Jump to content

வாய்க்கொழுப்பெடுத்து பேசிய இந்தியாவுக்கான சிறிலங்காத் துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும் – இயக்குநர் சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாய்க்கொழுப்பெடுத்து பேசிய இந்தியாவுக்கான சிறிலங்காத் துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும் – இயக்குநர் சீமான்

வாய்க்கொழுப்பெடுத்து பேசிய இந்தியாவுக்கான சிறிலங்கா துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று நாம் தமிழர் இயக்க தலைவர் இயக்குநர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தி இரண்டு தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பொழுது வாய்க்கொழுப்பெடுத்து பேசியுள்ளான்.

இலங்கையில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களைப் பார்க்க ஏன் அனுமதிக்க வில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு. ”முகாம்களில் நாங்கள் மிருகக்காட்சி சாலை எதையும் நடத்தவில்லை. எனவே தான் வெளியாட்களை அனுமதிக்கவில்லை”என்று திமிருடன் கூறியுள்ளார்.

இது ஒட்டு மொத்த தமிழினத்தையே அவமதிக்கும் செயலாகும்.கடந்த 4 மாதத்திற்கும் மேலாக மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களை அவர்களது தாய்த்திரு நாட்டிலேயே திறந்த வெளிச்சிறைச்சாலைகளில் அடைத்து வைத்துக்கொண்டு அவர்களுக்கு உணவு,உடை,அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் போன்ற எதையும் அளிக்காமல் அவர்களை நித்தமும் சிறுகச் சிறுக உயிருடன் கொலை செய்யும் சிங்களப் பாசிச அரசு அவர்களைப் பார்வையிட சர்வதேச தொண்டு நிறுவனங்கள்.

பத்திரிக்கையாளர்கள் உட்பட யாரையும் அனுமதிக்க வில்லை.இதனைக் கண்டித்து உலகமெங்கும் கடும் எதிர்ப்புக்குரல் எழுந்து வரும் சூழ்நிலையில் பாசிசஅரசின் பிரதிநிதி இப்பொழுது அதை நியாயப்படுத்தவும் துணிந்துள்ளார்.

அதுவும் தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சியையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலம் கடந்தாவது அகதி முகாம்களுக்கு செல்ல முயற்சி நடக்கிறதே என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாட்டின் தலைநகரில் இருந்து கொண்டே இப்படி திமிர்த்தனமாக பேசியுள்ளார். இது தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினத்தையும் அவமதிக்கும் செயலாகும்.

மேலும் மீனவர் பிரச்சனையிலும், ’இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக யார் நுழைந்தாலும் அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை இலங்கை கடற்படை எடுத்து வருகிறது” என்று உண்மைக்குப் புறம்பாக ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை வடிவேல் கிருஷ்ணமூர்த்தி அவிழ்த்து விட்டுள்ளார்.

சர்வதேச சட்டங்கள் எதையும் துளியும் மதிக்காமல் இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொலை செய்யப்பட்ட நிலையில் சிங்கள அரசு இப்பொழுது கோயபல்ஸ் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. மேலும் கச்சத்தீவு பிரச்சனையிலும் உண்மைக்குப் புறம்பாகப் பேசியுள்ளார்.

இவ்வாறு உண்மைக்குப் புறம்பாகவும் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க முயற்சி நடைபெறும் வேளையில் அவர்களை அவமதிக்கும் வகையிலும் தமிழ்நாட்டில் பேசித் திரியும் இந்தியாவுக்கான இலங்கை துணைத் தூதர் கிருஷ்ணமூர்த்தியை உடனடியாக வெளியேற்ற வேண்டும். என நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

http://www.meenagam.org/?p=12401

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கால நேரங்கள் நெருங்க நெருங்க சந்திப்பை எப்படி வைக்கலாம் என என் மனதுக்குள் யோசித்துக்கொண்டே இருந்தேன். இதற்கான பொறுப்பை சிறித்தம்பியிடம் ஒப்படைக்கவும் விருப்பமில்லை. காரணம்  நான் செல்ல இருக்கும் கொண்டாட்ட நிகழ்வு என்ன நிலையில்,திட்டமிட்ட படி நேரகாலத்திற்கு நடந்தேறுமா என உத்தரவாதம் அறவே இல்லை. தமிழ் கொண்டாட்ட நிகழ்வுகளின் அனுபவம் இங்கே கண்முன்னே வந்து பேயாட்டம் ஆடியது. 😂 இருப்பினும் குறிப்பிட நாளுக்கு முதல் எதையுமே தீர்மானிக்கலாம் என பேசாமல் இருந்து விட்டேன்.  என்னதான் இருந்தாலும் இந்த சுப நிகழ்வு சந்தர்ப்பத்தை தவற விட்டால் வேறு சந்தர்ப்பங்கள் எப்போது வருமோ என்ற பயமும் ஏக்கமும் மனதை குடைந்து கொண்டே இருந்தது. ஏனென்றால் இதே போல் தான் இன்னொரு யாழ்கள உறவின் சந்திப்பை வேலை நிமித்தம் காரணமாக அண்மைய நாட்களில் தவற விட்டிருந்தேன். "அண்ணை தெண்டிச்சு வரப்பாருங்கோ" என மனமார/உரிமையோடு கூப்பிட்டும் சந்திக்க முடியவில்லை என்ற மனக்கவலை வாழ்நாள் கவலையாக மாறிவிட்டது. ☹️  
    • 15வ‌ருட‌த்தை வீன் அடித்து விட்டார்க‌ள் இவ‌ர்க‌ளை இனி ந‌ம்ப‌ தேவை இல்லை என்று நினைக்கிறேன் உருத்திரகுமார் வாய் சொல் ந‌ப‌ர்   இவ‌ரின் மாவீர‌ நாள் உரைக்கு ம‌க்க‌ள் இட‌த்தில் வ‌ர‌வேற்ப்பு இல்லை..........................நாடு க‌ட‌ந்த‌ த‌மிழீழ‌ அர‌சாங்க‌ம் என்று சொல்லி ம‌க்க‌ளை ஏமாற்றின‌து தான் மிச்ச‌ம்........................இவ‌ர்க‌ளை நானும் எட்டி பார்க்காம‌ விட்டு க‌ண‌ காலம்......................................................
    • இரண்ட‌ர‌ வ‌ருட‌ம் ஜேர்ம‌னியில் த‌ங்கி இருந்து ப‌டிச்சேன் ஜேர்ம‌ன் பெரிய‌ நாடு   அதுவும் வ‌ய‌தான‌ உற‌வுக‌ளுக்கு வாக‌ன‌த்தில் நீண்ட‌ தூர‌ ப‌யண‌ம் பெரிசா ச‌ரி வ‌ராது..........................நீங்க‌ள் யாழில் இணைந்து 16வ‌ருட‌ம் ஆகி விட்ட‌து  இந்த 16வ‌ருட‌த்தில் முத‌ல் முறை தாத்தாவை ச‌ந்திச்சு இருக்கிறீங்க‌ள்..............................................   நான் தாத்தா கூட‌ ப‌ழ‌கிய‌ ம‌ட்டில் அவ‌ருக்கு பொது வெளிக‌ளில் ப‌ட‌ங்க‌ள் போடுவ‌து பிடிக்காது என‌க்கும் பொது வெளிக‌ளில் ப‌ட‌ங்க‌ள் போட‌ சுத்த‌மாய் பிடிக்காது............................நான் ஊதிச்சு ஒரு மாதிரி பிடிச்சு போடுவேன் த‌மிழ்சிறி அண்ணா ஹா ஹா    ச‌ந்திப்பு ந‌ல்ல‌ மாதிரி அமைஞ்ச‌து ச‌ந்தோஷ‌ம் த‌மிழ் சிறி அண்ணா ம‌ற்றும் தாத்தா ம‌ற்றும் ப‌ஞ் ஜ‌யா.............................................
    • மூவருக்கும் வாழ்த்துகள் உரித்தாகுக. மிக்க மகிழ்ச்சியானதும் நெகிழ்ச்சியானதும் சந்திப்பு என்பதைப் பதிவு பகர்கின்றது.  எனக்கும் யாழ்கள உறவுகளைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. காலம் ஒருநாள் கைகூடச்செய்யும் அதுவரை களமூடாக உறவாடுவோம்.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • யாழ்கள உறவுகள் மூவர் சந்தித்தித்து உரையாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படியான சந்திப்புக்கள் இங்கிலாந்தில் நடப்பது மிகவும் அரிதாக இருக்கும். கேட்டால் நாங்க ரொம்ப பிசி என்று சொல்லுவார்கள்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.