Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இந்திய தேசமே! எங்கள் கைகளில் ஏன் யுத்தக் கருவிகளைக் கொடுத்தாய்? : பாரிஸ் ஈழநாடு இந்திய தேசமே! எங்கள் கைகளில் ஏன் யுத்தக் கருவிகளைக் கொடுத்தாய்? இந்திய தேசமே! ஏன் எங்கள் வாழ்வை அழித்தாய்? இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் இன்றைய ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் சிதைக்கப்பட்டு, அவர்களுடன் இறுதிவரை இருந்த காரணத்தால் மூன்று இலட்சம் தமிழர்கள் முள்வேலி முகாமினுள் முடக்கப்படடுள்ள நிலையில் புலம் பெயர் தேசத்து மக்களின் அணையாத எழுச்சியானது இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ‘விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்கள்’ என்ற…

  2. நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான செயற்குழுவின் பன்னாட்டு ஆலோசகர்கள் பங்கேற்ற கூட்டத்தொடர் (ஒக்ரோபர் 3, 4ஆம் திகதிகளில்) நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்றது. இக்கூட்டத் தொடருக்காக ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்; ஒஸ்லோ வருகை தந்திருந்த வேளையில் தமிழ் மக்களுக்காக சிறப்பு விளக்கக் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழர் வள ஆலோசனை மைய றொம்மன் வளாகத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 6.30 மணி தொடக்கம் 9 மணி வரை நடைபெற்ற நாடு கடந்த அரசு தொடர்பான விளக்கக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழீழ மக்கள் கலந்து கொண்டிருந்தனர். ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா நடராஜா இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார். சட்ட அறிஞரும் நாடு கடந்த தமிழீழ அரசை அமைக்கும் செயற்குழு…

    • 0 replies
    • 1.4k views
  3. சிறிலங்கா கராத்தே அணியினரை வெளியேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் – 20 பேர் கைது தமிழகத்தில் நடைபெற்ற உலக கராத்தே போட்டியில் கலந்து கொள்ள சென்ற சிங்களவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த தமிழுணர்வாளர்கள் கைது. இன்று (04.10.2009) மாலை தமிழகத்தில் கோயம்பத்தூர் செங்கப்ப கோனார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உலக கராத்தே போட்டியில் கலந்துகொள்ள சென்ற சிறிலங்கா அணியினரை வெளியேற்றக்கூறி தமிழ்நாடு மாணவர்கழக பொறுப்பாளர் ந.பன்னீர்செல்வம் தலைமையில் மண்டபம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். http://www.meenagam.org/?p=12487

  4. இலங்கைத் தூதரகம் மீது தாக்குதல் புதுடில்லி: டில்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில், அத்துமீறி நுழைந்த புதிய தமிழகம் கட்சியினர் அங்கு கல்வீசி தாக்கியதோடு, அங்கிருந்த பூந்தொட்டிகளையும் உடைத்து சேதப்படுத்தினர். தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து, டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியினர், நேற்று டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர். இதன்பின், மதியம் 2.30 அளவில், டில்லி சாணக் கியபுரி பகுதியில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகத்திற்கு வாகனங்களில் வந்த அந்தக் கட்சியினரில் ஒரு பிரிவினர், அங்கு கல்வீசி தாக்குதல் நடத்தியதோடு, அங்கிருந்த பூந்தொட்டிகளையும் உடைத் துச் சேதப்படுத்தினர். அப்போது இலங்கை அர…

  5. கொழும்பில் இன்று மாலை மூன்று பேர் விடுதி ஒன்றில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என கொழும்பு காவல்துறை அறிவித்துள்ளது. இந்த மூவரும் வவுனியா தடுப்பு முகாம்களில் இருந்து பொது மக்களையும், விடுதலைப்புலி உறுப்பினர்களையும் கடத்தி அவுஸ்ரேலியாவிற்கு அனுப்பும் வேலையினை செய்து வந்தார்கள் என சந்தேகிக்கபடுவதாக கொழும்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நன்றி http://www.eelanatham.net/news/important

    • 0 replies
    • 1.4k views
  6. வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரட்னம் அவர்களின் மகன் கிரி அவர்கள் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் எனவும் இவர் தென் பகுதியில் பலமுக்கியஸ்தர்களை கொலை செய்ய திட்டமிட்டதாக குற்ற தடுப்பு பிரிவினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக மகிந்தவினை சந்தித்த தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் மகிந்தவும் குறிப்பிட்டிருந்தார். அதாவது என்னை கனகரட்னம் அவர்களின் மகன் கொலை செய்ய திட்டமிட்டார் என கூறியிருந்தமை குறிபிடத்தக்கது. முன் நாள் வெளிவிவகார அமைச்சர் கொலையினையும் திட்டமிட்டதாக குற்றம் சாட்டபட்டுள்ளதுடன் மகிந்த, கோத்தபாய உட்பட பலரை கொல்லு திட்டம் இவரிடம் இருந்ததாக கூறப்படுகின்றது. திரு கிரி அவர்கள் கொழும்பில் தந்தையின் இருந்த வீட்டில் இருந்து தான் இந்த திட்டங்களை செயற்ப…

    • 0 replies
    • 1.8k views
  7. கொழும்பில் பண்டார நாயக்க சர்வதேச மா நாட்டுமண்டபத்தில் சிங்கள இராணுவத்தின் 60 வது தினத்தினை முன்னிட்டு கண்காட்சி நடாத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் விடுதலைப்புலிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட ஆயுதங்கள், வெடிப்பொருட்கள்,கலங்கள் ஆகியன கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இத்துடன் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் வெற்றுடல் என சொல்லப்படுகின்ற புகைப்படமும் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் கோகுலன் என்ற பெயரிடப்பட்ட கடற்புலிகளின் விசேட தாக்குதல் கலமும் வைக்கப்படுள்ளது.இந்த கண்காட்சி 10.30 -மாலை 10 வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளத நன்றி ஈழ நாதம் http://www.eelanatham.net/story/sla%20exibition2009

  8. ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் இலங்கையைப் பாதிக்கும் புதிய சரத்துகளைப் புகுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளையும் ஐ.நாவின் 27 ஆவது பிரிவில் சேர்ப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முயற்சித்து வருகிறது. இதனை எமது அரசாங்கம் ஒரு போதும் அனுமதிக்காது. இவ்வாறு தெரிவித்தார் பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. கொழும்பில் தாம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் ஹெகலியா இது குறித்து விவரித்ததாவது: ஜிஎஸ்பி பளஸ் சலுகை இலங்கைக்கு கிடைக்க கூடாது என்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் ஓர் அங்கமாக ஐக்கிய நாடுகள் சாசனத்த…

    • 0 replies
    • 959 views
  9. வீட்டில் தனித்து வாழ்ந்து வந்த ஆண் ஒருவரின் கழுத்தை வெட்டிக் கொலை செய்து, அவரது நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கொடிகாமம், இராமாவில் பகுதியில் நடைபெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த கந்தையா கருணாகரன் (வயது47) என்பவரே படுகொலை செய்யப்பட்டவராவார். திருமணமாகாத பிரஸ்தாப நபர் தனது வீட்டில் இருந்தவேளை நேற்றுமுன் தினம் இரவு 8.30 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த இனந் தெரியாதவர்கள் அவரைக் கழுத்தில் வெட்டியபின் அவரது கழுத்தில் இருந்த 4 பவுண் சங்கிலி, 50 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை அபகரித்துக் கொண்டு தப்பிவிட்டனர் எனத்தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட கருணாகரனின் சடலம் யாழ். ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. http://www.parantan.com/

    • 0 replies
    • 870 views
  10. ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச் சலுகைகள் வழங்கப்படாவிட்டாலும் பரவாயில்லை என்ற ரீதியில் சிறிலங்கா அரச தலைவர்கள் வெளிப்படையாகப் பேசி வந்தாலும் சலுகையைத் தொடர்ந்து பெறுவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 424 views
  11. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலாளரும் அனைத்துலக உறவுகளுக்கான செயலாளருமான செல்வராசா பத்மநாதன் மீதான விசாரணைகளைப் பூர்த்தி செய்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை வெளிநாடுகள் அவரை விசாரணை செய்வதற்கு அனுமதிப்பதில்லை என சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 409 views
  12. கடந்த 2005ஆம் ஆண்டில் வன்னி வான்பரப்பில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்ட தமது வான்படையின் ஆளில்லா வேவு விமானம் ஒன்று வான்புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சிறீலங்கா அரசு ஒப்புக்கொண்டுள்ளது. போர்நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த பொழுது கடந்த 2005ஆம் ஆண்டில் வன்னியில் தமது வான்படையின் ஆளில்லா வேவு விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகி வீழ்ந்து நொருங்கியதாக முன்னர் சிறீலங்கா அரசு தெரிவித்திருந்தது. எனினும், 2005ஆம் ஆண்டில் இரணைமடுவை அண்டிய பகுதிகளில் வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தமது வான்படையின் ஆளில்லா வேவு விமானம் ஒன்றை, பிறிதொரு விமானம் ஒன்றின் சகிதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் சுட்டு வீழ்த்தியதாக தற்பொழுது சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சின் உயரதிகாரி…

  13. சிறிலங்கா நீதிமன்றத்தால் அண்மையில் 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயகத்திற்கு துணிச்சலான ஊடகவியலாளருக்கான பீற்றர் மக்லர் விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருதை திசநாயகத்தின் மனைவி றொனாட் கடந்த வெள்ளிக்கிழமை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 538 views
  14. மனிதார்ந்த பணிகளில் ஈடுபடாது முடங்கிக் கிடக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவுகளை நீக்குவதற்கு சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான விபரங்களை ஊடக விளம்பரங்கள் மூலமாகப் பெறும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பிரதமர் வசம் உள்ள உள்நாட்டு நிர்வாக அமைச்சின் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகம் வெளியிட்டுள்ள ஊடக விளம்பரத்தில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் தற்போதைய செயற்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு அறிவிக்கும்படி கேட்கப்பட்டுள்ளது. பல அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது முகவரிகளை மாற்றிக் கொண்டுள்ளன, ஊடக விளம்பரத்திற்கு அவை பதிலளிக்கவில்லை என்றால் அவற்றின் பதிவுகள் நீக்கப்படும் என செயலக அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். ‘சில அரச சார்பற…

  15. சிறிலங்கா நீதிமன்றால் அண்மையில் 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயகத்திற்கு துணிச்சலான ஊடகவியலாளருக்கான பீற்றர் மக்லர் விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருதை திசநாயகத்தின் மனைவி ரொனாட் கடந்த வெள்ளிக்கிழமை பெற்றுக் கொண்டார். பாரிசைத் தளமாகக் கொண்டு செயற்படும் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பின் அமெரிக்கக் கிளை இந்த விருதை வழங்கியது. இந்த விருது ஏ.எவ்.பி. செய்தி நிறுவனத்தில் 30 ஆண்டுகளாகப் பணியாற்றிய மூத்த ஊடகவியலாளரான பீற்றர் மக்லர் நினைவாக இந்த விருது உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அவர் உயிரிழந்திருந்தார். துணிச்சல் மற்றும் ஊடக தர்மத்திற்கான பீற்றர் மக்லர் விருது முதல் தடவையாக திசநாயகத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. விருதைப் பெற்ற…

    • 0 replies
    • 758 views
  16. தலைநகர் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தை தமிழ் உணர்வாளர்கள் சிலர் நேற்று தாக்கியிருக்கிறார்கள். சின்ன சேதம்தான். எந்த சிங்கள உயிருக்கும் பாதிப்பில்லை. ஆனாலும் விழுந்தடித்துக் கொண்டு தன் கவலையை, அக்கறையைத் தெரிவித்த இந்திய அரசு, உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டது. இலங்கைத் தூதரகத்துக்கு காவல்துறைப் பாதுகாப்பைப் பலப்படுத்தியது. நாம் இதைக் குற்றம் சொல்லவில்லை. செய்ய வேண்டியதுதான். ராஜாங்க உறவுகளைப் பேணிக் காக்க இந்த மாதிரி உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதுதான். ஆனால், இந்திய எல்லையிலிருந்து வெறும் 16 கிலோ மீட்டர் தொலைவில் சிங்களர்களால் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது ஒரு இனம். ஒரே நாளில் இருபதாயிரம்பேருக்கு மேல் கொல்லப்பட்டார்கள். இன்றும் தினம் தினம் வெளிய…

  17. எழுதியவர்மீனகம் பிரிவு: செய்திகள் முன்னாள் பிரதமர் பிரேமதாசவின் காலத்தில் மட்டக்களப்பில் 640 பொலிஸாரை வனப்பகுதியில் வைத்து கொலை செய்த கருணா என்பவருக்கு தற்போது இந்த அரசாங்கம் அமைச்சுப் பதவி வழங்கியுள்ளதாக ஜே.வி.பி. குற்றம் சுமத்தியுள்ளது. இந்த பொலிஸ் அதிகாரிகளை வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்து குழி தோண்டி புதைத்திருந்தாலும் இது தொடர்பில் எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்ல

    • 2 replies
    • 1.1k views
  18. 'கலைஞரைத் திட்டாதீர்கள் என்றார் பிரபாகரன்!' என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கு விளக்கம் தெரிவித்து நமக்கொரு கடிதம் அனுப்பியிருக்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். அதில், 'கடந்த 26.09.2009 அன்று லண்டனில் நடைபெற்ற குறிப்பிட்ட அவ்விழாவில் ஏறத்தாழ ஒன்றேகால் மணி நேரம் உரையாற்றினேன். என் உரைக்குப் பின்னர் அனைவரும் எழுந்து நின்று கைகளைத்தட்டி ஆரவாரம் செய்தனர். ஈழத்தமிழர்கள்யாரும் நீங்கள் எழுதியிருப்பது போல் அநாகரிகமாக நடந்து கொள்ள வில்லை. 'ஜீ' டி.வி-யில்நேர் காணலில்கலந்து கொண்டபோது, பாதியி லேயே அந்நிகழ்ச்சி முடிந்து விட்டதாகக் கூறுவது சரியல்ல. சிறப் பாக அது நடந்தேறியது. தி.மு.க-வுக்கு எதிரான கருத்து வந்தபோது, 'ஒரு மாநில அரசுவெளி யுறவுக்கொ…

  19. அம்பாறை த.ம.வித்தியாலய கட்டிடம் உடைக்கப்படுகிறது தடுக்க திராணியற்று இருக்கும் மாகாண சபை காணியினை அபகரிக்கும் நோக்கிலும்,தமிழ் பாடசாலையினை அகற்றும் நோக்கிலும் ,அம்பாறை தமிழ் மகா வித்தியாலய வகுப்பறை கட்டிடங்கள் சிங்கள ஆசிரியர் ஒருவரால் கட்டம் கட்டமாக உடைக்கப்பட்டு வருகின்றன. இதனை பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் உரிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் பயன் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட பாடசாலை சிங்கள வலயத்திற்குள் இருப்பதனாலேயே இந்த நிலை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக மாகாண கல்வி அமைச்சுக்கும் தெரிவிக்கபட்டிருப்பதாக கூறப்படுகின்றது. கல்வி செயற்பாடுகள் யாவும் மாகாண சபை நிர்வாகத்திற்குள் இருப்பதனால் ஏன் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்…

    • 3 replies
    • 1k views
  20. வாய்க்கொழுப்பெடுத்து பேசிய இந்தியாவுக்கான சிறிலங்காத் துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும் – இயக்குநர் சீமான் வாய்க்கொழுப்பெடுத்து பேசிய இந்தியாவுக்கான சிறிலங்கா துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று நாம் தமிழர் இயக்க தலைவர் இயக்குநர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி இரண்டு தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பொழுது வாய்க்கொழுப்பெடுத்து பேசியுள்ளான். இலங்கையில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்க்க ஏன் அனுமதிக்க வில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு. ”முகாம்களில் நாங்கள் மிருகக்காட்சி சாலை எதையும் நடத்தவில்லை. எனவே தான் வெள…

  21. அக்கினி குஞ்சாக மாறினான் பார்த்தீபன். அதை நல்லூரில் வைத்து போரட்டத்தீ வளர்த்தான். பொந்தில் வைத்தால், காடுகளே வெந்து தணியும். ஆனாலும், இன்னமும் தணியவில்லை அவன் மூட்டிய பெருநெருப்பு. இந்திய வல்லாதிக்கத்தின் வஞ்சக நகர்விற்கு எதிராக, போராட்ட வடிவத்தை மாற்றிய தியாகி திலீபன், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, உயிர் துறக்கும் வரையான உன்ணாநிலைப் போரினை முன்னேடுத்தான். ரூபாய் நோட்டில் காந்தியை வாழவைக்கு இந்திதேசம், விடுதலைப் புலிகளிள் அறவழிப் போராட்டத்தை கண்டு சினமடைந்தது.எமது போராட்ட வடிவங்கள் மாறினாலும், இந்தியாவின் இலக்கு மட்டும் மாறவில்லை. சொந்த நலனைக் காப்பாற்ற, தமிழ் மக்களின் எத்தகைய போராட்ட வடிவங்களையும், இந்திய வல்லாதிக்கம் ஏற்றுக் கொள்ளாது என்பதற்கு, தியாகி திலீபனின் வீர…

    • 6 replies
    • 1.8k views
  22. அம்ரித் சிங் பாரதபிரதமரின் மகள் (American Civil Liberties Union Foundation, ACLU)அமெரிக்கன் சிவில் லிபர்டீஸ் யூனியன்-ல் முக்கிய பொறுப்பாளர் Administration of Torture "சித்திரவதையின் நிர்வாகம்" என்ற புத்தகத்தை ஜமீல் ஜாபர் என்பவருடன் இணைந்து எழுதி வெளியிட்டு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தூக்கத்தை கெடுத்தவர். அமெரிக்க ராணுவம் ஈராக்கில் நடத்திய மனித உரிமை மீறல்களான போர்க்கைதிகளை மனித கழிவில் உருளவைப்பது, மின்சாரம் செலுத்துவது, கொடும் சித்திரவதை செய்வது போன்ற போர்க்குற்றங்களை வெளிக்கொண்டுவந்ததில் முக்கிய பங்காற்றியவர். ஒபாமா மீது வழக்கு தொடர்வேன் என்பவர் அமெரிக்கா செய்யும் அக்கிரமங்களை தட்டிகேட்க தெரிந்த இவருக்கு தன் தாய் நாட்டின்…

  23. ஆசியில் தமிழர் பிரச்சினையினை சொல்லி அகதி அந்தஸ்து கோரிய 12 சிங்களர் நாடு திருப்பி அனுப்பபட்டனர். அவுஸ்ரேலியாவில் தமிழர் பிரச்சினையினை காரணங்காட்டி அங்கு தாம் திரும்ப சென்றால் ஆபத்து என அகதி அந்தஸ்து கோரிய இலங்கை பெரும்பான்மை இனத்தினை சேர்ந்த 12 பேர் இலங்கை திருப்பி அனுப்பபட்டனர். இந்த 12 பேரும் புத்தளம்,சிலாபம், மாரவெல,கொச்சிகடை ஆகிய இடங்களில் இருந்து கடந்த கடந்த நவம்பர் மாதம் கடல்வழியாக அவுஸ்ரேலியா சென்றடைந்தனர். இவர்களில் 12 பேருக்கும் அகதி அந்தஸ்து மறுக்கப்பட்டது. இதில் மூன்று பேர் தாமாக திரும்பி சென்றுவிட்டனர். மிகுதி 9 பேரும் தமது அகதி நிராகரிப்பு தொடர்பாக மேன்முறையீடு செய்தனர். எனினும் இவர்களின் மேன் முறையீடு அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் திரு கிறிஸ் இவான் அ…

  24. குருநாகலில் வாகன குண்டு வெடிப்பில் 13 மாணவர்கள் காயம் குருநாகல் உடவல்பொல பிரதேசத்தில் இன்று காலை பாடசாலை வான் ஒன்றில் இருந்து குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒரு மாணவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக குருநாகல் வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தின் போது குறித்த வாகனம் வீடொன்றின் முன்பாக தரித்திருந்த வேளையிலேயே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. http://www.meenagam.org/?p=12210

  25. பெல்ஜியத்தில் பசில் குழு பிரச்சாரம் - ஜி.எஸ்.பி விடயமாக பெல்ஜியம் தலை நகர் பிரசல்ஸ் இல் மகிந்தவின் சகோதரரும் வடக்கின் வசந்தம் தலைவருமான பசில் ராஜபக்ஸ மற்றும் குழுவினர் ஐரோப்பிய ஒன்றிய பிரதி நிதிகளுடன் கலந்துரையாடல்களை செய்து வருகின்றனர். ஜி.எஸ்.பி வரிச்சலுகை மற்றும் மீழ்குடியேற்றத்திற்கான நிதி பெறுவதனை நோக்காக கொண்டே இந்த கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த கலந்துரையாடலில் ஓர் அங்கமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி நாட்டு உறவுகளுக்கான அமைச்சர் பெனிற்றா ஃபெராரோ வல்டினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.இந்த பேச்சுவார்த்தையில் பெல்ஜியத்திற்கான இலங்க தூதர் ரவினாத் ஆரியசிங, நிதி அமைச்சின் செயலய் பி.பி. ஜெயசுந்தர ஆகியோர் சமூகம் கொடுத்திருந்தனர்.இதன் போ…

    • 0 replies
    • 843 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.