ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143542 topics in this forum
-
இலங்கை வந்த நான்கு சீன முதலீட்டாளர்கள் கொழும்பு துறைமுக நகர முதலீட்டு திட்டத்தில் முதல் முதலீடாக சீனாவை சேர்ந்த நான்கு முதலீட்டாளர்கள் நேற்று (02) இரவு இலங்கை வந்தடைந்தனர். சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள ஒரு அரை அரச நிறுவனமான C.Z.K. Huarui Cultural and Art Company ஐ பிரதிநிதித்துவப்படுத்தி, அந்த நிறுவனத்தின் பொது மேலாளருடன் மேலும் மூன்று பேர் நாட்டுக்கு வந்துள்ளனர். இந்த முதலீட்டாளர்கள் , 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்து இந்த துறைமுக நகர திட்டத்தில் இரத்தினக்கல் அருங்காட்சியகம், இரத்தினக்கல் பரிசோதனை ஆய்வு கூடம் மற்றும் ஏல மையம் ஆகியவற்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், இந்த முதலீட்டாளர்கள் குழு இலங்கை மு…
-
- 0 replies
- 656 views
-
-
Published By: DIGITAL DESK 3 02 OCT, 2023 | 03:55 PM யாழ்ப்பாணம் - இந்திய உதவித்துணைத் தூதரகம்,மற்றும் காந்தி சேவா சங்கத்தின் இணைந்த ஏற்பாட்டில் இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தினை பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தி அவர்களின் 154ஆவது ஜனதின நினைவேந்தலான அஞ்சலி இன்று திங்கட்கிழமை (02) யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக இருக்கின்ற மகாத்மா காந்தி சிலையின் முன்பாக இடம்பெற்றது. இவ் நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணம் இந்திய உதவித்துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் கலந்துகொண்டு அவரின் திருச்சுருவத்திற்கான மலர்மாலை அணிவித்து நினைவேந்தல் செலுத்தினார். இதில் காந்தி சேவா சங்கத்தினால் வ…
-
- 2 replies
- 459 views
- 1 follower
-
-
இணைய பாதுகாப்பு சட்டமூலம் குறித்து 7 பரிந்துரைகளை முன்வைத்தது மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கம் வெளியிட்டுள்ள புதிய இணைய பாதுகாப்பு சட்டமூலம் குறித்த 07 பரிந்துரைகள் அடங்கிய கடிதத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அல்ஸிக்கு அனுப்பியுள்ளது. மக்களின் இணையப் பாதுகாப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அங்கீகரித்த அதேவேளை, முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது. இணைய செயற்பாடுகள் தொடர்பாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன், இந்த சட்டமூலம் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்துடன் இணைந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.…
-
- 0 replies
- 294 views
-
-
Published By: RAJEEBAN 02 OCT, 2023 | 02:42 PM முன்னைய கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் வரிவருமானம் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்து காணப்பட்டது என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. இலங்கையின் ஆட்சி குறித்த சர்வதேச நாணயநிதியத்தின் அறிக்கையில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது. 2022 இல் அப்போதைய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளிற்கு எதிரான தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஊழலே காரணம் என்ற பொதுக்கருத்தினை உருவாக்கின என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. கோட்டாபய ராஜபக்சவின் நிர்வாகத்தின் கிழ் காணப்பட்ட அதிகார அமைப்பு தனித்துவமான நிர்வாக சிக்கல்களை உருவாக்கியது என அந்த அறிக்கை…
-
- 1 reply
- 250 views
- 1 follower
-
-
மக்கள் மீதான தாங்க முடியாத வரிச்சுமையைத் தவிர, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இருந்து இலங்கை இதுவரை எதையும் பெறவில்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சர்வதேச கடன்களை மறுசீரமைக்கும் நம்பிக்கையுடன் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியதாகவும், 17 மாதங்களுக்குப் பிறகும் இலங்கையால் ஒரு டொலரில் மறுசீரமைக்கவோ முடி வெட்டவோ முடியவில்லை என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையானது இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்ததன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி நிச்சயமற்றது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி அரசாங்கம்…
-
- 1 reply
- 466 views
- 1 follower
-
-
ஈஸ்டர் ஞாயிறு குண்டு வெடிப்பு சம்பவங்களோடு ராஜபக்ச அதிகாரிகளுக்கு தொடர்பு – முக்கிய தகவல் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பின்னனியில் அரச புலனாய்வு சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இருந்ததாக லண்டன் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு ராஜபக்ஷ குடும்பத்திற்கு விசுவாசமாக இருந்த இலங்கை அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியான சுரேஷ் சாலி மற்றும் ஐ.எஸ். அமைப்பு இடையே ஒரு சந்திப்பு 2018 இல் இடம்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையை சீர்குலைக்கவும் ராஜபக்சர்களை மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு சதித்திட்டம் தீட்டும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெறத்…
-
- 31 replies
- 2.3k views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 02 OCT, 2023 | 02:58 PM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் சிறுப்பிட்டிப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (02) பகல் , முச்சக்கர வண்டியில் பயணித்த இளைஞர் ஒருவரை ‘பட்டா’ ரக வாகனத்தில் வந்த நபர்கள் துரத்தி துரத்தி வாளால் வெட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தந்தையான லக்சன் என்பவர் மீதே வாள் வெட்டு நடத்தப்பட்டுள்ளது. நாயன்மார்கட்டைச் சேர்ந்த குறித்த நபர் சிறுப்பிட்டியில் திருமணம் செய்து வசித்து வருகின்றார். இந்நிலையில், முச்சக்கரவண்டியில் பயணித்த இந்த நபரைரை விரட்டிச் சென்று நேற்றைய தினம் பகல் வாள்வெட்டு நடத்தப்பட்டுள்…
-
- 0 replies
- 235 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 02 OCT, 2023 | 10:59 AM விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் குற்றவாளிகளைக் பொறிவைக்கும் வகையில் கடந்த வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு பல மணித்தியாலங்கள் நிறுத்தப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை (1) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கடந்த மாதம் 19 ஆம் திகதி முதல் குடிவரவு அதிகாரிகள் பெற்றுள்ளனர். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முப்படைகளின் தளபதிகள்,…
-
- 0 replies
- 641 views
- 1 follower
-
-
Published By: VISHNU 28 SEP, 2023 | 09:08 PM (இராஜதுரை ஹஷான்) அரச கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனையை அரசாங்கம் செயற்படுத்தவில்லை. இந்த நிபந்தனையை நிறைவேற்றினால் அரச நிர்வாகத்தில் இடம்பெறும் ஊழலை தடுக்க முடியும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். மஹரகம பகுதியில் வியாழக்கிழமை (28) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொ…
-
- 2 replies
- 361 views
- 1 follower
-
-
மைத்திரியும், கோட்டபயவும் TMVPக்கு பணம் வழங்கினர்! ஆசாத் மௌலானா உறுதிப்படுத்தினார் adminOctober 2, 2023 முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கோட்டாபய ராஜபக்சவும் தாங்கள் ஜனாதிபதியாக மற்றும் பாதுகாப்பு அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதிகளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்களிற்கு தொடர்ந்து பணம் வழங்கினார்கள் என சனல் 4 ஆவணப்படத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த முக்கிய விபரங்களை வெளியிட்ட ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதித் தருணங்களில் மில்லியன் கணக்கில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களிற்கு பணம் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ள ஆசாத்மௌலானா, எனினும் அந்தப் பணத் தொகையை ஜனாதிபதி மைத்திரிபால சி…
-
- 1 reply
- 539 views
-
-
-
- 28 replies
- 4k views
-
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் சிறந்த உடல்நிலையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்வியொன்றிற்கு பதிலளித்துள்ள அவர் நான் நல்ல உடல்நிலையுடன் உள்ளேன் சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களிற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். உங்களால் நான் நோய்வாய்ப்பட்டுள்ளேனா அல்லது நல்லநிலையில் உள்ளேனா என்பதை பார்க்க முடியும் சமூக ஊடகங்களில் வெளியாகும் விடயங்களிற்கு முக்கியத்துவம் அளிக்ககூடாது என அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தலைவராக இருக்கவிரும்பவில்லை இளையவர் ஒருவருக்கு அந்த பொறுப்பை வழங்கவேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை சமூக ஊடகங்க…
-
- 1 reply
- 308 views
-
-
29 SEP, 2023 | 05:25 PM 13ஆவது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகளிடம் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள மாகாணங்களுக்கு வழங்கும் முயற்சியில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தொடர்ச்சியாக பேசி வருகிறோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவரது இல்லத்தில் நேற்று வியாழக்கிழமை (28) இடம்பெற்ற 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தமிழ் மக்களின் இருப்புக்களை தக்கவைத்துக்கொள்வதற்கு 13வது திருத்தம் செயற்படுத்தப்பட வேண்டும். இதன…
-
- 2 replies
- 514 views
- 1 follower
-
-
30 SEP, 2023 | 07:53 PM ஆர்.ராம் சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்துவதற்கு செல்கின்றபோது அதனுடன் செய்யப்பட்டன உடன்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டிய சூழல் உருவாகும். அதனால் உள்நாட்டில் பாரிய நெருக்கடிகள் ஏற்படும் என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஆரூடமாக கூறியிருந்த நிலையில் தற்போது அவ்வாறான நிலைமைகளே தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியத்தின் முதலாம் தவணைக் கொடுப்பனவு மீளய்வு தொடர்பில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பீற்றர் புரூவர் தலைமையிலான கருத்துக்கள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெர…
-
- 2 replies
- 562 views
- 1 follower
-
-
ஜனாதிபதித் தோ்தலில் தமிழா் தரப்பில் பொது வேட்பாளா் September 29, 2023 தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து வலுவாக பேரம் பேசும் உத்தியாக, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தரப்பின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று(29) தீர்மானித்துள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் கள்ளியங்காடு, கட்டப்பிராயிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனின் வீட்டில் நடைபெற்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத் தலைவா் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத் தலைவா் த.சித்தார்த்தன், பா.கஜதீபன், ஈழமக்கள் புரட்சிகரிவிடுதில…
-
- 4 replies
- 437 views
- 1 follower
-
-
Published By: RAJEEBAN 01 OCT, 2023 | 02:58 PM இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள புகைப்பட ஊடகவியலாளர் (Photo journalist) ஒருவர் தான் இரணைமடுவுக்கு செல்வதை கடற்படையினர் தடுத்து வருகின்றனர் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். எல்கே ஸ்காலியர்ஸ் என்ற அந்த ஊடகவியலாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது. இலங்கைக்கு நான் ஊடகபணிக்காக விஜயம் மேற்கொண்டுள்ளேன், இரணைதீவிற்கு ஊடகபடப்பிடிப்பாளராக நான் செல்வதை கடற்படையினரும் முழங்காவில் உள்ள பாதுகாப்பு தரப்பினரும் தடை செய்கின்றனர். நான் அந்த தீவிற்கு செல்வதற்கான அங்கு சட்டபூர்வமாக பணியாற்றுவதற்கான அனுமதியை பெற்றிருந்தேன் . டுவிட்டரில் பதிவிடவேண்டாம் என கடற்படையினர் என்…
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
01 OCT, 2023 | 05:50 PM (ஏ.எல்.எம்.ஷினாஸ்) அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி - சவளக்கடை பிரதேசத்துக்குள் நேற்று (30) இரவு புகுந்த யானைகள் நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்கு அருகில் உள்ள நெல் களஞ்சியசாலையை துவம்சம் செய்துள்ளன. மேலும், அங்கிருந்த நெல் மூடைகளை நாசப்படுத்தியதுடன் அப்பகுதியில் உள்ள சுற்றுவேலிகளையும் யானைகள் தகர்த்துள்ளன. அதேவேளை அப்பிரதேசத்தை அண்டிய பகுதியிலுள்ள சில பயிர்களுக்கும் பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு வேளைகளில் அப்பகுதியில் வசிப்பதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். …
-
- 0 replies
- 220 views
- 1 follower
-
-
திருமலை இலுப்பைக் குளம் பகுதியில் விகாரை அமைக்கப்படுவதை எதிர்த்து நாளை ஆர்ப்பாட்டம் 30 SEP, 2023 | 05:48 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை இலுப்பைக் குளத்தில் தடை செய்யப்பட்ட பகுதியில் விகாரை அமைக்கப்பட்டுவரும் கட்டுமானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஞாயிற்றுக்கிழமை (01) காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. திருகோணமலை நிலாவெளி பிரதான வீதியின் இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரையின் கட்டுமானப் பணிகளுக்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், குறித்த பகுதியில் கட்டுமானப் பணிகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநரினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இருப்…
-
- 1 reply
- 442 views
- 1 follower
-
-
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இவ்வருடம் எதிர்பார்த்த அளவு நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனமையினால், மின்சார உற்பத்திக்கு கூடுதல் செலவு ஏற்பட்டதாக அதன் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த வருடம் 4500 கிகாவாட் நீர் மின் திறன் எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், 3750 கிகாவாட் நீர் மின் திறனையே இவ்வாண்டு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. இதற்கமைய, அனல் மின் நிலையங்களில் இருந்து 750 கிகாவாட் நீர் மின் திறனை கொள்வனவு செய்ய வே…
-
- 1 reply
- 505 views
- 1 follower
-
-
Published By: VISHNU 01 OCT, 2023 | 10:55 AM கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒக்டோபர் முதலாம் திகதி உலக சிறுவர் தினமாகும். இந்த சிறுவர் தினத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மூவாயிரத்துக்கும் அதிகளவான சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது பொருட்களின் விலை ஏற்றம் தொழில் வாய்ப்பின்மை வறுமை உணவு பாதுகாப்பின்மை உள்ளிட்ட காரணங்களால் குறித்த சிறுவர்கள் போசாக்கு ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 568க்கும் மேற்பட்ட ஐந்து வயதுக்க…
-
- 0 replies
- 319 views
- 1 follower
-
-
இலங்கையில் 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் காணொளிகளைப் பகிர்ந்த குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரித்தானிய பெண் தொடர்ந்தும், தாம் இலங்கையில் தலைமறைவாகவே இருப்பதாக தெரிவித்துள்ளார். பிரித்தானிய இணையம் ஒன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13 மாதங்கள் இவ்வாறு தலைமறைவாக உள்ள நிலையில் தாம் நம்பிக்கையை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 35 வயதான கெய்லீ ஃப்ரேசர் (Kayleigh Fraser), தங்கியிருந்த இடத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை குடிவரவு அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது அவர் சட்டவிரோத விசாவில் நாட்டிற்கு வருகை தந்ததாக கூறி அவரது கடவுச்சீட்டை அதிகாரிகள் கைப்பற்றினர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலிமுகத்திடல் போராட்டங்களின் காணொளிகளை ப…
-
- 3 replies
- 895 views
- 1 follower
-
-
திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகள் நிறுத்தம்! மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான் நடவடிக்கை! written by adminAugust 12, 2023 திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளால் இனமுறுகல்கள் ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானுடைய கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து நிர்மாணிக்க இருக்கும் விகாரையின் பணிகள் ஆளுநரின் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டன. திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கவிருக்கும் பௌத்த விகாரையின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலை…
-
- 15 replies
- 1.5k views
- 1 follower
-
-
28 SEP, 2023 | 11:03 AM யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தாத 800 முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை (27) மாலை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன், மாவட்ட செயலர், பொலிஸார் உள்ளிட்டோர் நடாத்திய சந்திப்பின் போதே பொலிஸார் அவ்வாறு தெரிவித்துள்ளனர். குறித்த சந்திப்பில், யாழ்ப்பாணத்தில் தற்போது அறிமுகமாகியுள்ள தனியார் போக்குவரத்து சேவையை வழங்கும் நிறுவனம் ஒன்றின் ஊடாக சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகள் குறைந்தளவு கட்டணங்களை வசூலிக்கின்றன. அதனால் நீண்ட காலமாக …
-
- 3 replies
- 544 views
- 1 follower
-
-
தமிழ் சமூக ஆர்வலரிடம் புலனாய்வு பிரிவினர் விசாரணை! ThivaSeptember 29, 2023 இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பை மீள கட்டியெழுப்ப பாடுபடுகிறீர்களா என கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் சமூக ஆர்வலர் ஒருவரிடம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவினர் நீண்ட நேரம் கேள்வி எழுப்பியுள்ளனர். குறிப்பிட்ட காரணத்தை தெரிவிக்காமல் வியாழன் 21 ஆம் திகதி காலை 9 மணிக்கு திருகோணமலை பிராந்திய அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவினர் பால்ராஜ் ராஜ்குமாருக்கு அழைப்பாணை அனுப்பியிருந்தனர். பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவில் (CTID) வாக்குமூலம் அளித்த பின்னர்இ பால்ராஜ் ராஜ்குமார் தனது பேஸ்புக் பதிவில் அரசுக்கு எதிரா…
-
- 1 reply
- 585 views
-
-
2024ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழகம் தரவரிசைகளில் கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழக தரவரிசையில் 1,001 முதல் 1,200ஆம் இடங்களுக்குள் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பேராதனை பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளன. கொழும்பு பல்கலைக்கழகம் கற்பித்தலில் 25.4 புள்ளிகளுடன் உள்நாட்டு தரவரிசையில் முதலிடத்திலும், பேராதனை பல்கலைக்கழகம் சர்வதேச கண்ணோட்டத்தில் 39.8 புள்ளிகளுடன் இலங்கையின் சிறந்த பல்கலைக்கழகமாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டுக்கான டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசையில் 20வது ஆண்டில் 1904 பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டன. …
-
- 0 replies
- 320 views
-