Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி நெடுஞ்சாலையில் தொடர்ந்து இடம்பெற்று வரும் வீதி விபத்துக்களைத் தடுக்கும் நோக்கோடு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சரும் மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் ஆலோசனைக்கு அமைய மண்முனைபற்று பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்யானந்தி தலைமையில் இன்று இக் கலந்துரையாடல் நடைபெற்றது. ஆரையம்பதி வைத்தியசாலை தொடக்கம் பொதுச் சந்தை வரையிலான சுமார் 150 தொடக்கம் 200 மீற்றர் இடைவெளியில் கடந்த ஒரு வருடத்திற்குள் 25 இற்கும் மேற்பட்ட விதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதில் பாதையை கடக்க முற்பட்ட 06 பேர் மரணமடைந்தனர். குறித்த பாதை …

  2. வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பமாகவுள்ளது. நாளை பிற்பகல் 3:00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மகோற்சவம் எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணிக்கு காலை திருவிழாவும், 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு பூங்காவனத் திருவிழாவும், 26ஆம் திகதி காலை 8:00 மணிக்கு கைலாச வாகனத் திருவிழாவும், 29ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு சப்பறத் திருவிழாவும், 30ஆம் திகதி காலை 8:00 மணிக்கு தேர்த் திருவிழாவும், 31ஆம் திகதி தீர்த்த திருவிழாவும் இடம் பெறவுள்ளன. பக்தர்களின் வசதி கருதி விசேட போக்குவரத்து, பாதுகாப்பு, சுகாதார வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உற்சவகாலங்களில் ஆ…

  3. Published By: VISHNU 15 AUG, 2023 | 04:47 PM மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் பிரதேசத்தில் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (15) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த யானை 35 வயதுடையது எனவும், இதனை வைத்திய பரிசோதனைக்கு பின்னர் இறந்தமைக்கான காரணம் தெரியவரும் எனவும், அதன் பின்னர் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அதனை அகற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். https://www.virakesari.lk/article/162440

  4. Published By: DIGITAL DESK 3 15 AUG, 2023 | 03:37 PM கட்டுநாயக்க பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 18 போலி 5,000 ரூபா நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய பெண்ணும் மற்றையவர் நிகவெரட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய இளைஞரும் ஆவார். இந்த இளைஞர் கட்டுநாயக்கா, கோவின்ன பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசி திருத்தும் நிலையம் ஒன்றை நடத்தி வருவதுடன் இருவரும் அதே பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தற்காலிகமாக தங்கியுள்ளனர். …

  5. இனப்பிரச்சினைக்கு தீர்வு கோரி சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணுமாறு வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கத்திடமும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வொன்றை தமிழ் மக்கள் கோரி வருவதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சமஷ்டி முறையில் அதனை அடைவதற்காக 1956 ஆம் ஆண்டிலிருந்து நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழ் மக்கள் ஆணை வழங்கி வருவதாகவும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில்…

    • 5 replies
    • 600 views
  6. 6 மணி நேரம் முன் தென்மேற்கு பருவமழையில் எல் நினோவின் தாக்கம் காரணமாக, செப்டெம்பர் இறுதி வரை இலங்கையில் வரட்சியான காலநிலை நீடிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மே முதல் செப்டெம்பர் வரை, போதுமான மழையை வழங்கத் தவறிவிட்டது. இது சில மாவட்டங்களில் நீடித்த வரட்சிக்கு பங்களித்துள்ளது. எவ்வாறாயினும், நவம்பரில் எதிர்பார்க்கப்படும் வடகிழக்கு பருவமழை, தற்போதைய வானிலை முறைகளால் பாதிக்கப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீர்மட்டம் குறைந்துள்ளதாக அறிவிப்பு வடகிழக்கு பருவமழை பயிர்களுக்கு, குறிப்பாக நெல் போன்ற பிரதான பயிர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. …

  7. யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடாத்தியுள்ளதுடன், வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தீக்கிரையாக்கியுள்ளது. கல்வியங்காடு பூதவராஜர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் இன்று அதிகாலை 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து தாக்குதலுக்கு பணம் கொடுத்து, கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. https://thinakkural.lk/article/268476

  8. 15 AUG, 2023 | 11:32 AM (எஸ். ரொஷாந்தினி) நாட்டில் வெளிப்படையான பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அதிகரித்துள்ள போதிலும், 62 சதவீதமான குடும்பங்கள், முன்னைய சேமிப்பை பயன்படுத்துதல், கடன் வாங்குதல் மற்றும் கடனில் உணவை கொள்வனவு செய்தல் போன்ற உத்திகளைக் கடைப்பிடிப்பதாக யுனிசெப் அமைப்பு தனது அண்மைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதத்தில் 48 சதவீதமான குடும்பங்கள் இவ்வாறான உத்திகளைப் பயன்படுத்திய நிலையில் தற்போது இந்த வீதம் 62 ஆக உயர்வடைந்துள்ளதாக அவ்வமைப்பு அறிக்கை ஊடாக சுட்டிக்காட்டியுள்ளது. இவற்றில் 26 வீதமான குடும்பங்கள் உற்பத்திகளை மேற்கொள்ள கூடிய (வருமானத்தை தரக்கூடிய) சொத்துக்களை …

  9. 15 AUG, 2023 | 10:28 AM கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும் இடையிலான கலந்துரையாடல் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் திங்கட்கிழமை (14) இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சாலை வரைபடத்தைத் திட்டமிடுதல், இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் அரசு அலுவலகங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் மதத் தலங்களுக்கு இலவச சோலார் பேனல்களை நிறுவுவதற்கு காஞ்சன விஜயசேகர இணக்கம் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், இலங்கை மின்சார சபையின் தலைவர்,பிரதம செயல…

  10. Published By: DIGITAL DESK 3 15 AUG, 2023 | 10:43 AM (எம்.மனோசித்ரா) இந்தோ-பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடு நேற்று திங்கட்கிழமை (14) கொழும்பில் ஆரம்பமானது. அமெரிக்க இந்தோ - பசிபிக் கட்டளை, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர கடற்படை இணைந்து கொழும்பு - ஷங்ரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற இதன் ஆரம்ப நிகழ்வில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன, பாதுகாப்புப் படைகளின் பிரதானி, ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் சிறப்பு விரு…

  11. Published By: RAJEEBAN 15 AUG, 2023 | 10:00 AM அரசாங்கம் ''சனல் - ஐ" யை லைக்கா நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது என தேசிய மக்கள் சக்தி குற்றம்சாட்டியுள்ளது. அரசாங்கத்திற்கு சொந்தமான ''சனல் - ஐ" ஜூன் 30 திகதி முதல் ஆறு மாதங்களிற்கு விஐஎஸ் ஒலிபரப்பு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ''சனல் - ஐ" யின் ஒளிபரப்பு நேரம் எந்த வெளிப்படை தன்மையுமின்றி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்த ரூபவாஹினி ஊழியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததை தொடர்ந்து ஊடக அமைச்சர் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார் என நளிந்த ஜயதிஸ்ஸ குற்றம்சாட்டியுள்ளார்.…

  12. Published By: DIGITAL DESK 3 15 AUG, 2023 | 10:06 AM சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (14) இரவு கொழும்பில் இருந்து புறப்பட்டு சீனாவை சென்றடைந்தார். சீன வர்த்தக அமைச்சு மற்றும் யுவான் மாகாண அரசு இணைந்து நடத்தும் 7வது சீன - தெற்காசிய எக்ஸ்போ கண்காட்சி மற்றும் 27வது சீனா குன்மிங் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கண்காட்சி ஆகியவற்றில் அவர் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். சீனாவின் குன்மிங்கில் ஆகஸ்ட் 16 முதல் 20 வரை இந்த எக்ஸ்போ கண்காட்சி நடைபெறவுள்ளது. எக்ஸ்போ ஏற்பாட்டாளர்களின் கருத்துப்படி, இந்த மாபெரும் வர்த்தக கண்காட்சியில் 60 நாடுகள்…

  13. Published By: DIGITAL DESK 3 15 AUG, 2023 | 11:51 AM அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை இம்மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, இம்மாதம் 28 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும். இரண்டாம் கட்ட பாடசாலை தவணை ஆகஸ்ட் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/162394

  14. Published By: DIGITAL DESK 3 14 AUG, 2023 | 04:36 PM வைத்தியர்கள் பற்றாக்குறை தொடருமானால் வெளிநாட்டு வைத்தியர்களை இந்நாட்டுக்கு அழைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கம் விதித்துள்ள அதிக வரிப்பணமும் தற்போது நாட்டில் நிலவும் ஸ்திரமின்மையும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பிரதான காரணம் எனவும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் வைத்தியசாலை நெருக்கடியை எதிர்நோக்குவதாகவும் குணரத்ன தெரிவித்தார். வைத்தியர்களின் எண்ணிக்கை குறைவடைந்த நிலையில் இருவர் இருந்த இடத்தில் ஒருவரையும் அல்லது மூவர் இருந்த இடத்தில் இருவரையும் பண…

  15. நூருல் ஹுதா உமர் நாவலடி காணி விவகாரத்தில் இடம்பெற்றுள்ள இனவாத செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். சட்டரீதியாக நீதிமன்றத்தினால் பிரிக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கை 13ம் திருத்த சட்டமூலத்தின் பிரகாரம் மீளவும் இணைத்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை தமிழ் தரப்பு கோரிவரும் இந்நிலையில் பிரிந்த வடக்கு கிழக்கிலையே சாணக்கியன் எம்.பி போன்றவர்களின் அடாவடித்தனம் இவ்வாறு இருக்கிறது என்றால் இணைந்த வடகிழக்கில் முஸ்லிங்களின் வாழ்வியல் நிலை என்ன ? என்று கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஐ. ஹலீலுர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் முகத்திரை கிழிந்து …

    • 5 replies
    • 733 views
  16. 14 AUG, 2023 | 01:58 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி தலைமைத்துவ பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது விமானப்படையினர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் 53 பாடசாலை மாணவிகள் மற்றும் 4 பணியாளர்கள் உயிரிழந்தனர். அவ்வாறு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக வருடந்தோறும் பல இடங்களில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திங்கட்கிழமை (14) செஞ்சோலை படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர்கள் வசிக்கும் பல்வேறு பிரதேசங்களில் அனுஷ்டிக்கப்படுகிறது. செஞ்சோலை வளாகம் செஞ்சோலைய…

  17. Published By: DIGITAL DESK 3 14 AUG, 2023 | 02:26 PM பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் கொழும்பில் பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான, ஆற்றல்மிக்க, முற்போக்கான, சகிப்புத்தன்மை மற்றும் ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தானின் சுதந்திரத்தின் 76வது ஆண்டு விழாவை கொண்டாடியது. இலங்கையில் உள்ள பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் பாரூக் பர்கி அவர்கள் பாகிஸ்தான் தேசிய கீதம் இசைக்கப்படும் வேளையில் பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஏற்றி இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனை தொடர்ந்து பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் விசேட செய்திகள…

  18. மன்னார் மருத மடு திருத்தல பக்தர்களுக்கு அவசர கோரிக்கை மன்னார், மருத மடு திருத்தலத்தில் தங்கியுள்ள உள்ள பக்தர்களுக்கு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். மடு மாதா திருத்தலச் சூழலில் பெருமளவில் பக்தர்கள் தங்கியுள்ள சூழ்நிலையில் இடையிடையே மழை பெய்து வருகிறது. இதனால் தமது வாழ்விடங்களில் வசிக்க முடியாது பல்வேறுபட்ட விஷ ஜந்துக்கள் வெளியேறி வரும் நிலையில் அவற்றால் பக்தர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. எனவே ஆலயச் சூழலில் தங்கியுள்ள பக்தர்கள் இது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு அன்புடன் வ…

    • 1 reply
    • 541 views
  19. “இராணுவ முகாமை அகற்றாதே ! ” – யாழில் போராட்டம் adminAugust 14, 2023 காவல்துறையினா் மீது நம்பிக்கை இல்லாததால் , தமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள 4 வது சிங்க றெஜிமென்ட படையணி இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை காலை அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினா் மீது நம்பிக்கை இல்லை. காவல்துறையினா் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில்லை இராணுவத்தின் மீதே எங்களுக்கு நம்பிக்கை. தனியார் காணியில் உள்ள இராணுவ முகாமை மாற்றுவதாக இருந்தால், அரச காணியில் இராணுவ முகாமை அமையுங்கள்…

    • 10 replies
    • 1.3k views
  20. 1 மணி நேரம் முன் இது சிங்கள பௌத்த நாடே, இங்கே தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் தான் வடக்கு, கிழக்கிற்கு செல்வதாகவும், அங்கே விகாரைகள் மற்றும் பிக்குகள் மீது கை வைக்க முயன்றால் அங்குள்ளவர்களின் தலைகளுடனேயே களனிக்கு திரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இதே வேளை புலம்பெயர் தமிழர்களுக்கு இங்குள்ள சொத்துக்களை விற்கவோ, குத்தகைக்கு வழங்கவோ கூடாது என்று ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுப்பதாகவும், அவ்வாறு வழங்க முயன்றால் களனி மக்களோடு வந்து விரட்ட நேரிடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம். …

  21. Published By: DIGITAL DESK 3 14 AUG, 2023 | 09:27 AM யாழ்ப்பாணம் - கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்க பகுதியில் சனிக்கிழமை (12) நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் விஷேட குற்றதடுப்பு பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான காவல்துறை குழுவினரால் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கோப்பாய் மற்றும் சிந்தங்கேணி பிரதேசங்களைச் சேர்ந்த 4 ஆண்களும் 2 பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட நபர் கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி (9வயது) ஒ…

  22. Published By: RAJEEBAN 14 AUG, 2023 | 11:25 AM அரசமைப்பு ஊடாக ஈழத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம் பெறுகின்றனவா என முன்னாள் இராணுவ பிரதானி லெப் ஜெனரல் ஜகத்டயஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 13வது திருத்தத்திற்கு எதிரான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தவேளை இதனைத் தெரிவித்துள்ள அவர், 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது வடக்கு கிழக்கில் தனிநாடு உருவாவதற்கு வழிவகுக்கும் என்பதை உணர்ந்திருக்கின்றீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். விக்கிரமசிங்க ராஜபக்ச அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நாடு பிளவுபடுவதற்கு வழிவகுக்கும் என்பதால் அதனை அவசரமாக எதிர்க்கவேண்டிய தேவை உள்ளதாக தான் உணர்ந்ததாக ஜகத் டயஸ் குறிப்பிட்டுள்ள…

  23. 14 AUG, 2023 | 04:49 AM (எம்.ஆர்.எம்.வசீம்) கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை 10ஆம் தரத்தில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி இருக்கிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தற்போது அது தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ள இருக்கும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையி்ல், நிகழ்காலத்துக்கு ஏற்றவகையில் கல்வித்துறையைில் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருக்கிறோம். தற்போது இருக்கும் கல்வி நடவ…

  24. 13 AUG, 2023 | 02:50 PM வடக்கு மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், வட பகுதியில் இருக்கின்ற வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு காணப்படுகிறது. இருப்பினும் 90 விகிதத்துக்கு மேலான மருந்துகள் அதாவது முக்கியமான நோய்களுக்குறிய மருந்துகள் இருக்கின்றன. திடீரென ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படுகின்ற போது நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றார…

  25. சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பெரியப்பா – யாழில் சம்பவம் தனது வீட்டில் தங்கி இருந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் வறுமை காரணமாக 17 வயதான தனது மகளை, தந்தையின் அண்ணாவின் வீட்டில் பெற்றோர் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் சிறுமியின் பெரிய தந்தை நீண்ட காலமாக சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, நேற்று பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமியின் பெரிய தந்தையை கைது செய்துள்ளதுடன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.