Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பா.பிரதீபன், செயலாளர், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம். யாழ் பல்கலைக்கழகம். 10.11.2009. மனிதநேயப் பணிகளுக்கு நன்றி போஸ்டோ மற்றும் மனித உரிமைகள் இல்லம் நிறுவனங்கள் எமது வன்னி மாணவர்களுக்கு ஆற்றிய மனித நேய பணிக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகிறோம். நெருக்கடியான நிலையில் உள்ள மாணவர்களுக்கு இந்த உதவிகள் மிகவும் பெறுமதியாக கை கொடுத்துள்ளன. தமது கல்வியைத் தொடருவதற்குரிய முதலீடாகவும் நம்பிக்கையாகவும் காணப்படுகிறது. மாணவர்களது தேவையறிந்து தாமாகவே முன்வந்து சேசவையாற்றுகிற மனிநேய அமைப்பக்கள் எமது மாணவர்களுக்கு உதவி வருகின்றன. இந்த வகையில் அண்மையில் போஸ்டோ நிறுவனம் மற்றும் மனித உரிமைகள் இல்லம் என்பன மாணவர்களுக்கு நிதி உதவியை வழங்கியுள்ளன. எமது வன…

  2. ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீது தாம் நம்பிக்கை இழந்திருப்பதாக கூட்டுப்படைகளில் தலைமையதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார். இதனால் கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரியாக தொடர்ந்தும் பணியாற்றுவதில் சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டு ஜெனரல் சரத் பொன்சேக்கா பதவியிலிருந்து ஓய்வுபெறும் கடிதத்தை இன்று (12) பிற்பகல் 1.30 அளவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பியிருப்பதாக ஜனாதிபதி செயலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சென்றடைந்துள்ள மியன்மார் இராணுவ ஆட்சியாளரை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்று திரும்பிய பின்னரே சரத் பொன்சேக்க தமது ஓய்வுபெறும் கடிதத்தில் கையெழுத்திட்டு, அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில் த…

  3. தமிழ் தேசிய கூட்டமைப்பு, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் பதமனாபா அணி ஆகியோரை கொழும்பில் நேற்று சந்தித்துள்ளது. . புளொட் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் , என். ஸ்ரீகாந்தா, பா. அரியநேத்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம். கே. சிவாஜிலிங்கம் ஆகியோரும் ஜனநாயக தமிழ் தேசிய முன்னனி சார்பில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ. பி. ஆர். எல. எப். பத்மநாபா அணியின் தலைவர் சு.கு.ஸ்ரீதரன் உட்பட அம்முன்னணியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனராம். சுமார் 4 மணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்பில் குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனை,மீள் குடியேற்றம் ,வடக்கு கிழக்கு மாகாணங்…

  4. தென் ஆபிரிக்காவில் விடுதலைப்புலிகளின் செயற்பாட்டினையும் அத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாட்டினையும் கட்டுப்படுத்த இலங்கை வெளி நாட்டு அமைச்சர் ரோஹித போஹொல்லாம அந்த நாட்டு அமைச்சர் திருவாட்டி மைத்தி நோனா மசபானி அவர்களிடம் கோரியுள்ளதாகவும் அதற்கு அவர்கள் இணங்கியுள்ளதாகவும் ரோஹித போகொல்லாம தெரிவித்துள்ளார். இதே நேரம் தென் ஆபிரிக்கா இது குறித்து எதுவித அறிவிப்புக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஆனால் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் கொண்டுவரவிருந்த மனித உரிமை மீறல் தொடர்பான அறிக்கையினை தோற்கடிப்பதற்கு இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த விடயம் தொடர்பாக தமிழர் தரப்பு பிரதி நிதிகள் பல தடவை தென் ஆபிரிக்க அதிகாரிகளுடன் சந்திப்பை ஏற்படுத்த…

  5. அண்மையில் அவுஸ்ரேலியா சென்றுகொண்டிருக்கின்ற படகுகள் இலங்கையில் இருந்து செல்லவில்லை எனவும், அவுஸ்ரேலியா செல்லும் இலங்கை தமிழர்கள் தொடர்பில் இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கான காரணங்கள் ஒன்றும் இல்லையென்றும் கூறியுள்ளார் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர செயலர் பாலித கேகன்ன. அவுஸ்ரேலிய ஊடகமான ஏ.பி.சி க்கு வழங்கிய செவ்வியில் மேலும் கூறுகையில் அவுஸ்ரேலியாவினை நோக்கி அகதிகளை இழுப்பதற்கான காரணங்களே நிலவுகின்றன, அதாவது பொருளாதார காரணங்கள் தவிர இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கான அரசியல் சூழல் ஒன்றும் அங்கு இல்லை என கூறியுள்ளார். இலங்கையில் இருந்து அகதிகள் வெளிக்கிட்டு செல்கின்றார்கள் எனின் ஏன் 32 கிலோ மீற்றர் தூரத்தில், பக்கத்தில் இருக்கும் இந்தியாவுக்கு செல்ல முடியாது…

  6. இந்தோனேசிய கடற்பகுதியில் தரித்து நிற்கும் ஓசியன் விக்கிங் கப்பலில் இருக்கும் 78 பேரில் எட்டு பேர் தரை இறங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்கள் கடந்த மூன்று வாரங்களாக கப்பலில் தரித்து இருந்தனர். இந்தோனெசிய நாட்டில் தரை இறங்கி அவர்களது அகதி அந்தஸ்து கோரும் சட்டத்திற்கு அமைவாக தாம் செயற்பட தயார் என கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதே நேரம் இந்த கப்பலில் விடுதலைப்புலிகள் உள்ளார்களா என நிரூபிக்கமுடியவில்லை என கூறியுள்ளார்.

  7. TN film industry promotes unity in Lanka By Stanley Samarasinghe South Indian film actress R. Radhikaa Sarath Kumar, who has acted in more than 300 films, is married to the President of the South Indian Film Artistes’ Guild. Radhikaa is the daughter of very famous villain in South Indian films, M.R. Radha, who married a Sinhalese girl from Vennappuwa; Geetha Fernando, Radikaa’s mother. Radhikaa owns Radaan Mediaworks Company in Chennai. She was educated in Sri Lanka, at the Holy Family Convent in Bambalapitiya. The Nation had a brief conversation with the actress to learn first hand information on the recently held protest campaign in Chen…

  8. இந்த ஆவணப்படத்தை தயாரித்த ஊடகவியலாளர், 2001 ம் ஆண்டின் பின்னரான அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் நீட்சியாகவே, இலங்கையின் இனப் போரையும் கருதுகின்றார். இலங்கையில் நடந்து முடிந்த போர் பற்றிய மேற்கத்திய கண்ணோட்டம் எவ்வாறு அமைந்திருந்தது, என்பதை அறிந்து கொள்ள உதவும். http://kalaiy.blogspot.com/2009/11/blog-post_11.html

  9. இலங்கையின் தேர்தல் குறித்து ஜனாதிபதி சகோதரர்களிடையே கருத்து முரண்பாடு‐ 11 November 09 02:15 pm (BST) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 15ம் திகதி நடைபெறவுள்ளதுடன் அடுத்தாண்டு நடைபெறப் போவது ஜனாதிபதித் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா என்பதையும் தேர்தல் நடத்தப்படும் தினம் குறித்தும் அறிவிக்கப்படும் என ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கூறிவந்தனர். இருந்த போதிலும், தேர்தல் தொடர்பான அறிவிப்பு இந்தக் கூட்டத்தின் போது வெளியிடப்படமாட்டாது என அந்தக் கட்சியின் தலைமையகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் குறித்து எந்தக் கருத்துக்களையும் கூற…

  10. நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காக ஐக்கிய செயற்பாடொன்றை முன்னெடுப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவரிடம் இணக்கத்தைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி எதிர்க்கட்சித் தலைவரின் நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் கோரியிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொன்சேக்காவின் இராணுவ அரசாங்கத்தினால் எதிர்காலத்தில் ஜனநாயக இருப்பிற்கு ஏற்படப் போகும் ஆபத்தை வலியுறுத்தியே ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தவிசாளர் மலிக் சமரவிக்ரமவுடன் அண்மையில் தொடர்புகொண்டுள்ள ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவருடன் இணக்கமொன்றை ஏற்படுத்துவதற்குத் தேவையான முனைப்புக்கள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார். அத்துடன், எதிர்க்கட்சித் தலை…

  11. சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி, சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடட்டால் அதற்கு எதிராக பிக்குகள் முன்னணி போராட்டம் நடத்துவதற்கு உத்தேசித்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சரத் பொன்சேகா இதுவரையில் தான் போட்டியிடுவது குறித்து உத்தியோக பூர்வமாகவோ, அல்லது உறுதியாகவோ, தெரிக்காத போதும், அவர் எதிர்கட்சிகளினால் பொது வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனும் நிலை படிப்படியாக உருவாகி வருகிறது. இதனால் ஆளும் தரப்பு, சரத் பொன்சேகா தேர்தலில் நிற்பது அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே தவிர்ப்பதற்கு சகல வழிகளிலும் முயற்சித்து வருகிறது. இதன் ஒரு வழிமுறையாக தற்போதைய அரசுத் தலைவருக்கு ஆதரவு தரும் வகையில், சரத் பொன்சேகா தேர்தலில் போட்டியிட முயன்றால்,…

    • 0 replies
    • 784 views
  12. ரத்தவெறி யுத்தத்தில் கிச்சன் கேபினெட்… – விகடன் எத்தனையோ உயிர்களை இரக்கமின்றி அழித்துமுடித்த இலங்கை மண்ணில், அதிகாரத்தில் இருந்தவர்களே மோதிக்கொள்ளும் காட்சிகளில்கூட நெஞ்சதிர வைக்கும் திருப்பங்கள்..! நெருங்கிய நண்பர்களாக இருந்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவும், ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவும் பகைவர்களாக முறுக்கிக்கொண்ட விவகாரம்… இப்போது ராஜபக்ஷே குடும்பத்துக்குள்ளேயே எதிர்பாராத சச்சரவைக் கிளப்பிவிட்டிருக்கிறது. எல்லாமே பதவி மற்றும் உயிர் பயத்தில் அரங்கேறும் திருப்பங்கள்தான்!raththaveri அமெரிக்க அரசின் ‘போர்க்குற்ற விசாரணை’க்குப் போகாமல் இலங்கைக்கே திரும்பிவிட்ட ஃபொன்சேகா… ஏர்போர்ட்டில் குழுமியிருந்த மீடியாக்களிடம், ‘நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எந்த விதமா…

  13. வன்னியில் மருத்துவப் பணியாற்றிய மருத்துவர்கள் தங்கமூர்த்தி சத்தியமூர்த்தி மற்றும் கேதீஸ் அவர்களின் பிணையானது சற்று தளர்த்தப்பட்டுள்ளது. வன்னி இறுதிக் கட்ட போரில் மக்களைக் காப்பாற்ற சேவை வழங்கிவந்த மருத்துவர்களில் இருவரான தங்கமூர்த்தி சத்தியமூர்த்தி மற்றும் கேதீஸ் ஆகியோரின் விசாரணை நேற்று கொழும்பு குற்றவியல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இலங்கை ராணுவத்தினரின் இன அழிப்பு போரில் இறந்த மக்கள் குறித்த எண்ணிக்கையை இந்த மருத்துவர்கள் சர்வதேச சமூகத்துக்கு பொய்யாக அதிகப்படுத்திக் கூறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இவர்கள் அரசாங்கத்துக்கு முரண்பாடாக சட்டவிரோத செயல்கள் புரிந்தார்களா மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நேரடி தொடர்பு கொண்டிருந்தார்களா என தாம் விச…

  14. புகலிடத்தஞ்சம் கோரி ஈழத்தமிழ் மக்கள் பயணித்த கப்பலொன்று இந்தோனேசிய கடற்பரப்பை சென்றடைந்ததுடன், அது அவுஸ்திரேலியாவை நோக்கி பயணிக்க முயன்றமை அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் பல அரசியல் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. இந்த அரசியல் நெருக்கடிகளுக்குள் தாம் அவதானமாகவே உள்நுழைய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்ந்த மக்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவை நோக்கி 260 பேரைக் கொண்ட மூன்று படகுகளும், கனடாவை நோக்கி 76 பேரைக் கொண்ட ஒரு கப்பலும் கடந்த சில வாரங்களில் பயணித்துள்ளன. இந்த கப்பல்களில் இருந்தவர்கள் அனைவரும் ஈழத்தமிழ் மக்கள். அவர்கள் அரசியல் தஞ்சம் கோரி அங்கு சென்றுள்ளனர். அவுஸ்திரேலியாவை நோக்கி சென்ற படகுகளில் இரண்டு படக…

  15. http://www.youtube.com/watch?v=TyiIWTvSjUQ http://www.youtube.com/watch?v=4H835e2DUdg யார் இவர்கள்.. தமிழர்களிற்காய் அரசியல் தாயக உரிமை கேட்டு போராடிய மக்களா..?! நாம் இவர்களைக் கைவிடலாமா..??!

  16. இலங்கையின் பெற்றோலியம், நீர்வழங்கல், துறைமுக அதிகார சபை, மின்சார சபை ஊழியர் தொழிற் சங்கங்கள் இன்று சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை மீழஆரம்பித்தன. அரசாங்கத்தால் தமக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட 22% சம்பள உயர்வை தாம் நிராகரிப்பதாக பெற்றோலியக் கூட்டுத்தாபன ஜாதிக சேவக சங்கமய தொழிற்சங்கத்தின் செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்தார். தாம் தற்போது சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் கூறினார். ஆனால் அவசர கால நிலைமையினை கருத்தில் கொண்டு ஆயுதப்படைகள் இந்த வேலைகளை செய்ய தயாராக இருப்பதாக இராணுவ பேச்சாளர் உதய நாணய கார தெரிவித்துள்ளார். தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஜாதிக சேவக சங்கமய தொழிற்சங்கத்தின் தலைவர் நிஹால் லிய…

  17. இந்திய அரசினால் இலங்கைக்கு 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வருடாந்த குத்தகைக்கு வழங்கப்பட்ட உலங்கு வானூர்தி இறங்கு தளத்தினை கொண்ட இரு கப்பல்களையும் திரும்ப பெறும் உத்தேசம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. CGS வராகா, CGS விக்கிரக என்ற இரு கப்பலையுமே திரும்ப பெற திட்டமிடப்பட்டுள்ளது.இந்திய கரையோர காவல்படையின் தேவை அதிகரிப்பிற்கு ஏற்ப அவர்களுக்கான கப்பல் போதாமையால் இந்த கப்பல்களை மீழ எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  18. முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு பின்னர் சிக்கலடைந்து போயிருக்கும் ஈழவிடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதிலும் சர்வமயப்படுத்துவதிலும் எந்த அரசியல் வட்டத்திற்குள்ளும் சிக்காமல் தனித்துவமான முறையில் தமது பல்கலைக்கழக புலமைசார் துறையின் வழி மிகக் காத்திரமான பங்களிப்புக்களை நல்கி வரும் எட்வேட் ரமாநந்தன் (வியன்னா பல்கலைக்கழகம்), பரணி கிருஸ்ணரஜனி (பாரிஸ் பல்கலைக்கழகம்), யாழினி ரவிச்சந்திரன் (ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்), சித்ரலேகா துஸ்யந்தன்(வியன்னா பல்கலைக்கழகம்), பிரியதர்சினி சற்குணவடிவேல்(பர்சிலோனா பல்கலைக்கழகம்) ஆகியேர்களைக் கொண்ட ஆய்வாளர் குழு “ஈழம்ஈநியூஸ்” க்கு தந்த பிரத்தியேகமான நேர்காணல் இது. என்றென்றைக்கும் தமிழீழ விடுதலையின் மையமும் இயங்கு சக்திய…

    • 23 replies
    • 2.8k views
  19. இலங்கைத்தீவில் அமைந்துள்ள இந்து சமுத்திரத்தின் திறவுகோல் என்றழைக்கப்படும் திருகோணமலையானது, திரி கோண வடிவமைந்த நகரக்கை மையப்படுத்திய மலையும்-கடலுமாக, முக்கோண பக்கத்தினாலும் இயற்கை அன்னையின் அரண்களாக அமையப்பெற்றதால், இது என்றென்றைக்கும் வரலாற்று சிறப்புள்ள கேந்திரமையமாகும்.. தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப் புமி, இன்று வரலாறுகள் மறைக்கப்பட்டு- சிதைக்கப்பட்டு ஐக்கிய இலங்கை எனும் கோசத்திற்குள்-பௌத்த சிங்கள பேரினவாத கட்டுமானங்களுடாக தமிழரின் பாரம்பரிய பிரதேசங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பங்கு போடப்படுவது தொடர்கின்றது. 1948லிருந்து மாறிமாறி ஆட்சிக்கு வரும் பேரினவாத அரசும்- அதன் அரசுயந்திரங்களும் இன்றுவரை திடடமிட்ட ஆத்துமீறிய குடியேற்றங்களால் சத்தமிடாமலேயே-சத்தங்கள் வெளி…

  20. 11/11/2009, 10:59 சட்டவிரோத ஆட்கடத்தல்கள் படுகொலைகள் மற்றும் சித்திரவதைச் சம்பவங்கள் குறித்து 15000 முறைப்பாடுகள் இலங்கையின் சட்டவிரோத ஆட்கடத்தல்கள் படுகொலைகள் மற்றும் சித்திரவதைச் சம்பவங்கள் குறித்து 15000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தே 15000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதில் வன்னியில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் தற்போதும் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தொடரும் ஆட்கடத்தல்கள் உள்வாங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத படுகொலைகள் மற்றும் ஆட்கடத்தல்கள் காணமல் போதல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு மகாநாம திலகரட்ன தலைமையில் நியமிக்கப்பட்ட ஜனாதிபத…

  21. கொழும்பு -யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் - கொழும்பு நேரடி பஸ் சேவைகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன. இலங்கைப் போக்குவரத்து சபை இந்த நேரடி பஸ் சேவைகளை நடத்தவுள்ளது.இன்று காலை 8.30க்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் இன்றிரவு 8.30க்கு புறக்கோட்டையை வந்தடையும். இவ்வாறு சபையின் நடவடிக்கை விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளர் லிவ்னிஸ் பமுனுகுல ஆராச்சி தெரிவித்துள்ளார்.இந்த நேரடி பஸ் சேவைகளுக்கு சொகுசு மற்றும் அரைச் சொகுசு பஸ்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் சொன்னார்.யாழ்ப்பாணத்திலிருந்து வரும் பஸ்களுக்கு மதவாச்சிவரை இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், கொழும்பிலிருந்து செல்லும் பஸ்களுக்கு மதவாச்சியிலிருந்து இராணுவப்பாதுகாப்பு வழங்க…

  22. கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகாவின் ராஜினாமா கடிதத்தை உடனடியாக ஏற்றுக் கொள்வதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ராஜினாமா கடிதம் கிடைத்த அரை மணித்தியாலத்திற்குள் அக்கடிதத்திற்குப் பதிலையும் அனுப்பி வைப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நோக்கில், ஜெனரல் சரத்பொன்சேகா தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினால் அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டு பதிலளிக்குமாறும் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுக்கு மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சரத்பொன்சேகா தொடர்பில் பலரும் கேள்வி எழுப்புகின்ற நிலையில் எந்த சவாலுக்கும் முக…

  23. விடுதலைப் புலிகள் அமைப்பில் முன்பு வீரர்களாக இருந்ததாகக் கூறப்படும் 11,000 சிறுவர்களுக்கு விரைந்து மறுவாழ்வு ஏற்படுத்தும் முயற்சியாக மேலும் 7 மறுவாழ்வு மையங்களை அமைக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது 14 மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இலங்கை ராணுவத்திடம் சரணடைந்து தற்போது அரசின் பாதுகாப்புக் காவலில் உள்ள சிறுவர்களுக்காக புதிதாக 7 மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக இலங்கை அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் புதிய மறுவாழ்வு மையங்கள் அமையவுள்ள வளாகங்களை நீதித்துறை அமைச்சர் மிலிண்டா மோரகொடா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன http://www.parantan.com/

  24. கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக்காவின் புகைப்படம் அடங்கிய வீதி விளம்பரங்களை உடனடியாக அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஜனாதிபதி செயலகம் இன்று (10) முற்பகல் உத்தரவிட்டுள்ளது. இதன்படி இன்று பிற்பகல் 5 மணிக்கு சரத் பொன்சேக்காவின் புகைப்படம் அடங்கிய வீதி விளம்பரங்கள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார். http://www.parantan.com/

  25. வணங்கா மண் கப்பலில் சென்ற பொருட்கள் முதல்தடவையாக மெனிக்பாம் தடுப்பு முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்படவுள்ளது.யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த வணங்கா மண் என்ற கப்பல் கடந்த ஜூன் மாதம் 4ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டது. அதன் பின்னர் திருப்பி அனுப்ப பட்ட இந்த கப்பல் தமிழ் நாட்டில் நங்கூரமிடப்பட்டது மடுமன்றி இந்திய தலையீட்டினை கோரி இருந்தது. இந்திய அரசாங்கத்தின் வேண்டுதலுக்கு அமைவாக மீண்டும் செஞ்சிலுவை சங்கம் ஊடாக இலங்கைக்கு அனுப்ப பட்டது. இதன் பின்னர் இலங்கை அரசின் பல்வேறு நொண்டி சாட்டுக்களால் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்ட இந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.