவற்றை சரத்பொன்சேகா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கொழும்பு இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த எட்டு விடயங்களாவன: 1 12,000 புலி உறுப்பினர்களையும் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கவேண்டும் 2 உயர் பாதுகாப்பு வலையங்களை நீக்குதல் 3 வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை குறைத்தல் 4 இடம்பெயர்ந்த மக்களை முழுமையாக விடுவித்து துரித மீழ் குடியமர்வினை செய்தல் 5 மீழ் குடியமர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடமைப்பு 6 வடக்கு கிழக்கு மீழ் கட்டுமான பணிகளை விரைவாக ஆரம்பித்தல் 7 கிழக்கில் புதிய குடியேற்றங்களை நிறுத்துதல் 8 அரசிய…
-
- 12 replies
- 1.5k views
-
-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்கும். அந்த முடிவு தமிழ் மக்களின் நலன் கருதியதாகவே இருக்கும். அதற்கு முரணாக இருக்காது. எனவே, இந்த விடயம் குறித்துத் தமிழ் மக்கள் வீணாகக் குழப்பமடையவோ, சஞ்சலப் படவோ தேவையில்லை. இப்படித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் அறிவிப்பு விடுத்திருக்கின்றது.தமிழ்க் கூட் டமைப்பின் இந்த நிலைப்பாட்டை அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. நேற்று வெளியிட்டார். கொழும்பிலுள்ள தனது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை காலை தமிழ்ப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி விளக்க…
-
- 7 replies
- 916 views
-
-
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதை அடித்துச் சொல்லும் நெடுமாறன், அதுபற்றி விவரங்களை நேரம் வரும்போது சொல்வதாகக் கூறியுள்ளார். ரா, சிங்கள உளவு அமைப்புகள் அறிந்து கொள்ள துடிக்கும் அந்த பேருண்மையை நிச்சயம் தன்னால் இப்போது சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனின் மகள் துவாரகா கொல்லப்பட்டதாக சில இணையதளங்கள் மூலம் பரவிய செய்தியும், அதையட்டி வெளியான புகைப் படமும் லேசாக ஆறிக்கொண்டிருந்த ஈழ ஆர்வலர்களின் இதயக் காயத்தை மறுபடி கிளறி விட்டன! ‘துவாரகாவின் உயிரோட்டமான புகைப்படத்துடன் ஒப்பிடும்போது அந்த நிறமும் சாயலும் அப்படித்தானே இருக்கிறது!’ என்று புலம்பியவர்கள், ‘பிரபாகரன் குடும்பத்தில், போருக்குத் துளியும் தொடர்பில்லாத அவருடைய ம…
-
- 63 replies
- 5.2k views
-
-
பிரபாகரனை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கையை சிறிலங்கா முறியடித்தது: பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் .வன்னியில் போர் உச்சக்கட்டத்தை அடைந்து சகல முனைகளையும் சிறிலங்கா இராணுவம் முற்றுகையிட்டிருந்தபோது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் முக்கிய தலைவர்கள் ஐம்பது பேர் உட்பட நூறு பேரை அங்கிருந்து அகற்றுவதற்கு அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியை சிறிலங்காவும் இந்தியாவும் இணைந்து இரகசியமாக முறியடித்தன என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்கா இறுதிநேரத்தில் மேற்கொண்ட இந்த அவசர நடவடிக்கைகள் தொடர்பாக அந்த தகவல் மேலும் தெரிவித்திருப்பதாவது:- கிளிநொச்சியை கைப்பற்றிய சிறிலங்கா …
-
- 5 replies
- 2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் சிங்கப்பூர் வர்த்தகர் ஒருவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். 49 வயதான பல்ராம் நாயிடு என்ற சிங்கப்பூர் வர்த்தகரே இவ்வாறு அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்ராம் நாயிடு சிங்கப்பூர் ரிபோம் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 2006ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்தமை மற்றும் நிதி உதவிகளை வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் பல்ராம் நாயிடுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது. பல்ராம் நாயுடுக்கு எதிராக வழக்கு விசாரணைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிங்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈரானுடன் இணைந்து சிறீலங்கா மேற்குலகத்திற்கு எதிரான தீவிரவாதிகளுக்கு ஆயுத விநியோகம் செய்கிறதா? அண்மைக்காலமாக சீனா- மியான்மார் - ஈரான் - சிறீலங்கா ஆகிய நாடுகளின் நட்புறவுகள் வலுப்பட்டு வருகின்றன. ஈரான் வடகொரியாவுடனும், சீனாவுடனும் அதிக நெருக்கத்தை கொண்டுள்ளது. எனினும் ஈரானின் நடவடிக்கைகளை மேற்குலகம் உன்னிப்பாக கவனித்து வருகின்றது. கடந்த வருடம் கடல்மூலம் வடகொரியாவில் இருந்து ஈரானுக்கு கொண்டு செல்லப்படவிருந்த ஏவுகணைகளும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. மேற்குலகத்தை நேரிடையாக பகைத்துக்கொள்ள விரும்பாத சீனாவும், இந்தியாவும் வடகொரியா ஊடாக ஆசியா பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படையினருக்கு அதிக தொல்லைகளை கொடுத்து வருகின்றன. http://www.sankathi.com/in…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையில் தொலை தொடர்பில் பெருமளவு முதலீடுகளை செய்துவரும் மலேசிய கம்பனியான Maxis Group ( மலேசிய தமிழரான ஆனந்த கிருஷ்ணன் அவர்களுக்கு சொந்த மானது) இலங்கையில் தொலை தொடர்பு மற்றும் பல தேவைகளுக்கு என சற்றலைற் ஒன்றினை ஏவுவதற்கான திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இலங்கை தொலைதொடர்பு திணைக்களம் இந்த திட்டத்தினை முன்னெடுக்க உள்ளது. இதற்கான முதலீடான 17 பில்லியன் ரூபாயினை Axiata Group,கம்பனி Maxis Groupஉடன் சேர்ந்து முதலீடு செய்துள்ளது. திரு ஆனந்த கிருஸ்ணன் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாக கொண்டவர் இவரே தென் ஆசியாவில் தொலை தொடர்புக்கென தனியான சற்றலைற் இனை ஏவிய தனியார் ஒருவர் ஆவர். இதே வேளை மலேசியா, கம்போடியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கும் தொலைதொடர்பு சற்றலைற் வசதிகளை ஏற்படுத்தி க…
-
- 0 replies
- 1.8k views
-
-
குடாநாட்டின் பல பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட நத் தார் ஆராதனைகள் நேற்றிரவு பக்தி பூர்வமாக நடைபெற்றன. நள்ளிரவு வேளைகளில் எல்லாப் பிரரதேசங்களிலும் உள்ள தேவாலயங்களில் பெரும் எண்ணிக்கையானோர் பங்குபற்றினர். நந்தாரை ஒட்டி விசேட பூசை வழி பாடுகள் கிறிஸ்தவ தேவாலயங்களில் உணர்வு பூர்வமாக நள்ளிரவு இடம்பெற்றன. பெரும் எண்ணிக்கையானோர் இந்த வழிபாடுகளில் பங்கேற்றனர். யாழ். நகரில் மரியன்னை தேவாலயத்தில் நேற்று முன்னிரவு 11.30 மணிக்கு யாழ். ஆயர். அதி.வண. தோமஸ் சௌந்தரநாயகம் நத்தார் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார். இதே நேரம் வன்னிப்பகுதியில் கிளிநொச்சி, முல்லை தீவு ஆகிய கோட்டங்களில் குருமுதல்வர்கள் இன்மையாலும் முக்கிய தேவாலயங்கள் இன்னமும் சூனியமாக காட்சியளிப்பதால்…
-
- 0 replies
- 594 views
-
-
அதிபர் தேர்தல் மற்றும் வெளிநாடுகளின் அழுத்தம் காரணமாக – தடுப்பு முகாம்களில் இருந்து மக்கள் திறந்து விடப்பட்டனர்; ஆனால், பற்றைக் காடுகளுக்கு உள்ளும், விசப் பாம்புகளுக்கு நடுவிலுமே அவர்கள் மீள் குடியேற்றப்படுகின்றார்கள். http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2yeOJlaccaeoOAd4deKKMMW0a3cdlYOed4dBTnB33022m4BZ4e
-
- 0 replies
- 443 views
-
-
<b>சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை!</b> நாளுக்கு நாள் வாழ்க்கை செலவு அதிகரித்து போகின்றது குடும்ப ஆட்சியினை வைத்துக்கொண்டு எதிரணியினர் மீது பலாத்காரம் பிரயோகிக்கப்படுகின்றது. எனவே இந்த நாட்டில் ஒரு ஆட்சிமாற்றம் தேவையாகவுள்ளது. தமிழ்கட்சிகளும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழ்மக்களை பிரதிநிதிப்படுத்தும் தமிழ்தேசிய கூட்டமைப்பு நல்ல முடிவை தமிழ்மக்களுக்கு அறிவிப்பாளர்கள் என நாம் நம்புகின்றோம். பொன்சேகா சனாதிபதி ஆனாதும் பாராளுமன்றம் கலைக்கப்படும் பொதுத் தேர்தல் நடைபெறும் சனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு பாராளுமன்றத்திற்கே அதிகாரம் வழங்கப்படும். இந்த நாட்டில் சனநாயக ஆட்சி ஊழல்அற்ற நிர்வாகம் ஏற்படுத்தப்படும். நாட்டின் பொருளாதாரத்தை வளம்ப…
-
- 1 reply
- 767 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான கனடிய செயற்பாட்டுக் குழுவினர், இன்று(23-12-2009) மாலை ரொறன்ரோவில் ஊடகவியலாளர் மாநாடொன்றை நடாத்தினர். நாடு கடந்த தமிழீழ அரச செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு.உருத்திரகுமாரன் அமெரிக்காவிலிருந்து இணையத்தின் மூலம் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார். நாடு கடந்த தமிழீழ அரசின், கனடா மக்கள் பிரதிநிதிகள் அவைக்கான தேர்தல், 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறுமென, நாடு கடந்த தமிழீழ அரசுக்கான ஆலோசனைக் குழு அறிவித்திருக்கிறது. மொத்தம் 135 அங்கத்தவர்களைக் கொண்ட நாடு கடந்த தமிழீழ மக்கள் அவையில், 25 பிரதிநிதிகள் கனடாவில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இவ்வாறு ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் அ…
-
- 0 replies
- 827 views
-