Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பதவிக்கு வந்து ஆறு மாதங்களில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை ஒழிப் பது உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி. ஆகிய அணிகளுடன் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா இணக்கப்பாட் டுக்கு வந்துள்ளார். இதனையடுத்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி ஆகிய எதிர்க்கட்சிகளின் பொது வேட் பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா களம் இறங்குவது உறுதியாகி உள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய தேசிய முன்னணி, ஜே.வி.பி. ஆகிய கட்சிகள் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாடு ஒன்றுக்கு வந்திருக்கின்றன. முத்தரப்புகளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொகுக்கப்பட்டு ஒப்பந்தமாக்கப…

  2. ஜனாதிபதித் தேர்தலை இரண்டு வருடங்கள் முற்கூட் டியே நடத்தும் முடிவுக்குத் தாம் வந்தமைக்கான காரணம் என்ன என்பதை நேற்று அலரிமாளிகையில் பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்கள் போன்றவற்றின் வெளியீட்டா ளர்கள் மற்றும் ஆசிரியர்களைச் சந்தித்தபோது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளக்கியிருக்கின்றார். "கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது வடக்கு, கிழக்கில் கணிசமான மக்கள் அதில் பங்குபற்ற விடாமல் தடுக்கப்பட் டனர் என்றும், அவர்கள் தங்களின் ஜனாதிபதியைத் தெரிவு செய்ய இயலாமல் போய்விட்டது என்றும் அப்போது முதல் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. அந்தக் குற்றத்தைக் களைவதற்காக எனக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் வந்தவுடன் இரண்டு ஆண்டு கள் முற்கூட்டியே மீண்டும் அத் தேர்தலை நடத்துகிறே…

  3. சரத்பொன்சேகாவின் பாதுகாப்பு வாகனத்தினை அவரது பாதுகாப்பு பிரிவினரின் வளாக கட்டிடத்தில் இருந்து இராணுவ பொலிசார் அகற்ற முயன்றனர். இதனை தொடர்ந்து பாதுகாப்புக்கு இருந்த இராணுவத்தினர் சரத்பொன்சேகாவுக்கு அறிவித்தனர். உடனடியாக சரத் பொன்சேகா சம்பந்தப்பட்ட இராணுவ பொலிசாருடன் நேரடியாக பேசினார். தனக்கு இந்த வாகனம் தேவை எனவும் கூறினார். அதனை தொடர்ந்து தாம் மேலிடத்து கட்டளையின் படியே வந்ததாகவும் அதற்காக வருந்துவதாகவும் கூறிவிட்டு சென்றுள்ளனர். சரத்பொன்சேகா மீதான நடவடிக்கைக்கு கோத்தபாயவின் ஒரு பரீட்சாத்த முயற்சியாக இருக்கலாம் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.eelanatham.net/news/important

  4. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து இறக்குவது மட்டுமல்லாது, அவரை வீட்டுக்கு அனுப்பிவைப்பதே ஜே.வி. பி.யின் குறிக்கோளாகும். இதனை மையமாகக் கொண்டே பொது வேட்பாளர் தொடர்பிலான பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. மாறாக, கூட்டுக் கட்சிப் பேச்சு என்பதற்கு இடமில்லை" என்று அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். "எதிர்க்கட்சிகளின் ராஜதந்திர அரசியல் நகர்வுகள் அரசாங்கத்தை ஆட்டம் காணச் செய்துள்ளன. பீதியில் குழம்பிப் போயிருக்கும் ஆளும் தரப்பினர் வன்முறைகளினூடாக எதிர்க்கட்சிகளை நசுக்கிவிடலாம் என்று எண்ணுகின்றன. அரசாங்கத்தின் பகற்கனவு பலிக்கப் போவதில்லை" என்றும் அவர் சொன்னார். ஜனாதிபதித் தேர்தல், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் குறித்து…

  5. பூனை இல்லாத வீட்டில் எலி சன்னதம் என்பார்கள். இப்போது புலி இல்லாத நாட்டில் பூனைகள் ஓடி விளையாடுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் கொஞ்சக் காலமாக தமிழ்மக்களை வானிலிருந்து குண்டு போட்டும் தரையில் இருந்து செல் அடித்தும் மனிதப் படுகொலையை கச்சிதமா அரங்கேற்றின மகிந்த இராசபக்சேயின் அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இரண்டு நாள்களுக்கு முன் வன்னியில் உள்ள வதைமுகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ள மக்களை வெளியே விடுமாறு மன்னிப்சபைசபை அறிக்கை மூலம் கேட்டது. கேட்பததோடு நில்லாமல் தெருவுக்கு இறங்கி போராடியது. ஆனால் கிஷோர் இராபச்சேயைக் கட்டிப்பிடித்து பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கிறார். அவரது தமிழ்க் குரு…

  6. மலேசியாவில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை இடம்பெயர் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அந்நாட்டிலிருந்து வெளியாகும் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை இடம்பெயர் மக்களுக்கு நிலையான தொழில் வாய்ப்புக்களை கிடைப்பதில்லை எனவும், காவல்துறை மற்றும் ஏனைய அதிகாரிகளினால் துன்புறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மியன்மார் அகதிகளுக்கு அதிக சலுகைகள் வழங்கப்படுவதுடன், இலங்கையர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. மலேசியாவில் சுமார் நான்காயிரம் இலங்கை அகதிகள் தங்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. மலேசிய தமிழ் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்று தற்காலிக தொழில் வாய்ப்புக்களை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. …

  7. தமிழர் பிரச்சினைக்கு உரிய தீர்வுத் திட்டங்களை முன்வைத்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிப்பதில் சிக்கல் எதுவுமில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். நாட்டில் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் முக்கிய பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு வழங்கப்பட்டால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்கத் தயார் என அவர் அறிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நீண்டகாலமாக நீடித்து வந்த பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டு, நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சுதந்திரத்தை ஏனைய இனங்களுடன் இணைந்து தமிழ் மக்களும் அனுபவித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். …

  8. கறுப்பு தலைக்கவசமணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் யாழ். தினக்குரல், உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகை அலுவலகங்களுக்குச் சென்று ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் கடிதங்களைக் கையளித்துச் சென்றுள்ளனர். செவ்வாய் மாலை ஏழு மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. பயங்கரவாதிகள் தொடர்பான செய்திகளைப் பிரசுரித்து யாழ்.குடாநாட்டு மக்களை தடுமாற்றத்திற்கு ஆளாக்க வேண்டாம் என்றும் அதனை மீறி நடப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் அச்சுறுத்தப்பட்டுள்ளது. தமிழர்களைப் பாதுகாக்கும் கூட்டமைப்பு என்ற பெயரிலான அக்கடிதத்தில் 2002இல் எடுக்கப்பட்ட பிரபாகரன் மற்றும் பொட்டம்மான் போன்றோருடைய படங்களை இந்திய ஊடகங்கள் பிரசுரிப்பதை இங்குள்ள ஊடகங்களும் செய்யுமானால் அவற்றி…

  9. மேலக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசனுக்கும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவிற்கும் இடையில் இன்று மாலையில் பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றதாகத் தெரிய வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது தான் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு தயாராயிருப்பதாக சரத் பொன்சேக்கா கூறியதாகக் கூறப்படுகின்ற போதிலும் இது குறித்து மனோ கணேசனின் கருத்தை உடனடியாக அறிய முடியவில்லை. மூலம் : http://www.tamilstar.org

  10. அமெரிக்க கோடீஸ்வரர் றாஜ் றாஜரட்ணம் விடுதலைப் புலிகளுக்குப் பண உதவி செய்ததாகவும் அதனால் அவர் தமக்கு நட்ட ஈடு தரவேண்டும் என்று கோரியும் வழக்குத் தாக்கல் செய்ய இருப்பதாக விடுதலைப் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கம் என்ற பெயரில் அமைப்பொன்றை நடத்தி வரும் சிங்கள இனவாதியான ளு.டு. குணசேகரா தெரிவித்தார். இந்த வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகளை அமெரிக்க சட்டத்தரணிகள் குழுவிடம் ஒப்படைத்திருப்பதாகவும் இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சிங்கள இனவாதக் கட்சியான சிஹல உறுமயவின் தலைவராய் செயற்பட்ட குணசேகரா பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பாக ஏற்பட்ட இழுபறியால் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறியிருந்தது குறிப்பிடத்…

    • 0 replies
    • 626 views
  11. ஜனாதிபதி மாளிகையில் தொலைந்து போன பேனாக்கள் - GTN - ஆசிரியர் தலையங்கம் இலங்கையின் அரசியல் வரலாற்றி;ல் அதாவது இலங்கை சுதந்திரம் அடைந்த 6 தசாப்த காலத்தில் ஊடகத்துறை என்றுமே எதிர்நோக்காத இடர்களை எதிர்நோக்கியிருக்கின்றது. 1978 இல் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்து ஆணைப் பெண்ணாக பெண்ணை ஆணாக மாற்றுவதை விட தன்னால் எதுவும் செய்ய முடியும் என்று கூறிய ஜே. ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் கூட ஊடகத்துறை சில நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்த போதிலும், தணிக்கைகள் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த போதிலும் இவ்வாறானதொரு நெருக்கடியைச் சந்தித்திருக்கவில்லை. வடமராட்சியின் ஒப்பரேசன் லிபரேசன் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வெளி வந்த ஆங்கிலப் பத்திரிகையான சற்றடே றிவியூ …

  12. விக்ரமபாகு கருணாரட்ன ‐ சிறிதுங்க ஜயசூரிய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளனர் 25 November 09 01:52 pm (BST) புதிய இடதுசாரி முன்னணிக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சற்று நேரத்திற்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், எதிர்க்கட்சிகளின் பொதுவான வேட்பாளருக்கும் எதிராக விக்ரமபாகு தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், சிறுபான்மை மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து விக்ரமபாகு தேர்தலில் போட்டியிடுவதாக சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், வ…

  13. தமிழீழ தேசத்தின் காவற்தெய்வங்களை நெஞ்சில் நிறுத்திப் பூசிக்கும் தேசிய நினைவெழுச்சி நாளை 27.11.2009 வெள்ளிக்கிழமையன்று பிரித்தானியாவில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியாகியிருக்கும் நிலையில், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் சதி நடவடிக்கைகளில் சில நாசகார சக்திகள் இறங்கியுள்ளன. குறிப்பாக, தேசிய நினைவெழுச்சி நாள் 28 ம் நாளன்று இடம்பெறக்கூடும் என்று ஒருபுறமும், தேசிய நினைவெழுச்சி நாள் மண்டபத்தில் நுழைவுக்கட்டணம் அறவிடப்படும் என்று மறுபுறமும், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான செல்பேசிக் குறுந்தகவல்களும், இணையவழிக் கருத்தாடல்களும், செவிவழி வதந்திகளும், திட்டமிட்ட வகையில் நாசகார சக்திகளால் பரப்பப்பட்டு வருகின்றன. தேசிய நினைவெழுச்சி நாள் என்…

  14. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமை, ஊடகவியலாளர் போத்தல ஜயந்த, கீத் நொயார்க் ஆகியோர் தாக்கப்பட்ட சம்பவங்கள் ஜெனரல் சரத் பொன்சேக்காவின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாக பிரசாரங்களை முன்னெடுக்கும் பொறுப்பை பாதுகாப்புச் செயலாளரினால், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்களான லோரன்ஸ் பெர்னாண்டோ, சரத் கருணாரத்ன ஆகியோருக்கு வழங்கியிருப்பதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், கடந்த காலங்களில் கொழும்பைச் சூழவுள்ள பிரதேசங்களில் இடம்பெற்ற ஆட்கடத்தல், கொலை, காணாமல் போகச் செய்தல் போன்ற சம்பவங்களுடக்கும் பொன்சேக்காவே பொறுப்பு கூறவேண்டுமென்ற வகையில் பிரசாரத்தை சிறுபான்மை இன மக்கள் மத்தியிலும், சிவில் சமூகங்களுக்கு மத்தியிலும் முன்னெடுக்கும் பொறுப்புக்களும் இ…

  15. ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான நிலைப்பாடு குறித்த அறிவிப்பினை நாட்டின் பிரதான கட்சிகள் வெளியிட்டதன் பின்னர் என்னுடைய நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பேன் என்று கூட்டுப்படைகளின் முன்னாள் பிரதம அதிகாரிஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். கொழும்பு, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று முற்பகல் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு வெளியேறிய ஜெனரல் சரத் பொன்சேகாவை வழிமறித்த ஊடகவியலாளர்கள் சிலர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்களா என்று அங்கு ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜெனரல் சரத் பொன்சேகா, எனது வாழ்நாளில் இதுவரை எந்தவொரு…

  16. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட மாட்டாது – மகிந்த வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் தான் இணைக்க உள்ளதாக சில ஊடகங்களில் வெளிவந்த செய்தியில் எவ்வித உண்மையுமில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கிறார். சுடரொளி ஆசிரியர் வித்தியாதரன் மற்றும் வீரகேசரி ஆசிரியர் தேவராஜ் ஆகியோரிடமே இந்த நிலைப்பாடு விளக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் பெருமளவில் வாழும் முஸ்லிம் மக்கள் இணைப்பை விரும்பவில்லையென்றும் இதுவே தன்னுடைய இந்த முடிவுக்குக் காரணம் என்று மகிந்த கூறியதாகக் கூறப்படுகிறது. Source: http://www.tamilstar.org

  17. செட்டிகுளம் நிவாரண கிராமங்களிலிருந்து விடுவிக்கப்படும் மக்களுடைய தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் வவுனியா நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. தினமும் சுமார் மூவாயிரம் பேர் விடுவிக்கப்படுகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு இருக்க வவுனியா நகரில் முக்கிய சில பாவனைப்பொருட்களுக்கு பலத்த தட்டுப்பாடு காணப்படுகின்றது. பாவனை அதிகரிப்பே இதற்கு காரணமாகும் என சந்தை வர்த்தகர்கள் தெரிவித்தனர். விடுவிக்கப்படுபவர்கள் தாம் தங்கியுள்ள கிராமசேவையாளர் பிரிவில் பதிவுகளை மேற்கொள்ளவேண்டும் என கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிவாரண கிராமங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு விசேட அடையாள அட்டையும் விடுவிக்கப்பட்டதிற்குரிய…

  18. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றதும் வடக்கு கிழக்குத் தமிழர்களின் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வை முன்வைப்பர் என்று பிரதி அமைச்சர் கே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியீட்டுவார். அந்த வெற்றியை அவ ருக்குப் பெற்றுக் கொடுக்க நாம் பாடுபடு வோம். இத்தேர்தலில் வெற்றி பெற்றதும் அவர் வடக்கு கிழக்கு தமிழர்களினதும், தோட்டப்புற தமிழர்களினதும் பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வை முன்வைப்பார் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். இந்நாட்டு மக்கள் அனைவரும் எதுவித இன…

  19. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் (நாளை) நவம்பர் 26ம் தேதி வருகிறது. அதற்கு அடுத்த நாளான 27ம் தேதி போரில் உயிர் நீத்த போராளிகளுக்கு புலிகள் அஞ்சலி செலுத்தும், மாவீரர் நாள் வருகிறது. இந்நிலையில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் பிரபாகரனின் பிறந்த நாளையும், மாவீரர் தினத்தையும் கொண்டாடும் வகையில் தூத்துக்குடி நகர் முழுவதும் ’பிரபாகரன் பல்லாண்டு வாழ்க’ என்ற வாசகத்துடன் டிஜிட்டல் பேனர்கள் மிகப் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளன. நன்றி நக்கீரன்

  20. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் நவம்பர் 26. அவரது பிறந்தநாளை கொண்டாட இயக்குநரும், நாம் தமிழர் இயக்கத்தின் அமைப்பாளருமான சீமான் கனடா சென்றுள்ளார். கனடாவின் ரொரட்ண்டோவில் சீமான் விமானத்தில் இறங்கினார். அமெரிக்க வாழ் தமிழர்கள் அவரை வரவேற்றனர். http://www.parantan.com/

  21. சர்வதேச சமூகத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் வவுனியா தடுப்புமுகாம் சிறுமிகள் மீதான சிங்கள ராணுவத்தின் கூட்டு வன்புணர்வுகள் வவுனியா தடுப்புமுகாம்களில் புலிகளின் சிறுவர் படையணி என்கிற பெயரில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 13, 14 வயது சுறிமிகள் சிங்கள ராணுவப் புலநாய்வுத்துறையால் அச்சுறுத்தலாக்கப்பட்டு கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறான சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. தமிழ்நெட்டில் வந்த செய்தி....... Credentials of IC challenged while widespread rape by SLA alleged in Vavuniyaa [TamilNet, Tuesday, 24 November 2009, 17:24 GMT] Sri Lanka Army (SLA) intelligence officers operating in the internment…

  22. பிரான்ஸ் ஒருங்கிணைப்பு குழு தலைவர், செயலாளர் ஆகியோருக்கு சிறைதண்டனை. பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு பொறுப்பாளர் பரிதி, நிதியாளர் ஜெயா ஆகியோருக்கு பிரான்ஸ் நீதி மன்றம் தலா 7வருடம், 4 வருடம் சிறை தண்டனைகளை வழங்கியுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு நிதி வழங்கியதான சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இதன்படி இந்த இருவரும் ஏற்கனவே சிறைதண்டனையின் 90 வீதமான நாட்களை சிறையில் கழித்துள்ளனர். எனவும் தெரியவருகின்றது. கைது செய்யப்பட்ட ஏனையோர்கள் கட்டம் கட்டமாக ஏற்கனவே விடுவிக்கப்பட்டனர் என்பது தெரிந்ததே.

    • 4 replies
    • 1.4k views
  23. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் குரலில் 13 மில்லியன் தொலைபேசிகளுக்கு தகவல்களை அனுப்ப ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசகர் சுனிமல் பர்ணாந்து, இலங்கைத் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பிரியந்த காரியபெரும ஆகியோர் இந்த திட்டத்திற்கு பொறுபேற்றுள்ளனர். சுனிமல் பர்ணாந்து டயலொக் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரியவின் மாமனாராவார். இந்த பிரசார நடவடிக்கைள் மூலம் இலங்கையில் உள்ள அனைத்து தொலைபேசிகளுக்கும் ஜனாதிபதியின் குரலில் குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதித் தேர்தலில் தகவல் தொழிற்நுட்பத்தில் உச்ச பயனை பெற ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தீர்மானித்துள்ளதாக …

  24. இராணுவத்தினருக்கான வீடமைப்புத் திட்டங்கள் பலவற்றை விரைவில் அமைத்து முடிக்கவுள்ளதாக அறிவித்துள்ள அரசாங்கம் அவற்றில் பெரும்பாலானவற்றை தமிழ் பிரதேசங்களான வவுனியா, திருகோணமலை, அம்பாறை, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது. சரத் பொன்சேக்கா நடத்தப்படும் முறை குறித்து அதிருப்தியடைந்துள்ள படை வீரர்களைத் திருப்திப் படுத்தும் நோக்கில் பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வரும் அரசு அதன் ஒரு கட்டமாக படையினருக்கான வீடமைப்புத் திட்டங்கள் குறித்து அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. இது போன்ற ஒரு வீடமைப்புத் திட்டம் சில தினங்களுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சவினால் கெக்கிராவ பகுதியில் திறந்து வைக்கப்பட்டிருந்த…

    • 0 replies
    • 649 views
  25. அரசாங்கத்தின் சிறப்பான செயற்பாட்டினால் பெற்ற வெற்றிக்கு சரத் பொன்சேக்கா உரிமை கோர முயல்வதாக ‘அடிதடி’ அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சாட்டியிருக்கிறார் மாவிலாறில் யுத்தம் ஆரம்பமான போதும் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டபோதும் நாட்டில் இருக்காத சரத் பொன்சேக்கா இப்போது அரசாங்கமும் படைவீரர்களும் அர்ப்பணிப்புடன் பெற்ற வெற்றிக்கு உரிமை கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார். முள்ளி வாய்க்கால இறுதி மோதல் நடைபெற்ற காலப்பகுதியில் பொன்சேக்கா சீனாவில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். சரத் பொன்சேக்கா எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னின்று நடத்தும் பொறுப்பை மகிந்தவிடமிருந்து பெற்றுள்ள மேர்வின் சில்வா அண்மையில் களனி விகாரையில் சரத் பொன்சேக்காவை துரோகி என்று க…

    • 2 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.