ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142971 topics in this forum
-
ஜனாதிபதி வேட்பாளர் சரத்பொன்சேகா தனிப்பட்ட ரீதியில் ஒரு நாள் பயணம் ஒன்றினை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார். நேற்று இரவு இலங்கையில் இருந்து சென்ற சரத் பொன்சேகா நாளை காலை மீண்டும் இலங்கை வந்தடைவார் என பொன்சேகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்ன நோக்கத்திற்காக சென்றார் என்ற விடயங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
-
- 0 replies
- 1k views
-
-
பிரான்ஸ்: வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள்வலியுறுத்தி பிரான்ஸ் தழுவிய வாக்கெடுப்பு. http://www.pathivu.com/news/4424/69//d,art_full.aspx
-
- 0 replies
- 525 views
-
-
தென்னிலங்கை முழுக்க வாழும் தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்திற்காக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நியமிக்கப்படவிருக்கும் சரத் பொன்சேகாவிற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு மனோ கணேசன் எம்.பி. கொழும்பில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது வேண்டுகோள் விடுத்துள்ளார். வடக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நடக்கும் பேச்சுவார்த்தைகளை அடுத்து இறுதி முடிவு தேர்தல் நியமன தினத்திற்கு முன் அறிவிக்கப்படும் என்ற ஜனநாயக மக்கள் முன்னணியினது அரசியல் குழு எடுத்துள்ள முடிவை கட்சியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கொழும்பில் இன்று (03.12.2009) காலை கிராண்ட் ஒரியன்டல் விடுதியில் நடத்தப்பட்ட ஊட…
-
- 0 replies
- 725 views
-
-
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினராக இருந்து பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட கருணாவிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை விட சரத்பொன்சேக்காவிற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு பல மடங்கு குறைவானது என்று சரத் பொன்சேக்காவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதன் காரணமாக அவருடைய உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் நிலவுவதாகவும் இது அவருடைய அடிப்படை மனித உரிமையை மீறுவதாகவும் குறிப்பிடட வழக்கறிஞர் விடுதலைப் புலிகளால் மட்டுமன்றி வேறு பல தரப்புகளாலும் பொன்சேக்கா உயிரச்சுறுத்தலை எதிர்நோக்குவதாகவும் குறிப்பிட்டார். மூலம் : http://www.tamilstar.org
-
- 0 replies
- 683 views
-
-
போரினால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுடைய அசையும் அசையா சொத்துக்களின் பெறுமதியினை அரசாங்கம் அவர்களுக்கு மீளச் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வன்னியில் போர் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் தமது உடைமைகள், கால்நடைகள் உள்ளிட்ட அனைத்தையும் இழந்துள்ளனர். அவர்களை மீளக் குடியமர்த்தும்போது சாதாரண வாழ்க்கை நடைமுறையை பின்பற்றக் கூடிய சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இந்தப் பொறுப்பினை அரசாங்கம் தட்டிக்கழிக்கக் கூடாது என செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 415 views
-
-
பிரபாகரன் பிரதரா? வீர வணக்க நாள் நிகழ்வுக்காக கனடா போன 'நாம் தமிழர்' இயக்கத்தின் சீமான், அங்கே கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். 'பிரிவினையைத் தூண்டும் விதமாக சீமான் பேசினார்' என கனடா அரசு குற்றம்சாட்ட... இன்னொரு புறமோ இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கனடாவுக்கு விசிட் அடிக்கும் நேரத்தில், தேவையற்ற சலசலப்புகளைத் தடுக்கும் விதமாகவே சீமான் திருப்பி அனுப்பப்பட்டதாக பரபரப்பு கிளம்பி இருக்கிறது. இந்நிலையில் நாம் சீமானை சந்தித்தோம். ''கனடாவில் அப்படி என்னதான் பேசினீர்கள்?'' ''வருடந்தோறும் கனடாவில் உள்ள ஈழமுரசு பத்திரிகை, மாவீரர் தினத்தை எழுச்சி நாளாகக் கொண் டாடும். கடந்த 2007-ம் ஆண்டே அந்த விழாவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். அதேபோல் இந்த வருடமும…
-
- 0 replies
- 1.8k views
-
-
புலம் பெயர்ந்து அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்து இருக்கும் எம் உறவுகளில் பலருக்கு அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது... இந்தநிலையில் அவர்களை நாடு கடத்தும் முயற்சியில் இந்தநாட்டு அரசுகள் திரைமறைவில் ஈடுபட்டுள்ளன! இலங்கை அரசின் புலம் பெயர் தமிழர்கள் மீதான அச்சத்தின் காரணமாக இவர்கள் அனைவரையும் நாட்டுக்கு அழைப்பதற்கான முயற்சியில் தீவிரமாக இலங்கைதூதரகங்கள் ஈடுபட்டு வருகின்றது.. இவற்றை தடுப்பதற்கு என்ன நடவெடிக்கைகளை மேற்கொள்ளலாம்? மேற்கொள்ள போகின்றோம்? அல்லது இவர்களையும் அந்த கொடியவனின் கைகளில் கொடுப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க போகின்றோமா??????
-
- 1 reply
- 825 views
-
-
கொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும். எதிரிகள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு அழியும் கவுண்ட் டவுண் தொடங்கப் போகின்றது. தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும். பிரபா கவுண்டிங் ஸ்ரார்ட் கொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும். குருதி குடித்தவன் ஒரு அணியில் குடிக்கச் சொன்னவன் மறு அணியில். மான மறத் தமிழச்சிகளின் மானங்கெடுத்தவன் ஒரு அணியில் கெடுக்கச் சொன்னவன் மறு அணியில். எங்கள் செஞ்சொலைக் குழந்தைகளை கொன்று குவித்தவன் ஒரு அணியில் ஏவிவிட்டவன் மறு அணியில். சபாஷ் சரியான போட்டி. தமிழனை வெங்களமாடி வென்றவன் யார்? இனி சிங்களம் இதனைத் தீர்மானிக்கும். தமிழனை யார் அதிகம் கொன்றானோ அவனுக்கு வெற்றி வாகை கிடைக்கும். இனவாதம் அவனுக்க…
-
- 0 replies
- 971 views
-
-
இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பதவியைப் பிடிக்க அரச மரத்தை நாட ஆரம்பித்துள்ளாராம் ராஜபக்சே. கண்ணில் படும் அரச மரங்களையெல்லாம் கட்டிப்பிடித்து வருகிறாராம் அவர். அனுராதபுரம் ஸ்ரீ மகா போதி மற்றும் பிற புத்த விகாரைகளுக்கு பயணம் செய்து தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளைத் ராஜபக்சே தொடங்கியுள்ளார் இந்தக் கோவில்களில் உள்ள அரச மரத்தை அவர் கட்டிப் பிடித்து வணங்கினார். தான் எங்கு சென்றாலும் அங்கு அரச மரம் இருந்தால் அதை உடனே கட்டிப் பிடித்து உரசி வணங்குகிறார். குழந்தை பாக்கியம், திருமணம், பணம், வரவு போன்றவற்றுக்காக அரச மரத்தை வணங்குவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அதிபர் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மரத்தைக் கட்டிபிடித்து வரு…
-
- 0 replies
- 744 views
-
-
5000 சிறிலங்கா நாட்டவர்களுக்கு 2011ல் அமெரிக்காச் சீட்டிலுப்பின் மூலம் அமெரிக்காவில் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படவுள்ளது. சிறிலங்காவில் தமிழர்கள் உயிரோடு வாழ்வதற்கே பெரும் பிரச்சனையாக இருக்கிறது. உங்களின் உறவுகள் சிறிலங்காவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் வாழ விருப்பம் இருந்தால் முயற்சித்துப் பார்க்கலாம். US Lottery visa.-INFORM ALL Help some one who you wants to immigrate to USA.. They are selecting about 5000 Srilankans this time in US Lottery visa Remember green card application should be sent before December 14th.. do not wait until the last day You may have a chance.. let your family members and friends try... http://www.dvlot…
-
- 1 reply
- 966 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவரான கே.பி.,யிடம் நடத்திய விசாரணையில், அவருக்கு சொந்தமாக ஐந்து கப்பல்கள் இருப்பதாகவும், 600க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இலங்கையில் கடந்த மே மாதம் நடந்த இறுதிக்கட்ட போருக்கு பின், புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த அமைப்பின் புதிய தலைவராக கே.பி., என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் அறிவிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிநாடு ஒன்றில் அவர், இலங்கை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.தற்போது, இலங்கை புலனாய்வு அதிகாரிகள், கே.பி.,யிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து இலங்கை மூத்த அமைச்சர்களில் ஒருவரான கெகலியா ரம்புக்வெல்லா கூறியதாவது:கே.பி.,யி…
-
- 0 replies
- 780 views
-
-
மீண்டும் புதிதாக ஒரு இந்தியத் துரோகம்? பாரிஸ் ஈழநாடு ஈழத் தமிழர்களின் இத்தனை கால அவலங்களுக்கும் மூல காரணமாக விழங்கும் இந்திய ஆதிக்க சக்தி, தற்போது ஈழத் தமிழர்களை மையப்படுத்திப் புதியதோர் துரோகத்தை அரங்கேற்ற முற்படுகின்றது. கடந்த வாரத்தில் இந்திய உளவு நிறுவனமான றோவினால் தமிழக ஊடகங்களுக்குக் கசியவிடப்பட்ட செய்தி ஒன்று இதனை உறுதிப்படுத்துவதாக உள்ளது. கடந்த வார இறுதியில் 'இந்தியா உதவியுடன் இலங்கையில் யுத்தம்' என்ற தலைப்பில் ஜுனியர் விகடன் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. 'விழ விழ எழுவோம்; ஒன்று விழ, ஒன்பதாக எழுவோம்' என்பதுதான் புலிகளின் ஸ்டைல். அந்த வகையில் 'இலங்கையில் மீண்டும் போர் மூளும், அதுவும் இந்தியாவின் துணையோடு' என்ற ஆச்சரியமான ஒரு கணிப்பை சொல்லத் தொடங்கி…
-
- 0 replies
- 531 views
-
-
தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும்: யாழிலிருந்து சனீஸ்வரன் [ புதன்கிழமை, 02 டிசெம்பர் 2009, 10:12.12 AM GMT +05:30 ] கொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும். எதிரிகள் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டு அழியும் கவுண்ட் டவுண் தொடங்கப் போகின்றது. தானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும். இவ்வாறு யாழிலிருந்து சனீஸ்வரன் எமது தளத்திற்கு அனுப்பியுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார். சனீஸ்வரனின் ஆய்வறிக்கையின் முழுவடிவம்: பிரபா கவுண்டிங் ஸ்ரார்ட் (பாபா கவுண்டிங் ஸ்ரைல்) கொன்றவன் ஒரு அணியிலும் கொல்லச் சொன்னவன் மறு அணியிலும். குருதி குடித்தவன் ஒரு அணியில் குடிக்கச் சொன்னவன் மறு அணியில். மான மறத் தமிழச்சிகளின் மானங்கெடுத்தவன் …
-
- 0 replies
- 514 views
-
-
இருவரில் ஒருவர்தான் வரப்போகிறார் யார் வருவதன் மூலம் தமிழருக்கு ஓரளவுக்கு சாதகமாக அமையும் வாக்களித்து விட்டு தங்கள் கருத்தை இங்கே குறிப்பிடவும் விவாதிப்பதன் மூலம் தெளிவான முடிவினைப் பெற்றுக் கொள்ளலாம்.
-
- 7 replies
- 1.1k views
-
-
எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் அனைத்து கட்சிகளும் அங்கம் வகிக்கும் இடைக்கால அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் இடைக்கால அரசாங்கத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுக்கும் முக்கிய அமைச்சு பதவிகள் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்ளும் தமது அரசாங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டவர்கள் காணமல் போனவர்கள் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொ…
-
- 0 replies
- 707 views
-
-
"வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க வேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் தம்முடன்தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் செய்யக்கூடாது" என தேச நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கு மக்கள் குறிப்பாக குடாநாட்டு மக்களுக்குத் தாம் இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வேரூன்றச் செய்வதுடன், கிழக்கு பகுதி மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கச் செய்யும் விதத்தில் சூறாவளி பிரசாரங்களை செய்துவரும் அமைச்சர் …
-
- 5 replies
- 1.5k views
-
-
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவிற்கே தாம் ஆதரவளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். போரை நடத்துவதற்கு கட்டளையிட்டவரும அதனை ஏற்றுக் கொண்டு நடத்தியவரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது பிரச்சினையாக இருப்பதாகவும் தெரிவித்த சிவநேசதுரை சந்திரகாந்தன் தாங்கள் ஜனாதிபதி மகிந்த ராஸபக்ஸவை ஆதரிப்பதென உறுதியாக இருப்பதாகவும் அவர் எதிர்க்கட்சியில் இருக்கும் சரத் பொன்சேகாவை விட நல்லவர் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தாம் தொடர்ந்தும் ஜனாதிபதியுடன் நல்லுறவை பேணிக் கொண்டிருப்பதாகவும் அதனை நீட்டிக் கொண்டு செல்வதினூடாகவும் நிர்வாகப் பிரச்சினைகளை தீர்ப்பதனூடாகவும் தமது மாகாணத்தை சிறப்பாக கொண்டு செல்ல முடியும் எனவும் …
-
- 0 replies
- 765 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்று பெரிய கப்பல்கள் சர்வதேச போலீஸ்துறையான இன்டர்போலின் உதவியுடன் சர்வதேச கடற்பரப்பிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மேலும் மூன்று கப்பல்கள் இருக்கலாம் என்று சந்தேகமாக செய்தியகள் வருகின்றன. இதற்கு முன்பு புலிகளுக்குச் சொந்தமான 10 கப்பல்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினர் அழித்துவிட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் சர்வதேச சொத்துக்களை அரசுடமையாக்கும் திட்டத்தின் முதல் படியாக இந்தக் கப்பல்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி நக்கீரன் இணையம் http://www.nakkheeran.in/u…
-
- 1 reply
- 860 views
-
-
வடக்கில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் புலம்பெயர் மக்கள் தெளிவுபடுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. எதிர்வரும் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 12ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இது தொடர்பான விசேட கருத்தரங்கொன்று நடைபெறவுள்ளதாகவும், உலகமெங்கிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் புத்திஜீவிகளை இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழர்க…
-
- 0 replies
- 676 views
-
-
எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். 2000 பெண் போராளிகள் உள்ளிட்ட 11000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் 17 முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் மூன்று முகாம்கள் நிரந்தர தடுப்பு முகாம்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. தடுப்பு முகாம்களில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு இந்த நடவடிக்கையின் மூலம் அரசாங்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலிகள் ஊரில் நடந்த மாவீரர் தினம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26, போரில் உயிரிழந்த புலிகளுக்கு வீரவணக்கம் செய்யும் நாளான நவம்பர் 27 மாவீரர் தினம் ஆகியவற்றை உலகம் முழுவதும் உள்ள தமிழீழ ஆதரவாளர்கள் ஆண்டுதோறும் சிறப்பாகக் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த ஆண்டு பிரபாகரனும்,புலிகளும் அடியோடு அழித்தொழிக்கப்-பட்டதாகக் கருதப்படும் நிலையில்,தமிழகம் முழுவதும் ஈழ ஆதரவாளர்களால் இந்த இரு தினங்களும் சிறப்பாகவே கடைப்பிடிக்கப்பட்டன. கடந்த 26-ம்தேதி ஈரோடு, திருச்சி போன்ற இடங்களில் பிரபாகரனின் பிறந்த நாளுக்காக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களைக் கிழித்தும், டிஜிட்டல் பேனர்களைச் சேதப்படுத்தியும் தங்களுடைய எதிர்ப்பை காங்கிரஸார் பதிவு செய்தனர். சேலம் போன்ற இ…
-
- 5 replies
- 3.9k views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் சரத் பொன்சேக்கா நேற்று (30) கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். இதன்போது அஸ்கிரிய மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிப் பெற்றுக்கொண்டார். இதன்பின்னர் ஊடங்களுக்குக் கருத்து தெரிவித்த சரத் பொன்சேக்கா, சிறுபான்மை இன மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து அவர்கள் சுதந்திரமாக வாழும் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது நாட்டின் தற்போதைய தேவையாகும் எனக் கூறினார். அத்துடன் அம்மக்களின் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அவற்றை இனிதே நிறைவேற்றிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒரே தேசமாக, அனைத்து இன மக்களும், ஒற்றுமையாகவம், சந்தோசமாகவும் இணைந்து வாழக்கூடிய சூழ்நிலை உ…
-
- 1 reply
- 938 views
-
-
ஐ.நா.: மத்திய கிழக்கு ஆசியாவில் அமைதி நிரந்தரமாக வேண்டும் என்றால் பாலஸ்தீனம் சுயாட்சி கொண்ட சுதந்திர இறையாண்மை உள்ள நாடாக உருவாக வேண்டியது அவசியம் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு [^] தெரிவிக்கும் சர்வதேச தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பான் கி மூன் பேசுகையில், இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாடுகள், உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கேற்ப தனி சுதந்திர பாலஸ்தீனம் உருவாக்கப்பட வேண்டும். கடந்த 40 ஆண்டுகளாக இரு தரப்பிலும் நிலவி வரும் பேரழிவுகளும், உயிரிழப்புகளும் அடியோடு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு இரு தரப்பும் மீணடும் ஆக்கப்பூர்வமான பேச்சுக்களில் ஈடுபட வேண்டும். சுதந்திர பாலஸ்தீன நாடு …
-
- 1 reply
- 815 views
-
-
இன்று எய்ட்ஸ் தினம் உலகத்தில் 32 மில்லியன் மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயினை குணப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் பெரும் பொருட்செலவில் ஆய்வுகள் நடந்துவருகின்றன. ஆனால் உருப்படியான தடுப்பு மருந்துகள் எவையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றே கூறமுடியும். ஆனால் இயற்கையான தடுப்பு முறையாக பாதுகாப்பான பாலியல் உறவுமுறை என்பதே ஒரே ஒரு பாதுகாப்பு முறையாகும். இலங்கையில் 312 பேர் இதுவரை தொற்றுக்குள்ளாகி இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் 197 பேர் இறந்துள்ளனர். தொற்று ஏற்பட்டவர்களில் 42 பேர் குழந்தைகள். யாழ் குடா நாட்டில் மூன்று பெண்கள் 2005 வரை கண்டு பிடிக்கபட்டனர். இவர்கள் மாறாத காய்ச்சல் நோயினால் அவதிப்பட்டவேளையிலேயே ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்ப…
-
- 2 replies
- 510 views
-