ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் றொபேட் ஓ பிளேக் வவுனியா முகாம்களுக்குச் சென்று அங்குள்ள வன்னி மக்களை பார்வையிட்டுள்ளார்.அதனையடுத்து இந்தியாவிற்கு தனது உத்தியோகப் பயணத்தை மேற்கொண்ட றொபர்ட் பிளேக், போர்க் குற்ற விசாரணைகள் நடைபெறாதென்ற தமது நாட்டின் தற்போதைய நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, பாதுகாப்புச் செயலாளர் கோத்தõபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க போன்றோரின் இந்திய பயணங்களைத் தொடர்ந்து அமெரிக்க அரசின் பிரதிநிதி றொபர்ட் ஓ பிளேக்கும் அங்கு சென்றிர…
-
- 11 replies
- 1.5k views
-
-
தென் தமிழீழம் அம்பாரை மாவட்டத்தில் திருக்கோவில் தம்பிலுவில் பகுதியில் பிள்ளையான் குழுவினருக்கும் கருணா குழுவினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் பிள்ளையான் தரப்பினை சேர்ந்த மூவர் படுகாயமுற்றனர். இதே வேளை கருணா தரப்பில் இருந்து நாலுபேரை பிள்ளையான் தரப்பினர் பிடித்து சென்றுள்ளதாக கூறப்படுகின்றது. இன்று மதியமளவில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சூடுகளும், கத்திவெட்டுக்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. மோதலின்பின்னர் பிள்ளையான் தரப்பினர் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திலும், கருணா தரப்பினர் தம்பிலுவில் பொலிஸ் நிலயத்திலும் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.http://www.eelanatham.net/news/important
-
- 2 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலும், தமிழ் மக்களும் ‐ வி.ஆர். ரங்கநாதன். தொடர்கிறது விவாதம்‐ 16 December 09 04:10 am (BST) ஜனாதிபதி தேர்தலுக்கான களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. சிறிலங்கா வரலாற்றில் ஒருபோதும் இல்லாதளவுக்கு கடும் போட்டியை எதிர்நோக்கும் தேர்தல் என்று கருதப்படுவதனால் இரு பிரதான வேட்பாளர்களும் பரபரப்புடன் செயற்படத் தொடங்கிவிட்டனர். பரஸ்பரம் இரு தரப்பினரிடமிருந்தும் ஆட்களைக் கழற்றி எடுக்கும் பணிகளும் நடைபெறுகின்றன. எனினும் இது விடயத்தில் ஜனாதிபதியின் சாதனையை சிறிதளவேனும் முறியடிக்க ஜெனரல் பொன்சேகாவினால் முடியவில்லை. பொன்சேகா தரப்பினர் விஜேதாச ராஜபக்ச என்ற ஒருவரை மட்டும் கழற்றி எடுக்க, ஜனாதிபதியோ அதற்கு வட்டியும் முதலுமாக எஸ்.பி.திசாநாயக்க, ஜோன்சன் ப…
-
- 2 replies
- 735 views
-
-
ஐக்கியதேசிய கட்சியினை சேர்ந்த ஜோன் பெனாண்டோ, இந்திகா குணதிலக ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த இராசபக்ஷவுக்கு தாம் ஆதரவு வழங்குவதாக கூறியுள்ளனர். சரத்பொன்சேகாவினை வேட்பாளராக நிறுத்தியதனை தாம் மாற்ற சொல்லி வற்புறுத்தியதாகவும் ஆனால் அதனை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பீடம் ஏற்கவில்லை என்றும் இந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் கூறியுள்ளனர்.இவர்கள் இன்றே மஹிந்த அரசில் அமைச்சர் பதவிகளையும் பெற்றுக்கொண்டனர். ஜோன்சன் பெனாண்டோ காணி அமைச்சராகவும், இந்திகா குணரட்ன இயற்கைவள அமைச்சராகவும் பதவிகளை பெற்றுக்கொண்டனர்.
-
- 0 replies
- 668 views
-
-
கடந்த ஞாயிற்று கிழமை சரத்பொன்சேகா சண்டே லீடருக்கு அளித்த செவ்வியில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர்களை கொல்லும்படி கோத்தபாயதான் 58 வது டிவிசன் தளபதிக்கு கட்டளையிட்டார் என கூறினார். பின்னர் அதனை தமக்கு ஒரு பத்திரிகையாளர்தான் சொன்னதாகவும் அந்தவேளை தான் சீனாவில் நின்றதாகவும் கூறினார். இதே நேரம் சரத் பொன்சேகாவின் நேர்முகத்தின் பின்னர் சிங்கள ஆட்சியாளர்களும் அவர்களது ஆதரவாளர்களும் சரத் பொன்சேகாவினது கூற்றினை வைத்து எவ்வாறு அவரை சிங்கள மக்கள் மத்தியில் ஒரு துரோகியாக்கி ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைய செய்யலாம் என்பதில் மிகவும் மூர்க்கமாக இருப்பதால் அவர்களின் பதிலடி நடவடிக்கைகள் சரத் பொன்சேகாவின் கூற்றை நிரூபிப்பதாகவே அமைகின்றது. சரத் பொன்சேகாவின் பாடசாலை நண்பரும…
-
- 0 replies
- 1.7k views
-
-
வன்னியினை ஆக்கிரமித்து முழு கட்டுப்பாட்டிலும் கொண்டுவந்தமைக்கு காரணம் யார் என்பதிலும் அதனை நிரூபிப்பதிலும் சிங்கள் அதிகாரிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்த நிலையில் சரத்பொன்சேகா, தற்போதைய இராணுவ தளபதி, கோத்தபாய, மஹிந்த இவ்வாறு பட்டியல்கள் தொடர்கின்றன. இதில் தற்போது மனித உரிமை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் இணைந்து கொண்டுள்ளார். அதாவது வன்னியில் உள்ள அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களையும் திட்டமிட்டு வெளியேற்றி சிலவற்றை தடை செய்ததன் மூலமே யுத்தத்தில் முழு வெற்றி அடைந்ததாக கூறியுள்ளார் மஹிந்த சமரசிங்க. அத்துடன் தானே இதனை முன் நின்று துணிந்து செய்ததாகவும் கூறியுள்ளார். http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 793 views
-
-
சரத்பொன்சேகாவுக்கு புது வீடு ஒன்றினை கட்டி கொடுப்பதற்கு அல்லது வாங்கி கொடுப்பதற்கு இத்தாலியில் நிதி சேகரிப்பு நடைபெறுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தாலியில் சாவானா, ரோம், மிலானோ, நாப்பொலி ஆகிய இடங்களில் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவரால் இந்த நிதி சேகரிப்பு இடம்பெறுவதாக மிலானோ செய்திகள் கூறுகின்றன. இராணுவ அதிகாரியான நிஹால் அமரசேனா என்பவரே இந்த நிதி சேகரிப்பில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகின்றது.http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 1.1k views
-
-
. சண்டேலீடர் பத்திரிகையில் சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள தகவல்களின்படி விடுதலைப் புலிகளின் தலைவர்களான நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட தலைவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னரெ கொலைசெய்யப்பட்டமை உறுதியாகியுள்ளது. பெருமையான வரலாற்று சம்பவங்களை தன்னகத்தே கொண்ட சிங்கள மக்களுக்கு இவ்வாறு சரணடைந்தவர்களை கொலை செய்த மகிந்தவும் கோத்தபாயவும் கரும்புள்ளிகள் என்று இடதுசாரி முன்னணியின் தலைவரும் அரசதலைவர் வேட்பாளருமான விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் - ஐக்கிய நாடுகளின் தலையீட்டுடன் ஜனாதிபதியுடன் ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் வி…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிரிக்கட் வீரர் சனத் ஜெயசூரியவுக்கு, ஜனாதிபதியின் மகனால் கொலை அச்சுறுத்தல் இலங்கை கிரிக்கட் வீரர் சனத் ஜெயசூரியவுக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷவினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ஷவினால் நடத்திச் செல்லப்படும் தாருண்யட ஹெடக் ( இளைஞர்களின் நாளை) அமைப்பின் அழைப்பை சனத் ஜெயசூரிய நிராகரித்ததைத் தொடர்ந்தே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையின் கலைஞர்களையும், விளையாட்டு பிரபல்யங்களையும் தேர்தல் பிரசாரங்களுக்காக பயன்படுத்துவதன் காரணமாகவே சனத் ஜெயசூரிய இந்த அழைப்பை நிராகரித்துள்ளார். ஒரு விளம்பரம் படம் ஒன்றில் நடிப்பதற்காக நாமல் ராஜபக்ஷ, சனத் ஜெயசூரியவ…
-
- 0 replies
- 695 views
-
-
இலங்கையின் போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐ. நா. சபையும் அமெரிக்காவும் என்ன செய்கிறது? : இன்னர் சிற்றி பிரஸ் கேள்வி இலங்கையின் போர்க்குற்ற குற்றச் சாட்டுகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையும் அமெரிக்காவும் என்ன செய்கிறது என, அதன் உத்தியோகபூர்வ வெளிவாரி ஊடகமான இன்னர் சிற்றி பிரஸ் நேற்று கேள்வி எழுப்பியது.போர்க்குற்றங்கள் தொடர்பில் அண்மையில் அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் அறிக்கை விடுத்தமையை அடுத்தே இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதன் போது பதிலளித்த ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கா தூதுவர் சூசன் ரைஸ், இது தொடர்பில் இலங்கையின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பதுடன், நேரடியான மாற்றுக் கருத்துக்களையும் கொண்டு உன்னிப்பாக ஆராய்வதாக …
-
- 0 replies
- 495 views
-
-
ஜனாதிபதி தேர்தாலில் போட்டியிடுவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எடுத்துள்ள முடிவானது அவரது தனிப்பட்ட முடிவேயன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்புடையது அல்ல என இது தொடர்பாக அக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரா பா.அரியநேத்திரன் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவதில்லை என ஏற்கனவே தீர்மானித்துள்ள போதிலும் அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் (டெலோ) சுயேட்சையாகப் போட்டியிட தீர்மானித்து இன்று தேர்தல் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் மாறுபட்ட கருத்துக்கள் தோன்றியுள்ள நிலையில் அவர் இந்த முடிவை எடுத…
-
- 4 replies
- 899 views
-
-
வட்டுக்கோட்டைத் தீர்மானம், நாடு கடந்த தமிழீழ அரசு, மக்கள் அவை போன்றவற்றிற்காக சனநாயக ரீதியில் வாக்களிப்பதற்காக புலம்பெயர் தமிழ் மக்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இருக்கின்றது. இதனூடாக புலம் பெயர் தமிழர்களின் தங்களின் கருத்தை உலகிற்கு சனநாயக முறையில் வெளிப்படுத்த முடியும். ஆனால் இலங்கைத் தீவில் வாழும் தமிழ் மக்களுக்கு ஏதாவது சந்தர்ப்பம் இருக்கின்றதா? அல்லது அவ்வாறு தமது கருத்தை வெளிப்படுத்த ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா? அவர்கள் எவ்வாறு தமது உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்துவது? ஸ்ரீ லங்கா அரச அதிபருக்கான தேர்தலை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்த பயன்படுத்த முடியுமா? முடியாதா? இதுபற்றிய ஆக்கபூர்வமான கருத்துகள் எம்மிடமிருந்து வருமா? அல்லது வழக்கம் போல் துரோகி…
-
- 1 reply
- 865 views
-
-
தமிழ்தேசிய கூட்டமைப்பின் கட்சி நிலைப்பாட்டுக்கு எதிராக செயல்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றப்படுவர். இந்த வகையில் கூட்டமைப்பு, சனாதிபதி தேர்தலில் வேட்பாளர் எவரையும் நிறுத்துவதில்லை என்ற தீர்மாணத்திற்கு எதிராக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கே சிவாஜிலிங்கம் சுயேற்சையாக சனாதிபதி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். இவர் தமிழீழ விடுதலை இயக்கமான (TELO) ரெலோவைச் சேர்ந்தவர். ரெலோவின் ஏனைய மூன்று பாரளுமன்ற உறுப்பினர்களும் இவருக்கு ஆதரவாக உள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ள போதிலும், அடுத்த சில தினங்களில் வெளிநாடு சென்றுள்ள கூட்டமைப்பின் தலைவர் பா.உ இரா சம்பந்தன் நாடு திரும்பியதும் அவசர கூட்டம் கூட்டப்படும் என தமிழ்தேசிய கூட்டமைப…
-
- 1 reply
- 1.1k views
-
-
எனது அயலவர் ஒர் இலங்கைத் தமிழர் - ஆங்கிலத்தில் ஒரு விவரணப் படம். எமது இனம் இலங்கைத் தீவில் இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதை அறிந்த ஒரு ஆங்கிலேயர் அது பற்றிய பின்னணியை ஆராய முற்படுவதை எடுத்துக்காட்டும் ஒரு விவரணம். இது பற்றிய உங்கள் எல்லோரதும் ஆரோக்கியமான கருத்துக்கள் இந்த விவரணத்தைத் தயாரித்தவர்களுக்கு பெரிதும் பயன்படும். தயவுசெய்து உங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். இது ஆங்கிலேயர்கள் மத்தியில் காண்பிப்பதற்காகவே தயாரிக்கப்பட்டது என்பதையும் கவனத்திலெடுங்கள். நன்றியுடன் பரதன் http://www.youtube.com/watch?v=jFvUWiWPMO4&layer_token=eeed3f777741deec http://www.youtube.com/watch?v=hDUySKPWCDQ&layer_token=13c8276c85bbfcc
-
- 2 replies
- 1.8k views
-
-
உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் எல்லோரும் முழுமனதோடும் பெருமிதத்தோடும் பொருளாதரப் போர் செய்தால் - சிறிலங்கா அரசாங்கத்தையே அடிபணிய வைக்கலாம் என அமெரிக்க மருத்துவர் எலின் சாண்டர் [ Ellyn Shander ] தெரிவித்துள்ளார் கடந்த டிசெம்பா 6 ஆம் திகதி அமெரிக்க நியூஜேர்சி மாநிலத்தில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வில் சிறப்புரை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவரது உரையின் விபரம்: வணக்கம் துன்பகரமான ஒரு நாளில் நாமெல்லோரும் இங்கு கூடியிருக்கிறோம். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளமை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. அவர்கள் ஒவ்வொருவரும் எமது அன்புக்குரியவர்கள். அந்த ஒவ்வொரு சாவும் எங்கள் இதயங்களை நொருக்கியது; அந்த வேதனையை இங…
-
- 1 reply
- 1.5k views
-
-
மீன் பிடியில் ஈடுபடும் ஸ்ரீலங்கா மீனவர்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இந்திய கடற்பிராந்தியத்தில் மீன் பிடியில் ஈடுபடும் ஸ்ரீலங்கா மீனவர்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக இந்திய கரையோர காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். நேற்று இரவு இந்திய கடற் பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்ட படகினை இந்திய கரையோர காவல் துறையினர் கைப்பற்றிய போது குறிப்பிட்ட படகானது மீன்படி நடவடிக்கைகளுக்கு புறம்பான வேறு சில பணிகளில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட படகானது அதி நவீன ராடர் கருவிகள் மற்றும் தொடர்பாடல் சாதனங்களை கொண்டிருந்தாhக தெரியவந்துள்ளது. இந்த படகுகள் மூலம் இந்திய கரையோர பகுதிகளை வெளிநாடு ஒன்று உளவு பாhத்து வருவ…
-
- 3 replies
- 1.9k views
-
-
நேற்றிரவு அப்பகுதி மக்கள் பதற்றம் திருகோணமலை 10 ஆம் குறிச்சிக் கரையோரப் பகுதியில் உள்ள வீடுகளுக் குள் நேற்றிரவு 7.15 மணியளவில் கடல்நீர் புகுந்ததால் மக்கள் பெரும் பதற்ற மடைந்து அல்லோலகல்லப்பட்டனர். கடற்கரையோரமாக உள்ள வீடுகளுக்குள் திடீரென கடல்நீர் புகுந்ததால் அச்சமடைந்த மக்கள் உடைமைகளை அப்புறப் படுத்துவதிலும், சின்னஞ்சிறுசுகளைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கூட்டிச் செல்வதிலும் ஈடுபட்டிருந்தனர். மண் அணைகளை அமைத்து மேலும் கடல்நீர் உள் புகாதவண்ணம் தடுப்பு நட வடிக்கையில் பிரதேச மக்கள் தீவிரமாக செயலில் இறங்கி இருந்தனர். கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த வள்ளங்களை எல்லாம் இழுத்துவந்து வீதி ஓரங்களில் வைத்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் கரையோரப்பகுதி மக்களுக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடா தமிழ் காங்கிரஸ் உலக நாடுகளிடம் கோரிக்கை இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதியே யுத்தக் குற்றங்கள் இடம் பெற்றமையை ஏற்றுக்கொண்டுள்ளதால் அதனை அடிப்படையாக வைத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், அவரது அதிகாரிகளையும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சர்வதேச சமூகம் விசாரிக்கவேண்டும் என்று கனடா வின் தமிழ்க் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை இந்தோ ஆசிய செய்திச் சேவைக்குத் தெரிவித்துள் ளவை வருமாறு: ஆரம்பத்திலிருந்தே இலங்கை இராணுவம் யுத்தக் குற்றங்களை இழைக்கின்றது என்பது எமக்குத் தெரியும். எனினும், சர்வதேச சமூகம் இதற்கான சாட்சியங்கள் உள்ளனவா என எம்மைக் கேட்டது. தற்போது இராணுவத்தின் தலைமையதிகாரியிடம…
-
- 0 replies
- 696 views
-
-
வட்டுக்கோட்டை-திம்பு-ஒஸ்லோ:முரண்படும் புலம்பெயர் தமிழர்கள் on 21-10-2009 07:44 இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விவகாரத்தை ஒட்டி பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அதுவும் இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பிலிருந்து குறிப்பாகப் புலம்பெயர்வாழ் தமிழர்கள் மத்தியில் பல்வேறு எண்ணக்கருக்கள் பிரதிபலிக்கப்படுகின்றன. எவ்வகையிலான தீர்வு என்ற விடயத்தில் இடங்களின் பெயர்களை "ஆகு பெயர்களாக" குறிப்பிட்டு கருத்து வெளியிடும் சூழலும் இப்போது காணப்படுகின்றது. ஒரு சாரார் வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பார்கள். இன்னொரு தரப்பினர் திம்புக்கோட்பாடு என்பார்கள். பிறிதொரு குழுவினரோ ஒஸ்லோ கூட்டு அறிவிப்பு என்பார்கள். இப்படி இடங்களின் பெயரால…
-
- 11 replies
- 1.5k views
-
-
"கடந்த காலங்களில் அடைய முடியாத இலக்குகளினால் தமிழ் மக்கள் தோற்றுப் போன வரலாறுகளைக் கண்கூடாகவே கண்டுகொண்டோம். எம் மீது அக்கறை கொண்ட அரசியல் தலைவர் யார் என்பதை மக்கள் அடையாளம் கண்டு, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது வாக்குகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறுகின்றார். வந்தாறுமூலையில் ஆயுள்வேத மருந்தகம் திறப்பு , விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு ஆகிய வைபவங்களில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் கூறியிருக்கின்றார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் …
-
- 0 replies
- 915 views
-
-
யுத்தத்துக்கு பின்னரான நிலைமையில் உள்ள எமது நாட்டை 40 வருட அரசியல் அனுபவம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மட்டுமே கட்டியெழுப்ப முடியும். எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்தை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என துறைமுக அபிவிருத்தி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது குறித்து மேலும் கூறியதாவது எதிரணி கூட்டணி தொடர்ந்து முரண்பாடான கருத்துக்களையே முன்வைத்து வருகின்றது. தேசிய பிரச்சினை தீர்வு விடயத்தில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்வதாக எதிரணி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா கூறுகின்றார். அப்படியாயின் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப…
-
- 2 replies
- 659 views
-
-
அரச ஊடகங்கள் ஜனாதிபதி தேர்தலில் பக்க சார்பாக செயற்படுவதாக சரத்பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளதுடன் இந்த ஊடகங்களுக்கு எதிராக அடிப்படை உரிmம் மீறல் வழக்கு ஒன்றினையும் தாக்கல் செய்துள்ளார். இலங்கை ரூபவாஹினி கூட்டுதாபனம், இலங்கை சுதந்திர தொலைகாட்சி நிறுவனம் ( ஐ.டி.என்), அசோசியேற்றட் பிரெஸ் ஆகியவற்றின் மீதே இந்த வழக்கு தாக்கலைசரத்பொன்சேகா செய்துள்ளார்.
-
- 1 reply
- 551 views
-
-
மன்மோகன் சிங்கின் அறிவுறுத்தலின் பிரகாரமே பொன்சேகாவை அந்த பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேற்றம் -நேசன் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் அறிவுறுத்தலின் பிரகாரமே ஸ்ரீலங்காவின் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை அந்த பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச வெளியேற்றியதாக பாகிஸ்தான் நேசன் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் இராணுவப் புரட்சி ஒன்று ஏற்படுவதற்கான ஏது நிலைகள் தோன்றியுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவின் மூலம் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே உடனடியாக சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதி பதவியில் இருந்து அகற்றுமாறு மன் மோகன் சிங் ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு அறிவுறுத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே சரத் பொன்சேகா பதவி மாற்றம் செய்யப்பட்டதாகவும் அந்த ஊடகம் குறிப்ப…
-
- 1 reply
- 883 views
-
-
இறுதிபோரின்போது புலிகள் சரணடைவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவித்திருந்தனர் என்றும் அது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு தாம் தெரியப்படுத்தி இருந்ததாகவும் ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தினை இலங்கை தரவில்லை அல்லது நேரம் போதுமாக இருக்கவில்லை என கூறியுள்ளார். ஐக்கிய நாடுகளின் சிறப்பு பிரதி நிதி ஜோன் ஹோல்ஸ்.சீ.என்.என் தொலைகாட்சி விவாதத்திலேயே இவ்வாறு கூறியுள்ளார். எதிர்பார்த்ததை விட போர் விரைவாக முடிவடைந்ததே இதற்கு காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் பல தலைவர்கள் இறுதி போரின்போது சரணடைந்த நிலையில் அவர்களை சுட்டு கொலை செய்யப்பட்டதனை பல ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. சில இராணுவ சிப்பாய்கள் மூலமும் இந்த தகவல் கிடைக்கப்பெற்றன. இதே நேரம் அந்த நாட்களில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
மனித அரக்கன் மகிந்த இராசபக்ச இரண்டு முறை திருப்பதி வந்தார். முதல் முறை ஆந்திர முதல்வர் பலி. இரண்டாவது முறை வந்து திருப்பதி ஏழு மலையானை வணங்கி விட்டு போனார். இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலம் முழுதும். இன்னும் என்னென்ன நடக்குமோ - இப்படி ஒரு வைணவ துறவி கூறியுள்ளார். ஈழத் தமிழனத்தைப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச திருப்பதி வந்து சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயில் முன்பு சாலை மறியல் நடந்தது எங்க போராட்டத்தை மிதிச்சீங்க இப்ப அவதிப்படறீங்க!
-
- 3 replies
- 1.6k views
-